Shanthini Dos’s Un Uyir Thaa Naam Vazha~ 6

Shanthini Dos’s Un Uyir Thaa Naam Vazha~ 6

உயிர் – 9

அன்று வீடே கோலாகல பட்டது… கௌதம்க்கு இன்று 25 வது பிறந்த நாள்.. காலையிலையே எழும்பி கௌசிக் தான் அத்தனை ஏற்பாடையும் செய்திருந்தான்….
அவனுக்கு புது துணி எடுப்பதில் இருந்து இரவு மூவி செல்வது வரை எல்லா ஏற்பாடும் கௌசிக் ஏற்பாடு தான்… அதிலும் இப்பொழுது 2 வருடத்திற்கு முன்பு தான் கௌசிக் இங்கு தாராவில் போலீஸாக பொறுபெடுத்தான்…
அதிலும் அவன் போலீஸ் ஆகியது பெரும் கூத்து.. கௌசிக்கு போலீஸ் அறவே பிடிக்காது… ஆனால் சியோரா இவனை எப்படியாவது போலீஸ் ஆக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்… அதுக்கு எல்லா வேலையும் செய்தது மல்லையா தான்….
மல்லையாஅவரின்ஆபிஸில் வேலை செய்யும் வலது கை, இடது கை எல்லாம்… போலீஸ் அப்ளிகேஷன் பார்ம் கையெழுத்து கூட போடமாட்டேன் என்று கௌசிக் சியோராவுடன் கூறி விட்டான் அப்பொழுது தான் சியோரா கவலையுடன் மல்லையாவுடன் கூறிக் கொண்டு இருந்தான்… சியோராவுக்கு தெரியும் மல்லையா எத்தனை பெரிய விஷயமாக இருந்தாலும் முடித்து விடுவார் என்று.. நேர்மையானவர் என்று கிடையாது ஆனால் முதலாளி சியோராவுக்கு நேர்மையாக இருப்பார்….
இப்பொழுது சியோரா ஒரு வேலை சொல்லவும் உடனே அதை செய்ய முடிவெடுத்து விட்டார்… உடனே கௌசிக் பார்க்க சென்று அவனிடம் கேட்டார் தம்பி கௌசிக் நீங்க என்ன பண்ண போறீங்க.. அப்பா கூட வந்து அவங்க ஆபீஸ்க்கு வரப்போறீங்களா? இல்லை வேற ஏதாவது தொழில் பண்ண போறீங்களா? என்று கேட்டார்.
அவர் கேட்கவும் எனக்கு நான் இன்னும் மேல படிக்கணும் அங்கிள்.. ஆனா அப்பா போலீஸ் படிக்க சொல்லுறாங்க நான் என்ன செய்யட்டும் என்று கேட்டான்….
அவன் அப்படி கேட்கவும் அவன் கையில் சில அப்ளிகேஷன் பார்ம் குடுத்த மல்லையா கௌசிக் தம்பி இதுல சில பார்ம் இருக்கு கூட போலீஸ் பார்ம் இருக்கு நீங்க என்ன செய்றிங்க எல்லாத்திலையும் ஒரு சைன் பண்ணுங்க… உங்க ஆசை படி லண்டன்ல MBA பார்ம், அப்பா ஆசைக்கு போலீஸ் பார்ம்… ரெண்டிலும் சைன் பண்ணு நீ…
ஆனால் நீ லண்டன் போற எல்லா ஏற்பாடும் பாரு. மீதியை நான் பாத்துக்கொள்கிறேன் என்று கூறி அவனிடம் சைன் வாங்கிக் கொண்டு சியோராவை நோக்கி வெற்றி புன்னகையுடன் சென்றார் மல்லையா.
அதன் பிறகு வந்தது ஏதும் கௌசிக் நினைத்து பார்க்காதது… அதன் பிறகு அவன் மல்லையாவையும் கண்ணில் பார்கவில்லை.ஆனால் ஓன்று மட்டும் கௌசிக் அறிவான் அவன் ஒழுங்காக எக்ஸாம் எழுதலை, டிரைனிங் ஒழுங்கா போகல, இப்படி எல்லாம் செய்தும் கௌசிக்கு வேலை மட்டும் சரியாக கிடைத்து விட்டது…
எல்லாம் சியோரா, மல்லையா பார்த்த பார்வைகள்… முதலில் அந்த வேலைக்கு பிடிக்காமல் தான் சென்றான் கௌசிக்… சியோரா இவனை லஞ்ச பணம் குடுத்து வேலை வாங்கி கொடுத்ததே அவர் செய்வது யாருக்கும் தெரியாமல், இவன் துணை இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே… அதனால் முதலில் சியோரா செய்வதை எல்லாம் செய்தான் கௌசிக்..
அப்படி அவனுக்கு முதலில் வந்தது பள்ளியில் படித்த மல்லையா மகளிடம்அவளின் ஆசிரியர் மிஸ் பிகேவியர் செய்தான் என்று அழுதுக் கொண்டே ஷதாஷி வீட்டில் கூறிய பொழுது மல்லையாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.. காரணம் பெண் பிள்ளை விஷயம். இது வெளியில் கூறினால் அவள் வாழ்க்கை தான் பாதிக்க படும் என்று யாரிடமும் கூறாமல் இருந்தான்..
ஆனால் இவன் சோக முகத்தோடு சுற்றுவதை பார்த்த சியோரா என்ன என்று கேட்டும், அவனிடம் மிரட்டிக் கேட்டும் கண்ணீர் சிந்துனானே தவிர கூறவில்லை… சியோரா கோபத்தில் சொல்லுவியா மாட்டியா என்று அவனை அடிக்க கை ஓங்கவும் மெதுவாக ஷதாஷி பள்ளியில் நடந்ததைக் கூறினான்…
இதை கேட்டதும் சியோராவுக்கு ரத்தம் கொதித்தது… படிக்க அனுப்பும் சிறுவர்களை குழந்தைகளாக பார்க்காமல் அவர்கள் பார்வையின் பொருளை இனம் காணதெரியாமல் இருக்கும் சிறுவர்களை அவர்கள் இஷ்டத்துக்கு மாற்ற நினைக்கும் அவனை எல்லாம் என்று பல்லை கடித்த சியோரா நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று அந்த ஆசிரியர் மீது கேஸ் கொடுத்தார்…
ஆனால் அங்கு அந்த ஆசிரியரை அழைத்து கேட்டதற்கு அந்த பொண்ணு ஒழுங்கா படிக்காது. ஒழுங்கா படிக்க சொல்லி திட்டியதற்கு இப்படி பொய் கூறுகிறாள் என்று அந்த ஆசிரியர் கூறி விட்டான்… போலீஸ்காரனையும் செமையாக கவனித்து விட்டான் போல… போலீஸ் காரனின் அலட்சியம், தவறு செய்தவனின் திமிர் இப்படி எல்லாத்தையும் பார்த்த சியோரா கோபத்துடன் அவனை உறுத்து விழித்து விட்டு கோபத்துடன் வெளியில் வந்தார்…. அதிலும் அந்த போலீஸ் காரன் புதுசாக வந்தவன் அவனுக்கு சியோரா பற்றி தெரியவில்லை…. போலீஸ் அலட்சியத்தை கண்டு கோபமான சியோர ஒன்றும் கூறாமல் வெளியில் வந்தார்.. கௌசிக் அவனுக்கு மேல் உள்ளவர்கள் சொல்வதை தான் கேட்கவேண்டும் என்று அவனும் அமைதியாகவே இருந்தான்.. அடுத்த நாளே அவர் யார் என்று காட்டி விட்டார்….
ஆள் வைத்து அந்த ஆசிரியரின் வலது கையை நடு ரோட்டில் வைத்து வெட்டி விட்டார்… யாரும் சியோராவுக்கு எதிராக சாட்சி சொல்லவும் இல்ல… அதே போல் அந்த போலீஸ் காரனுக்கும் சியோரா அளவுக்கு அதிகமாக கவனித்து விட்டார் போலும் ரோட்டில் ஆக்ஸிடென்ட் என்று கூறி கேசை முடித்து விட்டார் கௌசிக் மூலமாகவும்….
இப்படிசின்ன சின்ன செயல் ஏழைளுக்கு வட்டி பணம் கொடுத்து அதை வசூலிக்க முரட்டு தனத்தையும், அடிதடியையும் பயன்படுத்தும் உயிரை குடிக்க காத்திருக்கும் வட்டி காரர்களுக்கும் கெளதம் ஆட்களும், சியோரா ஆட்களும் வைத்து அவர்களுக்கு தக்க பாடத்தை நடத்தி விட்டு அந்த கேசையும் கௌசிக் வைத்து முடித்தார் சியோரா…. இப்படி ஏராளமாக….
அப்பொழுது தான் வறுமை பிடியில் இருந்த வர்மாவை அழைத்து அவனுக்கும் அவருக்கு தெரிந்த ஆபிசர் மூலமாக பணத்தை வாரி இறைத்து அவனுக்கும் வேலை வாங்கி கொடுத்தார் சியோரா.. எல்லாம் அவரின் நன்மைக்கு மட்டுமே… இப்படியாக நிறைய மக்களுக்கு வாழ்க்கையை பரிசாகவும், வாழ்கையை அழிக்கவும் செய்திருக்கிறார் சியோரா…நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் இருப்பார் சியோரா….
இப்படி தான் கௌசிக் போலீஸ் ஆகி இப்பொழுது நேர்மையாகவும் மாறி இருக்கிறான்…. கெளதம் பிறந்தநாளை வெகுவாக கொண்டாடி தீர்த்தனர்…. அன்று இரவு வீட்டுக்கு வந்த சியோரா பெரும் கவலையாக வந்தார்… சத்ரியா காரணம் கேட்டதுக்கு ஓன்றும் இல்லை என்று கூறி இருந்தார்… அவர் தான் ஆபிஸ் விஷயம் ஏதும் வீட்டில் முக்கியமாக சத்திரியாவுக்கு தெரியவிடமாட்டார்… கெளதம் அப்பொழுது தான் வந்தான் அவன் அப்பாவின் சோக முகத்தை பார்த்து விட்டு அவன் அண்ணனிடம் கேட்டதற்கு..
ஏதாவது கொலை செய்து இருப்பார்,, அது தான் இவருக்கு பதில் யாரை ஜெயிலில் போடலாம்என்று யோசித்துக் கொண்டு இருப்பார் என்று ஏளனமாக் கூறினான்…ஆம், இப்பொழுது எல்லாம் சியோராவுக்கு எதிராக தான் நடந்துக் கொண்டு இருக்கிறான் கௌசிக்… அவன் அப்படி கூறவும் அவனை முறைத்து விட்டு சத்ரியா எடுத்து வைத்த சாப்பாட்டை சாப்ட்டுவிட்டு அவர் ஆபிஸ் ரூம் சென்று விட்டார்… அவர் செல்லவும் கௌதமும் அவர் பின்னே சென்றான்.. சென்று என்ன விஷயம் என்று கேட்டவும் ஒன்றும் இல்லை என்று கூறினார் சியோரா…
இப்படியாக அவர்கள் வாழ்க்கை எந்த விதமான தடங்கலும் இல்லாமல் சென்றது… கெளதம் மட்டும் அவனுக்கு பிடித்தமாக ஹெர்ஸ் ரேஸ் என்று அதன் பின்னே சென்றான்… சியோரா எவ்வளவு அழைத்தும் தொழிலுக்கு மட்டும் வரமாட்டேன் என்றும் நான் தனியாக கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஆரம்பிக்கிறேன் என்று கூறி விட்டான்…
அதன் பிறகு சியோரா அவனை அழைக்கவில்லை.. அவர் இண்டீரியர் கம்பெனியை பார்த்துக் கொண்டார்… கௌசிக் அதன் பிறகு அவன் போலீஸ் வேலையை நேர்மையாக செய்ய நினைத்து அவன் அப்பாவிடம் கூறினான் அவர் செய்வதை நிறுத்தும் படி.. ஆனால் அதை கேட்டால் அது சியோராவுக்கு அழகு இல்லையே…
அதன் பிறகு கௌசிக் அதை பற்றி பேசுவது இல்ல.. ஆனால் முடிந்த அளவு போலீஸ்க்கு வந்த கேஸை கௌசிக் நேர்மையாக முடிக்க முயற்சிதான்…. அன்று சியோரா மிகவும் வருத்தமாகவே இருந்தார்… காலையில் எழுந்ததும் கௌதமை இன்று ஒரு நாள் ஆபிஸ் வருமாறு அழைத்துக் கொண்டு சென்றார்.. அவனுக்கும், கௌசிக்கும் கூட யோசனை ஏன் இன்று அப்பா இப்படி இருக்கிறார் என்று.. ஆனால் கௌசிக் ஏதாவது வம்பு வளர்திருப்பாரு என்று எப்பொழுது போல் சியோராவை கேலியாக எண்ணி நினைத்து விட்டு சென்றான்….
ஆபிஸ் சென்று கெளதம் என்ன என்று கேட்டதற்கு நடந்த நடக்கும் பிரச்சனையை கூற ஆரம்பித்தார் சியோரா…
அப்பொழுது தான் RK வளர்ந்து வரும் தொழிலதிபராக உயர்ந்து வந்தான்.. அவனுக்கு இரு மக்கள்.. பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாக இருவர்… அந்த RK அதாவது ரோகித் குமார் இவருக்கு எதிராக வளர ஆரம்பித்தான்…
இண்டீரியர் டிசைன்க்குவரும்ஆர்டர் முதலில் சியோரா கம்பெனிக்கு வந்து தான் வேற கம்பெனிக்கு செல்லும்… இவர்ரேட் கொட்டேட் செய்த பிறகு தான் பிற கம்பெனிக்கு செல்லும்.. ஆனால் இப்பொழுது எல்லாம் இவர் ரேட் கொடெட் செய்த பிறகு லோ ரேட் கொடெட் செய்து எல்லா ஆர்டரும் RK அவன் வசம் எடுத்துக் கொள்கிறான்..
பொதுவாக சியோரா எப்பொழுது நியாமான ரேட் தான் கொடேசன் செய்வார். அதனால் பிற கம்பெனி அவருக்கு ஏத்த மாதிரி இவர் கொடெட் செய்த ரேட் வைத்து அவர்கள் வேலையை தொடங்குவர்…. ஆனால் இப்ப்பொழுது இந்த RKவால் இப்பொழுது எல்லாம் மாறியது இதில் சியோராவுக்கு கொஞ்சம் கோபமே.. ஆனாலும் சமாளித்துக் கொண்டு இருந்தார்..
RK மகன் சஞ்சித் டாக்டர்… அவன் பெரும் கயவன்… அவன் ஹாஸ்பிடலில் நர்ஸ் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்து இங்கு அவன் லேப்டாபில் பார்ப்பவன் அவன்… அங்கு தான் ஷதாஷி நர்ஸாக பணி புரிகிறாள் அங்கு வைத்து மீண்டும் அவளுக்கு சோதனை ஆரம்பித்தது.. இந்த வீடியோ வைத்து அவளை மிரட்ட ஆரம்பித்தான்….அவள் முதலில் தைரியமாக தான் இருந்தாள்.. நாளடைவில் அவளை அதிக டார்ச்சர் செய்ய ஆரம்பித்தான்…
பெண்கள் இப்பொழுது எல்லாம் நிறைய இடத்தில தைரியமாக இருந்தாலும்..இதே போல் இன்றும் ஒரு மூலையில் இப்படி நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது… இப்படி நிகழ்வுகள் நடக்க காரணம் ஆண்களா? பெண்களா? இந்த சமூகமா என்பது நான் அறியவில்லை…பெண்களை வீழ்த்தும் ஒரு அங்கமாக இப்பொழுது எல்லாம் இப்படி ஒரு செய்யல நிகழ்கிறது… இப்படி தொடர் நிபடுகிறதோகழ்வுகள் நடக்க யார் எங்கு தவறுகின்றனர் என்று அறியவில்லை…
காதலிக்கவில்லை என்றால் அவள் உயிரை எடுகின்றனர் சிறு பெண் என்றும் பார்க்காமல்.. அடிபணியவில்லை என்றால் தகாத காணொளி காட்சியாக சித்தரிகின்றனர்… எப்பொழுது தான் மாற்றம் வரும் என்று எண்ணுவதை விட நாம் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும்…..
தன்னுடன் கல்விபயிலும் அல்லது பணிபுரியும் பெண்களை சகமனுஷி என்ற மாண்புடன் நடத்தப்பழக வேண்டும். இதை குடும்பத்தினர் உணர்த்த வேண்டும். எப்பொழுது வீட்டில் இருந்து சமூக பார்வை விதைக்கபடுகிறதோ அப்பொழுது தான் சமூகமாற்றம் உறுதியாகும். மனிதனையும் விலங்கில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய பண்பு சுயஒழுக்கம். ஆனால் இந்த சுயஒழுக்கம் என்பது இப்பொழுது காண முடியாததாக இருக்கிறது. பெண்ணுக்கு சுயஒழுக்கம் உண்டு ஆணுக்கு இல்லை என்பது இல்லை.. சுய ஒழுக்கம் என்பது இருபாலருக்கும் பொதுவானது என்பது என் கருத்து..
ஆனால் இந்த RK மகனுக்கு இந்த ஒழுக்கம், சமூகம் என்பது ஏதுமே அவனுக்கு புகட்ட படவில்லை. அப்படி இருந்தாலும் அவன் கேட்டிருக்கமாட்டான் தான்… அது தான் அவனுக்கு ஏழை பெண்கள் உணர்வுகள் அறியாமலே போய் விட்டது… அது தான் அவன் இப்பொழுது ஷதாஷியை குறி வைத்தான் அது மட்டும் இல்லாமல் அவன் அப்பாவிடமும் கூறி இருந்தான்… அவளை அவனுக்கு அடிபணியவைக்க…. ஆனால் RK வேற எண்ணினான்…
மல்லையாவுக்கு மனைவி கிடையாது.. அவனுக்கு எல்லாமே அவனது மகள் தான்.. மகளுக்கு ஓன்று என்றால் அவன் உயிரையே விடுவான்.. அதனால் தான் சியோராவுக்கு எதிராகவும் செயல்பட வைத்தது…
அப்பொழுது தான் மல்லையா சியோராவுக்கு எதிராக மாறினார் RKவுடன் சேர்ந்து.. இதை சியோராவால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை… அதை விட சியோரா எது செய்தாலும் அதுக்கு மல்லையா துணையாக இருப்பார்… சியோரா பற்றி முழுமையாக அறிந்தது மல்லையா மட்டுமே… இப்பொழுது எதிராக மாறினால் என்ன செய்வார் சியோரா.. ரொம்பவே தடுமாறி விட்டார்.. சியோரா செய்யும் சின்ன சின்ன செயலும் போலீஸ் காதுக்கு சென்று அது பெரிதாக மாறாமல் இருப்பதற்கு மல்லையா பேச்சை காரணம் பேசியே அவர்களை இவர்கள் எதிர் பார்க்கும் விலைக்கு மடியவைத்து விடுவார் மல்லையா…
ஆனால் இன்றோ எல்லாம் மாறியது… இங்கு சியோராவுடன் வேலை பார்த்துக் கொண்டே இவர் எடுத்திருக்கும் கான்டராக்ட் மதிப்பு, டிசைன் எல்லாம் அப்படியே RK வசம் சென்றுவிட்டது… அதிலும் மீட்டிங் சென்றாலும், இவர் மனதில் நினைத்து கோட் செய்திருக்கும் எல்லாம் RK வசம்… ஒட்டுமொத்த இண்டீரியர் கம்பெனிஸ் கலந்துக் கொண்டு அவர்களின் டிசைன் ப்ராஜெக்ட் செய்து விளக்கம் அளிக்கும் இடத்தில சியோரா எண்ணம், அவர் கற்பனை எல்லாம் RK பெயராக வெளிவர சியோரா அவமான பட்டு வெளியில் வந்தார்.. அவர் வாழ்வில் எதிர் பாராத மிக பெரிய அடி இது அவருக்கு.. கனவிலும் நினைத்து பார்க்காதது…
RK திட்டம் இது தான்.. எல்லா இடத்திலும் தான் மட்டுமே உயர்ந்து இருக்கனும் என்று நினைத்துக் கொண்டு தான் அவன் மகன் ஷதாஷி பற்றி கூறியது… ஆனால் இவனும், இவன் மகன் மட்டுமே அயோக்கியர்கள்… ஆனால் அவன் மனைவி, மகள் மிக மிக நல்லவர்கள்.. இதனால் தான் சியோரா கூட எண்ணினார் கௌசிக்க்கு இவள் மகளை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு.. அதை விட தொழில் எதிரி சம்மந்தி ஆகிவிட்டால் தொழில் ராஜ்யத்தில் இவர்கள் தான் பெரிய ஆளாக இருப்பர் என்ற எண்ணம் தான் இதுக்கு காரணம்.
ஒரு கைதேர்ந்த தொழில் ராஜ்யவான் இப்படி தான் எண்ணுவான்.. எதிரியை ஓன்று அழிக்கணும் இல்லை என்றால் அவனை நமது கைக்குள் வைத்திருக்க வேண்டும் அப்படி தான் சியோராவும் எண்ணி சம்மந்தம் வைக்க எண்ணினார்….
RK திட்டப்படி சியோராவை தொழில்லில் வீழ்த்த வேண்டும், சியோராவை பொறுத்த வரை RKவை தொழிலில் வீழ்த்த வேண்டும் இது தான் இருவரின் எண்ணமும்.. ஆனால் சியோரா அதை அவரை பொறுத்தவரை நேர்மையாக செய்ய நினைத்தார்… ஆனால் RK குறுக்கு பாதையில் யோசித்து சியோராவுக்கு எதிராக மல்லையாவை தூண்டிவிட்டார் ஷதாஷியை மையமாக வைத்து….
அதன் படி RK கூறியதை அப்படியே செய்தார் மல்லையா… அவருக்கு வேறு வழி இல்லை…. அவர் மகள் வாழ்க்கை இப்பொழுது RK கையில் ஆனால் மல்லையா சியோராவிடம் ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை கூறி இருந்தால் RK மகனையே இல்லாமல் செய்திருப்பார்…
ஆனால் அதையும் RK செய்யவிடாமல் தடுத்துவிட்டான்… வேறு வழி இல்லாமல் RK சொன்னதை செய்து எல்லார் முன்பும் சியோராவை தலை குனிய வைத்துவிட்டார்…. இதை எல்லாம் கௌதமிடம் கூறிய சியோரா என்ன செய்ய என்று தெரியலை கெளதம்.. மல்லையா நல்ல விசுவாசி ஆனால் எப்படி மாறினான் என்று தெரியவில்லை என்று கூறிக் கொண்டு இருந்தார்…
அவர் கூறியதை கேட்ட கெளதம் கொஞ்ச நாள் பொறுமையாக இருங்க அப்பா என்று கூறி வெளியில் வந்தான்…. வந்து அவள் கம்பெனியை சியோரா இண்டீரியருடன் இணைத்தான்… இணைத்து வெளியில் இருந்து அவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் எல்லாரையும் வாட்ச் செய்துக்கொண்டே இருந்தான்…
அதே நேரம் வீட்டில் இருந்த மல்லையா அவர் மகளிடம் சியோரா சாரை பார்த்துக் கொண்டு வருகிறேன் என்று கிளம்பி போனார்…..அவர் போய் சிறிது நேரத்தில் அவர் மரண செய்தி அவள் காதில் மோதியது… அழுகையோடு வந்து பார்த்தால்..
நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் மல்லையா கிடந்தார்.. அப்பொழுது தான் போலீஸ் படையும் வந்தது… கௌசிக் வந்து எல்லாரையும் தள்ளி நிற்க சொல்லி எல்லாரையும் பார்த்து யார் கொன்றது என்று கேட்டுக் கொண்டு இருந்தான்… அங்கு இருந்த கூட்ட மக்கள் யார் கொன்றது என்று கூற வரவில்லை..
மல்லையா தலையை மடியில் தூக்கி வைத்துக் கொண்டு ஷதாஷி அழுத அழுகை கல்நெஞ்ச காரரையும் கரையவைக்கும்.. அப்படி கதறி அழுதாள்.. அவள் கண்ணீரை பார்த்து கௌசிக் இதயம் கூட ஒரு நிமிடம் அதன் இயக்கத்தை நிறுத்தியது…. கௌசிக் சத்தமாக கேட்டான் யார் கொன்றது என்று… ஆனாலும் யாரும் பதில் சொல்லவில்லை…
மல்லையா இருந்து காரியமும் முடிந்தது.. ஆக்ஸிடெண்ட் என்று முடித்துவிட்டனர்.. ஒரே நாளில் ஷதாஷி அநாதை ஆகிவிட்டாள்…. வீட்டுக்கு வந்த கௌசிக் வெறி பிடித்தவன் போல் கெளதம் அறைக்கு சென்று அவனின் பைல் எல்லாம் எடுத்து பார்த்தான்… அதில் சில போட்டோ.. அதை பார்த்ததும் அவனுக்கு தெரிந்து விட்டது கெளதம் அகராதியில் தண்டனை வாங்கியவர்களுக்கு, வாங்க போகிறவர்களுக்கு என்று.. அதில் எடுத்து பார்க்கவும் தான் ஷதாஷி போட்டோவும், மல்லையா, RK மகன் 3 பேர் போட்டோவும் இருந்தது…
அதை பார்க்கவும் கௌசிக் எண்ணிவிட்டான் மல்லையாவை கொன்றது இவர்கள் தான் என்று, அது மட்டும் இல்லாமல் கெளதம் அடுத்து குறிவைப்பது ஷதாஷி, RK மகன் என்று தவறாக எண்ணினான்… RK மகன் என்பது சரி தான் ஆனால் ஷதாஷி தான் தவறு என்று அவனுக்கு தெரியவில்லை… அதை எடுத்துக் கொண்டு கெளதம் முன் வந்து நின்று அவனை பார்த்து ” இவள் போட்டோவை எதுக்கு வச்சுருக்க நீ.. அவள் அப்பாவை கொன்னது போல இவளை கொல்ல போறியா இல்ல …………… போறியா” என்று ஈவு, இரக்கம் இல்லாமல் கெளதம் பார்த்து கேட்டான் கௌசிக்…
அவனுக்கு ஆத்திரம் தலைக்கு மேல ஏறியதால் இப்படி பேசினான் கௌசிக்.. அதில் கோபமான சியோரா அவனை ஓங்கி அறைந்தார்… ” வாயை மூடுடா யாரை பார்த்து என்ன பேசுற என்ன நடந்தது என்று முதலில் கேள்” என்று என்று சியோரா நடந்ததை கூறவந்தார்….
RK மல்லையாவை மிரட்டியது.அவன் மகனின் எண்ணம் இப்படி எல்லாம் கூற எண்ணினார்.. அவருக்கே மல்லையா இறப்பதற்கு கொஞ்சம் முன்னாடி தான் தெரிந்தது…
ஷதாஷியிடம் கூறிக் கொண்டு கிளம்பிய மல்லையா நேராக வந்து சியோராவிடம் எல்லாம் கூறி அவர் காலில் விழுந்து கதறி அழுதார்… அதிலும் RK வேலை முடிந்ததும் அவரை கொல்ல முடிவெடுத்து விட்டான் என்று அறிந்த மல்லையா சியோராவிடம் சொல்லி அடைக்கலம் தேடி வந்தார்…
எல்லாம் கூறவும் சியோராவும் சரி என்று கூறி அவனை அனுப்பி விட்டார்.. மனதில் அந்த RK மகனுக்கு நாள் குறித்துவிட்டார்..உடனே அவர் ஆட்களை நியமித்து விட்டார் அவனை கொல்ல…. இதே போல் தான் கெளதம் தனியாக அவனை கொல்ல திட்டம் தீட்டிவிட்டான்.. அவனுக்கும் மல்லையா இக்கட்டான சூழ்நிலை புரிந்துக் கொண்டு அவனுக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டான்… அவன் அறிந்தது ஷதாஷி பிரண்ட் மூலமாக…. இப்படி பிளான் செய்துக் கொண்டு சியோராவை பார்க்க வந்தான் கெளதம்…
பொதுவாக தொழில் விஷயம் பேசிவிட்டு இருவரும் காரில் போகும்பொழுது தான் மல்லையாவை இருவர் விரட்டிக் கொண்டு வந்தனர்.. அப்பொழுது தான் இவர்கள் காரை நிறுத்தி இருவரும் இறங்கி அவனை நோக்கி ஓடவும் மல்லையாவை கொன்றுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்… இதை பார்த்த சியோரா அதிர்ந்து விட்டார்.. அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை… ஆட்கள் கூட்டம் கூடுவதை பார்த்து கெளதம் தான் அவரை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்…
ஆனால் ஷதாஷி முழுமையாக நம்பினாள் அப்பாவை கொன்றது சியோரா தான் என்று… காரணம் அப்பா கடைசியாக சென்றது சியோரா வீட்டுக்கு. அதுமட்டும் இல்லாமல் கொஞ்ச நாளாக அவர் சியோராவுக்கு செய்த துரோகத்தை வாய்விட்டு சொல்லிக் கொண்டு தான் இருந்தார்.. அதில் இருந்து தான் ஷதாஷி வேலைக்கு போவதை கூட நிறுத்திவிட்டாள்… அப்பொழுது தான் அவள் சியோரா தான் மல்லையாவை கொன்றது என்று கேஸ் குடுக்க போன இடத்தில தான் கௌசிக்கை பார்த்து எல்லாம் கூறினாள். அப்பொழுது கூட அவள் RK மகன் செய்ததை அவனிடம் கூறவில்லை… வீணாக அவள் பெயர் தான் கெட்டுவிடும் என்று அவனிடம் மறைத்தாள்..
இதை கௌசிக் கிட்ட சொல்ல வந்த சியோராவை தடுத்த கௌசிக் வீட்டில் சென்று தனது துணி எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்… இந்த கொலைகாரர்கள் வீட்டில் இனி இருக்கமாட்டேன் என்று.. அவன் வெளியில் போகவும் கோவிலுக்கு போய்ட்டு வந்தார் சத்ரியா. என்ன என்று கேட்டதற்கு ஒரு முக்கியமாக வேலை அதை முடித்துவிட்டு மீண்டும் வருகிறேன் என்று கிளம்பி விட்டான்…
வீட்டை விட்டு வெளியில் சென்ற கௌசிக் ஷதாஷியை அழைத்துக் கொண்டு அங்கு உள்ள கோவிலில் அவளை திருமணம் செய்துக் கொண்டு சென்று விட்டான்.. இந்த விஷயம் யாருக்கும் தெரியாது….
அதன் பிறகு RK, சியோராவையும், கௌதமையும் கொல்ல நினைத்தான்.. ஆனால் அவனால் முடியவில்லை… சியோராவை சுற்றிலும் எப்பொழுது அவனுக்கு பாதுகாப்புக்கு ஆட்கள் இருந்தனர்… அதன் பிறகு சியோரா அவர் மகளை தன் மகனுக்கு மணமுடிக்க ஆசை என்று RK காதுக்கு செல்லவும் கொஞ்சம் அடக்கி வாசித்தான்.. அவன் மகனையும் கொஞ்சம் அடங்கி இருக்க கூறினான்…
அப்படியாக அவர்கள் நாட்கள் செல்லவும் கெளதம் முதல் நாள் சியோரா கம்பெனிக்கு பொறுப்பெடுக்க வந்த நாள் RK பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வர எண்ணினார்…. அதுக்கு பிறகு சத்ரியா கௌசிக் பற்றி கேட்ட பொழுது அன்று நடந்தது கூறினார்… அதுக்கு பிறகு தான் சியோரா விசாரித்து அறிந்ததில் கௌசிக் அவளை திருமணம் செய்தது தெரிந்தது..
இப்படியாக RK – சியோரா இருவரும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் விரோதம் வளர்த்துக் கொண்டு இருக்கின்றனர்… சியோரா RK மகன் மேலும், RK இவர்கள் இருவர் மேலும் வன்மம் வளர்த்து வருகிறான்… எப்பொழுது அந்த வன்மம் தீருமோ?
கௌசிக் இன்று வரை அவளிடம் மனைவி என்ற உரிமையை அவன் எடுக்கவில்லை.. அவளும் எதிர் பார்க்கவில்லை. இதை எல்லாம் யோசித்து முடித்த கௌசிக் அவளிடம் பத்திரமாக இரு என்று கூறிக் கொண்டு வெளியில் சென்றான்… கௌசிக்கு RKவும் அவன் மகன் செய்வதும் தெரியாமல் சியோரா மேல் கோபமாக இருக்கிறான்….
அங்கு கோட்டை நோக்கி சென்ற கௌதம்க்கு கோபமாக வந்தது… கௌசிக் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான்.. நான் இன்று அந்த விதார்த்தை கொல்லவில்லை என்றால் இவனை போல் மீண்டும் நிறைய பேர் எழுப்புவர்.. ஆனால் ஓன்று இப்படி நாம உதவி செய்தால் நம்மளுக்கு தான் ஆபத்து… இனி இப்படி ஒரு காரியத்தை செய்ய கூடாது என்று மனதில் திடமாக ஒரு முடிவெடுத்தான் கெளதம்….அதிலும் அப்பா கடைசியாக கூறியது அவன் நினைவில் ஓடியது… கோட்டையில் யாருக்கோ ஆபத்து என்று கூறினாரே.. அந்த கோட்டை வாரிசு யாராவது உயிரோட இருப்பாங்களா? ஆனாலும் அந்த சாமி இப்படி கொல்லக்கூடாது என்று கோட்டை மேல் கோபமாகவும் அங்கு சென்றான் கெளதம்…
சத்ரியாவின் கோபத்தை கண்ட சியோரா வேறு வழி இல்லாமல் அந்த போட்டோவை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியில் சென்றார் தளர்ந்த நடையுடன்… மெதுவாக வெளியில் நடந்து செல்லவும் அவரை தொடர்ந்து ஒரு கார் வந்தது அந்த காரை அவர் கவனிக்கவில்லை…வெகு தூரம் நடந்து சென்றார்…
அப்பொழுது அவர் முன் கௌசிக் தனது காரில் வந்தான்.. அவன் சியோராவை பார்த்து யோசனையுடன் மெதுவாக காரை ஓட்டி வந்தான்… அப்பொழுது தான் அருகில் உள்ள பூங்கா கண்ணில் படவும் அவர் அங்கு திரும்பவும் வந்த கார் அவரை இடித்து தள்ளி விட்டு சென்றது… ரத்த வெள்ளத்தில் விழுந்தார் சியோரா….
அதே நேரம் வீட்டில் உடைந்த கோட்டை போட்டோ தானாக கண்ணாடிகள் ஒண்ணு சேர்ந்து சத்ரியா முன் ஒரு நிமிடம் நின்று பின் பூஜை ரூம் நோக்கி சென்றது… அதிர்ச்சி அடைந்து அப்படியே மயங்கி விழுந்தார் சத்ரியா….
அதே நேரம் கோட்டைநல்லூரை வந்து சேர்ந்தான் கெளதம் சியோரா..
உயிர் எடுப்பாள்…
சியோரா பிழைப்பாரா? அவரை கொல்ல நினைத்தது யாரு?? கௌதம் மைத்ரேயியை காப்பானா?? இப்படி பல கேள்விகளுக்கு விடையாக நான் அடுத்த எபி நோக்கி கிளம்புகிறேன் டாட்டா…. இந்த எபியில் ஏதாவது குழப்பம் இருந்தால் கேளுங்க விவரிக்கிறேன்…. படிக்குறவங்க கொஞ்சம் லைக், கமெண்ட் போட்டால் நான் கொஞ்சம் சந்தோஷப்படுவேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!