anbin mozhi vizhiyil 8

anbin mozhi vizhiyil 8

அன்பின்  மொ(வி)ழியில் -8.
ராமின் கைகள் மங்கையவளை அணைத்திருக்க , பெண்ணவளின் கருவிழியோ அவன் கண்களுடன்  உறவாட, தன்னவளின் ஸ்பரிசத்தை உயிர்வரை உணர்ந்தவன், அவளை தனக்குள்  புதைக்க
நினைத்து இறுக்கி அணைத்து கொண்டு பார்த்த போது அந்தோ பரிதாபம் அவனின் கைகளில் இருந்த  தலையணை இதனை நேரம் அவன் கண்டது கனவு என உணர்த்தியது.
இது அவனுக்கு தினமும் நடப்பதுதான் என்றாலும் தன் மனதில் இருக்கும் கன்னியவளிடம் தாபம்  தீராதவனாய் போலியாக கோபத்துடன்.
மனதோடு ‘செல்லம் உனக்கு இதுவே வேலையா போச்சு அது எப்படிடி உன் ஸ்பரிசத்தை  இவ்வளவு அழகா என்னை உணர வைக்கிற?, நீ கற்பனை அப்படின்னு அறிவு சொன்னாலும்  மனசு ஒதுக்க மாட்டேங்கிது ஏண்டி இந்த பாடு படுத்துற?’  என்றான் போலியாக.
‘இனி தூங்க முடியாது’ என்று எண்ணியவன்  அன்றைய வேலையை செய்ய எழுந்து விட்டான்.
பரந்து விரிந்திருந்த        வயலின் ஓரு பக்கம் கதிர்கள்  எல்லாம் கர்ப்பிணிப்  பெண்ணை போல் நெல்மணிகளை சுமந்து வளைந்து அறுவடைக்கு தயாராக நின்றன.
மறுபுறம் நிலம் செம்மையாக காளைகளை பூட்டி உழுது  நடவுக்கு தயாராக இருந்தன.
ராம் கருக்கலிலே   (காலையில் வெளிச்சம் பரவும் முன் உள்ள அடர்த்தி குறைவான  இருட்டு)  வயலுக்கு வந்துவிட்டான், அன்று நாத்து பாவுவதால்    வேலை விரைவாக நடந்து கொண்டிருந்தது.
செல்வம் ராமிடம்,  “ பாரு மச்சான் எவ்வளவு அழகாக நடுறாங்கன்னு, இவங்கள பட்டணத்துல உள்ளவிங்க படிக்காதவனுங்கன்னு இலகுவா சொல்லுருவாங்க, ஆன நம்ம மக்க ஒரு நாத்துக்கும் இன்னும் ஒண்ணுக்கும் இடையில் நூல் பிடிச்ச மாதிரி கணக்கா நடுறாங்க”  என சொல்லிக் கொண்டிருக்கும் போதே.
ராம் – “அவுங்களுக்கு இது இயல்பாவே வருமுலே”
‘நண்டு ஓட நெல் நடணும்;
நரி ஓட கரும்பு நடணும்;
வண்டி ஓட வாழை நடணும்;
தேர் ஓட தென்னை நடணும்’.
“அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவாருலே, அவருக்கு அதுக்கு முன்னாடி இருந்தவிங்க சொன்னது தான், அவுங்களுக்கு சென்டி மீட்டர் கணக்கு எல்லாம் வராதுலே” என்றவன்.
 “இரண்டு சென்டி மீட்டர்  அளவு இடம் விட்டு பயிர் நடணும் அப்படினா அவுங்களுக்கு புரியாது”.
“இதுவே நண்டு ஓடிவர அளவு இடம் விட்டு பயிர் நடணும் அப்படினா வெரசா புரியும்லே, இது  நம்ம வாழ்க்கையோட இணைஞ்சதுலே, தலைமுறை
தலைமுறையாக நமக்கு  இயல்பா வரது விவசாயம்”.என்றான்.
ஒவ்வொரு
விவசாயிகளுக்கும் உண்டான பெருமையுடன் வந்து விழுந்தன ராமின் வார்த்தைகள்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது நிலாவிடம் இருந்து போன் வந்தது.
ராம் – ‘பட்டு’ என்று அழைத்தது தான் தாமதம்.
“அண்ணா இங்க அம்மா, ராஜ் அண்ணா,  விஷ்ணு அத்தான் எல்லாம் வந்துருக்காங்க” என்றாள்  மகிழ்வுடன்.
அவளின் சந்தோஷம் ராமையும் தொற்றிக் கொண்டது.
“சரி பட்டு! நானும் செல்வமும் கிளம்பிட்டோம், செத்த நேரத்தில அங்கனக்குள்ள வந்துருவோம்” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
செல்வத்திடம் “வாலே வீடு வர  போயிட்டு வருவோம்”என்றவன்.
 “ராஜ், அப்புறம் உன் பங்காளி எல்லாம் அம்மாவோட கிளம்பி வந்திருக்காங்க போல நம்ம  பட்டு கூப்பிட்டு சொல்லுச்சு” என்றான் ராம்.
‘சரி’ என்ற செல்வம் வயலை கவனிக்க ஆளை நிறுத்திவிட்டு ராமுடன் சென்றான்.
**************************
அந்த இனிமையான காலை நேரத்தில் தனது பைக்கில் எதிர் காற்று தனது சிகையுடன் உறவாட அதன் குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே செல்வத்துடன் வீட்டுக்கு வந்தான் ராம்.
ராம் வீட்டினுள்   வரும்போது முதலில் கண்டது ராஜை தான்,  அவனின் கண்கள் ஒரு வித ஏக்கத்துடன் விஷ்ணுவின் தோளில் சாய்ந்துதிருந்த பொன்னியின் மேல் விழுவதை கண்டவன்.
 சில நொடியில் ராஜின் உள்ளத்தினை அறிந்து கொண்டான். ராமின் விழிகள் புன்னகையில் நிறைந்திருந்தது தம்பியின் காதலை உணர்ந்து.
இதற்கு முன்பு எப்படியோ  தற்போது தன் உள்ளத்தில் மாய உருவாய் தோன்றும்  மங்கையவள் உருவத்தினை காணும் போது அவன் உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்கள்  தான் ராஜின் விழிகளின் மொழியினை ராமிற்கு உணர்த்தியது.
ஆனால் அதை உணர வேண்டியவளோ தன் தமையன் தோளில் மென்மலரென மலர்திருந்தாள்.
 பின் ஒரு வாரம் அன்னையை பிரிந்திருந்த ராம் , விரைந்து  ஜாஸ்ஸின் அருகில் சென்றான்.
ராமினை கண்ட ராஜ் தன் பார்வையை தன்னவளிடம் இருந்து பிரித்து , எழுந்து நின்று தான் உருவான நிமிடம் முதல் தன்னை  உயிராய் நினைக்கும் அண்ணனை  தழுவிக் கொண்டான்.
செல்வம் – “மச்சான் கண்ணுக்கு அண்ணன் மட்டும் தான் தெரியிறாரு போல அயித்த மகன் கண்ணுக்கே தெரியல, ஹ்ம்ஹ்! இதே என் தங்கச்சிகளா இருந்தா இப்படி கண்டுக்காம இருப்பீங்களா” என்றான் சற்றுமுன் ராம் போலவே ராஜின் மனதை கண்டுகொண்டவன் கிண்டலாக.
அவனின் குரலை கேட்டு கொண்டே திரும்பியவன் செல்வத்தைப் போலவே “ஹ்ம்ஹ் உங்க தொங்கச்சி அப்படியே எங்களை தங்குற தங்குக்கு அவுகள வேற கண்டுக்கணுமா செல்ல குட்டி?” என்றவன் தன் அத்தை மகன் மற்றும்  தன்மீது அண்ணனை போல் பாசம் செலுத்துபவனை தழுவிக்கொண்டான்.
“எல்லாரையும் குட்டின்னு கொஞ்சுரத எப்பதான் விடப்போறியோ” என்ற செல்வம் “வேலை எல்லாம் எப்படி போகுது ராஜ்?” என கேட்க அதன் பின் அவர்கள் இருவரும் வேலை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அதேபோல் ராம் அன்னையுடனும் மற்றவர்களுடனும் பேசியவாரு அனைவரையும் சாப்பிட அழைத்து சென்றான்.
காலை உணவாக டைனிங் டேபிளில் சுடச்சுட நெய்ப் பொங்கலும், இடியப்பமும்,  கறி ஆனமும் இருந்தது.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு செல்வம், ராம் இருவரும் வயலில் வேலை  இருப்பதால் கிளம்பிவிட்டனர்.
விஷ்ணுவும் “ சரி அத்தை நாங்களும் புறப்படுறோம்” என்றவன்  ராஜிடம்
சொல்லிவிட்டு சென்றான்.
ராஜின் கூரான பார்வை
அமைதியாய் விஷ்ணுவுடன் செல்லும் பொன்னியை தொடர்ந்தது.
பின் அன்னையிடம் “மாம் நான் ரெஸ்ட் எடுக்கிறேன்” என்றவன் தன் அறைக்கு சென்று விட்டான்.
அதன் பிறகு பொன்னி ராஜின் கண்களில் படவே இல்லை.
அது அவனுக்கு கடுப்பாக இருந்தாலும் ‘எப்படினாலும்  என்கிட்ட  தான்  அவ வரணும்’ என்று நினைத்தவன் அதன் பின்னர் இயல்பாகிவிட்டான்.
ராஜ் வந்த  அந்தவாரம் முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக கழிந்தது.
ராமிற்கும் அறுவடை முடித்து  நிம்மதியாக இருக்க.
ராஜ் தன் அண்ணனிடம் நீலகிரி ரிசார்ட் ப்ரொஜெக்ட் பற்றிய தகவல்களை கொடுத்து “ ராம் இந்த ஒர்க்க  நம்ம இரண்டு பேரும் சேர்ந்து செய்யணும்” என்றான் கண்களில் எதிர்பார்ப்புடன்.
ராம்- “நீயே சூப்பர் ஆஹ் செய்வ ராஜ், எதுக்கு இதுல நான் வேற,  இங்க உள்ள வேலையே சரியா இருக்கு” என்று நழுவ பார்த்தவனை.
“ராம் உனக்கு புடிச்ச மாதிரி இயற்கை எழில் கொஞ்சும் ஊரு,  அதேநேரம் architecture பத்தின  உன்னோட  தனி திறமை இது மூலமா வெளியவரும் அதோட எனக்கும் உன் கூட ஒர்க் பண்ணனும் அப்படிங்கிற ஆசையும் நிறைவேறிடும்”  என்ற ராஜ் பின் “எனக்காக ஓகே சொல்லு ராம்” என்றான் பஞ்சதந்திரம் படத்தில் வரும் தேவயானை குரலில்.
ராஜின் குறும்பில் ராமினால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
தனக்கு  வேண்டியத்தை
எப்படியும் சாதித்து கொள்ளும் தன் உடன்பிறந்தவனின் குணம் அறிந்தவன், ராஜின் ஆசைக்கு சம்மதித்தான்.
“சரிடா அரட்டை நம்ம பண்ணலாம்” என்று ராம் சொன்னவுடன் அதற்கான வேலைகளில்
இறங்கினான் ராஜ்.
*************************
பூம்பொழிலில்,
ரம்யாவும்  தன் மைந்தர்களும் செய்யும் கலாட்டவில் வீடும், மலைகுடில்  தொடர்பான வேளைகளில் ஆஃபீஸ்ஸும் கயலின் நேரத்தை  அழகாக எடுத்துக்கொண்டன.
ரம்யாவும் இப்போது அவளின் சிறிய கூட்டுக்குள் நுழைந்த  பிறகு கயலுக்கு வாழ்க்கை நிம்மதியாக இருந்தது.
அன்றைய தினத்தில் ரம்யா மிகவும் சந்தோஷமாகவும், பரபரப்பாகவும் இருப்பதாக கயலுக்கு தோன்றியது.
கயல்- “ரம்யா என்ன ரொம்பவும் சந்தோஷமா இருக்க  மாதிரி இருக்கு?”.
“ஹே கயல் நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன், மதர்  அவுங்க குடும்பத்தோட மலைகுடில் வராங்க”.
“இப்ப நம்ம இருக்க வீட்டுக்கு  பின்னால இருக்க பெரியவீட்டுல தான் தங்குவாங்க எப்ப வந்தாலும்”. என்ற  ரம்யாவிடம்.
“ரொம்ப நல்லது ரம்யா நானும் இதுவரைக்கும் ஆர் ஆர் ட்ரெஸ்ட் ஆளுங்களை தவிர மத்த யாரையும் பாத்ததில்லை” என்றாள் கயல்.
“இப்ப எல்லாரையும் பாத்துரலாம் , அம்மா , அண்ணனுங்க, நிலா எல்லாரும் இங்கதான் கொஞ்சநாள் இருப்பாங்க, அண்ணனுக்கு இங்க ஏதோ ரிசார்ட் காண்ட்ரேக்ட் கிடைச்சுருக்காம், அதோட  பூம்பொழில்ல மருத்துவமனை எல்லா வசதியோட நம்ம ட்ரெஸ்ட் மூலமா கட்ட போறாங்க , அதுலயே  நம்ம பசங்க மூணு பேருக்கும் ஜாப்  கொடுக்குறதா சொல்லிருக்காங்க” என்றாள் ரம்யா  வேகமாக.
நிறுத்தாமல் தோழி பேசுவதை கண்ட கயல், வருபவர்கள் ரம்யாவுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என உணர்ந்து மெல்லிய புன்னகையுடன்.
“சந்தோஷம் ரம்ஸ், பெரிய வீட்டை சுத்தம் செய்ய சொல்லிடியா?”  என்றாள்.
ரம்யா- “இல்லடா  இப்ப கொஞ்ச நேரம் முன்னடி தான் அண்ணா போன் பண்ணாங்க,  சோ இனிதான் அதெல்லாம் பாக்கணும், இன்னைக்கு நான் ஆஃபீஸ் வரலைடா” என்றாள் கயலிடம்.
“சரி ரம்யா நீங்க இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடுத்துக்கலாம் பட் நாளைக்கு வந்திரணும்” என்றாள் நிர்வாகியாக.
“கண்டிப்பா மேடம்” என்றவள் அந்த இடத்தை விட்டு  நொடியில் சிட்டாக பறந்துவிட்டாள்.
இதில் ரம்யா அவளின் அண்ணன்கள் பெயரையோ கட்டிடம் கட்ட வேண்டிய நிறுவனத்தின் அடையாளத்தையோ சொல்லவில்லை என்பதை கயல் கவனிக்கவில்லை, அவள் கவனம்  முழுவதும் ரம்யாவின் குதூகலத்தில் மட்டும் பதிந்திருந்தது.
ரம்யா சொல்லாத அவ்விரு விடயங்களை பற்றி தெரிந்திருந்தால் அவள் முகத்தில் இருந்த அந்த மெல்லிய புன்னகை அழியாது இருந்திருக்குமா என்பது சந்தேகமே!.
 உள்ளே வந்து தன் தோழியின் அழகிய பிள்ளைகளுடன் அமர்ந்த ரம்யாவுக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது.
அன்னை வருவது ஒருபுறம் இருந்தாலும் கயலின் வாழ்வில் ஏற்பட கூடிய மாற்றம் தான் அவளின்  குதூகலத்திற்கு  காரணம்.
வேண்டுமென்ற தான் ரம்யா வேந்தன் குரூப்ஸ் என்ற வார்த்தையை விடவில்லை, கயல் முட்டாள்தனமாக இங்கிருந்து செல்ல வாய்ப்புள்ளதால்  தான் அதனை விடுத்து மற்றதை மட்டும் பகிர்ந்து கொண்டாள்.
சிறிய இரட்டையர்கள்  இருவரும் குளித்து அழகாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ஆதியை கைகளில் ஏந்தி கொண்டவள் ரவியின் அருகில் அமர்ந்து “செல்லம் உங்க இரண்டு பேருக்கு ஒரு ஸ்வீட் சர்பிரைஸ் இருக்கு” என்றாள் ரம்யா.
ரவி ஆர்வமாக “என்ன பேபி?” என்றதிற்கு, “அதெல்லாம் சொல்ல முடியாது இன்னும் 2 டேஸ்ல காட்டுறேன்” என்றவளிடம்.
“காலையே உளற கூடாது ரமி குட்டி,  உன்னை மாதிரி வெட்டியா இல்ல நாங்க, வி ஹவ் நோ டயம் டு பிலே வித் யூ டியர், ஸ்கூல் போகணும்” என்றான் ஆதி நக்கலாக.
அவனின் வார்த்தைகளில் பழைய சந்தேகம் வர, “எப்பா ஆதி சும்மா இருக்க மண்டைக்குள்ள ஏன்டா இப்படி நக்கலா பேசி நண்டை ஓட விடுற” என்றாள் சலிப்பாக.
அவளின் பேச்சு புரியாத கடுப்பில் “வா ரவி” என தன் தம்பியை அழைத்துக்கொண்டு சமையல் அறையில் இருக்கும் அன்னையிடம் சென்றுவிட்டான் ஆதி.
இரண்டு நாளில் எப்படியும் உண்மை தெரிந்து கொள்ளலாம் என்றாலும் இப்போது மண்டையில் ஓடும் நண்டினை எப்படி துரத்துவது என்ற மாபெரும் குழப்பத்துடன் அமர்ந்துவிட்டாள் ரம்யா.
*************************
ராஜ் தன் தமையனுடன் இணைந்து செய்ய போகும் ப்ரொஜெக்ட்டை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தான் அதை கொண்டாட வினித்துடன் கிண்டியில் உள்ள சோழ ஹோட்டலுக்கு வந்திருந்தான்.
அவர்கள் உள்ளே நுழையும் போது விஜய் அரை போதையில் வெளியே வந்து கொண்டிருந்தான்.
ராஜிடன் மீண்டும் மீண்டும் தோற்பது அவனை மூர்க்கமாக மாற்றியிருந்தது.
 அது நீச்சல் குளத்திற்கு அருகில் உள்ள பகுதி எனவே ஆள் நடமாட்டம்  அதிகம் இல்லாத நிலையில் இருந்தது.
ராஜினை பார்த்த விஜய் அவனருகில் வந்து  “இப்ப ஜெயிச்சிட்டேன்னு கர்வமா இருக்க  இல்ல, சீக்கிரம் இது எல்லாம் மாறிடும் அப்புறம் வெற்றி அப்படிங்குறது உன் கிட்ட கூட  வராது” என்றான் போதையினால் உண்டான தடுமாற்றத்துடன்.
அவனின் உளறலை கேட்ட ராஜ்,  அவனுக்கே உரிய நக்கலுடன், “எப்பவும் என்கிட்ட தோக்குற உனக்கு இவ்வளவு  பெரிய ஆசை இருக்க கூடாதுடா”,என்றவன்.
“இவன் என்னை ஜெயிக்க போறானாம்  கதையை கேட்டியா! வினி குட்டி” என்றான் திமிராக.
அவனின் குரலில் உள்ள நக்கலை உணர்ந்த விஜய், “நீ முதல் முதலாக வாங்குன சிறந்த இளம்தொழிலதிபர் விருதால் ஏற்பட்ட சந்தோஷத்தை கூட முழுசா அனுபவிக்க விடாம உன்னை முழு போதையில் வச்சுருந்தவன்டா நான்”  என்றான் கர்வமாக.
இது ராஜுக்கு புது தகவல், எப்படியும் 6 வருடம் இருக்கும், முக்கியமான வேலை தொடர்பாக அவன் US போயிருந்த போது அவனுக்கு பதிலாக ராம் தான் அந்த விருதை வாங்கினான், இருவரும் ஒரே மாதிரி  இருப்பதால் விருது வழங்குபவர்கள் மற்றும் வெகு சிலரே அன்று வந்தது ராம் என அறிவார்கள்.
ராம் அறவே வெறுக்கும் ஒன்றினை,   அவனுக்கு தெரியாமல் ஏதோ செய்து அருந்த வைத்த விஜய்யின் மீது கொலைவெறி வந்தது ராஜுக்கு.
ராமுடன் போதையை தொடர்பு படுத்தி நினைக்க கூட  முடியவில்லை ராஜினால்.
விஷ்ணுவுக்கும் விஜய்யின் வார்த்தைகள் கோபத்தினை ஏற்படுத்தியது.
“மார்க் மை வர்ட்ஸ் விஜய்! இனி வெற்றி அப்பிடிங்குறதே! உன் வாழ்க்கையில இருக்காது” என்றான் ஆத்திரத்துடன்.
விஜய்யும் “இந்த  ப்ராஜெக்ட் ஆரம்பிப்ப  பட் முடிக்க மாட்ட ராஜ், அதுக்குள்ள நான் உன்னை முடிச்சுருவேன்” என்றான் திமிராக.
இருவருக்கும் கைகலப்பு ஏற்படும் முன்னர் விஜய்யின்  பி.ஏ வந்து அவனை அழைத்து சென்றுவிட்டார்.
தடுமாற்றத்துடன் நடந்து செல்லும் அவனை வெறித்து பார்த்து கொண்டிருந்த ராஜினை ஹோட்டலின் உள்ளே இழுத்துக் கொண்டு சென்றான் விஷ்ணு.
அவர்கள் பதிவு செய்திருந்த டேபிலில் ராஜை  உக்கார வைத்தவன், “அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு   சண்டைக்கு போற, விடு மச்சான் பாத்துக்கலாம்” என்றான் விஷ்ணு.
“என்னை என்ன பண்ணாலும் ஓகே வினி,  ஆனா  அந்த நாய், நம்ம  ராம் கிட்ட வாலாட்டிருக்கான்” என்றான் கோபமாக.
“சரி விடு”  என்றவன் ப்ரொஜெக்ட் சம்பந்தமாக வேற விஷயங்களை பேசி ராஜின் கவனத்தை  மாற்றினான்.
இருவரும் கலந்து பேசி முதலில்  பூம்பொழிலுக்கு சென்னையில் இருந்து இவர்களும். மற்றவர்களை ஊரிலிருந்து அப்படியே அங்கு வர சொல்லலாம் என தீர்மானித்தனர்.
ராமிடம் பேசி தன்னுடைய முடிவை  சொன்னவன் இரு தினங்களில் நிலகிரிக்கு அவர்களை
கிளம்பிவர சொன்னான்.
இங்கு ராஜ் சென்னையில் இருந்து புறப்பட்ட அதே நேரத்தில் ராம்,  அன்னை,  நிலா மற்றும் செல்வத்துடன் காரில் பூம்பொழில்  நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு விதியின் அழகான பரிசும்  அங்கே காத்திருந்தன.
*************************
“கயல் எல்லாம் சரியா இருக்குள்ள,  அன்னை வரப்ப நீ தான்  முதல்ல ரிஸிவ் பண்ணனும்” என்றவளிடம்.
“நான் பாத்துக்குறேன் ரம்யா, நீ அவுங்க எல்லாம் வரத பத்தி யாருகிட்டையும் சொல்லலையே?” என்றாள் கேள்வியாக.
“இல்லைபா அப்புறம் பூம்பொழில் மக்கள் எல்லாரும் அன்னைக்கு இங்க தான் இருப்பாங்க, அவ்வளவு தூரம் பயணம் செய்து வரவுங்களுக்கு சிரமம் ஏற்படும் அதான் சொல்லல, பொறுமையா  மதர் வந்த பிறகு வந்து பாத்துக்கட்டும்” என்றாள் ரம்யா.
ஏனோ அன்று காலை எழுந்தது முதல்  கயலுக்கு உள்ளம்  படப்படப்பாக
இருந்தது.
அதற்கான  காரணம் தெரியாது, அவளும் கிளம்பி, பிள்ளைகளை ஸ்கூலில் விட்டுவிட்டு  ரம்யாவுடன் ஆஃபீஸ்க்கு வந்தாள் கயல்.
ராஜுக்கு அந்த மலைப்பாதையில் பயணம் செய்வது இனிமையான அனுபவமாக இருந்தது.
காலை மணி 9 ஐ நெருங்கிய பிறகும் மேகங்கள் பனியுடன் இணைந்து சங்கமித்து இருந்த, இருள் முற்றிலும் விலகாத அந்த பொழுது அதனை ரம்யமாக இருந்தது.
சீரான வேகத்தில் வந்துகொண்டிருந்தவன் மலைகுடிலை நெருங்கியவுடன் ரம்யாவுக்கு போன் செய்தான்.
ராஜின் போனை எடுத்த ரம்யாவிடம், “ ரமி குட்டி நாங்க மலைகுடில் கிட்ட வந்துட்டோம் நீ எங்கே இருக்க” என்றவனிடம்.
“நாங்களும் இங்கதான் ஆஃபீஸ்ல இருக்கோம் அண்ணா, நீங்க வாங்க”  என்றவள்.
ரம்யா – “ மேம்  அண்ணா வந்துட்டாங்க, வாங்க” என்று கயலிடம் கூறியவள் விரைந்து வெளியில் வந்தாள்.
அவளின்
பின்னால் வந்தவளுக்கு எதிரில் ரம்யாவின் அருகில் நின்றவனை பார்த்து தலை சுற்ற ஆரம்பித்தது.
 நல்ல வேலை அதற்குள்  ரம்யாவின் ‘ராஜ் அண்ணா’ என்ற அழைப்பில் சுதாரித்தவள், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவர்களின் அருகில் சென்றவள்  “வெல்கம் சார்” என்றாள் கயல்  மனதை மறைத்த புன்னகையுடன்.
ரம்யா , ராஜுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளின் கவனம் முழுவதும் கயலின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை  உள்வாங்கிக் கொண்டிருந்தது.
கயலினை கண்ட ராஜ். “வாவ் கயல்விழி தானே நீங்க?” என்றான்.
“ஆமாம் சார், எவளோ வருஷம் ஆச்சு இப்பவும் ஞாபகம் வச்சுருக்கிங்க” என்றாள் கயல் வியப்பாக.
ராஜ்-“என்கிட்ட மூணு வருஷம் ஒர்க் பண்ணிருக்கிங்க,  அதில்லையும் 6 மாசம் பி. ஏ வா  இருந்த உங்களை எப்படி மறக்க முடியும்”. என்றவன்,  திடீர்னு ஏன் கயல்விழி நீங்க நான் வெளிநாட்டுல இருந்தப்போ, ஜாப் விட்டு போறத பத்தி எனக்கு மெயில்  பண்ணிட்டு போயிடீங்க எனி பிரோப்ளேம்?”.என்றவன்.
“அதுக்கு அப்புறம் இப்பதான் உங்களை பாக்குறேன்” என்றான் கேள்வியாக.
அவனின் கேள்வியை சிறு தவிப்புடன் உள்வாங்கியவள், அதற்கு பதில் சொல்ல முடியாமல்  திணறிய போது  அவர்களுக்கு அருகில் உயர்ந்த ரக கார் வந்து நின்றது.
அதில் இருந்து முதலில் ஜாஸ் ,நிலா இருவரும் இறங்கிய பின்னர் செல்வமும், ராமும் இறங்கினர்.
அதுவரை தவிப்பாக தன் உள்ளம் மறைத்துக் கொண்டு ராஜிடம் பேசிய கயல், ராமினை கண்ட நொடியில் வேர் அறுந்த பூங்கொடியாக மயங்கிவிழுந்தாள்.
error: Content is protected !!