ராகம் 7
ராகம் 7
ராகம் 7
அம்முவும் ரிஷியும் சென்ற பின், ருத்ராவின் நினைவுகள், தன் நீலாம்பரியுடனான தனது வசந்த காலத்தை நோக்கி சென்றது. தன் நினைவுகளில் நீங்காமல் நிறைந்திருக்கும், தன்னவளுடனான இனிமையான நாட்களில் சிறிது நேரம் மனதை துளைத்தவன், மொட்டை மாடியிலிருந்து தன் அறைக்கு சென்றான்.
அலங்கரிக்கப்பட்ட அறையின் இதம் மனதை நிறைக்க, தன்னவளை காண ஏங்கிய கண்கள் அறையை சல்லடை போட்டு அலசியது. அவளை காணாமல் மனம் சலிக்க, விருந்தினர் அறையை நோக்கி சென்றான்.
அங்கு, “இவ்வளவு பெரிய நகையா? வேண்டாம் அத்தை. எனக்கு இதுவே போதும்.” என, தன் கழுத்தில் ஆரம் ஒன்றை அணிவிக்க வந்த, அம்பிகாவை தடுத்த அம்முவின் கழுத்தை, ஒரு நெக்லஸ் மட்டும் அலங்கரித்திருந்தது.
“இவ்வளவு பூவா சித்தி? கொஞ்சம் குறைங்க.” என ருத்ராவின் அன்னையையும் அத்தையையும் ஒரு வழி செய்து கொண்டிருந்தால் அம்மு.
“ஏன் அம்மு, இப்பதானே பிந்துக்கு அலங்காரம் பண்ணி அனுப்பிச்ச. அவளும் சமத்தா பண்ணிக்கிட்டா. நீ மட்டும் ஏன் இப்படி எங்க கிட்ட வம்பு பண்ற?” என உரிமையாக சொல்லி, அவள் தலையை கொட்டினார் லட்சுமி. (ருத்ராவின் மாமன் மனைவி, ரேகாவின் அன்னை)
“போங்க சித்தி, எனக்கு அலங்காரம் பண்றதே பிடிக்காது.” சிணுங்கினாள் தமிழகத்தின் முன்னணி நடிகை மித்ராலினி.
“இப்ப இந்த பூவ வைக்க போறியா இல்லையா?” அதட்டினார் லட்சுமி.
அவருக்கு பலிப்பு காட்டி, “என்னமோ பண்ணுங்க.” என தன் தலையை அவரிடம் கொடுத்தவள், “இந்த ரேகா எங்க போனா? என்னை உங்ககிட்ட கோர்த்து விட்டுட்டு.” தோழியை காணாமல் குற்றம் சாட்டினாள்.
“அவ தலையில நீ மிளகாய் அரைச்சிடுவ. அது தெரிஞ்சு அவ எப்பவோ பாப்பாவோட எஸ்கேப்பாகிட்டா .” அம்பிகா.
‘துரோகி ரேகா. உன்னை காலைல கவனிச்சுக்கிறேன்.’ என அவளை மனதில் சாடியவள், “யூ டூ அத்தை?” என பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டு, அம்பிகாவை பார்த்தாள்.
அவளது பார்வையை கண்டு கொள்ளாமல், “அஃப்கோர்ஸ் அம்மு.” அலட்சியமாக தோள்களை குலுக்கினார்.
அவரை முறைத்தவள், “நீங்க ரொம்ப பேட் அத்தை.”
“என்னை பேட்னு சொல்றியா? இரு என் மகன்கிட்ட சொல்லி தரேன்.”
“பார்டா. உங்க பையன் பேர் சொல்லிட்டா, நாங்க பயந்துருவோமா. அவர் என்ன சிங்கமா? புலியா? அவரை பார்த்து நான் பயப்பட. அவர் மட்டும் என் கையில மாட்டட்டும், அவர மாதிரியே அடங்காம இருக்கிற அந்த தலை முடியை பிடிச்சு ஆட்டி, அந்த முறுக்கு மீசையை பிச்சு, அந்த மூக்கு…” என்றவளின் பேச்சு தடைப்பட்டது, “என்ன பண்ணுவ?” என்ற ருத்ராவின் அழுத்தமான கர்ஜனை குரலில். பதறி திரும்பிய அம்மு கண்டது, அவள் பேசியதை கேட்டு, கோபத்தில் கண்கள் சிவக்க அங்கு நின்ற ருத்ராவை.
“அம்மா கூப்பிடற மாதிரி இருக்கு. வா லட்சு போகலாம்.” என லட்சுமியை இழுத்துக்கொண்டு அம்பிகா, அந்த இடத்திலிருந்து நழுவினார். அம்முவோ செல்லும் அவர்களை தடுக்க முடியாமல், சிங்கத்திடம் தனியாக அகப்பட்டு கொண்ட அப்பாவி பெண்மானாக திரு திருவென முழித்து நின்றாள்.
என்ன ஆச்சரியம்! கோபத்தில் கொதித்தவன் நொடியில் அமைதியானான். சீரும் சிங்கமாக கர்ஜித்தவன் பெண்மானிடம் சிறைப்பட்டான்.
ஆம்! அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவனை நொடியில் மாற்றக்கூடிய வல்லமை படைத்தது அந்த அப்பாவி பெண்மானின் வதனம்.
இவ்வளவு நேரம் கதவிற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்த அம்முவின் அழகை கண்ட ருத்ராவின் கோவம் காணாமல் போனது. அவளது பேச்சில் வந்த கோபம் விலகி, அவள் அழகை கண்டு தாபம் குடியேறியது.
சந்தன நிற ஷிபான் சேலையில், மிதமான அலங்காரத்தில், தலை நிறைய மல்லிகை சூடி, தேவதை என நின்றிருந்த தன்னவளை, ருத்ராவின் கண்கள், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வஞ்சகமில்லாமல் மேய்ந்தது. பெண்மையின் எழில் வடிவம் காட்டும், அங்கங்களில் எல்லாம் ஆணின் மனம் சிக்கி சின்னா பின்னமானது.
ஆடவனின் கண்கள் பயணிக்கும் இடங்களில், பெண்மையினுள் சிலிர்ப்பு. பெண் நிற்க முடியாமல் கூச்சத்தில் நெளிந்தாள். அவளை இப்போதே ஆண்டு அனுபவித்துவிட வேண்டும் என்ற வேட்கை அதிகரித்தது. இருக்கும் இடத்தை கருதி, தலையை குலுக்கி தன்னை சமநிலைப்படுத்தியவன், ‘மயக்கு மோகினி’ என சத்தம் வராமல் உதட்டை அசைத்து, புது செல்ல பேரை சூட்டினான்.
கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பியவளுக்கு அவன் உதடசைவு புரியாமல், “எனக்கு சரியா கேக்கல. என்ன வேணும்?”
“என்ன கேட்டாலும் கிடைக்குமா?” என பல அர்த்தங்களோடு கேட்டவனின் பார்வை, அவள் உடலில் தாபமாக பதிந்தது.
‘விட்டா இவன் பார்வையாலேயே என்னை சாப்பிட்டுடுவான். ரூட்டை மாத்து.’ என நினைத்தவள், “எங்க இவ்வளவு தூரம்?” அவன் என்னமோ ஏழு கடல் ஏழு மலை தாண்டி வந்த மாதிரி கேட்டு அவனிடம் மீண்டும் மாட்டிக்கொண்டாள்.
அவள் பேச்சை மாற்ற முயல்வதை புரிந்தவன், சிறு சிரிப்புடன் அவளை நெருங்கி, “உனக்காக எவ்வளவு நேரம் வெயிட் பண்றது? நீ என்னடான்னா இங்கே உன் மாமியார், சித்தி கூட வம்பு பேசி, என்னை டேமேஜ் பண்ணிக்கிட்டிருக்க.” என்றவனின் கரங்கள் அவளை பூமாலையாக ஏந்தியிருந்தது.
எங்கே கோபத்தில் இருக்கிறானோ? என மிரண்டு அவன் முகத்தை கண்டாள். அங்கு கோபத்தின் அறிகுறி இல்லை. இப்போது தைரியமாக தன் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கி, ஆனந்தமாக அவன் கரங்களில் தவழ்ந்தவள், “அச்சச்சோ நான் டைம் கால்குலேட் பண்ணாம விட்டுட்டேனே கட்டவண்டி.” என கண்களை சிமிட்டியவளின் இயல்பு மீண்டிருந்தது.
அவளை தன் முகத்துக்கு நேரே தூக்கி, சிமிட்டிய கண்களில் இதழ் பதித்தவன், “உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தி ஆகிடுச்சு.” என்றவனின் பார்வை ஆசையாக அவளின் இதழில் பதிந்தது.
அவன் முத்தத்தில் முகம் சிவந்தாலும், “வாய் ஜாஸ்தியாயிடுச்சா? எவ்வளவு?” என ஒரு விரலை நாடியில் தட்டி சிந்திப்பது போல் அவன் முகம் பார்த்தவள், “இவ்வளவா?” என இரு விரல் கொண்டு தன் உதட்டை இழுத்து காட்டினாள்.
“ஐயோ! அம்மா! ராட்சசி!” என்றான் பயந்தவன் போல்.
“என்னை பார்த்தா ராட்சசி மாதிரியா இருக்கு? நான் கோபமா போறேன் போ.” என போலியாக மிரட்டினாள்.
“சரிதான் போடி ராட்சசி.”
“மறுபடியும் ராட்சசியா? இறக்கி விடுடா.” என்று கூறியவளும் இறங்குவதற்கான முயற்சி எதுவும் எடுக்கவில்லை. போடி என்றவனும் இறக்கி விடுவதற்கான சிறு அறிகுறி கூட இல்லை.
“ராட்சசிதான் என்னோட அழகான ராட்சசி.” என்று முகத்தோடு முகம் இழைந்தான்.
“ரொம்பத்தான்.” பலிப்பு காட்டியவள், அவன் தன் முகத்தோடு இழையவும், “என்ன பண்ற? யாராவது பாக்க போறாங்க?” என்றவளுக்கு இப்போதுதான் தன் நிலை உரைத்தது. “ஹேய் என்னை தூக்கிட்டு போற? அத்தை, சித்தி தப்பா நினைக்க போறாங்க. இறக்கி விடு.” என அவன் கரங்களிலிருந்து விடுபட முயன்றாள்.
அவளை மேலும் தன்னுடன் இறுக்கியவன், “இங்க யாரும் இல்லை. நம்ம ரூம் கிட்ட வந்தாச்சு.” பிறகே சுற்றிலும் பார்த்தவள் தாங்கள் மட்டும் இருப்பதை கண்டு நிம்மதி மூச்சு விடுத்தாள்.
“யாருமில்லைனு ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காத. என்னை கீழே போட்டுடாம தூக்கிட்டு போ.” ராணியின் தோரணையுடன் கட்டளையிட்டால்.
“உனக்கு உடம்பு பூரா கொழுப்பு ஏறிப்போச்சு. திம்ஸு கட்டை.” என்றவனின் பார்வை அவளை ரசனையாக தழுவியது.
“என்னை பார்த்தா உனக்கு திம்ஸு கட்டை மாதிரி இருக்கா?” கண்களை உருட்டி முறைத்தாள்.
“பார்த்தா அப்படி தெரியல. ஆனா தூக்கிட்டு வந்த என் முதுகு போச்சு.” என்றவன் அவளை தன் படுக்கையில் உருட்டி விட்டு, போலியாக தன் முதுகை பிடித்துக் கொண்டு கதவை தாளிட்டு திரும்பினான்.
ஒரு உருண்டு உருண்டவள், ஒரு கையை தலைக்கு அண்டை கொடுத்து ஒய்யாரமாக அவன் படுக்கையில் படுத்தவாரு மையலாக அவனை பார்த்தாள்.
அவள் புடவை கணுக்கால் வரை ஏறி சந்தன கால்கள் தெரிய, அவள் உருண்டதில் மாராப்பு நெகிழ்ந்து அவள் இடையோடு வயிறும் பளிச்சென்று கண்களுக்கு விருந்தளிக்க, லிப்ஸ்டிக் இல்லாமல் சிவந்த இதழ்கள் வசீகரிக்கும் புன்னகையோடு மிளிர, ஓவியம் போல் கிடந்தவளின் அழகு ஆண்ணவனை மயக்கியது.
அவள் அருகே படுக்கையில் சரிந்தவன், அவளை தூக்கி தன் மார்பில் போட்டுக் கொண்டான். சுகமாக அவன் மேல் படுத்தவள், கைகள் இரண்டையும் அவன் மார்பில் வைத்து, அந்த கைகளில் தன் நாடி பதித்து, அவன் முகம் பார்த்து, “முரட்டுப் பயலே இப்படித்தான் என்னை புரட்டுவையா?”
“முரட்டுப் பையன் வேற என்னடி பண்ணுவான்?” என வாய் சொன்னாலும், கை அந்த மலர் முகத்தை காண முடியாமல், அவள் முகத்தை மறைத்த மல்லிகை சரத்தை மென்மையாக விலக்கியது. அந்த முரட்டுப் பயலின் மென்மையை ரசித்தவள், கண் சிமிட்டாமல் அவன் முகத்தையே பார்த்தாள்.
“இந்த முரட்டு பயலை உனக்கு புடிக்குமாடி?” என நடுக்கமாக வந்த ருத்ராவின் கேள்வியில் திடுக்கிட்டு விழித்தாள்.
இந்த கேள்வி இன்று தோன்றியதல்ல. அவளை முதன் முதலில் சந்தித்த நாளிலிருந்து, அவன் மனதை அரிக்கும் கேள்வி. அதிலும் நான்கு வருடங்களுக்கு பிறகு, அவளை மீண்டும் கண்டதும், தன் காதலுக்காக அவளை வற்புறுத்தியதாக மனதில் ஒரு நெருடல். ஆனாலும் அவளை இழப்பதற்கு துளிக்கூட மனமில்லை. பல அடாவடிகள் செய்து, கிட்டத்தட்ட அவளை வற்புறுத்தி திருமண பந்தத்தில் நுழைத்தான். இப்போது அவள் முழு சம்மதமில்லாமல் மேற்கொண்டு செல்ல அவனுக்கு விருப்பமில்லை. அதனால் இந்த கேள்வி.
அவனது மன அலைக்கழிப்பு பாவைக்கு புரிந்தது. அதை போக்க வேண்டும். எப்படி?
பிடிக்கும் உன்னை பிடிக்கும் முரடா உன்னை பிடிக்கும்
ஆகாயா வெண்ணிலவே பிடிக்கும் ரொம்ப பிடிக்கும்
அந்த முரட்டு பயலை தனக்கு எவ்வளவு பிடிக்கும் என, பாடல் வார்த்தையை தனக்கு ஏற்றவாறு மாற்றி பாடி தெரிவித்தாள். அவள் பாடிய வரிகளில் மனதை தொலைத்தான்.
“ஏன் முரடனை?”
மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது
முறடா உனை ரசித்தேன்
அவள் முரடாக மாறி அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
அவன் முறுக்கு மீசையை முறுக்கி அவன் கர்வத்தை அதிகரித்தாள்.
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
ரோமம் அடர்ந்த அவன் மார்பில் முகம் சாய்த்தாள்.
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
பார்வைகள் ஒன்றுடன் ஒன்று கவ்விக் கொண்டது. அவன் விரல் அவள் காது, கன்னம், கழுத்து என தீண்டியது.
உன்னை.. போலே ஆண்ணில்ல….
நீயும் போனா….
நான்னில்ல…
அவன் தீண்டலில் பெண்மையின் வார்த்தை திக்கியது. அதில் ஆண்மையின் உள்ளம் சிக்கியது.
அதற்கு மேலும் பொறுமை காக்க அந்த முரட்டு பயலுக்கு முடியுமா?
அவளை மெதுவாக கட்டிலில் சாய்த்து, அதிரடியாக அவள் இதழ்களை சிறை செய்தான். அந்த இதழ் முத்தம், அவர்களது மனதில் நுழைந்து உயிர் வரை சென்று தாக்கியது. இதற்கு முன்னும் பலமுறை அவள் இதழை முற்றுகையிட்டு இருக்கிறான். அப்போது இல்லாத நிறைவு இன்று.
அக்னிசாட்சியாக கரம் பிடித்த அவன் மனைவியிடம், அவன் உணர்ச்சிகள் கட்டவிழ்க்க தொடங்கியது. பெண் மூச்சுக்கு தவிக்க, நீண்ட நொடிகள் தொடர்ந்த முற்றுகை போராட்டம் முடிவிற்கு வந்தது.
இதழுக்கு விடுதலை கொடுத்தவன், அடுத்த போரை அவள் சங்கு கழுத்தில் தொடங்கினான். அந்த போரில் அவள் அணிந்திருந்த நெக்லஸ் விடைபெற்றது. அடுத்த போர் காதுகளில் தொடர்ந்து ஜிமிக்கிக்கு விடைகொடுத்தது. முகமெங்கும் போர் தொடுக்க, உடலில் இன்ப வெள்ளம் பாய்ந்தது. நாடி, நரம்பு அனைத்திலும் இன்பம், இன்பம், இன்ப ராகம் மட்டுமே.
இப்போது தேகமெங்கும் போரை தொடர, தடையாக இருந்த அவளது நெகிழ்ந்த ஆடையை கலய தொடங்கினான். அதனுடன் அவர்களது வாழ்க்கை போராட்டமும் தொடங்கியது.
ஆம்! அதுவரை அவன் கைகளில் உருகி குழைந்த பெண்ணின் உடல், சில வருடங்களுக்கு முன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை நினைத்து இறுக தொடங்கியது. மறந்ததாக நினைத்த தன் வாழ்வின் இருண்ட பக்கம், இன்று கண்முன் தோன்றி அவளை பயம் கொள்ள வைத்தது.
அவளது மாற்றத்தை உணராத ருத்ரா அவள் சேலையை முழுதாக கழட்டியிருந்தான். அவள் மூளையில் ஆழமாக பதிந்து போயிருந்த, அவள் பெண்மை பறிபோன அந்த பொல்லாத நாளின் நினைவுகள் பூதாகரமாக மேலெழுந்து, பெண்ணை மூர்க்கமாக்கியது.
அவன் மீண்டும் அவளது இதழை நெருங்க, தன் பலம் கொண்ட மட்டும் அவனை தள்ளி விட்டவள், “நோ! கிட்ட வராத. கிட்ட வராத.” என அலறினாள்.
முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தவன், “கிட்ட வந்த என் ஈஸ்வர் உன்னை சும்மா விட மாட்டான்.” என்றவளின் நிலை புரிய, அவளை நெருங்கியவன், “அம்மு இங்க பார். நான் உன் ஈஸ்வர். உன் பக்கத்துல தான் இருக்கேன்.” என அவள் கன்னத்தை தட்டி சுயநினைவுக்கு கொண்டு வர முயன்றான்.
தன்னிலையில் இல்லாத அவளோ அவனை அடித்து தள்ளிவிட்டு, “கட்டவண்டி என்னை காப்பாத்து. இவன் என்னை என்னென்னமோ செய்றான். எனக்கு அருவருப்பா இருக்கு.” என கதறினாள்.
அவள் கதறலை கேட்ட ஆணவனின் மனம் ரணமாக எரிந்தது. தன்னை தேடிய தன்னவளை, காக்க தவறிய தன்னை நினைத்தே அருவருப்பு தோன்றியது. அவளது இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என நினைத்தவன் உயிரோடு மரித்துப் போனான்.
மனதை திடப்படுத்தி கொண்டு அவளை நெருங்கி அணைத்தவன், “நீலாம்பரி நான் உன் கட்டவண்டி தாண்டி. நான் உன் கூட தான் இருக்கேன். நீ பத்திரமா என்கிட்ட இருக்க. இனி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.” என பலமுறை சொல்லி அவள் போராட்டத்தை தடுத்தான்.
அவனிடமிருந்து விடுபட போராடி, முடியாதவள், தன் விரல் நிகம் கொண்டு அவன் முதுகில் கோடு கிழித்து காயமாக்கினாள், பற்களை ஆயுதமாக்கி அவன் மார்பில் கடித்து கிழித்து காயமாக்கினாள். அவன் உடலில் ஆங்காங்கே ரெத்த திட்டுகள் உருவானது. அவள் உடலில் ஏற்படுத்திய காயத்தை விட, மனதால் அவள் அனுபவிக்கும் காயத்தை எண்ணி, அவனது உள்ளம் அதைவிட அதிகமாக வலித்தது.
ஒரு வழியாக அவன் வார்த்தை அவளது மனதை எட்ட, “என்னை விட்டு போக மாட்டில்ல? கடைசி வரைக்கும் என் கூட இருப்பியா? எனக்கு ரொம்ப பயமாயிருக்கு.” என புலம்பியவள் அவன் மார்பிலே உறங்கி போனாள்.
உறங்கியவளை படுக்கையில் கிடத்தி அவள் முகத்தையே வேதனையோடு பார்த்திருந்தான், அனைவருக்கும் சிம்ம சொப்பனமான ருத்ரேஸ்வரன்.
சற்று நேரத்திற்கு முன் அழகு ஓவியமாக இருந்தவள், இப்போது உருக்குலைந்த சித்திரமாக காட்சியளித்தாள். எந்த பெண்ணும் அனுபவிக்க கூடாத வேதனையை, பதினேழு வயதில் அனுபவித்த இந்த சிறுமலரின் நிலை புரிந்தது. கண்களில் ரத்தக்கண்ணீர் வராத குறை.
அவளை இதிலிருந்து மீட்டு விட வேண்டுமென ஆண் மனதில் வைராக்கியம் தோன்றியது.
இதில் அவனது மனதுக்கு மகிழ்ச்சியழிக்க கூடிய ஒரே விஷயம் என்றால், அன்றும் இன்றும், அவள், அவளை மறந்த நிலையிலும், தன்னை தேடுகிறாள் என்பது மட்டுமே.
தன் உடலை ஆராய்ந்தான், அதிலிருந்த காயங்களும், கீறல்களும் அவனை பார்த்து எள்ளி நகையாடியது. தாபத்தாலும் மோகத்தாலும் உண்டாக வேண்டிய காயங்கள். இப்போது????
ஸ்ருதி சேராத இந்த ராகம் ரசிக்குமா???
★★★
பூமிக்கு ஓய்வளித்த இரவு ராணி விடைபெற, அதை சுறுசுறுப்பாக்க பகலரசன் கிழக்கில் உதித்தான். கூட்டில் அடைந்திருந்த பறவைகள் எல்லாம், இன்னிசை ராகம் பாடி வானில் சிறகடித்தது.
கதிரவனின் ஒளி சிதறல்கள் பெண்ணின் முகத்தில் படர, மெல்ல துயில் கலைந்தால் பிருந்தா. எப்போதையும் விட அன்றைய விடியல் மிகவும் அழகாக தோன்றியது.
சோம்பல் முறித்து மணியை பார்த்தாள். எட்டை தொட இன்னும் ஐந்து நிமிடங்களே மீதி இருந்தது. ‘என்னது மணி எட்டா? இவ்வளவு நேரம் தூங்கிட்டேனா?’ என அடித்து பிடித்து, தன்னை மறைத்திருந்த போர்வையை விலக்கி எழுந்த பெண்ணின் முகம், தானிருக்கும் கோலம் கண்டு குங்குமமாக சிவந்தது. அணிந்திருந்த ரிஷியின் சட்டையும், உடலில் தடம் பத்திருந்த காயமும், இரவு நடந்த கூடலின் சாட்சியானது.
மீண்டும் போர்வையை எடுத்து தன்னை மறைத்தவளுக்கு, கணவனின் முகம் காண நாணம் எழுந்தது. ரகசியமாக கண்கள் அவனை தேடி அலைந்தது. அவனை காணவில்லை. மனதில் ஒரு ஏமாற்றம்.
‘தன்னை இப்படி ஒரு கோலத்தில் அவன் காணவில்லை. இதுவும் நல்லதுக்கு’ என மனதை தேற்றியவள், மாற்று உடையுடன் குளியலறை புகுந்தாள்.
இந்த ரிஷியோ காலை எழுந்தவுடன், தன் அருகில் கலைந்த ஓவியமாக கிடந்த பெண்ணின் நெற்றியில் இதழ் பதித்து, காலை கடன்களை முடித்து, தன் மிருவை காண கிளம்பி விட்டான்.
இன்றைய உணவு காந்திமதி பாட்டியின் வீட்டில். அதனால் சமைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போக, குளித்து முடித்த பின் பெரிய வீட்டுக்கு சென்றாள் பிருந்தா.
சாதாரணமாக உள்ளே நுழைந்தவளின் மனதை சுருக்கென்று தைத்தது அங்கு அவள் கண்ட காட்சி. ரிஷியின் கையை இறுக பற்றியவாறு, அவன் தோளில் தலை சாய்த்திருந்தாள் அம்மு. ரிஷியின் ஒரு கை அம்முவின் கரத்தில் சிறை பட்டிருக்க, அடுத்த கை அவள் தோள் அணைத்து, தலையை இதமாக வருடிக் கொண்டிருந்தது. அவள் வந்ததை கூட உணராமல் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இந்த காட்சியை கண்டு மனம் பதற, ‘யாரும் அவர்களை தவறாக நினைத்துக் கொள்வார்களோ?’ என பயந்து அவளது கண்கள் அறையை சுற்றியது.
அந்த வரவேற்பு அறையில் வேறு யாரும் தென்படவில்லை. மனம் சிறு நிம்மதி அடைந்தது. அந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்பது போல் அவள் கண்ணில் பட்டான், மாடியிலிருந்த தன் அறைவாசலில் நின்று இவர்களை உணர்வு துடைத்த முகத்துடன் பார்த்திருந்த ருத்ரேஸ்வரன்.
ஸ்ருதி சேர்ந்த இந்த ராகம் இசைக்குமா???