⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

லேவியின் நவி 7

என்னை காணாமல் தேடித் தேடி தவித்தேன்…

இறுதியில் உன்னில் கண்டேன்…

உன்னிலிருந்து என்னை மீட்க எவ்வளவு முயன்றும் என்னால் முடியவில்லை…

நீயே உன்னிடமிருந்து என்னை மீட்டுத்தா அல்லது உன்னோடு என்னையும் சேர்த்து கலந்துவிடு… 

ஓயாமல் அடித்த மழையில் ஏரி குளங்கள் நிரம்பி வெள்ளநீர் உள்ளே வர துவங்கியதுமே, கம்பெனியின் நிர்வாகம் கம்பெனியில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு அறிவிப்பை விடுத்து விட்டது.

அதைக் கேட்டு அனைவருமே பதறி வெளியில் வந்தார்கள். ஆனால் அதற்குள் மின்சாரங்களும் சென்றுவிட, இருட்டில் அனைவருமே அலை மோதினார்கள்.

வைஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுக்கு தோன்றியதெல்லாம் இப்பொழுது ஜானிடம் சென்று விட வேண்டும்.

அவர்களுடைய வொர்கிங் ஏரியாவிலிருந்து வெளியே வந்தாள். ஆனால் அதற்குள் அனைத்து ஃப்ளோர்களில் இருந்தும் கூட்டம் தாறுமாறாய் வர, இவளால் நிற்க கூட முடியவில்லை.

மின்சாரம் இல்லாததால் லிஃப்ட் பயன்படுத்த முடியாததால் அனைவரும் படிக்கட்டின் வழியாகத்தான் வந்து கொண்டு இருந்தார்கள்.

இவள் மேலே ஜானின் வொர்க் ஏரியாவிற்கு செல்ல நினைக்க, கூட்டமோ அவளை தள்ளிக் கொண்டு கீழே சென்றது.

கூட்டத்திலிருந்து தன்னை மீட்க இவள் எவ்வளவு முயன்றும் அது முடியாமல் தோற்றாள்.

எப்படியும் அவன் கீழே வந்து விடுவான் என கீழே சென்று காத்திருக்க முடிவு செய்தாள்.

ஆனால் நகரும் கூட்டத்தை தாக்கு பிடித்து ஒரே இடத்தில் நிற்க அவளால் முடியவில்லை.

அதுமட்டுமில்லாமல் அதற்குள் ஆபீஸில் முட்டிக்கு சிறிது மேல் வரை வெள்ளநீர் புகுந்திருக்க அந்த நீரிலும் கூட்டம் நிற்காமல் வரவே நிற்க முடியாமல் தள்ளாடினாள் அவள்.

அவர்கள் பிளாக்கில் மட்டுமே மொத்தம் ஏழு மாடி இருந்தது. அந்த ஏழு மாடியிலும் இரண்டு இரண்டு பிரிவாக ஒர்க் ஏரியாக்கள் இருக்கும். ஒவ்வொன்றிலும் ஐம்பத்து அறுவது பேர் வேலை செய்வார்கள்.

அந்தக் கூட்டம் மட்டும் இல்லாமல் அருகருகே இருக்கும் அனைத்து பிளாக்கில் இருந்தும் வெளியே வந்த ஜனங்கள் மத்தியில் வைஷுவால் தாக்குப்பிடித்து நிற்க முடியாமல் போனதில் ஆச்சரியம் என்ன.

இப்படியே கூட்டம் சிறிது சிறிதாய் அவளின் பிளாக்கில் இருந்து கொஞ்ச தூரம் நகர்த்தி சென்று விட்டது. அங்கே ஒரு சிறிய பார்க் இருக்கும்.

அது நாலு புறமும் குரோட்டன்ஸ் செடிகள் கொண்டு போதார் போல் அமைத்து, கல் பெஞ்சுகள் அமைத்து, கற்களைக் கொண்டு நடைபாதை போல் அலங்காரம் செய்து, நடைபாதையின் இருமருங்கிலும் கூர்மையான கற்களைக் கொண்டு பார்டர் போல் அமைத்திருப்பார்கள்.

ஆனால் முழுதாய் நீரினுள் மூழ்கி இருந்ததால் அந்த நடைபாதை எதுவுமே தெரியவில்லை.

அவர்கள் கம்பெனி இருப்பது மிகவும் பள்ளத்தாக்கான ஏரியா எனவே ஏரியிலிருந்து நீர் நிரம்பி உள்ளே வரவும் இவ்வாறு திண்டாட்டம் ஆகிப்போனது.

அந்த அளவு தண்ணீரில் சும்மா நடப்பதே கஷ்டம் இதில் வேறு கூட்டத்தோடு சேர்ந்து தள்ளிக்கொண்டு வரும் பொழுது கால் ஊன்றி கவனமாக நடக்க முடியாது இல்லையா.

அப்படியான ஒரு நேரத்தில் தான் கூட்டத்தின் நெரிசலினால் பேலன்ஸ் தவறி அந்த புதார் வழியாக இருந்த சிறு வழியில் புதாரினுள் தொப்பென்று விழுந்தாள்.

விழுந்த வேகத்தில் அந்த நடைபாதையின் ஒரு ஓரம் அமைத்திருந்த கூர்மையான கல் கையிலும் காலிலும் குத்தி ரத்தம் வழிந்தது.

அடிபட்டு கைகாலோடு அவளால் ஊன்று எழும்ப முடியாமல் தடுமாறினாள். எப்படியோ தம் பிடித்து முயன்று பார்க்க, அந்த முயற்சியும் தோல்வியுற, இப்பொழுது கல்பெஞ்சில் அவளுடைய மண்டை நன்றாக மோதி இருந்தது.

‘அம்மா’ என கத்தியது அங்கிருந்த கூட்டத்தின் சத்தத்தோடு சேர்ந்து கலந்து ஒன்றும் கேட்காமல் போனது.

மண்டையில் மோதிய வேகத்தில் தலை கிறுகிறுக்க, அதற்கு மேல் ஒன்றும் முடியாமல் அந்த பெஞ்சிலேயே தட்டித் தடுமாறி ஏறி அமர்ந்தாள்.

எங்கே மயக்கம் வந்து விடுமோ என்ற நிலையில் அவள் இருக்க, எப்படியாவது போன் செய்து ஜானிடம் தான் இருக்கும் இடத்தை கூறிவிட வேண்டும் என்று முயற்சித்தாள்.

ஆனால் பின்புறம் மாட்டியிருந்த பேக் தண்ணீரில் நன்றாக நனைந்திருக்க உள்ளிருந்து மொபைலும் தண்ணீரில் மூழ்கி வேலை நிறுத்தம் செய்திருந்தது.

அடுத்து என்ன செய்யவென ஒன்றும் புரியாமல் பாவை மெதுவாக அந்த பெஞ்சில் சாய அப்படியே மயங்கினாள்.

***

எப்படி எப்படியோ தேடிப் பார்த்தான் ஜான் அங்கு ப்ளோரில் இல்லை என்றவுடன். கூட்டத்தில் நிச்சயமாக சமாளித்து இருக்க மாட்டாள் கீழே தான் சென்றிருப்பாள் என சரியாய் கணித்து கீழே வந்தான்.

நான் மேலே தேடி விட்டு வருவதற்குள் கூட்டம் கொஞ்சமே கொஞ்சம் தான் நகர்ந்து இருந்தது.

தேடிக்கொண்டே அவள் இருந்த குட்டி பார்க்கையை கடந்து விட்டான். அதன் அருகில் இருந்த குளத்திலிருந்து தண்ணீர் வெளியே வந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது நிச்சயம் இங்கே இருக்க மாட்டாள் என்பது புரிந்தது.

அதை கடந்த கார் பார்க்கிங், காரின் டயர்கள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி இருந்தது. அங்கேயும் அவளை காணவில்லை.

அதை கடந்தால் கேப்பிட்டேரியா அங்கேயும் யாரும் இருப்பது போல் தோன்றவில்லை.

இருதியாய் கேப் நிறுத்துமிடம். அவனால் முடிந்து மட்டும் அந்த கேப்பேரியாவை சுற்றி தேடிப் பார்த்து விட்டான். ஆனால் அங்கேயும் வைஷ்ணவி காணவில்லை.

இவ்வளவு நேரமும் அவளுக்கு கால் ட்ரை பண்ணி கொண்டு தான் இருந்தான். எவ்வளவு முயன்றும் பிரயோஜனம் இல்லை அவளுடைய போன் தான் அங்கே செத்து கிடைக்கிறதே.

இந்த இருட்டில் கேப் சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் நிச்சயமாக தனியாய் போய் இருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு பெரிய கம்பெனியில் எங்கே என்று போய் தேடுவான் அவன்.

மண்டைக் குழம்பியது சிறிது நேரத்திற்கு மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவனுக்கு ஒன்றும் யோசிக்க தோன்றவில்லை.

ஆழ மூச்செடுத்தான் மீண்டும் வந்த வழியே அவளை தேடிச் சென்றான். கேப்பிடீரியாவின் கீழ் பகுதியில் நீர் நுழைந்திருந்தது உள்ளே சென்று பார்த்தான். மேலேயும் சென்று தேடினான் ம்..ம்… அவள் இல்லை.

“ஜீசஸ் எப்படியாவது நவியை காட்டிடுங்க?”, என அந்த இறைவனிடம் வேண்டிக்கொண்டு மீண்டும் தான் தேடுதல் படலத்தை தொடர்ந்தான்.

மீண்டும் கார் பார்க்கிங்கில் பார்வையை சுழல விட்டான் எங்கேனும் ஒரு வேலை ஒதுங்கி நிற்கிறாளோ என, ஒரு பிரயோஜனமும் இல்லை.

இறுதியாக அந்த குளத்தை தாண்டி அந்த பார்க் இருக்கும் ஏரியாவை நெருங்கி இருந்தான்.

அவள் எங்கே மயங்கி இருக்கிறாளோ அந்த பார்க் அவன் முதுகை பார்த்தவாறு இருக்க, இவன் கண்களோ இவர்கள் பிளாக்கையே கண்களால் துலாவி கொண்டிருந்தது.

வெகு நேரம் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தவன் எதர்ச்சையாய் திரும்பினான். அப்பொழுது தான் அவன் கண்ணில் பட்டது அந்தப் பொருள்.

அதைப் பார்த்தவன் சட்டுனு விரைந்து கைகளில் எடுத்தான். அவளுடையதே தான்.

அது அவளுடைய ஐடி கார்டு தடுமாறி கீழே விழும் பொழுது, கழுத்திலிருந்து ஒரு குரோட்டன்ஸ் செடியின் கிளையில் மாட்டியிருந்தது.

அதை கண்டதும் கையில் எடுத்து சுற்றி முற்றுப் பார்த்தான். பின் உள்ளுணர்வு தூண்ட அந்த புதாரை விலக்கி உள்ளே சென்று பார்க்க, அங்கு கல் பெஞ்சில் மயக்கமாகி இருந்த வைஷ்ணவியை கண்டான்.

விரைந்து சென்று அவள் கண்ணம் பற்றி, “நவி நவி?” என்ன கத்தி அழைக்க,

அவளிடம் எந்த மாறுதலும் இல்லை. அதே கண்மூடிய நிலையில் இருக்கவும் இவனுக்கு சிறிதாய் பதற்றம் எட்டிப் பார்த்தது.

இப்பொழுது பதட்டப் படுவது நல்லதல்ல இருக்கும் சூழலும் அதற்கு ஏற்றார் போல் அல்ல. முதலில் இங்கிருந்து வெளியேற வேண்டும்.

ஆழ்ந்த மூச்சு எடுத்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டான். பற்றியிருந்த கன்னங்களை மெதுவாய் தட்டி பார்த்தான்.

பின் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தான். மெல்ல கண்விழித்தாள் பாவை.

அவளுக்கு அசைவு தெரியவும் தான் இவனுக்கு சற்று நிம்மதியானது.

மெதுவாய் கண்விழித்தவள் தன் எதிரே இருக்கும் ஜானை பார்க்கவும் தன் கணத்தை பிடித்து நின்றவன் வயிற்றோடு “லேவி”, என்ற அழைப்போடு இவள் ஒன்ற, அவளை அப்படியே நெஞ்சோடு சேர்ந்து கொண்டான்.

அவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருந்தது. கை, கால்களில் அடிபட்ட காயம் தண்ணீரோடு சேர்ந்து எரிச்சலை தூண்டிக் கொண்டிருந்தது. தலையில் ரத்தம் வரும் அளவு காயம் இல்லை என்றாலும் இடித்த வலி இவை அனைத்தும் சேர்ந்து பெண்ணை சோர்வாக்கியிருந்தது.

இவனோ இவ்வளவு நேரம் அவளுக்காய் சுற்றி சுற்றி தேடி அலைந்தது சோர்வாக்கி இருக்க, இருவருக்குமே அந்த நேரத்தில் அந்த அணைப்பு தேவைப்பட்டது.

ஒருவரின் அணைப்பு மற்றவர் சற்று தெம்பாக. அவளை விலக்கி அவளின் அடிபட்ட கைகளைப் பார்த்தான்.

“என்ன ஆச்சு நவிமா?”, என பரிவாய் அவன் வினவ,

அடிபட்ட காலையும் அவனிடம் காட்டினாள். அடிபட்டவுடன் குழந்தை தன் அன்னையிடம் ஓடிச் சென்று அடிபட்ட இடத்தை காட்டும் அல்லவா அதேபோல் உதட்டை பிதுக்கி அவள் காட்டியதைப் பார்த்தவனுக்கு அந்த நேரத்திலும் அவளை ரசிக்கவே தூண்டியது.

இருந்தும் அவளின் நிலை இவனை கஷ்டப்படுத்த அவனின் ரசனை மனதை தலையைத் தட்டி உள்ளே அனுப்பிவிட்டு, அடிபட்ட இடத்தை மென்மையை தடவி கொடுத்து என்ன ஆனது என்று கேட்டான்.

அவள் நடந்ததை கூறவும் “ஏதாவது ஒரு இடத்துல தள்ளி வந்து நின்னு இருக்கலாம்ல”, மனம் தாங்காமல் அவன் கேட்க,

“அதுக்கு தான் ட்ரை பண்ணா ஆனா கூட்டத்துல சமாளிக்க முடியல”, என்றாள் அவளின் இயலாமையை.

இவனுக்கு புரிந்தது இவனும் தானே அந்த கூட்டத்தில் இவளை கஷ்டப்பட்டு தேடினான்.

“சரி தண்ணி வந்துகிட்டே இருக்கு இதுக்கு மேல இந்த நேரத்துல இங்க இருக்கிறது செட்டாகாது. வா எப்படியாவது பொறுமையா போயிடலாம்”, என அவளை கை தாங்கலாக பற்றி கொண்டு மெதுவாய் நீரில் அழைத்து சென்றான்.

முதலில் அவர்கள் ஆபீசிலிருந்து வெளியே வந்து, எல்காட் என்ட்ரன்ஸ் அமைந்திருக்கும் ரோட்டில் வந்து சேர்ந்தார்கள்.

அனைத்து இடமும் நீரில் மூழ்கி தான் இருந்தது. இருட்டில் ஏதேனும் விஷ ஜந்து வந்தால் கூட தெரியாத அளவுக்கு தான் இருந்தது.

எனவே மிகவும் பார்த்து பார்த்து வெளியே சென்றனர்.

அந்த அடிபட்ட காலோடு நடக்க மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் இவனோ முடிந்த அளவு அவளை கஷ்டப்படுத்தாமல் வெளியே கூட்டி வருவதற்கு தன்னால் முடிந்தளவு முயன்றான்.

அவர்களின் ஆபிஸ் அருகே ஒரு கிளினிக் உள்ளது. அங்கே அழைத்து சென்று, அவளின் காயத்திற்கு கட்டுப்போட்டு வெளியே அழைத்து வந்தான்.

அவள் பேண்ட் ரத்தத்திலும் நீரிலும் நனைந்திருக்க, எப்பொழுதும் தன் பையில் வைத்திருக்கும் மாற்றி உடையை எடுக்க, அதுவும் நீரில் நனைந்திந்தது. என்ன செய்யலாம் என இவள் யோசித்த நேரம்.

ஜான் அவன் வைத்திருந்த அவனுடைய பேன்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவனுமே எப்பொழுதும் ஒரு மாற்றுடை கையில் வைத்திருப்பான்.

அவள் தயக்கத்துடன் பார்க்க, “போய் சீக்கிரமா போட்டுட்டு வர வேலையை பாரு”, என சற்றே அவளை மிரட்டி அனுப்பினான்.

அந்த ஜீன்ஸ் இவளுக்கு சற்று பெரிதாய் தான் இருந்தது. அதிலேயே பெல்ட் இருக்கவும் சற்று இறுக்கி போட்டுக் கொண்டாள். கால்களை நன்றாகவே மேலே மடக்கி விட்டுக் கொண்டாள் தண்ணீரில் நடக்க வேண்டுமே.

பின் வெளியே வந்தவர்கள் எப்படி செல்லலாம் என யோசிக்க துவங்கினார்கள். ஏனென்றால் கேப் இல்லை, அங்கு தண்ணீர் அதிகமாக தேங்கி இருப்பதால் பஸ்ஸும் வரவில்லை.

அதற்குள் கம்பெனி நிர்வாகமே மீட்பு வண்டிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் ஒன்றில் இவர்கள் ஏறி அருகருகே அமர்ந்து கொண்டார்கள்.

இருவருக்குமே தனித்தனி சீட்டில் அமர மனமில்லை ஒருவரின் அருகாமை மற்றவருக்கு தேவையாய் இருந்தது.

பின் ஜானின் மொபைலை வாங்கி தன் அன்னைக்கு போன் செய்து அங்கே அவரும் அவளின் பாட்டியும் நலமா என்றது என்பதை விசாரித்துக் கொண்டாள்.

என்னதான் நியூசில் இந்த பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தாலும் காமாட்சி தூங்கிக் கொண்டிருந்ததால், அவருக்கு இது தெரியவில்லை மகள் போன் பண்ணி விஷயத்தை கூறவும் பதறி விட்டார். பின் பெண் நலம் என்றவுடன் தான் மனம் நிம்மதியானது.

வெண்ணாரையூரில் அவர்கள் இருக்கும் ஏரியாவிற்குள் எதுவும் நீர் வராததால் பிரச்சினை இல்லாமல் இருந்தது. பின் அவளைக் கிளம்பி எப்படியாவது மறுநாள் வீட்டிற்கு வந்து விட முடியுமா என்று கேட்க,

ஆபீஸில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு பிறகு வருவதாய் கூறி வைத்து விட்டாள் இவள்.

“அம்மா வீட்டுக்கு வர சொல்றாங்களா?”, என ஜான் வினவ,

‘ஆம்’ என்றால் சற்று கவலையாய்.

“ஆமா, எப்ப நம்ம ஆபீஸில் இதெல்லாம் கிளியர் ஆகும் எப்ப நம்மளை கூப்பிடுவாங்க”, என அவனை விசாரிக்க,

“ஆபீஸ் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. அதுலயும் அந்த எலெக்ட்ரிசிட்டி பிளான்டோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு.”

“சோ இப்போதைக்கு நம்ம இந்த ஆபீஸ் போய் வேலை பார்க்கிற மாதிரி இருக்காது”

“யூசுவலா இது மாதிரி ஏதாச்சும் ப்ராப்ளம்னா பி.ஸி.பி.ன்னு(BCP -Business continuity plan)சொல்லிட்டு ஒன்னு வைப்பாங்க, அதாவது நம்மளோட வேற ஏதாச்சு பிரான்ச்சஸ்ல நமக்கு வொர்க் பண்றதுக்கு ஏற்பாடு பண்ணுவாங்க.”

“எல்லாரையும் ஒரே ஆபீஸ்ல தான் அனுப்புவாங்களா?”, என்றவள் கேட்க,

“கஷ்டம்தான் வைஷு எல்லாரையும் ஒரே பிரெஞ்சுல ஒர்க் பண்றதது கஷ்டமா இருக்கும் இல்லையா ஏனோ ஆல்ரெடி அந்த பிரான்சில் இருக்காங்களோட வொர்க்கும் கண்டினியூ ஆகணும் சோ பிரிச்சு பிரிச்சு தான் போடுவாங்க”

“என்ன நவி வைஷு ஆயிடுச்சு”, என்றால் அதுதான் முக்கியம் போல.

“நவி எனக்கானவ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கலனாலும் அந்த நவி எப்பவுமே என் மனசுல இருந்துட்டே தான் இருப்பா”

“வைஷு இன்னும் என் காதலை ஏத்துக்காத நிலையில் அவளை என் காதலியா நினைச்சு பேசுறது சரியில்ல. வைஷுவையும் நவியையும் இப்போதைக்கு ஒன்னாக்க முடியாது. என்னையும் மீறி சில சமயத்துல அந்த அழைப்பு வந்துடுது”, என வைஷு மற்றும் நவிக்காண வேறுபாட்டை கூறினான்.

“சரி நான் உன்ன ஒன்னு கேக்கட்டா?”

“ம்…”, என அவள் சம்மதிக்கவும்.

“நீ எதுக்கு என்னை லேவினு கூப்பிட்ட”, என அவன் கேட்கவும் இவளுக்கு ஒரு மாதிரியானது.

ஏனென்றால் அவனதை கவனித்திருப்பான் என்று இவள் யோசிக்கவில்லை.

“அது…வந்து…”, என அவள் தயங்கவும்,

“சரி சரி ரொம்ப தயங்கலாம் தேவையில்லை ஜஸ்ட் கேட்ட, நீ அதுக்கு பதில் சொல்லியே தீரணும்னு இல்ல”, என்றான் அவள் தயங்குவது பிடிக்காமல்.

இல்ல என்ன கையை உயர்த்தியவளின் அடிபட்ட கை சீட்டில் தெரியாமல் இடிக்க, “அம்மா”, என அதை பிடித்தாள்.

“பார்த்து நவி ஏன் இந்த மாதிரி பண்ற”, என அந்த கைகளை பிடித்து மிருதுவாய் தடவி கொடுத்தான் அவன்.

அவனின் நவி என்று அழைப்பும், அவள் மீது பார்த்த நொடி முதல் அவன் பொழிந்து கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் அவளை உணர்ச்சிவசப்பட வைத்தது.

அப்படியே அவனின் தோள் சாய்ந்து கொண்டாள். அவள் கண்ணீர் அவன் உடையை நனைத்தது.

ஜானின் நவி அவள் மனதை திறப்பாளா? அல்லது எப்பொழுதும் போல் வைஷுவாய் உள்ளுக்குள்ளே மறுகுவாளா?

லேவியின் நவி தொடரும்…

 

 

error: Content is protected !!