Author: KrishnaPriya Narayan
-
Mayam-7
கண்களை மூடி ஒரு விதமான மோன நிலையில் அமர்ந்திருந்த அனுஸ்ரீயின் சிந்தனையை கலைப்பது போல அவளது அறைக்கதவு தட்டப்பட்டது. அந்த சத்தம் கேட்டு அவசரமாக தன் கண்களை திறந்து கொண்டவள் தன் கையில் இருந்த கவரையும், கீழே கட்டிலில் சிதறி கிடந்த புகைப்படங்களையும் வேகமாக அந்த சிறு பெட்டியில் போட்டு மூடி தன் கட்டிலின் கீழே தள்ளி விட்டாள். அறைக்கதவு விடாமல் தட்டப்பட்டுக் கொண்டே இருக்க அவசரமாக தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு சென்று அனுஸ்ரீ…
-
Mayam-6
இன்று தனக்கு பெண் பார்க்க செல்லப் போகிறோம் என்கிற எவ்வித பதட்டமோ, பரபரப்போ இன்றி தன் தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான் ரிஷி ஆகாஷ். அன்று இறுதியாக அனுஸ்ரீயின் புகைப்படத்தை அர்ச்சனாவிடம் இருந்து பெற்றுக் கொண்டவன் அதன் பிறகு அவள் பற்றி தன் வீட்டினரிடம் பேசிக் கொள்ளவில்லை. அதற்கான நேரமும் அவனுக்கு கிடைக்கவில்லை. நாட்கள் என்னவோ ஜெட் வேகத்தில் சென்றது போல நகர்ந்து இருந்தது அவனுக்கு. ஏற்கனவே முதல் நாள் இரவு பத்மினி நாளை நேரத்திற்கு வசந்தபுரம்…
-
Maya-3
மாயா-3 அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உஷ்ணம் தகிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது மாதினிக்கு. கூடவே மகிழம் பூவின் மணம் வேறு சேர்ந்துகொள்ள யாமினியின் நினைவு வந்தது அவளுக்கு. அவர்கள் கிராமத்து வீட்டில் மிகப்பெரிய மகிழ மரம் ஒன்று உண்டு. அதில் உதிரும் பூக்களை அள்ளி வந்து, வாயிற் திண்ணையில் உட்கார்ந்தவாறு ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டே அழகாகக் கோர்ப்பது அவர்களுடைய சாந்தா மற்றும் கனகா என இரண்டு பாட்டிகளுக்கும் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அதைப் பேத்திகளுக்குச் சூட்டி அழகு…
-
Mayam-5
அதிர்ச்சியாக அமர்ந்திருந்த அனுஸ்ரீயைப் பார்த்து குழப்பம் கொண்ட தெய்வநாயகி அவளது தோள் மேல் கை வைத்து “என்னாச்சு அனும்மா?” என்று கேட்க அவளோ கனவில் இருந்து விழிப்பது போல அவரைப் பார்த்து கொண்டு இருந்தாள். “அனு என்னம்மா ஆச்சு?” தெய்வநாயகியின் கேள்வியில் கண்கள் கலங்க அவரை திரும்பி பார்த்தவள் “எனக்கு கல்யாணம் எல்லாம் வேண்டாம் பாட்டி” என்று கூறினாள். “ஏன் மா? உங்க அம்மாவும், அப்பாவும் இப்போ தான் உனக்காக ஒன்று சேர்ந்து ஒரு நல்லது…
-
Manmo-19
“ரிச்சர்ட்…. கிளம்பலாமா?” மித்ரா கேட்டுக் கொண்டிருக்கும் போதே கார்த்திக்கின் கார் அவர்கள் வீட்டின் முன் வந்து நின்றது. “ஆ… ரெடி மேடம். போகலாம்.” ரிச்சர்ட்டும் வாசலுக்கு வந்தான். அப்போதுதான் கார்த்திக் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். “வாங்க சார்.” “ஹாஸ்பிடலுக்கா ரிச்சர்ட்?” “ஆமா சார்… மேடமுக்கு இன்னைக்கு மன்த்லி செக்கப் இருக்கு.” அது வரை கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்த மித்ரமதி கார்த்திக்கைக் காணவும் அமைதியாகி விட்டாள். “நானும் கூட வரட்டுமா ரிச்சர்ட்?” “ரிச்சர்ட்… சீக்கிரமா வா. லேட் ஆகுது.”…
-
Maya-2
அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்! அந்த உடைந்த பாலத்தினின்று அதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு ஆதவன் புறப்பட, அவனுடைய கிரணங்கள் மாதியினியின் முகத்தில் தெறித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன. முந்தைய தினம் சிந்துஜாஸ்ரீயிடம் பேசிமுடித்து விடைபெற்று வெளியில் வந்ததும், வேதனையின் சாயல் அளவுகடந்து அவளுடைய முகத்தில் படிந்திருக்க, இறுகிப்போயிருந்தாள் மாதினி. மயிலாப்பூரில் உள்ள அவளுடைய அலுவலகத்தில் அவளுடன் போய் இறங்கும் வரையிலும்…
-
Mayam-4
குளித்து முடித்து விட்டு ரிஷி தயாராகி தன் அறையில் இருந்து வெளியேறி ஹாலை நோக்கி நடந்து வர அங்கே அவனது வருகைக்காக காத்திருந்த பத்மினி அவனை பார்த்ததுமே “ரிஷி!” என்றவாறே புன்னகையோடு நெருங்கி வந்தார். “என்னம்மா காலையிலேயே உங்க முகம் இவ்வளவு ஜொலி ஜொலிக்குது? என்ன விஷேசம்?” புன்னகையோடு கேட்டவனின் தலையை செல்லமாக கலைத்து விட்டவர் “அது தான் அர்ச்சனா நீ சொன்ன எல்லாவற்றையும் என் கிட்ட சொல்லிட்டாளே! இதற்கு மேல எனக்கு வேற என்ன சந்தோஷம்…
-
Mayam-3
காலையில் பறவைகளின் ஒலி கேட்டு கண் விழித்த அனுஸ்ரீ எப்போதும் போல காலையில் எழுந்ததும் கண்களை மூடி கடவுளை வணங்கி கொள்வது போல் அன்றும் கடவுளை மனதார வணங்கி கொண்டே புன்னகையோடு கட்டிலில் இருந்து கீழிறங்கி நின்றாள். மெல்ல அடி வைத்து நடந்து சென்றவள் பால்கனி கதவைத் திறக்க அதிகாலை நேரத்து இளங்காற்று அவள் மேனியை தழுவி சென்றது. அந்த இதமான நிலையை ரசித்து கொண்டு நின்றவள் அவளது பால்கனியில் அமைக்கப்பட்டிருந்த சிறு தோட்டத்தை நோக்கி நடந்து…
-
Maya-1
மாயா-1 சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே பறந்து கொண்டிருக்கும் நண்பகல்வேளை; தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா. ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதிவேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்! ‘அவளாஆஆஆ?’…
-
Manmo-17
கார்த்திக் இப்போதும் பால்கனியில் தான் நின்றிருந்தான். அவனுக்குத்தான் இருள் சூழ்ந்த அந்த ஏகாந்தம் அவ்வளவு பிடிக்குமே! ஆனால் இன்று மனதுக்குள் கோடி மத்தாப்பு வெடித்துச் சிதறியது. வீட்டில் இருந்த அத்தனை பேரும் அவனை ஒரு தினுசாகத்தான் பார்த்தார்கள். ஆனால் அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. தன் மார்புக்குள் சுருண்டு கொண்ட அவள் ஸ்பரிசத்தை இப்போதும் அவன் கைகள் உணர்ந்தது. இவன் உடைகளைக் கொண்டு ரூம் வரை வந்த பாட்டி இவர்கள் இருந்த கோலம் பார்த்துவிட்டு சங்கடப் பட்டுப்…