Aval throwpathi alla – 30(1)

30(1)

அமலாவும் நதியாவும் காரில் புறப்பட்டதிலிருந்து வீராவை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

“மாமா உன் கழுத்தில ஏன் க்கா தாலி கட்டில” என்றவள் வினவ,

“ப்ச்… சாரதி சாருக்கு இதுல ல்லாம் நம்பிக்கை இல்ல… விடு” என்று வீரா பதிலுரைத்து சமாளிக்க,

“போ க்கா.. உன் கல்யாணத்த பார்க்க நாங்க எவ்ளோ ஆசையா இருந்தோம்… எல்லாம் ஊத்திகுச்சு” என்று சொல்லி அமலா நொடித்துக் கொண்டாள்.

வீரா முடிந்தளவு ஏதேதோ சொல்லி அவர்களை சமாளிக்க, அவர்கள் சந்தேகங்களோ அத்தனை எளிதில் தீர்ந்தபாடில்லை.

வீராவின் மனம் ஏற்கனவே காயப்பட்டிருக்க, அவர்களின் கேள்விகளும் வார்த்தைகளும் அவளை மேலும் மேலும் காயப்படுத்திக் கொண்டிருந்தன.

எந்நிலையிலும் தங்கைகள் முன்னிலையில் உடைந்துவிட கூடாது என்று வீரா தன் உணர்வகளை பெரும்பாடுபட்டு சிறைப்படுத்தி வைத்திருந்தாள்.

ஆனால் அவர்கள் இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டிருந்தால் நிச்சயம் அவள் மனோதிடம் தகர்ந்துவிடும் என்பது மட்டும் நிச்சயம்.

அதற்கேற்றாற் போல் படுக்கும் தருவாயில் மீண்டும் நதியா,

“நீயாச்சும் மாமாகிட்ட… சொல்லிருக்கலாம்ல… கோவிலுக்கு கூட்டிட்டு போய் தாலி கட்ட சொல்லி” என்று ஆரம்பித்தாள். அமலாவும் உடன் சேர்ந்து கொண்டு,

“ஆமா… சொல்லிருக்கலாம்” என்க,

வீராவின் பொறுமை சுக்குநூறாய் உடைந்தது.

“இப்போ இரண்டு பேருக்கும் இன்னா பிரச்சனை?” என்று சீற்றமாய் கேட்டவள் மேலும்,

“சும்மா தாலி தாலினு … ஏன்டி தாலிய கட்டின்னு அழுவுறீங்க… பெரிய தாலி… நம்ம அப்பன்னு ஒரு சோமாரி இருந்தானே… அவன் நம்ம அம்மா கழுத்தில தாலிய கட்டிதானே கல்யாணம் பன்னிக்கினான்… அப்படி இன்னாடி அம்மாவை வாழ வைச்சிட்டான்… நம்ம மூணு பேரையும் புள்ளையா குடுத்தான் அவ்ளோதான்… மத்தபடி ஒரு ஆணியும் புடுங்கல…

அப்புறம் பக்கத்துக்கு வூட்டுல இருந்துச்சே… அது பேர் என்ன… ஆன்… மஞ்சுளா… எவனையோ காதலிச்சு முறைப்படி தாலியெல்லாம் கட்டிதான் கல்யாணம் பண்ணிக்கின்னு போச்சு… இன்னா ஆச்சு… இரண்டே மாசத்தில அவ மாமியார் அவளை துரத்தி உட்டுட்டு அவன் புள்ளைக்கு வேற கல்யாணம் பண்ணிடல… அப்புறம் இன்னாடி தாலி…. மண்ணாங்கட்டினு…

முதல ஒரு விஷயத்த ரெண்டு பேரும் புரிஞ்சிகோங்க… சாரதி சார்… என் கழுத்துல தாலி கட்டல … ஆனா அவர் என்னை ரெஜிஸ் டர் கல்யாணம் பண்ணினுகிறாரு… இனிமே அவரே நினைச்சாலும் அதை மாத்த முடியாது … நான்தான் இந்த ஜென்மத்தில அவரோட பொண்டாட்டி”

தங்கைகளை சமாளிக்கவே பேச ஆரம்பித்தவள்… பின்னர் பேச பேச தன்னை அறியாமல் அவள் வேதனைகளை கொட்டி தீர்த்துவிட்டாள்.

அமலாவும் நதியாவும் வீராவின் பேச்சை கேட்டு சில நொடிகள் அப்படியே மௌனநிலையில் இருந்தனர்.

வீரா படபடத்து போய்,

“ஏ… இன்னங்காடி மூஞ்சி தூக்கி வைச்சுக்கினீங்க… நான் பேசினதை கேட்டு கோவிச்சிகினீங்களா?” என்று அவர்களின் அமைதியை பார்த்து துணுக்குற,

இருவரும் அந்த நொடி சத்தமாய் சிரிக்க தொடங்கினர்.

அவர்கள் வீராவை பார்த்து, “உனக்கு மாமா மேல செம்ம லவ்வு க்கா… அதான் அவரை விட்டு கொடுக்கமா பேசற ” என்று நதியா சொல்ல,

வீரா கடுப்பாய், “செம்ம லவ்வு… யாருக்கு… எனக்கா ?” என்று தலையிலடித்து கொண்டாள்.

“சும்மா நடிக்காத க்கா… எப்பவும் அந்தாளு இந்தாளுன்னுதானே சொல்லுவ… ஆனா இப்போ பேசும் போது அவரு இவருன்னு… ஹ்ம்ம்ம்…ஹ்ம்ம்” என்று

நதியா கிண்டலடிக்க,

“ஆமாம் ஆமா… நான் கூட கவனிச்சேன்” அமலா வெட்கப்பட்டு சிரித்தாள்.

“அட ச்சே… நிறுத்துங்கடி” என்று வீரா கோபமுற,

அவர்கள் இருவரும் விடாமல் அவளை ஓட்ட, கொஞ்சம் ரணகளமாகவும் குதூகலமாகவும் அந்த சுழ்நிலை மாறியிருந்தது. அவர்கள் பேசியவற்றில் அவளுக்கு சுத்தமாய் உடன்பாடே இல்லையென்றாலும் தன் தங்கைகளின் மலர்ந்த முகங்கள் அவள் மனதை சற்றே அமைதியடைய செய்திருந்தது.

“ஏன் க்கா… மாமா இன்னும் வரல?” என்று நதியா கேட்கவும் மீண்டும் வீராவின் சந்தோஷமெல்லாம் முழுவதுமாய் பறிபோன உணர்வு!

“ஆபீஸ் வேலைன்னு போம் போது சொல்லிட்டுதானே போனாரு… முடிஞ்சதும் வருவாரு” என்று வீரா இறங்கிய தொனியில் தன் தங்கைகளிடம் சொல்ல,

அவள் மனநிலை புரியாமல்,

“மாமாவ பார்க்கமா அக்காக்கு ஒரே பீலிங்க்ஸ் போல” என்றாள் நதியா மறுபடியும்!

“இதுக்கு மேல எதனாச்சும் பேசனீங்க… ஒரே மிதிதான்… கம்னு படுங்கடி” என்று மிரட்டலாய் வீரா உரைக்க கப்சிப்பென்று இருவரும் படுக்கையில் போர்வைக்குள் அடங்கினர்.

வீராவும் பெருமூச்செறிந்து படுக்கையில்  அவர்கள் அருகாமையில் அமர்ந்து கொண்டு தலையை பிடித்து கொண்டிருக்க,

“அக்கா” என்று தலையை வெளியே நீட்டிய அமலா,

“மாமா மறந்துட்டாரா? … இன்னைக்கு உங்களுக்கு ப்ஃரஸ்ட் நைட்ல” என்றாள்.

“ஆமா ல” என்று நதியாவும் எட்டி பார்த்தாள்.

“அடிங்க… ரொம்ப முக்கியம்…” என்று வீரா அங்கிருந்த தலையணையை எடுத்து அவர்களை மொத்தி வைக்க,

மீண்டும் இருவரும் போர்வைக்குள் பதுங்கி கொண்டனர்.

ஆனாலும் அவர்கள் உள்ளுர ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்க, “அடங்க மாட்டிராளுன்களே!!” என்று வீரா போர்வையின் வழியாக அவர்கள் இருவரின் காதுகளையும் திருகினாள்.

“அக்கா வேணா வேணாம்” என்று கதறியவர்கள் அத்தோடு நிசப்தமாகி சில நிமிடங்களில் உறக்க நிலைக்கும் போய்விட்டனர்.

அதற்கு பிறகு அந்த அறையில் ஓர் மயான அமைதி பீடித்து கொள்ள, வீராவின் விழிகளிலோ உறக்கத்திற்கான எந்தவித அறிகுறியுமே தென்படவில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

கால்களை மடித்தபடி அமர்ந்திருந்தவள் வெறிக்க வெறிக்க அந்த அறையை சுற்றி பார்த்திருந்தாள்.

அந்த அறையின் ஆடம்பரம் அவளை வெகுவாய் மிரட்டி கொண்டிருக்க, அவள் குடித்தனம் இருந்த அந்த ஒற்றை வீட்டிற்கே திரும்பி போய்விட முடியாதா என்ற இனம் புரியாத ஏக்கமும் அவளை  வாட்டிக் கொண்டிருந்தது.

அவளை ஏதோ ஓர் உணர்வு அச்சுறுத்தி கொண்டிருக்க, அது இன்னதென்று அவளால் வறையறைக்க முடியவில்லை

இப்போதைக்கு அவளின் ஓரே தவிப்பு அந்த இரவை எப்படி கடக்கப் போகிறோம் என்பது மட்டும்தான்!

சரியாய் அந்த நொடி காரின் ஹார்ன் சத்தம் மெலிதாய் ஒலிக்க, அவள் பதட்டத்தோடு எழுந்து ஜன்னல் திரைசீலைகளை விலக்கினாள்.

அவனேதான்!

அவன் காரிலிருந்து இறங்கி வருவதை பார்த்த மாத்திரத்தில், அவளின் தைரியம் மொத்தமும் ஆட்டம் கண்டுவிட்டது.

வேகவேகமாய் அறையின் விளக்கை அணைத்துவிட்டு தங்கைகளோடு படுக்கையில் சரிந்தாள்.

‘ஆல் இஸ் வெல்’ அவள் எப்போதும் ஜெபிக்கும் தாரக மந்திரத்தை  முணுமுணுத்தபடி விழிகளை மூடி கொள்ள,

அவள் மனமோ பயத்தோடு விழித்து கொண்டுதான் இருந்தது. சில நிமிடங்கள் எந்தவித சத்தமுமின்றி ஆள் அரவமே இல்லாமல் இருந்தது.

ஆனால் அந்த அமைதியை உடைத்து கொண்டு தடதடவென அறை கதவு தட்டும் ஓசை கேட்க, அவளுக்கும் உள்ளுர தடதடத்தது. அவன்தான் என்பதை அறிந்தவள், கொஞ்ச நேரம் தட்டிவிட்டு அவனே போய்விடுவான் என எண்ணும்போது,

வீரா என்று சாரதியின் அழைப்பு குரலும் கேட்டது.

அவள் அப்போதும் அசைந்து கொடுக்காமல் விழிகளை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

ஆனால் அவன்தான் விடகொண்டனயிற்றே.

அடுத்ததாய் அந்த அறையில் இருந்த இன்டர்காம் சத்தமிட்டது. என்னவரினும் அவன் நினைத்ததை  சாதித்தே தீரவேண்டுமென்ற பிடிவாதம் அவனுக்கு எப்போதும்.

வீரா துடித்துபிடித்து எழுந்து தன் தங்கைகள் இருவரையும் பார்த்து எங்கே அவர்கள் விழித்து கொள்வார்களோ என்று பதறி கொண்டு அதனை ஏற்றவள் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்க,

“வீரா” என்றழைத்தான் சாரதி.

“ஹ்ம்ம்” என்றாள் அவள்!

எங்கே பேசினால் அவள் குரலின் நடுக்கம் அவனுக்கு தெரிந்திவிடுமோ என்ற அச்சம்!

“ரூமுக்கு வா… ஐம் வெய்டிங் பாஃர் யூ” என்று அதிகார தொனியில் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டான்.

ஏற்கனவே அவன் மீதான கோபம் அவளுக்குள் எரிமலையாய் குமிறி கொண்டிருந்தது. இப்போது அவனின் அழைப்பு அதனை வெடிக்க செய்திருக்க,

எழுந்தமர்ந்தவள் சில நொடிகள் அவளை அவளே திடப்படுத்தி கொண்டாள்.

செல்வதற்கு முன்னதாக கண்ணாடியில் தன்னைத்தானே உற்று பார்த்து கொண்டவள்,

அவள் அணித்ருந்த புடவையை கழற்றிவிட்டு,

தேடி எடுத்து ஒரு கழுத்தொட்டிய முழு கை டிஷர்டையும் நைட் பேன்டையும் அணிந்து கொண்டாள். அதோடு அவள் காது கழுத்திலிருந்த ஆபரணங்கள் அனைத்தையும் களைந்தாள்.

அதன் பின்னர் அவன் அறை நோக்கி அவள் செல்ல,

சாரதியோ தன் படுக்கை மீது ஒற்றை காலை மடித்து கொண்டு அவள் வருகைக்காக ஆவலாய் காத்திருந்தான்.

வீரா வாசற்கதவை தாண்டாமலே, “எதுக்கு சார் கூப்பிட்டீங்க?” என்று கேட்கவும் அவன் முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை!

எழுந்து அவளை நோக்கி மெதுவாக நடந்து வந்தவன், ஆராய்ந்து அவளையும் அவள் அணிந்திருந்த உடையையும் பார்த்து புன்னகையித்து கொண்டான்.

அவள் தன் அலங்காரங்கள் மொத்தத்தையும் துடைத்தெறிந்து விட்டல்லவா வந்திருந்தாள்.

அவள் அந்த உடையில் நின்று கொண்டிருந்த விதத்தில் அவளை புதிதாய் பார்பவர்கள் அவளை நிச்சயம் ஆணென்றே எண்ணி கொள்வர்.

“உன்னோட இந்த சிம்ப்ளிசிட்டிதான் என்னை ரொம்ப அட்டிரேக்ட் பண்ணுது வீரா” என்றவன் சொல்லி அவளை ஆழ்ந்து ரசிக்க,

அவளுக்கு எரிச்சலாய் வந்தது. தான் என்ன செய்தாலும் அதனையும் அவனுக்கு சாதகமாகவே எடுத்து கொள்ளும் அவனை என்ன செய்வது. 

உள்ளமெல்லாம் எரிமலையாய் தகித்து கொண்டிருக்க அவனை ஏறிட்டும் பார்க்காமல்,

“எனக்கு தூக்கம் வருது… சீக்கரம் இன்னா மேட்டருன்னு சொல்லுங்க… நான் போகனும்” என்றவள் விட்டால் ஓடிவிடலாம் என்ற நிலையில் தவிப்புற,

“எங்கே போக போற… இனிமே இதுதான் உன் ரூமும்… கம் இன்ஸைட்…” என்றவன் அவள் தோள்களை அணைத்தவாறு அறைக்குள் அழைத்து வந்துவிட்டான்.

அவள் பட்டென அவன் கரத்தை உதறிவிட்டு  வெளியேற எத்தனிக்க, அவனோ அறைக்கதவை மூடிவிட்டு அதன் மீது சாய்வாய் நின்று கொண்டான்.

“இப்ப இன்னா சார் வேணும் உனக்கு” தவிப்பாய் அவனை பார்த்து எச்சிலை விழுங்கி கொண்டு கேட்க,

“யூ… டார்லிங்” என்றான

அவன் சொல்லிய விதத்திலும் அவன் உதட்டில் வழிந்தோடிய புன்னகையிலும் அவன் கூர்மையான பார்வையிலும் அவளை அடைந்துவிட வேண்டுமென்ற அதிதீவரம் இருந்தது.

“அது நடக்காது… வழி விடுங்க… நான் போகனும்”

அவன் விழியை பார்த்து அவள் திடமாக சொல்ல,

“ஏன் முடியாது? நம்ம இப்போ மேரிட்தானே” என்றபடி அவள் இடையை அவன் வளைத்து கொள்ள முற்பட்டபோது பின்னோக்கி நகர்ந்தவள்,

“மேரிடா… மண்ணாங்கட்டி” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு!

“இப்போ என்ன கோபம் உனக்கு? என்னாச்சு?!” என்றவன் சற்றும் பதட்டமே இல்லாமல் அவளை பார்த்து தன் கரங்களை கட்டி கொண்டு கேட்க, அவளுக்கு டென்ஷன் சரமாரியாய் ஏறியது.

“இப்போ வழி விட போறீங்களா இல்லயா?!” கட்டுங்கடங்கா சீற்றத்தோடு அவனை பார்த்து அவள் கத்த,

அவன் அசராமல், “முடியாது… நமக்கு இன்னைக்கு பஃர்ஸ்ட் நைட்… அன்… ஐ நீட் யூ ரைட் நவ்” என்று தீர்க்கமாய் முடித்தான்.

அவளின் அடிவயற்றிலிருந்து ஏதோ ஜிவ்வென்று மேலுக்கு ஏறிய உணர்வு!

error: Content is protected !!