தாகம் – 12
அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட எ சி அறையில், லப்டாபில் ரமேஷ் தன் பணியை தொடர்ந்து கொண்டிருந்தாலும், அவன் சிந்தனை திவ்யாவை சுற்றி வந்தது.
என்ன நடந்தது என்று எதற்காக திவ்யா தெரிந்து கொள்ள வேண்டும்?
தெரியவில்லை என்றாலும் , அவள் விட்டு விடுவாளா..?
அவளால் இவை அனைத்தையும் கண்டு பிடிக்க முடியுமா..?
இதனால் ஏதும் சிக்கலில் மாட்டிவிடுவாளோ?
இப்படி பல கேள்விகள் அவனுக்கு குழப்பத்தை உண்டாக்க, ரமேஷிற்கு தலை விண் விண் னென்று வலித்தது.
தன் கைகளால் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.
“எதாவது பிரச்சனையா..?” , என்று வினவியபடி விக்ரம் உள்ளே நுழைந்தான்.
“இல்ல சார்.. ஒர்க் இஸ் கோயிங் குட்..முடிச்சாச்சு…”, என்று புன்னகைத்த படியே கூறினான் ரமேஷ்.
” எஸ்… எனக்கும் இன்னக்கி ஒர்க் சீக்கிரம் முடிஞ்சிருச்சு..” , என்று கூறிக்கொண்டே ரமேஷிற்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான் விக்ரம்.
“சீக்கிரமே கிளம்ப வேண்டியது தானே சார்…. அம்மா காத்திக்கிட்டு இருப்பாங்களே….?” , என்று வினவினான் ரமேஷ்.
ஆமோதிப்பது போல் தலை அசைத்தான் விக்ரம்..
“என்ன யோசனை…?” , என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான் விக்ரம்.
“பெருசா ஒன்னும் இல்லை சார்…” , என்று சிரித்தான் ரமேஷ்.
“இப்ப எதுக்கு இந்த சார்…? இங்க நீயும் நானும் மட்டும் தான் இருக்கோம்.. நாம நண்பர்கள்னு நீ மறந்துட்ட ரமேஷ்…. ” , என்று மனத் தாங்களோடு கூறினான் விக்ரம்.
சிரித்துக் கொண்டான் ரமேஷ்.
“நீ பேசவே மாட்ட…. “, என்று புன்னகைத்த விக்ரம் “கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே ..?” , என்று ரமேஷிடம் தோழமையுடன் வினவினான்.
“வேலை முடிஞ்சிருச்சுனா நான் தான் கிடைச்சேனா ….? எதாவது புது வேலை இருந்தா பாப்போம்..”, என்று நழுவினான் ரமேஷ்.
“என்கிட்டே முன்ன மாதிரி பேச கூடாதுனு முடிவோடு இருக்க.. நீ என் கூட ஒர்க் பண்ண ஆரம்பிச்சதிலிருந்தே இப்படி தான் இருக்க..” , என்று கோபப்பட்டான் விக்ரம்..
“ச்ச..ச்ச.. அப்படிலாம் இல்லை விக்ரம்… ” , என்று பதட்டமடைந்த ரமேஷ், “நான் அப்படியே தான் இருக்கேன்.. “, என்று சிரித்தான்.
விக்ரம் அமைதியாக இருக்க, மேலும் ரமேஷ் பேச்சை தொடர்ந்தான்.
“இப்ப, என் கல்யாணத்தை பத்தி யோசிக்கிற நிலைமை இல்லை.. முதல , திவ்யாவுக்கு தான் கல்யாணம்…” , என்று ரமேஷ் கூற, விக்ரமின் காதுகள் கூர்மை அடைந்து, கண்கள் சுருங்கின.
கேட்கலாமா , வேண்டாமா என்றெல்லாம் யோசனை விக்ரமிடம் இல்லை.
‘உனக்கு முறைப்பொண்ணு தானே…. ” என்று விக்ரம் வினவ,
“வீட்ல அப்படி தான் யோசிக்கிறாங்க… பட் நான் அப்படி நினைக்கல.. திவ்யா ஏற்கனவே எங்க மேல டிபெண்டெண்டா இருக்கோம்னு நினைக்கிறா.. அவளுக்கு ஒரு மாற்றம் வேணும்.. அவ வேற வீட்டுக்கு கல்யாணம் பண்ணி போகணும்.. அப்ப தா அவளுக்கும் பிறந்த வீடுன்னு ஒன்னு இருக்கும்… ” , என்று தீவிரமாக பேசினான் ரமேஷ்.
“திவ்யா என்ன நினைக்கிறாங்க… ?” , என்று வினவினான் விக்ரம்.
“இது நியாமான கேள்வி.. அதை அவ கிட்ட தான் கேட்கணும்… “, என்று நொந்த படியே கூறினான் ரமேஷ்..
“ஒரு வேளை திவ்யா விருப்பப்பட்டா..? “, என்ற கேள்வியோடு நிறுத்தினான் விக்ரம்.
“அவ இஷ்டம் தான் எல்லார் விருப்பமும்…” , என்று சிரித்தான் ரமேஷ்.
விக்ரம் மௌனமாய் இருந்தான். ரமேஷின் சிந்தனையும் எங்கோ இருக்க அவர்கள் மௌனத்தைக் கலைக்கும் விதமாக கதவு தட்டும் சத்தம் கேட்டது.
“எஸ் கம் இன்…” , என்று ரமேஷ் கூற ,
“ஐயா நான் கிளம்பட்டுமா?” , என்று பாக்கியம் வினவினாள்.
“சரி” , என்று தலையசைத்தான் விக்ரம்.
பாக்கியம் வேகமா வீட்டை நோக்கி நடந்தாள்.
நாமமும் பாக்கியத்தோடு , அவள் வீட்டுக்கு செல்வோம்.
சாலையை கடந்து அவள் வீட்டை நோக்கி நடந்தாள் பாக்கியம்.
செல்லும் வழியில் தி டீரென்று , திரும்பியவளாக ஒரு பொட்டி கடைக்கு போனாள் பாக்கியம். கடையில் கூட்டம் இருப்பதால், அவள் என்ன வாங்குகிறாள் என்று நம்மால் பார்க்க முடியவில்லை.
கூட்டத்துக்கு இடையில், பாக்கியம் எதோ சில்லறை கொடுப்பதும் , ஏதோ வாங்கி சேலையில் முடிவதும் நம் கண்களுக்கு தெரிகிறது.
வேகமான நடையுடன் , மீண்டும் வீட்டை நோக்கி நடந்தாள் பாக்கியம்.
பாண்டி வெளியில் இல்லாததை கண்டு , பாக்கியம், “அவன் எங்கே சென்று விளையாடிக் கொண்டிருக்கிறானோ?”, என்று யோசித்தவளாக வீட்டுக்குள் நுழைந்தாள்
பாண்டி கையை ஒரு பக்கமாக தூக்கியவாறு படுத்திருக்க, “ஐயோ!, என்ன ஆச்சு” , என்று கத்திக் கொண்டே அவனருகே ஓடினாள்.”
“ஒண்ணுமில்லை… வண்டிக்குள்ள விழுந்திட்டேன்.. எனக்கு பெரிய அடி இல்லை.. இன்னொரு அக்காவுக்கு தான் கீழ விழுந்து மண்டைல நிறைய ரத்தம்… ” , என்று பாண்டி கூற, ” இன்று காலையில் தான் தலையில் கட்டோடு இருந்த பெண்ணுக்கு ஆப்பிள் ஜூஸ் கொடுத்தது பாக்கியத்திற்கு நினைவு வந்தது.
” அவளைப் பற்றி நினைத்து என்ன ஆகப் போகுது.. ” , என்று நினைத்தவளாக, ” உன் கையை காட்டு “, என்று கூறிக்கொண்டே பாண்டியின் கையை பார்த்தாள்.
காயம் பெருசாக இல்லை என்று நிம்மதி அடைந்தவளாக , “கண்முன்னு தெரியமா வண்டிய ஓட்டுவாங்க”, என்று திட்ட ஆரம்பித்தாள்.
தீபாவோ, ” அம்மா அவங்க மேல தப்பில்லை … பாண்டி தான் குறுக்கே ஓடினான்.. அவங்க மட்டும் வண்டியை சரியா நிறுத்தலான , வண்டி பாண்டியை பயங்கரமா இடிச்சிருக்கும்…”, என்று கூறினாள்.
அவளுக்கு ஒத்து ஊதும் விதமாக, “ரொம்ப நல்லவங்க .. என்னை கார்ல ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனாங்க.. மருந்து , மாத்திரை வாங்கி குடுத்தாங்க… “, என்று சந்தோஷமாக கூறினான் பாண்டி..
“இன்னக்கி தான் முதல வேலைக்கு போயிட்டு வரேன்.. முதல் நாளே கையை உடைச்சிக்கிட்டு நிக்குறீங்க … ” , என்று தலையில் அடித்துக் கொண்டாள் பாக்கியம்.
அவள் கையில் ஏதோ தட்டு பட நினைவு வந்தவளாக, “இன்னக்கி உங்களுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்தேன்”, என்று பேசிக்கொண்டே தன் முந்தானையை விரித்தாள் பாக்கியம்.
அதை சந்தோஷமாக வாங்கி கொண்டார்கள் பாண்டியும், தீபாவும்..
பாண்டி அதை வாயில் போட்டதும், கரைந்தது.. தன் கண்களை மூடிக் கொண்டு முழுதாக சுவைத்து ரசித்து மென்மையாக இருக்கும் அதை ஒரு முறை பல்லால் கடித்தான் . அந்த மிட்டாய் ரெண்டாக உடைந்தது. அதிலிருந்து தேனாய் இனித்த பாகு வெளி வர, ‘ம்ச்ச் ” , என்ற சத்தம் எழுப்பிக் கொண்டு தன் நாக்கை சுழட்டியபடி தேன்மிட்டாயை ருசித்து உண்டான்..
“ஏன்டா பாண்டி…!! எவ்வளவு நேரமா கூப்பிடறேன்..”, என்று அவன் காதருகில் கத்திக் கொண்டிருந்தார் ராமசாமி.
” தேன்மிட்டாய் சாப்பிட்டுட்டு இருந்தேன் .. ” , என்று கூறினான் பாண்டி..
“நல்ல சாப்பிட்ட போ…!!! கை எப்படி இருக்கு…? , என்று வினவினான் ராமசாமி…
“எல்லாம் சரியாய் போச்சு… “, என்று கூறி விளையாட சென்றான் பாண்டி..
“தேன்மிட்டாய் வாங்காம , அந்த காசை என்கிட்டே கொடுத்திருக்கலாம்… ” , என்று கூறினாள் தீபா .
“தீபா.. உனக்கு வேண்டியதை இந்த மாசம் சம்பளம் வந்ததும் வாங்கித்தரேன்..” , என்று கூறினார் பாக்கியம்..
“ஹா ஹா ஹா ஹா… “, என்று பெருங்குரல் எடுத்து சிரித்த ராமசாமி “ஒரு மாசத்தில் உங்க அம்மா கோடீஸ்வரி ஆகிருவா போல… ” , என்று நக்கல் அடித்தார் .
“ஏனோ … நான் நினைத்தது நடந்து விடும்…” , என்று நம்பிக்கையோடு இருந்தாள் தீபா.
ஒரு சிறிய மழைச்சாரல் அவர்களுக்கு மகிழ்வை கொடுத்தது.
“மழை பெஞ்சா நமக்கு கஷ்டமேயில்லை.. அப்படி தானே அப்பா..?” , என்று வினவினாள் தீபா.
” “மழை அளவா பெஞ்சா கஷ்டம் இல்லை “, என்று கூறினாள் பாக்கியம்.
“நான் உன்ன மாதிரி இருக்கும் பொது.. நிறைய மரம் இருக்கும்.. நல்லா மழை பெய்யும்.. இப்ப எல்லாம் மாறிப் போச்சு..” , என்று தோளில் துண்டை போட்ட படி வெளியே நடந்தார் ராமசாமி.
அவர் சாலையோரமாக செல்ல, நாமும் காற்று வாங்க அவரோடு செல்வோம்.
அட!! விக்ரமின் வண்டி நிற்கிறது.
விக்ரமின் வண்டிக்குள் இன்று பாட்டு எதுவும் ஒலிக்கவில்லை…
விக்ரம் ஏதோ யோசித்தவாறே, வண்டி கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.
பாட்டு கேட்கும் மனநிலையில் விக்ரம் இல்லை போலும்..!!!!
“நான் ஏன் ரமேஷிடம் இத்தனை கேள்வி கேட்டேன்?” , என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான் . அவனுடைய எண்ணங்கள் மேலும் ஓடியது.
“ரமேஷ் எதுவும் நினைத்த மாதிரி தெரியவில்லை. இருந்தாலும் திவ்யாவைப் பற்றி நான் ஏன் சிந்திக்க வேண்டும்? இனி தேவை இல்லாமல் அவளை பற்றி யோசிக்க கூடாது”, என்று முடிவெடுக்க, அவன் கார் வீட்டுக்குள் நுழையும் நேரமும் சரியாக இருந்தது.
“இன்னக்கி தா கரெக்டா டின்னர் நேரத்துக்கு வந்திருக்க.. போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வா.. ” , என்று கூறினார் விக்ரமின் தாயார்.
ஹாலில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது.
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்
நல்ல அழகி என்பேன் நல்ல அழகி என்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்
தான் ஒரு கவிதை என்பேன் ஒரு கவிதை என்பேன்
அவனறியாமல் திவ்யாவின் முகம் அவன் முன் தோன்றியது.
” நீங்க ஹோட்டல் ஆரம்பிச்சத ரமேஷ் என்கிட்டே சொல்லவே இல்லியே .. ” என்று அவள் நக்கல் பேசியது நினைவு வர புன்னகைத்தான் விக்ரம்.
” ஏண்டா? தனியா சிரிக்கிற..சொன்னா நானும் சிரிப்பன்ல.. ” , என்று விக்ரமின் தாயார் வினவ, “ஒன்றுமில்லை ” , என்று தலை அசைத்து மீன்தொட்டியை தாண்டி தன் அறைக்கு ஓடினான் விக்ரம்.
இவன் ஓடிய விதத்தை பார்த்து மீன்கள் சிரித்தது.
வீட்டிற்கு வந்து சிறிது நேரத்தில், விக்ரமிற்கு புது ப்ராஜெக்ட் நினைவு வர, ரமேஷிற்கு போன் செய்தான் ..
ரமேஷ் மாடியில் இருந்த படியே போனை எடுத்தான்.., விக்ரம் ஏதோ பேச, “….” ,”ஓகே” …. “ஓகே” , என்று பதில் கூறினான் ரமேஷ்.
அவனருகே நின்று கொண்டிருந்த திவ்யா , “ஏய் என்ன பார்த்து என் சிரிக்கிற..? “, என்று அவள் இடுப்பில் கை வைத்தவாறே கேட்டுக் கொண்டிருந்தாள்.
போனை வைத்து விட்டு , “நான் எங்க உன்னை பார்த்து சிரித்தேன்? ” , என்று சண்டைக்கு வந்தான் ரமேஷ்.
“உன்னைச் சொல்லல .. அங்கு பாரு… ஒரு அணில் என்னை பார்க்குதா..? இப்ப பாரு வெக்கப்பட்டு திரும்பி ஓடுது.. ” , என்று திவ்யா கூற ரமேஷ் அவளை முறைத்து பார்த்தான்.
“இயற்கையை ரசிக்கனும் … அதுக்கு நண்பர்கள் நல்லா இருக்கனும்.” , என்று திவ்யா அறிவுரை கூற,
“இயற்கைக்கும் நண்பர்களுக்கும் என்ன சம்பந்தம், “? என்று ரமேஷ் வினவ,
பதில் கூற ஏதுவாக , திவ்யா தரையில், ரமேஷின் எதிரே மண்டியிட்டு அமர்ந்தாள் .
“என்ன மொக்கை கதை சொல்லுவாளோ ?” , என்று ரமேஷிற்கு மனதில் அச்சம் கிளம்ப , அவனை காப்பாற்றும் விதமாக திவ்யாவின் போன் ஒலித்தது.
” ஹலோ … சொல்லு நவீன் ….” , என்று கூறினாள் திவ்யா .
“யாரு? ” , என்று ரமேஷ் கைகளால் வினவ , “ஆபீஸ் பிரென்ட் ” , என்று
உதடுகளை அசைத்தாள் திவ்யா.
“என்ன பிரெண்டோ … “, என்று நொந்து கொண்டே அமர்ந்திருந்தான் ரமேஷ்.
திவ்யா ஸ்பீக்கர் ஆன் செய்த படி பேச ஆரம்பித்தாள்.
“நீ, நான் , ஸ்வாதி, மனோஜ் நம்ம நாலு பேரும் ஒரு டீம்.. புது ப்ராஜெக்ட் ஒன்னு ஸ்டார்ட் பண்ண சொல்லிருக்காங்க ” , என்று கூறினான் நவீன்.
” ஏற்கனவே இதே டீம் தானே இண்டஸ்ட்ரி வேஸ்டேஜ் பத்தி ஒரு ப்ராஜெக்ட் பண்ண போறோம் ” , என்று கூறினாள் திவ்யா.
“எஸ் .. அது லாங் டேர்ம் , இது ஷார்ட் டேர்ம் ” , என்று கூறினான் நவீன்.
“ஓஹ்… ” , என்று ராகம் பாடினாள் திவ்யா.
“டாபிக்ஸ் மெசஜ் பண்றேன் பாத்துட்டு , உன் ஏரியா டிசைடு பண்ணு ” , என்று கூறி விட்டு போனை வைத்தான் நவீன்.
திவ்யா அவளுக்கு வந்த குறுஞ் செய்தியை பார்த்தாள்.
நாமும் பார்த்தால், மொபைலில் குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் இருந்தது.
மொபைலில் வந்த குறுஞ்செய்தி இதோ:
“village special, cinema review , chennai koovam, tour special, traffic and accident , Lifestyle & Entertainment, Restaurants & Food, Events, Politics, Climate Updates, “.
திவ்யா அனைத்து தலைப்புகளையும் பார்த்தாள்.
“சென்னை கூவம்.. ” , அவளை ஈர்த்தது.
“நான் ஒர்க் பண்ணிட்டு இருக்கிற இண்டஸ்ட்ரியல் வேஸ்டேஜ் பிராஜெக்ட்டுக்கும் , ரிலேட்டடா இருக்கும்..”, என்று திவ்யாவின் அறிவு கூற ………………………………………..
மனமோ.., ” அன்று மார்பிலும் தலையிலும் அடித்துக்கொண்டு அழுத மூதாட்டியை சந்திக்க நேர்ந்தால்..!!! உண்மையை கண்டுபிடித்து, “உனக்கு எதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று என்னை பார்த்து கேட்ட விக்ரமை தலை குனிய செய்ய வேண்டும் ” என்று ஓலமிட்டது.
திவ்யாவின் தேடல் எதை நோக்கி செல்கிறது?
அனைவரின் தேடலும் ஓர் தாகமே …..!!!
தாகங்கள் பல விதம் …….
தாகம் தொடரும்…….