Author: Gayathri Mani
-
EVA23B
23 (B) க்ஷண நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஈவா, விஹானின் பேச்சைக்கேட்டு யாரும் உணரும் முன்னே ஆவேசத்துடன் அவன்மேல் பாய்ந்து, ஆதனை நோக்கி அவன் நீட்டிக்கொண்டிருந்த விரலைக் கடித்துப் பிய்த்து எடுத்திருந்தது. “ஈவா! நோ…” ஆதன் அலறும்போதே, “ஹொவ் டேர் யூ! ராபின் உன்னால தான்…” மறுபடி அவன்மேல் பாய்ந்த ஈவாவின் முன்னங்கால்கள் இரண்டும் உருமாறி கத்திபோல் ஒன்று சேர்த்து விஹானின் தொண்டையைக் குறிவைக்க, ஆதன் அதைப் பிடித்து இழுக்க, விஹான் விரல் இருந்த இடத்தைப் பிடித்துக்கொண்டே…
-
EVA23A
23 (A) ஆதன் வீடு திரும்பியது முதல் குடும்பத்தினரின் கவனிப்பு அவனைத் திணறடித்துக் கொண்டிருந்தது. இரண்டு வாரங்கள் ஒத்துழைத்தவன் மூன்றாவது வாரத் துவக்கத்திலேயே முனகத் துவங்கினான். “சும்மா ரெஸ்ட் எடுத்தே நான் டையர்ட் ஆகிட்டேன்! ப்ளீஸ் என்னை இம்சிக்காதீங்க!” என்று அவன் எறிந்துவிழ, “நல்லதை சொன்னா கேட்டா தானே…” என்பதுபோல் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு மீனாட்சி சென்றுவிட, ரகுநாத்தோ, “சஹானாவையும் ஈவாவையும் துணைக்கு வச்சுக்கிட்டு லேபுக்கு போ, இல்லை பேசாம ரெஸ்ட் எடு!” என்று நிர்தாட்க்ஷண்யமாகச் சொல்லிவிட்டார். “இதுக்கு…
-
EVA22
22 சஹானாவுடன் ஈவா அடித்த லூட்டியில் அதை ஸ்விச்ஆஃப் செய்து வைத்திருந்த ஆதன், சஹானாவை கடிந்துகொள்வதைத் தவிர்க்க லேபில் தஞ்சம் புகுந்திருந்தான். ஈவா பாதியில் விட்டுவைத்திருந்த ஹேக்கிங் வேலையைத் தொடர்ந்தவன், பல மாதங்கள் கழித்து இன்று வெற்றிகரமாக ப்ரொபெஸர் ராபினின் பல அடுக்குகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தகர்த்து யூனிகார்னின் மூலாதார தகவல்களை இப்போது கைப்பற்றிவிட்டான்! தாங்க முடியா ஆர்வத்தோடு ஆதன் அதைத் திறக்க, ‘வெல்கம் ஆதன்! வாழ்த்துக்கள்! இதை நீ படிக்கிறேனா நான் இப்போ…
-
EVA21
21 ஈவா, ராபின் ஃபைலை ஹேக் செய்ய முயன்று கொண்டிருக்க, கம்பியூட்டர் டேபிளின் அருகே சுவரில் சாய்ந்தபடி கார்பெட் தரையில் அமர்ந்திருந்தான் ஆதன். ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாள், அவன் ராபினை கடைசியாகச் சந்தித்தது. யூனிகார்ன் புதிய மைல் கல்லை எட்டியதையொட்டி ராபின் தன் டீமுடன், ப்ராஜெக்டின் அடுத்தகட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகள் பற்றி கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார். குழுவினர் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க விஹானின் முறை வந்தபோது, அவன், யூனிகார்னின் திறனை ஆயுதமாகவோ,…
-
EVA20
20 திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடக்க, அலுவலகம், ஷாப்பிங் என ஆதன் சஹானா இருவரும் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தனர். விஹானை பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி விட்டால் போதுமென்று இரவு அலுப்புடன் ஆதன் உறங்கிவிட, ஈவா மட்டுமே அவ்வப்போது விஹானை கண்காணித்து கொண்டிருந்தது. அவர்களுக்கு போட்டியாக நாட்கள் ஓட, ஆதன் சஹானாவின் திருமண நாளும் வெகு வேகமாக வந்தது. பெரியோர்கள் நிச்சயித்தபடி அந்த சுபயோக சுபதினத்தில் சஹானா ஆதன் திருமண வைபவம் இனிதே துவங்கி இருந்தது, மணமேடையில்…
-
EVA19
19 மீனாக்ஷியுடன் பேசிவிட்டு மொபைலை மேசையில் வைத்த சஹானா தன் விரலிலிருந்த ஸ்மார்ட் மோதிரத்தை பிரஞையின்றி திருப்பிக்கொண்டிருந்தாள். ஆதனுக்கு தெரியாமல் தன்னை சந்திக்கவரும்படி அவர் அழைத்தது உறுத்திக் கொண்டே இருந்தது. எதற்காக இப்படி ரகசிய சந்திப்பு? அவளைப் பிடிக்கவில்லை என்பதை சொல்லி, அவளை கொண்டே கல்யாணத்தை நிறுத்தும்படி கேட்கப் போகிறாரோ? மனம் கண்டபடி யோசித்து தலைவலி பிளக்க நெற்றிக்கு முட்டுக்கொடுத்து சாய்ந்தவள், பலநிமிட போராட்டத்திற்குப் பிறகு, ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்ற மனநிலையில் அலுவலக பணியாக வெளியே சென்றிருந்த ஆதனுக்கு,…
-
EVA18
18 அலுவலக லிஃப்ட்டிற்குள் நுழைந்தவள் இதயம் சொல்லத் தெரியாத சந்தோஷத்தில் படபடத்தது. ஆதனை பார்க்க ஆசையும் அச்சமும் போட்டிப்போட லிஃப்ட் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தில் அரும்பிய புன்னகையின் விதை களிப்பா கலவரமா? யோசித்திருக்கும் போதே தளத்தை அடைந்தவள் தயக்கமும் ஆர்வமும் ஒன்றுசேரத் தன் கேபினை நோக்கி மிதந்தாள். கண்கள் இயல்பாக ஆதனின் அறையை நாட, அவன் படித்துக்கொண்டிருந்தான். காலை வேளைகளில் சஹானாவிற்கு முன்பே வந்துவிட்டால் வரவேற்பாக புன்னகையோ தலையசைப்போ தவறாமல் தருபவன் இன்று திரும்பியும் பார்க்காதது…
-
EVA17
17 ஆதன், பார்கவ் குடும்பத்தினர் திருமண பேச்சுவார்த்தைகள் முடிந்து, கீழ்தளம் வந்தபோது அவ்விடமே அல்லோலக் கல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. ஏற்கனவே யோசனையாய் இருந்த பார்கவ் குடும்பத்தினரை உறவினர்கள் சூழ்ந்துகொண்டனர். வெவ்வேறு வார்த்தைகளாலும் முறைப்புகளாலும் சலிப்புகளாலும் கேள்விகளின் வடிவங்கள் மாறினாலும், பொதுவாக அவை அனைத்தும் வந்து நின்றது, “அப்பாவி பையன் மனசுல ஆசையை வளர்த்துட்டு இப்படி வாக்கு தவறலாமா?” “பெண் பிள்ளையை ரொம்ப படிக்கவச்சு செல்லம் கொடுத்து வளர்த்தா இப்படித்தான் ஆகும்!” என்ற இரண்டில்தான். பொறுமையாக சந்திரனும் பார்கவும் பதில்கள்…
-
EVA16
16 மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களைக் கொண்ட அந்த விசாலமான மேல் தள அறையில் திரைச்சீலை போர்த்திய ஜன்னல்கள் நடுவே, அருவி கரையில் அமர்ந்தபடி நிலையான புன்னகையுடன் ஐரோப்பிய ஓவிய பெண்களின் பெரிய அளவிலான அழகோவியம் அழகு சேர்த்திருந்தது. கார்பெட் விரித்த தரையில் எதிர் எதிரே L வடிவ வெள்ளை சோபாக்களில், ஆதன், பார்கவ் மற்றும் தருண் குடும்பத்தார் அமர்ந்திருந்தனர். அருகில் தேக்கு நாற்காலிகளில் சந்திரன், அருகில் ஆதன் உடன் விஹான் அமர்ந்து இருந்தனர். அறையில் குழுமியிருந்தவர்கள் மனதிலிருந்த உஷ்ணத்தைக்…
-
EVA15
15 முந்தைய இரவு ஆதன், பார்கவுடனான உரையாடல்களும், அறிவுரைகளும் தந்த நம்பிக்கையுடன் அந்நாளை எதிர்கொள்ளத் துவங்கினாள் சஹானா. பூர்ணிமாவோ, தருணை கண்டாலே வெறுக்கும் தன் மகள், தான் சொல்லும் முன்பே தயாராகத் துவங்கியதில் சந்தேகம் எழ, முன்னெச்சரிக்கையாக அவளைக் கீழ்த்தளத்திலிருந்த தன் அறையில் பிள்ளை வீட்டார் வரும்வரை இருக்கும்படி கட்டளையிட்டார். சந்திரன் பொறுமையின்றி உலாவிக் கொண்டிருக்க, பார்கவோ தருண் சந்தேகம் கொள்ளாமலிருக்க அன்றைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தான். ஆதனோ பூர்ணிமாவின் புண்ணியத்தால் சஹானாவைச் சந்திக்க முடியாமல் யோசனையாய் அமர்ந்திருந்தான்.…