am10

am10

ஆசை முகம் 10

வேந்தனுக்கு வாணி, தான் அவளைச் சந்திப்பதை எப்படி எடுத்துக் கொண்டாலும் சரி, தனது மன திருப்திக்காக கண்டிப்பாகச் சென்று நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்று கிளம்பி வந்திருந்தான்.

பெண் தற்போது தன்னை எவ்வாறு எதிர்கொள்வாள் என்கிற எதிர்பார்ப்பும் இருந்ததென்னவோ உண்மை.

கதவைத் திறந்ததும் வேந்தனைக் கண்டவள், திரு திருவென அதிர்ச்சியோடு வேந்தனைப் பார்த்தபடியே, “இ..ங்..க.. நீ..ங்..க.. எ..ப்..டி.. ம்மா..?” தர்மசங்கடமாய் வார்த்தைக்கு வலிக்குமோ, அவளது வாயிக்கு வலிக்குமோ எனும்படி துப்பட்டாவை சரிசெய்தபடிக் கேட்டாள்.

வாணி பேசியது, வேந்தனுக்குக் கேட்டது.

மற்றபடி யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவளின் இதழைக் கவனித்தபடி இருந்தமையால் வேந்தன் யூகித்திருக்கலாம்.

வாணியும், இதுபோல வேறு யார் தன்னை வந்து சந்தித்திருந்தாலும் இத்தனை இலகுவாக எதிர்கொண்டிருக்கமாட்டாள்.

கண்டதும், ‘இதென்ன…’ என மனம் சுணங்கினாலும், ஆழ்மனதின் இலகுவான அவளறியா பந்தம் அதை வெளிக்காட்ட விடாமல் தடுத்திருந்தது வாணிக்கு.

கண்டிப்பாக வேறு நபராக இருக்கும் நிலையில், வாணியின் செயல்பாடுகள் வேறுவிதமாக இருந்திருக்கும். வேந்தனது வருகையால் கேள்வி மட்டுமே எழுந்திருந்தது.

வாணி சற்றே சோர்ந்து காணப்பட்ட தோற்றத்தில் இருந்தாள்.

முந்தைய நாளுக்கும் இன்றைக்கும் எத்தனை வித்தியாசம்? என வேந்தன் அவளது முகம் பார்த்தபடி நின்றிருக்க

அதேநேரம் இந்துமதி உள்ளிருந்தபடியே, “யாரது வாணி?”

‘என்ன சொல்வது?’ என நிமிடத்தில் சுதாரித்து, வேந்தன் யாரைப் பார்க்க வந்திருந்தாலும் சரி சமாளிப்போம் என “எனக்குத் தெரிஞ்சவங்ககா!”

“இங்கையா!”

“ம்ஹ்ம் ஆமாக்கா!” என திரும்பிப் பார்த்து இந்துக்கு பதிலளித்தவள், நிதானமாக வேந்தனது புறம் திரும்பினாள். அவன் பின்னே நின்றிருந்தவனையும் யோசனையோடு பார்த்துவிட்டு, வேந்தனது முகத்தில் கேள்வியாக பார்வையை நிறுத்தியிருந்தாள்.

இதழில் மென்னகை இல்லை. வந்தபோது இருந்த மாதிரி இல்லாமல், முகம் மேலும் அதிருப்தியைக் காட்டியது.

வாணிக்கு இன்னும் புரியவில்லை என்பதை உணர்ந்தவன், “வழி மாறிப் போயிட்டியோனு நேருல பாத்து கன்ஃபார்ம் பண்ணிட்டுப் போக வந்தேன்!”, இறுக்கமாகவே குறைந்த குரலில் வேந்தன் உரைத்தான்.

கூறியது புரியாமல் சில வினாடிகள் விழித்து, பிறகு சட்டென்று முந்தைய தினத்தின் விசயங்கள் நினைவில் வந்திட, தான் கூறியதைச் செய்யவில்லை என்பதை உணர்ந்து, ‘அதுக்கா என்னைத் தேடி இவ்வளவு தூரம்’ என முகம் தொங்கிப் போனவள்,

“சாரி! இந்த டென்சன்ல மறந்துட்டேன்!”, மெல்லிய குரலில் பரிதாபமாக வருத்தத்தோடு கைகளை உதறியபடி பதிலளித்தாள்.

அவனை வருத்தி, அலைக்கழித்து விட்டோமே என்பது தெளிவாகப் புரிந்தது அவளது வார்த்தையில்.

“ஏன் வெளிய நிக்க வச்சே பேசிட்டுருக்க!”, இந்துமதி

வாணியின் பதிலில் பெருமூச்சொன்று எடுத்து விட்டவன், “இப்ப அவங்களுக்கு பரவாயில்லையா?”

தலையை அசைத்து ஆமோதித்தவள், அறைக்குள் வேந்தனை அழைக்க, அதற்கு முன்பே இந்துமதி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தாள்.

வேந்தன் மட்டும் உள்ளே வர, “மாமா!”, என இந்துவிற்கு அறிமுகம் செய்திட

நின்றபடி பேசிக் கொண்டிருந்தவனிடம், “உக்காருங்க!” என அங்கிருந்த ஒரு சேரைக் காட்ட, மறுத்துவிட்டான்.  அதேநேரம் சித்திக் உள்ளே வராமல் வெளியிலேயே நின்று கொண்டான்.

“இப்ப எப்டி இருக்கு?”, என மரியாதை நிமித்தமாய் இந்துவிடம் கேட்டான் வேந்தன்.

இந்துவும் தயக்கமிருந்தபோதும் பதிலளித்தாள்.

வேந்தனைக் கண்டதுமே அவனது வசீகரமும், வசதியும் அவனது நிலையை, சொல்லாமலேயே புரிந்தது இந்துவிற்கு.

வாணி சித்திக்கை வெளியே சென்று அழைக்க, “இல்ல பரவாயில்ல இருக்கட்டும்”, என மறுத்திருந்தான்.

வாணியைப் பார்த்தது முதலே சித்திக்கிற்கு ஒரே யோசனைதான்.

‘இது யாரு?

நமக்குத் தெரியாம இவனுக்குத் தெரிஞ்சவங்க யாரா இருக்கும்?’ இப்படி

ஏனென்றால் ஒன்பது பத்து வருடங்களாகவே அவர்களது குடும்பத்தோடு நல்ல நெருங்கிய பழக்கம்.  ஓரளவிற்கு அனைத்து உறவுகளையும் அறிவான்.

வாணியைப் பார்த்த ஞாபகம் இல்லை.

அதோடு வாணியின் மாமா வேறு குழப்பியது.

சாதாரண சுடி அணிந்திருந்தாள்.

ஆனால் தோற்றம் வசதியான இடத்துப் பெண் போன்றிருந்தது.

சிலர் எத்தனை ஏழ்மையில், துன்பத்தில் இருந்தாலும், இறைவனது கருணையான படைப்பால் சீரிய வசியத் தோற்றம் பெற்றிருப்பர்.

உறவுகள் யாருமற்ற ஏழையான வாணிக்கு, பொருளாதாரம் இருந்தது. ஆனாலும் எளிமையாகவே உடை உடுத்தினாலும் அவளை உயர்த்தியே காட்டும்படியான தோற்ற அமைப்போடு நன்றாக இருந்தாள்.

வாணிக்கு தனது மறதியினால் வேந்தனை கஷ்டப்படுத்தியதை எண்ணியதும் எழுந்த வருத்தம் காரணமாக முகம் வாடிப் போயிருந்தது.

சாரி, சாரி என மன்னிப்பைக் கோரியவள் அடுத்து அமைதியாக இருந்தது, வேந்தனுக்கு வருத்தம்.

தனது மறதியால் எழுந்த கஷ்டம் என்பதைவிட, வேந்தனது பரிமாணம் அவளை இன்னும் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியிருந்தது.

தான் வழி கேட்டதை பெரியதாக எண்ணிக்கொண்டு வழிகூறியதே பெரிது.  இதில் தான் சரியான இடம் சென்று சேரவில்லையோ என தன்னைத் தேடி வந்தவனை ஏனோ தவறாக எண்ணத் தோன்றவில்லை.

அதில் மேகம் மறைத்த பகலவனைப்போல மறைந்திருந்த அக்கறை மட்டுமே வாணிக்குத் தெரிந்தது.

வேந்தனுக்கு ஆயிரம் காரணங்கள் வாணிக்காகச் செய்ய இருந்தாலும், வாணிக்கு அது தெரியாதல்லவா!

தனியனா, திருமணமானவனா, மனம் அவனை நாடுகிறதா என வேந்தனைப் பற்றியோ, தன்னைப் பற்றியோ எந்த சுய அலசலும் பெண்ணுக்கு இதுவரை இருக்கவில்லை.

எள்ளளவும் சந்தேகம் எழும்படியாக அவனது நடவடிக்கைகளோ, பார்வையோ இல்லாததால், வேந்தனை மலைபோல நம்பி, மனம் கரைந்தாள்.

ஐந்து நிமிடங்களுக்கும் குறைவாகவே அறைக்குள் இருந்தவன், இந்துவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, பின்னே வந்தாள் வாணி.

என்ன பேசி வாணியின் அமைதியைக் களைக்கலாம் என யோசித்து, “இன்னிக்கு காலேஜ் போகணுமில்ல!”, தனது கையில் நேரத்தைப் பார்த்தபடி கேட்க

“இல்ல! அக்கா தனியா இருப்பாங்க!  இன்னிக்கு லீவு சொல்லணும்!”

“டிஸ்சார்ஜ் ஆகி ஹாஸ்டல் போனபிறகாது டெக்ஸ்ட் பண்ணுவியா?”, யாசகமாக இல்லை, கட்டளை அதில் மறைந்திருந்ததை உணர்ந்தாள்.

‘அப்டி என்ன எம்மேல உனக்கு அக்கறை’ எனும் கேள்வியோ, கோபமோ, அதிருப்தியோ வாணிக்கு எழவில்லை.

மாறாக சந்தோசமாக தலையை அசைத்து ஆமோதித்தாலும், “சாரி!”, என மிகக் குறைந்த குரலில் மீண்டும் மன்னிப்பு கேட்டாள்.

“வழி தெரியாம எங்கேயும் மிஸ்ஸாகிட்டியோனு நைட் ஃபுல்லா பதறி, இவன் ஒயிஃபை கூட்டிட்டு காலங்காத்தாலேயே உங்க ஹாஸ்டல் போயிட்டேன்!”

“அய்யயோ!”

“அங்கதான் நீ இங்க இருக்கறதா சொன்னாங்க!”

“ம்ஹ்ம்!”

“நேருல பாத்து கன்பார்ம் பண்ணிட்டா, நானும் திருப்தியா என்னோட வர்க் பாக்கலாம்னு இங்க வந்துட்டேன்”, என விளக்கமளித்தவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று பெண்ணிற்கு அழுகையை உண்டு செய்திட, கட்டுப்படுத்திக் கொண்டாள்.

பிறந்து விபரம் அறிந்தது முதலே இருந்த ஏக்கம் சற்றே குறைந்தாற்போல, தணிந்தாற்போல இருந்தது வேந்தனது விளக்கம்.

குற்றவுணர்வு போல வந்திட, சமாளித்து புன்னகைக்க முயன்றவளைப் பார்த்து, “பாத்துக்கோ!”, என்றுவிட்டு சித்திக்கோடு கிளம்பியவன், பத்து நிமிடத்தில் மீண்டும் வந்து, கையில் காலை உணவைத் தந்திட, “எதுக்கு இதெல்லாம்!  நானே இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போயி வாங்கிக்கலாம்னு இருந்தேன்!” என்றதில் சற்றே தெளிந்திருந்தாள்.

உணவு வாங்கிக் கொடுக்கும் எண்ணம் வேந்தனுக்கு ஆரம்பத்தில் இல்லை.  அவளின் சோகமான முகம் அவனை செல்லவிடாமல் தடுத்திட, அதை பழைய நிலைக்கு மாற்றிட எண்ணியே மீண்டும் உணவுப் பொட்டலத்தை வாங்கிக் கொண்டு வாணியைக் காண வந்தான்.

“இப்ப அதுக்கென்ன! வாங்கியாச்சு! சாப்பிடுங்க!”

“ம், தேங்க்ஸ் மாமூ!” இதழில் வந்திருந்த மென்னகையோடு பெண் கூறிட, பழைய நிலைக்கு பெண் மாறியதை உணர்ந்தவன் “மறந்திராம டெக்ஸ்ட் பண்ணு!”

“ம்ஹ்ம்!”

“தலைய தலைய ஆட்டிட்டு நேத்து மாதிரி இருந்துராத!”, உரிமையோடு கூறிவிட்டு சொல்லிக் கொண்டு விடைபெற்றிருந்தான்.

சித்திக் தற்போது உடன் வரவில்லை.

யோசனையோடு மீராவிடம் விசயத்தை பகிர தகுந்த சமயம் பார்த்திருந்தவன், “நீ போயி குடுத்துட்டு வாடா!  நான் வெளிய வயிட் பண்றேன்!”, என்று கீழேயே தேங்கியிருந்தான்.

இந்துவிற்கு முத்துரங்கனைத் தெரியும்.  சத்தியேந்திரன் வந்து சென்றதையும், வாணி அவர்கள் அழைத்தால் அங்கு போவதையும் அறிவாள்.

வேந்தனைப் பற்றி எதுவும் தெரியாததால் வாணியிடம் கேட்டாள்.

“மை லவ்வபுள் மாமூ! அதுக்கு மேல எதுவும் கேக்காதீங்ககா!”, என சிரிப்போடு பகிர்ந்தவளைப் புரியாமல் பார்த்தாள் இந்து.

இதுவரை வாணியை இவ்வளவு சந்தோசத்தில் பேசிப் பார்த்ததில்லை.

நனவில் ஏதோ நினைவோடு பெண் பேசுவதைப் பார்த்து, “லவ்வா?”

“தெளிவா கேளுங்க!”

“ரெண்டு பேரும் லவ் பண்றீங்களானு கேட்டேன்”

“அப்டிலாம் இல்லையே!”

“அப்புறம் உறவா?”

“அதான் சொன்னேனே மாமான்னு!” சிரித்தாள்.  அதில் இருந்தது என்ன என இந்துமதிக்கு சத்தியமாக புரிந்து கொள்ளும் சாமார்த்தியம் இல்லை.

அதற்குமேல் வாணியின் வாயிலிருந்து எதுவும் வராது என்பதும் புரிய, எதுவும் கேட்கவில்லை இந்து.

////////////////////

வேந்தனோடு வாட்சப் மூலமாக அவ்வப்போது உரையாடல் டெக்ஸ்டாக தொடர்கிறது.

சில நேரங்களில் நீளும்.  பல நேரங்களில் காத்திருப்புகள் தொடரும்.

ஒருவர் வேலையாக இருந்தால், அதேநேரம் இன்னொருவர் எதாவது வேலையில் இருப்பர்.

அதனால் பெரும்பாலும் தொடர்ச்சியான பகிர்தல் இல்லாமல், பகிர்தலின் காத்திருப்பு நீண்டிருந்தது.

தினசரி ஒரு முறையேனும் செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

“இப்ப அவங்க ஓகேவா”

“ம்”

“காலேஜ் எப்டி போகுது”

“அஸ் யூஸ்வல்”

இதுபோல வேந்தனிடமிருந்து பொறுப்பான கேள்விகள்.

“ரீச்டு”

“வயிட்டிங் ஃபார் பஸ்”

“அட் காலேஜ்” அல்லது எங்கிருக்கிறாளோ அதை டெக்ட் செய்வாள்.

யாரிடமும் தன்னைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவள், வேந்தன் கேட்டால் எந்த மறுப்போ, சுணக்கமோ இன்றி உடனே பகிர்ந்து கொள்கிறாள்.

அவனது அக்கறை உணர்ந்து கொண்டமையால் வாணியும் சற்றே மாறிப் போயிருந்தாள் வேந்தனிடம்.

தனது பேச்சை, தனது நிலையை எந்தவிதத்திலும் தவறாகப் பயன்படுத்தாத வேந்தனை தனக்கு மிகவும் நெருங்கியவனாகவே வாணி உணரத் துவங்கியிருந்தாள்.

சிலர் இரண்டு முறை சரளமாகப் பேசியதுமே, வெளியே என்னுடன் வருகிறாயா? காஃபீ ஷாப் போலாமா? சாப்பிடப் போகலாமா? என அடுத்தடுத்து வந்து அவர்களின் தேவையை தன் மீது திணித்திட முயன்ற தருணங்களைக் கடந்துதானே வந்திருக்கிறாள்.

அதைச் செய்திடாத வேந்தனை மதிக்கிறாள். அதற்குமேல் ஏதோ ஒன்று. அதைப் பற்றிய தேடல் இன்றி தேமே என்றிருக்கிறாள்.

தாய், தந்தை பற்றி ஒருமுறை கேட்ட வேந்தனுக்கு, வாணியின் பதில் இடியாக இருந்தது.

“ரெண்டு பேருமே இல்ல!  எல்லாம் முத்து மாமாதான்!”

இதைக் கூறியதும் இரண்டு நாள்கள் வேந்தன் பெண்ணோடு பேசவே இல்லை.

ஏதேதோ சிந்தனைகள்.

மாமனின் தயவில் வாழ்கிறாள் என்றதும் அவனால் அதைத் தாங்கிக் கொள்ள இயலா வருத்தம் சூழ்ந்தது.

தான் அனைத்துமாக அவளுக்கு இருக்க மனம் வேட்கை கொண்டது.

ஆனாலும் தான் எடுத்த தீர்மானம் நினைவில் வரவே தயங்கினான்.

வயது மட்டும் வரப்புபோல அவளுக்கும் தனக்குமிடையே இல்லாதிருந்தால், வாணி தற்போது திருமதி. வேந்தனாகியிருப்பாள் என்பதை எண்ணி சோர்ந்து போகிறான்.

பெண்ணது இருப்பு எங்கு என்பதை ஓரளவு அறிந்து கொள்வதால், பெண் அறியாமலேயே தூரத்தில் தனது காருக்குள் இருந்தவாறே தரிசனத்தை முடித்துக் கொண்டு செல்வதை வாடிக்கையாக்கி இருந்தான்.

வெளியில் எங்கும் அதன்பின் சந்திக்கவில்லை. இருவருமே அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை.

செமஸ்டர் நெருங்குவதால் ஊருக்குச் சென்று வந்தபின் அனைத்தையும் ரிவைஸ் செய்ய எண்ணினாள்.

அதன்பின் வரும் விடுமுறையில் நுண்கலை வகுப்பு ஒன்று நடத்திடத் திட்டமிட்டாள்.

அதேநேரம் தனது பழைய அலைபேசி சில நாள்களாகவே பிரச்சனை செய்ய, புதிய அலைபேசி வாங்கத் தீர்மானித்தாள்.

அதைப் பற்றிய கருத்து தனது கல்லூரித் தோழிகளிடம் கேட்டதோடு, வேந்தனிடமும் கேட்டாள்.

என்ன மாதிரித் தேவைக்காக எனக் கேட்டு அதற்கேற்றாற்போல சில மாடல்கள், கம்பெனிகளை பரிந்துரைத்தான்.

அத்தோடு குறிப்பிட்ட இடத்தில் சென்று வாங்கும்படி கூறியிருந்தான்.

வாணி, இந்துவோடு சென்று, வேந்தன் கூறிய இடத்திலேயே வாங்கி வந்திருந்தாள்.

வேந்தனைப் பற்றியெல்லாம் அதிகம் பேசிக் கேட்டதில்லை இந்து.

ஆனால் அவன் கூறிய இடத்தில்தான் அலைபேசி வாங்கவேண்டும் என்று நின்றவளை, “எல்லாக் கடையிலயும் இருக்கறதுதான அங்கயும் இருக்கப் போகுது. இதுக்கு எதுக்கு இவ்ளோ தூரம் அலையணும்”, என்றிட

“மாமூ அங்க ரெகுலர் கஸ்டமரா இருக்கலாம்.  மற்ற இடங்களைவிட ஏதோ ஒன்னு அங்க சேடிஸ்ஃபைடா ஃபீல் பண்ணதாலதான சொல்றாங்க! அவங்களுக்கு, ஃபேமிலிக்கு, அவங்க கம்பெனில இருக்கறவங்களுக்குனு நிறைய வாங்கியிருக்க வாய்ப்பிருக்குல்ல! அப்போ நல்லா அனலைஸ் பண்ணிருப்பாங்க! அவரு பக்கா பிஸினெஸ்மேன்!  சோ பிளஸ் எங்க அதிகமிருக்கோ அங்கதான் ரெகுலரா கண்டினியூ பண்ணுவாங்க! அதத்தானே எனக்கும் ரெக்கமெண்ட் பண்ணிருப்பாங்க! இப்டி யோசிச்சப்போ வந்த க்ரிட்டீரியாவுல அந்த ஷாப்தான் லீடிங்ல வருது.  சோஓஒ நோ மோர் ஆர்க்கியூமென்ட்ஸ் கா!”, என பிடிவாதமாக அழைத்துச் சென்றிருந்தாள்.

தனக்குத் தெரிந்த வகையில் வேந்தனை ஓரளவிற்கு சரியாகவே கணித்திருந்தாள் வாணி.

தனது நுண்கலை வகுப்புகளுக்கு ஏதுவான வகையில் அலைபேசியை வாங்கியிருந்தாள்.

முத்துரங்கனிடம் கூறாமல் வாங்கிய முதல் பொருள்.

மாறனின் திருமண விசயங்களுக்கு ஊருக்குச் செல்லும்போது சொல்லிக் கொள்ளலாம் என விட்டிருந்தாள் வாணி.

தனது லிஸ்டின் முதலில் இருந்த அலைபேசியை வாங்கியதோடு, இன்னும் பெரிய லிஸ்ட் இருந்தது பெண்ணிற்கு.

அடுத்து டூவீலர் பழக வேண்டும். சைக்கிள் ஓட்டியிருக்கிறாள்.  ஆனால் இன்னும் டூவீலரைத் தொடவில்லை.

டூவீலர் வாங்க வேண்டும். லேப்டாப் வாங்க வேண்டும். ப்பீஜீ படிக்க வேண்டும். டியூசன் சென்டர் திறக்க வேண்டும். அடுத்து சொந்தமாக அபார்ட்மெண்ட் என பட்டியல் நீண்டிருந்தது.

அவ்வப்போது அதில் அடுத்து செய்ய வேண்டியதை எழுதி வைப்பாள் வாணி.

மாறன் திருமணத்தை முன்னிட்டு, திருமணம் முடிந்தபின் அந்த வார இறுதியில் ஊருக்குக் கிளம்ப எண்ணியிருந்தாள் வாணி.

வேந்தனுக்கு டெக்ஸ்ட் செய்திட, தானும் ஒரு வாரம் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாக பதில் அனுப்பியிருந்தான்.

முத்துரங்கனிடம் அழைத்துப் பேசியவள், வரவேற்பு வாரயிறுதியில் நடைபெறுவதால் அன்று வருவதாக உறுதியளித்தபடி பயணத்தைத் துவங்கியிருந்தாள்.

இரண்டு நாள்கள் தங்கும்படியான ஆடைகளோடு கிளம்பியிருந்தாள் வாணி.

…………….

வரவேற்பில் மனைவியோடு நின்றிருந்த மாறனுக்கு எழிலின் எழிலான தோற்றத்தின் பின்னேயே கண்கள் சென்றதை தவிர்க்க முயன்றும் தோற்றான்.

சேலை கட்டியிருந்தாள். மிதமான ஒப்பனையில் மணப்பெண்ணையே பின்னுக்குத் தள்ளியிருந்தாள்.

வாணி, முத்துரங்கன் சொன்ன பணிகளைச் செய்தபடி அங்குமிங்கும் நடந்திருந்தாள்.

மாறனின் பார்வையை எழில் மட்டுமே கவனிக்கவில்லை.

ஏனையோர் கவனித்திருக்க, வரவேற்பு முடிந்ததும், பெரும் சலசலப்பு உண்டாகியிருந்தது.

பெரியவர்கள் ஏதோ பேசிக் கொள்கிறார்கள் என்றெண்ணி தனது அறைக்குள் முடங்கியிருந்தாள் வாணி.

தன்னைப் பற்றிய பேச்சுகள்தான் அங்கு என்பதை அறியாதவள், தனது நிம்மதி பறிபோகப் போவதை அறியாமல், அசதியில் நிம்மதியாக ஆழ்ந்து உறங்கியிருந்தாள்.

………………..

காதல்

எழும் தருணத்தை

மாரனாலும்

குறிப்பிட இயலாது!

 

மனங்களின்

மாற்றத்தை

மனோதத்துவனாலும்

கணித்திட இயலாது!

 

காற்றைப்போல

உயிர் மூச்சைப்போல

விழிகளின் சந்திப்பில்

எண்ணத்தின் துணையோடு

மூலத்திலிருந்து

நெருப்பாக ஊடுருவி

மனதில்

ஜனித்திடும்

மாயாவி!

காதல்!!!

////

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!