aanandha bhairavi 25

aanandha bhairavi 25

ஆனந்த பைரவி 25

ஆர்த்தியை ரூமிற்கு மாற்றி இருந்தார்கள். ஏதோ மாத்திரை எடுத்திருந்தாள். அரவிந்தன் அவள் அமெரிக்காவில் இருந்து வந்ததில் இருந்து அவள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்தான்

அவள் செயற்பாடுகளை கொஞ்சம் கவனித்தபடியே இருந்ததால் உடனேயே அள்ளிப் போட்டுக் கொண்டு வர முடிந்தது.

அம்மாவை சமாதானப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி இருந்தான். ஆர்த்தியின் அண்ணனாக தான் இனி செயற்பட வேண்டிய கட்டத்தில் இருப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வெளிநாட்டு சூழல், பெரியப்பாவின் குடும்பம் என அவள் சிந்தனைக்கு வேறு விஷயங்களை தீனியாகக் கொடுத்தால் அவளை இலகுவாகஆனந்தன்என்னும் மாயையிலிருந்து விடுவிக்கலாம் என்று எண்ணி இருந்தான். ஆனால் நிலமை கை மீறிப் போகவே, இனியும் தான் கையைக் கட்டிக்கொண்டு சும்மா பார்த்திருப்பது நிறையப் பேரின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிவிடும் என்று புரிந்தது.

ஆர்த்தியின் ரூம் கதவைத் திறந்து உள்ளே வர, களைப்பாகப் படுத்திருந்தாள் ஆர்த்தி. ஆனால் விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள் என்பது பார்த்தாலே புரிந்தது.

இப்போ எப்படி இருக்கு ஆர்த்தி?”

ம்…” 

நீ பண்ணின காரியத்தோட வீரியம் உனக்குப் புரியுதா?”

நீ எதுக்கு என்னைக் காப்பாத்தினே?”

உன்னை நான் காப்பாத்தலைன்னா நிறைய பேர் அவங்க வாழ்க்கை பூரா சிலுவை சுமக்க வேண்டி வந்திருக்கும்.”

அப்போ, உனக்கு நான் முக்கியம் இல்லை, அப்படித்தானே?”

எனக்கு நீ முக்கியம் என்றதாலதான் என்னோட நல்ல நண்பனை உனக்காக கொண்டு வந்தேன். ஆனா அந்த வாழ்க்கையை உன் முட்டாள்த் தனத்தாலே நீ தட்டிக் கழிச்சே.” ஆர்த்தியின் தலை தானாகக் குனிந்தது.

அப்பவும் நான் உங்கிட்ட எவ்வளவு வாதாடினேன். நீ காதிலேயே போட்டுக்கல்லை.” 

எல்லாம் அந்த பைரவியாலதான். அவ மட்டும் குறுக்கே வராம இருந்திருந்தா, எல்லாம் நான் நினைச்ச மாதிரி நடந்திருக்கும்.”

முட்டாள்த்தனமா பேசாதே. இந்த பைரவி இல்லைன்னா இன்னொரு பார்க்கவி வந்திருப்பா. தப்பை உன் மேல வச்சுக்கிட்டு மத்தவங்களை குறை சொல்லாதே ஆர்த்தி.”

நீ எனக்கு அண்ணாவா? இல்லை அந்த பைரவிக்கு அண்ணாவா?”

சொந்தங்களையெல்லாம் தாண்டி நான் ஒரு நல்ல மனுஷனா வாழ ஆசைப்படுறேன் ஆர்த்தி.”

ஆக நீயும் இதுக்கு எல்லாம் உடந்தையா? என்னை அமெரிக்காவுக்கு அனுப்பிட்டு இங்க கல்யாணம் பண்ணி கொடுத்தயா?”

உனக்கு இப்ப எல்லாமே தப்பாத்தான் தெரியும் ஆர்த்தி. சரி நான் உன்னை ஒன்னு கேக்குறேன், நீ ஆனந்தனை கல்யாணம் பண்ணி இருந்தா அந்த வாழ்க்கை சந்தோஷமா இருந்திருக்குமா?”

ஏன் அப்படிக் கேக்குறே?”

பதில் சொல்லு, நீ சந்தோஷமா இருந்திருப்பியா?”

ஆமா, அதிலென்ன உனக்கு சந்தேகம்?”

நிச்சயமா இல்லை ஆர்த்தி. உன் பிடிவாதத்துல நீ உறுதியா இருக்க, ஆனந்தன் அவன் பிடியில நிக்க, ரெண்டு பேர் வாழ்க்கையும் சீரழிஞ்சு போயிருக்கும்.”

அப்படியெல்லாம் இல்லை. நீயா எதுவும் கற்பனை பண்ணிக்காதே.” மென்மையாக சிரித்தான் அரவிந்தன்.

உன்னையே நீ சரியா புரிஞ்சுக்கலை ஆர்த்தி. முதல்ல உனக்கு ஆனந்தன் மேல இருக்கிறதுலவ்’ கிடையாது. அதைப் புரிஞ்சுக்க.”

லவ் இல்லைன்னா நான் ஏன் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கலை?”

உன் வாழ்க்கையில வந்த முதல் ஆண் ஆனந்தன். அது உன் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. அந்த பிம்பத்தை உன்னாலே அழிக்க முடியலை. ஆனா அது காதல் இல்லை.” ஆர்த்தி மௌனமாக கேட்டிருந்தாள்.

உன் மனசுல ஆனந்தன் மேல உண்மையான லவ் இருந்திருந்தா அத்தனை ஈசியா அந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருக்க முடியாது. எப்பாடுபட்டாவது நடத்திக்கத்தான் பாத்திருப்பே.”

நான் எவ்வளவோ முயற்சி செஞ்சேன். ஆனா ஆனந்தன் ஒன்னுக்கும் ஒத்துவரலை.”

என்ன செஞ்சே நீ? முதல்ல கண்டிஷன் போட்டதே நீதான். கல்யாணம் பண்ணினா பொண்ணுங்க, புருஷன் வீட்டுல போய் வாழுறதுதான் சரி, நியாயம். நீ அதுக்கே மறுப்புத் தெரிவிச்சே.”

என்ன அண்ணா இப்படி பேசுறே நீ? அந்த கிராமத்துல உக்காந்துக்கிட்டு நான் என்ன பண்ண முடியும்?”

இதுஇதைத்தான் நான் சொல்ல வர்றேன் ஆர்த்தி. உண்மையான காதல் இதெல்லாம் பாக்காதுடா. அங்க ஒருத்தி லண்டனை விட்டு வந்து அதே கிராமத்துல தானே இருக்கா, எப்படி? எப்படி ஆர்த்தி அவளால முடிஞ்சுது?” ஆர்த்தி எதுவும் பேசவில்லை.

அதுக்காக உன்னை நான் தப்பா சொல்லலை. அண்ணா சொல்றதை சரியா புரிஞ்சுக்கோ. ஆனந்தன் மேல உனக்கோ, உன் மேல ஆனந்தனுக்கோ காதல் கிடையாது. குடும்பத்துல பண்ணின ஏற்பாட்டை ரெண்டு பேரும் ஏத்துக்கிட்டீங்க. ஆனா அது தொடரல்லை, முடிஞ்சு போச்சு. நீங்க ரெண்டு பேருமா சேந்து அதை முடிச்சுக்கிட்டீங்க. அவன், அவன் வழியைப் பாத்துக்கிட்டு போகும் போது நாமளும், நம்ம வழியிலே போகணும். எதுக்கு இந்த வீணான வேலை எல்லாம்?” அவள் தொடர்ந்து மௌனிக்க, அரவிந்தன் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டான்.

ஆனந்தன் ஒவ்வொன்னையும் எங்கிட்ட சொல்லிட்டுத்தான் பண்ணினான். ஒரு ஆம்பிளையா எனக்கு எந்தத் தப்பும் தோணலை. நாளைக்கு எனக்கு ஒரு பொண்ணைப் பாத்து, கல்யாணத்துக்கு அப்புறம் அவ திருச்சியில வந்து இருக்க முடியாதுன்னு சொன்னா, நானும்சரிதான் போடின்னுதான் சொல்லுவேன்.” சட்டென்று ஆர்த்தி, அரவிந்தனைப் பார்க்க,

ஆமா ஆர்த்தி, யாரா இருந்தாலும் அப்படித்தான் பண்ணுவாங்க. நான் இப்பவும் உன்னைக் குறை சொல்லலைடா. யதார்த்தத்தை புரிஞ்சுக்கோ. உனக்குள்ள நீயா உருவாக்கி இருக்கிற மாயையை உடை. வெளில வா. ஆனந்தனை விட பெட்டரா ஒன்னு வரும் போது, உனக்குள்ளயும் ஒரு ஆழமான காதல் வரும். அது பின்னாடி போ. அண்ணா எப்பவும் உன் கூட நிப்பேன்டா.” அவள் தலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தான் அரவிந்தன்.

தற்கொலை, கெட்டிக்காரத்தனமான முடிவில்லை ஆர்த்தி. வாழ்க்கையை சந்திக்கத் தைரியமில்லாத கோழைங்க பண்ணுறது. அந்த ஒரு நிமிஷ முட்டாள்த்தனத்தை நீ கடந்துட்டே. நீ அவசரப்பட்டு எடுத்த முடிவினால எவ்வளவு மனவருத்தம். அனுதாபம் எங்கிற பேர்ல கேள்வி கேக்கிறவங்களை சமாளிக்க முடியல்லை. டாக்டர் அப்பாவுக்கு தெரிஞ்சவங்க எங்கிறதால போலீஸ் அது, இதுன்னு போகாம பாத்துக்கிட்டாங்க. இல்லைன்னா மானம் கப்பல் ஏறியிருக்கும். இதெல்லாம் கூட பரவாயில்லை, நம்ம அம்மா பண்ணின கூத்து இருக்கே!” ஆர்த்தி அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்க்க

பைரவி நேத்து இங்க வந்திருந்தா, உன்னைப் பார்க்க.” ஆர்த்திக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை

என்னண்ணா சொல்லுறே?”

அந்தப் பொண்ணு எப்பவுமே உனக்குக் கெடுதல் நினைச்சது கிடையாது. எப்பவுமே அது உனக்காக ஒதுங்கித்தான் போயிருக்கு. ஆனந்தனே வலுக்கட்டாயமா அந்தப் பொண்ணு பின்னாடி போகும் போது, பாவம் அது என்ன பண்ணும் சொல்லு?”

அம்மா என்ன பண்ணினாங்க?”

அந்தக் கேவலத்தை ஏன் கேக்குறே! அந்தப் பொண்ணு தாலியை பிடிச்சு இழுத்து, உன் தாலி நிலைக்காதுன்னு சாபம் குடுத்து, வேற யாராவதா இருந்திருந்தா நானே ரெண்டு அறை வெச்சிருப்பேன். பாவம் பைரவி, அழுதுக்கிட்டே போனா.” 

ஆர்த்தி உறைந்து போனாள். ஏதோ ஒரு அவசரத்தில் தன் வாழ்க்கையில் இனி எதுவும் இல்லை என தான் எடுத்த முடிவு எத்தனை முட்டாள்தனமானது என்று இப்போது புரிந்தது. அரவிந்தன் ஒவ்வொன்றாகச் சொல்லும் போது, ஒரு மூன்றாம் நபராக பிரச்சினையைப் பார்க்கும் போது, இது ஒன்றுமே இல்லை என்று தான் தோன்றியது. மௌனமாக இருந்து சிந்தித்தாள்.

ஆனால் அரவிந்தன் அத்தோடு நிறுத்தவில்லை. தன் தோழி ஒருத்தியின் அக்கா, மனநல மருத்துவராக இருந்தார். அவரை தன் தோழியுடன் சென்று அன்றே சந்தித்தான். அவரின் ஆலோசனைப்படி, ஆர்த்தியையும், அவரையும் சந்திக்கச் செய்தான். ஆர்த்தியும், அம்மாவும் ஏதாவது ஆர்ப்பாட்டம் பண்ணக்கூடும் என்று எண்ணி, அந்த மருத்துவரை தன் தோழி என்றே அறிமுகப்படுத்தினான்.

தன் தங்கை ஹாஸ்பிடலில் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவர் பார்க்க வந்திருப்பதாகக் கூறி அவரை ஆர்த்தியுடன் பேச வைத்தான். யாருக்கும் தெரியாமல் ஒரு கவுன்சிலிங் அங்கே நடந்து கொண்டிருந்தது.

**–**–**–**–**–**–**

காலையிலிருந்தே வீடு அமைதியாக இருந்தது. அவரவர் வேலையை பார்த்த வண்ணம் எல்லோரும் வளைய வந்து கொண்டிருந்தார்கள். அருந்ததி அதன் பிறகு எதுவுமே பேசவில்லை. அந்த ஆரம்பகட்ட அதிர்ச்சி போனபிறகு இயல்பாகி விட்டார். யார் சாபங் கொடுத்தால் என்ன? தான் கும்பிடும் தெய்வம் தன்னைக் கை விடாது என்று முழுமையாக நம்பினார்

சந்திரனும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. எத்தனை சந்தோஷமாக தன் பிறந்தநாளை கொண்டாட மகள் தன் குடும்பத்தோடு வந்தாள், என்று நினைத்த மாத்திரத்தில் நெஞ்சைப் பிசைந்தது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு இயல்பாகவே நடமாடினார்.

பைரவி தான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. தன் அறையிலேயே ஒடுங்கிக் கொண்டாள். பாட்டி அவளை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டு, வாசுகியும் கூட வர கோவிலுக்கு வந்திருந்தார்கள். இவர்கள் கோவிலுக்கு கிளம்ப, ஆனந்தன் கொஞ்சம் வேலை இருப்பதாக வெளியே போயிருந்தான்.

இரண்டு பெண்களுமாகச் சேர்ந்து அவள் மனதைத் தேற்ற மிகவும் பாடுபட்டார்கள். எந்தப் பெண்ணாக இருந்தாலும், நடந்த நிகழ்வு மிகவும் வீரியமானது என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அதைக் கடந்து வர அவளுக்கு கால அவகாசம் தேவை என்பதை அவர்களும் புரியாமல் இல்லை. இருந்தாலும் அவளை கலகலப்பாக்க முடிந்தவரை முயற்சித்தார்கள்.

அருந்ததியும், கமலாவும் பகல் உணவைத் தயாரித்துக் கொண்டிருக்க, கோவிலிலிருந்து பெண்கள் மூவரும் அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தார்கள். குடும்பத்தில் அத்தனை பேரும் உட்கார்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்

அந்த black Audi உள்ளே நுழைய, அதையே பார்த்தபடி இருந்தாள் பைரவி. ஒரு தாய்க்கு, தன் குழந்தையின் குரலில் இருக்கும் பேதத்தை வைத்தே அந்தக் குழந்தையின் மன நிலையைப் புரிந்து கொள்ள முடியும். அதே போல, அந்தக் காரின் ஓசையில் எதுவோ சரியில்லை என்று பிடிபட்டது பைரவிக்கு

மெதுவாக எழுந்த பைரவி காரை நோக்கிப் போக, எல்லோரும் அதை இயல்பாகவே எடுத்தார்கள். ஆனந்தன் காரை விட்டிறங்க, அவன் வலது கையில், முழங்கைக்கு சற்று கீழே ஒரு கட்டுப் போடப்பட்டிருந்தது.

ஆனந்த்…” பைரவியின் குரலில் பேதத்தை உணர்ந்தவர்கள், எல்லாருமாக எழுந்து வர, பைரவி நின்ற கோலத்தைப் பார்த்துவிட்டு,

என்னாச்சு பைரவிம்மா?” பாட்டி கேட்டபடி வரஆனந்தனைக் கை காட்டினாள் பைரவி. எல்லோர் பார்வையும் அங்கே திரும்ப, கையில் கட்டோடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் ஆனந்தன்.

என்னப்பா ஆச்சு?” வாசுகி பதற,

ஒன்னும் இல்லைம்மா, பக்கத்துல வந்த மோட்டோபைக், கார்ல மோதிட்டான். அதான் சின்னதா ஒரு காயம்.” அது சின்னக் காயம் இல்லை என்று எல்லோருக்கும் புரிந்தது. பைரவியை நினைத்தே அவன் நிலைமையை சமாளிக்கிறான் என்று எண்ணிக் கொண்டார்கள்.

பாத்து வரப்படாதா ஆனந்தா? பைரவியைப் பாரு, அப்படியே அப்ஸெட் ஆகிட்டாவாசுகி கடிந்து கொள்ள,

விடு வாசுகி, அவன் என்ன வேணும்னா பண்ணினான்?” பாட்டி குறுக்கிட்டவர்,

சரி எல்லாரும் வாங்க, பைரவி நீ ஆனந்தனைப் பாரு.” பாட்டி எல்லோரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தனிமை கொடுக்க,

பைரவி, பெருசா ஒன்னும் இல்லைடா, சின்ன அடிதான். நீ ஏன் அதுக்கு வருத்தப்படுறே?”

ஆனந்த்காருக்குள்ள இருந்த உங்களுக்கு இவ்வளவு பெரிய காயம்னா, எவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் ஆகி இருக்கனும்.”

இல்லை பட்டு, அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.” அவனை நம்பாத பார்வை பார்த்தவள், காரை நோக்கி நடந்தாள். ட்ரைவர் டோர் பக்கம் வந்து அவள் பார்க்க, அது நசுங்கிப் போய் இருந்தது. கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஹேய் பட்டு, என்னடா நீ சின்ன விஷயத்துக்கு எல்லாம் இப்படி அப்ஸெட் ஆகுறே. வண்டி ஓட்டினா சில சமயம் இப்படி ஆகுறது சகஜம்தானே. இதுக்குப் போய் ஃபீல் பண்ணுவியா? விடுடா

அவன் எத்தனை சமாதானம் செய்தும் அவள் வாடிய முகத்தை மலரச் செய்யவே முடியவில்லை.

மதியம் உணவை முடித்துக் கொண்டு எல்லோரும் பூஞ்சோலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எல்லா ஆயத்தங்களையும் பண்ணி விட்டு ஆனந்தன் தங்கள் ரூமிற்குள் வர, பைரவி அப்படியே அமர்ந்திருந்தாள்.

பைரவி, இன்னும் ரெடியாகாம என்ன பண்ணுற?” அவனை நிதானமாக அவள் நிமிர்ந்து பார்த்த பார்வையில், அவனுக்கு எதுவோ சரியில்லை என்று பட்டது.

பட்டு, என்னாச்சு?”

ஆனந்த்நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருந்துட்டு வர்றேன்.” அவள் உறுதியாகச் சொல்ல, திடுக்கிட்டுப் பார்த்தான் ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

 

 

 

error: Content is protected !!