aanandha bhairavi 22

aanandha bhairavi 22

ஆனந்த பைரவி 22

அந்த black Audi குற்றாலத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. பெண் வீட்டார் கொடி வீட்டிற்கு போய் விட்டார்கள். சந்திரன் அத்தனை தூரம் கலங்கவும் எல்லோரும் ஒரு நிமிடம் நெகிழ்ந்து போனார்கள்.அருந்ததி புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொள்ள, பாட்டி சூழ்நிலையைக் கையில் எடுத்துக் கொண்டார்.

சந்திரா! எதுக்கு இப்போ இப்படி உணர்ச்சி வசப்படுற? கண்ணைத் துடை. உன் பொண்ணுக்கு எந்தக் குறையும் வராம நாங்க பாத்துக்குவோம். உன்னை விட என் பேரன் பைரவியை நல்லா பாத்துக்குவான், புரியுதா?”

அந்த நம்பிக்கை எனக்கு இருந்ததாலே தான் என் பொண்ணை உங்களுக்கு குடுத்திருக்கேம்மா.”

அப்புறம் என்ன? ஆகவேண்டியதைப் பாக்காம எதுக்கு கண்ணு கலங்குற? பைரவி முகத்தைப் பாரு, உன்னைப் பாத்து அவளும் கலங்கிப் போய் உட்காந்திருக்கா.”

சரிங்கம்மாமகள் கலங்குகிறாள் என்றவுடன் சந்திரன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.

மறுநாள் விருந்திற்கு அழைப்பு விடுத்து விட்டு, பெண் வீட்டார் கிளம்பி விட, மாப்பிள்ளையையும், பெண்ணையும் அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோவிலுக்கு குடும்பமாக போய் வந்தார்கள்

பைரவி களைத்துப் போனாள். கணக்கு வழக்குகளை சரிபார்க்க ஆண்கள் அனைவரும் மண்டபத்திற்கு சென்றிருக்க, பைரவி நன்றாக உறங்கிப் போனாள். ஆனந்தன் திரும்பி வரும் வரை எழும்பவே இல்லை. அடித்துப் போட்டாற் போல அப்படியொரு தூக்கம்

மென்மையாக அவள் நெற்றியை அவன் வருடி விட கண்விழித்தவள், சோர்வாய் சிரித்தபடி மீண்டும் கண் மூடிக் கொண்டாள்.

பட்டு, இந்நேரத்துக்கு தூங்கினா பாட்டி திட்டுவாங்க,எழும்புடாஅவன் சொல்லியதும், எழுந்து அமர்ந்தவள்,

ரொம்ப டயர்டா இருந்தது ஆனந்த், அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்.”

சரிடா, ட்ரெஸ் மாத்திட்டு வா, நான் வெளியே வெயிட் பண்ணுறேன்.”

ம்…” அவள் பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.

டின்னரை முடித்துக் கொண்டு ஆனந்தன் கிளம்ப, கேள்வியாகப் பார்த்தாள் பைரவி.

குற்றாலம் போறோம் பைரவிஎன்றான்.

இத்தனை நேரத்திற்கு பிறகு எதற்கு குற்றாலம் போகவேண்டும்? கேள்வி மனதில் தோன்றினாலும், அத்தனை பேர் முன்னிலையில் கேட்க சங்கடமாக இருக்கவே, தலையாட்டினாள் பைரவி. வாசுகி அவள் அருகில் வந்தவர்,

அவன் பிடிவாதம் தெரிஞ்சது தானே பைரவிம்மா. சீக்கிரமா கிளம்புங்க. ரொம்ப லேட் பண்ண வேண்டாம்.” என்றார்.

அவள் ஆனந்தனைப் பார்க்க, ஒரு மந்தகாசப் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

அனைத்தையும் அசை போட்டபடி கடந்து போன வாகனங்களைப் பார்த்திருந்தாள் பைரவி. ஆனந்தனும் எதுவும் பேசாமல் மௌனமாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான். சீ டி ப்ளேயரை ஆன் பண்ணினாள் பைரவி. வில்லங்கமாக வந்தது பாடல்

நிலவைக் கொண்டு வா கட்டிலில் கட்டி வை

மேகம் கொண்டு வா மெத்தை போட்டு வை

இன்று முதலிரவு…’ 

அனுராதா ஸ்ரீராம் உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டிருந்தார்.

விதிர் விதிர்த்துப் போன பைரவி, அடுத்த பாடலுக்குத் தாவினாள். கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் ஆனந்தன்.

ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

ஆனால் இதுதான் முதலிரவு…’ தேன் குரலில் சுசீலா பாடிக் கொண்டிருந்தார்

சட்டென்று ப்ளேயரை நிறுத்தியவள், ஆனந்தனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள். வாய்விட்டுச் சிரித்தவன்,

அடுத்த பாட்டு இப்போ வேணாம் பைரவி, அது நாளைக்கு காலைல கேட்கலாம்என்று புதிர் போட, அவனை விசித்திரமாக பார்த்தாள் பைரவி. அப்படி என்ன பாட்டு அது? நாளைக்கு கேட்கக் கூடியது! சிந்தித்த படி மீண்டும் ப்ளேயரை ஆன் பண்ணினாள்.

நேத்து ராத்திரி யம்மா…

தூக்கம் போச்சுடி யம்மா…’

பயந்து போன பைரவி ப்ளேயரை நிறுத்தி விட்டு, சரமாரியாக ஆனந்தனை அடித்தாள். ரிசோர்ட்டை நெருங்கி இருந்தவன் பெருங்குரலெடுத்து சிரித்துவிட்டு காரை பார்க் பண்ணினான்.

என்ன வேலை ஆனந்த் இது?” அவள் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு கேட்க, அவளை தன்னருகில் இழுத்தவன்,

சிட்டுவேஷன் சோங் பைரவிஎன்றான்.

அதுக்கு உங்களுக்கு இந்தப் பாட்டுதான் கிடைச்சதா?” அவள் சிணுங்க, சிரித்தவன்

அடுத்த பாட்டைக் கேட்டா சும்மா மிரண்டு போயிருவே!” கையிரண்டையும் தலைக்கு மேல் தூக்கி, ஒரு பெரிய கும்பிடாகப் போட்டவள்,

ஆளை விடுங்க சாமி!” என்றாள். அவளை இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தவன்,

கட்டிப்புடி கட்டிப்புடிடா

கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடாஎன்று பாட, அவன் வாயை தன் கையால் இறுக மூடியவள்,

இதுக்கு மேலே ஏதாவது பாடினீங்கஅப்புறம் தெரியும்கண்களை உருட்டி அவள் அவனை மிரட்ட, அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.

**–**–**–**–**–**

ரிசோர்ட்டின் உள்ளிருந்து வந்த ஒரு பணியாளர் ஆனந்தன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, பைரவியின் கையைப் பிடித்தவன் அவளை மெயின் பில்டிங்கின் பக்கவாட்டு வழியாக அழைத்துச் சென்றான்.

ஒரு சின்ன கிராமம் போல இருந்தது அந்த இடம். இருபது கொட்டேஜ்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாய் அமைந்திருந்தது. சீராகப் பராமரிக்கப்பட்ட புல் தரையும், அதிலே பதிக்கப்பட்டிருந்த பல்புகளும் அந்த இரவுப் பொழுதை ரம்மியமாக்கியது

செங்கல் பதிக்கப்பட்ட பாதை சுற்றிவரச் சென்று ஸ்விம்மிங் பூலில் முடிவடையுமாறு வடிவமைக்கப் பட்டிருந்தது. கொட்டேஜ்களின் வெளி அமைப்பு நவநாகரீகமாக அமைந்திருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல ஒரு சின்ன செயற்கை நீரூற்று சல சலவென ஓடிக்கொண்டிருந்தது. சுற்றிவர ஃபென்ஸ் அடிக்கப்பட்டிருக்க, பழைய கால பாணியில் அமைக்கப்பட்டிருந்த அதன் கதவைத் திறந்து விட்டான் ஆனந்தன்

மந்திரத்தால் கட்டுண்டவள் போல உள்ளே நுழைந்தாள் பைரவி!

குற்றாலத்தின் காற்றில் ஈரப்பசை எப்போதும் இருந்தாலும், அந்த இடம் இன்னும் கொஞ்சம் குளிர்ச்சி ஊட்டியது. சொல்லப்போனால் கொஞ்சம் கிளர்ச்சி ஊட்டியது.

வெளிநாட்டவர்களின் நடமாட்டம் ஆங்காங்கே தெரிய, அவன் கடின உழைப்பிற்கு வெற்றி கிடைக்கிறது என்று பைரவிக்குப் புரிந்தது. அவன் தனக்குப் பின்னால் வருவதை மறந்து ஒவ்வொரு இடமாக சென்று பார்த்தாள்

கடைசியாக அந்த ஒற்றை கொட்டேஜ் மட்டும் கொஞ்சம் தனித்து நின்றாற் போல் தோன்றியது. அதன் வெளிப்புற அமைப்பு லேசாக கொடி வீட்டை பைரவிக்கு ஞாபகப் படுத்தியது. முன்னால் ஒரு மல்லிகை கொடி வளைந்திருக்க, மெயின் டோருக்குப் பக்கத்தில் ஏதோ பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இன்னும் சற்று நெருங்கிப் பார்க்க அதில்ஆனந்த பைரவிஎன்று இருந்தது.

மெதுவாக அந்த கோல்ட் கலர் ப்ளேட்டை தடவிப் பார்த்தாள். அதன் குளிர்ச்சி உடலையும் தாண்டி மனதைத் தீண்டியது. கனவில் மிதப்பதைப் போல உணர்ந்தவள், ஆனந்தனைத் திரும்பிப் பார்த்தாள். மார்பிற்குக் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்திருந்தான். உதட்டில் மட்டும் என்றும் போல இன்றும் அதே மந்தகாசப் புன்னகை.

அவளை நெருங்கி வந்தவன், அவள் கைகளில் கீயைக் கொடுக்க, கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

கதவைத் திற பைரவிஅவன் சொல்லவும் கதவைத் திறந்தவள், சுற்றி வர ஒரு பார்வை பார்த்தாள். அவள் லிவர்பூல் வீடு கூட இத்தனை அழகு இல்லை. ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தான் ஆனந்தன். லிவிங் ஏரியாவில் இருந்த வெள்ளை லெதர் சோஃபாவிலிருந்து, கால்புதைய வைத்த அந்த மெரூன் கலர் வெல்வெட் கார்பெட் வரை அனைத்திலும் ஒரு நேர்த்தி இருந்தது. பக்கத்தில் சின்னதாக ஒரு கிச்சன். அதையடுத்து இருந்த கதவைத் திறக்க, மெல்லிய மல்லிகை வாசம் மூக்கில் நுழைந்தது. பார்க்கும் இடமெல்லாம் வெள்ளையும், மெரூனும் மாறி, மாறி இருந்தது

ஜன்னல் கேர்ட்டன் கூட வெள்ளையில் பெரிய சிவப்புப் பூக்கள் போட்டதாக இருந்தது. அந்தப் பெரிய கட்டிலில் வெள்ளை பெட் ஸ்ப்ரெட் விரித்திருக்க, தலையணைகள் அடர்ந்த சிவப்பிலேயே இருந்தது. இத்தனையும் போதாததற்கு, அதன் மேல் சிவப்பு ரோஜா இதழ்கள் தூவப்பட்டிருந்தது. விக்கித்துப் போனாள் பைரவி!

அவளருகில் வந்தவன், அந்த வெள்ளை நிறப் பட்டை அவள் கையில் கொடுத்து விட்டு,

நைட் இங்கதான் தங்கப் போறோம் பைரவி.” என்றான்

**–**–**–**–**–**–**

அந்த நிறைவான அமைதியில், ஆனந்தனின் வெற்று மார்பின் மேல் தலை வைத்து கண்மூடிப் படுத்திருந்தாள் பைரவி. தூக்கம் தொலைந்து போயிருந்தது. கடந்து போன மணித் துளிகள் கண்முன் நிழலாடியது.

அந்த இடத்திற்கு ஏற்றாற்போல் வெண்பட்டும், அரக்கு நிற ப்ளவுசுமாக வந்தவளை கண் இமைக்காமல் பார்த்திருந்தான் ஆனந்தன். ட்ரெஸ்ஸிங் டேபிளின் மேல் இருந்த மல்லிகைச் சரத்தை அவளிடம் நீட்ட, வாங்கிக் கொண்டவள், தலை நிறைய சூடிக் கொண்டாள். படு கேஷுவலாக இரவு உடையில் இருந்தவன் அவளை அலங்காரப் படுத்தி இருந்தான். அந்தக் கட்டிலில் அமர்ந்து தன்னையே பார்த்திருந்தவன் பார்வையில் சங்கடப்பட்டவள், என்ன செய்வதென்று தெரியாமல் திணற, அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டவன் அவளைக் கைநீட்டி இழுத்து தனக்குப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான். அவள் கைகளை தன் கைகளில் எடுத்தவன்

பட்டு…! உனக்கு ஏதாவது சொல்லணுமா?” என்றான். அவள் அவனை நிமிர்ந்து கேள்வியாகப் பார்க்கஅவள் கழுத்தில் அன்று காலையில் தான் கட்டியிருந்த தாலி மின்ன, மெதுவாக அதை வெளியே இழுத்தவன்,

பட்டுஇது எனக்கு என்னென்னவோ ரைட்ஸ் குடுத்திருக்குஎன்று இழுக்கவெட்கத்தோடு தலை குனிந்தவள் முகத்தில் சம்மதத்தின் சாயல் தெரிய, அதற்கு மேல் அங்கே பேச்சுக்களுக்கு இடமின்றிப் போய் விட்டது. சத்தங்களற்ற மௌனமே அங்கு குடியிருக்க அவன் ஆழ்ந்த குரல்பைரவிபைரவி…என்று அவள் பெயரை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருந்தது. முத்தத்தின் சத்தம் மட்டும் பின்னணியில் கேட்க, பைரவி முழுதாய் அவனுக்குள் கரைந்து போனாள்.

லேசாக அசைந்தவளின் ஸ்பரிசத்தில் கண் விழித்தவன்

ஹேய் பட்டு, தூங்கல்லையா?” என்றான்

ம்ஹூம், தூக்கம் வரலை.” அவள் தலையை மெதுவாக அவன் கோதிக் கொடுக்க

ஆனந்த்!”

என்னடா

பசிக்குதுஎன்றாள் குழந்தையாக. சட்டென்று எழுந்தவன்,

எழுப்பி இருக்கலாமே பைரவிஎன,

நல்லா அசந்து தூங்கினீங்க. நானாவது ஈவ்னிங் தூங்கினேன். நீங்க அது கூட இல்லை. அதான் எழுப்பலைஅவள் விளக்கம் சொல்ல, இன்டர்கொம் எடுத்து ரிசோர்ட்டின் கிச்சனுக்கு அழைத்து சூடாகப் பால் கேட்டான்.

இதோ இப்போ கொண்டு வந்துருவாங்கடா” 

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அழைப்பு மணி ஒலிக்க, எழுந்து போனவன் சூடான பாலோடு வந்தான். அவள் பருகி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி அந்தக் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்

என்ன ஆனந்த்?”

நிறையப் பேசனும் பைரவி.” என்றான்

நானும் தான், ஆனா இப்போ இல்லைஅவன் ஆச்சரியமாகப் பார்க்க

இப்போ நீங்க பாடுறீங்கஎன்றாள் உத்தரவு போல. அவன் தன் தலைகோதிச் சிரித்து விட்டு,

எது? இன்னைக்கு கார்ல கேட்டோமே, அந்தப் பாட்டா?” என்றான்.

ஆனந்த்…” அவள் செல்லமாகச் சிணுங்க, அவள் கண்களையே பார்த்தவன்

கனவை சுமந்த கயல்விழி

உறவில் கலந்த உயிர்மொழி

இதயம் முழுதும் புது ஒளி

இரவல் தந்த அவள் மொழி

சொந்தமும் ஆகி பந்தமும் ஆகி

என்னுயிர் வாழும் சொர்க்கமும் ஆகி

இமைக்க மறந்து இணைந்தவள்

வெண்பனி வீசிடும் மேகங்களே

சிந்திடும் மோகன ராகங்களே

உலா வரும் நிலா தொடும்

காதல் ராஜ வீதியில்

கானம் பாடி ஊர்வலம்

வசந்தமே அருகில் வா

நெஞ்சமே உருக வா

என்று பாடி முடிக்க, சிலையென அமர்ந்திருந்தாள் பைரவி. அவளின் பார்வை அவனுக்கு போதையூட்ட, அந்த நெகிழ்வான பொழுதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டான். அங்கே இன்னுமொரு நாடகத்தை நடத்தி முடித்தான் ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

 

 

 

 

error: Content is protected !!