Aahiri-4

அத்தியாயம்4

 

புதுவரவே புதிர் விடையாய்..

கண்ணெதிரே மெய்யும்..

அதை பிரித்தறியா நிலையும்..

மாயலோகமொன்றில் மயங்கித் தவித்தால்.. அவிழுமோ முடிச்சுக்கள்..!!?

நிலை தப்பும் மனதினில் நிரம்பும் நினைவுகள்..”

 

கதிரொளியின் கரிசனத்தில் கண்ணிமை பிரிய உடலிலோ அத்தனை சோர்வு!! ஏனோ அடித்துபோட்டதுபோல அத்தனை அயர்வாய் உணர்ந்தாள் ஆஹிரி.

 

மனதின் சோர்வு உடலிலும் பிரதிபலிப்பாய்..!!’

 

கைகால்களை அசைப்பதே ஆயாசமாய் இருக்க.. அதிக நேர உறக்கத்தினாலோ என்னவோ தலை வேறு விண்ணென தெறித்தது. நெற்றிப்பொட்டை நீவியவளாய் அவள் எழுந்தமர அப்பொழுதே கவனத்தில் விழுந்தது அரணின் ஆக்கிரமிப்பு அவ்வறையில்..!!

 

நேற்று அவள் அவனை எங்கு பார்த்தாளோ அதே மரத்தாலான சாய்வு நாற்காலியில் கையில் அந்த புத்தகத்துடன் அடைக்கலமாகியிருந்தான்போலும்..

 

உறங்கினானா?? அப்படியொன்னும் தெரியலையே.. ஆனா அந்த கண்ணு.. எவ்வளோ ஷார்ப் ஐஸ் இவனுக்கு!! என்றவளின் எண்ணவோட்டமிருக்க அப்படியே அமர்ந்தபடி தன் நினைவில் அமிழ்ந்திருந்தவளின் எழுந்தமர்ந்த அரவம் கேட்டு அரணின் கவனம் அவளிடம்..!!

 

என்ன மேடம் எழுந்தாச்சா??!!” என்றவனின் கையில் இருந்த புத்தகம் மறுகணமே மேசைக்கு தாவியிருந்தது.

 

மௌனமே மொழியாய் அவளிருக்க காலை நேர அமைதியை கெடுக்கும் எண்ணம் அவனுக்கும் இல்லைபோலும்..

 

சரிவா!!” என்றவனின் வலக்கரம் அவள் முன் நீண்டு நிற்க தன் இருக்கரங்களாலும் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவளின் பார்வையில் தொக்கி நின்ற கேள்விக்கு,

 

அதை கண்டும் காணாதவனாய், “அட வான்னு சொல்றேன்ல..” என்றவளின் கரம்பற்றி எழுப்ப கிட்டத்தட்ட ஐந்து வயது பிள்ளையை  ஒரு கையால் தூக்கியதுபோல் அவளது இடக்கரத்தை பற்றியவன் எழுப்பிய வேகமும் எதிர்ப்பார்த்திராத நிலையும் அவளை  மெத்தையில் இருந்து ஒரு துள்ளலுடன் இறக்கியிருந்தது. அதிர்ந்தவளின் பார்வையில்.. அவளுதட்டசைவை கண்டுவிட்டவனின் முகம் மாற,

 

என்ன சொன்ன??” என்றான்..கேள்வியா?? அதட்டலா??

 

அத்தனை நேரம் மௌனியாய் நின்றவளின் உள்ளுக்குள் கோபம் துளிர்த்த தருணம், “ம்ம்ம் மேல்ஷாவனிஸ்ட்னு சொன்னேன்!!”  என்ற வார்த்தைகளில் ஓர் நொடி அதிர்ந்து.. கண்டுக்கொள்ள முடியாத பாவனையில் மாறியவனின் விழிகளோ பின் கேலியாய் ஏறிட்டன..

 

அது என்ன?? அவன் கண்ணுல..என்னமோ..ஹர்ட் ஆனானா?? இல்ல குற்ற உணர்ச்சியா?? டக்குனு மாத்திட்டானே!? ஆனா..  கடத்தினவனுக்கு கில்ட் இருக்குமா என்ன??!!’ என்ற எண்ணவலையை அறுத்தெறிந்தது அவன் குரல்.

 

ஓஹ்..” என்றவன்  முன்னேற அவன் கையிக்குள் சிக்கியிருந்த தன் கரத்தை பிரிக்கும் எண்ணமே எழாதவள்போல அவனையே கவனித்திருந்தவளோ,

 

யெஸ்!! அதெப்படி உனக்கு அவ்வளோ நம்பிக்கை? விருப்பமில்லாத பொண்ண கடத்திட்டு வந்து காதலிக்க கட்டாயப்படுத்தினா??  அப்போ எனக்கு ரிஜெக்ட் பண்ற உரிமை இல்லையா?? சரியான மேல்ஷாவனிஸ்ட்!!” என்றவளின் குரல் தேய பாதி தூர பாலத்தை தாண்டியிருந்தனர் இருவரும்.

 

அவளது கடைசி வரிகளில் ஓர் நொடி சட்டென நின்றவன் இவள்புறம் திரும்பிட அந்த உயரமான உருவம் அவள்  உயரத்திற்கு குனிந்ததில் ஆஹிரியினுள் ஆயிரம் குதிரைகளின் ஓட்டம்!!

 

அவள் கண்களையே உற்று நோக்கியவன்உனக்கில்லாத உரிமை இல்லை!! யூ ஹேவ் ஆல் ரைட்ஸ் ஆஹிரி.  எதவேணாலும் ரிஜெக்ட் பண்ணலாம்!! ஆனா.. என்ன தவிர!!” என்றவனின் முகத்தில்தான் எத்தனை மாற்றங்கள்!?

 

தீவிரமாய் தொடங்கியவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அத்தனை அழுத்தமாய் வந்து விழ அந்த கடைசி வரி மட்டும் கேலிக்குரலில். ஆனால் அதே அழுத்தத்தில்!!

 

அவ்வளவுதான் என்பதுபோல திரும்பியவன் சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளின் கரத்தை விட்டிருக்கவில்லை!!  விறுவிறுவென நடந்தவன் அப்பெரிய மரவீட்டை அடைந்திருந்தான்.

 

அத்தனை நேரம் கதகதப்பை உணர்ந்த கரம்  அதை உணராமல் போகவே புரிந்தது அவன் அவள் கையை விடுவித்திருந்ததை..

 

அவள் இமைகளிரண்டும் சந்தேகத்தில் சுழிய அவளை உணர்ந்தவனாய் இடக்கரத்தால்  அவ்வறையின் மூலையில் நின்ற சிறிய கப்போடை சுட்டிக்காட்டியவனோஉன் ட்ரெஸ்லாம் இங்க மாத்தியாச்சு!! இனி இங்கயே தங்கலாம்!” என்றுவிட காரணம் புரியாமல் விழித்தவளுக்கு,  புரிந்த பின்னரோ  அதை அவள் முகம் பிரதிபலிக்கும் முன்,

 

எக்ஸ்க்யூஸ்மீ!” என்றவனாய் அங்கிருந்து வெளியேறியவன் விறுவிறுவென படியிறங்கும் ஒலி காற்றோடு கலந்து தேய்ந்தது..!!

 

அவள் வாசலில் இருந்து சில அடி தூரத்திலேயே நின்றிருக்க சிந்தனையாய் பார்வையை திருப்பியவளின் விழியில் விழுந்தது அந்த எதிர்வீட்டின் கண்ணாடி.

 

நொடிப்பொழுதில் நேற்றைய கலவரங்கள் நினைவிலாட அறை மாற்றத்தின் காரணம் விளங்கினாலும் குழப்பங்கள் குறைவதற்கு பதில் கூடத்தான் செய்தன.

 

 

ஸோஅந்த கண்ணாடிக்காகத்தான் இங்க ஷிஃப்ட்டா?? மீன் எனக்காக.. என்றெழுந்த எண்ணங்களூடே நேற்றைய அதிர்வலைகளை அவளுடல் உணர இப்பொழுதும் சிறு அதிர்வு தோன்றி மறைவதை அவளால் உணர முடிந்தது. அவனது கதகதப்பான அரவணைப்பையும்கூட!!

 

எத்தனை பாதுக்காப்பான அணைப்பது!! ஆறுதலான வருடலும்.. தலைகோதலும்.. இன்று தனக்காகவென்று சிந்தித்து மாற்றியதும்..

 

அப்போ அவன் தூங்கலையா??  என்று  தோன்றிய மறுகணமே அவன் அமர்ந்திருந்த விதம் கண்முன் வந்துச் செல்ல ,

 

அப்போ நான் எழறதுக்காகதான் காத்திருந்தானா?? என்றவளின் விழிகள் அவ்வறையை அளந்தது.

எதிரில் இருப்பதைபோல சிறியது இல்லை என்றாலும் ரொம்ப பெரிதாகவும் இல்லாமல் அளவாகவே இருந்தது!!  ஒருபக்கம் மெத்தை..  நடுவில் வெளியை பார்க்கும் வண்ணம் போடப்பட்டிருந்த பெரியளவிலான இருக்கை.. அது மட்டுமில்லாமல் இருவர் தங்குவதற்கு ஏற்றார்போல் எல்லா வசதிகளும் நிறைந்திருந்தது..

 

ஒவ்வொன்றாய் பார்த்திருந்தவளின் மனதினுள்ளோஇத எங்கயோ பார்த்திருக்கோமேஎன்ற எண்ணமே ஆழமாய்..!!

 

எங்க?? எங்க?? என்று தலையை பிடித்தவளாய் அந்த மெத்தையில் அமர்ந்து விட்டவளின்  மூளைக்குள் ஒரு திடீர் ஸ்பார்க்!!

 

யெஸ்!! இது..இது லவ் கேபின்!! அப்படிதான் அந்த போஸ்ட்ல போட்றுந்துச்சு.. என்றவளின்  எண்ண அலைகள் சில மாதங்கள் உள்நோக்கி இழுத்திருந்தது.

 

என்றோ ஒருநாள்.. இன்ஸ்டாக்ராமில் இலக்கற்று தேடியிருந்தப்பொழுது அவள் கவனத்தை ஈர்த்தது அந்த லவ் கேபின்களின் புகைப்படம்!! அதை தொடர்ந்த அதே ஹாஷ்டாகில் நிரம்பி நின்ற வெவ்வேறு வகையிலான லவ் கேபின் வகை மரவீடுகள். முக்கால்வாசி பெஸ்ட்  ஹனிமூன் ஸ்பாட்!! என்ற கேப்ஷன்களுடன்.. அவளை ஈர்த்திருந்தது அந்த வீடு!! எந்தளவென்றால் அதை ஃப்ரேமிட்டு அறையில் மாட்டுமளவு..!! ஆனால்..

 

ஆனா இது அதில்லையே?! அதே மாதிரி இருந்தாலும்..இது லவ் கேபின் இல்லையே!! இங்க சுத்தி ஆள்நடமாட்டமே இல்ல.. அப்போ.. எப்படி எனக்கு பிடிச்ச ஃபோட்டோ..

 

என்றோடிய எண்ணம் அதிர்ந்து நின்றது!! இது அவளுக்கு பிடித்த.. அந்த லவ் கேபினின் அதே இன்ட்டீரியரில்!! அப்படியென்றால்.. இவன்  அவளை தொடர்ந்துக்கொண்டிருந்தானா??  என்ற வினா எழுந்த நொடியே அமிழ்ந்திருந்தது. இல்ல அதுக்கு வாய்ப்பேயில்லையே!! என்று தலையசைத்தவளின் பார்வை சுற்றுமுற்றும் துழாவ அதில் அரண் சிக்காததால் அவ்வறையை அலசத்தொடங்கியிருந்தாள்.

 

படபடவென அறை முழுக்க அலைந்த விழிகளை கட்டுக்குள் வைத்தவளாய் அங்குமிங்குமாய்.. பொருட்கள் கலையாத கவனத்துடன் அலசினாள். எதை தேடுகிறோம் என்று தெரியாமலேயே.. அவள் தேடலிருக்க மேசையின் மேல்புறத்தில் வினோதமாய் நீண்டிருந்த கோட்டை வருடியவள் பின் அழுத்தினாள். அவள் அதை அழுத்த அழுத்த அது   நகருவதுபோலிருக்க இன்னும் அழுத்தியவளாய் அதை இடப்பக்கமாய்  தள்ளினாள். திறந்துக்கொண்டது!

 

திறந்தவளின் கண்முன் மிளிரியது அந்த கைக்கு அடக்கமான பிஸ்டல்!!

பார்த்திருந்தவளின் முகத்தினிலோ சந்தேக ரேகைகளின் சங்கமம். இதே போலொரு..கிட்டத்தட்ட இதுவேதான்!! ஆனால் இதிலிருக்கும் அந்த ‘Y’ என்ற எழுத்தை தவிர்த்தால் இது அதுவேதான்!! அவள் வீட்டின் கபோர்டில் உறங்கிக் கொண்டிருக்கும் அதே பிஸ்டல்தான்.

 

புருவங்களின் மத்தியில் சிறு முடிச்சுடன் பார்த்திருந்தவளினுள் உறுதியானது ஒன்று!!

 

அவள் நினைத்ததை போல் இவன் சாதாரணன் இல்லை! பணத்துக்காக கடத்தவும் வாய்ப்பில்லை!! அவனது தோற்றம்.. இப்பொழுது இந்த பிஸ்டல்.. அப்போ அவள் கேள்விப்பட்டதில் பாதி உண்மை.. மீதி..??!!

 

அழுத்தமான காலடிகள் அவளை கலைத்த கணம் கையிலிருந்ததை உள்ளே வைத்தவள் விடுவிடுவென அதை இறுக மூடியவளாய் வந்து அதே மெத்தையில் அமர்ந்துவிட்டாள்.

 

கையில் சில கனிகளுடன் உள்நுழைந்தவனின் பார்வை ஓர்நொடி அவளை ஆராய்ச்சியாய் தழுவியதை அவள் உணர்ந்தும் தலை நிமிர்த்தியிருக்கவில்லை!!  கேள்வியாய் பார்த்திருந்தவனும் சிறு தோள் குலுக்கலுடன் உள்ளே சென்றுவிட்டான்.  கையில் ஒரு ஸ்மூத்தியுடனே வெளிப்பட்டான்.

 

அவள் முன் அவன் அதை நீட்டியிருக்க ஓரு பார்வை அவள் நிமிர்ந்து நோக்க அதை அவள் கைகளுக்குள் திணித்தவனோநம்பி குடிக்கலாம்!!” என்றுவிட  மற்றவளின் புருவம் ஏளனமாய் உயர்வதை கண்டுக்கொண்டதின் பலனாய்..

 

இந்த மூணு  நாள்ல செய்யாதத இப்ப செஞ்சிட மாட்டேன்!! நானொன்னும் அவ்வளோ கேவலமானவனில்ல!” என்றவன் அவள் முகமாறுதலைக் கண்டவனாய்.. “மான்ஸ்டர்என்றான் கேலியாய்.

 

ஆனால் அவன் கேலியெல்லாம் கவனிக்கும் நிலையிலா அவள்?!

 

மூணு நாளா?? என்ற அதிர்ச்சியே தலைதூக்கியது.

 

ஒரு நாள் முழுக்க மயக்கத்தில இருந்தஎன்றான் உணர்ச்சிகளை துடைத்த குரலில்.  

 

என்ன நினைத்தாளோ அவனையும் அந்த ஸ்மூத்தியையும் ஓர் பார்வை பார்த்தவள் பருக  தொடங்கியிருந்தாள்.

 

ஒரு நாள் முழுக்கவா?? அப்போ இது.. கடத்தப்பட்ட மூனாவது நாளா??!! தேடிட்டிருப்பாங்களா..!??  என்றோடிய எண்ணங்கள் ஒருபுறமிருக்க அவள் நாவை தீண்டி தொண்டைக்குழியில் வழுக்கிய ஸ்மூத்தி அவளது மூளைக்கு தீனிப்போட்டது. நிச்சயம் இது நல்ல கெட்டியான பாலில் செய்ததுதான். அப்படின்னா.. இந்த காட்டுக்குள்ள.. இவனுக்கு பால்..அதுவும் இவ்வளோ ஃப்ரெஷா எப்படி??

 

அப்போ இவனுக்கு வெளியுலக தொடர்பிருக்கா?? யாராவது வந்தாங்களா இல்ல.. இவனே போயிட்டு வந்தானா??!!  ஆனா கண்ணுக்கு எட்டின தூரம்வரைக்கும் அப்படி எதுவுமேஏன் மனிதர்களின் தடயமே இல்லையே..

 

பிசுபிசுவென்ற உடலினால் திடீரென நினைவு வந்தது. அமைதியாய் அமர்ந்திருந்தவளைக் கண்டவனோ சிறு புருவ நெளிவுடன், “என்ன வேணும்??” என்றிட அவன் வினவிய மறுகணம் அவள் கண்மணிகளிரண்டும் விரிந்து பின் சுருங்கின..

 

எப்படி புரிஞ்சிக்கிட்டான்??!! என்ற கேள்வியால்.

 

எனக்கு குளிக்கனும்என்றவளின் குரலோ முணுமுணுப்பாய்.

 

ஓஹ்…” என்றவன் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.

 

சரி வா!” என்றவன் முதல் வேலையாய் அவள் கையில் அடங்கியிருந்த தம்ளரை எடுத்துச் சென்று கழுவி வைத்தான்.

 

அவனிலேயே அவள் கவனம் நிறைந்து நிற்க வெளிப்பட்டவனின் முகத்திலோ கேள்வியாய் சிறு புன்னகை.

 

பட்டென அவள் முகம் திருப்பிவிட அவன் இதழ்களோ இம்முறை சற்று அகலமாகவே விரிந்தது.. அதை அவளால் உணர முடிந்தது.

 

ட்ரெஸ் எடுத்துக்க ஆஹிரிஎன்றவனின் குரலில் மறுக்கவும் முடியாமல் வேண்டா வெறுப்பாய் அந்த கப்போடில், முன்னடியில் துறுத்திக் கொண்டு நின்ற  அந்த வெள்ளை நிற உடையை உருவியவளாய்  வாசலில் காத்து நின்றவனிடம் விரைந்தாள்.

 

கதவை சாத்தியவனுடன் இணைந்துக்கொள்ள பின் இருவரும் அந்த அடர்வனத்தினுள் நடக்கலாயினர்.

 

தனக்கு முன்னும் இல்லாமல் பின்னுமில்லாமல் சரியாய் உடன் நடந்தவனிலேயே அவள் கவனம்!! அது அவன் வேண்டுமென்றே செய்கிறான் என்பதை அவள் இரண்டெட்டு முன்வைக்க அவனும் அதேபோல் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாதவனாய்.. எதோ இயல்பான ஒன்றைபோல் வரவே உறுதியானது.

 

நான் பேசாமலே புரிஞ்சிக்கறான்.. என்ன பாக்கமலயே கரெக்டா ஸ்டெப் எடுத்து வைக்கறான்.. எப்படி??

 

ஒருவேளை.. காணாம போன டைரிஸும்.. அந்த லவ் கேபினும்கூட ப்ரீப்ளாண்டா?? இவன் சொல்றது உண்மைதானா அப்போ??

 

இல்லையே! அதெப்படி

 

சிந்தனையில் தோய்ந்தவளது முகத்தினை கண்டவனின் கண்கள்  ஒருகணம் சுருங்க மறுகணமே அவளை கலைப்பவனாய்..

 

என்ன பேபி என்னயே வெறிச்சு வெறிச்சு பாக்கற??” என்றுவிட அதிர்ந்தவளின் பார்வை  சட்டென கோபத்தை பூசிக்கொள்ள  துடித்த தருணம் அவள் கைப்பற்றியவனோ அவர்கள் முன் விரிந்துக்கிடந்த காட்சியை சுட்டிக்காட்டியவனாய்  நீண்டு நின்று அவள் தேகத்தில் முத்தமிட காத்திருந்த செடிகளனைத்தையும் ஒதுக்கியபடி முன்னேறினான்.

 

சினமிக பார்த்திருந்தவளினுள்ளோ இனம்புரியா பரபரப்பு ஒன்று தாமாய் வந்து ஒட்டிக்கொண்டது.  அவள் செவிப்பறையை தீண்டிய ஓசையும் அவ்விடத்தை  அடையும் முன்பே.. நெருங்க எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் அவள் தேகத்தில் கூடிக்கொண்டே போன அந்த சில்லிடும் உணர்வுமாய் அவளை பரபரப்புறச்செய்ய அவள் விழிகளிலோ தேடலின் சாயல் பேராவலாய்..!!

 

நெருங்கிவிட்டதை உறுதி செய்த பேரோசையும் குளுமையுமாய் அவளை தாக்கிட பட்டென அவன்புறம் திரும்பியவளின் முகத்தில் பிரதிபலித்த உணர்வரலைகளை கண்டவனின் இதழிலோ சிறு முறுவல்..!!

 

அங்கே! என்பதாய் நீண்டவனின் கரத்தை அவள் விழிகள்  தொடரும் முன் அவளைவிட சற்று உயரமாய் இருந்த பாறையில் ஏறி நின்றவன் அவளையும் தூக்கி நிறுத்தியிருந்தான்.

 

உயர்ந்து நின்ற பாறையொன்றில் இருந்து பால்நதியொன்று பாய்ந்தோடும் காட்சி..!!  காய்ச்சிய பாலாய் வெண்நுரை தளும்ப தளும்ப நிலத்தை முட்டி வெள்ளி நீராய் ஓடும் அதிசயம்.. அத்தனை வேகமில்லை என்றாலும்கூட சிற்சிறு பாறைகளின்மேல்  முழுவேகத்தில் மோதி உடைந்து கரையும் அலை கூட அவளை ஈர்த்து இழுத்திட அருகில் நின்றவனெல்லாம்.. ஏன் அவளே அவள் நினைவில் இல்லை!! உள்ளம் முழுதும் பரவிய பரவசமொன்று ஆக்கிரமித்திட கையிலிருந்து நழுவிய துணி எப்படி பக்கத்து பாறையில் நீர்படியா இடத்தில் அடைக்கலமானது என்பது ஆச்சர்யமே!!

 

கைகளிரண்டையும் விரித்தவள் கண்களை மூடிய கணமே அத்தனை நேரம் அவளையே பார்த்திருந்தவனோ  அங்கிருந்து அகன்றிருந்தான்.

 

அடர்பச்சையிலான ஃப்ரேமிற்கு நடுவில் வெளீரென மிளிரும் வானமாய் காட்சியளித்தன, மரங்களுக்கு நடுவே அவள் கண்ட வானம்..!!

 

கண்களை இறுக மூடி ஆழ மூச்செடுத்தவளின் ஒவ்வொரு செல்லிலும் புத்துயிர் பரவல்!! உடல் மட்டுமின்றி உள்ளமும் அக்குளுமையை உணர்ந்திட விழிகளின் விளிம்பிலோ சிறுதுளி..!! அப்படியே கீழமர்ந்தவள் முன்பக்கமாய் குனிந்து கரையும் வெள்ளியில் கை நீட்ட முதல் முத்தமே அத்தனை இனிமையாய் பனிமழையொன்றால் அவளை நனைத்திருந்தது. அதை உணர்ந்தவளினுள்ளோ குழப்பங்களென்னும் சொல்லே மறைந்தாற்போலொரு மாயை!! நிர்மலமான மனதுடன் உள்ளிறங்கியவள் பொங்கியெழும் ஆசையுடன் அருவியில் ஐக்கியமாகியிருந்தாள்.

 

எத்தனை நாழி கழிந்ததோ.. நடுங்கும் உடலும் தந்தியடிக்கும் பற்களுமாய் நின்றாலும் அதையும் இரசிக்கத்தான் தோன்றியது மனது. 

 

வெகு நேரம் சென்றே சுற்றம் உணர வெளிபட்டவளின் உடலிலோ பனிக்காற்றின் ஸ்பரிசம். பாறையொன்றின்மேல் ஏறியமர்ந்த பின்னரே நினைவிலாடியதுஅரண் என்ற ஒருவன் அவளுடன் வந்தது. பாறையில் கிடந்த உடையை கையிலெடுத்தவளின் பார்வை அவனை தேட அப்பாறையிலிருந்து குதித்திறங்கியவளின் பார்வையில் அவன் தரிசனம். சற்று தூரம் தள்ளி நடந்து வந்துக் கொண்டிருந்தான். இவளைக்கண்டதும் அதே புன்னகையொன்றுடன் வந்தவனின் பார்வை பின் கேள்வியாய் அவளை நெருங்கியிருந்தது.

 

கிளம்பலாம்என்றவளிடம்

 

இப்படியேவா??” என்றவனின் சந்தேக குரலில் தன்னையே ஒரு முறை அவள் குனிந்து பார்த்துக்கொண்டாள்.

 

ஈரத்துணிடயுன்.. தலையில் இருந்து நீர்மணிகள் ஒவ்வொன்றாய் சொட்டியபடி இருந்தது.

 

இந்த குளிர்ல காய்ச்சல் வந்துரும்டாஎன்றவன் அவள் பார்வை சுற்றத்தில் சுழலுவதைக் கண்டவனாய்ஒன் ஸெக்!” என்று அவளை கடந்துச் சென்று  ஒரு முழுநிமிடத்திற்கு பின்னரே குரல் கொடுத்தான்.

 

இங்க வா ஆரிமாஎன்றவனின் குரலில் அவள் நகர இரு பாறைகள் ஒன்றோடு ஒன்றாய் ஒட்டி நிற்க அதற்கு பின்னால் நின்ற மரமும் மறைவாய்..!!

 

மாத்திட்டு வா!” என்றவன் அகன்றுவிட விடுவிடுவென உடை மாற்றியிருந்தாள். அப்பொழுதே அவள் கவனத்தில் பதிந்தது அந்த முழங்காலை கொஞ்சமே கொஞ்சம் தாண்டி நின்ற பொஹிமியன் ஃப்ராக்!

 

அங்குமிங்குமாய் நடந்திருவனின் செவியில் விழுந்தது அந்த சருகுகள் மிதிப்படும் ஓசை!!

 

விருட்டென திரும்பிய அவனது கூர்விழிகளோ மறுநொடியே கனிந்தது இரசனையில்..!!

 

அந்த முட்டிவரை நீண்டிருந்த வெள்ளை நிற ஃப்ராக்கும்.. வெற்றுப் பாதங்களும்.. அவள் கைகளை அழகாய் மறைத்து நின்ற லாண்ட்டர்ன் ஸ்லீவ்ஸும்.. தோள்களில் வழியும் ஈரக்கூந்தலுமாய் வந்தவளிலேயே அவன் விழிகளிரண்டும் ஃப்ரீஸ்!!

 

தன்னையே பார்த்திருந்தவனின் விழிகளை கண்டவளின் உள்ளுணர்வோ அடித்துரைத்தது.. அவ்விழிப்பார்வையில் இரசனையும்..கனிவும் மட்டுமே நிறைந்து நிற்க ஏனோ அவனை.. அந்த மான்ஸ்டராய்பார்க்க முடியவில்லை!! மனதினுள் குறித்துக் கொண்டாள்.

 

வனமோஹினி…’ என்றவனின் இதழ்களின் முணுமுணுப்பை கண்டுவிட்டவள்என்ன??” என்றாள் கேள்வியாய்.

 

மென்சிரிப்பொன்றுடன் தலையசைத்தவனோவனமோஹினிஎன்றான் உரக்கவே.

 

ஹான்! என்று பார்த்திருந்தவளுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்க அதை கண்டுக்கொண்டவனாய் அவள் மூக்கை  ஒற்றை விரலால் அழுத்தியவன்இந்த ட்ரெஸ்லஇங்க இப்படி பாக்க அப்படிதானிருக்கன்னு சொன்னேன்என்றான்  சின்ன சிரிப்புடன்.

 

இந்த அரண் புதியவன்!! அவனையே அவள் வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்க அத்தனை நேரம் இளகுவாய் இருந்த சூழ்நிலை நொடிப்பொழுதில் மாறியது.

 

 அங்குமிங்குமாய் அலைந்தவனின் விழியிலேயே இருவரினுள்ளம் வெவ்வேறு விதமாய் பதற்றம் தொற்றிக்கொள்ள அவள் கைப்பற்றி இழுத்தவனோ அவள் தோளை சுற்றி அணைத்தவனாய்போலாம்என்று அவளையும் இழுத்துக்கொண்டு விரைந்தான் வந்த வழியிலேயே.

 

மறுபடியும் அதே படபடப்பு!! உள்ளுக்குள் அட்ரினலின் அளவுக்கு அதிகமாகவே சுரந்ததுபோல் உணர்ந்தாள் ஆஹிரி.  ஏன்?? ஏன்?? என்று தொடங்கிய கேள்விகள்தான் அவளை படபடக்கச் செய்திருந்தன.. ஏனெனில் சற்று நேரமாகவே யாரோ தன்னை கண்கானிப்பதாய் ஒரு உணர்வு அவளுள் எழுந்திருந்தது.

 

சற்று தூரம் வந்துவிட்ட பின் அவன் மூச்சு சீராகிட அவளதுதான் பரிதாபகரமாய் ஏறியது!! தன் தோளை சுற்றியிருந்தவனின் கரத்தில் இருந்து அவன் முகத்திற்கு மாறியிருந்த அவளது பார்வை  எதிரில் அடர்ந்து வளர்ந்து நின்ற மரத்தின் பின்னால் கூர்மையாய் படிந்தது!

 

அங்க.. என்ன அது?? அந்த உருவம்..  துஜீ!!’ என்று அதிர்ந்த மென்குரலுடன் அணைத்திருந்த கரத்தை பட்டென தட்டி விடுவித்தவளாய் ஓடியிருந்தாள்.

 

எதிர்ப்பார்த்திராத அவளது இச்செயலில் அதிர்ந்தவனோ அடுத்த கணமே அவள் பின்னே ஓடினான். முன்தினம் அவனிடம் இருந்து தப்பும்பொழுது.. உயிருக்காக ஓடியப்பொழுதுக்கூட அவளிடம் இத்தனை வேகம் இருந்திருக்கவில்லை!! ஆனால் இன்றோ

 

அவளை எட்டிடவே சிரமமாய்..!!

 

இன்னொரு உயிருக்கான அவளது ஆன்மாவின் தேடல் அவளை இழுத்திருந்ததை அவனறிவானோ!?

 

மரத்தின் அருகில் சென்றவளோ அந்த மரத்தையே சுற்றி ஓடி தேடி களைத்தவளாய்.. துஜீ துஜீ என்ற முணுமுணுப்பான குரலோ துஜீஈஈ!! என்ற அலறலாய் முடிய அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டாள்.

 

ஒன்னுமில்ல.. ஒன்னுமில்ல ஆரிமா!” என்றவனது குரல்  தன்னிச்சையாய் வெளிவந்திருந்தது.

 

ஏன் என்ன என்று கேள்வியெழுப்பாமல்.. முதலில் அச்சூழ்நிலைக்கு தேவையான ஆறுதலை அளித்தவன் சோர்ந்து அமர்ந்திருந்தவளை தோளோடு சேர்த்தணைத்தவனாய் படியேறினான்.

 

அவள் நடக்கவே சிரமப்படுவதை அவனால் உணர முடிந்தது. கால்கள் இரண்டும் தொய்ந்து விழிகளிரண்டிலும் நிரம்பிய நீரும் விடாமல் முணுமுணுக்கும் உதடுகளுமாய் இருந்தவளை படுக்கையில் சாய்வாக அமர்த்தியவன் ஒரு தம்ளர் முழுக்க குளிர்ந்த நீருடன் வந்தான். அதை அவள் பருக அறுதலாய் பார்த்திருந்தவன் அவள் அரற்றல் மட்டுப்படவே,

 

துஜி யாரு ஆரி??” என்றான் கேள்வியாய்.

 

நடுங்கும் அவளுடல் அதிர்வை பிரதிபலிக்க ஆறுதலாய் அவள் தோளில் படிந்தது அவன் கரம்.

 

பொத்தென மெத்தையில் மல்லாக்க சரிந்தவளின் கண்கள் நீரால் நிறைய என் தங்கை..” என்றவளின் குரலில் அத்தனை நடுக்கம். இமை மூடியவளின் செயல் என்னவோ கண்ணீரை உள்ளிழுப்பதைபோலிருக்க அவளின் மனமோ கடந்த காலத்தில் எப்பொழுதோ அமிழ்ந்திருந்தது.