அலையோசை 1
விலை பேசவே முடியாத
மண்வாசத்தை காற்றில் கலந்து,
மண்ணில் வாழும் மக்களின்
தாகங்களை எல்லாம் போக்கி,
இடியும் மின்னலும் தேவதூதனின்
வருகையை அறிவிக்க,
இயற்கையின் முடிசூடா
இளவரசியின் வருகையை
கொண்டாது எதை நோக்கி
ஓடுகிறாய் மனிதா?
அன்று அந்த மேகங்களுள் என்ன சண்டையோ? ஒன்றோடு ஒன்று மிக பயங்கரமாக மோதி கொண்டு இருந்தன. அந்த மோதலின் விளைவுகளாக இடியுடன் மின்னலும் மழையும் மக்களை மிரள செய்து கொண்டு இருந்தது.
அந்த மேகங்களின் சண்டையை போலவே, காவல் துறை அலுவலகத்தில் ருத்ராவின் நிலைமையும் இருந்தது.
குறுகிய காலத்தில் ஒரு சிறந்த எசிபி யாக தன்னை வளர்த்து கொண்ட, ருத்ர தேவ் ஐபிஎஸ் தன்னுடைய மனதிற்கும் முளைக்கும் நடக்கும் சண்டையை தடுக்க இயலாத ஒரு கோழையாக இருந்தான்.
“எப்படி காணாமல் போனான்? அவ்வளவு பாதுகாப்பு கொடுத்தும் எங்க
போனான்? எப்படி முடியும்? யார் இதை செய்து இருப்பார்? என்னோட இவ்வளவு வருஷ சர்வீஸ்ல இந்த மாதிரி நடந்ததே இல்லையே? அய்யோ! தலையே வெடிச்சிடும் போல இருக்கே? ஆ…” என்று கத்தினான்.
அவனுடைய கத்தலை கேட்டு அங்கு இருந்த அனைவரும் நடுங்கி கொண்டு இருந்தனர்.
இவனுடைய கத்தல்களுக்கு எல்லாம் காரணம், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்தியே ஆகும்.
“மும்பை மாநகரத்தில் மிக முக்கியமான கோடீஸ்வரரான தீரஜ் ரெட்டியின் ஒரே மகனான மகேஷ் ரெட்டி திடீரென காணாமல் போனார். இவரை பற்றிய தகவல்கள் யாவும் இதுவரை போலீசார் கண்டறிய வில்லை. மகேஷின் மறைவுக்கு காரணம் யார்? இது விதியா? இல்லை திட்டமிட்ட சதியா?” என்று எந்தவித தயக்கமும் இல்லாமல் அந்த செய்தியாளர் அனைவர் தலையிலும் இடியை இறக்கினார். இதனால், அந்த நகரமே நடுங்கி கொண்டு இருந்தது.
ஆனால், அந்த செய்தியை பார்த்து ஏளனமாக சிரித்த அந்த நிழல் உருவம், தான் வழக்கமாக செல்லும் பூங்காவிற்கு சென்றது.
சுற்றி உள்ள எதை பற்றியும் கவலை படாமல், இரண்டு வயது சிறுமி ஒருத்தி தன் தாயிடம் எதோ சொல்ல அதை அந்த தாய் சிறு பெண் போல தலை ஆட்டி மாட்டேன் என்று சொல்ல அந்த சிறுமி ஒரு விரல் நீட்டி மிரட்ட அந்த தாயோ வேகமாக இரு காதுகளையும் பிடித்து தோப்பு கரணம் போட சின்னவளும் ஓடி போய் அவளை கட்டி கொண்டாள். அந்த தாயும் இறுகி முத்தமிட இருவரும் சிரித்து கொண்டே உணவு எடுத்து சிறுமியின் வாயில் கொடுக்க அந்த சிறுமியும் உணவு எடுத்து தாயின் வாயில் கொடுக்க அந்த காட்சியே கவிதை போல இருந்தது.
இந்த கவிதையான காட்சிகளை தன் செல்போனில் வீடியோ வாகவும் போட்டோவாகவும் எடுத்து கொண்டு இருந்தது அந்த நிழல் உருவம். ஏனோ, செய்தியை பார்த்து ஏளனமாக சிரித்த உதடுகள், இப்பொழுது அழுகையில் பிதுங்கியது.
எனினும், தன்னுடைய கடமையை நினைத்த நொடியில், கண்ணீர் சிந்திய அந்த கண்கள், ரௌத்திரத்தில் இரத்தமென சிவந்தன.
# # #
ஆடம்பரம் இல்லாத
அழகிய நகையை
உதட்டில் அணிந்து,
இனிமையான இசையும்
தோற்கடித்து விடும்
மொழியை செவிக்கு
விருந்து அளித்து,
புதியதொரு பாஷையை
உலகிற்கு அறிமுகம்
செய்து கொண்டு,
குழி விழும் கண்ணத்தில்
அருகே குடி கொண்ட
பெருமையோடு திருஷ்டி
பொட்டும் வைத்து,
சேட்டைகள் செய்யும்
அழகிய குழந்தையின்
அருகில் உலகமும்
மறக்குதடி தோழி!
# # #
மும்பை மாநகரத்தில் மிக முக்கியமான லீலாவதி மருத்துவமனையில் வெளியே பொழியும் மழையின் அட்டகாசத்திற்கு ஈடாக, அறை எண் 160 யில் தீரஜ் ரெட்டி இடியின் தாளத்திற்கேற்ப ஆடி கொண்டு இருந்தார்.
“எங்கயா போனான் என்னோட பையன். நீங்க தான் என்னோட பையன் கடத்த போறதா இன்பர்மேஷன் வந்து இருக்குன்னு இங்கே கொண்டு வந்தீங்க. இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல, இத்தனை போலிஸ் ஆஃபிஸர்ஸ் இருந்தும், காணாமல் போய் இருக்கான்னா, இதுல நீங்க ஏதோ பிளான் பண்ணி செய்யறீங்களோனு எனக்கு டவுட்டா இருக்கு. என்ன விஷ்ணு? இப்படி அமைதியாக இருந்தால் என்ன பிரயோஜனம்.? எனக்கு நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியாது. ஐ வாண்ட் டு சீ மை சன் வித்இன் ட்வென்டிபோர் ஹவர்ஸ், அப்படி இல்லனா நான் என்னோட பவர காட்ட வேண்டியதா இருக்கும். யூ காட் தட்” என்று கத்த,
“எஸ் சர், வீ வில் டூ அவர் லெவல் பெஸ்ட் சர்” என்று பவ்யமாக சொல்லி சென்றார் கமிஷனராக இருக்கும் விஷ்ணு ஜித்.
அந்த அறைக்கு வெளியே வந்தவர், அங்க ஒரு இருக்கையில் அமர்ந்து கூலாக ஐஸ்கிரீம் சுவைத்து கொண்டிருந்த எஸ் ஐ சந்திராவை பார்த்து மிகவும் கோபமாக, தான் மருத்துவமனையில் இருக்கிறோம் என்பதையும் மறந்து “சந்திரா…” என்று கத்த,
“கம் ஆன் டேட், இப்போ கத்தி என்ன பண்ண போறீங்க.. ஏற்கனவே உங்களுக்கு பீபி இருக்கு.. சோ சில்… அந்த மகேஷோட செல்லை ட்ரேஸ் அவுட் பண்ண சொல்லிட்டேன்,
சிசிடிவி கேமரா டீடியல்ஸ சாஃப்ட் காபி எடுக்க ஹாஸ்பிடல் டெக்னிஷியன்கிட்ட சொல்லிட்டேன். ஹாஸ்பிடல்ல இருக்குற அட்டண்டர்ல இருந்து சீஃப் டாக்டர் வரை எல்லார் கிட்டயும் விசாரிக்க ஆதிய அனுப்பி இருக்கேன்… மகேஷோட , ரெட்டியோட செல் டீடியல்ஸ் கொண்டு வர சொல்லி இருக்கேன்… அதோட நமக்கு மகேஷ கடத்தரதா வந்த வாட்ஸ்அப் கால் டீடெயில்ஸையும் கலக்ட் பண்ண சொல்லி இருக்கேன்…
இது எல்லாம் வர 1 ஹவர் ஆகும். அது வரைக்கும் மழைய ரசிக்கலாம் பார்த்தா விட மாட்டீங்களே?” என்று கூலாக சொன்னாள், அந்த நிலவிற்குரிய குளுமையை நிறைவாகப் பெற்ற சந்திரா.
“பட் திஸீஸ் எ வெரி சீரியஸ் இஷு டா கண்ணா, உனக்கு அந்த ரெட்டியோட குணம் தெரியும்ல? அவனால சிட்டில ஏதாச்சும் ப்ராப்ளம் வருமோன்னு பயமாக இருக்கு” என்றார் ஒரு நேர்மையான போலீஸ் கமிஷனராக.
“எனக்கும் அவர பத்தி நல்லா தெரியும் டேட் .என்னோட டவுட் எல்லாம் ஒன்னே ஒன்னு தான். மகேஷ் கடத்த பட போறான் என்று நமக்கு ஏன் இன்பர்மேஷன் வரணும்? பணம், ப்ராபர்டீஸ்க்கு ஆசைப்பட்ட மனிதனாக இருந்தா அவன் ரெட்டி கிட்டயே டீலிங் வச்சி இருக்கலாமே? எதுக்கு நம்ம கிட்ட வரணும்? சோ, இஃப் மை திங்கிங் இஸ் கரெக்ட், திஸ் கிட்னாப் வோன்ட் ஸ்டாப் வித் மகேஷ்… கண்டிப்பாக நமக்கு குலூ கிடைக்கும்” என்றாள் உறுதியாக.
அதே சமயம், இங்கே காவலர் அலுவலகத்தில் ருத்ராவிற்கு ஒரு பரிசு பெட்டி வந்தது.
# # #
உறங்கா இரவுகளும்
இடைவிடாத மழையும்
இவரை ஒன்றும் செய்யாதே!
படை தோற்றாலும்
உயிரே போனாலும்
இவர் பெயர் நிலைக்குமே!
குற்றம் இல்லாத
ஊரும் இங்கு ஏது?
அதட்டி கேட்க கையில்
லத்தியோடு வருவாரே!
ஆபத்தே வாழ்வான
போதும் அதை
ஆனந்தமாக ஏற்பாரே!
# # #
அந்த பரிசு பெட்டியில் என்ன இருக்கும்?
அதை அனுப்பியவர் யார்?
மகேஷ் மறைவிற்கு காரணம் என்ன?
கடத்தல்கள் தொடர்ந்து நடக்குமா?
நிழல் உருவத்தின் நோக்கம்தான் என்ன?
குளுமையான சந்திராவும் சிடுமூஞ்சியான ருத்ராவும் இணைந்து அதன் காரணத்தை கண்டு பிடிப்பார்களா?
# # #
வெய்ட் அண்ட் வாட்ச்…
அலைகளின் ஓசை ஓய்வதில்லை…