Aahiri-10

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-10

 

முகில் கூட்டங்கள்

முத்தமிட்டுக்கொண்ட தருணம்..

இடியாய் சில நினைவுகள்

துரத்திட..

மாயத்திரையென சூழ்ந்திருந்ததை

உடைத்தெறிந்திருந்தாள்

அரணென அறிந்தும்..

 

வெதுவெதுப்பாய் இல்லாவிட்டாலும் சற்று இதமாகவே அவளில் படிந்தது அந்த காலை நேரக் கதிரொளி.

 

முகத்தில் படிந்த ஒளியை உணர்ந்தவளின் புருவங்களிரண்டும் சுருங்கின. கண்களை திறக்கவே சிரமமாய் இருக்க விழிகள் இரண்டையும் சுருக்கியவளாய்.. திறந்தவளுக்கு அதன் பிறகே உரைத்தது, கதிரவனின் வருகை.

 

நேற்றைய இரவுக்கும் இன்றைய பகலுக்கும் ஒன்னும் அவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. நேற்றைவிட இன்று இன்னும் சற்று வெளிச்சம் பரவியிருந்ததே தவிர அதே இதமான சூழலே!

 

கொஞ்சமும் அந்த இதம் குறைந்திருக்கவில்லை. முகத்தில் விழுந்திருந்த  முடியை ஒதுக்கிவிட கைகளை உயர்த்தும் பொழுதே உணர்ந்தாள் அவளை தன்னுள் அடக்கியிருந்த அந்த வெளிர் சிவப்பிலான கம்ஃபர்டரை.

 

‘இது..? நான் போத்திக்கவே இல்லையே??’

 

உறையும் குளிரில் தான் வெடவெடக்காமல் இருப்பதன் காரணத்தை கண்டுக் கொண்டவளாய் மெல்ல மெல்ல அந்த கம்ஃபர்டரை ஒதுக்கியவள் எழுந்தமர விழிகளிரண்டும் வானவில்லின் சாயலில்..!!

 

அந்த மெத்தையில் இருந்து வெகு சில அடிகளே தொலைவிலிருந்த அந்த கௌச்சில் கையிலிருந்த புத்தகத்திலேயே முழு கவனம் பதித்தவனாய் அமர்ந்திருந்தவனைக் கண்டு.

 

புகைப்படலமாய் முன்தின இரவின் நினைவுகள் உள்ளுக்குள் எழும்பின ஆஹிரிக்கு..

 

“நாங்க ப்ரதர்ஸ்” என்று சற்றும் அலட்டிக்கொள்ளாமல் சொன்ன சாத்வதனையே அதிர்ந்துப் பார்த்திருந்தாள் ஆஹிரி.

 

இதை அவள் யூகித்திருக்க வேண்டும். நெருக்கமானவர்கள் என்று நினைத்தாளே தவிர சகோதரர்களாக இருக்கக்கூடுமென நினைத்திருக்கவில்லை.

 

மற்றவனின் பார்வை தன்னில் படிவதை உணர்ந்தவளோ சுதாரித்தவளாய் அவனிடம் சொல்லிக் கொண்டு வெளியேறிவிட்டாள்.

இவள் ஏதேனும் கேட்பாள் என்று எண்ணினான்போலும். சிறு தலையசைப்புடன் கதவடைத்துவிட்டான்.

 

ப்ரதர்ஸ்..??

இந்த விஷயத்தில் சாத்வதன் பொய்யுரைக்ககூடும் என்று அவளுக்கு தோன்றவில்லை. ஏனெனில், ‘என் துஜா’ என்றவனின் குரலில் எந்தளவு உண்மையை உணர்ந்தாளோ அதற்கு சற்றும் குறையாமல் அவளை அதிர வைத்தது அந்த ‘நாங்க ப்ரதர்ஸ்’.

 

இது என்னதிது? திடீரென எங்கிருந்து வந்தான் இந்த சாத்வதன்? சட்டென ஆகாயத்தில் இருந்து குதித்துவிட்டவனைப்போல..

துளஜாவின் காதலன் என்கிறான்.. அவள்தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறான்..

மற்றவன் என்னவென்றால் அவளுக்காக ஐந்து வருடங்களாய் காத்திருப்பதாக சொல்கிறான்.. ஏனோ இன்னும் அவளுக்கு அரணின் காரணத்தில் துளியளவும் நம்பிக்கை வரவில்லை என்பதே உண்மை.  

 

அவனை இதற்கு முன் எங்காவது பார்த்திருக்கிறோமா? என்று பலமுறை நினைவேடுகளை புரட்டிவிட்டாள். சிறு தடயம்கூட தென்படவில்லை.

அரண் சொல்வதுபோல ஐந்து வருடம் என்றால்.. அவள் கல்லூரியில் கால் பதித்ததில் இருந்து பின் தொடருகிறானா?

 

ஒருவேளை.. அதையும் மறந்திருப்பேனோ?  திடீரென எழும்பிய கேள்விக்கு முழு மனதாய் எதிர்ப்பு கிளம்பியது அவளிடமிருந்தே. உள்ளுணர்வின்மேல் அதிகம் நம்பிக்கையுடையவள் ஆஹிரி. அதுவும் இப்படிப்பட்ட சூழலில்.. அவளுக்கு அதைத் தவிர வேறெந்த வழியும் உகந்தவையாய் இல்லை.

 

இதில் யார் யாரை வைத்து விளையாடுகிறார்கள்?

அரண் இன்னதென்று அவளால் அறுதியிட்டு கூற முடியவில்லை. அதற்கு முழுமுதற் காரணம் அவனே! முற்றிலும் முரணாய்..!!

 

அவனை முதன் முதலாய் சந்தித்த அன்று.. அதுதான் அவளை அவன் கடத்திய நாளன்று. அன்று அவன் நடந்துக் கொண்ட விதத்திற்கும், அந்த மரவீட்டில்.. அவள் பதறியடித்துக் கொண்டு எழுந்தப்பொழுதெல்லாம் ஆதரவாய்.. அரவணைத்த விதத்திற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?!!  ஏன் அன்று முழுதும் அவன் உறங்கினானா என்பதுகூட சந்தேகம்தானே?! அவளருகிலேயேதானே இருந்தான்!

பிறகேன் முதல் நாள் அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? இப்பொழுது இவளறிந்த அரணை வைத்துப் பார்த்தால்.. அந்த அரண் இவன் பக்கத்தில்கூட வர முடியாதே!

 

பிறகு ஏன் அப்படியொரு பதில் அவனிடமிருந்து? உண்மையில் அதுதான் அவன் என்றால்.. இப்பொழுதைய அரணது செயல்கள் பொய்யா? இல்லை இதுதான் அரண் என்றால்.. இவன் ஒருதலைபட்சமான காதலுக்காக விருப்பமற்ற பெண்ணை கடத்துபவனல்லவே!!  இந்தக் கணம்வரை அவன் அவளை தவறாக ஒரு பார்வை பார்த்ததில்லையே..

 

ஏன் அவன அவனே இவ்ளோ காண்ட்ரடிக்ட் செய்றான்??!! இதுவும் என்ன குழப்பறதுக்காகவா? இல்ல உண்மையிலேயே வேறெதுவும் ரீஸனா??

 

இதெல்லாம் ஒருவேளை.. சாத்வதனுக்காகவா??!!  

வதனப்போலவே அரணும் என்மேல சந்தேகப்படறானா? அதனாலதான் தன் தம்பிக்காக என்ன கடத்தினானா? என்ற எண்ணம் எழுந்த நொடியே உள்ளத்தை உலுக்கியது ஓர் உணர்வு!

 

மறுப்பாய் அசைந்தது அவள் தலை. இல்ல இருக்கவே இருக்காது! என்று அடித்துரைத்த மனதிற்கு அத்தாட்சியாய் அரண் அவளுக்காக வதனிடம் பேசியதிலிருந்து மற்ற பிற சம்பவங்களும் கை கோர்க்க ஆழ்மனம் அதில் அமைதி கொள்வதன் காரணம்தான் அவளுக்கு விளங்கவில்லை.

 

ஏனோ அவளால் முழு மனதாய் அரணை சந்தேகிக்க முடியவில்லை. அதே சமயம் நம்பவும் இயலவில்லை.

 

மனம் தன்போக்கில் எதை எதையோ எண்ணி அலைக்கழிய அது இழுத்துச்  சென்ற திசையில் நடந்தவளின் கவனத்தில் விழுந்த காட்சியில் அந்த இருள் படர்ந்த அறையின் இன்னொரு மூலையில் பதுங்கிக் கொண்டாள்.

 

அவளிருந்த இடத்திற்கு நேரெதிரில் இருந்தது பால்கனியின்  எக்ஸ்டென்ஷன்.

 

அது அரணின் அறைதானே?!

 

தனதறையும் பால்கனியும் இணையும் இடத்தில் இருந்து யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தவனின் நிழல் உருவம் அந்த பால்கனி தரையில் சரிந்து விழுந்தது அவ்வறையின் வெளிச்சத்திற்கேற்ப.

 

மறைந்திருந்தவளின் செவிப்பறையை தீண்டிய வார்த்தைகள் தெளிவற்று இருந்தன.. அதிலிருந்து அவளால் ஒன்றும் கண்டுக்கொள்ள முடியாமல் போனாலும் அவன் பேசிய விதம்.. அவனது உடல் அசைவுகளை வைத்து அவனது கோபத்தையும் கட்டளையிடும் தோரணையையும் நன்றாகவே உணர முடிந்தது அவளால்.

 

பேசி முடித்தவன் அந்த ஃபோனை  மெத்தையில் வீசிய விதமே சொல்லிற்று அவனது மன நிலையை.

 

பால்கனியில் படிந்த அவன் நிழல் மெல்ல மெல்ல அகலவுமே சுதாரித்தவள் அது கதவிடம் வந்து நிற்கும் முன்பே தன் அறைக்குள் வந்திருந்தாள்.

 

அரண் யார்கிட்ட இவ்ளோ கோவமா பேசிட்டிருந்தான்? 

நினைத்த ஏதோ ஒன்று நடக்காத கோபமா அது?

அவனது மொத்த உரையாடலிலும் அவளுக்கு புரிந்த ஒரே வாக்கியம்.. “ஜஸ்ட் டூ வாட் ஐ ஸே!!” மட்டுமே. அதுவும் அவனது அடக்கப்பட்ட கோபக்குரலில் சற்று அழுத்தமாகவே வந்து விழுந்தன..

 

இவன் எதை செய்ய சொல்கிறான்? யாரிடம் சொல்கிறான்? இந்த காட்டில் இவனுக்கு மட்டும் எப்படி சிக்னல் கிடைத்தது? என்றெண்ணும் பொழுதே முதல் நாள் இதேபோல் அவளை சிந்திக்க வைத்த ஸ்மூத்தி நினைவிலாடியது.

 

‘டெக்னாலஜி..’

 

எண்ணவலைகள் பின்ன பின்ன அதில் சிக்கியவளாய் சில நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவளோ எப்பொழுது கண்ணயர்ந்தாளோ.. அவளறியாள்.

 

துயில் கலைந்து எழுந்தமர்ந்தவளின் பார்வை அவனிலேயே நிலைத்து நின்றதென்றால்.. அவனதோ அந்த புத்தகத்தினுள் புதைந்து..

 

கையிலிருந்த புத்தகத்தின் பக்கத்தை திருப்பியவனின் பார்வை எதேட்ச்சையாய் இவள் பக்கமும் விழ.. ஆஹிரி விழித்துவிட்டதை பார்த்தவனோ விரிய புன்னகைத்தான்.

 

“குட் மார்னிங் பேபி!!” என்றவனின் உற்சாக குரலில் மெல்லிதழ் வளைவொன்றுடன் அதை எதிர்கொண்டவளாய்..

 

“மார்னிங் அரண்!!” என்றாள்.

 முகம் கழுத்தென அவள் தூங்கியதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கலைந்து படர்ந்திருந்த கூந்தலை  பின்னோக்கி கோதியவள் அதை அப்படியே தூக்கி மெஸ்ஸி பன் ஆக்கியிருந்தாள்.. அதுதான் நிற்பேனா? என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தது.

 

“ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வா காஃபி குடிக்கலாம்” என்றவனின் வார்த்தைக்கு சரியென்று தலையசைத்ததோடு சரி, வேறெதுவும் பேசாதவளாய்  வாஷ்ரூமினுள் நுழைந்திருந்தாள்.

 

காலை நேரக் குளுமை மட்டுமின்றி அந்த இடமே சற்று பனிப்போர்வைக்குள் அடங்கியிருப்பதாகத்தான் பட்டது அவளுக்கு. கம்ஃபர்டரினுள் இருந்த பொழுது பெரிதாக ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.. இப்பொழுதுதான் மெல்ல மெல்ல குளிர் தனது மென்கரங்களால் அவளை  தழுவிக்கொண்டிருந்தது.

 

குளிர்ந்த நீரை முகத்தில் அடித்தவளினுள் சில்லென பரவியது குளிர். அவளது பார்வை துழாவியதில்.. அந்த சாக்லெட் நிற துவாலையில் வந்து நின்றது.. சொல்லாமலேயே புரிந்தது அது அவளுக்காகவென்று. 

 

அதில் முகம் துடைத்தவள் வெளியேற அவளுக்கெனவே அந்த மேசையின்மேல் இருந்த நேவி ப்ளூ நிற கோப்பைகளிரண்டும் சிறு மேகமூட்டத்தை தாங்கி நின்றன..

அவளுடைய ப்ளாக் காஃபியை  எடுத்துக் கொடுத்த அரணோ தானும் ஒன்றை கையிலேந்தியவனாய் அமர்ந்திருந்தான்.

 

மௌனமாய் பருகியவளினுள்தான் எத்தனைப் போராட்டம். ஆனால் எதற்குமே செவி சாய்க்காதவளாய் கையிலிருந்த காஃபிதான் முக்கியம் என்பதுபோல தனது முழுக்கவனத்தையும் அதனிடம் திருப்பியிருந்தாள்.

 

அரணின் பார்வை அடிக்கடி தன்னை தீண்டிச் செல்வதை உணர்ந்தும் அதை உணராத பாவனை ஒன்றுடன் இருந்தாள் ஆஹிரி.

 

அரண் தனக்காகவே இரவு முழுதும் தன்னறையிலேயே இருந்திருக்கிறான் என்று புரியத்தான் செய்தது அவளுக்கு. அன்றும் இதேபோலத்தானே தான் விழிக்கும் பொழுது அமர்ந்திருந்தான்.

 

குடித்து முடித்தவள் கோப்பையை மேசையில் வைக்க அதற்காகவே காத்திருந்தவன்போல..

 

“இங்க வா ஆரி” என்றுவிட்டு அவ்வறையில் சுவரோடு சுவராய் நின்ற மர கப்போர்டிடம் சென்றான். 

அணிந்திருந்த  பேண்ட் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்தவன் அதன் கீழே கிட்டத்தட்ட ட்ராயரைப்போல இருந்ததில் சாவியை செருகினான். அது திறந்துக்கொள்ள அந்த வெள்ளி நிற கைப்பிடியை பிடித்து இழுத்தவனோ இவளிடம்..

 

“இப்போதைக்கு இத அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ ஆரிமா..”என்றவன் அவளது பார்வையை உணர்ந்தவனாய்..

 

“என் சிஸ்டரோடதுதான்டா. அவ்வளவா யூஸ் செய்யாத ட்ரெஸஸ்.. இங்க எப்பாவதுதான் வருவோம்..” என்றவனின் முகபாவமே சொல்லியது பழைய  நினைவுகள் என..

 

“எல்லாமே ஸ்கூல் காலேஜ் டைமோடதுதான் இதுல..சோ  ஓரளவு கரக்டாவே ஃபிட்டாகும்..” என்றவனின் வார்த்தைகளை முதலில் சரியாய் கவனியாதவள் பின்னர் அவனது கண்களில் வழிந்தோடிய கேலியில் பல்லைக் கடித்தாள்.

 

“ஓகே ஓகே! கூல்!” என்று சமாதான முயற்சியில் இறங்கியவனை கண்டுக் கொள்ளாதவளாய்.

 

“உனக்கு சிஸ்டர் இருக்காங்களா அரண்?” என்றாள் கேள்வியாய்.

 

“அக்கா” என்றிருந்தான்.

 

“ஓஹ்..” என்றதோடு சரி அதற்குபின் அவள் வேறெந்தவித கேள்வியும் எழுப்பாமல் போகவே தோள்களை குழுக்கியவனாய் அந்த ட்ராயரை அடைத்துவிட்டு நிமிர அந்த கைப்பிடியில் அவனது முழங்கை மோதிய வேகத்தில் முகத்தில் வலியின் சாயலென்றால் ஆஹிரியிடமோ பதற்றமே!

 

நேற்றுதான் கட்டுப்போட்டிருந்தது அதே கையில் அடி என்றால்? அதுவும் பட்ட வேகத்தில் காயத்திலிருந்து இரத்தம் கசிவதுபோலிருக்க அதில் பதறியவளாய்..

அவன் கையை பற்றி தன்னிடம் திருப்பியிருந்தாள்.

 

“கைய இங்க காட்டு.. காட்டு அரண்!” என்று சற்று அதட்டலாகவே பிடித்து இழுத்தவளின் பார்வையிலோ இரத்த கசிவுபட.. விடுவிடுவென அவ்வறையில் இருந்த மற்றொரு ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை தூக்கி வந்திருந்தாள்.

 

‘நல்லவேளை! இங்க ரூமுக்கு ஒன்னு இருக்கும்போல..’

 

காட்டனால் இரத்தத்தை துடைத்துக் கொண்டிருந்தவளையே கவனித்திருந்தவனோ திடீரென..

 

“போச்சுடா!!” என்றான் கொஞ்சம் சத்தமாகவே.

 

அவனது குரலில், “என்ன?” என்றவள் பார்த்திருக்க  அவனோ

 

“உனக்கும் அது வந்துருச்சு!” என்றான் தலையும் இல்லாமல் வாலுமில்லாமல்.

 

“எது?” என்றவளின் சுழித்த புருவத்தை தனது மறுக்கரத்தால் நீவியவன்..

 

“அதான் ஸ்டாக்ஹோம் ஸிண்ட்ரோம் (Stockholm syndrome)” என்றவனிலேயே அவளது பார்வை சில கணங்கள் படிந்து பின் மீண்டன.

 

“அப்படினா..” என்றுத் தொடங்கியவனை தடுத்தது அவளது குரல்.

 

பார்வையை சற்றும் நிமிர்த்தாமல், “தெரியும்!” என்றுவிட அரணோ

 

“என்ன தெரியும்??” என்றான் கேள்வியாய்.

இவன் தன்னை பேச்சிற்குள் இழுக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

 

“ கடத்தினவங்க மேலயே ஸாஃப்ட் கார்னர் வர்றது..”என்றவள் அத்தோடு நிறுத்திவிட..

 

“ஸோ.. நீ அக்ஸப்ட் பண்ற?” என்றவன் கேட்க காட்டனை அங்கிருந்த குப்பைக் கூடையினுள் போட்டவளோ..

 

“அரண் ப்ளீஸ்! இந்த காதல் ட்ராமாவ இத்தோட நிறுத்திக்கலாம்..” என்றவள் எழுந்து கொள்ள அவளது வார்த்தைகளினால் ஏற்பட்ட  மற்றவனின் முகமாறுதலை கவனித்திருக்கவில்லை அவள்.

 

ஓரெட்டு எடுத்து வைத்தவளின் கைப்பற்றியவன் அவளை தன்புறம் திருப்ப ஏற்கனவே பாதி அவிழ்ந்து நின்ற மெஸ்ஸி பன் முழுதும் அவிந்திருந்தது அவள் திரும்பிய வேகத்தில்.

கப்போர்டில் சாய்ந்து நின்றவளின் விழிகளையே உற்று நோக்கியவனின் வலக்கரம் அவளது இடது  கையை இறுகப் பிடித்திருக்க  தன் வலக்கையால் அவன் கரத்தை விலக்க முயன்றவளோ, “அரண் என்ன பண்ற?!” என்றாள் அடிக்குரலில்.

 

“இங்க பாரு ஆஹிரி!” என்றவனின் குரலில் தன் பார்வையை அவள் அவன்புறம் நிமிர்த்த அவளையே விழியெடுக்காமல் பார்த்திருந்தவனோ,

 

“என் கண்ண பாரு ஆரி! நான் தப்பானவன்னு தோணுதா?” என்க  அவளும் அவனையேதான் பார்த்திருந்தாள்.

 

இதற்கு என்ன பதில் உரைப்பதென்று அவளுக்குத் தெரியவில்லை.. வார்த்தைகளை தேடத் துணியாது அவள் அமைதி காக்க. அவளது கூர்பார்வையின் செய்தி உணர்ந்தும் உணராதவனாய் அரண்.

 

அவன் விழிகள் தாங்கி நிற்கும் வினாக்களின் விடைகளுக்குதான் அவளிடத்தில் பஞ்சம்.

 

என்ன சொல்ல ஏது சொல்லவென்று புரியாமல்.. கொஞ்சநஞ்ச வார்த்தைகளையும் மறந்து மரத்துவிட்டதைப்போல நாவெழ மறுத்தது அவளுக்கு. ஆனால் ஏனோ விழிகளிரண்டும் தாழ மறுத்து நிமிர்ந்தே நோக்கியது அவனது பார்வையை..!!

 

இவன் தப்பானவனா ஆரி? என்று அவளுள் மறுபடியும் எழுந்தது அதே கேள்வி அவளை குழப்பும் கேள்வி..!!

 

தெரியலயே! இவன் தப்பானவன்னு நெனைச்சு ஒதுக்கவும் முடியல.. நல்லவன்னு  நம்பி நெருங்கவும் தோணல..

 

சரி!..ஹ்ம்.. இப்போ..இந்த ஸெகண்ட்.. என்ன..

 

என்றவளின் எண்ணங்கள் அனைத்தும் ஆற்று நீராய் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கையிலேயே தடைப்பட்டன மற்றவனின் ஆழ்ந்த அதே சமயம் மென்மையாய் ஒலித்த குரலில்..

 

“ஆரி..” என்று அழைத்தவனின் தேன் நிற விழிகளிரண்டும் அவளதிற்கு வெகு அருகில்.. எத்தனை கூர்மையாய் அவனது பார்வையை தனதால் எதிர்த்தபடி நின்றிருந்தாலும் ஏனோ அந்த அவனது விழிகளெனும் தேன் ஆழிக்குள் மெல்ல மெல்ல.. மிக மிருதுவாய்.. அமிழ்வதைப்போல் ஒரு உணர்வு..!!

 

ஆரி என்று அழைத்தவனுக்கு பதிலாய் அவள் பார்வை இருக்க அவனோ..

 

“இப்போ..இந்த ஸெகண்ட்.. நான் தப்பானவன்னு தோணுதா??” என்று வினவ  ஆஹிரியினுள்ளோ சிறியளவிலான அதிர்வு ஒன்று எழுந்து அமிழ்ந்தது.

 

அவளும் அதைப்பற்றித்தானே சிந்தித்திருந்தாள்.  அவனது கேள்வியில் என்ன நினைத்தாளோ.. அவளுயரத்திற்கு ஏற்றார்போல் குனிந்து நின்றவனை அணைத்திருந்தாள்.

 

அவளது திடீர் செயலில் அதிர்ந்தவனை அணைத்திருந்தவள் பின் அவனை தன் உயரத்திற்கு வாகாய் வர வைக்க முயன்றவளாய் அரண் அணிந்திருந்த  சாம்பல் நிற முழுக்கை டீ-ஷர்டின் மேற்பகுதியின் காலருக்கு அருகில் இருந்த துணி இப்பொழுது  அவளது உள்ளங்கைக்குள் சிக்கியிருந்தது சில நொடிகளுக்கு. அவனை இன்னும் கீழே குனியுமாறு இழுத்தவள் அந்த உயரம் போதாமல் கால் கட்டை விரல்கள் இரண்டையும்  நிலத்தில் ஊன்றி பாதங்களை உயர்த்தியிருந்தாள்.

 

சற்றும் சிந்திக்காமல் அவன் கன்னத்தில் பதிந்தது அவளிதழ்..!!

 

மென்மையாய் பதிந்து விலகிய இதழின் மொழியில் மௌனமே நிலவியது இருவரிடத்திலும்.

 

மெல்லிதழொற்றல் ஒன்றை பரிசளித்தவளோ விலகியவளாய்.. கீழே கிடந்த ஃபர்ஸ்ட் எய்ட் டப்பாவை கையிலெடுத்தவளாக அவனை கடந்துச் சென்றாள் அவ்வறையின் மற்றொரு மூலைக்கு.

 

அரணின் பார்வை அவளையே தொடர அவளோ மனதில் மற்றொரு போராட்டத்திற்கான வித்திட்டிருந்தாள்.

 

என்ன ஆரி இப்படி பண்ணிட்ட? இப்ப அரண் என்ன நினைப்பான்? என்று தொடங்கியது பின்.. இல்லையே நான் பண்ணது ஒன்னும் எனக்கு தப்பா தெரியலையே! அப்படி தப்பா நினைக்கறளவுக்கு என்ன பண்ணிட்டேன்? அந்த ஸெகண்ட் எனக்கு என்ன தோணுச்சோ அததானே செஞ்சேன்?! இதுல  தப்பா எதுவுமில்லையே?! முத்தம் அன்பின் வெளிப்பாடுதானே!? இது காதலா இருக்கனும்ங்கற கட்டாயமில்லையே!?

 

என் காயத்துக்கு கட்டுபோட்டதுக்காக இருக்கலாம்.. என்ன பாம்புகிட்டருந்து காப்பாத்துனதுக்காக..? இல்ல நான் ஹாலூஸிநேட் ஆனபோது தோள் சாச்சி ஆறுதலா இருந்ததுக்காக இருக்கலாம்.. அன்னைக்கு நைட் முழுக்க என் பக்கத்திலேயே இருந்தது.. அடுத்த நாளே ரூம் மாத்தினது.. இல்ல இப்போ.. இன்னைக்கும்.. என் ப்ராப்ளம் புரிஞ்சு எனக்காக இங்க உங்காந்து இருந்ததுக்காகவும் இருக்கலாம்.. இல்லன்னா இத்தனை பிரச்சனைலயும் உனக்கு இந்த கொலுசு பிடிக்குமே ஆரினு.. எடுத்து நீட்டினானே!?  என்றவளின் கண்முன் அவன் அவளது கொலுசை எடுத்து நீட்டியதே வலம் வர தானாய் எழுந்தது நிம்மதியுணர்வும் சிறு கீற்றாய் இதழோரப் புன்னகையும்..!!

 

கையில் இருந்த டப்பாவில் இருந்து எட்டிப்பார்த்த மாத்திரை பட்டையை கண்டவளின் முகம்  முதலில் குழப்பமாய் சுருங்கி பின் ஒரு முடிவுடன் தெளிந்தது.

 

எடுத்து வந்ததுபோலவே அச்சிறு முக்காலியை இழுத்துப் போட்டவள் அதில் ஏறி சற்று எக்கி நின்றவளாய் வைக்க முயல  அந்த முக்காலியோ ‘கடக்’ என்ற சத்தமொன்றை எழுப்பியவாறு சரியத்தொடங்கியது.

 

அவளையே கவனித்திருந்தவனோ அவள் எக்கி நின்றதுமே அவளிடம் விரைய முக்காலி சரியவும் அவள் கீழே விழாதவண்ணம் கைகளில் ஏந்தியிருந்தான்.

 

வசதியாய் மெத்தையில் அமர வைத்தவன்.. “என்னடா? கவனமா இருக்க வேணாமா?” என அவளோ எதுவும் பேசாமல் அமைதிகாத்தாள்.

 

அவளை மெத்தையில் அமர வைத்தவன்  அவளுக்கு முன்னால் தரையில் கால்களை மடக்கியவனாய் முழந்தாளிட்டு அமர்ந்திருந்தான். பேசிக்கொண்டிருந்தவனுக்கு எதிர்புறத்திலிருந்து எந்தவித பதிலும் வராமல் போகவே பார்வையை உயர்த்தியிருந்தான் கேள்வியாய்.

 

“இப்படியே..அரணா.. என்கூடவே இருந்துர முடியும்னு நினைக்கறியா?” என்றவளின் ஆழ்ந்த குரலின் பொருளை உணர்ந்தவனோ மௌனமானான்.

 

பிறகு பெருமூச்சொன்றை வெளியிட்டவனாய், “இருப்பேன்..இருக்கறவர..” என்றான் அவளையே பார்த்து.

 

கேட்டிருந்த வார்த்தைகளின் அர்த்தம் மெதுவாகவே அதன் தாக்கத்தை அவளுள் ஏற்படுத்த சிலீர் என்று பரவிய உணர்வில் பதிலேதும் சொல்லாமல் மௌனமானாள்.

 

தாமதமாவதை உணர்ந்தவளாக எழுந்துக்கொண்டவள், “குளிச்சிட்டு வந்திடறேன்” என்றுவிட்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டாள்.

 

குளித்து முடித்தப் பிறகே அவளை குளிர் பிடித்து ஆட்டியது.  வான் நீலத்திலான Ankle grazer-உம் கறுப்பு நிற டீஷர்ட்டுமாய் குளிரில் வெடவெடத்தபடி வெளியில் வந்தவளின் பார்வையில் அரண் விழவே இல்லை.. மாறாய் மெத்தையில் கிடந்த சிவப்பு நிற ஹூடட் ஸ்வெட்ஷர்ட்  கவனத்தை கவர.. அதை கையில் எடுத்தவளின் இதழ் தாமாய் முணுமுணுத்தன..

 

“அரண்..” என்று சிறு புன்னகை பூக்க.

 

அவளுக்கு ரொம்பவே பெரிய சைஸ்தான் என்றாலும் குளிருக்கு இதமாய் அவளை தழுவி நின்றது அந்த ஸ்வெட் ஷர்ட்.  அதற்கு தோதாய்  ட்ராயர் அருகில் அந்த வெள்ளை நிற ஸ்நீக்கர்ஸ்!!

படிகளில் இறங்கியவளின் கவனம் டேபிளில் படர்ந்தது. அரணும் வதனும் சமையலில் இறங்கியிருந்தனர் என்பது அவளது நாசியை நிறைத்த மணமும் அடுக்களையில் இருந்து  லேசாய் எழுந்த ஆவியும் பறைசாற்ற

 

“வரலாமா..?” என்றக் கேள்வியுடன் அடுக்களைக்குள் நுழைந்தாள்.

 

“வரலாமே!..” என்று திரும்பி பதிலளித்துவிட்டு மறுபடியும் பானில் கவனமானான் அரண்.

 

“ஃபை மினிட்ஸ் ஆரி ரெடி ஆகிடும். நீ உக்காரு” என்ற அரணிடம் தலையசைத்தவளோ சாத்வதனிடம் திரும்பி,

 

“நான் எதாவது செய்யவா?” என்று கேட்க அவனோ

 

“உங்களுக்கு சமைக்க தெரியுமா?”என்று பதிலுக்கு கேட்டிருந்தான்.

 சாத்வதனின் கேள்விக்கு இல்லை என்பதாய் தலையாட்டியவள்..

 

“சர்வைவ் பண்ற அளவுக்கு சமைக்க தெரியும்.. அத தவிர?” என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே இடைவெட்டினான் அரண்.

 

“எதுவும் இல்ல. முடிஞ்சாச்சு! நீங்க போய் உக்காருங்க நான் எடுத்துட்டு வரேன்” என்றுவிட  மூவருமே ஒவ்வொன்றாய் எடுத்துச் சென்றனர் மேசைக்கு.

 

அரணின் கை பக்குவத்தில் பாஸ்தாவும் இன்னும் பிற வகைகளும் அதனுடன் பழச்சாறுமென வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தனர் மூவரும்.

 

முதல் வாய் உண்டதுமே ஆஹிரியின் கண்கள் விரிந்த விதத்திலேயே புரிந்துவிட்டது உணவின் சுவை.

 

“அரணுக்கு குக்கிங்ல இண்ட்ரெஸ்ட் அதிகமோ?” என்றவளின் கேள்வியில் புன்னகைத்தவனோ

 

“அப்படியில்ல.. நீ சொன்ன மாதிரிதான்! சர்வைவ் பண்ற அளவுக்கு சமைப்பேன்.. பட் அதுவும் கொஞ்சம் டேஸ்ட்டா இருக்கனும்னு எதிர்பார்ப்பேன் அவளோதான்!” என்றிருந்தான்.

 

“வாட் எவர்! ரொம்பவே டேஸ்ட்டா இருக்கு” என்றுவிட்டு உணவு உண்பவளையே பார்த்திருந்த சாத்வதனுக்கு அவளுக்கும் துஜாவுக்குமான வித்தியாசங்களே கருத்தில் பதிந்தன..

 

கோதுமை நிறத்தில் சராசரி உயரத்தில் இடையை தாண்டி நிற்கும் நீளமான கூந்தலுமாய் இருக்கும் துஜாவுக்கும்.. வெளுத்த தேகத்தில் சராசரிக்கும் குறைந்த உயரத்தில் முதுகில் புரளும் கூந்தலுடன் வலம் வரும் ஆஹிரிக்கும்தான் எத்தனை வித்தியாசங்கள்!??

 

அவள் அணிந்திருந்த சிவப்பு நிற ஸ்வெட் ஷர்ட் வேறு அவளது  தொடைவரை நீண்டு நின்றது.

 

‘இவங்க ட்வெண்ட்டி ப்ளஸ்னா  நம்ப முடியாதுதான்..’

 

உண்டு முடித்தவர்கள் பாத்திரங்களை எடுத்துச் செல்ல தன் தட்டை கழுவத் தொடங்கியவளின் பின்னிருந்த அரணோ,

 

“அத வச்சிடு ஆரி, நான் பாத்துக்கறேன்” என்றிருக்க அதை முழுமூச்சாய் மறுத்தவளோ..

 

“எனக்கு குக்கிங்தான் அவ்வளவா தெரியாது அரண்.. இதாவது பண்றேன்!” என்றுவிட அதற்குமேல் அவனும் அவளை கட்டாயப்படுத்தவில்லை.

 

“உன்னிஷ்டம்!” என்று பாத்திரத்தை போட்டுவிட்டாலும் அடுக்களையினுள்ளேயே காத்திருந்தான் அவள் முடிக்கும்வரை.

 

கைகளிரண்டையும் துடைத்துவிட்டு திரும்பிய ஆஹிரியோ,

“நான் ஒன்னும் உன் கிட்ச்சனா தூக்கிட்டு போயிர மாட்டேன் அரண்!”என்றாள் கடுப்பாக

 

“செஞ்சாலும் செஞ்சிருவ!” என்று பதிலுரைத்தைவனைப் பார்த்து  முன்னே நடந்திருந்தவள் பட்டென திரும்ப அவளது  பார்வையில் அவனோ,

“வனமோஹினி..” என்றான் கண்சிமிட்டி

 

அவனையே  வெறித்துப்பார்த்தவளிடம் உதட்டைப்  பிதுக்கி கைகளிரண்டையும் தூக்கியென ‘எனக்கெதுவும் தெரியாது!’ என்ற பாவனையில் அரண் நின்றிருக்க ஆஹிரியோ இடவலமாய் தலையாட்டி அங்கிருந்து அகன்றிருந்தாள்.

 

திருப்பிக்கொண்டு சென்றவளின் புன்னகையை உணர்ந்தவனின் இதழ்களும் மலர்ந்தன.

சிற்சிறு பேச்சுக்களுடன் அன்றைய நாளின் பாதி நேரம் இதமாகவே கழிந்திருந்தன மூவருக்கும்.

 

சீக்கிரமே சாத்வதன் எழுந்து வழக்கம்போல அவனறைக்குள் சென்று அடைந்துவிட மற்ற இருவரும் அவரவர் அறைக்குச் சென்றிருந்தனர்.

 

மாலை நேரத்தின் மணித்துளிகள் ஒவ்வொன்றும் நொடி முள்ளின் வேகத்தில் கடக்க இருள் படரத் தொடங்கியிருந்தது வானில்.

 

‘டொக் டொக்’ என்ற கதவு தட்டும் ஓசையில் கலைந்தவனாய் அரண் திரும்பிட கையிலிருந்த ட்ரேயில் ஆவி பறக்க, இரண்டு பௌல்களில் அளவாய் நிரப்பப்பட்டிருந்த  சூப்புடன் ஆஹிரி நின்றிருந்தாள்.

 

“வா ஆரி” என்றவனிடம் முறுவலித்தவள் ட்ரேயை மேசையின்மேல் வைத்துவிட்டு அவனிடம் ஒரு பௌலை கொடுத்தவளாய்த் தானும் ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

 

“வதன் செஞ்சது!” என்ற தகவலுடன்.

 

“ஓ…”என்று தலையசைத்தவனிடம்,

 

“நேத்து தொரத்துனவங்க யாருனு தெரிஞ்சிதா?” என்று தொடங்கினாள்.

 

“பெருசா எதுவும் இல்ல ஆரி! அவங்கெல்லாம் வெறும்..ஏஜெண்ஸிக்கு வேலை செய்றவங்கதான்! யாரோ ஹயர் பண்ணிருக்காங்க..” என்று சொல்லிக் கொண்டேப் போனவனை தடுத்து நிறுத்தியது ஆஹிரியின் சந்தேகக் குரல்..

 

“ஏஜெண்ஸியா??” என்றவளின் கேள்வியில் அவளுக்கு நேரெதிரில் அமர்ந்திருந்தவனோ,

 

“ஆமா! ஏஜெண்ஸி. எப்படி மத்த சாதாரண விஷயங்களுக்கெல்லாம் ஏஜெண்ஸி.. ஏஜெண்ட்ஸ்லாம் இருக்காங்களோ..அதே மாதிரிதான் இவங்களும். என்ன.. மத்தவங்கள போல ஓபனா இருக்காது.  யாருக்கு செய்யறோம் எதுக்காக செய்யறோம்லாம் தெரியாது இவங்களுக்கு.. அவங்க க்ளையண்ட்ஸ் கேக்றத செஞ்சுக் கொடுக்கறதுதான் வேலை.. “

 

“அப்படினா..”

 

“இந்த கூலிப்படைனுலாம் சொல்றாங்கல்ல.. இது கொஞ்சம் ஹை டெக்னு வச்சுக்கோயேன்!” என்றான் சாதாரணமாய். ஆனால் கேட்டிருந்தவளுக்குதான் அதை அத்தனை சாதாரணமாய் எடுத்துக் கொள்ள இயலவில்லை.

 

தன்னுயிரின்மேல் யாருக்கு இத்தனை ஆசை?? என்ற கேள்வியே அவளை உலுக்கியெடுத்தது.

 

தன் சிந்தனைகளுள் அமிழத்தொடங்கியவளின் கவனம் எதிரில் இருப்பவனால் கலைந்தன..

 

அரண் தலையை உலுக்கிக் கொண்டிருந்தான்..கண்களை கசக்கியவனாய்  சுற்றத்தில் கவனத்தை பதிக்க முயன்று கொஞ்சம் கொஞ்சமாய்  தோற்றுக் கொண்டிருந்தான்.

 

அவன் தன்னுணர்வை இழந்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்த உடனே கையிலிருந்த பௌலை கீழே வைத்தவளாய் அவனிடம் விரைந்தவளோ அவனை நேராக அமர வைத்தாள் முதலில்.

அவனது கைகளை பின்னால் இருக்கையுடன் சேர்த்து சற்று தளர்வாகவே கட்டினாள்.

அவனது காதோரம் குனிந்து கட்டிக்கொண்டிருந்தவளோ..

“தப்பானவன் கடத்தற பொண்ணோட தோள்ல மொகத்தப் புதைச்சு ஸாரி சொல்லமாட்டான் அரண்!”என்றாள் அழுத்தமாய்.

 

“ஆரி..?” என்றவனின் தெளிவற்ற குரலில் வாசலையும் அவனையும் மாறி மாறி பார்த்து நின்றவளோ

 

“எனக்கு வேற வழி தெரியல.. அம் ஸாரி அரண்” என்றவளாய் அவ்வறையிலிருந்து வெளியேறினாள்.