தயக்கம் ஏனடி பூந்தளிரே! 4

தயக்கம் ஏனடி பூந்தளிரே! 4

தயக்கம் ஏனடி பூந்தளிரே – 4

நிலா சொன்னவற்றை கேட்ட தாரா “என்ன கேர்ள் சொல்ற நீ?, இப்படி நீ என் ஆளோட ஃப்பெரண்ட திட்டி வச்சுருக்கியே அவர் ஏதாவது இவர் கிட்ட சொல்லி என் க்ரஷ் என்னை விட்டுட்டா? அப்புறம் என் நிலமை?” என்று வராத கண்ணீரை துடைத்த படி கேட்க, அவளின் கையில் அடித்த நிலா “ரொம்ப நடிக்காத, பார்க்க சகிக்கலை” என்றவள் மேலும் பேசும் முன் தாரா தங்களுக்கு அருகில் இருந்த டேபிளில் அமர்ந்திருந்தவர்களிடம் சென்று விட்டாள்.

 

 

அவள் சென்றதை அதிர்ச்சியுடன் பார்த்த நிலா ‘இவ திருந்த மாட்டா, போய் நோஸ் கட் வாங்கட்டும்’ என்று எண்ணிக் கொண்டே தன் மொபைலில் கவனம் செலுத்தினாள்.  

 

 

தங்கள் அருகில் திடிரென்று அமர்ந்த பெண்ணை பார்த்த ஆடவர் இருவரும் கண்களினாலே ‘உனக்கு தெரியுமா?’ என்று கேட்டுக் கொண்டு இருவரும் ஒரு சேர தோள் குலுக்கலுடன் விட்ட இடத்திலிருந்து பேச ஆரம்பித்தனர்.

 

 

அவர்களின் செய்கையை கவனித்த தாரா ‘என்ன தாரு உனக்கு வந்த அவமானம்?’ என்று தன்னை தானே கேட்டுக் கொண்டவள் அவர்களிடம் “ஹலோ மிஸ்டர்ஸ்!” என்று கூப்பிட,

 

 

இருவரும் ஒரு சேர “யெஸ் மிஸ்” என்றனர். இருவரையும் ஒரு நொடி பார்த்த தாரா, ‘என்ன ஒரே மாதிரி பேசறாங்க, கண்ணாலையே ஜாடையும் பண்ணிக்கிறாங்க, ஒருவேளை அவனுங்களா இருக்குமோ?’ என்று நினைத்தவள் “அட ச்சை ஒரு செக் என்னென்ன நினைக்க வச்சுட்டானுங்க?’ எண்ணிக் கொண்டே உடலை உலுக்க, ஆண்கள் இருவரும் அவளை விசித்திரமாக பார்த்தனர்.

 

 

 இருவரும் தன்னை கவனிப்பதை பார்த்த தாரா “என்ன? என்ன?” என்று கேட்க தாரவினால் ப்ளு ஷர்ட் என்று விளிக்கப் பட்ட நம் நாயகனின் நண்பனான ரிஷி “இல்லை, நீங்களா வந்திங்க, கொஞ்ச நேரம் குறுகுறுனு பார்த்தீங்க, அப்புறம் கூப்பிட்டீங்க, தென் ப்ரீஸ் மோட்க்கு போயிட்டீங்க, அதான் ஒருவேளை மெண்டல் ஹாஸ்பிட்டலில் இருந்து தப்புச்சு வந்திட்டீங்களோனு பார்த்தோம்” என்றான்.

 

 

இதை எல்லாம் கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் இருந்த நிலா வாய்க்குள் சிரித்துக் கொண்டே ‘தாரா உன்னை பத்தி உன் நியூ க்ரஷ்க்கும் தெரிஞ்சு கரைக்டா சொல்லிட்டாங்களே’ என நினைத்தாள்.

 

 

அவன் கூறியதில் அதிர்ந்த தாரா “ஹே என்ன மேன்? என்னை பார்த்தா உனக்கு லூசு மாதிரி இருக்கா? எவ்ளோ தைரியம் உனக்கு?” என்று எகிற, ரிஷியோ “ஆமா, அப்படி தான் இருக்க நீ” என்று உடனே கூறிவிட,

 

 

தாராவோ “ஏதோ உன்னை என் க்ர்ஷா வச்சுருக்கிறதுனால உன்னை விடறேன் மேன். அப்புறமா உன் கிட்ட வரேன் நான்” என்றவள், ஆதவிடம் திரும்பி “ஹலோ மிஸ்டர். வொய்ட், உங்களை நான் மாப்பிளை பார்க்க வந்திருக்கேன்” என்று சொல்ல, ஆடவர் இருவரும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள் என்றால் நிலாவோ தன் சிரிப்பை கட்டுப்படுத்த கஷ்டப்பட்டாள்.

 

 

ஆண்களின் அதிர்ந்த பார்வையை பார்த்த தாரா, தான் சொன்னதின் அர்த்தம் புரிந்து “ஹே வெய்ட், வெய்ட், நான் சொன்னது என் பெரெண்ட்க்கு நான் உங்களை மாப்பிளையா செலக்ட் பண்ணிருக்கேன், அதான் சொன்னேன். எனக்கு இந்த ப்ளு ஷர்ட்டு தான் எப்பவும்” என்று சொல்ல, ரிஷியோ “என்னது நானா?” என்று எண்ணியவன், தாராவை அளவிட ஆரம்பித்தான் அமைதியாக.

 

 

தாரா கூறியதில் சிரித்த ஆதவ் “பார்டா, அப்படி எந்த மகாராணிக்கு நீங்க மாப்பிளை பார்க்க வந்திருக்கீங்க?” என்று கேட்க,

 

 

தாரா அதற்கு பதில் பேசும் முன் அவ்விடம் வந்த நிலா “இப்போ நீ வரப்போறியா? இல்லையா?,” என்று கொஞ்சம் கோவமாக கேட்க, தாராவோ “ஹே, நான் இன்னும் பேசியே முடிக்கலை. இன்னும் நிறையா இருக்கு எனக்கு பேச” என்று சொல்ல, நிலாவோ “நீ பேசின வரைக்கும் போதும், இப்போ மரியாதையா கிளம்பு என்கூட” என்றவள் தன் பலம் கொண்டு தாராவை கிளப்ப பார்க்க, 

 

தாராவோ “நீ முதல்ல போ, நான் என் க்ரஷோட மொபைல் நம்பர் வாங்கிட்டு வரேன்” என்று சொல்லியவளின் வார்த்தையை முடிக்க விடாமல் நிலா அவளை இழுத்த செல்ல ஆரம்பிக்க, தாராவோ “ஹே விடு, விடு, நானே வரேன்” என்று அவளுடன் உடன் சென்றவாறே ஆண்களிடம் திரும்பி “இதோ இவளுக்கு தான் உங்களை நான் மாப்பிளையா செலக்ட் பண்ணிருக்கேன்” என்று கத்திக் கொண்டே அந்த காபி ஷாப்பை விட்டு வெளியேறினாள்.

 

 

அவர்கள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள் இருவரும் வாய்விட்டு சிரித்தனர். ஆதவோ “என்னடா உனக்கு பொண்ணு ரெடி போல?” என்று கேட்டுக் கொண்டே சிரிக்கவும் ரிஷியும் “உங்களுக்கு மட்டும் என்னவாம்?” என்று கேட்டு கொண்டே நீரை பருகினான்.

 

 

ஆதவோ “அடச்சீ வாயை கழுவுடா முதல்ல,” என்க, ரிஷியோ “என்னடா இப்படி சொல்லிட்ட? அந்த குட்டி பொண்ணு ஹைட்டுக்கு இப்படி சொல்றியா? பட் நீ அப்படி பட்ட ஆள் இல்லையே” என்று கேட்க

 

 

ஆதவோ “டேய், என்ன கேக்கிற நீ? பிசிக்கல் அப்பியரன்ஸ் பார்க்கிறா ஆளா நான்? பர்ஸ்ட் மீட்டே எனக்கும் அந்த சித்திர குள்ளிக்கும் வாய்க்கால் தகராறு மாதிரி வாய் தகராறு” என்றான்.

ரிஷியோ “எது நீ ஒரு பொண்ணு கூட சண்டை போட்டியா? நம்பவே முடியலைடா!” என்றவன் “நீ அவுங்களை எங்க, எப்ப பார்த்த?” என்று கேட்டான்.

 

 

“இன்னைக்கு இப்போ ஒரு ஹாஃப்னார் முன்னாடி ஹாஸ்பிட்டல்ல” என்று சொல்ல, ரிஷியோ “புரியற மாதிரி சொல்லுடா” என்றான்.

 

 

ஆதவும் ஆதியும் அந்தமுமாக எல்லாம் சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த ரிஷி வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பதை எரிச்சலுடன் பார்த்த ஆதவ் “சிரிக்காத மாடே, அவ என்னை திட்டிட்டான்னு சொல்றேன், நீ இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற” என்று கேட்க

 

 

“ஹையோ இல்லைடா, ஃப்ர்ஸ்ட் மீட் மோதல்ல ஆரம்பிச்சுருக்கு, சோ நெக்ஸ்ட் அது காதல்ல தான் முடியும்” என்று ஆருடம் சொல்ல “கொல்ல போறேன் உன்னை” என்றான் ஆதவ்

 

 

பின் ரிஷியே “ஓகே லீவ் தட், நாம நம்ம விசயத்தை பேசுவோம்” என்று அவர்கள் பிசினஸ் பற்றி பேச ஆரம்பித்தனர்.

 

 

இங்கு வெளியில் வந்த நிலா தாராவிடம் “நீ முழு லூசாவே மாறிட்டியா? பைத்தியம் மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்க? நீ பாட்டுக்கு அங்க போய் மாப்பிளை பார்க்கறேன்னு உளறிட்டு வந்திருக்கியே இதுவே பின்னாடி ஒரு ப்ரப்ளமா கிரியேட் ஆகிட்டா என்ன பண்றது?” என்று கேட்க,

 

 

தாராவோ “என் இண்டியூசன் என்னைக்குமே தப்பாகாது, ஒரு நாள் இல்லனா ஒரு நாள் இது கண்டிப்பா நடக்கும் பாரு” என்றாள்.

 

 

“அதை நடக்கும் போது பார்க்கலாம்” என்ற நிலா “எனக்கு அங்க போகவே பிடிக்கலை தாரா, மொத்தமா வெளிய வந்தரலாம்னு இருக்கேன் நான்” என்று சொல்ல, 

 

 

தாராவோ “வெளிய வந்து எங்க போறதா உத்தேசம் டாக்டருக்கு? அண்ட் அது உன்னோட வீடு, எல்லாமே உனக்கு அங்க தான் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ மூன் பேபி, சீக்கிரம் ஏதாவது செய்றேன் நான்” என்றாள்

 

 

 நிலாவோ “இன்னும் ஒரு மாசத்துக்குள்ள ஏதாவது பண்ணு தாரா. அதுக்கு மேல என்னால பேர்(தாங்க) பண்ண முடியாது. பார்க்கலாம் இன்னும் நான் என்னென்ன பார்க்க போறேன்னே தெரியலை. அந்த கடவுள் எனக்கு என்ன வச்சிருக்காருன்னு தான் தெரியலை. ஆனா அதுக்கு முன்னாடி நீ என்னை வச்சு செய்யாம இருந்தா போதும்” என்று கடைசியில் விளையாட்டாக முடித்தாள்.

 

 

தாராவும் நிலாவை கட்டியணைத்தவள் “எல்லாம் மாறும் சீக்கிரமா, யூ டோண்ட் வொர்ரி மூன்பேபி” என்றவள் “நானும் வரட்டா உன்கூட” என்று கேட்க “வேண்டாம் தாரு, நானே போய்க்கிறேன்” என்று சொல்லியவள் தன் வண்டியில் கிளம்பினாள். அவள் செல்வதையே பார்த்திருந்த தாராவும் தானும் தன் கார் எடுத்து கிளம்பினாள் தன் ஹாஸ்டலுக்கு.

 

 

இங்கு ராமனின் வீட்டில், சீதா ராமனிடம் “இங்க பாருங்க, இனி அவளுக்கு கல்யாணம் பண்றேன், அது பண்றேனுட்டு இனியும் காலத்தை விரையமாக்காம என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிங்க. இப்போவே என் பொண்ணுக்கு இருபத்தினாலு தொடங்கிடுச்சு. இனி இப்போ இருந்து பார்க்க ஆரம்பிச்சா தான் என் பொண்ணுக்கு ஒரு நல்ல இடம் தகையும். நானும் உங்க மூத்தா தாரத்து பொண்ணு இருக்கா,” 

 

 

“அவளை விட்டுட்டு என் பொண்ணுக்கு பார்க்க கூடாதுனு தான் நானும் முடிஞ்ச வரை எனக்கு தெரிஞ்ச எல்லா இடத்துலையும் பார்த்தேன். ஆனா அவ வாங்கி வந்த சாபத்துக்கு ஒன்னும் உருப்படாம போயிருச்சு. இன்னைக்கு கூட அவளுக்கு நான் சொன்ன இடத்துல இருந்து வந்து அவளுக்காக காத்திருந்து போயிருக்காங்க, இனியும் அவளால எனக்கு அவமானப் படமுடியது.”

 

 

நீங்க உங்க பொண்ணுக்கு என்னமோ பண்ணிக்கோங்க, ஆனா என் பொண்ணு கல்யாணம் முடியர வரை அவ இந்த வீட்டுக்கு வர கூடாது, இல்லைனா சொத்தை பிரிச்சு அவளுக்கு சேர வேண்டியதை கொடுத்து மொத்தமா அவளை தொலைச்சு விட்டுருங்க” என்று கத்த, ராமன் விட்ட அறையில் அமைதியானார் சீதா.

 

 

‘என்ன நானும் கண்டுக்காம இருந்தா நீ உன் இஷ்டத்துக்கு பேசிட்டே போற? என்ன சொன்ன என் பொண்ணை தொலைச்சு விடனுமா? என்ன ஒரு கொழுப்பு உனக்கு? அவ ஒன்னும் சாபம் வாங்கிட்டு வரலை. எல்லாமே நீ பண்ணின வேலைனு தெரியாத முட்டாள் இல்லை நான். அவ மேல இத்தணை வன்மம் உனக்கு ஏன் வந்துச்சுனு கூட புரிஞ்சுக்காத அளவுக்கு எனக்கு ஒன்னும் அறிவில்லாம இல்லை. ஏதோ வரக்கூடாத காலம் வந்து அவ அம்மாவை அவகிட்ட இருந்து பறிக்க தான் உனக்கு இந்த வாழ்க்கையே கிடைச்சிருக்கு,”

 

 

“அதும் அவளை பார்த்துக்க தான் உன்னை நான் கட்டிக்கிட்டதே. அவனால கிடைச்ச சொகுசு வாழ்க்கை மட்டும் வேணும் ஆனா அவ வேண்டாமா? இன்னும் என்ன சொன்ன சொத்துல பாதிய பிரிச்சு அவளுக்கு குடுக்கணுமா? அப்போ மீதி? இது என்ன உன் அப்பன் வீட்டு பணமா? பாதியை உன் பொண்ணுக்கு தர? இந்த மொத்த சொத்தும் நிலா ஒருத்திக்கு தான். நீ வாழ்ந்துட்டு இருக்க இந்த வாழ்க்கை என் பொண்ணு போட்ட பிச்சை. ஆனா என்னமோ நீ தான் அவளுக்கு வாழ்க்கையை கொடுக்க போற மாதிரி பேசிட்டு இருக்க? இப்படி காதுல கழுத்துலனு எல்லாம் நீயும் உன் பொண்ணும் போட்டுருக்கீங்களே எல்லாமே அவளோடது. இனி ஒரு வார்த்தை என் பொண்ணு பத்தி வரட்டும் உன் வாய்ல இருந்து, அதோட முடிஞ்ச நீ. நீ உன் பொண்ணுக்கு மாப்பிளை பாரு, பார்க்காம போ, ஆனா இனி நீ நிலாவை பத்தி ஒரு வார்த்தை பேச கூடாது” என்று எச்சரித்து விட்டு வெளியில் செல்ல போக,

 

 

சீதா அமைதியாக இல்லாமல் அவரிடம் ”அது என்ன ஐஸ்வயாவை என் பொண்ணுனு மட்டும் சொல்றீங்க? அவ உங்களுக்கும் மக தான?” என்று ராமன் பேசிய வார்த்தைகள் கொடுத்த ஆங்காரத்தில் கத்த, ராமனோ “எப்பவும் நீ தான் சொல்றியே அவ உன் பொண்ணு, உன் பொண்ணுனு. அவ எனக்கும் பொண்ணு தானான்னு நீ தான் சொல்லணும்” என்று சொல்லியவர் கோவத்தில் வெளியேறி விட்டார்.

 

 

ராமன் கூறிய வார்த்தையை கேட்ட சீதாவோ அதிர்ந்து நிற்க, அவரின் மனமோ ‘என்ன வார்த்தையை சொல்லிட்டாங்க? என்னை பார்த்து என்ன வார்த்தை?’ என்று அதிலேயே உலன்றது.

 

 

இதன் அத்தனைக்கும் வடிகாலாக அவருடைய கோவம் மொத்தமும் நிலாவின் மீது திரும்பியது. வீட்டில் யாரும் இல்லாமல் இருக்க இங்கு நடந்த அனைத்தும் யாருக்கும் ஏதும் தெரியவில்லை.

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!