அத்தியாயம் – 2
ஆத்திரத்துடன் வீட்டின் உள்ளே நுழைந்த தன் தமக்கையை பார்த்த ராகவ், அவளின் இந்த கோபத்திற்க்கான காரணத்தை ஆராய முடிவு செய்தான். உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தவள், கண்ணை மூடிக் கொண்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள்.
ஆனால் அவளால் அது முடியவில்லை, கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக இப்படித்தான் அவள் இருக்கிறாள். அவளின் இந்த நிலை, ராகவிற்கு சரியாக படவில்லை. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்தவன், தமக்கையிடம் என்ன விஷயம் என்று கேட்டாள்.
அவ்வளவுதான், எரிமலையாக வெடிக்க தொடங்கிவிட்டாள். இவ்வளவு கோபம் வரும் அளவிற்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்தவன், அதற்க்கான காரணம் தெரிந்த பின் அவனுக்கு ஜில்லென்று இருந்தது.
“ஷப்பா! பிள்ளையாரப்பா, என் வேண்டுதல் பளிச்சிடுச்சு நன்றி கடவுளே. எங்க அக்காவுக்கு ஏத்த ஆளு வந்தாச்சு, இனி ஜாலியா ஜனனி கூட டூயட் பாட போகலாம்” என்று மனதில் குதூகலம் அடைந்து கொண்டு இருந்தவன், திடிரென்று அலறினான்.
“என்ன எனக்கு ஏத்த ஆளு கிடைச்சிடுச்சு அப்படின்னு சந்தோஷமா உனக்கு, இந்த ஜென்மத்தில் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை தெரிஞ்சிக்கோ. பிள்ளைங்களுக்கு முதல ஒழுங்கா பாடம் சொல்லிக் கொடுக்கிற வழியை பாரு, அப்புறம் ஜனனி கூட டூயட் பாட போகலாம்” என்று அவனின் தலையில் கொட்டு வைத்து சென்ற தமக்கையை பார்த்து முறைத்தான்.
“இவளுக்கு ஏத்த ராட்சசன் அவர் தான், சக்தி மச்சான் சீக்கிரம் இவளை கல்யாணம் பண்ணி தூக்கிட்டு போங்க, இந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் தொல்லை தாங்க முடியல” என்று மனதிற்குள் புலம்பினான்.
தனது அறைக்கு வந்த பிரியங்கா, உடையை களைத்துவிட்டு இரவு குளித்து முடித்து இரவு உடையை அணிந்தவள், மாலை நடந்த சம்பவத்தை நினைத்து இன்னும் பொருமிக் கொண்டு இருந்தாள்.
“சோமு அண்ணா, பிரெஷ் ஜூஸ் கொண்டு வாங்க” என்று கூறிவிட்டு, அங்கே ரிசார்ட்டில் இவனின் அலுவலக அறைக்கு அவர்களை அழைத்து சென்றான் சக்தி முரளி.
“சொல்லுங்க என்ன தெரியனும் இன்ஸ்பெக்டர் உங்களுக்கு?” என்று அவளை பார்த்து இழுத்து கேட்கவும், அவள் முறைத்தாள்.
“ஐ அம் ஏசிபி பிரியங்கா தேவி, ஹி இஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ” என்று இருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“க்லாட் டு மீட் யூ போத், விஷயத்துக்கு வரீங்களா” என்றான்.
“உங்க டெய்லி ரூட்டின் டிடைல்ஸ் எங்களுக்கு வேணும், அப்போ தான் எங்களால எந்த இடத்தில் எவ்வளவு பாதுகாப்பு தேவைப்படும் அப்படின்னு பார்க்க முடியும். அப்புறம் உங்க வலது கை, இடது கையை எல்லாம் மீட் பண்ணனும், அப்போ தான் உங்க கூட யார் எல்லாம் இருக்காங்க என்னனு தெரியும் எங்களுக்கு” என்று கூறியவளை பார்த்து தலை அசைத்தான்.
அதற்குள் அவன் சொல்லி இருந்த பிரெஷ் ஜூஸ் வரவும், அவர்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். இங்கே வருமுன் தான் ஒரு கைதியிடம் உண்மை வரவழைக்க, அவனுக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுத்து உண்மை வாங்கி முடிக்கும் பொழுதே அவளுக்கு உயிர் போய் உயிர் வந்தது.
அப்படியே அடுத்த வேலையாக உடனே இங்கு கிளம்பி வந்து இருந்தாள், அதனால் அவன் ஜூஸ் கொடுக்கவும் மறக்காமல் வாங்கி குடித்தாள். அவள் களைப்பு உணர்ந்து தான், அவன் ஜூஸ் சொன்னதே.
“நல்லவேளை ஜூஸ் சொன்னோம், இன்னேரம் அவளோட களைப்புக்கு காபி வித் வடை, பக்கோடா, கட்லெட் அப்படின்னு ஆர்டர் கொடுத்து இருந்தோம் ஒரு ஆர்வ கோளாறில், நம்மளை சட்னி ஆக்கிட்டு தான் போய் இருப்பா” என்று எதுக்கும் அஞ்சாதவன், அவளுக்கு அஞ்சினான் அவளின் காதலனாக சக்தி முரளி.
அவர்கள் ஜூஸ் குடித்துக் கொண்டு இருந்த நேரத்தில், அவன் எல்லோரையும் வெளியே இருக்கும் குடில் அருகே ஆஜராகும்படி பணித்து இருந்தான். ஜூஸ் குடித்து முடிக்கவும், அவன் அவர்களை அழைத்துக் கொண்டு அங்கே சென்றான்.
அங்கே நின்று இருந்த அவனின் பணியாளர்களை பார்த்தவள், மனதிற்குள் அவனுக்கு சபாஷ் ஒன்று போட்டாள். ஏனெனில், அவர்களை எல்லாம் பார்த்த உடனே புரிந்து கொண்டாள், அவர்கள் டிரெயின்ட் இன் ஆல் அஸ்பெக்ட்ஸ் என்று.
அவளுடன் வந்த இன்ஸ்பெக்டர் அவளின் கண்ணசைவை புரிந்து கொண்டு உடனே, அவர்களை விசாரித்துக் கொண்டே அவர்கள் அறியாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அவர்கள் கண்ணில் மண்ணை தூவியது போல், சக்தியின் கண்ணில் அப்படி தூவ முடியுமா? அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
அவனின் பிரியத்திற்குறியவள், என்ன எல்லாம் செய்வாள் என்பதை அவன் அறியாமல் இருப்பானா, அமைதியாக அவள் போக்கில் விட்டு பிடிக்க எண்ணி அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறான்.
“அப்புறம் இன்பெக்டர், வேற டிடைல்ஸ் வேணுமா?” என்று அவளிடம் சக்தி கேட்க, அவள் முறைத்தாள்.
“உங்களுக்கு நான் எத்தனை தடவை சொல்லுறது? ஏசிபியை பார்த்து இன்ஸ்பெக்டர் அப்படினு கூப்பிடாதீங்கன்னு. ஏன் இப்படி பண்ணுறீங்க?” என்று பல்லை கடித்து கொண்டே அவனிடம் கோபப்பட்டாள்.
“என்ன பண்ணுறது ரியா, உன்னை ஸ்கூல் டேஸ் ல இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் அப்படினு கூப்பிட்டு பழகிட்டேன், டக்குனு மாத்த தோணல பேபி” என்று நடந்து கொண்டே அவளை சற்று தொலைவில் இருந்த பீச் பகுதிக்கு அழைத்து வந்து இருந்தான்.
“இந்த பேபி, இன்ஸ்பெக்டர் இப்படின்னு கூப்பிடாத என்னை, கடிச்சு குதறிடுவேன்” என்று பல்லை கடித்தவளை பார்த்து சிரித்தான்.
“சோ சாரி பேபி, அப்படி எல்லாம் உடனே மாத்த முடியாது, பழகிடுச்சு” என்று கூறியவனை பார்த்து அடிக்க கையை ஓங்கவும், அவன் அவள் கையை பிடித்து இழுத்து விட்டான்.
இழுத்த வேகத்தில் அவன் மேல் மோத இருந்தவள், தட்டி தடுமாறி பாலன்ஸ் செய்து நின்று கொண்டு அவனை முறைத்தாள்.
“ரிலாக்ஸ் பேபி! நம்மளை ரெண்டு பேர் நோட் பண்ணுறாங்க, அவங்க பாஸ்க்கு நம்ம சண்டை தான் போடுறோம் அப்படினு தெரிய வைக்க வேண்டாமா?” என்று கேட்டவனை பார்த்து புரியாது விழித்தாள்.
அவளுக்கு புரியும்படி அவன் சில விளக்கங்கள் கொடுக்கவும், அவள் கடுப்பின் உச்சிக்கே சென்றாள்.
“ஹே! இந்த போஸ் செம பேபி, அப்படியே என் மேல கொலவெறில இருக்கிறது தெரியுது” என்று அவன் மேலும் அவளை சீண்டவும், அவள் ஒன்றும் சொல்லாமல் கோபத்துடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்து தன்னுடன் வந்த இன்ஸ்பெக்டரை அழைத்துக் கொண்டு வெளியேறினாள்.
அவள் வெளியேறியதை உறுதிப்படுத்திக் கொண்டவன், அடுத்து கோபத்துடன் அங்கு இருந்த ஒரு உருட்டுக் கட்டையை எடுத்துக் கொண்டு, இவ்வளவு நேரம் தங்களை கண்காணித்துக் கொண்டு இருந்த இருவரை நோக்கி ஓடினான்.
அவன் வருகையை உணர்ந்து அவர்கள் ஓட்டம் பிடிக்க, இவன் ஓடுவதை கவனித்த இவனின் வலது கை, அவன் செய்ய போகும் காரியத்தை ஊகித்து, அவனுக்கு உதவி புரிய மேலும் சிலரை அழைத்துக் கொண்டு அவன் பின்னே ஓடினான்.
அந்த இருவரில் ஒருவனை பிடித்த சக்தி, அவனை அடித்து இழுத்துக் கொண்டு நேராக அந்த ரிசார்ட் இருக்கும் இடத்திற்கு வந்தான்.
“உன் முதலாளிக்கு போன் போட்டு கொடு, நான் பேசணும்” என்று சக்தி கூறியதற்கு அவன் முதலில் மறுத்தான். ஆனால் அடுத்து விழுந்த அடியில், அவன் அரண்டு போய் அவன் செல்லில் போட்டுக் கொடுத்தான்.
“என்னடா? ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?” என்று எடுத்தவுடன் அதிகாரம் கலந்த குரலை கேட்டவுடன், சக்திக்கு வெறுப்பாக இருந்தது.
“உங்க புண்ணியத்தில் நாங்க ரொம்பவே நல்லா இருக்கோம், மிஸ்டர் மூர்த்தி” என்று சக்தியின் குரலை கேட்டவர் முதலில் துனுக்குற்றார், இருந்தாலும், இத்தனை வருடங்கள் அவனை நன்கு அறிந்தவராக அடுத்து பேச தொடங்கினார்.
“என்ன சக்தி! வர வர நீ ரொம்ப அவளை பாதுகாத்துகிட்டு வர மாதிரி இருக்கு, இது நல்லதுக்கு இல்லை சக்தி, நீ விலகி இருக்கிறது தான் நல்லது சொல்லிட்டேன்” என்று கூறினார்.
“என் பொண்டாட்டியை, நான் பாதுகாக்காம வேற யாரு பாதுகாப்பா? அவ மேல சின்னதா ஒரு கீறல் விழுந்தா கூட உங்களை நான் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.
“சக்தி! உனக்காக இங்க அனு காத்துகிட்டு இருக்கா, நீ அந்த அனாதை கழுதையை பொண்டாட்டி அப்படினு சொல்லுற. உன் அப்பா நான் சொல்லுறேன், உனக்கும் அனுவுக்கும் தான் அடுத்த வாரம் கல்யாணம், ஒழுங்கா வந்து சேரு” கிட்டத்தட்ட கட்டளையிட்டு கர்ஜித்தார்.
“சும்மா கத்தாதீங்க! நீங்க கத்தினா நான் பயந்திடுவேனா! என் ரியா ஒன்னும் அனாதை இல்லை, உங்க பணத்தாசையில் அவ அப்பா, அம்மாவை கொண்ணுடீங்க நீங்க”.
“அனுவுக்கு நீங்க வேற மாப்பிள்ளை பாருங்க, உங்க ஆட்டத்துக்கு நான் ஆள் கிடையாது. எப்போ நீங்க பணம் தான் முக்கியம் அப்படினு நினைச்சி எல்லா வேலைகளையும் செய்தீங்களோ, அப்போவே எனக்கு அப்பான்னு ஒருத்தர் இல்லைன்னு ஆகிடுச்சு”.
“இதான் லாஸ்ட் வார்நிங் உங்களுக்கு, இனி அடுத்து வேற எதாவது முயற்சி பண்ணீங்க, நான் அப்புறம் என்ன செய்வேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்” என்று அவருக்கு தான் சலைத்தவன் இல்லை என்று நிரூபித்தான் சக்தி முரளி.
அங்கே மூர்த்தி, இவனின் பேச்சை கேட்டு வீட்டில் ருத்ரமூர்த்தியாக மாறி மனைவியை காய்ச்சி எடுத்துவிட்டார்.
“ம்ச்! அங்கிள் இன்னும் நீங்க பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க, இனி அவனை பத்தி நீங்க கவலை படாதீங்க. அவனையும், அந்த போலீஸ்காரியையும் நான் பார்த்துக்கிறேன்”.
“அடுத்த வாரம் எங்களுக்கு கல்யாணம், அந்த வேலையை மட்டும் பாருங்க அங்கிள். இனி என் ஆட்டம் என்னனு நான் காட்டுறேன்” என்று கூறிவிட்டு சென்றவளை பார்த்து மூர்த்தி பெருமையாக பார்த்தார் என்றால், அவரின் மனைவி பார்வதியோ அவளை வெறுப்பாக பார்த்தார்.
அங்கே சக்தி ஆழ்ந்த யோசனையில் இருந்தான், ஒரு வாரத்தில் திருமணம் என்று அவன் தந்தை சொன்னதில் இருந்தே நிச்சயம் இதற்கு பின்னே, வேறு எதுவோ இருக்கிறது என்று அவனுக்கு புரிந்து தான் இருந்தது.
ஆனால் அதன் காரணம் என்னவென்று, அவனால் சரியாக ஊகிக்க முடியவில்லை. ஏனோ, உடனே அவனின் ரியாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது, ஆனால் இரவு நேரத்தில் போய் நின்றால் நன்றாக இருக்காது, ஆகையால் அவன் வீடியோ காலிங் வாட்ஸ் அப் பண்ணிவிட்டான் அவளுக்கு.
அந்த பக்கம் போனை எடுத்த ரியா, இவன் மேல் ஏற்கனவே இருந்த கடுப்பில் அவனை பார்த்து திட்ட தொடங்கிவிட்டாள்.
“அறிவு இல்லை உனக்கு? நான் தான் பேசாத என் கூட என்னை தொந்தரவு பண்ணாத அப்படினு சொல்லிட்டு தான வந்தேன். திரும்ப ஏன் இப்படி நடு ராத்திரியில் டார்ச்சர் பண்ணுற?” என்று பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.
“ஒன்னும் இல்லை, நீ தானே என்னுடைய பாதுகாப்புக்கு இருக்கும் அதிகாரி அதான் நாளைக்கு ரெஜிஸ்டர் ஆபிஸ்க்கு என் கூட வா. அங்க அந்த கங்காதரன் ஆட்க்கள் இருக்காங்க, சோ நீயும் என்னோட பாதுகாப்புக்கு வந்து தான் ஆகனும், அப்புறம் வரல அப்படினா மேலிடத்துக்கு நீயே பதிலை சொல்லிகோ” என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.
இதைக் கேட்ட ரியாவோ, இவனின் ஆட்டத்தை அடக்க முடியாமல் பல்லை கடித்துக்கொண்டு தன் கோபத்தை குறைக்க முயன்று கொண்டு இருந்தாள்.
மறுநாள் காலை ரெஜிஸ்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன், சக்தியை அழைத்து வந்து இருந்தாள் பிரியங்கா. அவன் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று, அதிகாரிகளிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
பின்னர் ஒரு பத்திரத்தில் கையெழுத்திட அதிகாரி அழைக்க, இவன் கையெழுத்திட்டு அவளையும் போட சொன்னான்.
“என்னது இது?” என்று சிடுசிடுத்தவளை பார்த்து, மனதிற்குள் நடுங்கினாலும் வெளியே சிரித்த முகத்துடன் அவள் காதில் சாட்சி கையெழுத்து தான், நீ வேற என்ன நினைச்ச? என்று அப்பாவியாக கேட்கவும், அப்பொழுது இருந்த கோபத்தில் எதில் கையெழுத்து போடுகிறோம் என்று பார்க்காமல், அவள் கையெழுத்து போட்டு இருந்தாள்.
மேலும் சில விஷயங்களை பார்த்து முடித்துவிட்டு, அவர்கள் வெளியே வரும் பொழுது அங்கே அனு வேறு வேலையாக வந்தவள், இவர்களை பார்த்து அதிர்ந்தாள்.
“ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டான்களா!அவன் முந்திகிட்டானோ?” என்று கிளம்பி போய் நின்று இருந்தாள்.
அணுவை பார்த்த சக்தி, அவளை பார்த்து நலம் விசாரித்தான்.
“என்ன அத்தான் இங்க வந்து இருக்கீங்க, எதும் லேண்ட் வாங்கி இருக்கீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை அனு, என் சொத்தை எனக்கே எனக்குன்னு வாங்கிக்க வந்தேன். சரி டைம் ஆகிடுச்சு, நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு ரியா சகிதம் அங்கு இருந்து சென்று விட்டான்.
அவனுக்கே உரிய சொத்தா! எது? என்று புரியாமல் குழம்பியவள் உள்ளே சென்று வந்த வேலையை முடித்துக் கொண்டு கிளம்பும் பொழுது, தெரிந்த அதிகாரியை பிடித்து சக்தி எதற்காக வந்தான் என்று விசாரித்தாள்.
“அவர் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க வந்தார் மேடம், கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்தார், அடுத்த வாரம் சொல்லி இருந்தார் முதலில், இப்போ உடனே பண்ணனும் சொல்லி இன்னைக்கே பண்ணிகிட்டார்” என்று கூறிவிட்டு சென்றார்.
அவள் கணித்தது சரிதான் என்று புரியவும், இனி சும்மா இருக்க கூடாது இவர்களை பிரித்து வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினாள்.
அங்கே ரியா, சக்தியுடன் மல்லுகட்ட முடியாமல் சோர்ந்து போய் அறைக்குள் முடங்கினாள். அவனோ, தன் அருகே இனி அவளை வைத்துக் கொண்டு பாதுகாக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினான்.
தொடரும்..