கல்யாணம்.. கச்சேரி..(6)

கல்யாணம்.. கச்சேரி..(6)

கச்சேரி-6

Being both soft and strong is a combination very few have mastered

 

இன்று…

 

காரிருள் சூழ்ந்த வேளையில்… அனாதரவாய் நிற்பதைபோல் உணர்ந்தான் மகிழன். அடர்ந்து நின்ற மரம் வேறு அவனை அடுத்து என்ன? சீக்கிரம் சீக்கிரம் என்று உசுப்பின.

 

அவளைக் கண்டால்.. அவளோ நெற்றி பொட்டை நீவியவளாக  தீவிரமான சிந்தனையில் இருந்தாள். காற்றிழந்த டயரையே பார்த்தபடி நின்றவனின் மனம் அடுத்ததை கணக்கிட்டது.

 

ஆனால் அந்த அளவுக்கூட நேரத்தை கடக்க அவள் விரும்பவில்லை என்பது அவளது செயல்களே சொல்லிற்று…

 

இரண்டு எட்டு எடுத்து வைத்தவள் இவனிடம், “டைம் வேஸ்ட் பண்ண வேணாம். நடக்க ஆரம்பிச்சிரலாம்” என்றுவிட அவனுக்குமே அதுதான் சரியெனப்பட்டது.

 

அந்த ஆளரவமற்ற இடத்துக்கு அந்த நேரங்கெட்ட நேரத்தில் எவரும் வரப்போவதில்லை என்பது அவனுக்கு நிச்சயம்! தூரத்தில் விளக்கொன்று மினுமினுக்க இருவரும் நடக்கத் தொடங்கிவிட்டனர்.

 

அந்த அடர்ந்த இருளில்… மெல்லிசையாய் இரவு நேரக் குளிர்காற்று உடல் உரசிச் செல்ல வேகநடை போட்டுக் கொண்டிருந்தனர் இருவரும்.

 

மகிழனின் மனமோ குழம்பிய குட்டையாய்..!!

 

‘இவகூட எப்ப பைக்ல ஏறுனாலும் பஞ்சர் ஆகிடுதே!? ஒருவேளை கடவுள் சிக்னல் ஏதாவது குடுக்கறாரோ??’ என்றவனின் மைன்ட் வாய்ஸ் இருக்க அவனோ எப்பொழுதோ மூன்று மாதங்களுக்கு முன் சென்றிருந்தான்.

 

இதேபோலத்தானே அன்றும்… என்றவன் அந்நாளுக்கே சென்றிருந்தான்.

 

அன்று அவன் அலுவலகத்திற்கு வந்ததே தாமதமாகத்தான்.

எப்பொழுதும் வெள்ளியை நெருங்கும் வியாழன் அவனுக்கு உற்சாகமூட்டுவதாகத்தான் இருக்கும். ஆனால்… இன்றோ…

 

அவனுக்கு புதன் கிழமையே பூதாகரமாய் மாறியிருக்க.. அதிலிருந்தே அவன் இன்னும்  விடுபடவில்லை. இரவு முழுவதும் குழப்பத்திலேயே கழிந்திருக்க மனதை திசைத்திருப்பும் பொருட்டு அன்று ஆஃபிஸுக்கு கிளம்பியிருந்தான் மகிழன்.  

 

தன் முன்னால் பளீர் சிரிப்போடு வீற்றிருந்த திரையையே வெறித்து பார்த்திருந்தான் அவன். ஏனோ ஒரே நாளில் எல்லாம் தலைகீழாய் ஆன உணர்வு! இப்படியொரு திருப்பத்தை அவன் வாழ்வில்… சத்தியமாய் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை..!!

 

எப்படிபட்ட டிஸிஷன் அது!! என் வாழ்க்கையையே மாத்தற விஷயம்… என்றவனின் எண்ணவோட்டத்தை தடை செய்தான் அவன் நண்பனாகப்பட்ட ராஜேஷ்.

 

தோளை பற்றி உலுக்கியதில் திடுக்கிட்டு விழித்த மகிழனையே வினோதமாய் பார்த்துவைத்தான்  மற்றவன்.

 

‘என்னாச்சு இவனுக்கு??’ என்றெண்ணியவன் மகிழனிடம் கேட்டும்விட்டான்.

 

“என்னாச்சுடா??” என்றவனிடம்

 

“ஒன்னுமில்ல!” என்றுவிட்டு மறுபடியும் அவன் திரையை வெறிக்கத் தொடங்க அதிலேயே  ராஜேஷின் ஏழாம் ஆறிவு ரெட் அலர்ட் அடித்தது! இவன் இப்படி இல்லயே! என்று ஓடிக்கொண்டிருந்த எண்ணவோட்டத்திற்கு தடா போட்டதுபோல் நினைவு வந்தது அவன் அங்கு வந்த காரணம்.

 

போகாமல் நின்றுக் கொண்டிருக்கும் நண்பனிடம் தன் பார்வையைத் திருப்பினான் மகிழன் என்னவென்பதாக.

 

“உனக்காக யாரோ வெய்ட் பண்றாங்க  மகி!” என்ற ராஜேஷ் ஆராய்ச்சி பார்வையோடே அங்கிருந்து அகன்றான்.

 

‘நமக்கா?? யாரா இருக்கும்??’ என்று குழம்பியவன் எழுந்துச் செல்ல அங்கோ ரிஸப்ஷனில் போடப்பட்டிருந்த ஸோஃபாவில் அமர்ந்திருந்தவளைக் கண்டு அதிர்ந்தான் என்றால் அடுத்து அவள் உரைத்ததில் அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே சென்றிருந்தான்.

 

கையிலிருந்த ஃபோனிலேயே கவனம் பதித்திருந்தவள் ரிஸப்ஷனிஸ்ட்டின் குரலில் நிமிர இவன் பக்கம் பார்வையைக் கூட திருப்பவில்லை முதலில். அந்த ரிஸப்ஷனிஸ்ட்டிடம் சிநேகமாய் புன்னகைத்து ஒரு தாங்க்ஸை உதிர்த்தவள் இவனிடமோ,

 

“கொஞ்சம் பேசனும் ஒரு அரைமணிநேரம்… கீழ பார்க்கிங் லாட்ல வெய்ட் பண்றேன்” என்றதோடு சரி. அதற்கு பின் ஒரு நொடிக்கூட தாமதிக்கவில்லை. வெளியேறிவிட்டாள்.

 

முகிலினியை அங்கு எதிர்ப்பார்த்திராத மகிழனோ… புருவமத்தியில் சிறு முடிச்சிட உள்ளே சென்றான்.

 

வழிமறித்த ராஜேஷை ஏலியனைப்போல லுக் விட அதில் நொந்துப்போனான் அந்த உயிர் நண்பன்.

 

“என்னடா ஆச்சு???”  என்ற ராஜேஷின் குரலிலோ இதுக்குமேல சஸ்பென்ஸ் வேணாம்டா! என்ற அலறலே இருக்க மகிழனின் மனமோ ‘இந்த தகரம் வேற துள்ளுமே பர்மிஷன் கேட்டா…’ என்றிருக்க அதில் திடுக்கிட்டவனாய்…

 

‘என்ன?? அப்போ நீ போறீயா?? அவ வந்து கூப்பிட்டா போயிரனுமா?? நான் ஏன் போகனும்!’ என்று கேள்வியெழுப்பியது.

 

‘அதானே நாம ஏன் போகனும்??’ என்று தோன்றிட ஒரு முடிவுடன் கவனத்தை நண்பனிடம் திருப்பினான்.

 

“யாருடா அது??” என்றதுதான் ராஜேஷின் முதல் கேள்வியாய் இருந்தது.

 

“அது…”என்று தொடங்கியவன் ஏதோ நினைவு வந்தவனாக அங்கிருந்த பெரிய கண்ணாடி யன்னலை நெருங்கினான். அங்கிருந்து பார்த்தால் பார்க்கிங் லாட் தெளிவாகத் தெரியும்.

 

தனது.நீல நிற ஸ்கூட்டியை வசதியாய் வாசல்புறம் பார்த்தவாறு நிறுத்தியிருந்தவள் கால்களை தரையில் ஊன்றிவளாக கிளம்பத் தயாராய் நின்றிருந்தாள்.

 

சில கணங்கள் அவன் பார்வை அவளிலேயே பதிய விடுவிடுவென கிளம்பியவன் ராஜேஷிடம் ‘அப்பறமா சொல்றேன்டா!’ என்றுவிட்டு உள்ளே சென்று பர்மிஷனும் வாங்கியவனாய் பார்க்கிங் லாட்டிற்கு விரைந்திருந்தான்.

 

 விடுவிடுவென அவளை  கடந்துச் செல்லும் பெண்மணி ஓர் நொடி அவளது கவனத்தை ஈர்த்தாலும் அது  ஓர் நொடிதான்… ஒரேடியாக பச்சை நிறமே பச்சை நிறமே என்று பாட முடியாதென்றாலும் பாலைவனமாகவும் இல்லை அந்த பூங்கா. ஓரளவு கண்ணுக்கு குளிர்ச்சியாய்தான் இருந்தது.

 

கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்து என்ன பயன்?? அவள் மனம்தான் அங்கில்லையே!

 

ஏனோ இன்னும் அவளால் முன்தின கலவரங்களையே சீரனிக்க இயலவில்லை!

அதில் பாதி அவள் நடக்கும் என்று யூகித்த ஒன்றென்றால் மீதி?? இது நம்ம டிஸைன்லையே இல்லையே என்றுதானிருந்தது அவளுக்கு!

 

பையினுலிருந்த ஃபோன் வைப்ரேட்ட அதை எடுத்துப் பார்த்தவளின் முகத்திலோ புன்னகையா?? இல்லை பூகம்பமா?? என்று தெளிவில்லாத ஒரு பாவனை!

 

யுகாதான் அழைத்திருந்தாள். காலையிலிருந்து அரைமணிநேரத்திற்கு ஒரு முறையென ஷெட்யூல் போட்டு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் முகிலினிக்கு.

 

அழைப்பை ஏற்றவளோ, “நான் கொழப்பிக்கல யுகா! தெளிவாதான் இருக்கேன்! வீட்டுக்கு போயிட்டு கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டாள் அந்த பக்கமிருந்தவள் வாயை திறக்கும் முன்பே. காலையில் இருந்து யுகாவும் அதே கேள்விகளைதானே வேறுவேறு டிஸைனில் கேட்டுக்கொண்டிருந்தாள்….

 

அன்று அவள் விடுப்பு எடுத்திருந்தாள். யுகாவிற்கோ ஆஃபிஸில் இருக்க வேண்டிய கட்டாயம். அதனால்தானோ என்னவோ முடிந்தளவு முகிலினியை பரிவால் படுத்திக் கொண்டிருந்தாள். வாள்கொண்ட வார்த்தைகளின் தாக்கத்தைவிட அமைதியான அன்பின் அழுத்தமே அதிகம் இல்லையா??

முகிலினியால் முதல் ரகத்தை தூசியாய் தள்ளிட முடியும்! ஆனால் இரண்டாவது…. அதனால்தானோ என்னவோ யுகாவின் அத்தனை அழைப்புக்களுக்கும் பதிலளித்தாள்.

 

எவ்வளவு நேரம்தான் இப்படி மரத்தையும் கரத்தையுமே வெறித்திருப்பது?? என்ன இருந்தாலும் சமாளிச்சுதான் ஆகனும் என்ற எண்ணம் ஆழமாய் வேரூன்றிப்போக அதே பழைய திடத்துடன் எழுந்தாள்… அவனை சந்தித்து பேசிவிடும் நோக்கில்!

 

எண்ணியது மட்டுமின்றி வந்தும்விட்டாள். அவனை பார்த்து பேச வேண்டும் என்று  வந்துவிட்டாள்தான் இருந்தும் ஏனோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டேதான் இருந்தது.

 

நினைவு வந்தவளாக ஃபோனை எடுத்தவள், தான் மகிழனை சந்திக்க வந்திருப்பதாகவும் தானே அவளுக்கு பிறகு அழைப்பதாகவும் ஒரு குறுந்தகவலை தட்டிவிட்டு அவனுக்காக காத்திருந்தாள்…. இதுவரை அவள் செய்யாத ஒன்று!

 

ஆம்! ஏனோ இந்த ஒருவருக்காக  காத்திருக்கும் பொறுமை மட்டும் அவளுக்கு வருவதே இல்லை! பிடிப்பதுமில்லை! இருந்தும் பல சமயங்களில்…

 

“சாரி லேட்டாகிருச்சா??” என்றவாறு வந்து நின்ற மகிழனிடம் இல்லையென்பதாய் தலையசைத்து

 

“ அகன்கிட்ட கொஞ்சம் பேசனுமே!?” என்றவள் மற்றவனின் ஆச்சர்யப்பார்வையில்,

 

“உன் பேரு அதானே!? அகமகிழன்…??” என்றிழுத்தாள் கேள்வியாய்.

 

பின்னே… சர்ட்டிஃபிகேட்டுகளில் மட்டுமே அகமகிழனாய் அவனிருக்க… மற்ற இடங்களில் எல்லாமே அவனை மகிழனாய்த்தானே பரிச்சயம்! அதுவும் இவளுக்கு எப்படி…. என்று நீண்ட எண்ணவலையை தடுத்தவனாய்,

 

“கஃபேட்டீரியா போலாமா??” என்றான் கேள்வியாய்.

 

“இல்ல வெளில போலாம்…” என்றுவிட அவனும் வண்டியில் ஏறிவிட அந்த நீல நிற ஸ்கூட்டி சாலையில் இறங்கியது.

 

அவ்வளவு நேரம்.. தேவைக்கேற்ப பேசினாலும்… ஓரளவு பேசியவள்… பேச வேண்டும் என்று அழைத்தவள். சாலையிலேயே தன் கவனத்தை பதித்திருக்க பொறுத்து பொறுத்துப் பார்த்த மகிழனோ

 

‘இப்ப ஏன் நகர்வலம் போயிட்டிருக்கோம் இவக்கூட?? இப்படியே எவ்வளவு நேரம்தான் போறது??’ என்று தோன்றிட

 

“முகி…”என்றவன் திருவாய் திறக்க வண்டி டயரோ பஞ்சராகியிருந்தது.

வண்டியை ஓரம்கட்டியவள் சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட தூரத்தில் இருந்த பஞ்சர் ஒட்டும் கடை அவள் கண்களில் விழுந்தது. உருட்டிச் செல்லும் தூரம்தான். அவனிடம் திரும்பியவளோ உடன் வரும்படி தலையசைத்தவளாய் முன்னேறினாள்.

 

‘ஓஹ்! மேடம் அத வாயத்திறந்து சொல்ல மாட்டாங்களாம்மா?? சரியான உம்முனாமூஞ்சு!!! நீலாம் இன்னைக்கு ஆஃபிஸ் வரலன்னு யாரு அழுதா?? இருக்கற கொழப்பத்துக்கு குப்பறடிச்சு படுக்கறதவிட்டுட்டு ஆஃபிஸுக்கு வந்தல்ல உனக்கு தேவைதான்டா!!!!’ மகிழனின் மனக்குரலே!!

 

வண்டியை கடையில் விட்டவளோ,” ஒரு அரை மணிநேரத்துல வந்துடுவோம்ண்ணா!” என்றவள்  இவனிடம் “ஆட்டோ பிடிச்சிக்கலாம் “ என்றுவிட்டாள்.

 

பத்தடி நடந்தவர்கள் அவர்களை கடந்துச் சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறிக் கொண்டனர். 

 

ஜனநெரிசலில் முதலில் ஊர்ந்துச் சென்ற ஆட்டோ பின் சீரான வேகத்தில் செல்லத் தொடங்க முடிவெடுத்தவளாய் அவன்புறம் திரும்பினாள் முகிலினி.

 

“நேத்து நடந்தது அன்எக்ஸ்பெக்டட்…” என்று தொடங்கியவள் அவன் எதோ சொல்ல வாய்திறக்க அதை கையசைத்து தடுத்தவளாய் தொடர்ந்தாள்.

 

“நான் முடிச்சிக்கறேன்! இப்போ இருக்கற நிலமைல… கல்யாணத்த பத்திலாம் யோசிச்சு பார்த்ததே இல்ல! ஸ்ரீதருக்கு ஒகே சொன்னதுக்கூட வேற பிரச்சனையால….என்னோட ட்ரீம்…அது வேற!” என்று பேசுபவளையே பார்த்திருந்தவன்

 

“தெரியும்!” என்றான் ஒற்றை வார்த்தையாய்..

 

அவள் புரியாத பார்வை ஒன்றை அவன்புறம் வீச அது புரிந்தவனோ “ஜீவா சொன்னான்!” என்றிருந்தான்.

 

“நீயும் உன் ஃப்ரெண்ட்டும் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ண போறதா…” என்றான் தொடர்ந்து.

 

“ஃபுட் ட்ரக்!” என்றாள் அவள் திருத்தமாக.

 

“ஃபாஸ்ட் ஃபுட்டா மேடம்??” என்ற ஆட்டோ அண்ணனின்.குறுக்கீடலில் அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது! ‘என்ன இந்தண்ணா??…அதுசரி சும்மாவா சொன்னாங்க… கனவுகள அடுத்தவங்ககிட்ட சொல்லாதீங்கன்னு!’ என்று தோன்றிட அவன் விழிப்பார்வையோ அவள் முகத்தையே ஆராய்ந்தன..

 

எதையும் பிரதிபலிக்காத முகத்தை கண்டவனுக்கே ஒருமாதிரி ஆகிட “அப்படின்னா எந்த மாதிரி முகில்??” என்று வினவினான் உண்மையான ஆர்வத்துடன்.

 

சில காலங்களாகவே  சென்ற இடங்களிலெல்லாம் கேலிப்பேச்சுக்களும் ஆர்வமின்மையையுமே கண்டிருந்தவள் மகிழனின் ஆர்வக் குரலில்  அவளையும் அதே ஆர்வம் தொற்றிக்கொள்ள விவரித்தாள்.

 

“ஃபுட் ட்ரக்!

 

அதாவது மொபைல் கேண்டீன் மாதிரி……

 

இப்போ இருக்கற நவீன ஃபுட் ட்ரக்குகளுக்கெல்லாம் முன்னோடியா… ஆரம்பப்புள்ளியா அமைஞ்சது டெக்ஸஸ் சக்வேகன்(Texas Chuckwagon).

   யூ.எஸ்-ல ஃபாதர் ஆஃப் த டெக்ஸஸ் பான்ஹாண்டில்னு அழைக்கப்படற   (Charles Goodnight) சார்ல்ஸ் குட்நைட்ங்கற ஒருத்தர் 1866ல யூ. எஸ். ஆர்மியோட வேகன்…அதாவது குதிரைவண்டிய மாத்தி அமைச்சிருக்காரு… சில பொருட்கள்… ஷெல்ஃப்னு வச்சு. அதுதான் ஆரம்பப் புள்ளிங்கறாங்க.

 

அதுக்கடுத்து 1872ல வால்டர் ஸ்காட்-ங்கற இன்னொருத்தர் இந்த டெக்ஸஸ் சக்வேகன்-ல சில மாற்றங்கள கொண்டுவந்துருக்காரு… அதுல சன்னல் மாதிரி வடிவமைச்சு… ப்ராவிடண்ஸ் ரோட் ஐலாண்ட்-ங்கற இடத்துல ஒரு பத்திரிக்கை ஆஃபிஸுக்கு முன்னாடி நிறுத்தி வச்சு… அங்க வர்ற ஜர்னலிஸ்ட்களுக்கு சர்வ் பண்ணிருக்காரு.

 

அவருக்கடுத்து 1880ல (Thomas H. Buckley) தாமஸ் ஹெச். பக்லி-ங்கறவர் அதையே இன்னும் நிறைய மாடிஃபை பண்ணி லஞ்ச் வேகன்-னு தனியா தயாரிக்கத் தொடங்கிட்டாரு. இந்த லஞ்ச் வேகன்ல உள்ளேயே ஃப்ரிட்ஜ், பாத்திரம் கழுவ ஸின்க், அடுப்பு…மாதிரி .

 

அடுத்து  வந்ததுதான் மொபைல் கேண்ட்டீன்.. பின் 1950கள்ல.

மொபைல் ஃபுட் ட்ரக்குகள… ரோச் கோச்சஸ் இல்ல கட் ட்ரக்ஸ்னும் சொல்லுவாங்க(Roach coaches& gut trucks). பொதுவா கட்டுமானப்பணிகள் நடக்கற இடம், ஃபேக்டரீனு ப்ளு காலர் லொகேஷன்களதான் டார்கெட் பண்ணுவாங்க.

 

என் ஆசையெல்லாம் நம்மூர் ருசிய… நம்ம ஸ்டைல்லயே குடுக்கனும்னு…” என்று கண்கள் மின்ன ஆர்வமாய் சொல்லிக் கொண்டிருந்தவளையே இமைக்க மறந்தவனாய் பார்த்திருந்தான் மகிழன்.

 

‘இந்த விஷயத்துல எவ்வளவு சீரியஸா இருந்தா… இப்படி.. இவ்வளோ அழகா..தெளிவா விளக்குவா!’ என்றுதானிருந்தது அவனுக்கு.

 

ஜீவா சொன்னப்பொழுதே ஓரளவு நினைத்திருந்தான்தான். ஆனால் இந்த அளவு இல்லை.

 

அதுவும் அவள் சொல்வதையெல்லாம் வைத்துப்பார்த்தால்…

 

“இதுக்கு  எவ்வளவு செலவாகும்??” என்றவன் அவள் உரைத்ததில் அதிர்ந்துதான் போனான். ‘அவ்வளவா???’ என்று

 

“ட்ரக்குக்கு… இன்ட்டீரியர் டிஸைனிங்குக்குனு… செலவு அதிகம்தான். இதுவே ஏற்கனவே இருக்க ஃபுட் ட்ரக்க ரெண்ட்க்கோ… இல்ல லீஸுக்கோ எடுத்தா கம்மியாகும்.. ஆனா அதுலையும் நிறைய சிக்கல் இருக்கு…லோனுக்கு அலைஞ்சா ஷ்யூரிட்டி…அது இதுன்னு… ஆயிரத்தெட்டு விஷயமிருக்கு! “ என்றவளின் முகத்திலோ சிந்தனையின் ரேகை!!

‘கதிர் அங்கிள்…??’ என்ற எண்ணமெழ,

 

“அங்கிள் பேங்க் எம்ப்ளாயிதானே?” என்று சந்தேகத்தில் கேட்டவன் மற்றவளின் முகமாறுதலைக் கண்டு ‘நான் இப்ப என்ன தப்பா கேட்டுட்டேன்னு இவ இப்படி பாக்கறா??’ என்று பார்க்க அவளோ,

 

“பேங்க் எம்ப்ளாயி பொண்ணுக்கு ஈஸியா லோன் கெடச்சிரும்னு யாரு சொன்னா?? எனக்கு அப்பாக்கிட்ட போய் நிக்கறதுல விருப்பமில்ல. அவரும் அதையேதான் விரும்புவாரு! “ என்றாள் அழுத்தமாய்.

 

“பொழைக்க தெரியாத பொண்ணா இருக்கீங்களே மேடம்!! ஹும்! நேர்மையா இருக்கவங்களுக்கு இப்ப எங்க காலம்….” என்று தலையை திருப்பிய  ட்ரைவர் அண்ணனையே இரு பார்வைகளும் வெவ்வேறு விதமாய்  தாக்கின…

 

ஏற்கனவே கடுப்பில் இருந்தவளோ இவரின் குறுக்கீடலில்  அத்தனைநேரம் பிடித்து வைத்திருந்த பொறுமை பறந்துவிட

 

“கொஞ்சம் வாய மூடிட்டு முன்னாடி திரும்பிறீங்களாண்ணா!?” என்றுவிட ஓர் நொடி அதிர்ந்தாலும் அவர் முன்னே திரும்பிவிட மகிழனால்தான் அதை அத்தனை சுலபமாக எடுக்க முடியவில்லை.

 

‘கொஞ்சம் பொறுமையா பேசியிருக்கலாம்…’ என்க மற்றொன்றோ…

 

‘ஆமா வாழ்க்கையே இங்க எருமைல ஏற ரெடியா நிக்கி…உனக்கு பொறும கேக்குதோ?!’ என்று நக்கலாய் நகைக்க.. அதை புறந்தள்ளியவனின் மனம் அவள் செயலையே ஆராய்ந்தது.

நெட்வர்க் பில்டிங்! அதில் அவனுக்கு அத்தனை நம்பிக்கையுண்டு. சக மனிதர்களை நட்பெனும் சொல்கொண்டு இணைத்து வைப்பதில் அத்தனை மகிழ்ச்சி காண்பவன் அவன்.

அவனுக்கே அவரின் செயலில் எரிச்சல் மூண்டாலும் அதை காட்டிக்கொள்ளவில்லை.. அப்படியே வெளிக்காட்டியிருந்தாலும் அது இப்படி தடாலடியாய் இருந்திருக்காதோ?? என்று தோன்றிவிட

 

‘என்னடா இது?? நாம ஆயிரம் ஜன்னல் வீடுனு பாடுனா.. இவ டச் டோன்ட் டச் டோன்ட்னு எல்லாத்தையும் வெரட்டியடிக்கறாளே!!…கடவுளே!!!! என் வாழ்க்கைல கும்மியடிச்சிறாதப்பா!!!’ என்று அவன் மனதின் குமுறல்கள் சத்தமில்லா அலறலாகின..

 

வெளியே பார்வையை பதித்திருந்தவள் தீடீரென “ நிறுத்துங்க நிறுத்துங்க!!” என்றிருந்தாள்.

 

தன்னிலை மீண்டவனோ ‘ஏன் இங்கேயே நிறுத்த சொல்றா??’ என்று விழித்துக் கொண்டிருக்க கீழிறங்கியவளோ அவசர அவசரமாய் பையிலிருந்து பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துவளாக ரோட்டிற்கு அந்தப்பக்கத்திலேயே பார்வையை பதித்து கடக்க முயன்றாள்.  

 

குடுகுடுவென ரோட்டை கடந்து அந்தப் பக்கம் ஓடியவளையே பார்த்தவன் “முகில் பார்த்து!! இரு இரு!!” என்றவனாய் வேகவேகமாய் அந்த சாலையின் மறுபக்கத்திற்கு விரைந்தான்.

 

அங்கு அவன் கண்ட முகிலினி… அவனுக்கு புதியவள்..!!

 

சாலையையே பார்த்து வந்தவளின் பார்வையில் அது விழுந்தது. வயதான பாட்டி  நடக்க முடியாமல் நடப்பதுபோல் இருக்க  அவரையே கவனித்துக் கொண்டிருவந்தவள் வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு பணத்தையும் கொடுத்துவிட்டு அவரிடம் விரைந்திருந்தாள்.

 

தன் முன்னால் அதே டேபிளில் அமர்ந்து உண்ணும் அந்த பாட்டியையே பார்த்திருந்த மகிழனின் மனமோ கலங்கியிருந்தது.

 

‘இவ மட்டும் பாக்கலன்னா??’ என்ற கேள்வியே அவனை அரித்துக் கொண்டிருந்தது.

 

வயதான காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்குகூட வழி இல்லாமல்.. பசியின் பிடியில்… ச்சே! என்ன மாதிரி வாழ்க்கை இது?! முதுமையிலும் வறுமை கொடுமைதான்!!” என்றெண்ணியவனுக்கு இன்னொரு உண்மை சுளீரென வலித்தது! இங்கு வறுமை… பணத்தால் மட்டுமல்ல.. அன்பாலும்தானே?!

 

அந்த விதத்தில் முகிலினியை நினைக்க நினைக்க அவனுக்கு ஆச்சர்யமே!

 

கையில் பணத்தை திணித்துவிட்டு போவதைவிட… இவள் இப்பொழுது செய்துக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிது??!! உண்ண உணவு கொடுத்து… இப்பொழுது அவரைக் கொண்டுவந்து பாதுக்காப்பான இடத்தில் சேர்த்தாயிற்று!! தொடக்கூட அறுவறுப்படையும் சிலர் மத்தியில் சகமனிதர்களை மனிதர்களாய் மதிக்கத்தெரிந்தவளாய் அவளிருக்க..

 

நிச்சயமாய் இவள்தானா கொஞ்ச நேரத்திற்குமுன் இருந்தவள் என்ற சந்தேகமே அவனுக்கு வந்திருந்தது நடக்கத் தொடங்குகையில்.

 

‘கொஞ்ச நேரத்துக்கு முன்ன அந்த ட்ரைவர்.அண்ணன்கிட்ட எப்படி பேசினா…இப்போ இந்த பாட்டிமாக்கிட்ட எப்படி பேசறா??  இவள எந்த ரகத்துல சேர்க்க?? ‘ என்றுதானிருந்தது…

 

அந்நொடி அவனுக்கு தோன்றியதெல்லாம் இதுவே, ‘இவளோடான வாழ்க்கை அவ்வளவு ஒன்னும் கஷ்டமா இருக்காதுபோலயே!’ என்ற எண்ணமெழ திடுக்கிட்டான்.

 

‘என்ன??? அப்போ கல்யாணத்துக்கு நீ ரெடியாகிட்டியா??’ என்ற கேள்வி தலை தூக்க… அவனே அவனுக்கு முரணாய்..!!

 

மறுபடியும் ஆட்டோ ஒன்றை பிடித்து அவள் வண்டியை நிறுத்தியிருந்த கடைக்கு வந்திருந்தனர்.

 

“இந்த கல்யாணத்துக்கு நீ எதுக்கு ஒகே சொன்ன??” என்றவளின் கேள்வியில் அவன் கவனம் அவள்புறம்.

 

ஏதேதோ சிந்தனைகள் வலைபின்ன இருந்தவன் ஒருகணம் ஒன்றும் புரியாமல்  விழிக்க அவன் விழித்து நின்ற விதத்தில்,

 

“என்ன பரிதாபமா?? சிம்பதி காட்றீயா??” என்றவளின் குரலில் இம்முறை இருந்ததென்ன?? கோபமா?  வருத்தமா??

அதற்குள் மீண்டிருந்தவனோ அவளை கேலியாய் நோக்கி,

 

“ஹல்ல்லோ!!! மேடம்!! பரிதாபப்படனும்னா…உன்மேல இல்ல! அந்த ஸ்ரீதர்  & கோ மேலதான் பரிதாபப்படனும்!  அடிவாங்கினது அவங்கதான்…ஸோ கோப்பை அவங்களுக்குதான் சொந்தம்!!” என்றான் எள்ளலாய்.

 

மூக்கு விடைக்க அவன்புறம் திரும்பியவளோ, கோபமூச்சொன்றால் அந்த இடத்தை நிரப்பியவளாக வண்டியை கிளப்பிச் சென்றுவிட்டாள்.

 

சின்னச்சிரிப்பில் விரிந்திருந்தன இருவரின் இதழ்களும்!! மற்றவரின் அறியாமையில்..!!

 

அந்த பில்டிங்கை கடக்கும்வரைகூட அவளால் அந்த கோபத்தை பிடித்து நிறுத்தவோ…இல்லை இதழோரத்தில் மென்மையாய் வளைந்ததை தடுக்கவோ முடியவில்லை! மனதின் ஓரத்தில் இருந்த சிறு உறுத்தல்கூட கரைந்திருக்க நேற்று நடந்தவையெல்லாம் எங்கோ பின்னுக்குச் சென்றிருந்தது.

 

‘ஒருமணி நேரம் இருக்குமா?? அதுக்குள்ள எத்தனை அவதாரம் எடுக்கறா???’ என்றுப்போன மனது ஏனோ முன் தினத்தையே அசைப்போட்டது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!