aanandha bhairavi – 16

aanandha bhairavi – 16

ஆனந்த பைரவி 16

கட்டிலில் உட்கார்ந்து அமைதியாக சிந்தனையில் இருந்தாள் பைரவி. தன் ரூமிற்கு திரும்பி இருந்தாள். லியம் ட்ரொப் பண்ணிவிட்டு போயிருந்தான். சற்று முன்பு தான் அருந்ததி ஃபோன் பண்ணி இருந்தார். ஏன் வரவில்லை என்று ஒரே குடைச்சல்.

அம்மா, ஃப்ரெண்ட் ஒன்னை ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணினேன். அதான் வர முடியலை. இந்த வீக் எப்படியும் வருவேன்மா.” அம்மாவிடம் இலகுவாக சொன்ன பொய்யை அப்பாவிடம் சொல்ல முடியவில்லை.

அப்பா!”

சொல்லு கண்ணம்மா, ஏன் வொய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”

அப்பா, ஆனந்த் வந்திருக்காங்க.”

எங்கம்மா? லண்டனுக்கா?”

ம்…”

எப்போ?”

அது தெரியலைப்பா. இன்னைக்கு ஆஃபிஸ் முடிஞ்சு வெளியே வந்தா, லியம் கூட நிக்குறாங்க

பேசினீங்களா?”

ம்ரொம்ப கோபமா இருக்காங்க.”

நியாயம் தானேம்மா.”

எனக்கும் புரியுதுப்பா, ஆனா என் நிலையிலிருந்து கொஞ்சம் யோசிச்சு பாருங்கப்பா.”

சரிதாம்மா, அப்போ இதுக்கு என்னதான் முடிவு?”

“…….”

எம் பொண்ணு தப்பு பண்ணுறாளோன்னு தோணுதும்மா.”

அப்பா!”

ஆமாம்மா, சரியான நேரத்துல எடுக்கப்படாத முடிவுகள் சிலசமயங்களில வேல்யூ இல்லாம போயிடும் பைரவி. அதுக்கு உதாரணம் ஆர்த்தி. தன்னைத் தேடி வந்த வாழ்க்கையை கோட்டை விட்டுட்டு, இப்போ அதே வாழ்க்கையை தேடி அலையுறா. ஆனந்தன் மேல எந்தத் தப்பும் இல்லை பைரவி. அப்பா இங்க கிளம்பி வந்தப்போ அம்மா என்ன பண்ணினா? எதையும் யோசிக்காம கூட கிளம்பினாளா இல்லையா? அப்புறமும், நீ இந்தியா போனப்ப உன்னோட வந்தாளா? இல்லையே. பொண்ணுங்கன்னா அப்படித்தாம்மா. புருஷன் எங்க இருக்கானோ அங்கதான் அவங்களுக்கு வேலை. எல்லா ஆம்பிளையும் அதைத்தான் எதிர்பாப்பான். அந்தப் பொண்ணுக்கு பூஞ்சோலை பிடிக்கலை எங்கிறதே தப்பு. இதுல குற்றாலத்துல கூட வந்து இருக்க மாட்டேன்னு சொன்னா என்ன நியாயம். தப்பு பைரவி. அந்த பொண்ணு மேலதான் அத்தனை தப்பும் இருக்கு. அப்பகூட ஆனந்தன் உன் பின்னாடி வரலை. நீயாத்தான் அவரை தேடிப் போனே. பைரவி என்னோட பொண்ணு, எங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு ஆணா நான் இப்போ சொல்றேன். நீ ஆனந்தனுக்கு நியாயம் பண்ணலைம்மா.”

அப்பா!”

அந்தப் பொண்ணோட நடந்த நிச்சயதார்தத்தை நிராகரிச்சுட்டு ஆனந்தன் உன் பின்னாடி வந்திருந்தா அது தப்பு. ஆனந்தன் இது ரெண்டையுமே பண்ணலையே. அவரா நிச்சயத்தை நிராகரிக்கவும் இல்லை, உன் பின்னாடி வரவும் இல்லை. ஆமா, நான் தெரியாமத்தான் கேக்கிறேன், இத்தனை நாளா இந்தப் பொண்ணு என்ன பண்ணிச்சாம்? ஆனந்தனுக்கு இந்த இடைப்பட்ட காலத்துல கல்யாணம் ஆகி இருந்தா அப்போ யாருகிட்ட போய் கெஞ்சிக்கிட்டு நின்னிருக்குமாம்?”

பைரவிக்கு மண்டை வெடித்தது. தான் குழம்பியதும் இல்லாமல் ஆனந்தையும் சேர்த்து கஷ்டப்படுத்துகிறோமோ என்று நினைக்கத் தோன்றியது.

அப்பா, நான் அப்புறம் பேசுறேன்பா. எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு. நான் கொஞ்சம் யோசிக்கனும்பா.”

நல்லா யோசிம்மா. டேக் யுவர் ஓன் டைம். ஆனா அப்பா ஆல்ரெடி முடிவு எடுத்துட்டேன். இது நான் எம் பொண்ணுக்கு தெரிவு செஞ்ச வாழ்க்கை இல்லை. இது அவளா அவளுக்கு தேர்ந்தெடுத்த வாழ்க்கை. அதனால இதை நான் அவ மேலே திணிக்கிறதுல எந்த தப்பும் இல்லை. அப்பா நாளைக்கு கூப்பிடுறேன்மா, குட் நைட்.”

அமைதியாக உட்கார்ந்திருந்தாள் பைரவி. அப்பா சொல்வது நியாயமாகத்தான் பட்டது. தானே தன்னுடைய வாழ்க்கையை பாழ் பண்ணிக் கொள்கிறோமோ என்றிருந்தது.

இத்தனையும் தாண்டி அவனுக்காக தன் உடம்பின் ஒவ்வொரு ஸெல்லும் ஏங்குவதை அவளால் உணர முடிந்தது. அவன் இடத்தில் தன்னால் இன்னொருவரை எப்போதுமே வைக்க முடியாது எனும் போது எதற்கு இந்த முட்டாள்தனமான தயக்கம் என்று மனது கேள்வி கேட்டது

‘தான் சுயநலமாக முடிவெடுத்தால் ஆர்த்தியின் நிலை என்ன?’ இன்னொரு மனது கேட்டது. கண்களை இறுக மூடிக் கொண்டாள். தலை வலிப்பது போல் இருந்தது.

தொலைபேசி சிணுங்கவே, எடுத்துப் பார்த்தாள். ‘லியம்என்றது. அழைப்பை ஏற்றவள்,

சொல்லு லியம்என்க,

என்னத்தைப் பேசிக் கிழிச்ச?” கோபமாக வந்தது அவன் கேள்வி.

என்னாச்சு?”

இன்னும் என்ன ஆகணும்? ஆனந்தன் ரொம்ப டிஸ்டேர்ப்டா இருக்காரு. என்னத்தையாவது குடு லியம், குடிச்சுட்டு படுத்துக்கிறேன். அப்போ கவலையெல்லாம் தெரியாதாமேன்னு ஒரே புலம்பல். என்னை என்ன பண்ணச் சொல்லுற?”

நீ என்ன பண்ணித் தொலைச்ச அதுக்கு?”

ஆமா, எங்கிட்ட நல்லா சத்தம் போடு. உருப்படியா பேசுன்னு விட்டுட்டு போனா அதைப் பண்ணாதே. அதெல்லாம் குடுத்தா உம் பொண்டாட்டி என்னைக் கொன்னுடுவான்னு சொல்லி ஸ்லீப்பிங் டேப்லெட் குடுத்தேன்.”

டின்னர் சாப்பிட்டாரா?”

ம்சாப்பிட்டிட்டு நல்ல தூக்கம்.”

நான் காலைல வந்திடுறேன் லியம்.”

நீங்க ரெண்டு பேரும் என்னமோ பண்ணுங்க. கீயை பக்கத்து வீட்டு ஆன்ட்டிகிட்ட குடுத்துட்டு போறேன். நீ வந்து வாங்கிக்கோ சரியா?”

ம்…”

அவன் வைத்து விட, அந்த ஃபோனையே பார்த்திருந்தாள் பைரவி. எண்ணம் முழுவதும் ஆனந்த்! இன்று அவன் செய்கைகள் அனைத்திலும் ஓர் உரிமை இருந்ததை அவளால் உணர முடிந்தது. எத்தனை தைரியமிருந்தால் முத்தமிடுவான்!

நினைத்த மாத்திரத்தில் முகம் சூடானது பைரவிக்கு. முதல் அனுபவமாமே, வெட்கமில்லாமல் அதை வேறு சொல்கிறான். மெல்லிய புன்னகையோடு அவன் காதல் சொன்ன அந்த நொடியை நினைத்துப் பார்த்தாள். நினைக்கவே இனித்தது. தான் முதன் முதலாக பார்த்தபோது ஒரு ஏளனப்பார்வை பார்த்த ஆனந்தா இவன்? இத்தனை வயதிற்கு மேல் காதல் வராது என்று சொல்லிவிட்டு இப்படி ரொமான்ஸ் பண்ணுகிறானே. அடேங்கப்பா! அவருக்கு வேணுங்கறதை அவரே நடத்திப்பாராம், திமிர் ரொம்ப ஜாஸ்தியா தான் இருக்கு. சிரித்துக் கொண்டே கண்ணயர்ந்தாள் பைரவி.

**–**–**–**–**

காலையில் ஒரு ஒன்பது மணி வாக்கில், பக்கத்து வீட்டில் சாவியை வாங்கி லியம் வீட்டைத் திறந்தாள். வீடு அமைதியாக இருந்தது. ரூம் கதவு பூட்டியிருக்க, ஆனந்தன் இன்னும் தூங்குவது புரிந்தது. ஃபிரிட்ஜில் இருந்த பாலை சூடாக்கி காஃபி போட்டாள். ரூம் கதவைத் தட்ட, பதிலில்லை. மீண்டும் சற்று சத்தமாகத் தட்ட,

கம் இன் லியம்என்றது ஆனந்தனின் நித்திரைக் குரல். மெதுவாக கதவைத் திறந்தாள் பைரவி, கையில் கப் அன்ட் சாசர்

குட் மார்னிங் ஆனந்த்கழுத்து வரை குளிருக்கு இதமாக இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கியவன், இவள் சத்தத்தில் கண் விழித்தான். இவளைக் கண்ட மாத்திரத்தில், முகம் மலர

குட் மார்னிங்என்றான்.

காஃபியை இவள் நீட்ட

இன்னும் ப்ரஷ் பண்ணலையேஎன்றான். லேசாகச் சிரித்தவள்

நீங்க ப்ரஷ் பண்ணி வர்ரதுக்குள்ளே இது ஆறிப் போயிடும். பரவாயில்லை, இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.” என்று சொல்ல, சிரித்துக்கொண்டே வாங்கினான்

நீங்க காஃபியை குடிங்க ஆனந்த், நான் ப்ரேக் ஃபாஸ்ட்டை ரெடி பண்ணுறேன். சொல்லிவிட்டு பைரவி நகர, அவளையே விழி அகற்றாமல் பார்த்திருந்தான் ஆனந்தன். ஜீன்சும், ரெட் கலர் குர்தாவும் அணிந்திருந்தாள். நீண்டிருந்த முடியை ஃப்ரெஞ்ச் ப்ளாட் போட்டிருந்தாள்.

கிச்சனில் ப்ரெட், முட்டை, சுப் டின் எல்லாமே வாங்கி வைத்திருந்தான் லியம். நான்கு முட்டையை உடைத்து கொஞ்சம் பால், பட்டர் சேர்த்து நன்றாக ஒம்லட்டிற்கு பீட் பண்ணிக் கொண்டிருந்தாள். காஃபியை முடித்த ஆனந்தன் கப்பை கொண்டு வந்து கிச்சனில் வைத்துவிட்டு, பிசியாக தனக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தவளை பின்னோடு அணைத்து அவள் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு அவன் பாட்டில் பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான். விதிர் விதிர்த்துப் போய்விட்டாள் பைரவி!

என்ன இவன்! அவன் பாட்டுக்கு வந்தான், கட்டிப் பிடிச்சான், கிஸ் பண்ணினான், போய்ட்டான்‘. பைரவி தனக்குள் புலம்ப, தண்ணீர் கொட்டும் சத்தம் பாத்ரூமில் கேட்டது. அவசரமாக ப்ரெட்டை டோஸ்டரில் போட்டவள், சுப்பை சூடு பண்ணி ஒம்லட்டையும் ரெடி பண்ணினாள். ஆனந்தன் ரெடியாகி வருவதற்குள் அத்தனையையும் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு காத்திருந்தாள்.

யானைக் கறுப்பு நிறத்தில் ஜீன்ஸும், அதே நிறத்தில் ஃபுல் ஸ்லீவ் ஷேர்ட். கையை கொஞ்சம் மடித்து விட்டு ஷேர்ட்டை இன் பண்ணியிருந்தான். ப்ரௌன் பெல்ட், கையில் கோல்ட் கலர் ரிஸ்ட் வாட்ச். பைரவியை அவன் கடந்து செல்ல ஆஃப்டர் ஷேவ் வாசனை அவள் நாசியை நிரப்பியது. இவனை தன்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியுமா என்ற கேள்வி பைரவிக்குள் பூதாகரமாக எழுந்தது.

சாப்பிடலாமா?”

சாப்பிடலாமே.” ஏதோ சிந்தனையில் இருந்தவள், தன்னை மீட்டுக் கொண்டாள். இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இன்னைக்கு என்ன ப்ளான்?” ஆனந்தன் கேட்க,

நீங்க சொல்லுங்கஇது பைரவி.

கார் பாக்கிங்ல நிக்குதில்லை? இப்போ போய்  அதை எடுத்துக்கிட்டு வந்திரலாம். வரும்போது லன்ச் வாங்கிட்டு வர்ரதா லியம் சொன்னார். ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் வெளில போறோம்.” கேள்வியாய் அவள் பார்க்க, ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இருவரும் கிளம்ப,

நம்ம ஊர்ல எல்லாம் பொண்ணுங்கதுப்பட்டான்னுஒன்னு போடுவாங்க, அது எதுக்குன்னு தெரியுமா?” அவன் கூர்மையாக அவளைப் பார்த்து கேட்க, சட்டென்று தான் ஹான்ட்பேகில் எப்போதும் குளிருக்காக வைத்திருக்கும் அந்த ஸ்கார்ஃபை (scarf) தோளில் போட்டுக் கொண்டாள். யப்பா! டெர்ரர் போல இருக்கே. மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.

ஒரு டாக்ஸி பிடித்து இருவரும் பைரவி வேலை செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். கார் பார்க்கிங் சென்றபோது பைரவி அவனிடம் கீயை நீட்ட

இல்லையில்லை. நீயே ட்ரைவ் பண்ணு பைரவி. நான் கொஞ்சம் புதினம் பாக்குறேன்.” சொல்லிவிட்டு காரை ஒரு வலம் வந்தான்.

ம்சேம் கார், அதே கலர், ஸ்பெஷல் நம்பர் பிளேட், ஏன்?”

தெரியலை, தோணுச்சு வாங்கிட்டேன்.” அவளையே பார்த்திருந்தவன், உள்ளே ஏறி உட்கார்ந்தான். அவளும் ஏறிக் கொள்ள,

எங்க என்னை கடத்திட்டுப் போற ஐடியாஆனந்தன் குறும்பாகக் கேட்க, வாய் விட்டு சிரித்தவள்,

ஷாப்பிங் போகலாம் ஆனந்த்என்றாள்.

உன்னோட டைம் ஸ்பென்ட் பண்ணனும் பைரவி. அவ்வளவுதான். எங்க வேணாலும் போகலாம்.” மென்மையாக சிரித்தவள்,

ஆனா ஒரு கண்டிஷன். நான் தான் பே(pay) பண்ணுவேன்.” அவளைப் பார்த்து சிரித்தவன்,

உனக்கு என்னெல்லாம் பண்ணத் தோணுதோ பண்ணு பைரவி. ஆனா அதே மாதிரி எனக்கும் பண்ணத் தோணும். அப்போ நீயும் கண்டுக்காதே.” அவன் நியாயம் பேச, செல்லமாய் அவனை முறைத்தாள்.

இரண்டு பேரும்வெஸ்ட் ஃபீல்ட்‘(Westfield) போனார்கள். அந்த பிரம்மாண்டமான கட்டடத்தை இலக்கே இல்லாமல் சுற்றினார்கள். கண்ணுக்கு பிடித்தமானவற்றையெல்லாம் வாங்கிக் குவித்தாள் பைரவி. அவன் ஒரு புன் சிரிப்புடன் அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பொருத்தம் என அவள் நினைத்ததெல்லாம் காருக்கு வந்திருந்தது. களைத்துப் போய் வீடு திரும்பினார்கள்.

லியம் ஏற்கனவே சாப்பாட்டை வைத்து விட்டு போயிருந்தான் அவனிடம் ஒரு வீட்டுச் சாவி இருக்கவே சுலபமாகிப் போனது. நண்பர்களுடன் ஏற்கனவே திட்டமிட்டபடி தான் போவதாக ஒரு நோட் இருந்தது. இன்டியன் ரெஸ்டாரன்ட்டில் இருந்து சாப்பாடு வாங்கி வைத்திருந்தான் லியம். உண்டு முடிக்க, அத்தனை களைப்பாக இருந்தது பைரவிக்கு. அப்படியே சோஃபாவில் சாய்ந்து கொண்டாள். அவள் பக்கம் வந்து அமர்ந்த ஆனந்தன் அவள் மடி மீது தலை வைத்து காலை நீட்டிப் போட்டு அப்படியே உறங்கிப் போனான். அவன் தலை முடியை மென்மையாக கோதியபடி அப்படியே பைரவியும் கண்ணயர்ந்தாள்

ஃபோனின் மெல்லிய சிணுங்கல் இருவரையும் எழுப்பி விட்டது. ஆனந்தன் எடுத்துப் பார்க்க, ‘அம்மாஎன்றது. அழைப்பை ஏற்றவன்அம்மாஎன,

ஆனந்தா எப்படி இருக்கே?”

நல்லா இருக்கேம்மா.”

பைரவியை பாத்தியா?”

கொஞ்சம் இருங்க.” ஃபோனை அவளிடம் நீட்டினான். அவள் சங்கடமாய்ப் பார்க்க, ‘பேசு’ என்றான். ஃபோனை வாங்கியவள்,

ஹலோ…” என்றுதான் தாமதம்

பைரவி! பைரவிம்மா, எப்படிடா இருக்கே? ஏன் ஒரு ஃபோன் கூட பண்ணலை? என்னாச்சும்மா?”

அத்தைஅது…” அவள் திக்கித் திணற, அவள் மடியில் இருந்த வண்ணமே அவள் அவஸ்தைப் படுவதை மௌனமாகப் பார்த்திருந்தான்

சரிம்மா விடு, உனக்கு ஏதோ கஷ்டம். கூப்பிட முடியாத சூழ்நிலையா இருந்திருக்கும். அதான் ஆனந்தன் வந்துட்டானே. இனி அவன் எல்லாத்தையும் பாத்துப்பான். நீ கவலைப்படாதம்மா.” இந்த அன்பு அவளைக் குற்ற உணர்வில் தள்ளியது. கொஞ்ச நேரம் அவளோடு பேசிவிட்டு ஃபோனை வைத்தார் வாசுகி. ஆனந்தன் எதுவும் பேசவில்லை. மௌனமாக எழுந்தவன்,

பைரவி, காஃபி போட்டுக் கொடுஎன்றான். அவள் அவன் முகத்தை முகத்தை பார்த்தபடி கிச்சனுக்குள் போக, அவன் எதுவும் பேசாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.

**–**–**–**–**

டின்னருக்கு வெளியே போகிறோம், என்று ஆனந்தன் சொல்ல இருவரும் கிளம்பி இருந்தார்கள். அன்று அவனுக்கு பைரவி வாங்கியிருந்த ப்ளூ லிவைஸ் ஜீன்சும், வைட் போலோ ஷேர்ட்டுமாக இருந்தான் ஆனந்தன்.

கணபதி ஹோமம் நடந்த அன்று சாதனா சொல்லியிருந்த அந்த டிசைனர் சாரியை கையோடு கொண்டு வந்திருந்தான். அழகான பச்சை நிறத்தில் அங்கங்கே மெல்லிய மஞ்சள் நிறத்தில் பெரிய பூக்கள் போட்ட ஷிஃபொன் சாரி. போடர் அடர் சிவப்பில் இருந்தது. அதே சிவப்பில் ப்ளவுஸ். கைக்குள் அடக்கி விடலாம் போல் அத்தனை மென்மை. மிகவும் மெல்லியதாக இருக்கவே பைரவி உடுத்துவதற்கு தயங்கினாள்

உன்னோட லோங் கோட்டை (long coat) போட்டா கே“, என்றான் அவள் மனதைப் படித்தது போல.

அவள் புடவையைக் கட்டிக் கொண்டு ரூமை விட்டு வெளியே வர, அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையிட்டவன் விசிலடித்தான். சங்கடமாகிப் போனது பைரவிக்கு. எல்லாவற்றையும் அசை போட்டபடி டாக்சியில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கே போகிறோம் என்று அவனும் சொல்லவில்லை, அவளும் கேட்கவில்லை. டாக்சி நிற்கவே கதவைத் திறந்து விட்டான் ஆனந்தன். மெல்லிய குளிர் உடலைத் தீண்ட, கோட்டை சற்று இறுக்கிக் கொண்டாள் பைரவி

இருள் லேசாகப் பரவ ஆரம்பித்திருந்த மாலைப்பொழுது. ரம்மியமாக இருந்தது. தேம்ஸ் நதிக்கரையில் ஒற்றை வரிசையாக, ஒன்றன் பின் ஒன்றாக அத்தனை ரெஸ்டோரன்டுகள். மங்கிய வெளிச்சத்தில் தேவலோகமாக காட்சியளித்தது. சற்றே தூரத்தில்டவர் பிரிட்ஜ்‘(லண்டன் பிரிட்ஜ்) தனக்கே உரித்தான நீல நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆச்சரியப்பட்ட பைரவி ஆனந்தனைத் திரும்பிப் பார்க்க

லியம் உபயம்என்றான் சிரித்துக்கொண்டே. ஏற்கனவே டேபிள் ரிசர்வ் செய்திருந்தான் ஆனந்தன். அமைதியாக டின்னரை முடித்தார்கள்

நதிக் கரையோரத்தின் நீரின் சலசலப்பும், வீசிய மெல்லிய பூங்காற்றும் பைரவியைக் கவரஎழுந்து சென்று அந்த நதிக் கரையோரத்தில் நின்று கொண்டாள். முழு நிலா இல்லை. ஆனாலும் நிலா வெளிச்சம் இருந்தது. மக்களின் சத்தமில்லாத சிரிப்புச் சத்தமும் சங்கீதமாகத்தான் கேட்டது பைரவிக்கு. கொஞ்சம் குளிர ஆரம்பித்திருந்தது. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அந்த ஈரக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தாள். வலிய கரங்கள் இரண்டு அவளை இடையோடு பின்னிருந்து அணைத்து கூந்தலில் முகம் புதைக்க, அந்த ஆஃப்டர் ஷேவ் லோஷன் வாசனை அணைத்தவனை கட்டியங் கூறியது. மெய் மறந்து நின்றிருந்த பைரவியைக் கலைத்தது ஆனந்தனின் குரல்

என்று உன்னைக் கண்டேனோ பெண்ணே!

அன்றே எந்தன் உயிரைத் தந்தேனே!’ அவன் ஆழ்ந்த குரல் அவள் காது மடல்களை தீண்டிப் பாட சிலிர்த்தது பைரவிக்கு.

காலம் நின்றாலும், என் காற்றே நின்றாலும்சட்டெனத் திரும்பியவள், அவன் வாயை தன் கைகளால் மூட, அந்தக் கைகளை இறுகப் பற்றியவன்

உன் மூச்சில் நானும் வாழ்வேனே கண்ணே!’ இமைக்க மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

தேகம் விட்டு ரத்தம் போனாலும்என்

நெஞ்சை விட்டுன் பிம்பம் போகாது! பைரவியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

வாழும் நினைவுகளே,

என்னை உயிர் வாழச் செய்யும்!

உன் கண்ணீர்த் துளியில்என்

காயங்கள் ஆறும்! ஒரு விம்மலோடு அவன் மார்பை அவள் தஞ்சமடைய, அவளை ஒரு புன்னகையோடு கட்டி அணைத்துக் கொண்டவன்,

உன் துன்பத்தில் நானும் துணையாவேன்,

உன் கண்ணீரில் நானும் துளியாவேன்!

ஜீவன் போனாலும், ஏழு ஜென்மம் போனாலும்,

உன் கன்னம் தடவும் காதல் காற்றாவேன்!’ அவன் அனுபவித்துப் பாடி முடிக்க, அவன் ஷேர்ட் கொலரைப் பிடித்து இழுத்தவள் அவன் கழுத்தை வளைத்து முகமெங்கும் முத்தம் பதித்தாள். அப்போதும் ஒரு புன்னகையோடு அதை ஏற்றவன், அவளையே பார்த்திருக்க

அநியாயத்துக்கு நீ நல்லவனா இருக்கே ஆனந்த்என்றாள் ஒருமையில். வாய் விட்டு சிரித்தவன்,

ஒரு பொண்ணு என்னை நம்பி இந்த ராத்திரியில எங்கூட வந்திருக்கா பைரவி. என் மரியாதைக்குரிய உறவு அவள் பைரவி. அவளை எந்த இடத்திலும் நான் கேவலப் படுத்திரக் கூடாது பைரவி.” 

தான் ரொம்பவே நெகிழ்ந்திருக்கும் இக் கணத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் கண்ணியம் காத்து நிற்கும் அந்த ஆண்மையை ஆழ்ந்து பார்த்திருந்தாள் பைரவி.

ஆனந்தின் பைரவி.

ஆனந்த பைரவி!

 

 

error: Content is protected !!