Aval throwpathi alla – 32

அர்ஜுனன்

அரவிந்தும் சரத்தும் பெசன்ட் நகர் கடற்கரை ஒட்டியுள்ள பங்களாவின் மேல் மாடியில் கடலை பார்த்தபடி நின்றிருக்க,

ஓயாத அந்த அலைகளின் சத்தம் அரவிந்தின் மனநிலையை இன்னும் மோசமாக்கிக் கொண்டிருந்தது. அவனுக்குள் வெறியேறி கொண்டிருந்தது.

பார்க்கும் திசையெல்லாம் சாரதியின் முகமாகவே அவன் பார்வைக்கு புலப்பட, தீ ஜ்வாலையாய் அவனின் சினம் உள்ளூர விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்தது.

சரத் அரவிந்தை அமைதிப்படுத்தி… அவன் மனதிலுள்ள எண்ணத்தைத் தெரிந்து கொள்ளவே அங்கே அவனை அழைத்து வந்திருந்தான்.

ஆனால் அவனோ வந்த நொடியிலிருந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அழுத்தமான மௌனத்தோடு கடலையே வெறித்து தோள் மீது கரம் பதித்தான்.

“என்ன விஷயம் மாமா?… எதுக்கு என்னை இங்க கூட்டிட்டு வந்தீங்க?” அரவிந்த் திரும்பிக் கூட பாராமல் கடலை பார்த்தபடியே கேட்க,

“அத நான்தான் கேட்கனும்… என்ன பிரச்சனை உனக்கு? எதுக்கு இப்படி குடிச்சிட்டு சோக கீதம் பாடிட்டிருக்க?” என்றான்.

நிதானமாய் அவன் புறம் திரும்பிய அரவிந்த்,

“என் பிரச்சனையை நான் சொன்னா மட்டும்… நீங்கெல்லாம் சேர்ந்து… உடனே தீர்த்து வைச்சர போறீங்களா என்ன?” என்று கேட்டவனின் பார்வையில் விரக்தி ஒருபுறமும் சொல்லிலடங்கா கோபம் மறுபுறமும் உற்றேடுத்துக் கொண்டிருந்தது.

“உன் முகத்தை பார்த்தா… ஏதோ பெரிசா நடந்திருக்க மாறி தோணுதே… என்ன விஷயம்னு முதல சொல்லு அரவிந்த்… அப்புறம் அதை தீர்க்கிறதை பத்தி யோசிக்கலாம்”

“இனிமே எதுவும் சொல்லி ஒண்ணும் ஆக போறதில்ல… எல்லா முடிஞ்சி போச்சு” என்றவன் பார்வையில் உக்கிரம் தாண்டவமாடி கொண்டிருந்தது.

சரத் அரவிந்திடம் என்ன விஷயமென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, அரவிந்தோ புரிந்தும் புரியாமலும் அவன் வேதனையை புலம்ப,

“என்ன பிரச்சினைன்னு… சொல்லிட்டு மேல பேசு அரவிந்த்” சரத் கடுப்பின் உச்சத்திற்கே சென்று அவனை கத்திவிட்டான்.

அதற்கு பிறகே அரவிந்த் நடந்தவற்றை அனைத்தையும் சொல்லிவிடுவது என முடிவுக்கு வந்து,

சாரதி அவன் தந்தையின் பெயரைக் கெடுத்ததில் தொடங்கி… சாரதியை அவன் கொலை செய்ய ஆட்கள் ஏற்பாடு செய்தது… பின்னர் தி நகர் கடைக்கு சாரதி நெருப்பு வைத்தது… இறுதியாய் வீராவை அவன் பதிவு திருமணம் செய்து கொண்டவரை சொல்லி முடித்து அரவிந்த் அடங்கா கோபத்தோடு சுவற்றில் குத்தினான்.

சரத்தோ இவற்றையெல்லாம் கேட்டு அதிர்ச்சியின் மொத்த ரூபமாய் நின்றான்.

அப்போது அரவிந்த் ஆக்ரோஷமாய், “இப்போ சொல்லுங்க மாமா… அவனை என்ன செய்யலாம்?” என்று கேட்க,

சரத் அரவிந்தின் புறம் திரும்பி, “ஒருத்தன் இவ்ளோ தூரம் செஞ்சிருக்கான்… எப்படி அரவிந்த் ? அவனை விட்டு வைச்சிருக்கீங்க… அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?!” என்று ரௌத்திரமாய் பொங்கினான்.

“அவன் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் இல்ல மாமா… அனாதை பையன்… அடிச்சா ஏன்னு கேட்க கூட நாதி கிடையாது” என்றான் அரவிந்த்!

“இங்கதான் அரவிந்த் நீ தப்பு செஞ்சிட்ட… அவனை ரொம்ப குறைச்சி எடை போட்டுட்ட… அதான் உன்னை அவன் இறங்கி செஞ்சிட்டான்” என்று உரைத்த சரத் மேலும்,

“அவன் பலவீனத்தை பத்தி யோசிச்சியே… அவன் பலத்தை பத்தி நீ யோசிச்சியா ?” என்று வினவ,

“எதை மாமா அவன் பலம்னு சொல்றீங்க?” என்று புரியாமல் கேட்டான் அரவிந்த்.

“அவன் மூளை… அதுவும் ப்ஸ்னஸ் மூளை… இல்லாட்டி போன இவ்வளவு ஷார்ட் ஆப் டைம்ல… யார் சப்போர்ட்டும் இல்லாம டெக்ஸ்டைல் இன்டிஸ்டிரீஸ்ல இப்படி ஒரு அசுர வளர்ச்சியெல்லாம் சேன்ஸே இல்ல… உண்மையிலேயே அவன் டெர்ரர்ரான ஆள்தான்” என்று சரத் வியப்படங்காமல் சொல்லிக் கொண்டிருக்கும் போது

“மண்ணாங்கட்டி… எப்பவோ நான் செட் பண்ண ஆளுங்க அவனை போட்டு தள்ளி இருப்பானுங்க… எதோ…அவன் நல்ல நேரம்… தப்பிச்சிட்டான்” என்றான் அரவிந்த் சீற்றத்தோடு!

“அவன் நல்ல நேரமா தெரியல… ஆனா உனக்கு அங்கதான் கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சி” என்று சரத் சொல்ல,

“அவனை எதாச்சும் பண்ணனும் மாமா… எனக்கு உள்ள கொதிக்குது… அவன் செஞ்சதெல்லாம் பத்தாதுன்னு என் வீராவை… நான் அவளை காதலிக்கிறன்னு தெரிஞ்சும்” என்று அரவிந்த் கொந்தளிப்போடு சுவற்றின் மீதிருந்த பூத்தொட்டியை தட்டிவிட, அதுவோ தரைதளத்தில் வீழ்ந்து உடைந்து நொறுங்கியது.

சரத் யோசனைகுறியோடு, “இங்க தான் அரவிந்த் எனக்கு இடிக்குது… அவன் உன்னை பழிவாங்க… அந்த லோக்கல் பொண்ண கல்யாணம் பன்றளவுக்கு போயிருக்கான்னா … அவனுக்கு அதுல என்ன லாபம்… ஒண்ணும் புரியலையே… ஏன் அரவிந்த்?… அந்த பொண்ணு என்ன அவ்ளோ அழகா?” என்று அரவிந்திடம் அவன் ஆவல் ததும்ப கேட்க,

அப்போது அரவிந்திற்கு வீராவை முதல் முறையாய் ஆண் வேடத்தில் பார்த்து தன்னையும் மறந்து அவள் அழகில் ரசித்து லயித்தது கண்முன்னே நிழலாடியது.

அரவிந்த் அவளை அன்று பார்த்த அதே சிலாகிப்போடு,

“அவ வெறும் அழகி இல்ல மாமா … பேரழகி… அதுவும் யாருக்கும் அசறாத அவ துணிச்சல்தான் இன்னும் அழகு… நான் அவ மேல உயிரையே வைச்சிருந்தேன்… ஆனா அவளுக்கு ஏனோ என் காதல் புரியலயே … என்னைகாச்சும் புரிஞ்சிபான்னு பார்த்தேன்… அதுக்குள்ள இந்த சாரதி பொறுக்கி உள்ள புகுந்து” என்றவன் மேலே பேச முடியாமல் திக்கி தடுமாறினான்.

அவன் தவிப்பு வேதனையெல்லாம் வீரா இனி தனக்கு சொந்தமில்லை என்பதுதான். அதனை நினைக்கும் போதே அவன் உள்ளம் எரிமலையாய் பொங்க… சாரதிக்கு அவள் சொந்தமாகி இருப்பாளா என்ற கேள்வியே அவனை சுக்குநூறாய் உடைத்திருந்தது.

அரவிந்தின் விழியில் உஷ்ணத்தைக் கக்கியபடி கண்ணீர் திண்ணமாய் அவன் கன்னத்தில் இறங்க,

“அரவிந்த் ரிலேக்ஸ்…அவனை நம்ம எதாச்சும் செய்யலாம்” என்று சரத் அவன் தோள்களில் தடவிக் கொடுத்தான்.

“இனிமே அவனை என்ன செஞ்சி என்ன மாமா ஆக போகுது… அவன் என் வீராவை தொட்டிருபான் இல்ல… அவனுக்கு அவ சொந்தமாகி இருப்பா இல்ல” என்று கேட்டவனின் உள்ளம் கொந்தளிக்க,

சரத் அவன் சொன்னதை கேட்டு சத்தமாய் சிரித்து விட்டான்.

“என் வேதனை உங்களுக்கு சிரிப்பா இருக்கா மாமா” அரவிந்த் வெடித்தெழ,

“இல்ல அரவிந்த்… உன் முட்டாள்தனத்தை பார்த்தாதான் எனக்கு சிரிப்பு வருது” என்று சொல்லி மீண்டும் சிரித்தான் சரத்!

“மாம்ம்ம்ம்ம்ம்மா” அரவிந்த் சீற்றமாய் கத்த,

“டென்ஷன் ஆகாதே அரவிந்த்… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்ற சரத்

அரவிந்திடம் நிதானமாய்,

“நல்லா யோசிச்சி பாரு… அந்த சாரதி உன் வீராவை விருப்பமில்லாம கல்யாணம் பன்னிருப்பானா… இல்ல தொட்டுதான் இருபான்னா… சரி நான் தெரியாமதான் கேட்கிறேன்… அந்த சாரதி உன்னை பழிவாங்கத்தான் அவளை கல்யாணம் பன்ணிக்கிட்டான்னு வைச்சிக்கிட்டா கூட… அவ எதுக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா… அதுவும் உன்னை வேணான்னு சொன்னவளுக்கு அவனை எப்படி பிடிச்சி போச்சு… இத பத்தி நீ யோசிச்சியா?!” என்று கேட்க அரவிந்த் முகத்தில் ஆயிரமாயிரம் குழப்ப ரேகைகள் படர்ந்தன.

அரவிந்த் பதிலின்றி யோசிக்க, அவனின் எண்ணங்களோ தடுப்பணையை பெயர்த்துக் கொண்டு ஓடிய காட்டாற்று வெள்ளமாய் மாறியது. அவன் மனமெல்லாம் வீராவை பற்றிய சிந்தனையிலையே மூழ்கிவிட, சரத்தும் அப்போது சாரதியை எப்படி வீழ்த்துவதை என்பது பற்றி யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குப் பின் அவர்களுக்கிடையில் ஓர் பலத்த மௌனம் குடியேறியது.

*****

சாரதியின் அலுவலகம்

சாரதியால் அன்று முழுவதும் வேலையில் ஈடுப்படவே முடியவில்லை. வீரா பேசிய வார்த்தைகள்தாம் அவன் எண்ணங்களில் சுற்றி சுழன்று கொண்டிருந்தன.

வீரா பேசிய வார்த்தைகள் யாவும் வெறும் கோபத்தில்தான் என அவன் மனம் அறிந்திருந்தாலும்,

அப்படி ஒரு வார்த்தை அவளிடம் இருந்து வெளிப்பட்டிருக்க வேண்டாமே என்பதுதான் அவனுடைய வேதனையே!

ஆதலாலேயே அவன் மனம் அமைதி பெற முடியாமல் பொறுமி கொண்டிருந்தது.

அவன் மனநிலையை கணேஷ் ஓரளவுக்குக் கணித்துவிட, “சார்… நீங்க வேணா வீட்டுக்குப் போங்க… ஆர்டர் லிஸ்ட் செக் பண்ணி உங்களுக்கு நான் மெயில் அனுப்பிடிறேன்” என்றான்.

அவனுக்குச் சாரதியிடம் இருந்து முறைப்பு மட்டுமே பதிலாய் வர, அவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

வேலையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டை அடைந்தான்.

முகப்பறையிலேயே நதியாவும் அமலாவும் ஏதோ கப்பல் கவிழ்ந்தநிலையில் கன்னத்தில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

உள்ளே நுழைந்ததும் அவர்கள் இருவரையும் பார்த்தவன் புருவங்களை நெறித்து, “என்னாச்சு ரெண்டு பேருக்கும்… ஏன் இப்படி உட்கார்ந்திட்டு இருக்கீங்க?” என்றவன் கேட்கவும்,

“அக்கா அடிச்சிட்டா” என்றனர் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு!

“அடிச்சிட்டாளா… எதுக்கு?” அவன் அதிர்ச்சியோடு வினவ,

“போங்க மாமா… எல்லாம் உங்களாலதான்” என்று அமலா சொல்ல, நதியா அவனை நோக்கி

“அக்கா கிட்ட சொல்லிட்டு போலாம்னு சொன்னேன்ல… நீங்கதான் நான் சொல்லிக்கிறேன்னு சொல்லிட்டீங்க… அவ இன்னடான்னா எங்களை பின்னி பெடலெடுத்துட்டா… அதுவும் அம்மு கூட சின்ன பொண்ணு… உனக்கு எங்க போச்சு புத்தின்னு… என்னைதான் பிச்சிட்டா” என்றாள்.

“அதெல்லாம் இல்ல… என்னையும் தான் அக்கா செம்ம வாங்கு வாங்கிருச்சு” என்று அமலா முந்தி கொண்டு சொல்ல,

“இதுல என்ன எருமை உனக்கு பெருமை…அடி வாங்கிறதுல கூட உனக்கு என் கூட போட்டியா?”என்று நதியா தங்கையை முறைக்க,

சாரதி சிரித்தபடி அவர்களோடு பேச அவனும் சோபாவில் அமர்ந்தான்.

“அப்போ இன்னும் மேடம் கோபமாத்தான் இருக்காங்களா?” என்று சாரதி முறுவலித்து கேட்க

“செம்ம கோபம்… போய் தப்பி தவிறி சிக்கிடாதீங்க… சின்னபின்னமாக்கிடும்” என்றாள் நதியா.

சிரித்து கொண்டே , “ஆஹான்” என்க,

“சிரிக்காதீங்க மாமா… நாங்க நிஜம்மாத்தான் சொல்றோம்… அக்காவுக்கு கோபம் வந்துது… யாரு என்னன்னு எல்லாம் பார்க்காது… வைச்சி விலாசிடும்” என்றாள் நதியா!

சாரதி அப்போது காலையில் அவள் நடந்து கொண்ட விதத்தை எண்ணிக் கொண்டபடி,

“அப்போ உங்க அக்கா ஒரு லேடி அர்னாலாடு ன்னு சொல்லு” என்றவன் கேலி செய்து சிரிக்க,

“மெய்யாலுமே அக்கா அப்படித்தான் மாமா… உங்களுக்கு தெரியுமா… ஒரு தடவை எங்க அப்பன்” என்று அமலா பேச ஆரம்பிக்க,

நதியா அவள் கரத்தை கிள்ளிவிட்டாள். அமலா புரிந்து கொண்டு அமைதியாகிட

அதன் பின் நதியா சாரதியிடம்,

“அது… அது வந்து மாமா… அப்பா குடிச்சிட்டு வருவாரா… அக்காவுக்கு பிடிக்காது… சில நேரத்தில அவரை கூட அடிச்சிருவா… அதைத்தான் அம்மு” என்று தடுமாறியபடி சொல்லிவிட்டு அமலாவிடம் கண்காண்பித்து எச்சரித்தாள்.

சாரதி அவர்கள் ரகசிய சம்பாஷனையை கவனியாமல்,

“ஓ… உங்க க்காவுக்கு குடிச்சா அவ்வளவு கோபம் வருமா?”என்று வியப்பாய் கேட்டவனுக்கு ஆண் வேடத்தில் இருந்த போது அவளையே ஒரு முறை அவன் குடிக்க அழைத்தது நினைவுக்கு வர,

சிரிக்க தொடங்கியவன்தான். அவன் தன சிரிப்பை நிறுத்துவதற்கே சில நிமிடங்கள் பிடித்தது.

“என்னாச்சு மாமா?… எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க?” என்று அம்மு கேட்க சாரதி தன் சிரிப்பை பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டு,

“ம்ஹும்… ஒண்ணும் இல்ல” என்று மழுப்பிவிட்டான்.

“இல்ல இன்னாவோ இருக்கு” என்று அமலா கேட்க,

“ப்ச்… அத விடுங்க… வாங்க ரெண்டு பெரும் சாப்பிடலாம்” என்றவன் சொல்ல இருவரும் மேலே பார்த்து, “அக்கா” என்க,

“சரி… போய் கூப்பிடுங்க?” என்றான் அவன்.

மாடி படிக்கட்டு ஏறி மேலே அறைக்கு வீராவை அழைக்கச் சென்ற அமலா,

சில நொடிகளில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கீழேவர,

“அக்கா… எங்க அம்மு” என்று கேட்டாள் நதியா.

“வராதாம்… கோபமா கீதாம்” என்று அமலா வருத்தமாய் சொல்ல,

“சரி அப்போ வாங்க… நம்ம சாப்பிடுவோம்” என்றான் சாரதி.

“இல்ல மாமா அக்காவை வுட்டுட்டு” என்று இருவரும் தயங்க,

“ஏன் ? இன்னைக்கு ஒரு நாள் என் கூட சாப்பிட கூடாதா?” என்று சாரதி கேட்க இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சங்கடப்பட்டுவிட்டு சம்மதமாய் தலையசைக்க அவன் முகத்தில் புன்னகை ஒளிர்ந்தது.

மூவரும் டைனிங் டேபிளில் அமர முத்து அவர்களுக்கு உணவுகளைப் பரிமாற ஆயுத்தம் செய்து கொண்டிருந்தான்.

சாரதி அப்போது அமலாவையும் நதியாவையும் பார்த்து, “ரெண்டு பெரும் சொல்லவே இல்லயே… புது ஸ்கூல் எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துது?” என்று கேட்க,

உடனடியாய் அமலாவின் முகம் வாட்டமுற்றது.

அவள் இறங்கிய தொனியில், “ப்ச் அல்லாரும் இங்கிலீஷ்லையே பேசறாங்க… ஒண்ணும் புரிய மட்டேங்குது” என்று சொல்லி முகம் சுணங்க,

“ஹ்ம்ம்… என் க்ளஸ்ல கூட அல்லாம் பெரிய பெரிய வூட்டு பசங்களா இருக்காங்க…எனக்கு அவங்ககிட்ட அல்லாம் பேசவே பயமா இருக்கு” என்று நதியாவும் வருத்தப்பட்டாள்.

சாரதி மெல்லிய நகைப்போடு அவர்களை ஆழ்ந்து பார்த்தவன்,

“முதல ரெண்டு பெரும் ஓர் விஷயத்தை புரிஞ்சிக்கோங்க… நாம நமக்கு பெஸ்ட்டா இருந்தா மட்டும் போதும்… சுத்தி இருக்கிறவங்க இப்படி இருக்காங்க… இத பண்றாங்கன்னு யோசிசிற்றுந்தோம்.. நம்மால எதையுமே சாதிக்க முடியாது… நாம நம்மோட இலக்கை பத்தி மட்டும் யோசிச்சாதான்… அதை அடைய முடியும்… ஜெயிக்க முடியும்” என்றான்.

“இன்னா மாமா சொல்ல வர்றீங்க… ஒண்ணும் புரியலையே” என்று அமலா கேட்டு குழப்பமாய் நெற்றியை தேய்க்க நதியாவின் முக பாவனையும் கிட்டத்தட்ட அதேதான்.

“ஓகே… புரியிரமாரி உங்களுக்கு நான் ஒரு கதை சொல்றேன்” என்று சாரதி சொன்ன மறுகணம்

“ஹ்ம்ம்… சொல்லுங்க சொல்லுங்க” என்று இருவரும் படுஆர்வத்தோடு கேட்கவும்,

“முதல சாப்பிடுங்க சொல்றேன்” என்றான்.

“முதல நீங்க சொல்லுங்க மாமா”

“சரி… மகாபாரதம் படிச்சிருக்கீங்களா?… பாண்டவர்கள் கெளரவர்கள் பத்தி தெரியும்லே”

“படிக்கல… டிவில பாத்திருக்கோம்” என்றாள் நதியா.

“ஓகே… அப்போ நான் நேரடியா கதைக்கே வந்திடிறேன்” என்று சொல்லி அவர்களை நோக்கியவன்,

“இந்த பாண்டவர்கள் கெளரவர்கள் ரெண்டு பேருக்கும் துரோனாச்சாரியார்தான் டீச்சர்…அவர் ரொம்ப திறமைசாலி … அவங்க எல்லாரும் குருகுலத்தில ஒண்ணா அவர்கிட்ட படிச்சிட்டிருந்த சமயத்தில… ஒரு இன்சிடன்ட் நடந்துச்சு… அதாவது… த்ரோனாச்சாரியார் அவங்க எல்லாரையும் கூப்பிட்டு… அவர் கத்து தந்த வில்வித்தையில டெஸ்ட் வைச்சாராம்…

அங்கிருந்த ஒரு பெரிய மரத்தில இருந்த கிளையில ஒரு பறவை பொம்மையை வடிவமைச்சு… அதோட கண்ணனுக்கு மட்டும் வித்தாயசமா கலர் பண்ணி இருந்தாராம்…

அப்புறம் அவர் கௌவரவர்கள் பாண்டவர்களை அந்த இடத்துக்கு வர வைச்சி… அவங்கள்ல ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அந்த மரத்தில இருந்த பறவையோட கண்ணனுக்கு குறி பார்க்க சொன்னாரம்…

முதலில தர்மன் வந்தான்… துரோனாச்சாரியார் அவன்கிட்ட உன் கண்ணனுக்கு என்ன தெரியுதுன்னு கேட்க… அவன் உடனே எனக்கு அந்த மரம் தெரியுது… அதோட இலைகள் அப்புறம் பழங்கள் எல்லாம் தெரியுது அதுல ஒரு பறவை தெரியுதுன்னு சொல்ல… துரானாச்சாரியார்… நீ வேலைக்காக மாட்ட… போயிருன்னு அனுப்பிட்டு…

அடுத்ததா துர்யோதாணனை கூப்பிட்டாரு… அவனும் தர்மனை போலவே அதே பதில்தான் சொன்னான்… அவனையும் போனு சொல்லிடாரு… அப்புறம் பீமன் வந்தான்…அவனும் சொல்லி வைச்ச மாறி அதே பதிலை சொல்ல… துரானாச்சாரியாருக்கு செம்ம கடுப்பாயிடுச்சு… அவனையும் நீ வேஸ்டு போன்ட்டாரு…

அடுத்ததாதான் நம்ம ஹீரோ அர்ஜுனன் என்ட்ரி… அவன்கிட்ட துரோனாச்சாரியார் அதே கேள்வியை கேட்க… அவன் மட்டும் வித்தியாசமா ஒரு பதிலை சொன்னான்…

அதாவது… எனக்கு அந்த பறவையோட கண்ணு மட்ட்ட்டும்தான் தெரியுதுன்னு சொன்னா… துரானாச்சாரியார் உடனே அவன்கிட்ட நீ வில்லை விடு அர்ஜுனான்னு சொன்னாரு… அர்ஜுனன் வைச்ச குறி தப்பல… கரெக்ட்டா அந்த பறவையோட கண்ணுல அடிச்சான்…

அப்படித்தான் நம்மலும் இருக்கனும்… மத்தவங்க பார்வைக்கு நம்ம எப்படி இருக்கோம்… என்னவா இருக்கோம்… இட் டஸ்ன்ட் மேட்டர்ஸ்… நம்மோட இலக்கு எதுவோ… அது மட்டும்தான் நம்ம கண்ணுக்கு தெரியனும்…அத நோக்கி நம்ம போயிட்டே இருக்கணும்” என்றவன் சொல்லி முடிக்க நதியாவும் அமலாவும் தட்டில் பரிமாறப்பட்ட உணவில் ஒரு பருக்கையை கூட உண்ணாமல் அவனையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தனர்.

“ஏய்! கதை முடிஞ்சிடுச்சும்மா… சாப்பிடுங்க” என்று சொல்லி சாரதி நகைக்க,

அமலாவும் நதியாவும் இயல்பு நிலைக்கு வந்து, “நீங்க செம்ம மாமா” என்று பாராட்ட

வீரா அப்போது பார்த்து தங்கைகளை தேடி அறையிலிருந்து வெளியே வந்தாள்.

அதுவும் சாரதியை அவர்கள் பாராட்டி கொண்டிருப்பதைக் கேட்டபடி!

அந்த நோடியே வீராவிற்கு கோபம் சரமாரியாய் ஏற,

“அம்மு…. நதி….” என்று மாடியில் நின்றபடி அவர்களைச் சத்தமாய் அழைத்தாள்.

மூவரும் அவளை நிமிர்ந்து நோக்க,

“சாப்பிட்டது போதும்… மேலே வாங்கடி” என்றாள் சாரதியை பார்த்து முறைத்துக் கொண்டே!

“அவங்க இன்னும் சாப்பிடேவே இல்ல” என்று அவர்களுக்காக பதிலுரைத்தான் சாரதி.

“அதெல்லாம் பரவாயில்ல… மேல வாங்க” என்று வீரா தன் தங்கைகளைப் பார்த்து அதிகாரமாய் உரைக்க,

நதியாவும் அமலாவும் இருக்கையிலிருந்து எழுந்து கொண்டனர்.

“நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க… அவ என்ன பன்றான்னு நான் பார்க்கிறேன்” என்று சாரதி சொல்ல,

“இப்ப வர்றீங்களா இல்லையா?!” என்று வீரா மீண்டும் கோபமாய் கேட்டாள்.

“சாரி மாமா…. அக்கா அப்புறம் ரொம்ப கோபப்படும்” என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் சென்றுவிட சாரதியின் சீற்றம் அதிகரிக்க, அவன் பார்வை வீராவை ஏறிட்டது.

அவள் அலட்சியமாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே செல்ல பார்க்க,

சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தள்ளிவிட்டு சீற்றமாய் எழுந்தவன், “ஏ நில்லுறி” என்று ஆவேசமாய் கத்தி கொண்டே படிக்கெட்டுக்களை நாலெட்டில் தாண்டி மேல்தளத்திற்கு வந்து அவளை வழிமறித்து,

“என்னடி நினைச்சிட்டிருக்க உன் மனசில? ரொம்பத்தான் ஓவரா போயிட்டிருக்க… ” என்று கேட்டான்.

“என் தங்கச்சிங்களதானே நான் கூப்பிட்டேன்… உனக்கு இன்னாய்யா வந்துது” என்று சொல்லியவள் அவனை ஒரு பொருட்டாய் மதியாமல் கடந்து அறைக்குள் புகுந்துவிட்டாள்.

சாரதியின் முகம் கடுகடுவென மாறியது. ஆனாலும் தன் கோபத்தை விழுங்கிக் கொண்டு அவன் தன அறைக்குள் சென்றுவிட,

வீரா அவள் அறைக்குள் இருந்த தங்கைகளை தீவிரமாய் முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவர்களோ அச்சத்தோடு, “கோச்சிக்காதே க்கா…. இனிமே இப்படி பண்ண மாட்டோம்” என்று கெஞ்சலாய் உரைத்தனர்.

“கப்சிப்னு இரண்டு பேரும் இப்ப படுத்து தூங்கிறீங்க… இல்லன்னா பின்னிடுவேன்” என்று வீரா மிரட்டவும் அந்த இரு சகோதிரிகளும் அவசரமாய் போர்வையை மொத்தமாய் மூடி படுத்து கொண்டனர்.

ஆனால் அவர்கள் தூங்காமல் போர்வைக்குள் நெளிந்து கொண்டிருக்க, “இன்னாத்துக்குடி… தூங்காம உள்ளே கொடாஞ்சின்னு இருக்கீங்க” என்று கேட்க,

“பசிக்குது க்கா” என்று அமலா வயிற்றைப் பிடிக்க, “ஆமா க்கா” என்று நதியாவும் எழுந்தமர்ந்தாள்.

வீரா அவர்கள் இருவரையும் யோசனையாய் பார்த்து கொண்டிருக்க, “அக்கா வா க்கா சாப்பிடலாம்” என்றிழைத்தனர்.

“நான் வரல… நீங்க வேணா போய் சாப்பிடுங்க” என்று அவள் முகத்தை இறுக்கமாய் வைத்து கொண்டு சொல்ல,

“போ க்கா… நீ வரலன்னா நாங்களும் போ மாட்டோம்” என்றனர்.

வீரா அவர்களைக் கடுப்பாய் பார்க்க அமலாவும் நதியாவும் மீண்டும் படுத்து கொண்டனர்.

அவள் மனம் கேட்காமல் கீழே சென்று தங்கைகளுக்காக உணவை எடுத்து வந்து,

அவர்களை எழுப்பி அவள் ஊட்டிவிட

அவர்கள் இருவரும் வீராவிற்கும் பதிலுக்கு ஊட்டிவிட்டனர்.

வீராவின் விழிகளில் கண்ணீர் பெருகியது.

அவர்கள் மூவரும் மாறி மாறி ஊட்டிக் கொள்ள அமலா அப்போது, “ஆமா க்கா … மாமா சாப்பிட்டாரா?” என்று கேட்கவும்,

வீராவின் முகம் சில நொடிகள் யோசனையாய் மாறி மீண்டது.

“எல்லாம் சாப்பிட்டிருப்பாரு… நீங்க சாப்பிடுங்க” என்றாள் பெருமூச்செறிந்து!

அமலாவும் நதியாவும் அவளின் விட்டேற்றியான பதிலைக் கேட்டு பார்வையாலேயே அதிர்ச்சியைப் பரிமாறி கொண்டனர். ஆனால் அது குறித்து அவளிடம் அப்போதைக்குக் கேட்டு கொள்ளவில்லை.

வீராவும் மேலே எதுவும் அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அவர்களை விரைவாய் சாப்பிட வைத்துப் படுக்க செய்தாள்.

ஆனால் அவளோ உறங்க முடியாமல் அவர்கள் சாப்பிட்ட தட்டைக் கீழே வைக்கப் போகும் சாக்கில் சமையலறையிலிருந்த முத்துவிடம்,

“அவர் சாப்பிட்டாரா ண்ணா ?” என்று கேட்க,

அவளை அதிசயித்துப் பார்த்தவன் , “இல்ல ம்மா… கோச்சிகிட்டு மேலே எழுந்து போனவர்… அப்புறம் வரவே இல்ல” என்றான்.

வீரா யோசனையாய் நின்று விட முத்து அவளிடம், “சாப்பாடு போட்டு தரவாம்மா… சார் க்கு எடுத்துட்டு போறீங்களா?” என்று கேட்க,

“இல்ல இல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவள் முன்னேறி நடந்து செல்ல அப்போது சாரதியே படியிறங்கி வந்து கொண்டிருந்தான்.

இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காதது போல் கடந்து செல்ல அவனோ வாசலை நோக்கிப் போகவும் அவன் கையிலிருந்த பேகை பார்த்து துணுக்குற்றவள்,

அவன் பின்னோடு இறங்கிவந்து, “இந்நேத்திக்கு…எங்க ?” என்று தயக்கத்தோடு கேட்டுவிட்டாள்.

அவளை திரும்பி எகத்தாளமாய் பார்த்தவன்,

“ஹ்ம்ம்… எனக்கு செம்ம டென்ஷன்… முடியல… அதான் ரிஸார்ட்டுக்கு போறேன்” என்று சொல்ல அவளுக்கு ஏன்டா இந்த கேள்வியை கேட்டுத் தொலைத்தோம் என்றானது.

அவள் மௌனமாய் அறை நோக்கித் திரும்பி நடக்க, அவனும் தன் வழியே திரும்பி நடந்தவன் மேலே செல்லாமல்

“வீரா” என்றழைக்க அவள் திரும்பி அவனை யோசனையாய் பார்த்தாள்.

“நீ வெட்டியாதனே இருக்க… பேசாம வா …ரெண்டு பெரும் ஒண்ணா போவோம்” கேலி நகைப்போடு அவன் கேட்க

அவளுக்கு கோபம் கனலாய் ஏறியது. அது அவளின் முகத்திலும் அப்பட்டமாய் பிரதிபலிக்க,

சாரதி புன்னகை ததும்ப, “ஏ… நீ பாட்டுக்கு தப்பா நினைச்சிக்காதே… நான் உன்னை டிரைவராத்தான் கூப்பிடிறேன்” என்றவன் இடைவெளி விட்டு, மேலும் தொடர்ந்தான்.

“நீதான் பொண்டாட்டியா கூப்பிட்டா வர மாட்டியே” என்றவன் சொல்ல அவள் அவனை எரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“வரல்லானா இட்ஸ் ஓகே… எனக்கு ஒண்ணும் நஷ்டமில்ல… நீ போ… உன் தங்கிச்சிங்க வேற தனியா இருப்பாங்க” என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட,

“பராவாயில்ல… நானும் வர்றேன்… அஞ்சே நிமிஷம்… தங்கச்சிங்க கிட்ட சொல்லிட்டு வந்துடிறேன்” என்றபடி படிக்கெட்டில் விறுவிறுவென ஏறி சென்றவள்,

அவள் சொன்னது போல மீண்டும் ஐந்து நிமிடத்தில் திரும்பியும் வந்தாள்.

அவனிடம், “சாவி கொடுங்க” என்றவள் தன் கரத்தை நீட்ட,

அவன் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.

“இன்னாத்துக்கு சார் இப்படி யோசிக்கிற… ஒ! நான் பொண்டாட்டியா வரனோன்னு நினைசிக்கிட்டியா … சேச்சே! நானும் டிரைவரா…த்தான் வரேன்னு சொன்னேன்” என்று சொல்லி அவனைப் பார்த்து எள்ளலாய் உதடிற்குள்ளேயே அவள் நகைக்க,

‘தில்லுனா தில்லுடி உனக்கு…கூட வரேன்னா சொல்ற…வாடி… இன்னைக்கு உன்னை வைச்சி செய்றேன்… இந்த சாரதி யாருன்னு உனக்கு காண்பிக்கிறேன்’ என்று மனதிற்குள் சவால்விட்டு கொண்டே சாரதி சாவியை அவளிடம் தூக்கி வீச அதனை அவள் பிடித்து கொண்டாள்.

 

error: Content is protected !!