KL – 36
KL – 36
கந்தர்வ லோகா – 36
குளத்தில் கால் நனைத்தபடி அமர்ந்திருந்தாள் லோகா. அவளைச் சுற்றிலும் பூவும் சந்தனமும் கலந்த வாசனை வெகுவாக அவளைத் தாக்கியது. பயம் மனதில் பரவ,
தண்ணீருகுள்ளிருந்து காலை உதறிக் கொண்டு எழுந்தாள். எழுந்ததும் கால் வழுக்கி அந்தப் படிகளில் சாய , வலிய கரங்கள் இருண்டு அவளைத் தாங்கிப் பிடித்தது.
இருப்பினும் அவளது கால்களில் பாசி வழுக்கி சுளுக்கி விட்டது. அந்த வலியில் கண்களை மூடிக்கொண்டிருந்தவள், தாங்கியவர் யார் எனப் பார்க்கவில்லை. அந்தக் கரங்களுக்கு உரியவர் அவளின் முதுகுப் புறம் தாங்கிப் பிடித்து அவளை அங்கே இருந்த படியில் அமர வைத்தான்.
அமர்ந்ததும் சற்று நினைவு வர, சுதாரித்துக் கொண்டாள். அந்த வாசம் வெகுவாகத் தாக்க தனக்கு அருகில் இருப்பவனைக் கண்டதும் கண்களை அகல விரித்துப் பார்த்தாள்.
“கால் வலிக்குதா? எங்க அடிபட்டுச்சு.. நீ விழறதுக்குள்ள பிடிக்கலாம்னு நெனச்சேன். கீழ விழாம பிடிச்சுட்டேன்.. ஆனா உன் கால்ல அதுக்குள்ள அடிபட்டுடுச்சு. கால காட்டு..” பதட்டத்துடன் அவளது கால்களை தன் தொடை மேல் எடுத்து வைத்துக்கொண்டு வருட ஆரம்பித்தான். விரல்களில் கூச்சம் உள்ளங்கால் குறுகுறுத்தது.
விஷ்வா மறந்தது, பாட்டி மறந்தது , எந்த ஊருக்கு வந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் அனைத்தும் மறந்தது.
அவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது அக்கறை எங்கோ தொட்டது.
‘இவன் கனவில் வந்தவனா…? அன்னிக்கு நான் இவனது உரிமைன்னு சொன்னானே! என் கால்ல அடிபட்டதுல அவனுக்கு எவ்வளவு வருத்தம். அவனது உரிமை நான் ,அதுனால தான் இந்த அக்கறை.’ மனதில் ரசித்தாள்.
கனவில் கண்டதற்கும் நேரில் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
‘கனவில் இவன் ராஜா மாதிரி டிரஸ் போட்டு இருந்தானே! இப்போ இவ்ளோ ஹேன்ட்சம்மா ஷார்ட் ஸ்லீவ் டிஷர்ட் அண்ட் ஜீன்ஸ் போட்ருக்கான். அப்பா… என்ன ஒரு ஆர்ம்ஸ்.. லேசான மீசை.. கண்ணைப் பாரு… பேசத் துடிக்குது என்னைப் பார்க்கறப்போ… ‘ அவளது மனம் போன போக்கில் சிந்திக்கத் தொடங்கினாள்.
அவளது எண்ணங்களை அறிந்தவன், ஒரு நொடி நிமிர்ந்து அவளைப் பார்க்க, சட்டென தலை குனிந்து கொண்டாள். அவனை ரசித்தது அவன் காதிலேயே விழுந்தது போன்ற பிரமை.
உண்மையில் அவன் அவளது மனம் அறிந்து தான் அவளைப் பார்த்தான்.
“ லோகா! “
“ ம்ம்ம்… “ அவளுக்கு மட்டுமே அது கேட்டது.
“ என்னை விட உன் கண்ணு என்கிட்ட ஆயிரம் கவிதை சொல்லுது. ஒவ்வொன்னா அதை உனக்கு சொல்லட்டுமா…” அவளது கால்களை மெதுவாக வலி தெறியாமல் நீவி விட்டான். விரல்களில் சொடுக்கெடுத்தான்.
அத்தனை சுகமாக இருந்தது அவளுக்கு.
“ என்ன…என்ன சொல்லுது.. எதுவும் சொல்லல.. நான் சும்மா பாத்தேன். நீங்க யாரு ..” அவனைத் தெரியாதது போலக் காட்டிக் கொண்டாள். அவளின் அந்த தடுமாற்றத்தை ரசித்து மெல்ல குறுநகை செய்தான்.
அவனின் அந்த இதழ் அழகாக விரிய , லோகா அதில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.
மயக்கும் வித்தை அறிந்தவன் ஆயிற்றே!
மீண்டும் கருத்தாக அவளது கால்களைப் பற்றியவன்,
“ நான் யாருன்னு உனக்குத் தெரியாதுல்ல..சரி விடு. இப்போ எப்படி இருக்கு வலி ?” அவளது கால்களை கீழே வைக்க,
லோகா வேகமாக எழுந்தாள். சுளுக்கு இல்லாவிட்டாலும் சிறு வலி இருந்தது.
எழுந்த வேகத்தில் காலை அழுத்தி ஊன , அது வலியை ஏற்படுத்தியது.
“ ஆஆ….” அவள் மீண்டும் கிழே அமர்ந்து விட்டாள்.
“ இங்கயே இரு. நான் மருந்து கொண்டு வரேன்.” அவளை அங்கேயே விட்டு அவசரமாக சென்றவன் சில நொடிகளில் திரும்பி வந்தான்.
அவன் எங்கே செல்கிறான் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் ஒரு சிறு ஜூஸ் பாட்டில் போல கொண்டு வர, அதை என்வென்று யோசிக்காமல், அவனின் அந்த தோற்றத்தை ரசித்தாள்.
அவளின் அருகே வந்தவன், “ இந்தா இதக் குடி. வலி தெரியாது. “ என்று சொல்ல,
என்ன ஏது என்று எதுவும் கேட்காமல் அவளும் அதை வாங்கிக் குடித்தாள். உடலில் ஒரு பலம் வந்தது போன்ற உணர்வு, வலி இருந்தும் தெரியவில்லை. ஆனால் எங்கோ பறப்பது போலவே இருந்தது.
அவன் சிரித்த முகமாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளும் அவனைப் பார்த்து சிரிக்க,
“ நான் யாருன்னு நிஜமாவே தெரியலையா …?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி கள்ளத்தனமாக அவளைப் பார்த்து புன்னைத்துக் கொண்டே கேட்க,
அவளும் அசட்டுத் தனமாக சிரித்தாள். கள் குடித்தவள் போல மயங்கினாள்.
“ நீ தான் தினமும் வந்து என்னைப் பார்கறியே .. உன்னைத் தெரியாதா.. “ அவனின் நெஞ்சில் ஒற்றை விரலால் குத்தினாள்.
அவனும் கையைக் கட்டிக்கொண்டு அவள் முன்னால் நின்று அவளையே மறுபடி கேட்டான்,
“ அப்புறம் ஏன் யாருன்னு தெரியலன்னு சொன்ன…” விடாப்படியாக அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
“ சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். கோச்சிக்கிட்டியா? நான் உன்னோட உரிமைன்னு சொன்ன.. அப்போலேந்து நான் அப்படித் தான் நினைக்கறேன்..“ அவனிடம் குழைந்தது கொண்டே அவன் மார்பில் சாய்ந்தாள்.
அவனுக்கு உச்சி குளிர்ந்து. இதுவரை மற்றவர் மேல் இருந்த கோபம் இப்போது ஒரு துளியும் இல்லை. தன் மார்பில் சாய்ந்திருக்கும் அவளை அவளது இடை பற்றி மேலும் இறுக்கிக் கொண்டான். அவள் இன்னும் அவனோடு கூச்சத்துடன் ஒட்டிக் கொண்டாள்.
அவளது மனதில் இப்போது அதீந்த்ரியன் மட்டும் தான் இருந்தான்.
அதீயோ அவன் நினைத்து பாதி நடந்து விட்டதாக நினைத்தான். சிறு நெருடல் இருந்தது. ‘உனக்கு சோம பானம் கொடுத்து பேச வைத்துவிட்டேன் என்பது ஒரு பக்கம் உறுத்தினாலும், நீ பேசுவது எனக்கு சோமபானமே இல்லாமல் மயக்கத்தை கொடுக்கிறது. என்னோடே எப்போதும் இருந்து விடு லோகா..’ அதீயின் மனம் அவளை வெகுவாக நாடியது.
“ லோகா! உங்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா..?” அவள் காதோரம் தனது உஷ்ண மூச்சை விட்டு அவளை சூடேற்றினான்.
“ கேளு அதீ… “ அவளின் கைகள் அவனது முதுகைத் துளைத்துக் கொண்டிருந்தது.
“ உன்னை நான் எவ்வளவு நேசிக்கறேன்னு உனக்குத் தெரியும். அதேமாதிரி நீயும் என்னை விரும்பறியா?” அவனது உதடு இப்போது அவளது கன்னங்களை அளந்துகொண்டிருந்தது.
அது அவள் அருந்திய அந்த சோமபானத்தை இன்னும் அதுகமாக வேலை செய்ய வைத்தது. ஏற்கனவே அவள் வசம் அவளில்லை. இதில் சோமபானமும் இவனது உதடு செய்யும் லீலைகளும் அவளுக்கு இந்த உலகத்தை விட்டு சொர்கத்தில் அவளைப் பறக்க வைத்தது.
“ அதீ… உன்னை யாருக்குத் தான் பிடிக்காது… நீ ரொம்ப ஸ்மார்ட் அண்ட் ஹன்ட்சம்.. நீ எனக்காக செஞ்ச சிலைய பார்த்ததுமே நான் அசந்துட்டேன். அதுவும் நீ அப்போ ராஜா மாதிரி டிரஸ் போட்டிருந்த.. இப்போ ஜீன்ஸ் ட்ஷர்டல இன்னும் சார்மிங்கா இருக்க… முன்னாடி மாதிரி இல்லாம இப்போ நார்மலா பேசுற.. அப்போ நீ தூயதமிழ் பேசறப்ப எனக்கு ஒரு டிஸ்டன்ஸ் இருந்துச்சு.. இப்போ என்னை மாதிரி பேசுற.. இது ரொம்ப பிடிச்சிருக்கு.. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” வாயிலிருந்து அவள் அறியாமல் வார்த்தைகள் வந்து விழுந்தன.
உன்னை பிடிச்சிருக்கு என்ற வார்த்தையே அவளிடம் முன்னேற அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
“ லோகா நான் உன்னை தொடலாமா.” அவன் வேறு பொருளில் ஹஸ்கி வாய்சில் கேட்க,
இவளின் புத்தியோ சாதராணமாக எடுத்துக் கொண்டது.
“ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க… தொட்டுட்டு தான இருக்க.. அப்புறம் என்ன?” கண்கள் சோர்வாக அவனைப் பார்த்துக் கேட்டாள்.
அது அவனுக்கு அவள் மேல் இன்னும் கிறக்கத்தை வரவைக்க,
“ ஐயோ!! அதை சொல்லல.. சரி உன் வாய் சும்மா தான இருக்கு… எனக்கு ஒரு முத்தம் வேணும்.. குடு” அவளை அன்றே தனதாகிக் கொள்ளும் எண்ணம் அவனுக்குள் புகுந்தது. அவளது முகத்தை இரு கைகளாலும் அழுந்தப் பிடித்து அவன் உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றான்.
“ முத்தமா…. “ அவள் விழிவிரித்து அவனைப் பார்க்க,
அவன் அவளிடம் காதல் பேசினான்.
“ ஹே! லோகா…. உன்னோட உதடு ரொம்ப அழகு.. இந்த அழகான அட்சயப் பாத்திரத்துல இருந்து, நான் கேட்டதெல்லாம் அள்ளி அள்ளித் தரனும். உன்னோட ஆழமான முத்தத்துல நான் கரை தெரியாம மூழ்கிப் போகணும்.
என்னோட உலகத்தை மறந்து நான் சில நொடிகள் சவமாக இருக்கணும். மீண்டும் உன்னோட முத்தத்தால் எனக்கு நீ உயிர் கொடுக்கணும்.
கூடலில் நீ கொடுக்கும் காயங்களின் வலியை சுகமா ஏத்துக்கணும். காமம் தீர்ந்த பின்னும் உன்னை அரவனைப்பில் வெச்சுக்கணும். என்னோட உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உன்னை உணரனும். அதுக்கு நீ என்கூட இருக்கணும்… இருப்பியா லோகா…. “
அவனின் வார்த்தைகள் லோகாவை அவன் மேல் காதல் கொள்ள வைத்துக்கொண்டிருந்தது. இன்னும் அவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றியது.
கேட்டுவிட்டு , அவளின் பதிலுக்காக காத்திருந்த அவன் முகத்தைப் பார்க்கையில் , பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தையைப் போல இருக்க,
அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவனது இதழ்களை நெருங்கினாள் லோகா.
“ மியாவ்…. “ என்ற கூச்சலுடன் அதீந்த்ரியன் மேல் அந்தப் பூனை பாய , லோகாவின் மேலிருந்த அவன் கையின் பிடி நழுவியது. அவளை விட்டு விலகி சற்று பின்னடைந்தான்.
அந்தப் பூனையை சற்று நேரம் பார்த்தவன் கண்களில் ஒரு கலக்கம் தோன்ற,
“ லோகா.. வா.. “ என அவளை இழுத்துக் கொண்டு வேகமாக ஓடினான்.
பூனையும் அவர்களை விடாமல் தொடர, சட்டென அந்தப் பூனையை ஒரு நிமிடம் திரும்பிப் பார்த்தவன், தன்னுடைய சக்தியால் ஒரு இரும்பு வளையத்தை அந்தப் பூனையைச் சுற்றி எழுப்பிவிட்டான்.
பூனை விகாரமாகக் கத்த, அவன் லோகாவுடன் அந்த ஊரிலேயே யாருக்கும் தெரியாமல் ஒரு வீடு அமைத்து அதில் அவளை இருக்கவைத்தான்.
அந்த வீடு அவன் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவர்களைத் தவிர அப்படி ஒரு வீடு அங்கு இருப்பதே யாருக்கும் தெரியவில்லை.
லோகா வழக்கம் போல அந்த வீட்டின் அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது தன் காதலனுடன் இருப்பதாக மட்டுமே நினைக்க முடிந்தது. வேறு எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை.
அவள் அவனின் மாயவலையில் சிக்கி விட்டாள்.
பூனை அந்தக் வலையிலிருந்து உடலைக் குறுக்கி வெளியே வந்தது. நேரே பூசாரியின் வீட்டிற்குச் சென்றது.
விஷயம் அறிந்த லோகாவின் பாட்டி, அவளை ஊர் முழுக்கத் தேடியும் அவளைக் காணவில்லை. அவரின் மனது படாதபாடு பட்டது.
இந்த நிலையில் அவள் காணாமல் போனது அவரால் தாங்க முடியவில்லை.
‘ஐயோ! இந்த பெண் ஏன் இப்படி போய் வலிய மாட்டிக்கிட்டாளே! இனி நான் என்ன செய்வேன்!’ புலம்பியபடியே இருந்தார். சற்று முன் கோவிலுக்கு பொங்கல் வைக்க ஏற்பாடு செய்ய என்று சொல்லிவிட்டு, அந்தப் பழைய பூசாரியின் வீட்டிற்குச் சென்றிருந்தார்.
அங்கு நடந்தது ——
பூசாரியின் மகன் தான் இப்போது அந்தக் கோயிலுக்குப் பூசாரியாக இருந்தான். அந்தப் பழைய பூசாரி இப்போது வீட்டில் தான் அமர்ந்திருந்தார். அந்த ஊர் அம்மனின் கதைகளை ஒரு புத்தகமாக எழுதிக் கொண்டிருந்தார். பாட்டியின் வருகையை அவர் முன்பே அறிந்திருந்தார். அவர் வாசலில் வருவதைக் கண்டதும், எழுந்து வெளியே வந்தார்.
“ வாம்மா… எப்படி இருக்க… “ அவர் கனிந்த குரலில் கேட்க,
“ இப்போ வரை நல்லா இருக்கேன் உடலால. மனசு சுத்தமா நல்லா இல்லை. நிம்மதியை தேடித் தான் வந்திருக்கேன். “ வருத்தம் அவரது குரலில் அப்பட்டமாகத் தெரிய,
“ நீ அன்னிக்கே அவள ஏத்துக்கிட்டு இருந்தா இப்போ இந்த நிலைமைல உன்னை காக்காம இருப்பாளா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. இப்போவே அவள சரணடஞ்சிடு. எல்லாத்தையும் அவ பாத்துப்பா. “
“ நானும் அந்த முடிவுல தான் வந்திருக்கேன். இதுக்கு மேல என் வாழ்க்கைல பாக்கறதுக்கு என்ன இருக்கு. ஆனா என் பேத்தி முழுசா இந்தப் பிரச்சனையில இருந்து வெளில வந்து அவ விஷ்வாவோட சேரனும். அந்த உறுதிய அவ எனக்குத் தரனும். அப்பறம் தான் நான் இந்த உலகத்த விட்டு அவ கிட்ட போவேன்.” அழுத்தமாக சொன்னார் பாட்டி.
“எதுக்கும்மா அவள பரிட்சித்துப் பாக்கற. வேண்டாம். அவகிட்ட சரணடஞ்சிட்டா உனக்கும் உன் குடும்பத்துக்கும் எந்தக் கவலையுமில்லை.” அவர் எடுத்துரைக்க ,
“ இல்ல ஐயா, என் பேத்திய தனியா விட்டுட்டு என்னால இப்போ எந்த முடிவையும் எடுக்க முடியாது. அதுனால என்னை புரிஞ்சுக்கோங்க. இப்போ நான் முதல் கட்டமா என்ன செய்யணும் அதை சொல்லுங்க.”
அதற்கு மேல் அவரிடம் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை என முடிவுசெய்தார். அடுத்து அவர் செய்ய வேண்டியதை சொன்னார்.
“ கோயில் கிணறுல குளிச்சுட்டு மஞ்சப் புடவை கட்டி , நாளைக்கு முழுதும் விரதம் இருக்கணும். உங்க பேத்திய நாளைக்கு பொங்கல் வெச்சு அம்மனை வீட்டுக்கு அழைக்க சொல்லுங்க. கண்ணிப்பெண் அவ இதை செய்யலனா நீங்களே அம்மனை அழைக்கணும் ஆனா நீங்க செய்யறப்ப தீ மிதிச்சு அவளை ஏத்துக்கறதா நீங்க நெருப்புல சத்தியம் செய்யனும்.
அந்த இரவு முழுதும் கோயில் மண்டபத்துல நீங்க தனியா படுத்திருக்கணும். அவளோட சக்தி உங்கள சாதரணமா இப்போ ஏத்துக்காது. நிறைய பரிட்ச்சை வைக்கும். அதை மனதைரியத்தோட எதிர்கொள்ளணும். நம்பிக்கையோட !
அதையெல்லாம் தாங்கி மறுநாள் காலைல அவளை தரிசிச்சா அவ அருள் கிடக்கும்.” அவர் சொல்லி முடிக்க,
அதற்குள் அந்தப் பூனை அங்கு வந்தது. பூசாரி எதுவோ சரியில்லை என்று பாட்டியிடம் சொல்ல, வீட்டிற்கு சென்று பார்க்க அங்கு லோகா இல்லை.
பூசாரி அம்மனிடம் குறி மனதில் குறி கேட்க, அவருக்கு அனைத்தும் விளங்கியது.
“அம்மா… நீ அவள சோதிக்க நினச்ச, அவ நீ வந்தா தான் உன் பேத்திய மீட்க்க முடியும்னு கெடு வெச்சிட்டா… உடனே நீ விரத்தத்தை ஆரம்பிக்கணும்.”
பாட்டி மனதில் வலியுடன், விரத்தத்தை ஆரம்பித்தார்.
Comments Here