aanandha bhairavi 23

aanandha bhairavi 23

ஆனந்த பைரவி 23

அந்த சிவப்புக் கம்பளியை கழுத்து வரை இழுத்து மூடிக்கொண்டு இதமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள் பைரவி. ஸி யை நன்றாக குறைத்து விட்டிருந்தான் ஆனந்தன். குற்றாலத்தின் ஈரப்பதன் ஏற்கனவே காற்றில் கலந்திருந்தது. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தவள் கன்னங்களை வருடி விட்டு

குட் மார்னிங் பட்டுஎன்றான். கண்களைத் திறவாமலேயே,

குட் மார்னிங் ஆனந்த்என்றாள். குரலில் இன்னும் தூக்கக் கலக்கம் இருந்தது.

திருப்பள்ளியெழுச்சி பாடனுமா?” என்றான் கேலியாக. லேசாகச் சிரித்தவள்,

பாடுங்களேன், நீங்க எது பாடினாலும் நான் கேட்டுட்டே இருப்பேன். நான் உங்க ஃபேன் ஆனந்த்என்றாள்.

முதல்ல வைஃபா நட பட்டு, அதுக்கப்புறம் ஃபேன் ஆகலாம்.” அவள் ஒற்றைக் கண் திறந்து பார்க்க, அவன் அருகில்டீ பொட்இருந்தது.

டீ ரெடி மேடம்என்றான் கேலிக் குரலில். அசடு வழிந்தவள்,

கொஞ்சம் தூங்கிட்டேன் ஆனந்த்என்றாள்

கொஞ்சம் இல்லை, இப்போ நேரம் ஒன்பது மணிஅவன் சொல்லவும் அடித்துப் பிடித்து எழும்பினாள்.

ஹேய் என்னாச்சுடா?”

ரொம்ப லேட் ஆகிடுச்சு ஆனந்த்அவள் எழ முயல, அவளைத் தடுத்தவன்,

இப்போ என்ன அதுக்கு, டீயை குடிச்சுட்டு போ பட்டு.”

ப்ரஷ் பண்ணலையே!”

இது லண்டன் ஸ்டைல், ஒரு பொண்ணு லியம் வீட்டுல எனக்கும் இப்படித்தான் பெட் கொஃபி குடுத்தா பட்டுஅவன் அப்பாவியாக சொல்ல சிரித்தவள்,

ஞாபகம் வெச்சிருக்கீங்க.” என்றாள்.

இன்னும் நிறையவே ஞாபகம் இருக்கு, ஆனா இப்போ பேச டைம் இல்லைடா. சீக்கிரம் ரெடியாகு, வீட்டுக்கு போய்ட்டு அப்புறம் கொடி வீட்டுக்கு போகலாம்.” அவன் சொல்ல, டீயைக் குடித்து முடித்தவள் பாத்ரூமுக்கு ஓடினாள்.

**–**–**–**–**–**–**

பெருமட்டிற்கு உறவினர்கள் சென்றிருக்க, ரொம்பவும் நெருக்கமான சொந்தங்கள் ஒன்றிரண்டு பேர் மட்டும் வீட்டில் இருந்தார்கள்

ஆனந்தனும், பைரவியும் வர அந்த இடம் மீண்டும் கலகலப்பாகியது. வாசுகி மருமகளை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். நண்பகல் நெருங்கவே அனைவரும் கொடி வீட்டிற்குச் சென்றார்கள்.

அருந்ததி விருந்தை அமர்க்களப் படுத்தி இருந்தார். அத்தனை பேரும் உண்ட களைப்பில் உட்கார்ந்து அளவளாவிக் கொண்டிருக்க, ஆனந்தனும், பைரவியும் ஓய்விற்காக அவள் அறையில் இருந்தார்கள்.

பட்டு, இந்த வீடு நான் சின்ன வயசா இருக்கும் போதே தாத்தா என் பேர்ல எழுதி வச்சுட்டாங்க.”

அப்படியா?”

ம்எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து இது என்னோட வீடு அப்படீங்கிற உணர்வு எனக்கு வந்திருச்சு.” அவள் புன்னகையோடு கேட்டிருக்க

எப்பவும் ஓய்வுன்னு தேவைப்பட்டா இங்கே வந்திருவேன். என்னோட நிம்மதி இந்த வீடுதான்.”

ம்…”

நீ, முதல் நாள் நம்ம வீட்டுக்கு வந்தாயே ஞாபகம் இருக்கா?”

என் வாழ்க்கையில அந்த நாளை மறக்க முடியாது ஆனந்த்

ம்அப்போ பாட்டிக்கு என்ன தோணுச்சோ தெரியாது. சட்டுன்னு சாவியைத் தூக்கிக் குடுத்துட்டாங்க. எனக்கு என்னவோ போல ஆச்சுஅவள் ஆச்சரியத்துடன் கேட்டிருக்க, அவன் தொடர்ந்தான்.

பாட்டிக்கு, இந்த வீடு எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு தெரியும். அப்படியும் முன்ன, பின்ன தெரியாத பொண்ணுக்கு குடுத்தாங்கன்னு எனக்கு சின்ன வருத்தம்.”

சண்டை போட்டீங்களா?”

இல்லையில்லை, சண்டையெல்லாம் போடலை. இப்படிக் குடுத்துட்டாங்கன்னு தாத்தாக்கிட்ட குறைப்பட்டேன். தாத்தாக்கும் ஒரே ஆச்சரியம்!” கட்டிலில் கால் நீட்டி அவன் சாய்ந்து அமர்ந்திருக்க, அவன் மார்பில் தலை சாய்த்து அவளும் கதை கேட்டபடி இருந்தாள்.

ஆனா பாட்டி அப்புறமா சொன்னாங்க. பைரவி கண்ணுல உன்னைப் பார்க்கும் போது அவ்வளவு அன்பு தெரிஞ்சது. இந்தப் பொண்ணுதான் உனக்குன்னு எழுதியிருக்கு. அதனால்தான் சட்டுன்னு உன் வீட்டு சாவியைக் குடுத்தேன், அப்படீன்னாங்க.” சிலிர்த்தது பைரவிக்கு.

ஆனந்த்

ம்…”

முதல் நாள் என்னை எவ்வளவு கேலியா பார்த்தீங்க தெரியுமா?”

அதுசிட்டி பொண்ணுங்கன்னா இப்படித்தான் அப்படீன்னு ஒரு எண்ணம் வந்திருச்சு. அதை என்னால மாத்திக்க முடியலை பைரவி.” அவள் மௌனமாக இருக்க, அவன் தொடர்ந்தான்.

ஆனா உன்னைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாவே இருந்தது

ஏன் அப்படி?”

தன்னை மறந்து இந்த இயற்கையை ரசிக்கிற, ஆத்மநாதன் அங்கிள் கிட்ட அவ்வளவு பாசமா இருக்கே! எனக்கு, இந்தப் பொண்ணு உண்மையிலேயே வெளியூர் பொண்ணுதானா அப்படீன்னு சந்தேகமே வந்திருச்சு.” சிரித்தவள்

நானே அப்படித்தான் நினைச்சேன்.”

எப்படி?”

உண்மையிலேயே நான் திருச்சி பொண்ணுதானான்னு. ஒரு தரம் கமலாக்கா கூட கேலி பண்ணினாங்க. பாப்பாக்கு போன ஜென்மத்தில இதுதான் சொந்த ஊரோன்னு.” அவனும் சேர்ந்து சிரித்தவன்,

எல்லாம் பக்கா ப்ளான். வளைச்சுப் போடன்னே வந்திருக்காப்பா! இது தெரியாம நான் முறைச்சுக்கிட்டு திரிஞ்சிருக்கேன்.”

ஆத்மநாதன் அங்கிள் ஃபோட்டோ குடுத்தப்போ அப்படி ரியாக்ட் பண்ணினீங்க! நொறுங்கிப் போய்ட்டேன். அதுக்கப்புறம் பாத்தா ஐஷு, அன்னைக்கு நைட் லியம் கூப்பிட்டு பேசினான். அவன் கிட்ட சொல்லி அழுதேன் தெரியுமா?” அவள் மனக்குறையோடு சொல்ல, அவள் தலையை வருடிக் கொடுத்தவன்

நான் ரொம்பவே ஷாக் ஆகிட்டேன் பைரவி. ஏன் அப்படி நடந்துக்கிட்டேன்னு தெரியலை. ஒரு வேளை உன் பக்கம் நான் சாஞ்சுடுவேன்னு பயப்பட்டனோ!”

நீங்க? என் பக்கம்?” அவள் கேலியாக கேள்வி எழுப்ப,

இல்லையா பின்னே! இப்ப என்ன நடந்திருக்காம்?” என்றான்.

நீங்க என்னைத் திரும்பிப் பார்க்க நான் என் கையைக், காலை எல்லாம் உடைச்சிக்கிட்டேன்அவள் சொல்லி முடிக்க, அவன் உடல் லேசாக அதிர்ந்தது.

அதை ஞாபகப் படுத்தாதே பைரவி. இப்போ நினைச்சாலும் என்னமோ பண்ணுது. அப்படி என்ன யோசனை? அத்தனை பெரிய வேன் வந்தது கூட தெரியாம?”

வேற என்ன? எல்லாம் இந்த பண்ணையாரைப் பத்தித்தான்.”

அவன் அவளை இன்னும் கொஞ்சம் சேர்த்தணைக்க,

ரெண்டு நாளா உங்களைப் பார்க்கலை, ரிசோர்ட்டுக்கு வந்தா பாக்கலாம்னு தான் வந்தேன். அந்த யோசனையில இதைக் கவனிக்கலை.” 

அத்தனை அடிபட்டு, அவ்வளவு ரத்தம் போயிருக்கு! அப்ப கூட, ஆனந்தைப் பாக்கணும் லியம்னு சொன்னியே, ஆடிப்போயிட்டேன் பைரவி. அப்போ எனக்கு தோணிச்சு, இந்தப் பொண்ணை இனி நம்மளாலே விட முடியாதுன்னு.” அவனை அண்ணார்ந்து பார்த்து அவள் சிரிக்க, அந்த இதழ்களில் ஆசையாக முத்தமிட்டான்.

ஆனா ஒன்னு மட்டும் தோணிச்சு பைரவி! இந்தக் காதலை முழுசா நானும் அனுபவிக்கனும், அதுக்கப்புறம் தான் கல்யாணம். வீட்டுல கூட எல்லார்க்கும் சொன்னேன். என்னை யாரும் அவசரப் படுத்தாதீங்க நானா சொல்லுறப்போ பேசலாம்னு.” அவன் சற்று நிறுத்தி மௌனமாக, அடுத்தது என்ன வரப்போகிறது என்று புரிந்தது பைரவிக்கு.

ஒரு நிமிஷம் கூட என்னை நினைச்சுப் பார்க்கலை நீ.” 

ஆனந்த்…” அவள் தடுமாற, மறுப்பாக தலை அசைத்தவன்

என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை.” 

உங்ககிட்ட சொன்னா நீங்க போக விடமாட்டீங்க

வேற என்ன பண்ணனும். நீ யாரோ பேசுறதை கேட்டுக்கிட்டு டான்ஸ் ஆடுவே, உன் கூட சேர்ந்து நானும் ஆடனுமா?” அவன் கேட்ட தொனியில் அவள் பக்கென்று சிரிக்க, அவளை முறைத்தவன்,

என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு. உன்னையெல்லாம்…” அவளை கட்டிலில் தள்ளியவன் அவள் புறம் திரும்பி, அந்தக் கன்னத்தில் சற்று வலிக்கவே கடித்தான்.

..னந்..த்..” அவள் அலறவே, அதைப் பொருட்படுத்தாதவன்,

ஒன்னுமே ஓடலை. கமலாக்கா வந்து சொன்னதுக்கு அப்புறம்தான் பிரச்சினை என்னன்னே புரிஞ்சுது. லியமுக்கு ஃபோனைப் போட்டு என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உன்னோட ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரியும். அடிக்கடி உன்னை ஃபோட்டோ எடுத்து அனுப்புவான்.” 

இது எப்போ? எனக்குத் தெரியாதே!” லேசாகச் சிரித்தவன்

நான் தான் சொல்லியிருந்தேன். எனக்கு ஆறுதல் அந்த ஃபோட்டோஸ் மட்டும் தான். நீ போய் ஒரு பத்து நாள் இருக்கும். ஒரு கோள் வந்தது, லண்டனில் இருந்து…” அவள் ஆச்சரியமாகப் பார்க்க, மர்மமாகப் புன்னகைத்தவன்,

நான், நீதான் கூப்பிடுறையோ அப்படீன்னு ஆன்ஸர் பண்ணினாஎன் மாமனார் பேசினார்

யாரு? அப்பாவா?”

ம்…, ரொம்ப நேரம் பேசினார். என் பொண்ணு தப்பு பண்ணுறா, ஆனாலும் என்னால அவளை விட்டுக் குடுக்க முடியாது. இப்போ நான் அவளுக்கு துணையா நிக்கனும். நீங்க அவளைத் தப்பா புரிஞ்சுக்காதீங்க, அவளை வெறுத்துராதீங்க, அப்படீன்னு…” அவள் மௌனமாக இருக்கவே, அவன் மேலும் தொடர்ந்தான்

அதுக்கப்புறம் நான் நகர்த்தின ஒவ்வொரு நகர்வையும் அவருக்கு தெரியப்படுத்தினேன். ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லாம் பண்ணினோம். நான் லண்டனுக்கு ஃப்ளைட் ஏர்றதுக்கு முன்னாடி உங்கப்பாக்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன்.” அவள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள்

இப்பவும் சொல்லுறேன் பைரவி, நீ என்னை விட்டுட்டு போனதை நினைச்சா, எனக்கு அவ்வளவு ஆத்திரம் வரும். ஆனா என்னால அதை உங்கிட்ட காட்ட முடியாது. ஏன்னாஉன்னைக் காயப்படுத்திப் பார்க்கிற தைரியம் எனக்கில்லை பைரவி.”

ஆனந்த்அது…” அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதைத் தடுத்தவன்,

போதும் பைரவி, ரொம்பவே பேசிட்டோம். பேசி எதுக்குடி பட்டு நாம டைம வேஸ்ட் பண்ணனும்!” பேச்சின் போக்கு மனதைக் கனமாக்கவே, சட்டென்று பேச்சை மாற்றினான் ஆனந்தன். அதன் பிறகு அங்கே காதல் மட்டுமே ஆட்சி செய்தது.

**–**–**–**–**–**–**

வாழ்க்கை ஒரு ஒழுங்கிற்கு வந்திருந்தது ஆனந்தனுக்கும், பைரவிக்கும். திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. சந்திரனும், அருந்ததியும் திருச்சி வீட்டிற்கு சென்று விட்டனர். வாரம் ஒரு முறை வந்து மகள், மருமகனோடு செலவழிப்பார்கள். சந்திரனுக்கு இன்னும் ஒரு மாத விடுமுறை பாக்கி இருந்ததால் திருச்சியிலேயே தங்கினார்கள்.

வாசுகியும் வாரம் தவறாமல் வந்து விடுவார். சாதனா தான் கொஞ்சம் சிரமப்பட்டாள். ஆனால் வாசுகி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

ஆனந்தன் காலையிலேயே குற்றாலம் போய்விடுவான். மதியம், வீட்டிற்கு முன் போல சாப்பாட்டிற்கு வருவதில்லை. மாலை ஆறு மணியோடு வீட்டுக்கு வருவதை வழக்கமாக்கி இருந்தான். அதனால் பகல் பொழுதும் ரிசோர்ட்டிலேயே கழிந்தது.

பைரவி மதியத்துக்கான உணவோடு குற்றாலம் வந்துவிடுவாள். இரண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, வேலையைக் கவனிப்பார்கள். பைரவியையும் பிஸினஸில் பார்ட்னர் ஆக்கி இருந்தான். அதனால் அவளுக்கும் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தது.

மாலை இருவருமே ஒன்றாக வீடு திரும்புவார்கள். சில சமயங்களில் வீட்டிற்கு தகவல் சொல்லிவிட்டு ரிசோர்ட்டில் தங்குவதும் உண்டு. தங்களுக்குத் தேவையான தனிமையை அமைத்துக் கொண்டார்கள். வாழ்க்கையை இனிக்க, இனிக்க அனுபவித்தார்கள்.

அன்று சந்திரனுக்குப் பிறந்த நாள். பைரவி அப்பாவோடு பிறந்த நாள் கொண்டாட ஆசைப்பட்டதால், எல்லோரும் கிளம்பி திருச்சி வந்திருந்தார்கள்.

விருந்துண்டு முடித்துவிட்டு தாத்தாவும், பாட்டியும் ஓய்வெடுக்க, சந்திரனுக்கு பாஸ்போர்ட் ஆஃபிஸில் ஏதோ வேலை இருக்கிறது என்று ஆனந்தும், சந்திரனுடன் கிளம்பிப் போயிருந்தான். வாசுகியும், ராஜகோபாலும் அவர்கள் நண்பர் ஒருவரின் வீட்டிற்கு போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.

அருந்ததி, நானும் வந்ததுக்கு அப்புறமா டின்னர் ரெடி பண்ணலாம். அவசரப்பட்டு தனியா கஷ்டப்படாதே என்ன.”

சரிங்கண்ணி, அனேகமா கமலா இன்னைக்கு வந்திடுவா, நீங்க கவலைப்படாமே நல்லா என்ஜாய் பண்ணுங்க.” 

வாசுகி கணவரோடு கிளம்பிப் போக, அருந்ததியும், பைரவியும் உதிரிப்பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அம்மாவிற்கும், மகளிற்கும் பேச ஆயிரம் கதைகள் இருந்தது. கை அதன் பாட்டில் வேலை செய்ய, வாய் பேசிய வண்ணம் இருந்தது. கமலா திடீரென்று வீட்டுக்குள் வந்தவர்,

பாப்பாபாப்பா…!” என்றார் சத்தமாக.

கமலாக்கா, வந்துட்டீங்களா? என்ன ஆச்சு? எதுக்கு இவ்வளவு சத்தம்?” பைரவி கேலியாகக் கேட்டாள். இரண்டு நாட்கள் தன் சொந்த ஊருக்குப் போயிருந்தார் கமலா.

பாப்பா, இந்த ஆர்த்திப் பொண்ணு இருக்கில்ல?” கமலா சொன்னதுதான் தாமதம், பைரவியின் முகம் களையிழந்து போனது.

என்னாச்சுகமலாக்கா…?” வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது பைரவிக்கு.

அந்த லூசுப்பொண்ணு தற்கொலை பண்ணிக்கிச்சாம்.”

என்ன?!” கமலா சொன்னவுடன், மடியிலிருந்த உதிரிப்பூக்கள் சிதற, பைரவி எழுந்து விட்டாள்.

என்னக்கா சொல்லுறீங்க?” 

ஆமாம் பாப்பா, உங்க ஃப்ரெண்ட் சந்தியாவை இப்போதான் வரும் போது பாத்தேன். அவதான் சொன்னா. ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் இருக்காங்களாம். கொஞ்சம் சீரியஸாத்தான் இருக்கான்னு சொன்னாங்க பாப்பா.”

பைரவி ஸ்தம்பித்துப் போனாள்! முகம் வெளுறிப் போக, கண்கள் நிலைகுத்த, ஸ்மரணை அற்று நின்றிருந்தாள் பைரவி.

ஆனந்தனின் பைரவி!

 

 

 

error: Content is protected !!