ap3

ap3

அத்தியாயம் – 3
அதிகாலை ஐந்து மணிக்கு, எப்பொழுதும் போல் முழிப்பு தட்டியது
பிரியாவிற்கு. எழுந்து எப்பொழுதும் போல் கடவுளை மனதார
வணங்கிவிட்டு, கண்ணை நன்றாக திறந்து எதிரே பார்த்தவள் அதிர்ந்தாள்.
எப்பொழுதும் இருக்கும் அவளின் இஷ்ட தெய்வமான விநாயகர் படம்
இல்லாமல், அங்கே ஒரு சிங்கம் நரியை வேட்டையாடி அதன் சதையை
கிழித்துக் கொண்டு இருக்கும் படம் கொடூரமாக காட்சி அளித்தது.
முதலில் அதை பார்த்து அதிர்ந்தாலும்,அதன் பின் சுற்றம் உணர்ந்து
அவளுக்கு கோபம் எட்டி பார்த்தது. அவன் மேல் உள்ள ஒரு, எரிச்சலிலும்
இப்படி கண் மூடித்தனமாக எதில் கையெழுத்து போடுகிறோம் என்று
தெரியாமல் போட்ட தன் மீதே எரிச்சல் வந்தது.
அங்கே கட்டிலில் அவளுக்கு தேவையான அனைத்தும் இருந்ததை பார்த்து,
அவளுக்கு ஒரு வகையில் மனதில் இதம் பரவியது. அப்பொழுது அறைக்
கதவை யாரோ தட்டவும், எழுந்து சென்று கதவை திறந்து யார் என்று
பார்த்தாள்.
“அம்மா! ஐயா உங்களை ரெடியாகி வர சொன்னாங்க. உங்களுக்கு
இப்போ குடிக்க பால் கொண்டு வரட்டுங்களா” என்று கேட்டாள் அங்கே
வேலை செய்யும் கனகா.
“இல்லை, எனக்கு பால் இப்போ வேண்டாம். நான் ஒரு அரை மணி
நேரத்தில் வந்துடுறேன் சொல்லு உங்க ஐயா கிட்ட” என்று கூறிவிட்டு
அவள் கதவை அடைத்துவிட்டு தயாராக சென்றாள்.
பேபி பிங்க் வண்ணத்தில் அந்த காட்டன் சுடியில், கம்பீரம் குறையாமல்
இறங்கி வந்தவளை பார்த்து அசந்து போனான் சக்தி. வைத்த கண்
வாங்காமல், அப்படியே அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனை,
அவனின் வலது கை அவனின் கையை சுரண்டினான்.
அதில் எரிச்சலாகி அவனிடம் அவன் பாய நினைக்கும் பொழுது, அவன்
அவனின் தந்தையின் வருகையை நியாபகப்படுத்தினான்.

“ஆஹா! இதை எப்படி மறந்தேன்? சரி இந்த நாளுக்காக தானே இத்தனை
நாள் காத்து இருந்தோம், என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று தன்னை
சமன்படுத்திக் கொண்டு அவளை நோக்கி சென்றான் சக்தி.
“மிசஸ். சக்தி குட் மார்னிங், வாங்க சாப்பிட்டிட்டு உங்களுக்கு முக்கியாமன
ஆட்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் இன்னைக்கு” என்று அவளை
பார்த்து கூறிவிட்டு யாரும் அறியாமல் கண்ணடிக்கவும், அவள் பல்லை
கடித்தாள்.
“ராஸ்கல்! நேத்துல இருந்து கேட்கிறேன், எதுக்குடா என்னை கல்யாணம்
பண்ண அப்படினு? பாவி! பதிலை சொல்லாம இப்படித்தான் கண்ணை
அடிச்சுட்டு போய்ட்டான்”.
“இவன் அப்பா, அம்மாவை சந்திச்சு நல்லா நாலு கேள்வி கேட்க போறேன்
நான். இரு டா, உன்னை நான் பண்ணுற டார்ச்சர்ல நீயே நான் கேட்கிற
கேள்விக்கு பதில் சொல்லுவ” என்று மனதில் ஒரு முடிவு எடுத்துவிட்டு
அவனுடன் சாப்பிட சென்றாள்.
சரியாக இவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், சக்தியின் தந்தையும், அன்னையும்
வந்து இருப்பதாக வீட்டின் வேலையாள் வந்து கூறவும், இவர்கள் ஹாலை
நோக்கி சென்றனர்.
அங்கே சென்ற பின்பு, அங்கே இருந்தவரை பார்த்தவள் அப்படியே
ஸ்தம்பித்து நின்று விட்டாள். இந்த முகம் அவளுக்கு அன்றைய நாளை
நினைவுபடுத்தியது, மறக்க கூடிய முகமா அது.
“ஹே டாட், மாம்! மீட் மை டார்லிங் மிசஸ் சக்தி அசிஸ்டன்ட் கமிஷனர்
ஆப் போலீஸ்” என்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
“அப்பா, அம்மா இல்லாத அனாதை கழுதை எல்லாம் என் வீட்டு மருமக
இல்லை. முதல அவளை இங்க இருந்து விரட்டி விடு சக்தி, அனு தான் இந்த
வீட்டு மருமக” என்று கர்ஜித்தார்.
“அம்மா! அப்பாவுக்கு அனுவை மருமகளா கொண்டு வரணும்ன்னு ஆசை
போல, பேசாம அடுத்து எனக்கு ஒரு தம்பியை ரெடி பண்ணி

கொடுங்களேன்” என்று கூறியவனை பார்த்து அவனின் தந்தை மேலும்
கத்த தொடங்கினார்.
“சும்மா கத்தாதீங்க! நீங்க என்ன செய்றீங்க? என்ன செஞ்சீங்க? இப்படி
எல்லாம் தோண்ட ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆகிடுச்சு. எங்களை பார்க்க
தான வந்தீங்க, நீங்க கிளம்பலாம்”.
“அம்மா! நீங்க மட்டும் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க” என்று கூறிய
சக்தி அவளை இழுத்துக் கொண்டு அவர் காலில் விழுந்து எழுந்தான்.
அவனின் அன்னை அவர்களை மனதார ஆசீர்வதிக்க, அவனின் தந்தையோ
அதை காண சகியாமல் மனைவியை கூட்டிக் கொண்டு வெளியேறினார்.
அதன் பின் அவன் சற்று ஆசுவாசம் அடைந்து திரும்பி அவளை பார்க்க,
அவள் எதோ சிந்தனையிலும், அதிர்ச்சியிலும் இருப்பது தெரிந்தது.
இதற்காகத்தான் அவர்களை இங்கே வரவேற்றது, இனி அவள் யோசித்து
முடிவு எடுக்கட்டும் என்று முடிவு எடுத்தவன், தன் வலது கையுடன் அங்கு
இருந்து வெளியேறினான்.
"​இது எப்படி சாத்தியம்? இல்லை! இப்படி இருக்க
கூடாது!" ​என்று தனக்குள்ளே அரற்றிக் கொண்டு இருந்தாள்
பிரியங்கா தேவி.
இந்த பதினைந்து வருடத்தில் அவள் மறக்க வேண்டும் என்று நினைத்த
முகம், இப்பொழுது கன் முன்னே தோன்றி நான் இன்னும் இங்கு தான்
இருக்கிறேன் பார், என்று அவளுக்கு காட்சி கொடுக்கவும் அவளுக்குள் ஒரு
பூகம்பம் வெடித்து கிளம்பியது.
இத்தனை நாட்கள் எதற்காக காத்து இருந்தோம் என்பது புரிய, இனி
அதற்கான வேளைகளில் இறங்க தொடங்கினாள். இனி அவளின் செயல்கள்
எல்லாம், நரியை வேட்டையாட போகும் பெண் புலியாக இருக்க போகிறது.
“என்ன காரியம் பண்ணி வச்சு இருக்கீங்க? அங்கிள் கொஞ்ச நாளைக்கு
உங்களை அவ கண் முன்னாடி போகாதீங்க அப்படினு வார்ன் பண்ணி
இருந்தேன் தானே”.

“உங்க பையன் சொன்னானு, நீங்க ஆண்டியை வேற கூட கூட்டிட்டு போய்
இருக்கீங்க. இனி அவ சும்மா இருப்பா அப்படினு எனக்கு தோணல, நிச்சயம்
அவ அந்த கேஸ் திரும்ப எடுத்து நோண்ட போறா, கூண்டோட எல்லோரும்
மாட்ட போறோம்” என்று கத்திக் கொண்டு இருந்தாள் அனு.
அவர்கள் வீட்டினுள் நுழைந்த அடுத்த நிமிடம் அனு இப்படி பொரிய
தொடங்கி விட்டாள். ஏற்கனவே எரிச்சலில் இருந்த அவர், அவளின் இந்த
அதிகாரப் பேச்சு பிடிக்கவில்லை.
“எனக்கு அப்போ இருந்த கோபத்தில், போய் நாலு கேள்வி கேட்கணும்
அப்படினு தோணுச்சு மா, அதான் போனேன். நீ சொன்ன மாதிரி கேஸ்
எடுத்து அவ நோண்ட ஆரம்பிக்க வாய்ப்பு இல்லை, அதுவும் இத்தனை
வருஷம் கழிச்சு”.
“அப்படியே அதை எடுக்கணும் நினைச்சு இருந்தா, அவ அதை போலீஸ்ல
சேர்ந்த உடனே அதை எடுத்து இருப்பா” என்று வாதிட்டார் சக்தியின்
தந்தை.
“புரியாம பேசாதீங்க அங்கிள், இப்போ அவ கூட சக்தி இருக்கான். அவ
மறந்தா கூட நியாபகப்படுத்த, சக்தி அவ கூடவே இருக்கான். அன்னைக்கு
நடந்த சம்பவத்தில், அவனும் பாதிப்பு அடைஞ்சு இருக்கான்”.
“அதனால அவளை வச்சு இவன் கேம் பிளே பண்ணி, எல்லாம் தெரிஞ்சிக்க
முயற்சி எடுப்பான். இப்போ அவன் இந்த கேஸ் அவளை எடுக்க விடாம
செய்யணும், அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிங்க” என்று கூறிவிட்டு
சென்றாள்.
அவள் கூறியபடி, அப்படியும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று
எண்ணியவர், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க
தொங்கினார்.

அன்றைய நாள் வேலைகளை முடித்துக் கொண்டு இரவு வீடு திரும்பியவன்,
மனைவியை தான் முதலில் தேடினான். தங்களின் அறையில் அயர்ந்து

உறங்கிக் கொண்டு இருப்பவளை பார்த்தவன், அவள் அருகில் சென்று
தலையை கோதினான்.
நன்றாக அழுது இருக்கிறாள் என்று அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர்
கோடுகள் காட்டிக் கொடுத்தது. மனதில் எழுந்த வலியை அடக்கியவன், கை
முஷ்டி இறுக அந்த கண்ணுக்கு புலப்படாத எதிரியை வேட்டையாட
தயாரானான்.
மறுநாள் விடியல் யாருக்கும் காத்து இருக்காமல், அழகாக விடிந்தது. தன்
தோட்டத்தில் ஜாகிங் செய்து கொண்டு இருந்தவன், அங்கே கண்ட
காட்சியில் மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டான்.
கம்பீரமாக காக்கி உடையில் கிளம்பி வந்த மனைவியை பார்த்து, அவன்
சிரித்துக் கொண்டே அவளை நெருங்கினான்.
“என்ன மிசஸ் சக்தி, டூயுட்டிக்கு கிளம்பிட்டீங்க போல. ஹனிமூன் போக
பிளான் பண்ணி இருந்தேன், நீங்க இப்படி பண்ணிடீங்களே!” என்று
போலியாக வருத்தம் தெரிவித்தவனை கண்டு பல்லை கடித்தாள்.
“ஹனிமூன் தானே சீக்கிரம் போகலாம், எனக்கு டைம் ஆகிடுச்சு நான்
கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அங்கே அவளுக்காக காத்துக் கொண்டு
இருந்த ஜீப்பில் ஏறி சென்றாள்.
அவள் இவ்வளவு சீக்கிரம் செல்லுவதில் உள்ள நோக்கம் அறிந்தவன், தன்
செல்பேசியை எடுத்து அவனின் வலது கைக்கு அழைத்து உடனே வீட்டிற்கு
வர கூறினான்.
அவன் இங்கே வருவதற்குள், அலுவலகம் செல்ல குளித்து தயாராகி கீழே
இறங்கி வந்தான். அங்கே அவனின் நண்பனும், வலது கையுமான ராமனை
அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலிற்கு சாப்பிட அழைத்து சென்றான்.
“ஹா ஹா ! நான் பிளான் பண்ண மாதிரியே அவ கேஸ் எடுத்துட்டா. இனி
அவளை வச்சே நான் கேம் விளையாட போறேன், அந்த குள்ளநரி யாருன்னு
கண்டுபிடிக்க” என்று சக்தி விஷம சிரிப்பு சிரித்தான் சக்தி சாப்பிட்டுக்
கொண்டே.

“டேய்! நீ அவளை பலியாடு மாதிரி அப்போ உபயோகப்படுத்திக் கொண்டு
இருக்குறியா? டேய்! வேண்டாம் டா, அந்த பொண்ணு பாவம் உன்
ஆட்டத்துக்கு நீ அவளை இழுத்து விடாத டா இதுல” என்று எச்சரித்தான்
ராமன், அவனின் வலது கை, நண்பன் என்று இருமுகம் அவனுக்கு.
“ஹ்ம்ம்! நான் அவளை இதுல இழுத்து விட்டதே, என்னோட பழைய கணக்கு
ஒன்னு அவ கிட்ட தீர்துக்க வேண்டி இருக்கு, அதுக்கு தான் இந்த மாஸ்டர்
பிளான் எல்லாம்” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.
நண்பனிடம், தன்னுடைய இராட்சத முகத்தை காட்டியவன் அறியவில்லை,
அவன் கட்டி இருப்பதும் அவனை போன்ற ஒரு ராட்சசி தான் என்று.
அதை நிரூபிக்கும் வகையில், ரியா நேராக கமிஷ்னர் அலுவலகம் சென்று
பதினைந்து வருடத்திற்கு முன் மூடி வைத்த அந்த குறிப்பிட்ட கேசை
மீண்டும் திறக்க அனுமதி வாங்கினாள்.
அனுமதி கிடைத்த அடுத்த நிமிடத்தில், முதல் வேலையாக அவள் தன்
கணவனை ஜெயிலுக்குள் அனுப்ப எல்லா வேலையும் செய்ய
தொடங்கினாள். காரணம், அவன் தந்தைக்கு கிடைக்கும் தண்டனையை
அவன் தடுக்க நினைத்தால், அதன் பின் அவனுடன் தினம் தினம் போராட
வேண்டி இருக்கும்.
அவனுடன் போராடுவது அவளால் முடியவே முடியாது, கழுத்தில் தாலி
கட்டியதால் அல்ல, மனதில் அவனை சுமந்து கொண்டு இருப்பதால்.
“மேடம்! அந்த லேண்ட் விஷயமா, மிஸ்டர் சக்தி ஒருத்தரை மிரட்டி வச்சு
இருந்தாரே, அந்த கேஸ் இவர் மேல போட்டு உள்ள தள்ளலாமே மேடம்”
என்று இன்ஸ்பெக்டர் கூறியதை கேட்டு, அது சரி வராது என்றாள்.
“ஒரே நாள்ல அவன் வெளியே வந்திடுவான், பத்து நாள் அவன் வெளியே
வராம இருக்கணும், அதுக்கு ஏத்த ஒரு ஸ்ட்ராங் கேஸ் போடனும் அவன்
மேல” என்று கூறிவிட்டு யோசிக்க தொடங்கினாள்.
“இன்ஸ்பெக்டர் இளங்கோ, நாம கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரிசார்ட்
போனோம் இல்லையா, அங்க நடந்த விஷயங்களை நீங்க ரெக்கார்ட்
பண்ணி இருந்தீங்களே, அது இருக்கா இப்போ” என்று கேட்டாள்.

“எஸ் மேடம் என் கிட்ட தான் இருக்கு, இப்போ அது எதுக்கு மேடம்?” என்று
கேட்டார்.
“நீங்க அதை தாங்க, அதுல தான் விஷயமே அடங்கி இருக்கு” என்று
கூறிவிட்டு அவரிடம் அந்த பென்டிரைவ் வாங்கிக் கொண்டு, அதை தன்
லேப்டாப்பில் போட்டு பார்த்தாள்.
அதில் அவளுக்கு தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு,
அதை வைத்து சில வேலைகளை எல்லாம் செய்துவிட்டு அவளின் சக்திக்கு
அரெஸ்ட் வாரன்ட் வாங்கிவிட்டாள், அன்று மாலையே.
தன் கீழ் பணிபுரியும் முக்கியமான ஆட்களை மட்டும் அழைத்துக் கொண்டு,
நேராக அவன் இருக்கும் இடத்திற்கு சென்றாள். அன்று அவனுக்கு மீன்
தொழிற்சாலையில் வேலை என்பதால், அவன் அங்கே தான் இருந்தான்.
“சார்! ஏசிபி மேடம் உங்களை பார்க்கணும் சொல்லுறாங்க, முன்னாடி உங்க
கேபின்ல வெயிட் பண்ணுறாங்க” என்று அவன் சொல்லி முடிக்கவும், அவன்
விரைந்து அங்கு சென்றான்.
தன்னை தேடி, அவள் இங்கே வந்து இருக்கிறாள் என்றால், விஷயம் பெரிது
என்று எண்ணியதால் தான் இந்த ஓட்டம். அதை உணர்ந்து ராமனும்,
அவனுடன் ஓடினான்.
ஆனால் அங்கே அவர்கள் கண்ட காட்சியில், சக்திக்கு கோபம் உண்டானது.
கைது செய்ய வாரன்ட் உடன் வந்து, அங்கே கம்பீரமாக உட்கார்ந்து
இருந்தது, அவனின் மனைவியாக இல்லை ஏசிபியாக அமர்ந்து இருந்தாள்.
“எங்களை எதுக்காக இப்படி அரெஸ்ட் பண்ணுறீங்க? அப்படி என்ன தப்பு
செய்தோம் நாங்க, எதுனாலும் எங்க லாயர் கிட்ட கன்சல்ட் பண்ணிட்டு
தான் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம்” என்றான் சக்தி இப்பொழுது ஒரு
தொழிலதிபராக.
“உங்க லாயரை அங்க வர சொல்லுங்க, இப்போ உங்களை அரெஸ்ட்
பண்ணி கூட்டிட்டு போக தான் வந்து இருக்கேன்” என்று கூறிவிட்டு,
அவனையும் ராமனையும் அழைத்து சென்றாள்.

செய்தி கேட்ட அவனின் தந்தை, அவனை வெளியே எடுக்க விரைந்து
வந்தார்.
“இதுக்கு தான் நான் தலைபாடா அடிச்சிகிட்டேன், இவளை கட்டாத டா இவ
சரியில்லை அப்படினு. இப்படி புருஷனையே ஜெயில்குள்ள தள்ளி விட்டு
இருக்கா, இவ எல்லாம் என்ன பொண்ணு?” என்று கர்ஜித்தார்.
“ஹையோ! இதை வச்சே அவ அடுத்த ஸ்டெப் எடுப்பாளே, முதல இவர்
வாயை மூட சொல்லு டா” என்று நண்பனிடம் எரிந்து விழுந்தான்.
“யோவ் வக்கீலு! என் பையனை வெளியே எடுக்க தானே கூட்டிட்டு
வந்தேன், வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க” என்று கர்ஜித்தார்.
“சார்! அவங்க fir போட்டுடாங்க, நாம இனி கோர்ட்ல தான் பார்க்கணும்,
அதுவும் இப்போ விடுமுறை கோர்ட்ல பத்து நாளைக்கு பிறகு தான் சார்
பார்க்கணும்” என்றார்.
உன்னை கோர்ட்ல கவனிச்சிக்குரேன் என்று கூறிவிட்டு சென்றார் அவனின்
தந்தை. அந்த வக்கீல் கூறிவிட்டு சென்ற செய்தியை கேட்ட சக்தி,
அதிர்ச்சியுடன் நண்பனை பார்த்தான்.
“டேய் ராட்சசா! உனக்கு ஏத்த ராட்சசி தான் டா, பத்து நாள் நம்மனால
என்ன செய்ய முடியும்? வேற எதோ பிளான் பண்ணிட்டா நினைக்கிறேன்”
என்று கூறிய ராமனை ஆமோதித்தான் சக்தி.
சிறிது நேரம் நடை பயின்ற பின், அவன் ராமனை பார்த்து அடுத்து செய்ய
வேண்டியதை கூறினான்.
“என்னது! அவனுக்கா! டேய் அவன் ஏற்கனவே நம்ம மேல செம கடுப்பில்
இருக்கிறான், இதுல இந்த கேஸ் அவன் கைக்கு கொடுக்க சொல்லுற
உனக்கு என்ன பைத்தியமா டா?” என்று கேட்டான்.
“ஹ்ம்! அவன் நமக்கு ஹெல்ப் பண்ணுவான் ராம், நாம கொடுக்க போற
கேஸ் அப்படி. வெளியே நமக்கு தெரிஞ்சவன் யாரும் இருந்தாங்க
அப்படினா, சிக்னல் கொடுத்து உள்ள வர சொல்லி வேலையை சொல்லி
முடி” என்று கூறிவிட்டு அடுத்து செய்ய போகும் வேலையை பற்றி யோசிக்க
தொடங்கினான்.

இனி அவன் வெளியே வர முடியுமா? வெளியே வந்தால் அவன்
ராட்சசியோடு மோத போகும் செயல் அவனுக்கு சேதாரம் ஆகுமா, இல்லை
அவளுக்கா? என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

error: Content is protected !!