Anandha bhairavi 8

Anandha bhairavi 8

ஆனந்த பைரவி part 8

காலையில் பைரவி கண் விழித்த போது மணி ஆறு காட்டியது. நேற்று நடந்தது எல்லாம் கனவாகத் தோன்ற கழுத்தை மெதுவாய்த் தடவினாள்.

கனமான சங்கிலி கைகளில் பட்டுஇல்லை நிஜம் தான்என்றது. உதடுகளில் புன்னகை உறைய அந்தக் கணத்தை அனுபவித்தாள் பைரவி. வாசுகி தன் சம்மதத்தை சொல்லாமல் சொல்ல அங்கே ஆனந்தம் கூத்தாடியது. வார்த்தைகள் அற்று பைரவி மௌனித்திருக்க,

பைரவிம்மா, இப்போதைக்கு இது நமக்குள்ள இருக்கட்டும். ஆனந்தனும் கூடிய சீக்கிரம் சம்மதிச்சிடுவான். அப்போ உங்க அப்பா அம்மாகிட்ட இதைப் பத்தி பேசலாம், சரியா? அதுவரைக்கும் கமலாக்கிட்ட கூட எதுவும் சொல்லாதே என்ன.”

பாட்டி எடுத்துக் கூற அமைதியாய் தலை ஆட்டினாள் பைரவி. அவளுக்குமே அது சரியாகத்தான் தோன்றியது. ஆனந்த் சம்மதம் இல்லாமல் இதை யாரிடமும் சொல்ல முடியாது.

**–**–**–**–**–**

காலைக் கடன்களை முடித்தவள் சற்று நேரம் ஓய்வாக நியூஸ் சனல் பார்த்தாள். ஓர் ஏழு மணிவாக்கில் ஃபோன் அடிக்கவே எடுத்துப் பார்த்தவள், லியம் பெயரைப் பார்த்ததும் ஆச்சரியப் பட்டுப் போனாள்!

இவன் என்ன தூங்காமல் இத்தனை காலையில் கூப்பிடுகிறான், அழைப்பை ஏற்றவள்..

குட் மோர்னிங் லியம்என்க,

குட் மோர்னிங் ஸ்வீட் ஹார்ட்உற்சாகமாக வந்தது அவன் குரல்.

தூங்காம என்ன பண்ணுற நீ? பப்ல கூத்தடிக்கறயா? யாரு இருக்கா கூட, அந்த லிசாவா? நீ நல்லா இருந்தாலும் அவ உன்னை நல்லா இருக்க விட மாட்டாளே

பைரவி பொரிந்து தள்ள

ஹேய் பேபி, ஸ்டாப் ஸ்டாப். லிசா என் கூட இல்லை. இப்போ டைம் ஸெவன் க்ளொக், இப்போ எப்படி நான் பப்ல இருப்பேன் சொல்லு?”

லியமுக்கு இப்ப ஏழு மணியா? என்ன சொல்றான் இவ

ஹேய் லியம்! ஆர் யூ இன் இன்டியா?” பைரவி கூச்சலிடவெடிச் சிரிப்பு சிரித்தான்.

யெஸ் டார்லிங், கம் டு குற்றாலம் ஏஸ் ஸூன் ஏஸ் பொசிபிள்.. கே

என்ன லியம் திடீருன்னு வந்து நிக்கிற!”

எல்லாம் நேரில வா சொல்றேன். அட்ரஸ் அனுப்பறேன் வந்து சேரு ஸ்வீட்டி” 

அணைப்பைத் துண்டித்த அடுத்த நிமிடமே மெஸேஜ் வந்தது. அவசர அவசரமாக புறப்பட்டாள் பைரவி.

**–**–**–**–**

பைரவி குற்றாலம் வந்து சேரும் போது ஒன்பது மணியாகிவிட்டது. அடித்துப் பிடித்து ஓடி வந்திருந்தாள். எல்லாம் இந்தப் பய பண்ணுற வேலை. நேத்து ராத்திரியே சொல்லக் கூடாதா?

ஏதேதோ எண்ணியபடி அவன் கொடுத்திருந்த அட்ரஸூக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

அருவி ரிசோர்ட்

அழகான சின்ன எழுத்துக்கள் சுற்றுச் சுவரில் பதித்திருக்க, குளுமையாக இருந்தது அந்த இடம்.

அனுமதி பெற்று உள்ளே சென்றவளைக் கவர்ந்தது சுற்றுச் சூழல். வெளிநாட்டு வாசிகள் மட்டுமே என் இலக்கு என்று சொல்லாமல் சொன்னது அதன் செழுமை. அங்கங்கே அள்ளித் தெளித்தாற் போல கொட்டேஜ்கள்.

ரசனையோடு பார்த்தாள் பைரவி. இதன் சொந்தக்காரர் கலா ரசிகனாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றியது. ஃபோனை எடுத்தவள் லியமை அழைத்து

லியம் வெயர் ஆர் யூ?” எனமெயின் பில்டிங்கில் இருந்து கை காட்டினான்.

ரிசெப்ஷன்என்று போட் போட்டிருக்க உதட்டில் புன்னகையோடு அவனை நோக்கிப் போனாள் பைரவி. சோஃபாவில் யாரோடோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவன் இவளைக் கண்டதும்,

ஹாய் ஹனி, மிஸ்ட் யூ லொட் பேபிஎன்று தோளோடு அணைத்துக் கொண்டான்.

என்ன ஆச்சு இவனுக்கு! ரெண்டு நாள் முன்னாடி தானே பேசினேன். அதுக்குள்ள இவன் என்னை மிஸ் பண்ணினானா? இதென்ன புதுசா! கட்டியெல்லாம் புடிக்கிறான். எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு இவனுக்கு நல்லாத் தெரியுமே.

யோசித்த படியே அவன் கூட நடந்தவள் சோஃபாவை அடைந்த போது,  உறைந்து போனாள் பைரவி. புருவங்கள் நெளிய அவளையே பார்த்தபடி

ந்த்…!

மிஸ்டர். ஆனந்தன், மீட் மை ஸ்வீட் ஹார்ட் பைரவி,

பைரவி ஹி இஸ் மிஸ்டர். ஆனந்தன், ப்ரொப்ரீட்டர் (proprietor) ஒஃப் திஸ் பியூட்டிஃபுள் ரிசோட்

அவன் வெள்ளைக்கார ஆங்கிலத்தில் அறிமுகப் படுத்த ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினாற் போல் இருந்தது பைரவிக்கு. கிராதகா! சண்டாளா! தனக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தாள் பைரவி.

ஹாய்!” ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னவன்,

என்ஜோய் யுவர் டைம்என்று சொல்லி விட்டு மட மடவென சென்று விட்டான்.

லியமை வெட்டவா குத்தவா என பைரவி பார்க்க, வாய் விட்டுச் சிரித்தான் லியம்.

உன் பிரச்சினை என்ன லியம்? எதுக்கு காலங்காத்தால என் உயிரை வாங்குற?” சலிப்பாய் அவள் கேட்க,

கூல் பேபி, உனக்கு பசங்க சைக்கோலொஜி தெரியலை. என்னை ரிஜக்ட் பண்ணிட்டார்னு கண்ணைக் கசக்குற. இப்ப பாத்தியா? ஐயா முகத்தில எவ்வளவு பொறாமை

நிஜமாத்தான் சொல்றியா?”

ம்..! பிலீவ் மீ! இவருக்கு உன்னைப் பிடிக்கலைன்னா சும்மா போக வேண்டியதுதானே, எதுக்கு உன்னை முறைச்சிக்கிட்டே போறாராம்?”

அதானே!”

ஹாஹாபொஸஸிவ்னஸ் பைரவி, அவர் உன்னைக் கண்டுக்க மாட்டார். ஆனா வேற யாராவது இடையில வந்தா இவருக்கு பொறுக்காது

அப்படீங்கிற!”

ம்இப்போ நீ என்ன பண்ணுற, நேரா ரிசப்ஷன் போய் ஆனந்தைப் பார்க்கனும்னு சொல்லு

ஐய்யோ! என்னால முடியாது. நான் திட்டு வாங்குறதுக்கா?”

அப்போ நீ லைஃப் லோங்கா கெமிஸ்ட்ரி டீச்சர் வேலை பாக்க வேண்டியது தான்.”

ம்ஹூம்லியம்அவள் சிணுங்க

சொன்னா கேளு பைரவி. திட்டினா பரவாயில்லை. வாங்கிக்கோ. ஆனா போய்ப் பேசு. அப்பதான் ஐயா மனசுல என்ன இருக்குதுன்னு தெரியும்

உண்மையாத்தான் சொல்றயா?”

பொசிடிவ் டார்லிங். குட் லக்கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக லியம் அனுப்ப பயந்தபடியே போனாள் பைரவி.

தான் ஆசைப்பட்ட பெண், காதல் சொன்ன பெண். கொஞ்சம் வலித்தாலும் அவள் நட்புக்கு மரியாதை கொடுத்து புன்சிரிப்புடன் தனது கொட்டேஜை நோக்கிப் போனான் லியம்.

ஓய்வெடுப்பதற்காய்.

**–**–**–**–**

ரிசப்ஷனில் அனுமதிக்காய் காத்திருந்தாள் பைரவி. பார்க்க முடியாது என்று சொல்லி விடுவானோ? படபடப்பாக இருந்தது. டெலிபோனில் அழைத்து அனுமதி கேட்ட பெண் அழகாய் புன்னகைத்து,

யூ மே கோ நௌ மெடம்என்று சொல்லவும்,

ஆச்சர்யப்பட்டுப் போனாள். ஆஹா! பரவாயில்லையே, அதிர்ஷ்டக் காற்று நம் மீதும் அடிக்கிறதே.

மெயின் பில்டிங்கின் உட்புறமும் இன்டீரியர் டிசைன் அவ்வளவு நேர்த்தியாக இருந்தது. வீண் ஆடம்பரம் இல்லாமல் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது. கதவை மெதுவாக தட்டினாள் பைரவி.

கம் இன்ஆழ்ந்த குரல் கேட்க, கதவை திறந்தாள். இன்றும், அன்று போல சி முகத்தில் மோத உள்ளே சென்றாள்.

ஆனால் இன்று

ஃபைலில் மூழ்கி இருக்கவில்லை ஆனந்த். தன் வருகையை எதிர்பார்த்து இருந்தது போல் தெரிந்தது. அவள் நடந்து வருவதையே ஆழ்ந்து பார்த்திருக்க, நடை பின்னியது பைரவிக்கு.

அடர் நீலப் புடவையில் இருந்தாள்.

அள்ளி முடிந்த கூந்தல் அவசரமாய் புறப்பட்டு வந்ததைச் சொல்ல, நெற்றியில் பொட்டுக் கூட இல்லை. ஒப்பனையற்ற முகம் நிர்மலமாக இருந்தது.

அவன் பேசுவான் போல தோன்றாததால் அவளே ஆரம்பித்தாள்.

அது.. வந்து.. லியம் ரொம்ப.. நல்ல ஃப்ரெண்ட், அதான் பார்க்கலாம்னு…” குறும்பு செய்து மாட்டிக் கொண்ட குழந்தை போல் அவள் விளக்கம் சொல்ல,

அதுக்காக,  நாலு பேர் வந்து போற இடத்துல கட்டிப் பிடிப்பாங்களா?”

ஐய்யைய்யோ! அப்படி எல்லாம் இல்லை.” அவசரமாக மறுத்தாலும், உன்னை வெறுப்பேற்றவே அப்படிச் செய்தான் என்றா சொல்ல முடியும்?

மௌனமாக இருந்தாள்.

யூ கே எப்படி வேண்டுமானாலும் பழகலாம், ஆனால் இது இன்டியா. நமக்குன்னு சில சட்ட திட்டங்கள் இருக்கு. பிடிக்குதோ பிடிக்கலையோ கடைப்பிடிச்சுதான் ஆகனும்.”

லியம் என்னோட குட் ஃப்ரென்ட். அவன்கிட்ட யூ கே ஒரு பழக்கம் இன்டியால இன்னொரு மாதிரி பழக்கமெல்லாம் எனக்குக் கிடையாது. எல்லாம் இடத்திலயும் ஒரே மாதிரி பழக்கம்தான். நண்பன் என்ற கோடு மட்டும் தான்.”

தன் கருத்தை உறுதியாக முன் வைத்தாள் பைரவி.

கண நேரம் அமைதியாக கழிய..

ரொம்ப நல்லா இருக்குஎன்றாள். கேள்வியாய் அவன் பார்க்க

ரிசோட்டை சொன்னேன். எனக்கு இன்னைக்குத் தான் பாக்க முடிஞ்சது. பாட்டி சொன்னாங்க, ஆனா இவ்வளவு பெரிசா எதிர்பார்க்கல. அழகா டிசைன் பண்ணி இருக்கீங்க

உண்மையை மறைக்காமல் அவள் சொன்ன விதம் அவனைக் கவர, புன்னகையுடன்..

ஏன்? இந்த கிராமத்தான் கிட்ட அவ்வளவு கெபாசிட்டி இருக்கும்னு எதிர்பார்க்கலையா?”

சுறு சுறுவென கோபம் தலைக்கேறியது பைரவிக்கு. நான் என்ன சொன்னேன், இவன் என்ன புரிந்து கொள்கிறான்!

கோபத்தில் முகம் சிவக்க அவனை உறுத்து விழித்தவள்,

நான்அவள்இல்லைஎன்றாள் ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தம் திருத்தமாக.

தன் கசப்புகளை உரசிப் பார்த்த பைரவிமேல் கோபம் வரவில்லை ஆனந்தனுக்கு.

மாறாக கோபப்பட்டு முகம் சிவக்க தன் அறையை விட்டு வெளியேறியவளை விழியெடுக்காமல் பார்த்திருந்தான், புன்னகையுடன்.

 

error: Content is protected !!