காதல்
விஷ்வா ஆதியால் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க ஆரம்பித்திருந்ததை பார்த்த மருத்துவர் கூட வியப்பில் ஆழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
அதே சமயம் ஆதி மருத்துவரை பார்த்தும் தன் கண்ணீரை துடைத்துவிட்டு தலையை கவிழ்ந்து கொண்டு வெளியே சென்றுவிட,
மருத்துவர் விஷ்வாவின் உடல்நிலையை நன்கு சோதித்து அவனுக்கு வேண்டிய சிகிச்சையை செய்ய தொடங்கினார்.
சிகிச்சை அறைக்கு வெளியே,
ஆதியிடம் என்ன நிகழ்ந்ததென்று செல்லம்மா, கருணாகரன், சாரதா மூவரும் உச்சபட்ச பதட்டத்தோடு அவளிடம் தீவிரமாய் விசாரிக்க, அவளோ மௌனம் சாதித்தபடி நின்றாள்.
அவர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்கு தெரியவில்லை . மருத்துவர் வெளியே வந்து சொல்ல போகும் ஒற்றை வார்த்தைக்காக அவள் காத்திருந்தாள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு மருத்துவர் சிகிச்சை அறையை விட்டு வெளியே வர,
கருணாகரன் பதட்டத்தோடும் தவிப்போடு விஷ்வாவின் நிலை குறித்து வினவ அவர் முறுவலித்துவிட்டு,
“டோன்ட் வொர்ரி… உங்க சன் இப்போ ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டாரு… சீக்கிரம் குணமாயிடுவாரு… கண் விழிச்சிட்டா நத்திங் டு வொரி…அப்புறம் எல்லாமே நார்மலாயிடும்…” என்று சொல்ல எல்லோரின் முகமும் அத்தனை பிரகாசமானது.
“தேங்கயூ டாக்டர்… தேங்க்யூ ஸோ மச்” என்று ஆதி நெகிழ்ச்சியோடு கண்ணீர் நனைத்த உதட்டில் புன்னகை வழிந்தோட கூறினாள்.
“எனக்கு எதுக்கு தேங்க்ஸ் ? திஸ் இஸ் ஜஸ்ட் பிகாஸ் ஆஃப்… யூ டிட் திஸ் மிஸ் ஆதி… ” என்றவர் பெருமிதம் பொங்க சொல்லியவர் மேலும்,
“கிஸ் ஆஃப் லைஃப்(Kiss of life)… போன உயிரை திரும்பவும் மீட்டு கொண்டு வந்திட்டீங்க… வெல் டன்” என்று புகழுரைத்துவர் தன் கரத்தை நீட்டி அவளை பாராட்டும் விதமாக கைகுலுக்கிவிட்டு செல்ல,
மற்ற மூவரின் பார்வையும் ஆதியை சூழ அவள் ஓர் வெட்க புன்னகையோடு தலையை கவிழ்ந்து கொண்டாள்.
விஷ்வா மெல்ல மெல்ல தன் சுயநினைவை மீட்டு கொண்டிருந்தான். அவன் கண்விழித்து ஆதி என்று முனுமுனுக்க,
நர்ஸ் அவன் சுயநினைவு பெற்ற விஷயத்தை அவர்களிடம் தெரிவித்தாள். ஆனால் அவன் அவசர சிகிச்சை அறையில் வைக்கப்பட்டிருப்பதால் அவனை பார்க்க யாருக்கும் அனுமதிகிட்டவில்லை.
அவன் உடல் நிலை தேறி ஒருவாறு விழித்து கொண்ட நிலையில்,
அடுத்த நாள் விஷ்வா சாதாரண அறைக்கு மாற்றப்பட்டான்.
விஷ்வா மார்பில் கட்டுபோடப்பட்ட நிலையில் சாய்வாய் படுத்திருக்க சாரதா மகனின் கையை பிடித்து கொண்டு கண்ணீரை ஊற்றாய் பெருக்கி கொண்டிருந்தார்.
ஆதியோ அவருக்கு பின்புறமாய் நின்றுகொண்டு தோள்களை தடவி சமாதானம் செய்து கொண்டிருக்க,
கருணாகரன் தன் மனைவியின் முகத்தை கோபமாய் ஏறிட்டவர்,
“நீ முதல வெளியே வா… அவன் முன்னாடி அழுதழுது அவனை பலவீனப்படுத்தாதே”
என்று சொல்லி அழைத்தார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா” என்று விஷ்வா பதிலுரைக்க,
அப்போது கருணாகரன் அவனிடம் சமிஞ்சையால் ஆதியிடம் பேச சொல்லி கண் காண்பித்துவிட்டு சாரதாவை அமைதிப்படுத்தி வெளியே அழைத்து சென்றார்.
ஆதியும் அவர்களோடு வெளியேற பார்க்க விஷ்வா அவள் கரத்தை கெட்டியாய் பிடித்து கொள்ள,
அவள் அவன் முகத்தை பார்க்காமல் வெறுமையான உணர்வோடு எங்கோ வெறித்தாள்.
ஆனால் விஷ்வாவின் பார்வை அவள் முகத்தில் மட்டும் நிலைகொண்டிருந்தது. தெளிந்த ஓடை நீராய் இருக்கும் அவள் முகம் களையிழந்து பொலிவிழந்து கிடக்க, நிமிர்வாய் பார்க்கும் அவள் விழிகள் அழுது அழுது முற்றிலுமாய் சோர்வுற்றிருந்தது.
இவற்றை எல்லாம் ஒருபுறம் இருக்க, விஷ்வா தனக்கே உரிய கல்மிஷமான புன்னகையோடு அவளின் அழுந்த பூட்டியிருந்த இதழ்களின் மீது பார்வையை வீசியவன்,
“இப்போ ஒரு லைஃப் ஆஃப் கிஸ்… கிடைக்குமா?!” என்றவன் கேட்ட மறுநொடி
அவள் உச்சபட்ச கோபத்தோடு அவனை அடிக்க தன் கரத்தை ஓங்கியவள் அவன் இருந்த நிலையை பார்த்து தன் விரல்களை மடக்கி கொண்டு,
“டேமிட்” என்று தன் சினத்தை கட்டுபடுத்தி கொண்டாள்.
“மயக்கத்திலிருக்கும் போதுதான் காதலும் முத்தமும் ? முழிச்சிக்கிட்ட அடியும் திட்டும்தானா? என்னடி நியாயம் இது?” என்றவன் பரிதாபமான முகபாவனையோடு கேட்க,
“ஸ்டாப் டாக்கிங் நான்ஸென்ஸ்… நான் ஒண்ணும் உனக்கு முத்தம் கொடுக்கல… முதலுதவிதான் செஞ்சேன் ரைட்” என்றாள் கோபமாக!
“மத்தவங்களுக்கு செஞ்சாதான் அது முதலுதவி… நீ எனக்கு கொடுத்தது முத்தம்தான்” அழுத்தி அவன் சொல்ல,
“கம்மான் விஷ்வா… நான் உயிரை காப்பாத்த செஞ்சதை நீ உன் இஷ்டத்துக்கு கற்பனை பண்ணிக்காதே” கோபத்தோடு அவள் பதிலளிக்க,
ஆழந்த பார்வையோடு அவளை ஏறிட்டவன்,
“என் உயிரை காப்பாத்தனும்கிறது ஸெகன்டிரி ரீஸன்தான்? அது உண்மையான காரணம் இல்ல” என்றான்.
“அப்புறம் வேறென்ன ரீஸன்?!” என்று கேட்டு அவனை விழி இடுங்க பார்க்க
“உனக்கு உன் காதலை காப்பாத்திக்கனும்… உனக்கு நான் வேணும்… யூ நீட் மீ டார்லிங்” என்றவன் புன்முறுவலோடு சொல்ல,
அந்த சிரிப்பில் அவள் அப்படியே கரைந்து போனாள். அவளால் அவன் சொன்னதை மறுத்து பேசமுடியவில்லை. அது ஒருவிதத்தில் உண்மைதானே என்றவள் மனம் ஆமோதிக்க அவள் மௌனமாய் நின்றாள்.
“பேசாம இருந்தா என்ன ஆர்த்தம்… ஸே எஸ் ஆர் நோ?” என்றவன் தீர்க்கமாய் கேட்க அவள் சற்றே திக்குமுக்காடிதான் போனாள்.
அவன் கரத்திற்குள் இருந்த அவள் கரத்தை உருவி கொண்டு அவள் பின்னோடு சென்று சுவற்றில் ஒண்டிகொள்ளஅவன் முகத்தின் புன்னகை மறைந்து இறுக்கமானான்.
“இப்ப என்ன செஞ்சிட்டேன்னு… இவ்வளவு கோபம் உனக்கு?”என்றவன் கேள்வி எழுப்ப,
“என்ன செஞ்சிட்டியா? இத்தனை நாளா என்னை இரிட்டேட் பண்ண… அப்புறம் காதல்ங்கிற பேர்ல டார்ச்சர் பண்ண… பின்னாடியே வந்து என் உயிரை எடுத்த… அதெல்லத்தையும் சகிச்சிக்கிட்டேன்… ஆனா என்னை அழ வைச்சி எல்லோரும் வேடிக்கை பார்க்கிற மாதிரி செஞ்சிட்டல்ல இடியட்… ஐ டோன்ட் லைக் யூ” என்று சிறுபிள்ளைத்தனமாய் கோபித்து கொண்டு அவள் முகத்தை திருப்ப,
“நான் என்ன பண்ணட்டும்… சூழ்நிலை அந்த மாதிரி அமைஞ்சி போச்சு…” என்றவன் அவள் தவிப்பு புரிந்து பதிலளித்தான்.
“சூழ்நிலையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல… எல்லா உன் முட்டாள்தனத்தால” என்றவள் கோபித்து கொள்ள,
“என்னடி இப்படி பேசிற?” என்று புரியாமல் கேட்டான்.
“பின்ன ? உன்னை யாரு என் உயிரை காப்பாத்த சொன்னது… சார் பெரிய தியாகியாயிடலாம் பார்த்திங்களோ?”
“உனக்கு ஏதாச்சும் ஆயிருந்தா” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னே,
“ஆகட்டுமே…என்னை தூக்கிட்டுவந்து காப்பாத்திருக்க வேண்டியதுதானே” என்றாள்.
“சத்தியமா உன் அளவுக்கு எனக்கு தைரியம் இல்லடி… நான் செத்தே போயிருப்பேன்… உனக்கு ஏதாச்சும் ஆயிருந்தா” என்று விஷ்வா சொல்ல அந்த நொடி ஆதியின் கோபமெல்லாம் மளமளவென இறங்க,
அவள் மௌனநிலைக்கு சென்றாள்.
விஷ்வா அவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“எனக்கு அந்த நேரத்தில ஒரேயொரு விஷயம்தான் தோணுச்சு… உனக்கு எதுவும் ஆக கூடாது” என்றவன் சொல்ல,
“உனக்கு ஏதாச்சும் ஆயிருந்தா?!” அவள் வலியோடு கேட்க,
“அதெப்படி ஆகும்… என் ஆதியோட கட்ஸ் முன்னாடி எவனும் நிற்க முடியாது… அது எமனாவே இருந்தாலும் சரி” அவன் சொல்லி முடிக்கும் போதே புன்னகையித்தவள்,
“ஏய் ஏய் போதும்டா… முடியல… உன் ரீலை நிறுத்திறியா?!” என்றவள் கேலியான புன்னகையோடு சொல்ல
“எதுடி ரீல் ? என் உயிரை நீ போராடி காப்பாத்தல… அந்த நட்டு நடுராத்திரில சாககிடந்த என்னை காப்பாத்த எவ்வளவு போராடியிருப்பன்னு யாராவது சொல்லிதான் நான் தெரிஞ்சிக்கனுமா என்ன?” என்றவன் அழுத்தமாய் உரைக்க அவள் பதிலின்றி நின்றாள்.
“உன்னை விட உன் தைரியத்தைதான்டி நான் அதிகமா காதலிக்கிறேன்… டன் டன்னா காதலிக்கிறேன்… பட் சாரி… உன்னை நான் அழவிட்டிருக்க கூடாது..
அது தப்புதான்… ஆனா இனிமே அந்த தப்பை செய்ய மாட்டேன்… இப்போ மாதிரி எப்பவும் உன்னை தவிக்க விடமாட்டேன்… நெவர் அன் எவர்…
இட்ஸ் அ பிராமிஸ்” என்றவன் தெளிவோடும் தீர்க்கமாகவும் சொல்ல அவள் அவன் வார்த்தைகளை கேட்டு வியந்து நின்றாள்.
அவனை மட்டுமே பார்த்தபடி !
அந்த பார்வையில் கிறங்கி போனவன்,
“ஆதி… ப்ளீஸ் கம் நியர் மீ” என்றவன் ஏக்க பார்வையோடு தன் கரத்தை நீட்ட அவள் முகம் விகசித்தது. அவன் அருகில் வர அவள் யத்தனித்த போது அவளின் கைப்பேசி ரீங்காரிமிட,
விஷ்வா கடுப்பானான்.
அந்த அழைப்பை ஏற்றவள்,
விஷ்வாவிடம் “சரவணன் கால் பன்றான்… ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.
விஷ்வாவிற்கு சரவணன் பெயரை கேட்டு இன்னும் எரிச்சல் மூள முகம் சுளித்தவன், ‘இடியட் ! நேரம் பாத்து டிஸ்டர்ப் பன்றான்’ என்று புலம்பி கொண்டான்.
ஆதி வெளியே நின்றபடி
“சொல்லுங்க சரவணன்” என்று தன் உரையாடலை தொடங்கினாள்.
“விஷ்வா எப்படி இருக்காரு?”
“ஒண்ணும் பிரச்சனையில்ல நல்லா இருக்கான்”
“அப்பா… இப்பதான் நிம்மதியா இருக்கு… ஆனா இங்க ஒரே பிரச்சனை”
“என்னாச்சு?”
“நீ எங்கே எங்கேன்னு கேட்டு மூணு பொம்பளைங்களும் படுத்தி எடுக்கிறாங்க… நீ வேலையா வந்திருக்கேன்னு அம்மாகிட்ட சொல்லிட்ட போதும் அவங்க நம்பல… நீ ஏன் பேகை எல்லாம் எடுத்துட்டு போல… ஏன் சொல்லாம போயிட்டன்னு ஆயிரம் கேள்வி கேட்கிறாங்க… எனக்கு தெரியாதுன்னு சொன்னா நம்பவே மாட்டிறாங்க… நான்தான் உங்க இரண்டு பேரையும் சண்டை போட்டு துரத்திட்டேன்னு கேட்டு படுத்திராங்க… பதில் சொல்லி மாளல” என்று விவரமாய் சரவணன் தன் கஷ்டத்தை சொல்ல ஆதிக்கு சிரிப்புதான் வந்தது.
“கொஞ்சம் சமாளிங்க சரவணா… விஷ்வா நார்மலானதும் நானே ஊருக்கு வர்றேன்” என்றாள்.
“ஹ்ம்ம்… அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்”
“என்ன சரவணன்?” அவள் ஆவல் ததும்ப கேட்க,
“இந்த வார கடைசில கும்பாபிஷேகம் நடக்க போகுது… அதே நேரத்தில பேஃக்டிரி வேலையும் ஆரம்பிச்சிட்டாங்க… அங்க வளர்ந்திருக்கிற மரத்தை எல்லாம் வெட்ட ஏற்பாடு நடந்திட்டிருக்கு” என்றான்.
“குட்… நடக்கட்டும்” என்றாள்.
“நடக்கட்டுமா?!” அதிர்ச்சியாய் அவன் வினவ,
“எஸ்… அந்த இடத்தை க்ளியர் பண்ணால்தான் அந்த இடத்தின் மேல ஊர்மக்களுக்கு இருக்கிற பயம் போகும்… லெட் தெம் டூ”என்றாள்.
“நீ என்ன நினைக்கிற ? என்ன செய்யப் போற எனக்கு ஒண்ணும் புரியல” என்று சரவணன் குழப்பமுற,
“புரியும் சரவணன்… இனிமே எல்லாமே புரிஞ்சிரும்… ஆனா சில விஷயங்களில் உங்க உதவி எனக்கு தேவை” என்றாள்.
“என்ன உதவி?”
“நீங்கதானே பெரியப்பாவுக்கு நம்பிக்கைகுரிய ஆள்… அவர் மூலமா நான் தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிற உண்மையை நீங்க நினைச்சா கேட்டு சொல்ல முடியும்…”
“என்னை வளர்த்தவருக்கே துரோகம் செய்ய சொல்றியா?” அவன் குரலில் கோபம் தொனிக்க,
“நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” என்றவள் சொல்லவும் அவன் மௌனமாகிட அவள் மேலே தொடர்ந்தாள்.
“அப்பா இல்லாம இருக்கிறதோட கஷ்டமும் வலியும் என்னன்னு பெரியப்பா தயவில இருக்கிற உங்களுக்கும் நல்லா புரியும்… அப்படி ஒரு நிலைமை உங்களுக்கு விதி வசத்தால் ஏற்பட்டுச்சு… ஆனா என் நிலைமை அப்படி இல்ல… நான் எங்க அப்பாவை கண்ணால கூட பார்க்கலன்னா அது பெரியப்பா எங்க அப்பாவுக்கு செஞ்ச சதி.. சரியா சொல்லனும்னா துரோகம்… எங்க அம்மாவுக்கு நடந்த அநீதி” அவள் குரலில் இருந்த ஆற்றாமையும் கோபத்தையும் சரவணனால் புரிந்து கொள்ள முடிந்தாலும்,
“இல்ல ஆதி… மாமா அப்படி செஞ்சிருக்க மாட்டாரு… பல தடவை உங்க அப்பாவை பத்தி மாமா ரொம்ப உயர்வா பேசி இருக்காரு… மாமா பணம் சொத்து விஷயத்தில வேற மாதிரியான ஆள்தான்… ஆனா சொந்த தம்பியை போய்” என்றவன் அவள் சொல்வதை ஏற்க மறுக்க ஆதிக்கு இம்முறையும் ஏமாற்றமே மிச்சமானது.
அவன் தன் மாமாவின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை எண்ணி கடுப்பானவள்,
சில நொடி மௌனத்திற்கு பின்,
“ஒகே சரவணன்… உங்க நம்பிக்கையை ஏன் கெடுப்பானே” என்று அந்த பேச்சை அதோடு முடித்து கொண்டாள்.
இறுதியாக சரவணன் விஷ்வாவிடம் பேச விருப்பப்பட,
ஆதி தன் கைபேசியை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றவள் விஷ்வாவிடம் கொடுக்க,
“அவன்கிட்ட நான் எதுக்கு பேசனும்?” என்று வெறுப்பாய் கேட்டான் விஷ்வா.
ஆதி தன் கைபேசியை மூடியபடி,
“என்ன பேசிறீங்க? சரவணன்தான் உங்க உயிரை காப்பாத்தினது… தெரியுமா?!
அந்த நடுராத்திரில சரவணன் மட்டும் உதவி செய்யலன்னா… என்ன நடந்திருக்கும்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல” என்றாள்.
“உண்மையாவா ?!” அவன் சந்தேகித்து கேட்க,
“பின்ன… நீ இருக்கிற வெயிட்டுக்கு நான் எங்கிருந்து உன்னை தூக்கிட்டு வந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்க முடியும் .. அவன்கிட்ட பேசு விஷ்வா, ஒரு தேங்க்ஸாச்சும் சொல்லு” என்று சொன்னதும் விஷ்வா கைபேசியை வாங்கி காதில் வைத்து,
“சரவணன்” என்றழைத்தான்.
மறுபுறத்தில் அவன், “மன்னிச்சிடுங்க விஷ்வா… உங்ககிட்ட நான் ரொம்ப கோபமா நடந்துகிட்டேன்” என்க,
“என்ன சரவணன் நீங்க?…எல்லா கோபத்தையும் மறந்து நீங்கதான் நான் அடிப்பட்ட போது காப்பாத்தினிங்கன்னு ஆதி சொன்னா… அப்படி பார்த்தா நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லனும்”
“நான் எதுவுமே செய்யல… நீங்க உயிர்பிழைச்சி இருக்கிறீங்கன்னா அது ஆதிக்கு உங்க மேல இருக்கிற காதல்தான்… உங்களுக்கு கேட்டுச்சோ கேட்கலயோ… ஆனா ஆதி ஐ லவ் யூ விஷ்வான்னு கார்ல இருந்து ஹாஸ்பிட்டல் போய் சேர்கிற வரைக்கும் ஜபம் பண்ணிக்கிட்டே வந்தா… அவளோட நம்பிக்கையும் தைரியமும்தான் உங்களை காப்பாத்தியிருக்கு”என்றவன் சொல்லி முடிக்க விஷ்வா உதடுகளில் புன்னகை வழிந்தோடியது.
“சரி விஷ்வா நான் அப்புறம் பேசிறேன்.. உடம்பை பாத்துக்கோங்க” என்று சொல்ல விஷ்வாவும் அழைப்பை துண்டித்துவிட்டு கைப்பேசியை நீட்டியவன் அதனை அவள் வாங்க முற்படும் போது,
அந்த சாக்கில் அவள் கரத்தை அழுந்த பற்றி கொண்டு அவளை ஆழ்ந்து பார்த்தான்.
“என்னாச்சு? ஏன் என்னை அப்படி பார்க்கிற” என்றவள் துணுக்குற்று கேட்க,
“நல்லா இருக்கும் போதெல்லாம் ஐ வில் கில் யூன்னு சொல்லுவ… சாக கிடக்கும் போது ஐ லவ் யூன்னு ஒயாம சொன்னியாமே?!” என்று கேட்டு அவன் பார்த்த பார்வையில் அவள் மனம் அலைபாய,
“ஆமாம் சொன்னேன்… உன் காதில விழுந்து எழுந்திருச்சிர மாட்டியான்னு சொன்னேன்” என்றாள்.
“இப்போ நான் கேட்கிற நிலைமையில் இருக்கிறேன்… இப்போ சொல்லலாமே”
என்றவன் சொல்லி கூர்மையாய் பார்க்க அவனின் பார்வையில் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் நாணம் மேலிட வேறு புறம் தன் பார்வை திருப்பி கொள்ள,
அவள் முகவாயை பிடித்து தன்புறம் திருப்பியவன், “சொல்லு ஆதி” என்க,
அவள் தவிப்புற்றாள். அவனின் பார்வையில் உதடுகள் ஓட்டி கொள்ள அவனை தயக்கமாய் பார்த்தவள்,
“ப்ளீஸ் விஷ்வா… சம் அதர் டைம்” என்றான்.
“உம்ஹும் நவ்” என்றான் பிடிவாதமாக!
“வரமாட்டேங்குதுடா… புரிஞ்சிக்கோ” என்றவள் கெஞ்சலாய் சொல்ல,
“அதெப்படி வராது… ஐ ஹேட் யூ… ஐ வில் கில் யூ… ஐ டோன்ட் லைக் யூ… இதெல்லாம் மட்டும் சரளமா வருது… ஆனா லவ் யூ மட்டும் வரல இல்ல… கத்தி குத்து வாங்கினாதா வரும்னா… திரும்பியும் நான் வேணா கத்தி குத்து வாங்கிட்டு வரட்டுமா?” என்றவன் விபரீதமாய் கேட்க,
அதிர்ந்தவள், “ஸ்டாப் இட் விஷ்வா… நான் இப்போ ஐ லவ் யூ சொல்லனும் அவ்வளவுதானே… சொல்றேன்” என்றவள் ஆவேசமாய் சொல்ல,
“தட்ஸ் மை ஆதி… கம்மான் சொல்லு” என்றவன் ஆர்வமாய் அவளை பார்க்க,
“ஐ” என்றவள் ஆரம்பிக்கும் போது
ஜேம்ஸ், ஹரீஷ், அமுதா எல்லோரும் அவர்கள் அறைக்குள் நுழைய,
ஆதி பட்டென தன் கரத்தை விஷ்வாவின் கரத்திலிருந்து உருவி கொள்ள அவனோ அப்போது உச்சபட்ச கடுப்பில் ஆழ்ந்தான்.
‘இப்பன்னு பார்த்துதான் இவங்கெல்லாம் வந்து தொலைக்கனுமா’ என்றவன் புலம்ப,
ஆதி முகத்தில் ஓர் மெல்லிய புன்னகை!
அவர்கள் உள்ளே வந்ததும் விஷ்வாவிடம் நலம் விசாரிக்க அவன் வேண்டா வெறுப்பாய் பதில் சொன்னான்.
விஷ்வாவின் எதிர்பார்ப்பு அப்போதைக்கு ஏமாற்றத்தில் முடிந்துவிட அதற்கு பிறகு ஆதியுடன் தனியாக பேசும் வாய்ப்பு அவனுக்கு அமையவேயில்லை.
அவன் கவலை ஒருபுறம் இருக்க,
கருணாகரன், சாரதா,செல்லம்மா மூவரும் ஆதிக்கும் விஷ்வாவுக்கும் இடையில் மலர்ந்திருக்கும் காதலை எண்ணி மகிழ்வுற்றிருந்தனர்.
இரண்டு நாட்களில் விஷ்வாவின் உடல்நலம் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்க,
ஆதி மீண்டும் ஆதித்தபுரம் செல்வதென முடிவெடுத்தாள். ஆனால் இம்முறை செல்லம்மாவை அழைத்து கொண்டு செல்ல எண்ணியவள்,
அவரிடம் எப்படியோ பேசி அவர் சம்மதத்தையும் வாங்கிவிட்டாள்.
ஆனால் இப்போது இந்த விஷயத்தை விஷ்வாவிடம் சொல்லி விடைபெறுவதுதான் அவளுக்கு பெரும் சங்கடமாயிருந்தது.
விஷ்வாவும் அவள் சங்கடத்தை புரிந்தவனாய், “போயிட்டு வா ஆதி… ஆனா பாத்து பத்திரமா இரு” என்றாலும் அவன் முகத்தில் ஒருவித தவிப்பும் ஏக்கமும் பிரதிபலிக்க,
அவன் கேசத்தை தன் கரத்தால் வருடியவள்,
“லவ் யூ விஷ்வா” என்றாள்.
“கம் அகையின்” என்றவன் வசீகரமாய் புன்னகையிக்க அவள் முகம் மலர்ந்து,
“ஐ லவ் யூ” என்றவள் அழுத்தி சொன்னாள்.
“ஒன் மோர் டைம் டார்லிங்” என்றவன் கெஞ்சலாய் கேட்க,
அவள் மூச்சை இழுத்துவிட்டு, “ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ போதுமா?!” என்றவள் கடுப்பாக,
“பத்தல… கிட்ட வந்து என் கண்ணை பார்த்து சொல்லு” என்க,
“விஷ்வா யூ ஆர் இரிடேட் மீ” என்றவள் சொல்லவும்,
“அப்போ சொல்லமாட்டியா?!” ஏக்கமாய் பார்த்து கேட்டவனிடம் மறுப்பு தெரிவிக்க மனமில்லாமல்,
“இதான் லாஸ்ட்” என்று நிபந்தனை விதித்தாள்.
“ஓகே” என்றவன் சூட்சமமாய் புன்னகையிக்க அவன் அருகில் குனிந்தவள்,
“ஐ” என்றவள் ஆரம்பிக்கும் போதே அவள் தலையை பிடித்து இழுத்து அவள் உதட்டை தன் உதட்டோடு இணைத்து கொள்ள அவள் அதிர்நது போனாள்.
அவள் இதழில் தன் சரசலீலைகளை அவன் புரிய அவள் மீள முடியாமல் தத்தளிக்க அவன் தன் காதலின் தாகத்தை ஒருவாறு தீர்த்து கொண்டு அவளை விடுவிக்க,
சற்று நிலைத்தடுமாறி நின்றவள்
தன் இதழ்களை அழுந்த துடைத்து கொண்டு அவனை அத்தனை சீற்றமாய் முறைத்தாள்.
அவனோ சற்றும் அசராமல் ஒர் புன்னகையை வீசினான்.
அவள் கோபம் இன்னும் அதிகரிக்க,
“யூ சீட் பிராஃட்” என்றவள் வசைமாறி பொழிய அவனோ இயல்பான புன்னகையோடு,
“எஸ் ஐம்” என்று பெருமிதமாய் அவள் சொன்னவற்றை எல்லாம் ஆமோதித்தான்.
“சீ போடா” என்றவள் சொல்லிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியேற பார்க்க,
“ஐ மிஸ் யூ டார்லிங்… ஓரு பை சொல்லிட்டு போடி” என்றவன் உரக்க சொல்லி கொண்டிருக்க அவள் அவன் சொன்னதை பொருட்படுத்தாமல் வெளியேறிவிட்டாள்.
‘கோபக்காரி… ஒரு பை சொல்லிட்டு போனா என்ன?’ என்றவன் ஏமாற்றத்தோடு முகத்தை தொங்க போட்டு கொள்ள,
மீண்டும் அறைகதவு திறக்கும் சத்தம் கேட்க ஆதிதான் உள்ளே நுழைந்தாள்.
“என்னை விட்டு போக மனசு வரலியோ?!” என்றவன் புன்னகையோடு கேட்க,
“மூஞ்சி… என் போஃனை விட்டுட்டு போயிட்டேன்… அதை எடுத்துட்டு போலாம்னு வந்தேன்” என்று வேகமாய் நடந்து மேஜை மீதிருந்த கைபேசியை எடுத்து கொண்டவள் திரும்பி நடக்க அவன் முகம் சுணங்க ஏக்கபெருமூச்சொன்று அவன் பலமாய் வெளிவிட்டான்.
அவள் அறைகதவருகில் சென்று அவன் புறம் திரும்பியவள்,
“ஏ விஷ்வா” என்று அவள் அழைக்க அவன் ஆர்வமாய் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“சும்மா சொல்லு கூடாது… செம கிஸ்… நச்சுன்னு இருந்துச்சு” என்றவள் சொல்ல அவன் ஆச்சர்யத்தோடு புன்னகையிக்க,
“ஒகே விஷ்வா… டேக் கேர்… போயிட்டு வர்றேன்… அன் ஐ மிஸ் யூ டூ” என்றவள் சொல்லிவிட்டு தம் இதழ்களை விரித்து புன்னகையிக்க அவன் சிலாகித்தான்.
அவன் முறுவலித்து கையசைத்துவிட்டு வெளியேற அவனுக்கு உலகமே தன் சுழற்சியை நிறுத்தி கொண்டது போலிருந்தது.
இனி அவளில்லாத ஒவ்வொரு நொடியும் அவனுக்கு யுகங்களாய் மாறப் போகிறது.
ஆனால் ஆதிக்கு இனி வரப் போகும் ஒவ்வொரு நொடியும் நினைத்ததை நடத்த வேண்டும் என்ற பதட்டத்தோடு இருக்கப் போகிறதே!
இங்கே விஷ்வாவை கவனித்தபடி நாம் சென்னையில் இருந்த போது, அங்கே ஆதித்தபுரத்தில் வேல்முருகன் கோபத்தில் கொப்பளித்து கொண்டிருந்தார்.
ஆதி தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தாள். சரவணன் உட்பட எல்லோரும் அதிர்ச்சியில் இருந்தனர்.