Aahiri-5

Aahiri-5

அத்தியாயம்5

 

புத்தகத்தின் வாசமாய் இழையோடும்

நட்பைவிட..

ஆழப்பதிந்துப்போன தாய்மையுணர்வில்

 தவிக்கும் ஒருத்தி..

தொண்டைக்குழியில் சிக்கும் உண்மைகளை

 உணராத நிலையில்..”

 

 

ஜே ஜே க்ரூப் ஆஃப் கம்பனீஸ்.. எதை எதையோ நினைத்து முன்னோர்களின் பெயரை இணைத்து குடும்பத் தொழிலுக்கு இப்பெயர் சூட்டிய விருபாட்சணன் தன் பேரன்களான ஜனார்த்தனனும் ஜீவரத்னமும் அவர் நட்டு வைத்த செடியை இத்தனை செழிப்பாய்  சிறப்பாய் வளர்க்க கூடுமென..  நினைத்திருப்பாரா..?!

 

ஜனார்த்தனன்.. ஜீவரத்னம்..

 

மூத்தவன் ஆள இளையவன் துணை நிற்க.. என்றெல்லாம் இல்லாமல் இருவரும் கைகோர்த்து நின்றனர். அண்ணனும் தம்பியும் மட்டுமின்றி அவர்கள் மனைவிமாரான நிரூபாவும் வகுளாவும்கூட..!!

 

ஜனார்த்தனின் பார்வையிலேயே புரிந்துக்கொள்ளும் ஜீவரத்னத்தை போலொரு தம்பி.  குணத்தில் வெள்ளந்தியான வகுளாவை தன் தங்கையாய் தாங்கும் நிரூபாவுமென அத்தனை ஆனந்தமான கூடு அது!!

 

அக்கூட்டின் முதல் முத்தாய் ஜனித்தாள் ஆஹிரி! ஜனார்த்தனன்நிரூபா தம்பதியின் மூத்தமகள் அது  மட்டுமின்றி அந்த குடும்பத்தின் மூத்த வாரிசாய்!! முதல்  பெண்குழந்தையாய்..!! அதனாலேயே பெரிய பாட்டியின் பெயரான ஆரபியை அவளுக்கு ஆஹிரி என சூட்டியிருந்தனர்.

 

ஆஹிரி ராகம் எத்தனை இனிமை தெரியுமாடா??” என்று அந்த கருணை ராகத்தை ஜனார்த்தனன் அடிக்கடி சிலாகித்து பேசியது இப்பொழுது நினைவிலாடியது ஆஹிரிக்கு.

 

அப்பா..’ என்ற சிறு முணுமுணுப்புடன்..

 

அவள் பிறந்த இரண்டு வருடங்களில் மீண்டும் இரு புது முத்துக்கள் அவர்களின் கூட்டில்!! அதுவும் ஒரே சமயத்தில் ஜனித்த இரு முத்துக்கள்.  வகுளாவும் நிரூபாவும்  ஒரே சமயத்தில் ஈன்றெடுத்த இரு பிள்ளைகள். அதில் நிரூபாவின் மகனான அதாட்சன் பிறந்த சில மாதங்களிலேயே உயிர் துறந்துவிட ரூபா தேறியெழுந்து மீள உதவியாய் நின்றது வகுளாவும்.. துஜி குட்டியுமே!!

 

மூத்த மகளுக்கு பெரிய பாட்டியின் பெயரென்றால் இளைய மகளுக்கு சின்ன பாட்டியின் பெயரான ஷியாமளாவை துளஜா என சூட்டியிருந்தனர். 

 

 ஒரே தங்கை என்றானதாலோ.. இல்லை துளஜாவின் குழந்தைத்தனமான குணத்தினாலோ என்னவோ ஆஹிரியினுள் தானாகவே அன்னையின் அன்பு துளிர்த்துவிடும் துஜியின்பால்.

 

இன்று நேற்றல்ல!! சிறுவயதிலிருந்தேஅம்மூக்கா!! அம்மூக்கா!!” என்று சிற்சிறு விஷயத்திற்கும் தன்னை தேடும் துஜியிடம் அக்காவாய் இருந்ததைவிட அன்னையாகத்தான் பல சமயம் இருந்திருக்கிறாள்.

 

இருபது வயதை கடந்தும் இன்னும் அதே பால்மணமாறாமல் இருக்கும் தங்கையின் அருகாமையை அவள் உள்ளம் தேடின.. அவளுக்கே உண்டான அந்த பிரத்யேக வாசமும்.. அவள் இவளை அணைக்கும் பொழுதெல்லாம் உள்ளெழும் தாய்மை உணர்வையும் அனுபவித்திட மனம் ஏங்கிட அவ்வேக்கங்கள் அனைத்தும் கண்ணீர்த்துளிகளாய் கரைந்தன ஆரியின் விழி விளிம்பில்

 

எத்தனை இன்பமான வாழ்க்கை..’

 

அம்மூக்கா!! அம்மூக்கா!!” என்று எதற்கெடுத்தாலும் ஓடி ஓடி வரும் துஜி அன்று அமைதியே திருவுருவாய் அவளறையின் கண்ணாடி வழியாக வெளியை வெறித்தபடியிருந்தது ஆஹிரியை புருவம் சுழிக்க வைத்தது.

 

அவளை கீழே முழுக்க தேடியும் காணாமல் போகவே மேலறைக்கு வந்திருந்தாள். துஜியின் இந்த அமைதி அவளை என்னவோ செய்திட எதாவது பிரச்சனையோ? என்ற பதட்டமே ஆரியினுள்.. ஒரு அக்காவாக.

 

அமர்ந்திருந்த தங்கையின் தோள் தொட்டாள், “துஜி..” என்ற அழைப்புடன்.

 

ஒரு கணம் அதிர்ந்து திரும்பியவளின் பார்வையில் திடுக்கிடல்! பின்னேஅம்மூக்கா!!” என்ற ஆசுவாசம் அவள் முகம் முழுக்க பரவிட மறுகணமே அமர்ந்த வாக்கிலேயே ஆஹிரியின் இடையில் கைகோர்த்து வயிற்றில் தலை சாய்த்துக்கொண்டாள்.

 

அவளது திடீர் செயலில் மனம் காரணம் தேடி பதறினாலும் தாமாகவே வலக்கை தங்கையின் தலையை அன்பாய் வருடியது.

 

துஜி.. இங்க பாரு!! என்னாச்சுடா??” என்றவளின் கேள்விக்கு மறுப்பான தலையசைப்பொன்றே மற்றவளின் பதிலாகிட.

 

தோண்டித் துருவும் மனமின்றி, “ அது சரி! இப்படியெல்லாம் பண்ணா.. தப்பிச்சிரலாம்னு நெனப்பா??” என்றாள் கிண்டலாய்.

 

தலை நிமிர்த்திய துஜியின் விழிகளில் கேள்விகள் பல தொக்கி நிற்க அவளெதிரே அமர்ந்த ஆஹிரியோ காதோர கூந்தலை ஒதுக்கியவளாய் சற்று அவள் முன் சாய்ந்து எனக்கு கிஃப்ட் எதுவும் கிடையாதா??” என்றாள் தீவிரமாய்.

 

அச்சோஹ்!’ என்று தன் தலையில் தட்டிக்கொண்ட துஜியோ எழுந்து விறுவிறுவென மெத்தையில் கிடந்த தன் பெட்டியிடம் விரைந்தாள்.

 

மறந்தே போயிட்டேன் அம்மூக்கா! உனக்குன்னே ஸ்பெஷலாபாதி ராத்திரி வரை உக்காந்து பண்ணேன் தெரியுமா? பாட்டிக்கூட திட்டிடுனாங்க..” என்றவளின் குரல் தேய

 

அச்சோ..” என்று தொடங்கிய ஆஹிரியை தடுத்தவளோ..

 

ஆனா, நான் கண்டுக்கவே இல்லையே!!” என்று கைவிரித்து உதட்டை பிதுக்கி  சிரித்தவளைக் காணக் காண ஏனோ ஆஹிரியினுள் வருகிறாள் அந்த பத்து வயது துளஜா.. அவள் அந்த பத்து வயதிலேயே நின்றுவிட்டதைபோலொரு எண்ணம்.. அதுதான் உண்மையும்கூட!

 

துளஜாவின் அதிகப்படியான அப்பாவித்தனமும் குழந்தைத்தனமும்கூட சில சமயம் வேறுவிதமான விமர்சனங்களுக்கு காரணமாகின. அதனாலேயோ என்னவோ ஜீவரத்னம் அவளை அவள் அம்மாவழி பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தார் கல்லூரி படிப்பிற்காய்.

 

எவ்வளவோ மறுத்துப் பார்த்தாள் ஆஹிரியும்.. அவரோமூணு வருஷமாவது அவ நிம்மதியா இருக்கட்டும்டா!! பாக்கறவங்கல்லாம் என்ன கொற என்ன கொறன்னு கேட்டு..  பாவம்டா அங்க படிப்ப நல்லபடியா முடிச்சிட்டு வரட்டுமே..”

 

சித்தப்பா.. துஜி குழந்தைத்தனமா இருக்கா..அவ்வளோதான் அவளுக்கு எந்த பிரச்சனையுமில்ல! ஷீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்பா!!” என்று தங்கைக்காய் போராடியவளின் கேசம் கலைத்தவரோ..

 

என் பொண்ணுக்கு ஒன்னுமில்லனு எனக்கும் தெரியும்டா ஆரிகண்ணா!! ஆனா அவ காதுபடவே  ஆட்டிஸமானு சிலர் பேசறத நான் விரும்பலடா.. கொஞ்ச காலத்துக்கு தானேடா! லீவுக்கு அவ இங்க வந்துரப்போறா..” என்று சமாதானமாய் பேசிச் சென்ற சித்தப்பாவிடம் அதற்குமேல் வாதம் செய்ய அவள் மனம் விரும்பவில்லை. காரணம் அவளும் பார்க்கிறாள்தானே! சிலரின் ஏளனப் பேச்சுக்களும்.. இனிப்பில் தொய்த்த வேப்பங்கொழுந்தாய்..!!

 

வகுளா சித்தியை நினைக்கவும் சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஒரே மகள் அதுவும் அத்தனை வருடம் கூடவே இருந்தவள்..  

 

முதலில் சங்கடமாய் இருந்தாலும் மெல்ல மெல்ல எல்லோரும் அச்சூழலுக்கு பழகிப்போனார்கள்.  ஆஹிரியின் மனம்தான் அடிக்கடி ஊட்டி பக்கம் பறந்துவிடும்.

 

அம்மூக்கா!! இங்க பாரு!”  என்றவளின் குரலில் இவள் கவனம் துஜியிடம் திரும்ப கையில் சிறிய அளவிலான மரப்பெட்டி ஒன்றுடன் நின்றிருந்தாள் துளஜா.

 

!!!” என்ற உற்சாகக் குரலுடன் அதை பெற்றுக்கொண்டவள் ஆவலாய் அதை திறக்க  சிகப்பு நிற ஸாட்டின் துணிக்கு நடுவிலிருந்து கண்சிமிட்டியது குட்டி ஆஹிரி!!

 

ஆம்! குட்டி ஆஹிரியேதான்!! துளஜாவின் கை வண்ணத்தில் கைக்கு அடக்கமாய்.. சிறிய அளவில் ஆஹிரியின் உருவத்தை ஒத்திருந்த பொம்மை!!  துஜியின் தனித்திறமை அது! மனதுக்கு மிக நெருக்கமானவர்களின் உருவத்தை மட்டும் பொம்மையாய் வடித்துவிடுவாள்.

 

தோள்களைத் தாண்டியும் இடையை தொடாமலும் நிற்கும் அவள் கூந்தலின் அடியிலும்  முன்னிச்சியிலும் புரளும் சுருள் உட்பட அத்தனை நேர்த்தியாய்..!! அது அவளின் அன்பின் அடியாழத்தை பிரதிபலிக்க பனிக்கும் கண்களை மறைத்தவளாய் இழுத்தணைத்துக் கொண்டாள் துஜியை.

 

பிடிச்சிருக்கா அம்மூ??” என்றவளின் கேள்வியில்ரொம்ம்ம்பஹ்!!” என்றவளின் இதழொற்றலே போதுமென்பதாய்.. அத்தனை நேரம் ஏதேதோ சிந்தனையில் முகம் வாட அமர்ந்திருந்தவளினுள்ளோ இப்பொழுது உற்சாகம் பொங்கியது.

 

துஜினா துஜிதான்!! எவ்வளோ அழகா இருக்கு தெரியுமா??” என்றதும் அதற்கு முகம்கொள்ளா ஆனந்தத்தில் துஜி புன்னகைத்ததும் இப்பொழுது  நினைத்தாலும் இனிமையாய்..!!

 

எல்லாம் ஒரேடியாய் போய்விட்டதே!! சில மாதங்களுக்கு முன் இதையெல்லாம் அவள் கற்பனைக்கூட செய்திருக்கவில்லையே!!

 

ஆரிமா! நவன் நல்ல பையன்டா! இந்த சின்ன வயசுலேயே பிஸ்னஸ இவ்வளோ முன்னுக்கு கொண்டு வந்துருக்காரு..டேலண்டட் கைடா! மரியாதையான பையன்..” என்று தனக்கு பார்க்கவிருக்கும் மாப்பிள்ளையாகப்பட்ட அந்த நவனை பற்றி தந்தை அத்தனை பெருமையாய் சொல்லியிருந்தார்.

 

ஏனோ அவரிடம் இவள்  சம்மதிக்க வேண்டுமே என்ற எண்ணம் திடமாய் எழுந்திருந்தது.

 

அவளோ தன் பிடியிலேயே நின்றிருந்தாள்இப்போ என்னப்பா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே நானும் காலூனிக்கறேனே.. ப்ளீஸ்பா!” என்னும் மகளை வற்புறுத்தவும் மனமில்லாமல்.. அதே சமயம் விட்டுவிடவும் முடியாமல்..

அந்த விவாதத்திற்கு அந்த நேரத்திற்கு இடைவேளை விட்டிருந்தார். 

அவரால் மகள் பக்கத்தின் நியாயத்தை புரிந்துக்கொள்ள முடிந்தாலும்  ஏனோ இப்பொழுதே இதை பேசியாக வேண்டுமென எழுந்த எண்ணத்தை அடக்க இயலவில்லை..

 

அந்த மாப்பிள்ளை பேரென்ன?? ஆஹ்! நவன்.. ஆனா ஃபுல் நேம்.. வேறெதுவோ ப்ச்!’

 

அவர் இவளிடம் இதை பற்றி பேசிய அடுத்த வாரமே அவள் வாழ்க்கை மட்டுமின்றி அக்குடும்பத்தின் நிலையே தலைகீழாய் புரண்டது.

 

அவள் கண்விழித்ததே மருத்துவமனையின் மெத்தையில்தான்!!

எழுந்த பின்னரே தெரியவந்தது அவள் ஒரு வாரம் முழுதும் கோமாவில் இருந்திருக்கிறாளென.. தந்தையை தேடினால்.. அவர் இன்னும் தீவிர சிகிச்சையில்..!!

 

அப்போ..துஜி??” என்ற குரலில் நிகழ் உலகிற்கு வந்தவள் இமை பிரித்தாள்.

 

அவ இறந்துட்டா!…” என்றவளின் வார்த்தையில் அரண் அதிர அவளோஅவ இறந்துட்டா!! அப்படிதான் சொல்றாங்க எல்லாரும்.. இல்ல.. இல்ல. என் துஜி சாகல!! துஜி சாகல அரண்!! எனக்கு தெரியும்!!” என்று கதறியவளை எப்படி சமாதானம் செய்ய??

 

ஆரிமா..” என்றுத் தொடங்கியவனிடம்அவ சாகல அரண்!! எனக்கு தெரியும்!!” என்க கேள்வியாய் உயர்ந்த அவன் விழிகளை கண்டவளோ கேன் ஃபீல்!! என் உள்ளுணர்வு பொய் சொல்லாது அரண்!! அவ உயிரோடதான் இருக்கா!!” என்று உரைத்தவளிலேயே அவன் கவனம் இருக்க..

 

எப்படியாச்சு??” என்றவனிடம்

 

ஆக்ஸிடென்ட்னு சொல்றாங்க…” என்றவள் நினைவுகளை தேடி கோர்க்க முயல்வது அப்பட்டமாய் அவள் முகத்தினில் பிரதிபலித்தது.

 

யார் சொன்னது??” என்று வினவியவனின் பார்வை கூர்மையாய்..!!

 

விட்டத்தையே வெறித்திருந்தவளோதெரியல..” என்றாள்.

 

அன்னைக்கு என்ன நடந்ததுச்சுனு ஏதாவது..” என்றவன் கேள்வியை முடித்திருக்ககூட இல்லை ஆஹிரியோ,

 

அய்யோ! ப்ளீஸ் ஸ்டாப் திஸ் அரண்!! எனக்கு எதுவுமே புரியல!! என்ன சுத்தி என்ன நடக்குது.. என்னால எதையுமே யோசிக்க முடியல!! தலை வெடிச்சிரும்போல இருக்கு!! பைத்தியம்பிடிக்கிற மாதிரி..”  என்றவள் தலையை இரு கைகளாலும் தாங்கியவளாய் அவள் நிலையை உணர்த்திட  அதற்கு மேல் அவன் வேறெதையும் கேட்க துணியவில்லை.

 

அரண் ஆதரவாய் அவள் தலை கோத.. அப்படியே கண்ணயர்ந்தாள்.  விழிமூடிக்கிடந்தவளிலேயே சிந்தனையாய் அவன் விழிப்பார்வை படிந்தது.

ஒவ்வொன்றாய் அசைப்போட்டபடி அந்த சன்னல் வழியே வெளியில் வெறித்திருந்தவனின் பார்வை மிக மெல்லிதாய் சுருங்கின எதிரில் கண்ட காட்சியில்..

அவனது கூரிய விழிகளில் இருந்து அவ்வுருவம் தப்பவில்லை என்பது அடுத்த கணமே அவன் படியில் விரைந்தது உறுதி செய்தன.

 

நினைவுகளில் உலன்றவளாய் உறங்கியிருந்தவளின் செவியில் அழுத்தமாய் படியிறங்கும் ஓசை நிறைய மறுகணமே அவளது புலன்கள் அத்தனையும்  விழித்துக் கொண்டது.

 

கண்விழித்தவளின் பார்வையில் அரண் அகப்படாமல் போக எழுந்தவளோ பூனைப்பாதம் வைத்தவளாய் வெளியேறினாள்.

 

காட்டுக்குள் விரைந்தவனின் உருவம் வரிவடிவமாய் தெரிய பின்தொடர எத்தனித்தவளின் கவனத்தில் அப்பொழுதே விழுந்தது அவள் கால் கொலுசு. மறுநொடியே அதை கழட்டி மேசையின்மேல் சத்தமெழாத வண்ணம் வைத்தவள் அவன் சென்ற வழியில் நடக்கலானாள்.

 

சற்று தூரம் சென்ற பின்னரே அவள் பார்வை வட்டத்தினுள் விழுந்தான் அரண்! அவனுடன்.. அது யார்?? என்று எண்ணியவளின் விழிகளிரண்டும் கூர்மையாகிட மறுகணமே மூளையில் உரைத்தது அந்த உருவம் யாரென!!

 

சர்வமும் அடங்கியவளாய் அதிர்ச்சியில் உறைந்துவிட்டாள் ஆஹிரி..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!