Anandha Bhairavi 9

Anandha Bhairavi 9

ஆனந்த பைரவி part 9

இரண்டு நாட்கள் பள்ளிக் கூடத்துக்கு விடுமுறை சொல்லி விட்டு லியமோடு ஊர் சுற்றினாள் பைரவி. ஐந்தருவி, தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில், பேரருவி என ஒன்று விடாமல் பார்த்து மகிழ்ந்தார்கள்.

பைரவிக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்து போனது. வயது மறந்து இரண்டு பேரும் குழந்தைகளாகிப் போனார்கள். கமலாக்கா காலையிலேயே தின்பண்டங்கள் தயாரித்துக் கொடுக்க உல்லாசமாக கழிந்தது பொழுது.

லியம் ரிசோட்டிலேயே தங்கி இருந்தான். அன்று திட்டமிட்டபடி எல்லாம் பார்த்து முடிக்க,

கொட்டேஜூக்கு போகலாம் பைரவி, ரொம்ப டையர்டா இருக்கு” 

லியம் கூற, தலையாட்டினாள் பைரவி. ஆனந்தைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஒருவேளை அங்கு போனால் பார்க்கலாமோ? மனம் அவசரமாய் கணக்குப் போட்டது. இருவரும் பேசிக்கொண்டே நடந்த படி ரிசோட்டை வந்து சேர்ந்தனர். பேச்சு பேச்சாக இருக்க பைரவியின் கண்கள் சுற்றியிருந்த அத்தனை இடத்தையும் சல்லடை போட்டது.

வெளி வேலையாக எங்கேனும் போயிருப்பானோ? ஆயிரம் கேள்விகள் மனதில் ஓட சுற்றுப் புறத்தை மறந்து ஆனந்திலேயே லயித்திருந்தாள் பைரவி.

வாகனங்கள் வந்து போக வசதியாக நடைபாதை கொஞ்சம் பெரிதாகவே வடிவமைக்கப் பட்டிருக்க இருவரும் பேசிக்கொண்டே நடந்தனர். எதிர்பாரா விதமாக எதிர்ப்பக்கமிருந்து ஆனந்தன் நடந்து வர, அனைத்தையும் மறந்த பைரவி சட்டென நடை பாதையைக் கடந்தாள் ஆனந்தனை நோக்கி.

பின்னால் டெலிவரிக்காக வந்து கொண்டிருந்த பெரிய வேன், மெதுவாகவே வந்து கொண்டிருந்தாலும், திடீரென்று இவள் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பைரவி மேல் மோதியிருந்தது!

ஆனந்த்…!” 

அப்போதும் அவனையே அவள் துணைக்கழைக்க, குரல் வந்த திசை நோக்கி ஆனந்தன் பார்த்தபோது அவன் கண்டதெல்லாம்வேன் இடித்ததால் தூக்கி எறியப்பட்டு பக்கத்தில் இருந்த புல்தரையில் வீழ்ந்த பைரவியைத்தான்.

பைரவீ…!” 

அழைத்தது ஆனந்தா? லியமா? புரியவில்லை. இருவருமே மெய்மறந்து அவளை நோக்கி ஓடினார்கள்.

கையில் சதை கிழிந்து ரத்தம் ஓட, விழுந்த வேகத்திற்கு கால் பிசகி இருந்தது.

பிக்னிக் பாஸ்கட்டிலிருந்த பெரிய சைஸ் ஹாங்கசீஃபை எடுத்த லியம் அவசரமாய் அவள்

கைகளில் கட்டி இரத்த ஓட்டத்தை நிறுத்தப் பார்க்க வலி தாளாமல் அரற்றினாள் பைரவி.

பல்லை அழுந்தக் கடித்த விதமே அவள் வலியின் அளவைச் சொல்ல, அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது. எல்லோரும் அங்கே கூடிவிட செக்யூரிட்டியிடம் தனது கார்க் கீயை கொடுத்த ஆனந்தன் பைரவியை இரு கைகளிலும் ஏந்திக் கொண்டான்.

நன்றாக இருந்த மற்றக் கையால் அவன் ஷேர்ட் கொலரை இறுக்கிப் பிடித்த பைரவி மெதுவாக கண்கள் சொருக மூர்ச்சை ஆனாள். ஆனால் அந்தப் பிடி மட்டும் கடைசிவரை விடுபடவே இல்லை, ஹாஸ்பிடலில் ஆனந்தாக அவள் கரங்களை பிரிக்கும் வரை.

**–**–**–**–**–**

குற்றாலத்தின் அந்தப் பிரபல மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டிருந்தாள் பைரவி. ஆனந்தும், லியமும் பதட்டத்துடன் நின்றிருந்தார்கள்.

நடந்தது எதையுமே நம்ப முடியவில்லை ஆனந்தால். ஒரு கொட்டேஜில் ஏதோ தண்ணீர் பிரச்சினை என்ற முறைப்பாடு வந்திருக்க அதை சரி செய்வதில் உரியவர்களை நியமித்து விட்டு மேற்பார்வைக்காக வந்திருந்தான்.

பைரவி வந்ததை அவன் கவனிக்கவில்லை. அவள் அலறும் ஒலி கேட்டுத்தான் அந்தப் பக்கம் திரும்பினான். இப்போதும் அந்தக் காட்சியை நினைக்க மனம் நடுங்கியது.

அள்ளி அவளைக் கைகளில் தூக்கியவன் செக்கியூரிட்டி ரெடியாக வைத்திருந்த காரின் பின்பக்கம் ஏறிக்கொள்ள லியம் முன் பக்கம் ஏறிக் கொண்டான். கவனமாக பைரவியின் அடிபட்டிருந்த கையையும், காலையும் சௌகர்யமாக வைத்து அவளின் இடையில் கை கொடுத்து அவளை நெஞ்சோடு அணைத்திருந்தான்

கார் ஹாஸ்பிடல் நோக்கி விரைய தான் எப்படி உணர்கிறோம் என்று ஆனந்துக்குப் புரியவில்லை.

இந்தப் பெண் தன்னை இத்தனை தூரம் பாதிக்கிறாளா என்ற கேள்வி அவனுள் பூதாகரமாக கிளம்ப எதையும் யோசிக்கும் திராணி இல்லாமல் அவளை அணைத்திருந்தான் ஆனந்தன்.

பைரவியின் ஆனந்த்!

**–**–**–**–**

பாட்டியும், கமலாக்காவும் பதட்டத்தோடு வந்து சேர்ந்தார்கள். ஆனந்தன் ஃபோன் பண்ணி தகவல் சொல்லவே பாட்டி வரும்போது கமலாவையும் அழைத்து வந்திருந்தார்.

என்ன ஆச்சு ஆனந்தா?” பாட்டி கலவரமாக வினவ,

ஒன்னுமில்லை பாட்டி, சின்ன ஆக்ஸிடன்ட் தான். உள்ளே பாத்துக்கிட்டிருக்காங்க

பயப்படும் படியா ஒண்ணும் இல்லையே ஐயா?” கமலா கேட்க,

இல்லைம்மா. கொஞ்சம் ரத்தம் போயிருக்கு, கால்லையும் அடிபட்டிருக்கு. மத்தபடி பயப்பட எதுவுமில்லை

ஐயோ! அருந்ததி அக்கா கேட்டா நான் என்ன சொல்லுவேன்? இதுதான் நீ என் பொண்ணை பாத்துக்கிற லட்ஷணமான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்?” கமலா புலம்ப,

கமலா, புலம்புறதை முதல்ல நிறுத்து. வெளில போற வர்ற பொண்ணை நீ காவல் காக்கவா முடியும்? அதான் ஒன்னுமில்லைன்னு சொல்லுறாங்க இல்லை, அப்புறம் என்ன?அமைதியா இருபாட்டி அதட்ட அப்போதைக்கு அமைதியானவர்,

அம்மா, அருந்ததி அக்காக்கு தகவல் சொல்லுவோமா?” என்க,

கொஞ்சம் பொறு கமலா. அவங்க இப்ப நிலமை என்னன்னு கேட்டா நாம என்ன சொல்ல முடியும்? நமக்கே ஒன்னும் தெரியாதப்ப அவங்களை கலவரப் படுத்தக் கூடாது. டாக்டர் பாத்துட்டு என்னண்ணு சொல்லட்டும், அப்புறமா அவங்களுக்கு சொல்லிக்கலாம்

பாட்டி சொல்வதிலும் நியாயம் இருக்க மௌனமாக இருந்தார் கமலா.

ஓர் அரை மணி நேரம் பதட்டத்திலேயே கழிய, இரு மருத்துவர்கள் ஸீ யூவை விட்டு வெளியே வந்தார்கள். ஆனந்தன் அவர்களை நோக்கிப் போக, அதில் ஒருவர் ஆனந்தனுக்கு நன்கு பரீட்சயமானவர். இவனைப் பார்த்து சிரித்தவர்,

நத்திங் டு வொரி மிஸ்டர். ஆனந்தன். கொஞ்சம் ப்ளட் போயிருக்கு. கையில ஒரு நாலு ஸ்டிச்சஸ். கால்ல சின்ன ஃப்ராக்ஷர் இருக்கு. ஒரு வன் வீக் பெட் ரெஸ்ட் எடுத்தா கே. இப்போதைக்கு

‘பி பி’ போட்டிருக்கு, அவ்வளவுதான். இன்னைக்கு நைட்டே ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிரலாம்

சொல்லவிட்டு நகர, அத்தனை டென்ஷனும் வடிய மௌனமாக அங்கிருந்த இருக்கையில் தளர்ந்து அமர்ந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்திருந்தான் லியம்.

**–**–**–**–**

பைரவியை ரூமிற்கு அன்று இரவே மாற்றி விட்டார்கள். நினைவு திரும்பவில்லை. வலி அதிகம் இருக்கும் என்பதால் அதுவே நல்லதெனத் தோன்றியது எல்லோருக்கும்.

பல்ஸ் நோமலாக இருக்கவே எந்தப் பயமும் இருக்கவில்லை. கமலா அருந்ததிக்கு தகவல் சொல்ல அவர்கள் அடுத்த ஃபிளைட்டில் கிளம்புவதாக சொல்லி விட்டார்கள்.

இரவு கமலா பைரவியோடு ஹாஸ்பிடலிலேயே தங்க ரிசோட்டில் வேலை செய்யும் ட்ரைவரை அவர்களுக்கு துணையாக இருக்க வைத்தான் ஆனந்த்.

மனம் ஒரு வகையான பதட்டத்தில் இருக்க, அன்று வீட்டுக்குப் போகாமல் ரிசோட்டிலேயே தங்கி விட்டான். தன் மனம் குறித்து தனக்கே ஆச்சரியமாக இருந்தது.

பைரவி அவனுள் எத்தனை தூரம் இடம் பிடித்திருந்தால் அவனுக்குள் இத்தனை படபடப்பு வந்திருக்கும் இன்று. சுய அலசலில் ஈடுபட்டிருந்தான்.

தனக்கென அமைக்கப்பட்டிருந்த அறையில் இருந்தவன் இரவு உடைக்கு மாறி இருக்கவே, மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். ரூமை விட்டு வெளியே வந்தவன் கால் போன போக்கில் கொஞ்ச தூரம் நடக்க, இயல்பாகவே கால்கள் நீச்சல் குளத்தருகே அழைத்து வந்திருக்க அந்தச் சில்லிட்ட தரையில் உட்கார்ந்து மௌனமாக சிந்தித்தான்

இது எத்தனை தூரம் சாத்தியப்படும் என்பது போக இனி தன்னால் பைரவியை விட்டுக் கொடுக்க முடியுமா என்பதே பெரிய கேள்வியாக இருந்தது.

பக்கத்தில் யாரோ அமர்வது போல் தோன்ற திரும்பிப் பார்த்தான் ஆனந்தன்.

லியம். லேசான மது வாடை வரவே குடித்திருப்பான் என்று தோன்றியது ஆனந்தனுக்கு.

தூங்கல்லையா லியம்?”ஆங்கிலத்தில் ஆனந்தன் வினவ,

தூக்கம் வரலைதெளிவாகத்தான் வந்தது பதில்.

என்னாச்சு? அதான் உங்க ஃப்ரெண்டுக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் இப்படி டிஸ்டேர்ப்டா இருக்கீங்க?”

யூ நோ வன் திங் மிஸ்டர். ஆனந்தன்? நீங்க மட்டும் பைரவி லைஃப்ல வராம இருந்திருந்தா இந்நேரத்துக்கு அவ என் ஃப்ரெண்டா மட்டும் இருந்திருக்க மாட்டா, அதுக்கும் மேல.. மேல இருந்திருப்பா

சட்டெனத் திரும்பிப் பார்த்தான் ஆனந்தன்.

ஹேட் யூ, ஹேட் யூ ஆனந்தன். ஹேட் யூ வெரி மச்

சற்று நேரம் மௌனமாக அமர்ந்திருந்தவன், சிகரெட் பாக்கட்டை தேடி எடுத்து ஆனந்தனுக்கும் நீட்ட, இப்போது அது அவனுக்குமே தேவைப்பட்டது.

யூனிவசிட்டியிலதான் பார்த்தேன். பார்த்த உடனேயே அவ்வளவு பிடிச்சுது. கொஞ்சம் டைம் கொடுக்கலாம்னு ஒரு ரெண்டு மாசம் கூட இருந்தேன். அதுக்கப்புறமும் நடிக்க என்னால முடியலை, சொல்லிட்டேன். நான் சொன்ன அடுத்த நொடி அவ சொன்ன முதல் வார்த்தை

ஆனந்த்

ஆச்சர்யத்தில் கண்கள் விரிய லியம் பேசுவதைக் கேட்டிருந்தான் ஆனந்தன்.

அதுவும் இன்னொரு பொண்ணுக்கு நிச்சயம் ஆன ஆனந்தன். எனக்கு நம்பிக்கை இருந்தது. எப்படியும் பைரவியை வெளியே கொண்டு வந்திரலாம்னு. ஆனா அந்த நிச்சயதார்த்தம் இல்லைன்னு தெரிஞ்ச உடனேயே அத்தனையையும் தூக்கிப் போட்டுட்டு வந்துட்டா. அப்ப புரிஞ்சுது எனக்கு, பைரவியை எப்பவுமே உங்ககிட்ட இருந்து பிரிக்க முடியாது என்று

ஆனந்தனுக்கு உடம்பெல்லாம் ஏதோ பண்ணுவது போல் இருந்தது. எங்கோ வலித்தது.

பயோ கெமிஸ்ட்ரி ஒன்னாத்தான் முடிச்சோம். நல்ல ஃபார்மஷூடிகல் (pharmaceutical) கம்பனியில வேலை கிடைச்சது. யூ நோ மிஸ்டர்.ஆனந்தன், ஏர்ன் ஃபைவ் கிரான்ட் எவ்ரி மன்த். இன்டியன் ருப்பீஸ்ல அஞ்சு லட்சம். எல்லாத்தையும் விட்டுட்டு நீங்க குடுக்குற முப்பதாயிரம் ரூபா சம்பளத்துக்கு இங்க வந்து வேலை பாக்குறா. ராணி மாதிரி வாழ வேண்டியவ ஆனந்தன். ஷி இஸ் மை ஸ்வீட் ஹார்ட் ஆனந்தன்

என்ன பேசுகிறோம்யாரிடம் பேசுகிறோம்

எதுவும் புரியாமல் பிதற்றிக் கொண்டிருந்தான் லியம்.

 

error: Content is protected !!