💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி💙
ஈர்ப்பு -5
“தரம், நேர்மை, வாக்குத்தவறாமை ஆகிய மூன்றையும் சரியாய் கடைபிடிக்கும் தொழிலதிபனின் வாழ்க்கை ஒளிமையமாக இருக்கும்”
தியா ஷ்யாமிடம் கூறியபடி, மித்துவின் அன்னையிடம் எப்படி பேசலாம் என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு வழி சொல்வது போல் ஒலித்தது அவளின் பேசி.
அதை எடுத்து பார்த்தவள், “அருண் அண்ணாவா…”
(சிறிது நேரத்திற்கு முன் ஷ்யாம் மற்றும் அருணுக்குள் நடந்த பேச்சு வார்த்தை)
“மச்சி நான் பிசினஸ் சம்பந்தமான யோசிச்சி இருக்கேன் டா”, என்றான் அருண்.
“என்னடா அது சொல்லு கேட்போம்.”
“இப்ப எல்லாம் மக்கள் வெளியே போறது விட ஆன்லைன் ஷாப்பிங் அதிகமா பண்றாங்க கரெக்ட்டா?”, என வினவ,
“ஆமா கரெக்ட்”
“அதான் கிச்சன் சம்பந்தமான விஷயங்கள் ஆன்லைன்ல பண்ணலாம்னு யோசிக்கிறேன்.”
“என்னலாம் அப்படி பண்ணலாம்னு நினைக்கிற டா”, என்றான் அவன் என்ன யோசித்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொள்ள.
“மாத மள்ளிகை, காஸ் ரிப்பேர், அப்புறம் இப்ப எல்லாம் பாதுகாப்புக்கு கேஸ் சிலிண்டரை வெளிய வச்சு கனெக்சன் உள்ள கொடுக்கிறாங்கல்ல அது, அப்புறம் கேஸ் ஓட இன்டிகேஷன் பாக்குறதுக்கு ஒரு ரெகுலேட்டர், முடிஞ்சா மாடுலர் கிச்சன்.”
“சூப்பர்டா, நல்ல பிளான் மாடுலர் கிச்சன் சேர்த்துக்கோ. அதுக்கு வேணும்னா நம்ம டிசைனர் செப்பரேட்டா பாத்துக்கலாம்”, என் நண்பனின் ஐடியாவுக்கு ஊக்கம் கொடுத்தான்.
“எல்லா ரைட்டுடா ஆனா ‘முதல்’ நம்மகிட்ட கொஞ்சம் இருக்கு பட் இன்னும் தேவைப்படுமே”, என்றான் யோசனையாய்.
“அது பிரச்சனை இல்ல டா, நான் பாத்துக்குறேன்”, என்ன ஷ்யாம் கூறவும்,
“இல்லடா…வேணாம்…”, என்றான் உறுதியாக.
“ஏப்பா! உன்ன பத்தி எனக்கு தெரியாதா நான் தரேன்னு சொல்லலடா. பேங்க் லோன் ஏற்பாடு பண்ணலாம்னு சொல்ல வந்தேன்”, என்றால் நண்பனுக்கு தெளிவுபடுத்தி.
“நல்ல ஐடியாடா”, என்றான் முகத்தில் வெளிச்சம் பரவ,
“தியா அப்பாவிடம் பேசிப்பாரு”, எனவும்,
“சரிடா அப்போ நான் இப்பவே போய் அங்கிள்கிட்ட இது பத்தி பேசுறேன்” என அவசரப்பட,
“இருடா, தியாக்கு போன் பண்ணி அவர் இருக்காராரு கேட்டுட்டு போ”.
“ஓகேடா”.
(அதன் பிறகு தான் தியாவிற்குக் கால் செய்கிறான் )
பின் அவளிடம் அவளின் அப்பா இருக்கிறாரா?, என்று கேட்டு அவரிடம் ஏதோ பேச வேண்டும் என்று கூறி வைத்தான்.
என்னவாக இருக்கும் என்று யோசிக்க துவங்கினாள்.
சிறிது நேரத்திற்கெல்லாம் தியா வீட்டுக்கு வந்தான் அருண்.
“வாப்பா அருண்”.
“ஹாய் ஆண்ட்டி, காபி கிடைக்குமா”.
“கண்டிப்பா, இரு எடுத்துட்டு வரேன்”.
“ஹாய் அருண், எதோ பேசணும்னு சொன்னியாமே தியா சொன்னாள்”.
“ஆமா அங்கிள் உங்களுக்கு முன்னாடியே நான் சொன்னேன் இல்ல, எனக்கு ஒரு சொந்த தொழில் ஆரம்பிக்கிற பிளான் இருக்குன்னு”
“ஆமா”.
“என் ஐடியாவை ஷ்யாம் கிட்ட டிஸ்கஸ் பண்ணேன்”, என ஷ்யாமிடம் இவன் பேசி அனைத்தையும் கூறினான்.
லட்சு ஆன்ட்டியின் காபி வர, அதை பருகிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர்.
“நல்ல ஐடியா தான் அருண் கண்டிப்பா லோனுக்கு அப்ளை பண்ணலாம் எம்.எஸ்.எம்.இ திட்டம்னு ஒன்னு இருக்கு அதுல எவ்விதமா பிணையுமில்ல(mortage).”
“அப்படியா!அங்கிள் அந்த திட்டம் பத்தி சொல்லுங்க”.
சின்னதா ஆரம்பிக்கிற நிறுவனங்களுக்கு எல்லாம் ரெண்டு கோடி வரைக்கும் எவ்விதமான பிணையுமில்லாமல் கடன் வழங்குகிறாங்க. இது நம்ம இந்திய அரசும், இந்திய சிறு தொழில்கள் மேம்பாடு வங்கி (SIDBI) ரெண்டு பேரும் சேர்ந்து பண்றாங்க.
“அதாவது இப்ப புதுசா சின்னதா ஒரு பிசினஸ் ஆரம்பிக்கிறா. ஆல்ரெடி உன்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு. இந்த கடன் ஃபர்தரா அதை டெவலப் பண்றதுக்காக கொடுக்கப்படுது.”
“நல்ல திட்டம் அங்கிள் இதை இப்பவே அப்ளை பண்ணலாமா?”
“பண்ணலாம் பா எல்லாம் முடிஞ்சு பணம் கைக்கு வரவும் நீ ஸ்டடிஸ் முடிக்கவும் சரியா இருக்கும் உன்னோட பிசினஸ் பத்தி விளக்கமா ஒரு டாக்குமெண்ட் ரெடி பண்ணித்தா”, மேலும் என்னென்ன தேவை என்பதையும் கூறி, மேற்கொண்டு அவர் பார்த்துக் கொள்வதாய் கூறினார்.
“சரி அங்கிள் அப்ப நான் எல்லாமே ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.”
“சரிப்பா ஆல் தி பெஸ்ட்”.
“தேங்க்ஸ் அங்கிள்”.
அதுவரை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தத தியாவும், அவள் அம்மாவும் அவன் முன்னேற்ற பாதைக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
அவர்களுக்கு நன்றி கூறி தன் அத்தையை பார்க்க வேண்டும் என்று விடை பெற இருந்தவனை,
நானும் வருவதை கூறி, அவனுடன் சேர்ந்து கொண்டாள் தியா.
இருவரும் பெரியவர்களிடம் விடை பெற்று சென்றனர்.
***
மித்து வீட்டில்………
“ஆண்ட்டி………..”
“வாம்மா தியா, நான் சமையல்கட்டில் இருக்கேன்”.
“இங்க கொஞ்சம் வரிங்களா”.
“இதோ வரேன்”.
வெளியே வந்தவர் தியாவுடன் தன் அண்ணன் மகனையும் பார்த்து மகிழ்ந்தார்.
“வாப்பா அருண். இப்போதான் அத்தை வீட்டுக்கு வழி தெரிச்சிச்சா”.
“உட்காருப்பா, சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்”, என்று உபசரித்தார்.
“நீங்க பேசுங்க ஆன்ட்டி நான் போய் எடுத்துட்டு வரேன்”, என சமையலறை நோக்கி சென்றாள் தியா.
சமையலறை சென்று இரு தட்டுகளில் இனிப்பு கார வகைகள் எடுத்துக்கொண்டு வந்தாள். ஒன்றை அவள் எடுத்துக்கொண்டு மற்றொன்றை அருணிடம் நீட்டினாள்.
மித்துவை பார்க்கவே அருண் இங்கு வந்தான். இப்பொழுதெல்லாம் கடைசி செம் என்பதால் அவளிடம் சரியாய் பேச முடியவில்லை, ஆனால் உண்மை காரணம் அதுவல்ல என்பதை அவன் மட்டுமே அறிவான்.
அருணின் கண்கள் மித்துவை தேடுவதை பார்த்த தியா, ‘இத்தனை நாள் இதை எப்படி நோட் பண்ணாம விட்டுட்டேன்’, என சிந்திக்களானாள்.
“அத்தை மித்து எங்க?” வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன். வாயை திறந்து கேட்டே விட்டான்.
“மித்து இப்பதான் பாட்டிங்க கூட கோயிலுக்கு போனாள்”, என்ற பதிலில் அவன் முகம் கூம்பி விட்டது.
‘ச்ச, அப்போ அவ இல்லையா’ ஏகத்துக்கும் வருத்தம் கொண்டது மனது.
பின் தன் தொழிலை பற்றி அவரிடம் கூறி, ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றான்.
அவன் செல்லவும், “அருண் அப்படியே என் அண்ணா மாதிரி”, தன் மருமகனை புகழ துவங்கினார் ஏகன்யா.
“உங்களுக்கு உங்க அண்ணாவ ரொம்ப பிடிக்குமோ?”, மெதுவாய் நூல் விட ஆரம்பித்தாள் தியா.
“ஆமாமா என் பெரியப்பாவும் அப்பாவும் ஒண்ணா பிறந்தவங்க அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதும் கூட பிறந்த அக்கா தங்கச்சியை தான்”
…
“அதனால ஒண்ணா கூட்டு குடும்பமா இருந்தோம். நானும் அண்ணாவும் ஒண்ணா ஒரே வீட்ல தான் வளர்ந்தோம். கிட்டத்தட்ட பாசமலர் சிவாஜி கணேசன், சாவித்திரி தான்”
…
“அப்பதான் அண்ணா உங்க கூட வேலை பார்த்துட்டு இருந்த அண்ணிய லவ் பண்ணாரு. அவங்க வேற என்னன்றதுனால என் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் அது பிடிக்கல, அது தெரிய வந்தபோது உனக்கு பிடிச்சவ தான் வேணும்னா வீட்டை விட்டு வெளியே போயிடு அப்படின்னு சொல்லிட்டாங்க அண்ணாவும் போயிட்டாரு”
…
“அப்பா பெரியப்பா இருந்தவரை முறுக்கிட்டே இருந்தாங்க. அப்படி என்ன பெத்த பிள்ளைகளை விட கௌரவம் அது இதுன்னு பாக்குறாங்கன்னு எனக்கு தோணும் என்ன பண்ண அவங்க ரொம்ப பழைய பஞ்சாங்கம்”
“பாட்டிகள் கூடவா?”, அதுவரை அமைதியா கேட்டுக் கொண்டிருந்தவள் வினவினாள்.
“இல்லம்மா அம்மா பெரியம்மாக்கு அண்ணாவை பாக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா அவங்க புருஷமார்கள் விடல, இவங்களுக்கு தெரியாம மீறி போய் பார்க்கலாம் நெனச்சாங்க, ஆனா அப்படி போனா செத்துருவோம்னு பிளாக்மெயில் வேற”
“நீங்களும் இவ்ளோ வருஷம் பேசவே இல்லையா ஆன்ட்டி”, இப்பொழுதுதான் முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் அவள்.
“நான் பேசிட்டு தான் இருந்தேன் என் கல்யாணத்துக்கு கூட அண்ணா யாருக்கும் தெரியாம வந்தாரு. மித்து அப்பாக்கு யாருமில்ல அதான் வீட்டோட மாப்பிள்ளையா பாத்துட்டாங்க”
…
“இவருக்கு நான் அண்ணா கிட்ட பேசுறது எதுவும் பிரச்சனை இல்ல. ஆனா எப்படியோ அது தெரிஞ்சுகிட்ட அப்பாவும் பெரியப்பாவும் ஒரே சண்டை போட்டாங்க”
…
“அது மட்டும் இல்லாம அண்ணா குடும்பத்துக்கும் பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரி நம்மால அண்ணாக்கு எதுக்கு கஷ்டம் தான் நான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன். அண்ணாக்கு பையன் பொறந்தது கூட தெரியும் போய் பாக்கணும்னு ஆசை தான், எங்க வீட்டு பெரியவங்க என்ன ரொம்ப கண்காணிக்க ஆரம்பிச்சுட்டாங்க அதான் முடியாம போச்சி”
…
“இப்போ தான் எல்லாத்துக்கும் ஒரு விடிவு காலம் வந்து இருக்கு” என்றார் பெருமூச்சுடன்.
“ஏன் ஆன்ட்டி சப்போஸ் உங்க அண்ணா அவங்க பையனுக்கு மித்துவ பொண்ணு கேட்டா குடுப்பீங்களா”, என மெதுவாய் தூண்டில் போட,
ஏகன்யா அதற்கு சிரித்து விட்டு, “அப்படி ஒரு நினைப்பு எனக்கும் இருக்குமா. அண்ணாக்கு ஞாபகம் இருக்கா தெரியல நாங்க கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்பே இப்படி பேசி இருக்கோம். நம்ம பசங்களுக்கு கல்யாணம் பண்ணி நம்ம சம்மந்தி ஆகணும்னு”, போட்ட தூண்டில் சுறா மீனே மாட்டியது போன்ற பதில் வந்தது.
‘அவருக்கு ஞாபகம் இருக்கு ஆன்ட்டி’, என மனதில் நினைத்துக் கொண்டாள் இவள்.
அதற்குள் இரண்டு பாட்டிகள் மற்றும் மித்து என மூவரும் கோவில்லிருந்து திரும்பிருந்தனர்.
அருண் வந்தது பற்றி கூறினார் ஏகன்யா.
மித்து தியாவை பார்க்க, அவள் காதோரம், “என்னடி மிஸ் பண்ணிட்டோமேனு பீலிங்கா”, என தியா வினவ,
ஆமென தலையாட்ட வந்து பின் இல்லை என மறுத்தாள்.
உன்னை எனக்குத் தெரியும் என்ற பார்வையை வீசினால் தியா.
பின், தியா அவளிடம் அருண் வந்ததிற்கான காரணத்தைக் கூற, மிகவும் மகிழ்ந்தாள்.
மித்துவின் பிரச்சினை தீர்ந்த மகிழ்ச்சியில் சிறிது நேரம் அவளிடம் பேசிவிட்டு வீடு திரும்பினாள் தியா.
ஷ்யாமிற்கு கால் செய்து, அங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.
“செம தியா, ஆனா எப்படி அப்படி பட்டனு கேட்ட, அவங்க மாட்டேன்னு சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப”, என்ன ஷ்யாம் கேட்க,
“அண்ணா அண்ணானு பாச பயிரை வளர்க்கவே தான் நம்பிக் கேட்டேன்”
“சரி இனி இவங்க இரண்டு பேரைப் பேச வைப்போம்”.
“நானும் அதே தான் நினைச்சேன் பாவம் மித்து ரொம்ப பீல் பண்றா”
“சரி எதாவது பண்ணலாம், பை”
“ம்…பை”
அருண், ஷ்யாமிடம் சந்திரன் கூறிய அனைத்தையும் கூறினான்.
“நல்ல திட்டமா தான் தெரியுது டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணு மச்சி”
“சரிடா”.
“ஆமா என்ன இப்ப எல்லாம் மித்து கிட்ட சரியா பேசறது இல்லையா?”
நண்பனின் இந்த கேள்விக்கு அமைதியை மட்டுமே பதிலாக தந்தான் அருண்.
“என்னதான்டா ஆச்சி”.
“இல்லடா இப்பல்லாம் அவகிட்ட நார்மலா பேச முடியல எங்க மனசுல இருக்குறத சொல்லிடுவேன்னு தான்…”, எனது தன் மனதில் இருந்ததை நண்பனிடம் பகிர்ந்துக் கொண்டான்.
“இப்பதான் எல்லாம் நல்லா போகுதே அப்புறம் சொன்னா என்ன? இனி தள்ளி போட காரணம் எதுவும் இல்லைனு நினைக்கிறேன்”
“நானும் அதே தாண்டா நினைச்சேன் என்னாலயும் முடியல, ஈவினிங் அவகிட்ட பேசலாம்னு இருக்கேன்”, என்றான் சிறு வெக்கத்தோடு.
“சூப்பர் மச்சி ஆல் தி பெஸ்ட் டா”
“தேங்க்ஸ் மச்சி”, எனத் துள்ளி குதித்துப் போனான் அருண்.
மித்துக்கு கால் செய்து அவளை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறினான்.
மித்து தியாவிடம் கூறி அவளையும் அழைக்க, “இல்லடி நீ மட்டும் போயிட்டு வா”, என மறுத்து விட்டாள்.
“பயமாயிருக்குடி” எனக் குரலில் அந்த பயத்தை தேக்கிச்சொன்னாள் மித்து.
“எதுக்கு பயம்”, புரியாமல் கேட்டாள் தியா.
“இல்ல இப்பல்லாம் ஒரு மாதிரி இருக்கனே அது அவருக்கு தெரிஞ்சு இருக்குமோ? அது சம்பந்தமாதான் பேச கூப்பிடுறாரோ”, எனத் தன் மனதைத் திறந்தாள் மித்து.
“ஆமா நீ எந்த மாதிரி இருக்க…”, சிறிது நக்கலாய் வினாவினாள்
“அது…”, என மித்து தயங்கவும்,
“சரி சரி எதையும் யோசிக்காத முதல்ல போய் அவரை என்ன சொல்றாருன்னு கேளு”
சரி என மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள் மித்து.
***
மாலை கடற்கரையில்,
“வந்து ரொம்ப நேரம் ஆச்சா” என அருணை விசாரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
“இல்ல மித்து, இப்பதான் வந்தேன். என்ன அதிசயமா நீ மட்டும் வந்திருக்க, கூட தியவையும் கூட்டிட்டு வருவேன்னு பார்த்தேன்”
“அவளைக் கூப்பிட்டேன் அவ தான் நீ மட்டும் போய்ட்டுவானு சொல்லிடா”.
“அதானே நீ கூப்பிடலை நான் தான் ஆச்சரியம்”, என அவளை கிண்டல் செய்தான்.
“இப்படி கிண்டல் பண்ண தான் வர சொன்னீங்களா?”, என முறுக்கிக் கொண்டாள் அவள்.
“என் அத்தை பொண்ணு நான் கிண்டல் பண்ணாம வேற யாரு பண்ணுவா?”
அவனின் இந்த உரிமையான பேச்சில் சிறிதாய் நாணம் கொண்டவள், “என்ன…”, என்றாள்.
“நீ என் அத்தை பொண்ணு தானே?”
ஆமென அவள் தலை தானாக ஆட, அவன் சிரித்தான்.
“தியா சொன்னா நீங்க இன்னிக்கு அவங்க வீட்டுக்கு வந்ததா. ஆல் தி பெஸ்ட்.”
“சாரி மித்து நானே உன் கிட்ட சொல்லி இருக்கணும். ஆனா எல்லாம் நல்லபடியா முடிஞ்ச அப்புறம் தான் உன்கிட்ட இதை பத்தி எல்லாம் பேசணும்னு நினைச்சேன்”, என்றான் சிறு குற்ற உணர்வு தலை தூக்க.
“நான் ஏதும் தப்பா நினைக்கல”, என்றாள் அவன் கவலைப்படுவது பிடிக்காமல்.
“உன்ன பாக்க நம்ப வீட்டுக்கும் தான் வந்தேன்” அத சொல்லலையா உனக்கு.
“என்னை பாக்கவா” என வாய்ப்பிளந்தாள்.
“பின்ன நம்ம பாட்டிங்கள பாக்கவா?”, என்றான் கிண்டலாய்.
அவள் முறைத்தாள்.
“அழகுடி நீ”, பட்டென அவன் சொல்ல.
இவள் திருதிருத்தாள், அதை ரசித்தவன் தன் மனம் திறந்தான்.
“உன்ன முதல் முதல அந்த கல்யாண வீட்டுல பார்க்கும்போது பிடிச்சிருச்சு பட் அப்போ ரொம்ப சீரியஸ் எல்லாம் யோசிக்கல, அன்னைக்கி நல்லா சாப்பாட்டை மொக்கிட்டு இருந்த, நீ அத்தை பொண்ணு தெரிஞ்ச உடனே ஒரு ஃபீல் ஆனா அது என்ன ஃபீல் கரெக்டா தெரியல”,
…
“அது தெரிஞ்சது காலேஜ்ல தான் உன்ன பார்த்துட்டே இருக்கணும் உன்கிட்ட பேசிட்டே இருக்கணும்னு தோணுச்சு, எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு மித்து”
…
“இதெல்லாம் நான் ஒரு அம்பானிய ஆனதுக்கு அப்புறம் தான் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா இப்ப அதுக்கான முதல் படி எடுத்து வைக்கும் போது, கூட நீயும் இருக்கணும்னு தோணுது என்ன சொல்ற?”
அனைத்தையும் கேட்டவள் தன் மனம் கவர்ந்தவனின் மனதில் தானும் இருக்கிறோம் எனத் தெரியவே தன்னை மறந்து அமர்ந்திருந்தாள்.
அவளை உலுக்கியவனை கிள்ளி வைத்தாள் இவள்.
“என்னடி இப்படி கிள்ளிட்ட வேணாம்னா டீசன்ட்டா வாயில சொல்லணும்”, என்றான் அவள் கிள்ளி இடத்தை தேய்த்துக் கொண்டே,
“ஐயோ சாரிடா, ரொம்ப வலிச்சிருச்சா நீ சொன்னதெல்லாம் உண்மையான தெரிஞ்சுக்க தான்…”, என்றாள் விஷம சிரிப்புடன்.
“என்னடி மரியாதை காத்துல பறக்குது?”, என வினவ,
“ஏன் பொண்டாட்டி கிட்ட ரொம்ப மரியாதை எதிர்பாப்பிங்களோ?”, பதிலுக்கு இவள் புருவமுயர்த்தினாள்.
“அப்படியெல்லாம் இல்லம்மா, ஆனா இப்படி கிள்ளி மட்டும் வைக்காதே ரொம்ப வலிக்குது”, என்றான் பாவமாக.
“இதுக்கே வா இன்னும் நிறைய இருக்கே” என்றாள் நம்பியாரைப் போல் கைகளை பிசைந்து,
“ஐயோ தெரியாம கமிட் ஆயிட்டேனோ”, என்றான் பயந்தவன் போல்.
“இப்ப கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது”, என்றால் எழுந்து கைகளிலிருந்த மண்ணைத் தட்டிக் கொண்டு,
“அதுவும் சரி தான்”, இவனும் எழுந்து கொள்ள,
இருவரும் இப்பொழுது நடந்து கொண்டே பேசினர்.
“நானும் இத கொஞ்ச நாளா ஃபீல் பண்ணுப்பா, ஒரு மாதிரி இருந்துச்சு”, என்றாள் இவளும் அவள் மனதை திறந்து,
“புரியுது மித்து”, என்றான் அவள் கைகோர்த்தபடி.
பின் இருவரும் தங்கள் நண்பர்களான லைட்டிங் ஸ்டார்ட்ஸ் குரூப்பில் அதை பகிர்ந்து கொள்ள,
அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். வர்ஷு தான், “அருண் அண்ணா மேல ஆல்ரெடி கொஞ்சம் டவுட் இருந்துச்சு. ஆனா நீ சொல்லவே இல்ல பாரு மித்து”, என்று அவளை ஓட்டினாள்
அதை கொண்டாட அனைவரும் அம்யூஸ்மென்ட் பார்க் போகலாம் என்று முடிவு எடுத்தனர்.
அவர்களுக்குள் ஒருவருக்கு அங்கே பிரச்சினை காத்துக் கொண்டிருப்பது தெரியாமல் நண்பர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.
(யாருக்கு என்ன பிரச்சனை காத்துகிட்டு இருக்கு? அடுத்த எபில பார்க்கலாம்)