Aahiri-7

WhatsApp Image 2020-08-17 at 10.30.47 AM

அத்தியாயம்-7

 

“இருதலைக்கொள்ளி எறும்பாய்

மனம் இரண்டாய் பிரிந்து வாதாட..

அவனென்று அவளும்..

அவளென்று அவனும்..

பழியை பங்கிட்டனர்..

மூன்றாமவனின் மௌனத்தில்..”

 

‘சாத்வா..!?’ என்று உள்ளுக்குள் ஒலித்த குரலில் அசைவற்று நின்றான் சாத்வதன்.

விழிகள் இரண்டிலும் அதிர்ச்சியில் நிரம்பி தளும்ப நம்பவியலாத பார்வை ஒன்றுடன் அவனின் துஜா அவனையே வெறித்து நோக்குவதுபோல மனக்கண்ணில்  தோன்றியதில் பேச்சற்றுப்போனான் வதன். கலக்கம் நிறைந்த அந்த விழிகளிலிருந்த கண்டிப்பு அவனை தன் தவறை உணர வைத்தது.

 

மனதில் நிறைந்தவளின் ஆட்சேபக்குரலுக்கு செவி சாய்த்தவனோ தன்னையே நொந்தவனாய், ‘என்ன பண்ணிட்ட நீ??’ என்று அவனை அவனே அதட்டியவனாய் இனி என்ன ஆனாலும் சரி தன்வசத்தை மட்டும் இழக்கக்கூடாது! என்ற எண்ணமே ஆழமாய் பதிய அப்பொழுதே சுற்றத்தை உணர்ந்தான்.. மற்றவன் தன்னை அதட்டிச் சென்றதையும்.. ஆஹிரியின் தடுமாற்றத்தையும்..

 

அதற்கு பின்னான ஒரு நொடியைக்கூட தாமதிக்காதவனாய் விரைந்திருந்தான் அந்த மரவீட்டை நோக்கி.

 

தன் கைக்குள் இருந்தவளின் உடல் முழுதும் வேர்வையில் குளித்திருக்க அதற்கு நேர்மாறாய் சில்லென குளிர்ந்துவேறு இருந்தது சிறு நடுக்கத்துடன் அந்த மெத்தையில் உட்காரக்கூட முடியாமல் தடுமாறியவளைக் காணக் காண அரணிடம் பதட்டமே கூடின எக்குத்தப்பாய்..!!

 

“ஆரிமா..என்னடா?? என்ன பண்ணுதுடா??” என்றவனின் ஒரு கை அவள் தலையை ஆதரவாய் தடவ மறுகரத்தால் அவளது கையை அழுந்த பிடித்திருந்தான்.

 

அவளது பார்வை மங்கிக்கொண்டிருக்கிறது என்பதை அவள் கண்களை கசக்கியவாறு பார்க்க முயல்வதே சொல்லியது.

அவன் கையினுள் பொதிந்திருந்த அவள் கரம் பட்டென விடுபட  நெற்றி சுருக்கியவனாய் நிமிர்ந்தவனின் கண்ணெதிரே ஆஹிரியின் கரம்பற்றி நாடிப்பார்த்துக் கொண்டிருந்தது சாத்வதனே!!

 

அவள் கைப்பற்றி பல்ஸ் பார்த்தவன் பிறகு விடுவிடுவென  அடுக்களைப்போல் பிரித்திருந்த பகுதியினுள் நுழைந்தான்.

உள்ளேச் சென்றவன் சற்று நேரத்திற்கெல்லாம் கையில் ஒரு பெரிய தம்ளர் நிரம்ப தண்ணீரை கொண்டு வந்தவனாய் அவளிடம் நீட்ட அவளுக்கோ தன் முன் நீட்டப்பட்ட அப்பெரிய கண்ணாடி தம்ளரை பிடிப்பதே சிரமமாய் கையில் நடுக்கம். அவனே புகட்ட முற்பட அதை தடுத்தவளாய் இருக்கரங்களால் அதை இறுக்கிப்பிடித்து ஒரே மடக்கில் பாதி தம்ளரை தீர்த்திருந்தாள்.

 

எதிரில் இருப்பவனின் முகத்தில் இருந்த கேள்வியை உணர்ந்தவனாய்..

“ஜஸ்ட் லோ பீபி! பயப்படறளவுக்கு ஒன்னுமில்ல.. சால்ட் அண்ட் ஷுகர் கலக்கின தண்ணிதான் இங்க இருக்கற மொத ஆப்ஷன்” என்றதோடு சரி அதன் பின் அவன் வேறெதுவும் பேசவில்லை. தன்னையே பார்த்திருந்தவனையும் கண்டானில்லை. அவன் பார்வை முழுதும் ஆஹிரியினிடமே இருக்க அவள் சற்று நிதானத்திற்கு திரும்பியிருந்தாள்.. அவனை நிமிர்ந்து நோக்கியவளோ, “தாங்க்ஸ்” என்றாள் மெலிதாய் புன்னகைத்து.

 

“ம்ம்” என்று அதை தலை அசைத்து ஏற்றுக்கொண்ட சாத்வதனை ஏனோ அவளின் மெலிந்த புன்னகையும் அந்த தாங்கஸும் தடுமாறச் செய்தது அவனது எண்ணத்திலிருந்து.

 

உண்மைலயே இவதான் செஞ்சிருப்பாளா?? என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆனால் அவனால் அதையும் முழு மனதாய் நம்ப முடியவில்லை..ஏன் அவன் இப்பொழுது இருக்கும் நிலையில் யாரையுமே நம்பத் தயாராய் இல்லை.. முக்கியமாய் அவன் துஜாவின் அம்முவை!!

 

“இதுக்கு முன்னாடி இப்படி வந்துருக்கா??” என்ற சாத்வதனின் கேள்விக் குரலில்,

 

“ரேரா..ஆனா இப்போ கொஞ்ச நாளா மட்டும்..அடிக்கடி வருது” என்றாள் சிந்தனையாய்.

 

“ஓஹ்..” என்று அதை ஏற்றுக்கொண்டவனின் கவனம் திடீரென அவளது உள்ளங்கை கட்டில் வந்து நின்றது.

 

இமை சுருக்கி முகபாவத்திலேயே கேள்வியை கொண்டு வந்திருந்தவனோ கண்கள் இரண்டையும் கட்டில் இருந்து அகற்றாதவனாய்,

 

“கைல என்ன?” என்று வினவியப்பின்னரே  மற்றவளின் கவனத்திலும் பதிந்தது நேற்றைய சிறு காயமும் அதன் தொடர்ச்சியாய் இருந்த கட்டும்.

 

“அது..” என்று தொடங்கியவள் பின் “அரண் போட்டது” என்றுவிட மற்றவனின் முகத்திலோ சந்தேக ரேகைகள் படர்ந்தன.

 

‘அரண்??’ என்ற கேள்வியுடன் அவன் மற்றவனை நோக்க அவனோ அப்பொழுது வதனைத்தான் பார்த்திருந்தான். இவனது கேள்விப் பார்வையில் அரண்  வெறும் ஆம் என்பதைபோல இமைகளிரண்டையும் மூடித்திறக்க மற்றவனின் மனம் குழப்பத்தை அப்பிக்கொண்டாலும் அதற்குபின் எதுவும் கேட்கவில்லை.

 

“சின்ன காயம்தான் வதன்” என்றுவிட அதை ஒரு “ஓ..” உடன் அமைதியானவனின் குரலில் இருந்தது என்னவோ!?

 

சற்று நேரத்திற்கு அங்கு மௌனத்தின் ஆட்சி.. மூவரிடமும் அமைதியே நிலவியது(?) உள்ளுக்குள் பிழிந்தெடுக்கும் ஆயிரத்தெட்டு கேள்விகளுக்கும் விடை புரிந்தும் புரியாத நிலையில் நின்றவர்களுக்கு எதை எப்படி ஆரம்பிக்கவென்று சிந்தனை.

 

சாத்வதனையே கவனித்திருந்த ஆஹிரியினுள்ளோ இன்னதென வரையறுக்க முடியாத விடைகள் விளைந்தன..!!

வார்த்தைக்கு வார்த்தை என் துஜா..என் துஜா என்பவனை அவளால் முழுதாக நம்பவும் இயலவில்லை அதே சமயம் முழுமனதுடன் சந்தேகிக்கவும் முடியவில்லை.

 

அவனிடம்  உண்மை இருப்பதாகத்தான் பட்டது. ஆனால் எல்லாவற்றையும் மனதோடு சம்பந்தப்படுத்த அவள் தயாராயில்லை. ஏனெனில் ஒரு பக்கம் அவனை நம்பு என்று உரைக்கும் மனமே மறுபுறம் கேள்வியெழுப்புகிறது.

 

ஒருவேளை அவன்மேல் தவறில்லாமல்கூட இருக்கலாம்.. ஆனால் அவளை அவன் அத்தனை உறுதியாய் குற்றம்சாட்டுகிறான் என்றால்..??

 

‘ஒருவேள.. அவனுக்கு இதே கதையோட இன்னொரு பக்கம் இருக்குமோ?? அதாவது.. சாத்வதன் பக்கம்.. ஓஹ் காட்!! அவன் பாய்ண்ட் ஆஃப் வ்யூல நான் குற்றவாளின்னா.. அப்போ ஹீ  ஹாஸ் எ வேலிட் ரீஸன்!!!! வாட் த ஹெல்!!! என் தங்கைய நானே எப்படி கொல்லுவேன்..?!’ என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியின் பதில் தன் எதிரில் இருப்பவனிடத்தில் மட்டுமே கிடைக்கும் என்று அவளுள்ளம் அடித்துரைத்தது.

 

அவள் துஜியுடன் இல்லாத, அதாவது துளஜா ஊட்டியில் கழித்த நாட்களைப் பற்றியும் அவளுக்கு தெரிய வேண்டியிருந்தது.

 

ஒரு முடிவெடுத்தவளாய் அவள் வாய்த்திறக்க முற்பட அவளை முந்தியிருந்தான் சாத்வதன்.

 

“ஆஹிரி..” என்றவனின் குரலில் அவள் நிமிர்ந்து அமர்ந்தவளாய்..

 

“சொல்லுங்க வதன்”என்றாள் அந்தக்குரலில் இருந்த தெளிவில் அரண் அடுக்களையினுள்  நுழைந்தான்.

 

“ஆஹிரி.. நீங்க கொஞ்சம் ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காம நடந்ததெல்லாம் சொல்ல முடியுமா?? ஞாபகம் இருக்கறவரைக்கு மட்டும்..” என்க அவளுக்கும் முயன்று பார்க்கத்தான் தோன்றியது.. ஆனால் அவள் சொல்ல தொடங்கியப்பின்னரே  இத்தனை நாள் தான் தத்தளித்ததிற்கான முக்கிய காரணம் ஒன்று உரைத்தது.

 

“ம்ம்..” என்று தலையசைத்து  தொடங்கினாள். ஆழ மூச்சிழுத்துவிட்டவளாய்..

 

“துஜிய ஊட்டிக்கு தனியா அனுப்பி வைக்கறதுல எனக்கு அவ்ளோவா விருப்பமில்ல. சித்தப்பாட்டயும் சரி அப்பாட்டயும் சரி எவ்வளவோ சொல்லிப்பாத்தேன்.. ஆனா தடுக்க முடியல. அவளோட ஃப்யூச்சருக்கும் அதுதான் சரின்னு வரும்போது.. எனக்கும் அதுக்குமேல தடுக்க தோணல..” என்று நிதானித்தவளின் பார்வை கோர்த்திருந்த தன் கை விரல்களில் படிந்து மீண்டது.

 

“ஆனா முடிஞ்சப்போல்லாம் வந்துருவா. அன்னைக்கும் அப்படிதான்..அப்போ துஜி ஊட்டில இருந்து வந்து ஒரு வாரம்கூட இருக்காதுனு நினைக்கறேன்.. ஆனா.. எப்பவும் துறுதுறுனு எதையாவது பேசிக்கிட்டே இருக்கறவ அப்போ சரியா பேசக்கூடயில்ல.. அவ ரொம்ப டிஸ்ட்டபர்டா இருந்தா..

 

ஆனா அவளே போய் அப்பாட்ட அந்த வீக்கெண்ட் போட்டிங் போலாம்னு கேக்கவும் அப்பா சரினு சொல்லிட்டாங்க. அன்னைக்கு நான், அப்பா, துஜி அப்புறம்..அப்புறம்..” என்று யோசித்தவள் பின் நினைவு வந்தவளாய்..

 

“யெஸ்! அப்பறம் அந்த புது ட்ரைவரும்தான் கிளம்பினோம்!! அந்த ட்ரைவர் பேரு… பச்!” என்று சிந்தித்தவளுக்கு அது பிடிபடாமல்போக அடுத்ததிற்கு நகர்ந்தாள்.

 

“நானும் துஜியும் பின்னாடிதான் இருந்தோம்.. எல்லாமே ஃப்ராக்ஷன் ஆஃப் ஸெகண்ட்ல முடிஞ்சிட்ட மாதிரி இருக்கு..” என்றவளாய் தலையை இருக்கரங்களாலும் தாங்கிக்கொண்டாள்.

 

அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட அரணின் கைகளில் இருந்த ட்ரேயில் வீற்றிருந்தது மூன்று கோப்பைகளை அளவாய் நிரப்பியிருந்த ப்ளாக் காஃபி.

 

கைகளிரண்டாலும் தலையை தாங்கியவளாய் முகம் மூடி அமர்ந்திருந்தவளின் தோளில் ஆதரவாய் படிந்தது அரணின் கரம். அதில் அவள் நிமிர்ந்த நொடி அவள் கையில் ஒரு கோப்பையை திணித்தவனோ பருகுமாறு கண்ணசைத்தான்.

 

அவளிருந்த மனநிலையில் அது மிகவும் தேவையானதாய் இருந்தது. ஒரு சிப் உறிஞ்சவுமே ஏனோ நாவைத் தழுவிய காபி அவளது மூளையின் சூட்டை குறைத்து மனதின் அலைகளின் வேகம் குறைந்தார்போன்ற ஒரு உணர்வு..!!

 

தீவிர சிந்தனையில் அமிழ்ந்திருந்த சாத்வதனை தோள்தொட்டு அழைத்தவன் அவன் கையிலும் ஒன்றை திணித்துவிட்டு தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டவனாய் அமர்ந்தான்.

 

“ஆஹிரி.. அந்த ட்ரைவர் பேர் ஞாபகம் வருதா?” என்று வினவ அவளோ இல்லையென்பதாய் தலையசைத்தாள்.

 

“இல்ல.. எனக்கு தெரியுது..ஆனா எதுவுமே ஞாபகத்துல வர மாட்டேங்குது!” என்றவளைக் காண அவனுக்கே ஒரு மாதிரியாகிட..

 

“உங்க சித்தப்பா சித்தி?” என்றவனிடம்

 

“இல்ல.. அன்னைக்கு அவங்க ஊருலையே இல்ல. சித்தி ஸைட் ரிலேட்டிவ்.. ஏதோ ஃபங்க்ஷனுக்குதான் போயிருந்தாங்க..”

 

“அப்போ.. உங்க அம்மா?? மிஸஸ்.நிரூபா?”

 

“அம்மாவும் வரதாதான் இருந்தது ஆனா அவங்களுக்கு கடைசி நிமிஷப் ப்ளான் வேற வந்துடுச்சுனு.. அவங்களால வர முடியல..” என்றவள் பேசிய விதத்திலேயே அவள் பழையதையெல்லாம் நினைவில் கொண்டுவர முயன்று வார்த்தைகளை கோர்க்கிறாள் என்று அப்பட்டமாய் தெரிந்தது.

 

அவளுக்கே அப்பொழுதுதான் புரிந்தது இத்தனை நாள் தான் இப்படி பொறுமையாய் ஒரு முறைக்கூட யோசிக்கவில்லையென.. அதிலும் சிறு நெருடல்! அவள் பொறுமையாய் யோசிக்குமளவு சூழ்நிலை அவளை விட்டு வைத்திருக்கவில்லையே!

 

 அவளையே கவனித்திருந்த அரணோ, “போதும்! ஞாபகம் வரும்போது வரட்டும்! டோன்ட் ஸ்ட்ரெஸ் யுவர்செல்ஃப்!” என்று எழ சாத்வதனோ,

 

“என்ன சொல்ற நீ?  அவங்கள கொஞ்சம் யோசிக்க விடு அச்சு!!” என்றான்.

 

“நீ ஒரு டாக்டர்தானே?! கொஞ்சம் அவளப்பாரு வது! ஷீ இஸ் ஸ்ட்ரெஸ்ஸிங் ஹெர்செல்ஃப்!!” என்ற அரணின் குரல் அதட்டலாய் வெளிவர வதனோ..

 

“என்ன என்ன செய்ய சொல்ற அச்சு? அந்த கார்ல இருந்த நாலு பேர்ல அந்த ட்ரைவர் ஸ்பாட்லயே இறந்துட்டான்.. மிஸ்டர்.ஜனார்த்தனன் கோமால இருக்காரு, ரெகாட்ஸ்படி துஜியோட பாடி இன்னும் கிடைக்கல.. இருக்கற ஒரே ஹோப் ஆஹிரிதான்! ஒன்னு இவங்களுக்கு தெரிஞ்சிருக்கனும்..” என்றிழுத்தவன் பின் “இல்ல இவங்களுக்கு பங்கு இருக்கனும்” என்று முடிக்க ஆஹிரியின் முகம் அதிர்ச்சியை தாங்கி நின்றாலும் அவளுக்கு ஏதோ ஒன்று புரிவதுபோலிருக்க அரணோ பதிலேதும் சொல்லாமல் பார்த்து நிற்க சருகுகள் மிதிப்படும் சத்தத்தில் அவன் புலன்கள் அனைத்தும் விழித்துக் கொண்டன.

 

மற்ற இருவரும் அவரவர் சிந்தனையில் சிக்குண்டு இருக்க  அரண் இருவரின் தோளிலும் கை வைத்ததில் அவர்களது கவனமும் இப்பொழுது அவனிடத்தில். பின் சுற்றுப்புறத்தில்..!!

 

அதென்ன சத்தம்? என்று ஆஹிரி எண்ணிக்கொண்டிருக்கும்பொழுதே அரண் மற்ற இருவரின் தோள்பற்றி கீழமர்த்தியவனாய் தானும் குனிந்துக்கொள்ள ‘சிலீர்’ என்ற ஒலியுடன் அந்த ஃப்ரேமின் கண்ணாடி உடைந்துச் சிதறியது.