AO 2

AO 2

அலை ஓசை – 2

ருத்ரா தனக்கு வந்த பரிசை மிக ஆச்சரியமாக பார்த்தான். “நமக்கு யாருடா இந்த கொட்டுற மழையில கிப்ட் அனுப்புறது? ” என்று தன் மனதில் பேச, மூளையோ “அந்த கிப்டை கொண்டு வந்த காண்ஸ்டபிள் கிட்ட கேட்கலாம் ல மடையா” என்று திட்ட,

“சரி சரி.. கேக்குறேன்.. கொஞ்சம் இடம் கிடைக்க கூடாதே, உடனே என்னை ஓட்ட ஆரம்பித்து விடுவீர்களே” என்று அதன் தலையில் கொட்ட,

” உங்க சண்டைய கொஞ்சம் நிறுத்துங்க. ” என்று மனம் நான் இருக்கிறேன் என்று கத்த, ” நான் அவர்கிட்ட பேச போறேன்.. இரண்டு பேரும் அமைதியாக இருங்க” என்று தன் மனதையும் மூளையையும் அடக்கி விட்டு,

“கோபி அண்ணா!! இதை யாரு உங்க கிட்ட கொடுத்தாங்க ” என்று ஒரு வழியாக ருத்ரா கேட்க,

ஹெட் கான்ஸ்டபிளான கோபிநாத், “தெரியல தம்பி! நம்ம ஆபீஸ் முன்னாடி ஒரு பாப்பா வந்து வச்சிட்டு போனா. யாருக்கோ கொடுக்க வேண்டியத மாத்தி இங்கே வச்சிடாளோனு அந்த பாக்ஸ கையில் எடுத்து பார்த்தேன். ஒரு குட்டி பேப்பரில் “டு யூ மிஸ்டர், ருத்ர தேவ் ஐ.பி.எஸ்” என்று எழுதி இருந்தது. நான் படித்த கொஞ்சம் நொடியில் மறைஞ்சும் போய்டுச்சு தம்பி” என்று கூற,

“சோ, இது நமக்கு தான் வந்து இருக்கு. தன்னுடைய கையெழுத்து வைத்து கூட தன்னை கண்டு பிடிக்க கூடாது என்று ரொம்ப பிளான் பண்ணி சில நிமிடங்களில் மறைந்து போகிற மாதிரி இருக்குற பேனாவ யூஸ் பண்ணி இருக்காங்க. சோ, சம்திங் இந்த கேஸோட லிங்காகுற விஷயம் தான் இதுல இருக்கனும்” என்று முடிவு எடுத்து,

“கோபி அண்ணா! நம்ம ஆபீஸ்ல இருக்குற, இன்னிக்கான சிசிடிவி பூடேஜஸ நான் பார்க்க வேண்டும். அதில் நீங்க சொன்ன அந்த பாப்பா எங்க இருந்து வந்தா என்கிற போர்ஷன மட்டும் சாப்ட் காப்பி எடுத்து கொண்டு வாங்க ” என்று கூற,
“சரி தம்பி” என்று கூறி ஒரு சலூய்ட் அடித்து விட்டு சென்றார்.

அவர் வருவதற்கு முன் நாம் இந்த கிபிட் பாக்ஸ்ல என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.

அந்த கிபிட் பாக்ஸை திறந்த ருத்ரா அதிர்ச்சி ஆனான். அதன் உள்ளே இன்னொரு கிபிட் பாக்ஸ் இருந்தது. அந்த கிப்ட் பாக்ஸை திறந்தவன் அதிர்ச்சி ஆனான். அதன் உள்ளே இன்னொரு கிபிட் பாக்ஸ் இருந்தது. அவன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் கரைய ஆரம்பித்தது. இப்படியே ஐந்து கிபிட் பாக்ஸ்கள் வந்தது.

“எங்களுக்கு எல்லாம் வேலை இல்லனு நினைச்சிட்டு எவனோ பார்த்த வெட்டி வேலை டா. காலையிலேயே வெறுப்பேத்தி விட்டுடு!” மிகவும் கடுப்பான ருத்ரா, அந்த கிப்ட் பாக்ஸ்கள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தான்.

அப்போது, கடைசி கிப்ட் பாக்ஸில் இருந்து ஒரு பேப்பர் வெளியே வந்தது, ‘ டீங்’ என்ற சத்தத்துடன். அந்த பேப்பரை கையில் எடுத்த ருத்ரா, ” இதுக்கு இவ்வளவு பெரிய சீனா, யப்பா! ” என்று பிரித்தான். கூடவே சத்தம் எழுப்பிக் கீழே விழுந்த வயீன் பாட்டில் மாதிரியான சின்ன பொம்மை. பேப்பரை பார்த்தவுடன் குழம்பி போனான்.

அந்த வெள்ளை நிற பேப்பரின், ஒரு பக்கத்தில் கருப்பு வெள்ளை நிறங்கள் பெயிண்ட் பண்ணி இருந்தது. இன்னொரு பக்கத்தில், சவப்பெட்டி யோடு பிளஸ் (+) குறியும் , 3 & 3 என்ற குறியும், இருதய வடிவ குறிகள் எல்லாம் இருந்தது.

“3 and 3ஆ.. இது என்ன கணக்கு? மூன்று பேர் இருக்கோம் என்று சொல்கிறதா? மூன்று பேர் கடத்த போறதா சொல்கிறதா? தனியா யோசிச்சா ஐடியா வராது. சந்திராக்கு கால் பண்ணலாம். ஹாஸ்பிடலில் ஏதாவது குலூ கிடைத்ததா என்று கேட்கலாம்.”

# # # # #

குழம்பிய மனதில்
எடுத்த முடிவும்
பல நாள் திட்டமிட்டு
செய்த தவறும்
ஒன்று தான்…
இரண்டுமே யாராலும்,
என்ன செய்தும்
அதன் விளைவை
தடுக்க முடியாது!

# # # # #

அங்கே ஹாஸ்பிடல் அருகே உள்ள ஒரு சிறு பூங்காவில் அமர்ந்திருந்த சந்திராவும் மிகவும் குழப்பமான சூழலில் தான் இருந்தாள்.

தீரஜ், மகேஷ் இருவரின் போன் கால் ஹிஸ்டரில சந்தேக படற மாதிரி எந்த போன் நம்பரும் ரெஜிஸ்டர் ஆகல. சோ, அந்த நபர் அவங்களுக்கு கால் பண்ணல.

ஸ்டேஷனுக்கு வந்த வாட்ஸ்அப் கால்ல அனலைஸ் பண்ணி பார்த்ததில், பாக்கிரௌன்ட் ல ஆர்ட் போர்ட்,பிஸி ஸ்டீர்ட்க்கு ஆன டிராபிக் ஜாம், ஹெலிகாப்டர் சவுண்ட், ரயில் சவுண்ட் எல்லாம் மாறி மாறி வந்து இருக்கு.

அதோட, அந்த நபரோட குரல் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாம ரொம்ப வித்தியாசமா இருக்கு. சோ, மிமிக்ரி எஸ்.ஃபெ.கெஸ் (sfx) சவுண்ட் எவெக்ட்ஸ் தெரிஞ்சு இருக்கனும்.

தன்னுடைய குரல்,தான் இருக்கிற இடம் எதுவுமே தெரிய கூடாது என்று இப்படி பண்ணி இருக்காங்க.

மகேஷோட கைபேசிய டிரேஸ் பண்ணினால், அது இப்போது அவன் வீட்டுல இருக்கு.சோ, அவன் ஹாஸ்பிடல்க்கு வரும்போது நாம சொன்ன மாதிரி கைபேசியை எடுத்து கொண்டு வரலை.

நேற்று சிசிடிவி பூடேஜஸ் விடியற்காலை 2மணியில் இருந்து ரெகார்ட் ஆகல. பூடேஜஸ் ரெகார்ட் ஆகுற ஹார்ட் டிஸ்க்ல ஏதோ சின்னதாக பேப்பர் மாறி இருந்து இருக்கு. சோ,சிசிடிவி ரன் ஆகி இருக்கு பட் ரெகார்ட் ஆகல என்று டெக்னீஸியன் சொல்றாங்க.

ஏதாவது சின்னதாக தடையம் கிடைக்கும் என்று ஹாஸ்பிடலயே அலசியாச்சு. ஒன்னுமே கிடைக்கல. சோ , ரொம்ப தெளிவாக பிளான் போட்டு தான் பண்ணி இருக்காங்க. முன் விரோதம் ஏதும் இருக்கமா? ரெட்டியோட விட்டது தொட்டது அவரை தொடருதா?

ஆனால், ஏன்? எதுக்கு? இந்த கடத்தலில் எத்தனை பேர் இன்லால்வ் ஆகி இருப்பாங்க? இன்னும் எத்தனை பேர் கடத்தப்பட போறாங்க?

இப்படி தீவிர யோசனையில் இருக்கும் சந்திராவை ” இங்கே நானும் இருக்கேன். என்னையும் கவனி “, என்று அவள் கைபேசி சிணுங்கியது.

” சொல்லு ருத்ரா, டோல்கேட்ஸ், ரயில்வே ஸ்டேஷன், ஆர்போட்,செக் போஸ்ட் என்று எல்லா இடத்திலும் செக் பண்ணியாச்சா? எனி க்லூஸ்? சந்தேக படுற மாதிரி ஏதாவது கிடைத்ததா? ” என்று கேட்க,

“இல்லை சந்திரா, இது வரை அப்படி எதுவும் கிடைக்கல. பட் ஸ்டேஷனுக்கு ஒரு கிபிட் பாக்ஸ் வந்து இருக்கு. அதில் ஒரு பேப்பர் ல க்லூ தர மாதிரி குறிகள் இருக்கு. நாம கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணா நல்லா இருக்கும். நீ ஸ்டேஷனுக்கு வா. ” என்று கால் ஐ கட் பண்ண “அண்ணா, வண்டியை ஸ்டேஷனுக்கு விடுங்க ” என்று தன் ஜீப்பில் சந்திரா ஏறினாள்.

“தம்பி” என்று கோபி அழைக்க, “வாங்க அண்ணா. அந்த பூடேஜஸ்ஸ பிளே பண்ணுங்க ” என்று சொல்ல, அவரும் தன் கடமையை சிறப்பாக செய்தார். சரியாக அதே நேரத்தில் சந்திராவும் வரவே, இருவரும் அந்த பூடேஜஸை பார்த்தனர்.

” டாம் டிட் ” என்று ருத்ரா கத்த, “நான் இதை எதிர்ப்பார்த்து தான். ” என்று கூலாக சொன்னாள் சந்திரா. “ரொம்ப நல்ல நாள் தான் அந்த நபர் செலடக் பண்ணி இருக்காங்க. ” பாராட்டாமல் இருக்க முடியவில்லை சந்திராவாள்! “அந்த ஆளுக்கு மரியாதை தான் ஒரு கேடு” என்று கடுப்பாகினான் ருத்ரா.

“மழையால் பூடேஜஸ் கிலியரா தெரியலை. அதோட அந்த பாப்பா கைல அந்த கிப்ட் பாக்ஸ் கொடுக்கறவரோட கை மட்டும் தான் தெரியுது. அதுலயும் கிலௌவ்ஸ் போட்டு இருக்கு. கோபி அண்ணா அந்த பேப்பர் படிக்கும் போதும் சரியான ஆங்கில் கிடைக்கல. சோ, ஆபீஸ் சிசிடிவி கேமரா போகஸை டீடெய்ல்ட் ஸ்டடி பண்ணிருக்காங்க . நம்ம ஆபிஸ் பத்தின டீடெய்ல்ஸ் எப்படி அந்த மூன்றாவது நபருக்கு தெரிஞ்சு இருக்கும். ஒருவேளை நம்ம ஆபீஸ்லயே ஏதாவது பிளாக் டாக் ஒளிஞ்சு அந்த மூன்றாவது நபருக்கு மறைமுக ஹெல்ப் பண்ணுறாங்கலானும் நாம விசாரிக்கனும் ” என்று சந்திரா கூற,

“கண்டிப்பா சந்திரா. நீ சொல்றது நூறு பெர்ஸன்ட் கரட். ஹாஸ்பிடல்ல ஏதாவது?” என்று ருத்ரா இழுக்க, “நதிங்க் மட்ச்” என்று தான் யூகித்த அனைத்தையும் ருத்ராவிடம் கூறினாள். “சரி, அந்த கிப்ட காட்டு”.

இருவருக்கும் குழப்பம் தான் மிஞ்சியது. இரவு 11மணி வரை இருவரும் அப்படி இருக்குமா இப்படி இருக்குமா என்றே அரசினர்.

“சரி ருத்ரா, நாம இதை எப்போதும் போல இல்லாம வேற கோணத்தில் இருந்து யோசிப்போம். ரெட்டியோட சைடு பிசினஸ் மகேஷோட பிரண்ட்ஸ் , அவனுக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா, ரெட்டி அண்டர் கிரௌண்ட்ல ஏதாவது வேலை பார்க்குறானா, இப்படி யோசி. அதுக்கான வேலையை பார்ப்போம். நான் இப்போது வீட்டிற்கு கிளம்பறேன். ரிமெம்பர், இந்த கேஸ் நமக்கு கண்டிப்பாக கிரிடிக்கலா தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன்” என்று விடைப் பெற்றாள்.

இருந்தும், அவள் மனதில் அந்த கிபிடில் வந்த பேப்பர் குறிகளே வந்து வந்து போனது.

# # # # #

மதி விதியை
வெல்லுமாம்…
எவரோ சொல்லி
விட்டு சென்று
விட்டார்…
இங்கே பலரின்
வாழ்வு விதி
தரும் கொடுமையான
பாதைகளை கடக்கவே
மதியை பிரயோகிக்க,
எங்கே விதியை
வெல்வது?
விதி தரும் கோர
விபத்துகளும் அதன்
விளைவுகளை சமாளிக்கும்
சக்தி மட்டுமே இருந்தால்
போதுமானது அல்லவா?

# # # # #

இவர்களின் குழப்பத்திற்கு காரணமான நிழல் உருவமோ, தன் முன்னே இருக்கும் வரைப் படத்தை வைத்து திட்டமிட்டு கொண்டிருந்தது.

பின், தான் வழக்கமாக செல்லும் ஒரு வீட்டிற்கு யாரும் அறியா வண்ணம் சென்றது. அந்த வீட்டின் ஒரு பால்கனியில் ஒளிந்து கொண்டது. சிறிது நேரம் கழித்து, அந்த பால்கனி ஒட்டிய அறைக்கு ஒரு தாய் தன் மகளுடன் வந்தாள். தன் குழந்தையை தூங்க வைக்க பாடுபட்டு கொண்டிருந்தாள்.

“அம்மா, நீ பாப்பா பாட்டு பாடு”
என்று மழலை குரலில் அந்த குழந்தை கூற அவளும் பாட ஆரம்பித்தாள்.

உன்னை கையில் ஏந்தி
கொண்டாலே போதும் கண்ணே!
பல ஜென்மம் மண்ணில்
வாழ்ந்து விட்ட திருப்தி
மனதில் ஏற்படுமே அன்பே!
உன் காலடி ஓசையிலேயே
என் பல நாள் தீரா கவலையும்
பஞ்சாய் பறந்திடும் முத்தே!
சிப்பி இமைகள் கொண்ட
என் ஆசை ரோஜா மகளே,
கண் மூடி உறங்கு அமுதே!
இந்த வேரில் பூத்த
வெள்ளி மலரே ஆடாது
அசையாது நிம்மதியாய்
உறங்கு என் மாணிக்கமே!
தாயாகி மாறின தந்தை
நானும் லாலி பாட ,
தோள் சாய்ந்து உறங்கு
என் அழகு செல்லமே!

கவிதையே பாடல் ஆனதோ இல்லை கீதமே கவிதை ஆனதோ! தேனும் தமிழும் கலந்து விட்டு பாடிய அந்த குரலின் மயக்கத்திலோ இல்லை தாலாட்டு பாட்டின் தாக்கமோ, அந்த குழந்தையும் தூங்க ஆரம்பித்தது. அந்த தாய் பின் தன் செல்போனில் எப்போதும் கேட்கும் குழலிசையை கேட்க ஆரம்பித்தாள்.

ஏனோ அவள் கண்கள் கண்ணீர் சிந்தியது. அவள் மனதில் ஓடும் காட்சிகள் நிழல் உருவத்தின் மனதிலும் ஓடியது.

அந்த தாய் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பின், அந்த நிழல் உருவம், அந்த தாய் சேய் நெற்றியில் முத்தமிட்டு மறைந்தது.

# # # # #

அந்த பேப்பரில் இருக்கும் குறியீடு கூறும் செய்தி என்ன?
திட்டமிட்டு கடத்தும் அளவிற்கு மகேஷ் என்ன செய்தான்?
சந்திராவும் ருத்ராவும் கண்டு பிடிப்பார்களா?
நிழல் உருவத்திற்கும் தாய்க்கும் என்ன சம்பந்தம்?

# # # # #

வெய்ட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

error: Content is protected !!