காதலாகி

காதலாகி

      காதலாகி

 

என் ஆள பாக்க போறேன்
பார்த்த சேதி பேச போறேன்
அவன் கண்ணு குள்ள என்ன வெக்க போறேன்
அவன் நெஞ்சு குள்ள என்ன தெக்க போறேன்
நானே என்ன தர போறேன்
என் ஆள பாக்க போறேன்
பாத்த சேதி பேச போறேன்

என்று இசையாய் தீண்டிய வரிகளில் சிக்னலென்றுக்கூட பாராமல் சற்று புன்னகை மலரத்தான் செய்கிறது இதழ்களில்.

மனம்தான் மாயச்சிறகொன்றை கட்டிக்கொண்டு பின்னோக்கி பறக்கிறதே!

இப்ப அந்த பாட்ட அமத்தல…” என்று நறநறக்கும் என் பற்களுக்கு பதிலாய் அதை அமர்த்தியிருந்தாள் என் ஆருயிர் தோழி, அதிதி.

“இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்!” என்னதான் கைகள் பாடலை அணைத்திருந்தாலும் முகத்தினில் கோபம் கொப்பளித்தது அவளுக்கு.

காரணம் அப்படியாயிற்றே!

என்ன ஓவர்?! ம்ம்?”

அவள் மூச்சிழுத்துவிட்ட விதமே அடித்துரைத்தது அவள் என்னை அடிக்க வாய்ப்புகள் அதிகமென.

“கிறுக்கா நீ? நீதானே மாப்பிள்ளை பாக்க ஓகேன்ன? அப்பறமெதுக்கிந்த ஸீனு?”என்றதுதான் தாமதம் குபுகுபுவென கோபமெழுந்தாலும் அடுத்த கணமே ஐஸ்வாட்டர் ஊற்றியதுபோல் புஸ்ஸென அமுங்கிவிட்டது.

ஓகே சொன்னது நானல்லவா? மனசாட்சியெனும் மாயப்பிசாசு அவ்வப்பொழுது விழித்து இதோ இப்படிதான் காலைவாரிவிடுகிறது.

ஓகே சொன்ன நான் என்ன கனவா கண்டேன்? ஒரு மாசத்தில் இப்படி ஒருவன் அந்த மிலிட்டரியிடம் சிக்குவானென.

மிலிட்டரி..எங்கப்பாதான்! படு ஸ்ட்ரிக்ட் பார்ட்டி! இப்ப நான் மட்டும் ஜகா வாங்கினா மனுசன் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிருவாரு! அந்த மாப்பிள்ளை மங்கூஸ்வேற இவர அப்படியே மடக்கிருக்கானே! படுபாவி… அப்படி என்னதான் செஞ்சானோ? இத்தன வருசத்துல எத்தன முறை ட்ரை பண்ணியும் என்னாலக்கூட அந்த மனுசன கரைக்க முடியாதப்போ.. எங்கிருந்தோ வந்தவன் கரெக்ட் செய்வதா?!! அப்படினு கொந்தளிக்க ஆசைதான்… அதற்கும் கொள்ளி வைத்தாயிற்று! இந்த லட்சணத்துல நான் போய் அந்த MM-அ மீட் பண்ணனுமாம்..அதான் மாப்பிள்ளை மங்கூஸ்!

எதோ காஃபிஷாப் வேற! பச்! என் வாழ்க்கைல மட்டும் ஏன்தான் ராகு கேதுனு இருக்கற எல்லா கட்டமும் சேந்து கட்டம்கட்டி அடிக்கிதோ! இதுல இவ வேற.. என ஆள பாக்கபோறேன்.. வெளக்குமாறு பின்னப்போறேனு!!

“சொல்லு யவி!!”

இவ விடமாட்டா போலிருக்கே..

“சொன்னேன்தான்.. ஆனா அதுக்குனு இவ்ளோ சீக்கிரமாவா?!”

“யவி…?”

இதுக்கு நான் என்ன சொல்றது? கல்யாணம் வேணாம்னு சொல்ல என்கிட்ட பெரிய ரீஸன்லாம் எதுவுமில்ல.. ஜஸ்ட் வேண்டாம்!

“இப்பதானே வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கோம்…” என்று நான் முடித்திருக்ககூட இல்லை வார்த்தைகள் தடைப்பட்டன உற்றத்தோழியின் உயர்ந்த புறுவத்தினால்.

“நாம சம்பாதிக்க ஆரமிச்சு ஒன்ர வருஷத்துக்கு மேல ஆகுது..” என்றவளின் குரலும் கேள்வியாய் வளைந்தது.

கரெக்ட்தான்! ஆனா என்ட்ட வேற ரீஸனில்லையே! காதல் கண்றாவி எதுலயும் இன்ட்ரெஸ்ட் இல்ல! ஜஸ்ட் வாண்ட் டு லிவ் மை லைஃப்… அதாவது “லிவ்” மை லைஃப்.

இதுவரைக்கும் யாரையும் அவ்ளோலாம் பிடிக்கல.. ஸோ க்ரஷ்ஷ தாண்டி காதல்ங்கற லெவலுக்குள்ள யாரும் வந்ததில்ல.. நமக்குதான் பிடிச்ச அஞ்சே நிமிஷத்துலேயே பிடிக்காம போயிருதே!

“யவி…”

“ப்ச்! என்ன அதி?” சலிப்பு சங்கீதம் பாட ஆரம்பிச்சிடுச்சு எனக்கு.

“ஒருதடவ போய் பார்த்துட்டு வாயேன்.. ஜஸ்ட் ஒன் டைம்..ஒன் காஃபி.. பிடிக்கலன்னா அப்பாட்ட பேசிக்கலாம்” என்று இறங்கி வந்தாள்.

எல்லா வீட்டுலயும் உருப்படாத ஒரு கேஸீருக்குமே! தட் தீவட்டி நான்தான் எங்க வீட்டுல.. அப்படிதான் மிஸ்டர்.மிலிட்டரி சொல்லிப்பாரு.. ஆனா வெளில பாக்கனுமே!? என் பொண்ணு எவ்ளோ இண்டிப்பெண்டட்.. செல்ஃப் மேட்னு பீத்தி தள்ளவேண்டியது.. ஹீ இஸ் ஹைலி அன்ப்ரடிக்டபிள்!!!!

இவர் பார்த்த.. நோ நோ.. இவரையே கன்வின்ஸ் பண்ணி கைகுள்ள வச்சிக்கிட்ட அந்த எம்.எம். மட்டும் எப்படி இருக்குமாம்? எல்லாம் ஒரே அச்சுல வார்த்த முறுக்கு மாதிரி கடுகடுனுதான் இருக்கப்போவுது. இதுக்கு போய் வேற பாக்கனுமா?

“ம்ம் சரி” என்றேன்.

“என்ன சரி? இட்ஸ் ஆல்ரெடி ஃபோர்! இப்ப கெளம்பினாதான் சரியாயிருக்கும்! க்விக் க்விக்! கமான் யவி!! யு கேன் டூ இட்!” என்று என்னை பாத்ரூமினுள் தள்ளி கதவடைத்தவளாய் அறையிலிருந்து வெளியேறினாள் அதிதி.

இந்த அதிதி மட்டும் தேவோபவ இல்ல! ராட்ச்சஸி!!

கையில் சிக்கிய பீச் நிற லாங் ஷர்ட்டும் வான் நிற ஜீன்ஸுமாய் கூந்தலை உயர்த்தி போனி டெய்லாக்கியபடி வெளியேறினேன்.

சில பட்டி டிங்கரிங்கிற்கு பின் வண்டி சாவியை கையிலெடுக்க ஆயிரம் அட்வைஸிற்கு பின் சீரான வேகத்துடன், சாலையில்… நான்…!!

வண்டியை இடம் பார்த்து நிறுத்திவிட்டு நிமிர கண்முன் வண்ண வண்ண விளக்குகளுடன் ஒளிர்ந்துக்கொண்டிருந்தது அந்த காஃபி ஷாப்!

இருக்கற க்ளைமெட்டுக்கு தெருமுனைல இருக்கற கடைல சர்பத்த வாங்கி உள்ளத்தள்ளினோமா காலாற நடந்தோமானு இல்லாம இந்த ஐஸ் பெட்டிக்குள்ளதான் அடபடனுமா? அதுவும் அரைமணிநேரமா ஒரே காபிய வச்சிட்டு என்ன பண்ண? பச்!

கண்ணாடிக்கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். சரியாய் மணி ஐந்து ஐந்து. அஞ்சு நிமிஷம் லேட்! அப்பாவா இருந்தா இதுக்கே அரை நாள் அட்வைஸ் கிடைக்கும்.

கார்னர் ஸீட்டில் கண்ணாடி வழியாய் வெளியை இரசித்தபடி இருந்தது அவனேதான்! அகரனேதான்!!

யெஸ்!!! அகரன்.. அதுதான் அந்த எம்.எம். ஓட ஓனர்ஸ் வச்ச ஒரிஜினல் பேரு.

ஹீல்ஸ்லாம் இல்ல இருந்தும் நான் தத்தக்கா பித்தக்கானு நடந்ததுல என் ஸ்னீக்கர்ஸ் சத்தத்துலேயே அகரன் கவனம் என் பக்கம்!

“அகரன்?” என்ற என் கேள்விக்கு அழகாய் இதழ்விரித்தவனோ, சிறிதாய் தலையசைத்து,

“மிஸ்.யவ்வனா ராஜகோபால்?” என்று நீட்டி முழக்கியபடி ஒரு கேள்வி.

ச்ச! ஒருத்தர பிடிக்கலன்னா அவங்க செய்யற எல்லாத்துலயும்ல குறை கண்டுபிடிக்கிது இந்த மனசு!

யெஸ்!! மிலிட்டரி பேரு ராஜகோபால்தான்! மிலிட்டரி பெத்த பொண்ணு நான் யவ்வனா!!!! பல கேலி கிண்டல்கள எனக்கு அசால்ட்டா வாங்கிக்குடுத்த பேரு… உஃப்!

“கொஞ்சம் ட்ராஃபிக்..” வாய்க்கூசாமல் அள்ளிவிட்டேன். நியாயப்படி இதற்கே இவன் என்னை ரிஜக்டிருக்க வேணும்.. பார்ட்டி அலட்டவேயில்லை.

“ஹ! தட்ஸ் ஃபைன்.. நானும் இப்பதான் வந்தேன்.. ஃப்யூ ஸெக்கண்ட்ஸ் பிஃபோர்!” என்று பல்பு கொடுத்துவிட்டான்.

“என்ன சாப்பிட்றீங்க?” என்றவனின் குரலில் என்னையுமறியாமல் உள்ளம் ஆசுவாசமடைந்தது அவனது அழைப்பில்.. பரவால்லயே! என்று.

“உண்மைய சொல்லனும்னா.. அம் நாட் எ காஃபி பெர்ஸன்! ஸோ நீங்களே.. சாய்ஸ் இஸ் யுயர்ஸ்!”  என்று என் பெருந்தன்மையை நிலைநாட்டினேன்.

அவனோ பெருந்தன்மையில் நானுனக்கு பெரியப்பா என்பதைப்போல

“ஓஹ்… ஃபைன்! நாம வேணா வெளில போலாமா? சும்மா ஒரு வாக்?”

என்னடா இவன்? எந்த பால் போட்டாலும் அடிக்கிறான்!!!

“ம்ம்ம் போலாமே..” என்றெழுந்துக்கொள்ள வண்டியை அங்கேயே விட்டுவிட்டு அந்த சுற்றுவட்டாரத்திலேயே சற்று நடைபயிலலாமென்று நடக்கத் தொடங்கினோம் இருவரும்.

ஹிட்லரை எதிர்ப்பார்த்து வந்த எனக்கு இந்த கைண்ட்ஹார்ட்டட் கண்ணாயிரம் அதிசயம்தான்! ஆனா இதுக்காகலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது!
மணியென்ன? மணியென்ன? என்று மனம் பரபரக்க கைக் கடிகாரத்தை பார்த்துக்கொண்டேன்.

ம்ம் வந்து பத்து நிமிஷம்தானே ஆகுது.. பாப்போம் இன்னும் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்குதுனு… என்னோட ஹையஸ்ட் ரெகார்டே அரைமணி நேரம்தான். அதுக்குள்ள ஏதாவது ஒரு விசயம் எரிச்சலூட்டிரும்.

“சர்பத் சாப்பிடலாமா?” என்றக் குரலில் இரண்டாவது முறையாக என் இதயம் சுளுக்குகிறது!

“குடிக்கலாமே!” என்ற என் குரலில் என்னையும் மீறி உள்ளத்து உற்சாகம் வெளிப்பட்டுவிட்டதோ? மென்மையாய் வளைகிறதே அவன் இதழ்கடையோரம்… ம்ம்

“ஹாய் அண்ணா!! எப்படியிருக்கீங்க?” என்றவனின் குரலுக்கு சற்றும் சளைக்காத உற்சாகத்துடன்

“அடடே!! வாங்க தம்பி!! எங்க ரொம்ப நாளாச்சு ஆளயே காணோம்?” என்றவரின் குரலில்… யப்பாஹ்! ஹாட்ரிக்! அதான் ஹார்ட் சுளுக்கு.

“அது வேலை விஷயமா வெளியூர் போயிட்டேண்ணா..” என்றவன் சொல்லிக்கொண்டேப் போக ஓ… என்று கேட்டுக்கொண்டிருந்தவரின் கவனம் என் புறம் திரும்பியது.

“யவிமா!!”என்று உற்சாகமாய் தொடங்கியவர் பின்னர் குழப்பமாய் இருவரையும் பார்த்தார்.

“யவிமாவ உங்களுக்கு தெரியுமா தம்பி?” என்ற கேள்வியும் போனஸாய் வந்து விழுந்தது ராமண்ணனிடமிருந்து.

அவரது கேள்வியில் முகம் மலர “ஆமாண்ணா..” என்று பேசியபடியே இரண்டு சர்பத் ஆர்டர் செய்ய இரு நண்பர்களையும் ஒன்றாய் பார்த்துவிட்ட குதூகலத்தில் சுவை மிகுந்த சர்பத்துடன் வெளிப்பட்டார் ராமண்ணன்.

குடித்து முடித்து அவரிடமிருந்து விடைப்பெற்று நடையை தொடர்ந்தோம் இருவரும்..  கண்கள் இரண்டும் தாமாய் கடிகாரத்தை நாடின.

சீரியஸ்லி!!? அவனுடனான அரைமணி நேரம் அசால்ட்டாய் கடந்திருந்தது.
“என்னாச்சு?” என்றவனின் குரல் கலைக்க தலையை நிமிர்த்தினேன்.

“ஒன்னுமில்லையே ஏன்?”

“இல்ல அமைதியா வர்றீங்களேனு கேட்டேன்..” என்றவன் பின் என்ன நினைத்தானோ

“வனா..” என்றழைத்தான் (எக்ஸ்ட்ரா மார்க்ஸ் ஃபார் குட் நிக் நேம்! என்றுள்ளம் சதி திட்டம் தீட்ட துணிந்தது)

“ம்ம் சொல்லுங்க அகரன்?” என்றேன் கேள்வியாய்.

“உங்களுக்கு எதாவது என்கிட்ட கேக்கனுமா? ஏன்னா முழுக்க முழுக்க இது அரேஞ்ட் மேரேஜ்…” என்றவனின் குரலில் சற்று யோசித்தவளாய்

“ம்ம்… காதல பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று நான் கேள்வியெழுப்பிட அவனோ சற்றும் அலட்டிக்கொள்ளாதவனாய்,

“காதல்…ம்ம்… காதல் வாழ்க்கையோட அத்தியாவசியம்னு நினைக்கறேன்” என்றுவிட மனமோ மாட்டுனான்டா மாடசாமி என்று குதூகலிப்பதுக்கு பதிலாய் எரிந்து விழத் தயாராகியது.

“ஓஹ்.. அப்போ அகரன் லைஃப்ல நெறைய லவ் இருக்கு போலயே..” என்ற என் குரலைக் கேட்டு எனக்கே திக்கென்றானது. இவன்கிட்ட ஏன் இவ்வளோ உரிமையா பேசறோம்??

“ம்ம் அப்படியும் சொல்லலாம்!” என்றவனின் குரலில் என்னுள் எழுந்த ஆத்திரமெல்லாம் அடுத்ததாய் அவனுரைத்தவையில் அமிழ்ந்துப்போயின அமுதமாய்.

“காதல்.. அதானே வாழ்க்கை மோல நமக்கொரு பிடிப்ப ஏற்படுத்துது இல்லையா? அது மனுஷங்க மேலதான்னு இல்லாம.. எதாவேணா இருக்கலாமில்லையா? காதலே இல்லாத மனிதனோட வாழ்வு நரகமாகிடாதா? வாழ்க்கைல எது மேலயாவது பிடிப்பு வேணும்.. காதல் வேணும்..நம்மள அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல இல்லையா? எனக்கு சின்ன வயசுல பாஸ்கட் பால் மேல காதல்! அப்பறம் குட்டி ப்ரேக் அப்! மறுபடியும் பாட்ச் அப்! அப்பறம் வயலின் மேல காதல்! இன்னைய வரைக்குமே! இப்படி காலத்துக்கேற்ப என் காதலும் மாறத்தான் செய்யுது.. ஆனா எதையாவது காதலிச்சிட்டேதான் இருக்கேன் இன்னையவரையிலும்.. அதனாலத்தான் உயிரோடையும்.. உயிர்ப்போடையும் இருக்கேன்… இல்லையா வனா?” என்றவனின் கேள்வியில் உத்தரவின்றி.. ப்ச் ப்ச்! அமுதமாய் ஒலித்தவனின் குரலில் சிறு புன்னகையொன்று மலர்ந்தது என்னிடம்.

ட்ரஸ்ட் மீ!!! நான் சத்தியமா நோ சொல்லத்தான் வந்தேன்!

பின்னாலிருந்து ஹார்ன் சத்தம் காதை கிழிக்க வண்டியை கிளப்பினேன்.

நேராய் ராமண்ணனின் கடை முன் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்த பெஞ்சில் நான் அமரவும் அவன் இரு தம்ளர் நிரம்ப சர்பத்துடன் வரவும் சரியாய் இருந்தது.

“லவ்ஸ்!!” என்று புன்னகையுடன் பெற்றுக்கொண்டேன்.

மலர்ந்த முகத்துடன் அருகில் அமர்ந்தான் அகரன். அதான் எம்.எம். ஆனா, இப்போ மாப்பிள்ளை மங்கூஸ் டூ மாப்பிள்ளை மாணிக்கம்!

யெஸ்!!! பய என்னையும் கவுத்துட்டான்! நான் கவுந்து ரெண்டு வருஷமாகப்போது. 2 இயர்ஸ்!!! ஜோக்கில்ல! இருபது நிமிஷம் தாக்கு பிடிக்குமானு யோசிச்ச விஷயம்… ரெண்டு வருஷம் தாண்டி.. இன்னும் இருபது வருஷமானாலும் தாக்கு பிடிக்கும்ற நம்பிக்கை வந்துருச்சு!!

இது அகரன் குடுத்தது.. ப்ச் ப்ச்! அகரனோட காதல் குடுத்தது.

அம் “லிவ்விங்” மை லைஃப் நவ்!!!!

ஸ்பெஷல் தாங்க்ஸ் டூ மை மிலிட்டரி!!!!!!!! 

வித் லவ்ஸ்ஸ் லவ்ஸ்ஸ்!!!!!
       யவ்வனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!