Home Blog

ithayamnanaikirathey-29final

0

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 29

‘என்ன கேட்டாலும்?’ என்ற விஷ்வாவின் கேள்வியின் பதில் இதயா அறிந்திருந்தாலும், அவன் கூற கேட்க வேண்டும் என அவள் மனம் துடித்தது.

“எனக்கு இதயா வேணும். இதயா… இதயா… இதயா…” அவன் கூறிக்கொண்டே இருக்க, புயலென பாய்ந்து காற்று புகவும் இடைவெளி இல்லாமல் அவனை கட்டிக்கொண்டாள் இதயா.

“நாம்ம டைவர்ஸ் வரைக்கும் போயிருக்கோம்” அவன் அவள் இதய துடிப்பை அனுபவித்தபடியே கூற, “அது என்ன வரைக்கும்?” அவள் அவனை சீண்ட, “மேலே சொல்ல எனக்கு ஒரு நாளும் மனசு வராது இதயா” அவன்  குரலில் வருத்தம் மிதமிஞ்சி இருந்தது.

“எனக்கும் தான். சொல்ல வேண்டாம். நீயும் சொல்லாத.” அவளும் அவனுக்கு இசை பாடினாள்.

“அப்படியா சொல்ற?” அவன் கேட்க, “வெத்து காகிதம் நம்மளை பிரிச்சிரும்மா என்ன?” இதயா கேட்டாள்.

“நேத்து ராத்திரி மௌனராகம் படம் பார்த்தியா?” அவன் அவளை சீண்ட, இதயா கோபமாக விலகி செல்ல எத்தனிக்க, அவன் அவர்கள் இறுக்கத்தை மட்டுமே அதிக படுத்தினான்.

“கோபப்பட்டாலும், சண்டை போட்டாலும் இனி இப்படி தான்” அவன் அவர்கள் நிற்கும் கோலத்தை கண்களால் காட்ட, அவள், ‘க்ளுக்…’ என்று சிரித்தாள்.

சிரிப்போடு யோசனை பரவவும், “ஓய்… என்ன?” அவன் கேட்க, “நம்ம வாழ்க்கையில் இப்படி நடந்திருக்க வேண்டாம்” அவள் கூற, “ஏதோ தப்பு பண்ணிட்டோம். இனி பண்ணமாட்டோம்” அவன் கூற அவள் புன்னகைத்து கொண்டாள்.

அந்த புன்னகைக்கு பின், ஏதோ கவலை சஞ்சலம் இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவன் தோண்டி துருவவில்லை.

‘நாட்களின் போக்கில் அவளே கூறுவாள்’ என்று மௌனித்து கொண்டான்.

சில நாட்களுக்கு பின் மாலை பொழுது.

“அம்மா, நான் வெளிய போகணும்” தியா பிடிவாதமாக கூறினாள்.

“தியா நோ. வெளிய கொரோனா இருக்கு. நாம போக முடியாது.” இதயா மறுப்பு தெரிவித்துவிட, “அப்பா…” தியாவின் குரல் உயர்ந்தது.

“அப்பா, நாங்க வெளிய போகணும்” விஷ்வாவுக்கு தியாவிடமிருந்து கட்டளை பறந்தது.

“அஜய் கேட்கவே இல்லை. நீ அவனை உன் கூட கூட்டு சேர்க்காத.” இதயா தியாவின் முன் கோபமாக நின்றாள்.

“நான், அப்பா கிட்ட பேசிக்குறேன்.” தியா, விஷ்வாவின் முன் கோபமாக நின்றாள்.

“அம்மா, சொல்றது தானே சரி. கொரோனா இருக்கு. நாம்ம எப்படி வெளிய போக முடியும்?” அஜய் நியாயம் பேச, “அவன் சொல்றதை கேட்குறான். நீ கேட்க மாட்டேங்குற தியா” இதயா தியாவை மிரட்டினாள்.

“அப்பா…” தியா சிணுங்க, “விஷ்வா, நீ அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குற” இதயா விஷ்வாவிடம் பாய்ந்தாள்.

தியாவை தூக்கி கொண்டு, ‘இ… த… யா…’ அவன் கண் சிமிட்டினான்.

“சின்ன குழந்தை. அவ தேவை இல்லாம சேட்டை பண்ண மாட்டா. தேவை இல்லாமல் எதுவுமே கேட்க மாட்டா. அப்படி தானே தியா?” அவன் தன் மகளை கொஞ்சினான்.

“எஸ் அப்பா.” தியா தன் அப்பாவோடு ஹைஃபை செய்து கொண்டாள்.

“தியா எது வேணுமினாலும் உன்கிட்ட கேட்கலாமுன்னு நினைக்குறா. இது நல்லாயில்லை” இதயா கோபம் கொள்ள, “தியா, அம்மா ஓகே சொன்னா தான்” விஷ்வா உதட்டை பிதுக்கினான்.

“நீங்க அம்மாவை ஒகே சொல்ல வைங்க” தியா, விஷ்வாவிடம் கோரிக்கை வைக்க, “எல்லா நாளும் முடியாது. இன்னைக்கு பண்றேன். சரியா?” அவன் மகளிடம் பேரம் பேசினான்.

“இதயா, எத்தனை நாள் தான் குழந்தைங்க வீட்டிலேயே இருப்பாங்க?” அவன் இதயாவிடம் கேள்வி கேட்க, “கொரோனா போகுற வரைக்கும்” பட்டென்று வந்தது அவள் பதில்.

“கொரோனா போகாது. அது போகவே கூடாதுன்னு, நானும், அண்ணாவும் சாமி கிட்ட கேட்டுருக்கோம்” அவளை விட அதீத வேகத்தில் கூறினாள் தியா.

தியாவை மடியில் இருத்தி கொண்டு, “தியா, அம்மா அப்பா எப்பவும் சேர்ந்தே தான் இருப்போம். அண்ணாவும், உன் கூட தான் இருப்பான். கடவுள் கிட்ட கொரோனா சரியாகட்டுமுன்னு தான் கேட்கணும். ஓகே?” விஷ்வா வினவுகையில், அஜய் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு, அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ் அப்பா” என்றான்.

தியாவும், அஜயும் அருகே இருக்கையில் இந்த உலகை வென்ற எண்ணம் விஷ்வாவிற்குள். இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருந்த இதயாவின் இதயம் நிறைவாக உணர்ந்தது.

“நீங்க கிளம்புங்க. கொஞ்ச நேரத்தில் வெளிய போவோம்” அவன் கூற, குழந்தைகள் வெளியே செல்ல தயாராயினர்.

இதயா, சமையலறை வேலையில் மூழ்க, அவள் அலைபேசி ஒலித்தது. “ஹே, நித்திலா சொல்லு. எப்படி இருக்க? எப்படி போகுது வேலை எல்லாம்?” என்று இதயா கேட்க, “அதை ஏன் கேட்குற. நம்ம வீட்டு ஆளுங்க இவ்வளவு சாப்பிடுறாங்கன்னு, இந்த லாக் டவுனில் தான் தெரியுது. சமைத்தே என் பிராணன் போய்டும் போல” நித்திலா நிறுத்த, இதயா “க்ளுக்…” என்று சிரித்தாள்.

“பாத்திரமோ, நம்ம வீடு கிச்சேன்ல இருந்து மட்டும் தான் வருதா? இல்லை பக்கத்துக்கு வீட்டுக்காரங்களும் போடுறாங்களான்னு தெரியலை அவ்வளவு விழுது” நித்திலா புலம்ப, இதயாவின் கண்களோ தனக்கு உதவி செய்து கொண்டிருந்த விஷ்வாவின் மேல் விழுந்தது.

விஷ்வாவின் கைகள் மட்டும் தான் வேலை செய்து கொண்டிருந்ததே ஒழிய, அவன் கண்கள் அவள் விழிகள், கன்னங்கள் என்று அவளை அளந்து கொண்டிருந்தது.

“உன் வீட்டுக்காரரை கொஞ்சம் ஹெல்ப் பண்ண சொல்லு. வீட்டு வேலை ரெண்டு பேரும் ஷேர் பண்ணி செஞ்சா தான் வசதியா இருக்கும்” இதயா ஆலோசனை கூற, “அது சரி, எல்லாரும் விஷ்வா மாதிரி இருப்பாங்கள்ளா?” என்று நித்திலா இழுக்க, இதயா ஸ்தம்பித்து நின்றாள்.

“என்ன சத்தத்தை காணும் இதயா? எல்லாரும் விஷ்வா மாதிரி தேடி வந்து உதவி செய்வாங்களா?” அவள் கேட்க, “உனக்கு விஷ்வாவை பத்தி எப்படி தெரியும் நித்திலா?” என்று இதயா கேட்க,”மொத்த ஆஃபீஸ்க்கும் தெரியும். அது விஷ்வாவின் பார்வையே சொல்லுச்சு” என்று நித்திலா கேலி பேசினாள்.

இதயா முகத்தில் வெட்கம் சூழ விஷ்வா புருவம் உயர்த்தினான்.

“எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும். பாஸ், அவர் ஒய்ஃப் பத்தி சொல்லலியான்னு நீ ஆர்வமா கேட்டியே?அன்னைக்கே கண்டுபிடிச்சிட்டேன். நீயே சொல்லுவேன்னு பார்த்தா சொல்லவே இல்லை. நெக்ஸ்ட் மந்த் வீடு காலி பண்ண போறீங்கன்னு கேள்விப்பட்டேன். அது தான கூப்பிட்டேன்” நித்திலா கூற, “காலி பண்ணும் பொழுது சொல்லலாமுன்னு இருந்தேன்.” இதயா சமாளித்தாள்.

“சரி சரி… உன்னவர் கூப்பிடுவார். கிளம்பு கிளம்பு. இங்கையும் குழந்தைங்க எதையோ உருட்டுறாங்க. அப்புறம் கூப்பிடுறேன். பை… பை…” நித்திலா, பேச்சை முடித்துக்கொள்ள, விஷ்வா குறும்பாக புன்னகைத்தான்.

“விஷ்வா, நித்திலா தான் பேசினா. எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.” அவள் கூற, அவன், “உம்…” கொட்டினான்.

“நீ ஆபீஸ் வந்தப்ப எல்லாரும் உன்னை சைட் அடிச்சாங்க. வயசு வித்தியாசம் இல்லாம.” அவள் கூற, அவன், “உம்…” கொட்டினான்.

“என்ன உம் கொட்டுற?” அவள் கேட்க, அவளை இடையோடு அணைத்து, “உன்னை தவிர எல்லாருக்கும் அன்னைக்கே என் மனசு தெரிஞ்சிருக்கும். உன்னை தவிர எல்லாரும் என்னை அன்னைக்கு சைட் அடிச்சாங்க” அவன் கூற, “இதுல பெருமை வேறையா?” இதயா சிடுசிடுத்தாள்.

“இல்லை, வருத்தம் தான்.  உலகமே என்னை பார்த்தாலும், நீ பார்க்குற மாதிரி ஆகுமா?” அவன் குரல் குழைந்தது.

“நீ அஜய் கிட்ட ஸ்ட்ரிக்டா இருக்கிற மாதிரி தியா கிட்ட இருக்க மாட்டேங்குற. தியாவுக்கு ரொம்ப செல்லம் கொடுக்காத” அவள் பேச்சை மாற்ற, “தியா ரொம்ப குட்டி பொண்ணு. அவளுக்கு அப்படி என்ன வயசு ஆகுது?” அவன் தன் மகளுக்கு வக்காலத்து வாங்கினான்.

“நீ வயசை தப்பு தப்பா குறைச்சி சொல்லுற” அவள் கூற, “அப்படியாவது நம்ம பிரிவின் காலம் என் மனசளவில் குறையுமுன்னு தான்” அவன் கூற, அவள் மௌனித்து கொண்டாள்.

“அப்பா, போலாமா?” தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க, இதயா விஷ்வாவை முறைத்து பார்த்தாள்.

“எங்கயும் போக வேண்டாம். சும்மா வீட்டுக்கு கீழ போய், யாரும் இல்லாத இடத்தில் விளையாடிட்டு வந்திருவோம். பசங்களுக்கும் வைட்டமின் டி கிடைக்கனுமில்லை. சுத்தமான காற்று, சன் லைட் வேணும் இதயா. வந்து கபசுர குடிநீர் குடிசிருவோம். சால்ட் வாட்டெர் காகில் பண்ணிருவோம்.” அவன் கூற, அவள் சம்மதமாக தலை அசைத்தாள்.

அனைவரும், அபார்ட்மெண்ட் உள்ளே இருக்கும் புல்வெளிக்கு செல்ல, அஜய் அவன் செய்த சிறிய பறக்கும் தட்டு போல் விமானம் வைத்து தியாவுக்கு விளையாட்டு காட்டினான்.

விஷ்வா, இதயா இருவரும் அவர்களை பார்த்து கொண்டிருந்தார்கள்.

“என் ட்ரொன் எப்படி?” அஜய் கேட்க, “அண்ணா சூப்பர்” என்று தியா தன் தமையனை பாராட்டினாள்.

சிறிது நேரம் விளையாடிவிட்டு, தியா தந்தையின் மடியில் அமர்ந்து கொள்ள, “அண்ணா, நீ என்னவாகப் போற?” தியா கேட்க, “அஸ்ட்ரோனட்…” என்றான் அஜய்.

“தியா, நீ என்னவாகப்போற?” அஜய் கேட்க, “நானும் உன்னை மாதிரியே அஸ்ட்ரோனட்…” தியா கூற, “தியா, அண்ணா அஸ்ட்ரோனட் ஆக முடியும். ஆனால்…” என்று இதயா பேச, “இதயா…” விஷ்வாவின் குரல் கர்ஜித்தது.

“தியா, என் ட்ரொன் பறக்குது. வா பிடிக்க போகலாம்” அஜய் துள்ளி ஓட, தியாவும் அவன் பின்னே ஓடினாள்.

“என்ன பேசுற இதயா?” அவன் அவளை கண்டிக்க, “ஏன் அவ மனசில் ஆசை வளர்க்கணும். கல்யாணத்துக்கு முன்னாடி படிச்சா தான் உண்டு. அப்புறம் நினைச்சாலும் படிக்க முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே? கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு கனவுன்னு இருக்க கூடாதுன்னு சொல்ல வேண்டியது தானே?” அவள் நேரடியாக கேட்டாள்.

‘இது தான், அன்று இதயாவின் புன்னகைக்கு பின் இருக்கும்  யோசனையா?’ அவன் புன்னகைத்துக் கொண்டான்.

“ஏன் இதயா நீ படிக்கலியா? உன் கனவை நீ நனவாக்கலை?” அவன் கேள்வி கேட்க, “அதுக்கு நான் இழந்தது அதிகம் விஷ்வா. எவ்வளவு சண்டை. எவ்வளவு வலி? என் வீட்டில் கூட எனக்கு சப்போர்ட் இல்லை. வாழ்க்கையே போச்சுன்னு பேசினாங்க. நான் தனியா, தியாவை கூட்டிட்டு வந்து எவ்வளவு கஷ்டபட்டேன்னு தெரியுமா விஷ்வா?” அவள் மீண்டும் கேள்வியையே தொடுத்தாள்.

“நீ செஞ்சது சரி தான் இதயா. நீ படிச்சது சரி. உன் கனவு சரி. உன் போராட்டம் சரி. ஆனால், நீ செஞ்ச முறை தான் தப்பு. என்னை விட்டுட்டு போயிருக்க கூடாது. தப்பு உன் மேல மட்டுமில்லை. என் மேலையும் இருக்கு. நாம பொறுமையா பேசி முடிவு எடுத்திருக்கலாம் இதயா. அவ்வுளவு தான்.” அவன் பேசினான். அவள் எதுவும் கூறவில்லை.

“அத்தை, மாமா, அம்மா, அப்பா எல்லாரும் என்னை மட்டும் தானே தப்பு சொல்றாங்க. நான் படிக்க நினைச்சது தானே தப்புன்னு சொல்றாங்க.” அவள் குற்ற உணர்ச்சியோடு பேசினாள்.

“அவங்க போன ஜெனரேஷன் இதயா. அவங்களை மாத்த முடியாது. சில விஷயங்களை பேசி புரிய வைக்கவும் முடியாது. நான் உன்னை தப்பு சொல்லலை. என் மனைவி அவள் கனவை சாதிச்சதுல எனக்கு பெருமை. கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாமுன்னு வருத்தம் மட்டும் தானே ஒழிய… ஆனால், என் பெருமை துளி கூட குறையலை” அவன் கூற, அவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“உன் கூட நான் துணை நிற்கல்லைன்னு நான் இப்ப வரைக்கும் வருத்துப்படுறேன். இத்தனைக்கும், நான் துணை நிற்க கூடாதுன்னு கூட நினைக்கலை. ஆனால், ஏனோ…” அவன் மேலே பேச முடியாமல் திணறினான்.

“நீ பெருமைன்னு சொன்ன பார்த்தியா இது போதும் எனக்கு. நான் எவ்வளவு நாளும் போராடுவேன் என் வாழ்க்கையில்” இதயா கம்பீரமாக கூறினாள்.

“நிச்சயம் பெருமை தான் இதயா. என் மனைவி, என் பொண்ணுக்கு சிறந்த முன்னொடி. உன் கனவு, உன் முயற்சி இதெல்லாம் தான் தியாவுக்கு முன்னோடி.” அவன் கூற, இதயாவின் கண்கள் மலர்ந்தன.

“என் அம்மா, இப்படி இருந்தாங்க. நானும் இப்படி இருக்கணும்னு பெண் குழந்தைங்க நினைக்கணும். எங்க அம்மா படிச்சி அவங்க வாழ்க்கை சமையலறையோடு முடிஞ்சி போச்சு. அவங்க கனவு கருகி தான் போச்சு. என்னதும் கருகி தான் போகும்முன்னு அவங்க நினைச்சிற கூடாதில்லையா?” அவன் கூறினான்.

“டேய், உன் பொண்ணுக்குன்னா எப்படி ஜால்ரா போடுற? கேடி…”அவள் வம்பிழுக்க, “நான் என் பொண்டாட்டிக்கே ஜால்ரா போடுவேன். மகளுக்கு போட மாட்டேன்னா?” அவன் பெரிதாக சிரித்தான்.

“உன் ஆசை, கனவோட முக்கியத்துவம் என்னன்னு இங்க வரும் பொழுது கூட தெரியலை. ஆனால், தியாவை பார்க்கும் பொழுது எனக்கு புரியுது. ஷி இஸ் ஸோ ஸ்மார்ட். அவள் கனவுகளை, நாம தொலைக்க விடலாமா? அப்படி தானே உன்னதும்.” அவன் பேசி முடிக்கையில், அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“தேங்க்ஸ் விஷ்வா” அவள் கூற, “எதுக்கு இதயா?” அவன் புரியாமல் அவளை பார்த்தான்.

“என்னை தேடி, நீ தானே வந்த. இல்லைனா, கனவில் ஜெயித்தும் நான் வாழ்க்கையில் தோத்திருப்பேனே விஷ்வா. என் மகளுக்கும், மகனுக்கும் நானே தப்பான உதாரணமாக்கிருப்பேனே” அவள் கூற, “ச்…ச…” என்று அவன் இடைமறித்தான்.

“மனைவியின் கனவை எத்தனை கணவன்மார்கள் புரிந்து கொள்வார்கள். காலம் தாழ்ந்தாலும், எல்லா சூழ்நிலையையும் கடந்து, கனவுன்னு போனவ அப்படியே போன்னு சொல்லாம, என்னை தேடி வந்திருகியே விஷ்வா?” அவள் நிதர்சனத்தை கூறினாள்.

“அப்படி எல்லாம் விட்டுருவோமா? நான் இருக்கேன்னில்லை. அஜய் பாவம் என்னை மாதிரி.  என் மனைவியை குட்டி சுண்டக்காய் கிட்ட இருந்து காப்பாற்ற ஓடியே வந்துட்டேன்” அவன் பெருங்குரலில் சிரிக்க,

“என்ன சிரிக்குறீங்க?” என்று தியாவும், அஜயும் கேட்டு கொண்டே வர, “அஜய் அப்பா மாதிரி நல்லா படிச்சு வேலைக்கு போவான்னு அம்மா சொன்னாங்க. நான், தியா அம்மா மாதிரி நிறைய படிச்சு வேலைக்கு போவான்னு  சொன்னேன். சரி தானே?” என்று விஷ்வா கேட்க, “எஸ்… அஜய் அப்பா மாதிரி… தியா அம்மா மாதிரி…” என்று இருவரும் விஷ்வாவோடு ஹைஃபை செய்து குதுகலித்தனர்.

‘குழந்தைகளுக்கு நாம் தான் முன்னோடி. அனைத்திலும்… எங்கும், எதிலும் தவறிவிட கூடாது.’ என்று இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

அந்த பார்வையில் புரிதலும், அன்பும் வழிந்தோடியது.

அவன் பார்வை புரிதலை பரிமாறுகையில் அவள் எண்ணம் அவனோடு  பயணித்தது. அவன்  பார்வை அன்பை பரிமாறுகையில், அவள் இதயம் அவன் அன்பில் நனைந்து நெகிழ்ந்து  அவனுக்காக எதையும் செய்யவே துடித்தது.

அன்றிரவு, வெளியே சென்று அனைவரும் உள்ளே நுழைய குளித்து விட்டு உணவை முடித்து கொண்டு உறங்க சென்றனர்.

குழந்தைகள் அவர்கள் அறையில் உறங்கிவிட, இதயா குளித்துவிட்டு இரவு உடையில் வர, அவன் இதழ்கள், “பிட் ரொமான்டிக்…” என்று முணுமுணுத்தது.

அவள் கண்கள் அவனை ஆர்வமாக பார்க்க அவள் மனதில் உள்ள சஞ்சலம் மறைந்து விட்டதை அவன் மனம் புரிந்து கொண்டது.

“நாம ஃபோட்டோ எடுப்போமா?” என்று கேட்டுக்கொண்டே, அவள் எதையோ தேட அவள் தேடிய பொருள் கிடைக்கவில்லை.

இதயாவின் பதட்டம் அதிகரிக்க, “என்ன தேடுற இதயா? உன் பொக்கிஷம் நான் இங்க இருக்கேன்” அவன் கேலி செய்ய, “இல்லை விஷ்வா, நான் இத்தனை நாள் இங்க தான் பத்திரமா வச்சிருந்தேன்” அவள் குரல் உடைய தயாரானது.

விஷ்வா அவன் சட்டை பையிலிருந்து கைகளை நீட்ட, “கேடி, எப்ப எடுத்த?” என்று அவள் முறைக்க, “என்னைக்கு பார்த்தேனோ, அன்னைக்கே எடுத்துட்டேன்” அவன் முன்பு பரிசுபொருளாய் கொடுத்த இதய வடிவ ரகசிய கேமரா.

“உன்னை…” அவள் அவன் காதை திருக, அவன் அதை படம் பிடித்து கொண்டான்.

“ஹௌ ரொமன்டிக்?” அவன் வினவ, “ஹைலி ரொமன்டிக்…” அவள் சிணுங்க, அவன் அவள் சிணுங்களுக்கு முற்று புள்ளி வைத்தான்.

அவள் அவன் வசம் இடம்மாற, அவன் ரசிக்க… அவள் சிவக்க… அவன் சிரிக்க… அவன் மென்மையாக பாடினான்.

“இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே…”

அவன் அவள் முகம் பார்த்து பாட, அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

“முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்…”

அவள் முகம் நாணத்தை வெளிப்படுத்த, அவன் தன் விரல் கொண்டு நாணத்தை உரிமை கொண்டாட, அவள் கண்களோ பல உணர்வுகளை வெளிப்படுத்தியது.

“காணும்போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்…”

அவன் அவள் விழிகளின் உணர்வுகளை உள்வாங்கி கொண்டே அவன் குரல் அன்பை வெளிப்படுத்தியது. அந்த அன்பில் அவள் இதயம் நனைந்தது.

காலப்போக்கில் நெகிழ்வதும், அன்பில் நனைவதும் தானே இதயம். அந்த சிறிய இதயத்தை அன்பால் நிரப்புவோமே! இதயம் அன்பில் நனையட்டுமே!

அவர்கள் இதயம் அன்பில் நனைகிறது!

அன்பில் மட்டுமில்லை, அவர்கள் இதயம் இப்பொழுது தனிமையில் அன்பில் நனைய விழைகிறது.

அனைவரின் இதயமும் அன்பில் நனையட்டும்… அன்பில் நனையட்டும்… அன்பில் நனையட்டும்… என்று வாழ்த்தி விடைப்பெறுவோம்.

இப்படிக்கு,

அகிலா கண்ணன்.

 

இதயத்தின் ஓசைதான் காதல்!

0

அத்தியாயம் 10

“ண்ணா நில்லு” கீர்த்தனா வீட்டில் இருந்து தாத்தாவை அழைத்து வந்து அவர் அறையில் விட்டு, தன் அறைக்குக் கிளம்பியவனைத் தடுத்தாள் ஷிவானி.

“என்ன?”

“உக்காரு நான் உன்கிட்ட பேசணும்?”

“நீ வர வர ரொம்பப் பெரிய மனுஷியா பேசுறியே?” வைஷ்ணவி அருகில் இல்லாதலால் கொஞ்சம் தெளிவாக யோசித்துப் பேச,

“நீ உக்காரு ஃபஸ்ட்” அவனைக் கையைப் பிடித்து அருகில் அமர வைத்தாள் ஷிவானி.

“என்ன சொல்லு?”

“ஒன்னு கேட்பேன் கரெக்ட்டா பதில் சொல்லணும்”

‘இவ என்ன கேட்க போறா?’ யோசனையுடன் அவளைப் பார்க்க,

“நீ அண்… சாரி… கீர்த்தனா கூடப் பேசினியா?”

“இல்ல… நான் அவகிட்ட பேசல”

“ஏன்… ஏன்… பேசல?”

“பேச தோணல பேசல”

“அதுதான் கேட்குறேன் ஏன் தோணல?”

“இப்படி எல்லாம் கேட்டா எப்படி ஷிவானி”

“சரி அந்தப் பொண்ணுக்கு ஏன் சரின்னு சொன்ன?”

“தோணிச்சு சரின்னு சொன்னுனேன். இப்போ நீ என்ன சொல்ல வார?”

“இல்ல நீ அவங்ககிட்ட பேசிருந்தா அவங்க உன்கிட்ட எல்லாம் சொல்லிருப்பாங்க தானே. இப்போ பாரு நமக்கு எவ்வளவு மன கஷ்டம்” மன கஷ்டம் என்பதை அவனைப் பார்த்து அழுத்தி கூறினாள் அவள்.

அவளது பேச்சு தொனி அறிந்தவன் முகத்தைச் சுருக்கி, தலையைக் குனிந்து கொண்டான்.

‘என்னடா இவன் அந்தப் பிள்ளையை நினைச்சு ரொம்ப ஃபீல் பண்ணுறானே’ என்பதாய் இவள் யோசிதிருக்க,

அவளிடம் சத்தம் இல்லாமல் போக, அவளை ஏறிட்டு பார்க்க, அவளது யோசனையான முகத்தைக் கண்டவன் மெதுவாகச் சிரித்துக் கொண்டான்.

தன்னை அவள் கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்டான் ஸ்ரீ.

“என்ன ஷிவானி என்ன யோசனை?”

“ஒன்னும் இல்லண்ணா, நீ அவங்க கிட்ட பேசிருந்தா முன்னாடியே நாமளே கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். இனி எல்லாரும் எப்படிச் சொல்லுவாங்க ஸ்ரீக்கு பார்த்த பொண்ணு எவன் கூடவோ ஓடிப்போச்சாம் சொல்லுவாங்க இதுல உன்னைதான் நிறையப் பேசுவாங்க” என,

டக்கென்று கோபம் வர, “நீங்க தானே பார்த்தீங்க, நீங்க தானே பேசுனீங்க, இப்படி என்னைச் சொன்னா என்ன அர்த்தம்? நான் பார்த்தேன் புடிச்சிருந்திச்சி ஓகே சொன்னேன்.

நான் ஓகே சொன்னா நீங்க அப்படியே வந்துடுவீங்களா? அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க மாட்டீங்களா?” கோபத்துடன் வெடிக்க,

“ஏன் ஸ்ரீ, அவ மேல கோபப்படுற?” அறையில் இருந்து வெளியே வந்தார் ஸ்ரீ கரண்.

“நீங்க நல்லா விசாரிக்கலியா தாத்தா?”

“விசாரிச்சேன் ஸ்ரீ… நல்ல பெரிய இடம் அதுதான் ரொம்ப விசாரிக்கல. என்னை மன்னிசுடுப்பா ஸ்ரீ”

“என்ன தாத்தா இதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டுட்டு விடுங்க… இதை அப்படியே விட்டுடுங்க” என்றவன் அறைக்கு என்றான்.

“ஏன் ஷிவானி அவன் ரொம்பக் கோபபட்டுட்டானா?”

“அவன் மனசுல என்னமோ ஓடுது தாத்தா? ஆனா என்னன்னுதான் தெரியல”

“என்ன ஷிவானி?”

“தெரியல தாத்தா… அவன் மனசுல ஏதோ வச்சிட்டுதான் பேசுறான்”

“என்னம்மா, அந்தப் பொண்ணை அவனுக்கு ரொம்பப் பிடிச்சதா, உன்கிட்ட சொன்னானா?”

“அப்படிலாம் சொல்லல தாத்தா, ஆனா பிடிச்ச மாதிரியும் நடந்துகிறான். பிடிக்காத மாதிரியும் நடந்துகிறான். ஒண்ணும் புரியல”

“சரி… விடு இனி நல்லா விசாரிச்சு பொண்ணு பார்போம்” கூறி அறைக்குச் செல்ல,

‘இவன் வேற பொண்ணு பார்க்க விடுவானா’ யோசனையாக அமர்ந்திருந்தாள் ஷிவானி.

“நீ என்ன நினைச்சுட்டு இருக்க ஸ்ரீ, ஷிவானி கவனிக்கிற அளவுக்கு நடந்துகிட்டு இருக்க நீ?

“என்ன வைஷ்ணவி இப்படிதான் என்னை உன் கொலுசில் பிடிச்சு வச்சிருப்பியா? உன்னைப் பார்த்தான் நான் நானாவே இருக்க மாட்டேங்கிறேன்.

எப்போ உன்னைப் பார்த்தேனோ அந்த நொடியில் இருந்து நான் என்னையே மறந்து உன்னை ரசிக்கிறேன்.

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு அந்தக் கீர்த்தனாவை பார்த்த பிறகுதான் மண்டையில் அடிக்குற போல ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்னு’ உண்மை புரியுது.

அப்போகூட எப்படி உன் மேல எனக்குக் காதல் வரலாம்னு நான் நினைச்சுட்டு இருந்தா, மறுபடியும் அதே கீர்த்தனா வந்து சொல்லுறா காதலுக்கு என்னடா தகுதி மடையான்னு.

என்னதான் பெரிய இவனா இருந்தாலும், காதல்ன்னு வந்துட்டா எல்லாரும் மடையன்னு உரக்க சொல்ல யாராவது வாறாங்க,

எனக்குக் கீர்த்தனா வந்த மாதிரி, எல்லாருக்கும் யாராவது ஒருத்தர் வந்து சொல்லவேண்டி இருக்கு.

நான் உன்னை அளவுக்கு அதிகமா விரும்பியும், தகுதி அது இதுன்னு சப்பை காரணம் காட்டி உன்னை இழக்க நினைச்சேன்.

ஆனா, நீ எனக்குதான்னு எனக்குப் புரிய வைக்கத்தான், கீர்த்தனாவை வீட்டைவிட்டு போகவைத்தானா அந்த இறைவன்” என்பதாய் வைஷ்ணவியின் போட்டோவை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீ.

அந்த நேரம் சிவா வீட்டுக்கு வந்திருக்க,

“என்ன சிவா?” ஷிவானி அவனைக் கேட்க,

“ஸ்ரீ இல்லையா?”

“இருக்கானே மேல ரூம்ல? கூப்டவா”

“சரி” என்றவன் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டான்.

ஸ்ரீயை அழைக்க ஷிவானி அவன் அறைக்கு வர, அவன் யாரிடமோ பேசுவது போலத் தெரிய கூர்ந்து கவனிக்க, கீர்த்தனா பேர் வர அவளிடம் பேசுகிறானா? என்பதாய் யோசித்துக் கொண்டிருக்க,

காதல் என்ற வார்த்தை வரவும் மேலும் கூர்ந்து கவனிக்க, மீண்டும் மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.

“ண்ணா” என்றபடியே படாரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய,

“என்ன ஷிவானி?” ஃபோனை போர்வைக்குப் பின்னே மறைத்தான் ஸ்ரீ.

“உன்னைச் சிவா கூப்டுறான், வெளிய இருக்கான் போ”

“சரி” என்றவன் அப்படியே எழுந்து செல்ல,

அவன் நகரவும் டக்கென்று அவன் ஃபோன் எடுத்து பார்த்தவள் ஒரு நிமிடம் அதிர்ந்து, பின் சிரித்தாள்.

குழப்பம் எல்லாம் நொடியில் விலக, வேகமாய் அவனின் பின் சென்று ஹால் ஷோபாவில் அமர்ந்துக் கொண்டாள்.

***

காலையில் பெரும் யோசனையுடன் ஸ்ரீ வீட்டுக்கு வந்தாள் வைஷ்ணவி. திருமணம் நின்ற சோகத்தில் இருப்பார்கள் அந்தச் சோகத்தில் போய் நானும் வேலைப் பார்க்க வேண்டுமா? என்பது போன்ற யோசனையுடன் உள்ளே வர,

“குட் மார்னிங் வைஷு” பளிச்சென்று அவளைப் பார்த்துக் கூறினான் ஸ்ரீ.

‘திருமணம் நின்று போன சோகத்தில் இவன் இருப்பான்’ என எதிர்பார்த்திருக்க, அவனுடைய இந்தப் பரிமாணத்தை எதிர்பார்க்கவில்லை அவள்.

அன்று இவருவருக்கும் நடந்த பிரச்சனைக்குப் பிறகு இன்றுதான் ஒழுங்காகப் பேசுகிறான் ஸ்ரீ. மற்ற நேரம் எல்லாம் அவளைப் பார்த்து வேலை சொல்வதோடு நிறுத்திக் கொள்வான்.

இவளும் அவனைக் கண்டு கொள்ளமாட்டாள். நாம நல்லா பேசுனா இவனுக்கு எளக்காரம்தான் வரும் என்றபடியான யோசனையுடன் அவளும் விலகியே செல்வாள்.

இன்று பளிச்சென்று காலை வணக்கம் கூறவும் திருப்பி இவனுக்குச் சொல்லனுமா? வேண்டாமா? என இவள் யோசித்துக் கொண்டிருக்க,

“என்ன வைஷு வெளியவே நிக்குற, உள்ளே வரலாமா இல்லை அப்படியே போயிடலாமான்னு யோசிக்கிறியா? இனி நீயே போறதா நினைச்சாலும் நான் உன்னை விடமாட்டேன்” ஸ்ரீயை பார்த்தப்படியே கூற,

இடத்தை விட்டு நகர்ந்தான் ஸ்ரீ. கொஞ்ச நேரத்தில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல,

ஷிவானி ஜாதகத்தை எடுத்துக் கொண்டு வெளியே சென்றார் ஸ்ரீ கரண்.

ஸ்ரீக்கு ஜாதகம் இல்லாததால் அவளுடையதை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவளுக்குத் திருமணம் எப்பொழுது நடக்கும், இவளுக்கு முன்னே வீட்டில் ஏதாவது சுபகாரியம் நடக்குமா? என்பதைக் கேட்க எண்ணி அவர் கிளம்பிவிட்டார்.

ஸ்ரீக்கு சீக்கிரமே திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுவாக மனதில் எழுந்தது.

***

பதினோரு மணிக்கு போல் வீட்டுக்கு வந்த ஸ்ரீக்கு தலை வலிப்பது போல் இருக்க,

“ஷிவானி தலை வலிக்கிது, ஒரு காஃபி எடுத்திட்டு வாயேன்” ஹால் ஷோபாவில் கண்களை மூடி அமர்ந்தபடி கூறினான் ஸ்ரீ.

வெளியே வந்து எட்டிப் பார்த்தாள் வைஷ்ணவி. அவனைப் பார்க்க மிகவும் தலை வலிப்பது போல் இருக்கத் தானே அவனுக்குக் காஃபி போடலாம் என எண்ணி வெளியே வந்தாள்.

அவன் அமர்ந்திருந்த ஷோபாவை கடந்து செல்ல,

எப்பொழுதும் அவனை இம்சிக்கும் ஜல்… ஜல்… ஓசை அவன் காதில் இசைக்க, டக்கென்று கண்களைத் திறந்தவன் முன்னே தாவணி தரையை உரச நடந்து சென்றாள் வைஷ்ணவி.

பதினோரு மணிக்கு போல் அவன் சாப்ட வருவதும் அவளுக்குத் தெரியுமாதலால் அவளே அவனுக்குத் தோசை வார்க்க நினைத்தாள்.

சமையலை சீக்கிரமே முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டார் சமையல்காரம்மா. ஏதோ விசேஷமாம். மதியம் உணவும் சமைத்து வைத்துவிட்டார். இனி இரவுக்கு வந்துவிடுவதாகக் கூறி சென்றார் அவர்.

பின்னாடியே அவனும் எழுந்து சென்றான்.

‘நிறைய நாள் யோசித்திருக்கிறான், அவள் தனக்குச் சரி வருவாளா என்று?’ இன்று அவனது வீட்டு சமையல் அறையில் அவளைப் பார்க்க,

‘இவளை விட உனக்கு யாருடா சரிவருவா?’ அவன் மனம் எப்பொழுதும் போல அவனிடம் கேள்வி எழுப்ப, அவளையே பார்த்திருந்தான்.

தாவணி பாவடையைத் தூக்கி இடுப்பில் சொருக்கியிருந்தாள். இடுப்பு வேறு அவனுக்குப் பளிச்சென்று காட்சியளிக்க டக்கென்று கண்களை மேலே தூக்கினான்.

கூந்தலை பின்னலிட்டிருக்க, முதுகில் வேர்வைத் துளிகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து கொண்டிருந்தது.

இந்தத் தோற்றம் இவனுக்கு மிகவும் பிடித்திருக்க அப்படியே பார்த்திருந்தான்.

கொஞ்சம் நகர்ந்து அங்கிருந்த கிளாஸ் ஒன்றை வைஷு கையில் எடுக்க, ஜல் என்ற ஓசை மிக மிக மென்மையாய் ஒலிக்க,

அவனது கண்கள் அவனையும் அறியாமல் அவளது கொலுசில் நிலைத்தது.

பல வருடங்களாய் காண நினைத்த ஓசை. இன்று கண்ணுக்குப் புலப்பட்டது!

சின்னச் சின்ன முத்து வைத்த கொலுசுதான் அணிந்திருந்தாள். அதன் கூடவே இன்னொன்று பல வண்ண கலரில் மின்ன கூர்ந்துப் பார்த்தான் ஸ்ரீ.

வெள்ளி மாதிரியான பாசி மணி பல வண்ணங்களில் ஜொலித்தது, அந்த ஓரத்தில் வித்தியாசமான ஓசையை எழுப்பும் சின்ன மணி முத்து.

வெள்ளி கொலுசுடன், இந்த ஒற்றை மணி முத்தும் சேர்ந்து வித்தியாசமான ஜல் ஜல் ஓசையை ஏற்படுத்தியிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

இவன் நின்று இவளையே பார்த்திருப்பதை அவள் கவனிக்கவேயில்லை.

காஃபியை டம்ளரில் ஊற்றியவள், தோசையை எடுத்து வைக்கத் தட்ட எடுக்க நகர,

அவளின் கவனத்தைத் திருப்ப, “க்கும்” மெதுவாகச் சத்தம் கொடுக்க,

பதறி திரும்பி தடுமாறி விழ போனவளை கைநீட்டி அவளது கையைப் பிடித்து நேராக நிற்க வைக்க, அவள் கையில் இருந்த தட்டு நங்கென்று டடுமாறி கீழே விழுந்தது.

சற்று முன் அவன் பார்த்தும் பார்க்காமல் விலகிய அவளது இடை ‘என்னைக் கொஞ்சம் பாரேன்’ என்பதாய் பளிச்சென்று தெரிய,

கண்களை வலுக்கட்டாயமாக அவளது முகத்தை நோக்கி திருப்பினான்.

முகத்தில் வழிந்த வேர்வை ‘என்னைக் கொஞ்சம் துடைத்துதான் விடேன்’ என்பதாய் அவனை நோக்க,

கடினபட்டு முகத்தைச் சாதாரணமாய் வைத்து அவளை நோக்க,

தட்டு தடுமாறி நேராக நின்றவள் அவனை எதிர்பார்க்காததால், டக்கென்று தூக்கி வைத்திருந்த தாவணியை நேராக எடுத்து விட,

“இங்க என்ன பண்ணுற என்றான்” இப்பொழுதான் வந்தது போல்.

“அதுவந்து ஷிவானி தலைவலிக்குதுன்னு சொல்லி இப்போதான் போய்ப் படுத்தா, நீங்க வேற தலை வலிக்குதுன்னு சொன்னீங்கதானே அதுதான் காஃபி போடலாம்னு வந்தேன்” என்றாள் மெதுவாக மென்னு விழுங்கி.

“குட் மார்னிங் சொன்னா திருப்பிச் சொல்லமாட்டியா?” என்றான் அவளிடம் மேலும் பேச எண்ணி.

“…” வைஷ்ணவி அமைதியாய் நிற்க,

“வேற யாரு குட் மார்னிங் சொன்னாலும் திரும்பி சொல்லுறதும் சொல்லாததும் உன் இஷ்டம். ஆனா நான் சொன்னா திருப்பிச் சொல்லணும் சரியா?”

‘சரி’ என்பதாய் தலையாட்ட,

“என்ன சரியா?” என்றான் மீண்டும்.

“சரிங்க பாஸ்” என்றாள் வேகமாய்.

மனம் கொஞ்சமாய் இலகுவாகியது ஸ்ரீக்கு.

‘பொண்ணு ஓடி போனதுல இவனுக்கு ஏதாவது ஆகிட்டா?’ என்ற யோசனையுடன் அவனையே பார்த்து நிற்க,

“என்னாச்சு?”

‘ஒன்னும் இல்லை’ என்பதாய் அவள் தலையாட்ட,

“என்னாச்சு” என்றான் மீண்டும்,

“ஒன்னும் இல்லை பாஸ். இந்தாங்க காஃபி” அவனிடம் நீட்ட,

“ஏதாவது கேட்டா வாயை திறந்து பேசு” என்றபடி காஃபியை கையில் வாங்க,

‘பொண்ணு ஓடி போனதுல இவனுக்கு என்னமோ ஆச்சு’ முடிவே செய்து கொண்டாள் வைஷு.

‘பேசாமல் இவளையே திருமணம் செய்து கொள்ளலாமா?’ இவளையே பார்த்தபடியே அவன் யோசித்திருக்க,

“ண்ணா” என்றபடி ஷிவானி வந்தாள்.

தட்டு விழுந்த சத்ததில் எழுந்து வந்துவிட்டாள் ஷிவானி. சமையல் அறையில் இருவரையும் பார்க்க அங்கையே நின்றுக் கொண்டாள்.

இவரும் என்ன செய்கிறார்கள் எனப் பார்க்க, இவன் காஃபி குடிக்க, அவள் தோசை வார்பதைக் கண்டவள் வேகமாய் வந்திருந்தாள்.

“சாரி… வைஷு என்னைக் கூப்ட்டிருக்கலாம் தானே… நீ போ… நான் பார்த்துகிறேன்” என்றவள் அவளை அனுப்பித் தோசையைத் தானே சுட,

செல்லும் வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ.

வைஷ்ணவியைப் பார்த்திருந்த ஸ்ரீயையே இவள் பார்த்திருக்க,

‘என்னைக் கொஞ்சம் பாருங்களேன்’ என்பதைப் போலக் கல்லில் தோசை தீஞ்சுக் கொண்டிருந்தது.

‘டீவி சீரியல் பார்த்தாதாண்டா தோசையைத் தீய விடுறீங்க… சைட் அடிக்கிறதை பார்த்தா கூடவா தீய விடுவீங்க?’ தோசை புலம்பி காய்ந்து கருவாடாய் சுருண்டுப் போனது.

TT6B

தனிப்பெரும் துணையே – 6B

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே வந்தான் ரிஷி அவன் நண்பர்களுடன். இவர்களை பார்த்ததும்… அருகில் வர, கொஞ்சம் அதிர்ந்தாள் ப்ரியா.

பின் சுதாரித்துக்கொண்டு… “ஹாய் ரிஷி…” என்று புன்னகைக்க, செழியனும் திரும்பி ரிஷியை பார்த்தான்.

“இளா. ஹி இஸ் ரிஷி என்னோட லீட். ரிஷி ஹி இஸ் இளஞ்செழியன்” என்றாள் கொஞ்சம் தயக்கத்துடன் எங்கே ஏதாவது உளறிவிடுவனோ என்று.

செழியனை பார்த்து புன்னகைத்த ரிஷி… “ஹலோ… இசைப்ரியா உங்கள பத்தி சொன்னா. காங்ராட்ஸ்” என்றவுடன், செழியன் புரியாமல் “தேங்க்ஸ்” என்றான். பின் ரிஷி ப்ரியாவிடம்… “என்ஜாய்” என்றுவிட்டு இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு சென்றான்.

“எதுக்கு அவர் எனக்கு காங்ராட்ஸ் சொன்னாரு?” கேள்வியுடன் அவளை பார்க்க… ‘ஐயோ. எனக்குன்னு இன்னைக்கு வரிசையா ஆப்பு வைக்கறாங்களே. முதல்ல சர்வர் இப்போ ரிஷி’ என நினைத்தாலும்… “நீ யூனிவர்சிட்டி செகண்ட்’ன்னு சொல்லியிருந்தேன். அதுக்கு சொல்லியிருப்பான்” என்றாள் திக்கி தடுமாறி.

“உனக்கிட்ட எதுக்கு என்ஜாய்ன்னு சொல்லணும்?” அடுத்த கேள்வி கேட்க… ‘அடேய் கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி. என்னை கொஞ்சம் யோசிக்கவாவது விடேன்டா’ மனம் வசை பாடினாலும்…

“அவன் எதுக்கு சொன்னான்னு எனக்கு எப்படி தெரியும்? மே பி வேலை செய்யாம கடலை போட்டுட்டு இருக்கேன்ல அத நினைச்சு கூட சொல்லியிருக்கலாம்” என்றாள். இப்போது செழியன் சிரித்தான்.

ஏனோ அவன் சிரிப்பது அவ்வளவு அழகாகத்தெரிந்தது அவளுக்கு. அவனையே பார்த்தாள்.

‘இதுபோல உன்னிடம் சிரித்துக்கொண்டு… பேசிக்கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ ஆசைகொண்ட மனம் அவனுடனான இந்த நெருக்கத்தை ரசித்தது.

அவன் சாப்பிட எதுவும் வேண்டாம் என்று மறுத்த போதும் அவனை வலுக்கட்டாயமாக சாப்பிடச்சொன்னாள்.

படிப்பு பற்றி இருவரும் பேசும்போது…  ‘ஸ்டைபெண்ட் மட்டும் வைத்துக்கொண்டு சமாளிக்க முடியுமா’ என அவள் கேட்டதற்கு…

அவன், “மேனேஜ் பண்ணலாம். வீட்டு ரெண்ட் 16K. அது என்னோட ப்ரோஃபஸர்’ரோட ஓல்ட் அபார்ட்மெண்ட். அதுனால என்கிட்ட அவர் அதிகமா ரெண்ட் கேட்கல. கொஞ்சம் தள்ளி போனா ரெண்ட் கம்மியா இருக்கும் பட் காலேஜ் போக வர செலவு இருக்கும். பக்கத்துலன்னா எப்போ வேணும்னாலும் போய்ட்டு வரலாம்” என்றான்.

“ஆல்ரெடி காலேஜ்ல ஒர்க் இருக்கும். அதுபத்தாதுன்னு படிக்கணும். இவ்ளோ இருக்கப்ப உன்னால எக்ஸ்ட்ரா ஆபீஸ் ஒர்க்’கும் பண்ணமுடியுமா இளா? ரொம்ப ஒர்க்லோட் ஜாஸ்தி இருக்காது?” கனிவுடன் கேட்டாள்.

ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப் என்பது, பல்கலைக்கழகத்தில் வேலை பார்த்துக்கொண்டே படிப்பது. கிட்டத்தட்ட வாரத்தில் இருவது முதல் முப்பது மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். அதில்லாமல் படிப்பு.

ப்ரியா கேட்டவுடன், அவளைப்பார்த்து புன்னகைத்தான் செழியன். பின், “நம்ம நினைச்சது… நம்ம விருப்பப்படறது நடக்கணும்னா, அதுக்கு எவ்ளோ வேணாலும் கஷ்டப்படலாம்” என்றான் அவள் கண்களைப் பார்த்து.

‘படிக்கவேண்டும் என்று எவ்வளவு விருப்புகிறான்’ என நினைத்து அவளும் புன்னகைத்தாள்.

“இப்போவாவது வீட்டுக்கு சொல்ற ப்ளான் இருக்கா” அவள் கேட்க… மறுப்பாக தலையசைத்தான்.

அவள் கொஞ்சம் திடுக்கிட்டாள். சொல்லாமல் எப்படி முடியும் என.

அதை அவன் உணர்ந்துகொண்டதுபோல, “மாஸ்டர்ஸ் எப்படி பண்ணேனோ அதுபோல தான். நான் பணம் தரணும்னு இதுவரை அப்பா எதிர்பார்த்ததில்ல. ஒருவேள இனி தேவபட்டுச்சுன்னா, என்னோட சேவிங்ஸ்ல இருந்து குடுத்துடுவேன்”

“என்ன பார்க்க யாரும் வந்ததில்லை, வரவும் போறதில்ல. எல்லாரும் அவங்க அவங்க வேலை, வாழ்க்கைன்னு பிஸி’யா இருக்காங்க. இன்னமும் நான் அதானி’ல தான் வேலை பார்க்கறேன்னு நெனச்சுட்டு இருக்காங்க. மும்பை வந்ததுகூட தெரியாது. டாடாக்கு மாறினது தெரியாது. உன்னத் தவிர”

“நான் என்ன பண்றேன்னு யாரும் தெரிஞ்சுக்க ஆசைப்படல. பையன் வேல பார்க்கிறான்… கை நிறைய சம்பாதிக்கிறான் அவளோ தான். அவங்கள பொறுத்த வரைக்கும் பையன்னா நல்லா சம்பாதிக்கணும். அது தான் அவனுக்கு அழகு”

இதை சொன்னபோது அவன் கண்கள் நிச்சயமாக விரக்தியை காட்டியது. கைகள் இரண்டையும் நன்றாக சேர்த்துக்கொண்டான்… ஒருவேளை மனதின் நடுக்கம் கைகளில் தெரியக்கூடாது என்பதாலோ?

அதை புரிந்துகொண்டாள் ப்ரியா. அவனின் அந்த முகம் பார்க்க முடியவில்லை அவளால். அவன் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ளவேண்டும் என மனம் துடித்தது. ஆனால் மௌனம் மட்டுமே அங்கு நிலவியது.

அதை தடுத்தார் முன்பு வந்த சர்வர். இருவருக்கும் குடிக்க டீ மற்றும் காபி எடுத்துவந்தவர் ப்ரியாவிடம், “ப்ரியா…. ரிஷி சொன்னாரு… காங்ராட்ஸ்” இருவரையும் ஒரு மாதிரி பார்த்து, புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கு முன் ப்ரியா, ரிஷி மற்றும் அவர்கள் சகாக்களுடன் இங்கு வருவார்கள். ப்ரியா அனைவரிடமும் சகஜமாக பழகுவாள். வேலை பார்ப்பவரில் ஆரம்பித்து, ஹோட்டல் நடத்துபவர் வரை இவளை நன்றாக தெரியும்.

‘இந்த ரிஷியை என்ன செய்ய… என்ன சொல்லி வெச்சானோ’ ரிஷியை உள்ளுக்குள் திட்டிக்கொண்டே செழியனை பார்க்க… அவனும் அவளை பார்த்தான்.

‘ஐயோ இதற்கு என்ன கேள்வி கேட்கப்போகிறானோ கடவுளே’ என நினைத்து திரு திருவென விழித்தாள்.

அதை பார்த்த செழியன், “நான் யூனிவர்சிட்டி செகண்ட் வந்ததை சொல்லியிருப்பார் போல” என்றான் சிரித்துக்கொண்டே காபியை அவள் பக்கம் நகர்த்தி.

‘இது நக்கல் சிரிப்பு மாதிரில இருக்கு’ மனது நினைத்தாலும், வெளியில் அசடு வழிய சிரித்தாள்.

பின் இருவரும் அதிகம் பேசவில்லை என்றாலும், அவனுடன் இருக்கும் நேரம் ரம்மியமாக இருந்தது அவளுக்கு.

சில நிமிடங்கள் கழித்து… அவன் கிளம்புகிறேன் என்று சொன்னபோது… சொல்லமுடியாத அதே வலி அவள் மனதில். விருப்பமே இல்லாமல் அவனை அனுப்பிவைத்தான்.

அன்றே முடிவெடுத்துவிட்டாள். கேட் தேர்வுக்கு தயாராகவேண்டுமென. அது அவ்வளவு சுலபமில்லை என நன்றாக தெரியும்.

இந்தியாவிலேயே மிகப் பிரபலமான IIT’யில் ஒன்று IIT பாம்பே. அதில் சேர்வது என்பது எளிதல்ல. தீவிர பயற்சி வேண்டும்.

வீட்டில் மேல்படிப்பு என்று சொன்னால் ஒத்துக்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே செழியன் சொல்லாமல் படித்துமுடித்தது நினைவிற்கு வர, இப்போதைக்கு யாரிடமும் சொல்லாமல் தேர்வுக்கு தயாராவோம் என முடிவெடுத்தாள்.

தேர்வுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்தாள். தேதிகளை குறித்துக்கொண்டாள்.

எப்பொழுதும் விளையாட்டு மற்றும் துறுதுறுவென இருந்த ப்ரியா, முற்றிலுமாக தன்னை படிப்பில் ஈடுபடுத்திக்கொண்டாள். தேவையில்லாமல் மனம் அலைபாயும் என நினைத்து, செழியனிடம் பேசுவதைக் கூட குறைத்துக்கொண்டாள்.

இதில் அவளுக்கு ஆச்சர்யம் என்னவென்றால், அரிதாக சிலசமயம் அவனிடம் இருந்து மெசேஜ் வரும். அதை பார்க்கும்போது, அவனிடம் சகஜமாக பேசவேண்டும் என்று தோன்றும். பின், அது தன் இலக்கை எட்ட முட்டுக்கட்டையாக இருக்கும் என தவிர்த்துவிட்டாள்.

பலவிதமாக யோசித்து… ஒருவேளை தான் விருப்பப்படும் பிரிவு (course) கிடைக்கவில்லை என்றால், எளிதில் கிடைக்கக்கூடிய மாற்றுப்பிரிவுக்கும் (backup course) தன்னை தயார் செய்துகொண்டாள். 

IITB ‘யில் எந்த ஒரு பிரிவும் கிடைக்கவில்லை என்றால், IIIT புனே அடுத்த ஆப்ஷன் என முடிவெடுத்திருந்தாள்.

நாட்கள் விரைவாக நகர, இரவு பகல், வீடு அலுவலகம் என பாராமல் தன்னை தேர்வுக்கு தயார் செய்துகொண்டாள்.

முதல் தேர்வுக்கான நாளும் வந்தது. அன்று காலையில் வேண்டாத தெய்வமில்லை. அதை முடித்து, சில நாட்கள் கழித்து அடுத்த பிரிவுக்கான தேர்வுகளும் எழுதினாள். ஓரளவு நன்றாகவே எழுதியதை போல உணர்ந்தாள். இருப்பினும் முடிவு வெளிவரும் நாளுக்காக காத்திருந்தாள்.

இப்போதுதான் நிம்மதியாக மூச்சிவிடுவர்தற்கான நேரம் கிடைத்துபோல இருந்தது அவளுக்கு. பழையபடி இல்லையென்றாலும், அவ்வப்போது செழியனுக்கு மெசேஜ் அனுப்ப ஆரம்பித்தாள்.

அடுத்த ஒரு மாதத்தில், தேர்வுக்கான முடிவு வந்தது. அவள் நினைத்ததுபோல அவ்வளவு சுலபமாக கிடைக்கும் என தோன்றவில்லை.

விருப்பட்ட பிரிவு கிடைக்க, அடுத்த சுற்றுக்கான தேர்வு இருந்தது. அதற்கு மும்பை சென்றாகவேண்டும். அதற்கு முதலில் வீட்டில் சொல்லவேண்டும்.

எப்படி என்று யோசித்தபோது, அகிலனிடம் சொல்லிவிட்டு, அவனை அம்மா அப்பாவிடம் பேசச்சொல்வோம் என முடிவெடுத்தாள்.

அதேபோல அகிலனிடம் சொல்ல…. அவன் ஆச்சரியத்துடனும் பெருமையுடனும் “வாவ் குட்டி. சூப்பர் டா… எங்ககிட்டயெல்லாம் சொல்லவே இல்லையே” என குறைபட்டுக்கொள்ள… “சஸ்பென்ஸ்’ஆஹ் இருக்கட்டும்னு தான் ண்ணா” என்றாள் புன்னகைத்துக்கொண்டே.

ஆனால் அவன் கேட்ட அடுத்த கேள்வி, அது அவள் எதிர்பார்த்ததுதான்… இருந்தாலும் அவன் “ஏன்டா இங்க IITல கிடைக்கலையா?” என கேட்டவுடன் கொஞ்சம் தடுமாறினாள்!!!

TT6

தனிப்பெரும் துணையே – 6A

செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம், அவன்…

“இசை… சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட இதை சொல்றதுன்னு யோசிச்சப்ப, உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நான்… எனக்கு PhD பண்ணச்சொல்லி ஆஃபர் வந்துருக்கு. ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப்!” கொஞ்சம் படபடப்புடன் சொன்னான்.

சின்ன வயதிலிருந்து அவளை அனைவரும் ப்ரியா என்றே அழைப்பார்கள். அவளும் அனைவரிடம் தன்னை ப்ரியா என்றே அறிமுகப்படுத்திக்கொள்வாள். ஆனால் இன்று!!!

அவன் இசை என்று அழைத்தது அழகாக இருந்தது. கூடவே ‘அவனுக்கு நடந்த முக்கியமான நிகழ்வை தன்னிடம் பகிர்ந்துகொள்ள தோன்றியுள்ளது. இதுபொதுமே! நான் அவன் மனதில் இருக்கிறேன் என்பதற்கு’ என நினைத்து சந்தோஷத்தின் மிகுதியில்….

“வாவ் இளா… காங்ராட்ஸ். சோ ஹாப்பி ஃபோர் யு” எதேச்சையாக ரிஷியை பார்க்க, அவன் ஒருமாதிரி பார்த்தான் ப்ரியாவை.

இங்கே செழியன் தொடர்ந்தான். “தேங்க்ஸ். நீ ஃபிரீ’யா? கொஞ்சம் பேசலாமா?” என்றவுடன் ப்ரியா இன்னமும் இன்பமாக அதிர்ந்தாள்.

ஒருவேளை ‘ஐ லவ் யு’ என்று சொல்லிவிடுவானோ… என நினைத்து இதயம் படபடக்க… ‘ஹுக்கும் சொல்லிட்டாலும்…’ படபடக்கும் இதயத்தை மூளை நிந்திக்க… தன் எண்ணவோட்டத்தை நினைத்து சிரித்துக்கொண்டே… “சொல்லு இளா” என்று அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரியா.

“நான் டாக்டரேட் பண்ணட்டுமா?” பட்டென அவன் கேட்க, சட்டென ஒரு நொடி அதிர்ந்தாள் ப்ரியா. ‘தன்னிடம் கேட்டு செய்கிறானா?’ என நினைத்து…

“என்கிட்ட போய் கேட்கறாயே” என அவள் சொல்லிமுடிக்கும்முன்…

“என்னால டிசைட் பண்ணமுடியல. ஒரு செகண்ட் ஒப்பீனியன்க்கு தான் உன்கிட்ட கேட்கறேன். இப்போ நான் நல்லா எர்ன் பண்றேன். மாஸ்டர்ஸ்’க்கு அப்புறம், இன்னமும் அதிகமாகும். டாக்டரேட் பண்ணனும்னா என் ஜாப் சக்ரிஃபைஸ் (sacrifice) பண்ணனும். ஆஃபீஸ்ல பாண்ட் (bond) பிரேக் பண்ணனும் இல்ல செர்வ் பண்ணிட்டு வெளிய வரணும். இங்க ஸ்டைபெண்ட் தருவாங்க, பட் நான் வாங்க போற சலரி’ல ஒரு 1/3 தான் ஸ்டைபெண்ட் வரும். ஸம் 40 to 45K. என்னால சமாளிக்க முடியும் ஆனா வீட்ல சொன்னா அப்பா கண்டிப்பா ஒதுக்க மாட்டாரு. மதியத்துல இருந்து காலேஜ்ல இதை பத்தி தான் என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அதான் உனக்கு ரிப்லை பண்ணக்கூட முடியல. படிக்கணும்ன்னு ஆசை இருக்கு ஆனா… மண்டையே வெடிக்குது இசை” மூச்சுவிடாமல் பேசி முடித்தான் செழியன்.

ப்ரியாவின் மனதிலோ… அவன் கடைசியாக சொன்ன ‘மண்டையே வெடிக்குது இசை’ என்ற வாக்கியம் அவளை தாக்கியது .

அவன் குரலில் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது. அவன் இடைவெளி விடாமல் பேசியதை பார்க்கும்போது… தன் சந்தோஷத்தை தன் ஆசையை தன் நிலையை பகிரவேண்டும் என்ற தவிப்பு தான் தெரிந்தது.

“இளா. ரிலாக்ஸ்… ஒன்னொன்னா யோசி. யு வில் கெட் அன் அன்செர்” அவனை முதலில் சாந்தப்படுத்த நினைத்தாள்.

“ஹ்ம்ம்…” அவன் பதில் தர… “சரி ஆஃபீஸ் பாண்ட்’ல என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கு?” அவனிடம் கேட்டாள்.

“ஒன் இயர் ஒர்க் பண்ணனும் இல்லைனா, மாஸ்டர்ஸ்’க்கு அவங்க ஸ்பென்ட் பண்ணத டபுள்’ளா ரிட்டர்ன் பண்ணனும்” என்றான்.

“ஹ்ம்ம்… நீ பாண்ட் சர்வ் பண்ணிட்டு வர்றவரை இங்க வெயிட் பண்ணுவாங்களா?” ப்ரியா கேட்க…

“இல்ல. எக்ஸாம்ஸ் முடிஞ்சு நாலு மாசத்துல ஜாயின் பண்ணனும். இல்ல நெஸ்ட் பேட்ச்’ன்னா ஒரு வருஷம் கழிச்சு” என்றான்.

“சரி. உன் ஆஃபீஸ்’ல சிட்டுவேஷன் சொல்லி ரிலாக்சேஷன் கேட்டு பாரேன். மே பி அவங்க ஒத்துக்கலாம் இல்லையா?”

“கேட்டுட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க”

“ஹ்ம்ம். பாண்ட் பிரேக் பண்ணிடலாமா? பணம் வேணும்னா நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா?”

சில நொடி மௌனத்திற்குப்பின்…

“அவ்ளோ அவங்களுக்கு குடுக்குற அளவுக்கு ஒர்த் இல்ல. அதுக்கு தான் full term சர்வ் பண்ணிடலாம். என்னை ஒரு வருஷம் தானே. எக்ஸாம் எழுதி உள்ள வந்துடலாம்” ஒரு சின்ன தெளிவு கிடைத்ததுபோல் உணர்ந்தான் போல. அவன் பேச்சு ப்ரியாவுக்கு அப்படி தோன்றியது.

“Are you sure?” ப்ரியா கேட்க… ” ஹ்ம்ம் … தேங்க்ஸ்” என்ற பதில் வந்தது. இப்போது அவன் குரல் சீராக இருந்தது போல உணர்ந்தாள் ப்ரியா.

“எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்” ப்ரியா சொன்னவுடன்… “தேங்க்ஸ் வேணாம்னா கிஃபிட் வேணுமா?” அவன் இதை சொன்னவுடன்… ‘ஆஹ் நீயாடா பேசறது’ என முழித்தாள் ப்ரியா.

பின்… “குடுத்தா வேணாம்னு சொல்லவா போறேன்” என்றாள் புன்னகையுடன்.

செழியனிடம் பேசிவிட்டு ப்ரியா உள்ளே வர, ரிஷி அவளை பார்த்தான்.

அவள் இருந்த மனநிலையில், ரிஷியை பார்த்து புன்னகைக்க… அவன், “பரவால்ல. பிளான்’லாம் பலமா தான் இருக்கு. என்ன பாய் ஃபிரண்ட் கூட பேசப்போனேன்னு பொய் சொல்லபோறயா” என்றான் நக்கலாக.

அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்ததால்… “கம்மான் ரிஷி. நான் எதுக்கு பொய் சொல்லணும்? ஹி இஸ் இளஞ்செழியன். அதானி பவர்’ல ஒர்க் பண்ணிட்டு இப்போ மும்பை’ல டாடா பவர்’ல ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. ஹி இஸ் ஆல்சோ டூயிங் ஹிஸ் மாஸ்டர்ஸ். சீக்கிரம் முடிஞ்சிடும்” என சொன்னவள் தற்போது அவனுக்கு கிடைத்த PhD ஆஃபர் வரை சொல்லிமுடித்தாள்.

ரிஷியின் முகத்தில் ஏமாற்றம் வந்து சென்றது. ப்ரியா அதை பார்த்தது கொஞ்சம் வருந்தினாலும், இத்தோடு இதற்கு முடிவு கிடைத்துவிட்டது என நினைத்து வேலையில் மூழ்கினாள்.

சில நாட்களில், செழியனும் அவனுடைய முதுகலை படிப்பை முடித்தான். முடித்து மட்டும் இல்லாமல்… பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடம். இளங்கலையில் விட்ட இடத்தை இங்கு பிடித்தான். அதையும் ப்ரியாவிடம் தான் சொன்னான்.

இப்படி நாட்கள் செல்ல… தீடீரென ஒரு நாள் மாலை நேரம் நெருங்கும்போது அவளை அழைத்தான் செழியன்.

“நீ ஃபிரீ’யா” அவன் கேட்க… “சொல்லு இளா” என்றாள்.

“நான் உன் ஆஃபீஸ் கிட்ட தான் இருக்கேன். மீட் பண்ண முடியுமா?” என கேட்க… மறுபடியும் இன்ப அதிர்ச்சி.

அவள் கேட்ட அதே… “லைன்ல இருக்கயா?” இப்போது அவன் கேட்க… “இதோ… அஞ்சு நிமிஷம்” என்றவள் கால்களும் கைகளும் பரபரத்தது. ஒரு முறை எழுந்ததாள். மறுபடியும் உட்கார்ந்தாள். ரிஷி இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின், அவசரமாக கிளம்பினாள். தரை தளத்தை அடைந்தபோதுதான்… “அட… ஒரு டைம் ரெஸ்ட் ரூம்’ல எப்படி இருக்கேன்னு பார்த்துட்டு கிளம்பியிருக்கலாமோ” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள். கொஞ்சம் படபடப்பாக இருந்தது.

அவளை பார்த்தவுடன், அவன் புன்னகைத்தான். “சென்னை வந்ததை சொல்லவே இல்ல. என்ன திடீர்னு” கொஞ்சம் தடுமாறித்தான் வார்த்தைகள் வந்தது அவளிடமிருந்து.

“ஒரு சின்ன வேலையா இங்க வந்தேன். எங்கயாச்சும் உட்கார்ந்து பேசலாமா?” அவன் கேட்டவுடன், தலையை ஆட்டிவிட்டு அவனை அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றாள்.

“இங்க க்ரவ்ட் (crowd) கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். பட் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். எல்லாரும் நம்ம ஃபிரண்ட்ஸ் தான்” உள்ளே வந்தவுடன், அங்கு வேலைபார்ப்பவரைப் பார்த்து கையசைத்தாள் ப்ரியா.

இருவரும் ஒரு டேபிளில் உட்கார்ந்தனர் எதிரெதிரில். “ஏதாச்சும் சாப்பிட? இங்கே எல்லாமே கிடைக்கும். பஜ்ஜி போண்டா டு பெர்கர்” அவனை பார்த்துக்கேட்க…

“இல்ல எதுவும் வேணாம்” அவன் சொன்னதும்… “ஒருவேள கமரக்கட்டு, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், இஞ்சிமரப்பா இதுமாதிரி ஏதாச்சும்?” குறும்புடன் அவள் கேட்க… அவன் புன்னகையுடன் முறைத்தான்.

அவளும் புன்னகைத்துக்கொண்டே… “அண்ணா… ஒரு காஃபி, ஒரு ப்ளாக் டீ, அப்புறம் ஒரு பிளேட் பஜ்ஜி, பிரெஷ் வெஜ் வீட் சான்விச்”

சில நொடிகள் மௌனத்திற்குப்பின் “வந்த வேல முடிஞ்சதா?” ப்ரியா கேட்க…”ஹ்ம்ம்… முடிஞ்சது. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” அவளைப் பார்த்து புன்னகையுடன் அவன் சொன்னதும்…

‘ஐயோ மறுபடியுமா? லவ் சொல்லப்போறானோ? இல்ல வேறு ஏதாச்சும்? ஏன் இப்படி பார்க்கறான்?’ நெஞ்சம் தடதடவென அடிக்க… ஒரு குரல் அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது.

“சர். இடம் இல்ல. கொஞ்சம் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கறீங்களா?” ஒருவன் ப்ரியா பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி செழியனிடம் கேட்டான்.

செழியன் விழித்து ப்ரியாவை பார்க்க… அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், கண்களாலேயே அவனை வரச்சொன்னாள்.

செழியனும் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்துகொண்டான். இப்போது இருவரும் பக்கத்து பக்கத்தில் கிட்டத்தட்ட இவரின் கைகளும் உரசிக்கொள்ளும் நெருக்கம். ப்ரியாவுக்கு வெளியே சொல்லமுடியாத பல உணர்வுகள் உள்ளத்தில்.

மனதிற்கு நெருக்கமானவனின் அருகாமை, அந்த ஸ்பரிசம், அவனிடம் இருந்து வரும் வூடி சென்ட் (Woody scent) நறுமணம் என அவள் மனம் கொஞ்சம் தடுமாற, மூச்சை மெல்ல உள்ளிழுத்து, தன்னை சமநிலை படித்துக்கொண்டு… அவனை பாராமல் “என்ன சொல்லணும் இளா” சாதாரணமாக இருக்க முற்பட்டாள்.

அப்போது சரியாக ஆர்டர் வந்தடைய… சர்வர் அவளிடம்… “என்ன ப்ரியா… பாய் ஃபிரண்ட்’டா” என சிரித்துக்கொண்டே கேட்க… ‘ஐயோ’ என்றாகிவிட்டது ப்ரியாவிற்கு.

செழியனை பார்த்தாள். அவன் வெறுமனே டேபிளை பார்த்து புன்னகைத்தான். ‘இதற்கு என்னை அர்த்தம்’ என நினைத்தாலும், அதை புறம் தள்ளிவிட்டு… “ரிலேட்டிவ்’ண்ணா” என்றாள் சர்வரிடம்.

“ஒ சரி சரி” என்றுவிட்டு அவர் செல்ல, செழியன் வந்த உணவை அவள் பக்கம் நகர்த்திக்கொண்டே…

“ஆஃபீஸ்ல பெனலிட்டி வேய்வ் அஃப் (waive off) பண்ணி ரிலீவ் பண்ண ஒத்துட்டாங்க. பட் பார்ட் டைம்’ஆஹ் அவங்க கேட்கறப்ப சின்ன சின்ன ஒர்க் செஞ்சு குடுக்கணும்ன்னு கேட்டுட்டாங்க” என்றான் திரும்பி அவளைப்பார்த்து.

“வாவ் இளா. தட்ஸ் கிரேட். இதை தானே முதல்ல சொல்லணும்? இவ்ளோ லேட்டா சொல்வயா?” புருவம் உயர்த்தி கேட்க… அவன் புன்னகைத்தான்.

“அப்புறம் என்ன… இனி Dr. இளஞ்செழியன் ஆயிடுவீங்க. IIT’ல டாக்டரேட். கலக்குங்க” அவளுக்கும் பெருமையாக இருந்தது இதை சொல்லும்போது. அவன் மறுபடியும் புன்னகைத்தான்.

“எதுல ரிசெர்ச் பண்ணலாம்ன்னு ப்ளான்?” அவள் கேட்க… “தெர்மல் அன்ட் ஃப்ளுய்ட் சயின்ஸ்” என்றான்.

இருவரும் அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க…. திடீரென ஒரு யோசனை அவள் மூளையில் பளிச்சிட்டது. அடுத்த திட்டத்திற்கு தயாராகிவிட்டதுபோல அவள் கண்கள் மின்னியது.

‘தன்னால் முடியுமா?’ என மனம் ஒருபுறம் யோசித்தாலும், ‘முடிச்சு காட்டறேன்’ தன்னம்பிக்கையுடன் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்!!!

TT6

தனிப்பெரும் துணையே – 6

செழியனிடம் இருந்து அழைப்பு வந்ததும் அதை எடுத்த ப்ரியாவிடம், அவன்…

“இசை… சாரி ஒர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணதுக்கு. எனக்கு யார்கிட்ட இதை சொல்றதுன்னு யோசிச்சப்ப, உன்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு. நான்… எனக்கு PhD பண்ணச்சொல்லி ஆஃபர் வந்துருக்கு. ரிசெர்ச் அஸிஸ்டன்ஷிப்!” கொஞ்சம் படபடப்புடன் சொன்னான்.

சின்ன வயதிலிருந்து அவளை அனைவரும் ப்ரியா என்றே அழைப்பார்கள். அவளும் அனைவரிடம் தன்னை ப்ரியா என்றே அறிமுகப்படுத்திக்கொள்வாள். ஆனால் இன்று!!!

அவன் இசை என்று அழைத்தது அழகாக இருந்தது. கூடவே ‘அவனுக்கு நடந்த முக்கியமான நிகழ்வை தன்னிடம் பகிர்ந்துகொள்ள தோன்றியுள்ளது. இதுபொதுமே! நான் அவன் மனதில் இருக்கிறேன் என்பதற்கு’ என நினைத்து சந்தோஷத்தின் மிகுதியில்….

“வாவ் இளா… காங்ராட்ஸ். சோ ஹாப்பி ஃபோர் யு” எதேச்சையாக ரிஷியை பார்க்க, அவன் ஒருமாதிரி பார்த்தான் ப்ரியாவை.

இங்கே செழியன் தொடர்ந்தான். “தேங்க்ஸ். நீ ஃபிரீ’யா? கொஞ்சம் பேசலாமா?” என்றவுடன் ப்ரியா இன்னமும் இன்பமாக அதிர்ந்தாள்.

ஒருவேளை ‘ஐ லவ் யு’ என்று சொல்லிவிடுவானோ… என நினைத்து இதயம் படபடக்க… ‘ஹுக்கும் சொல்லிட்டாலும்…’ படபடக்கும் இதயத்தை மூளை நிந்திக்க… தன் எண்ணவோட்டத்தை நினைத்து சிரித்துக்கொண்டே… “சொல்லு இளா” என்று அங்கிருந்து நகர்ந்தாள் ப்ரியா.

“நான் டாக்டரேட் பண்ணட்டுமா?” பட்டென அவன் கேட்க, சட்டென ஒரு நொடி அதிர்ந்தாள் ப்ரியா. ‘தன்னிடம் கேட்டு செய்கிறானா?’ என நினைத்து…

“என்கிட்ட போய் கேட்கறாயே” என அவள் சொல்லிமுடிக்கும்முன்…

“என்னால டிசைட் பண்ணமுடியல. ஒரு செகண்ட் ஒப்பீனியன்க்கு தான் உன்கிட்ட கேட்கறேன். இப்போ நான் நல்லா எர்ன் பண்றேன். மாஸ்டர்ஸ்’க்கு அப்புறம், இன்னமும் அதிகமாகும். டாக்டரேட் பண்ணனும்னா என் ஜாப் சக்ரிஃபைஸ் (sacrifice) பண்ணனும். ஆஃபீஸ்ல பாண்ட் (bond) பிரேக் பண்ணனும் இல்ல செர்வ் பண்ணிட்டு வெளிய வரணும். இங்க ஸ்டைபெண்ட் தருவாங்க, பட் நான் வாங்க போற சலரி’ல ஒரு 1/3 தான் ஸ்டைபெண்ட் வரும். ஸம் 40 to 45K. என்னால சமாளிக்க முடியும் ஆனா வீட்ல சொன்னா அப்பா கண்டிப்பா ஒதுக்க மாட்டாரு. மதியத்துல இருந்து காலேஜ்ல இதை பத்தி தான் என்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. அதான் உனக்கு ரிப்லை பண்ணக்கூட முடியல. படிக்கணும்ன்னு ஆசை இருக்கு ஆனா… மண்டையே வெடிக்குது இசை” மூச்சுவிடாமல் பேசி முடித்தான் செழியன்.

ப்ரியாவின் மனதிலோ… அவன் கடைசியாக சொன்ன ‘மண்டையே வெடிக்குது இசை’ என்ற வாக்கியம் அவளை தாக்கியது .

அவன் குரலில் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது. அவன் இடைவெளி விடாமல் பேசியதை பார்க்கும்போது… தன் சந்தோஷத்தை தன் ஆசையை தன் நிலையை பகிரவேண்டும் என்ற தவிப்பு தான் தெரிந்தது.

“இளா. ரிலாக்ஸ்… ஒன்னொன்னா யோசி. யு வில் கெட் அன் அன்செர்” அவனை முதலில் சாந்தப்படுத்த நினைத்தாள்.

“ஹ்ம்ம்…” அவன் பதில் தர… “சரி ஆஃபீஸ் பாண்ட்’ல என்னென்ன ஆப்ஷன்ஸ் இருக்கு?” அவனிடம் கேட்டாள்.

“ஒன் இயர் ஒர்க் பண்ணனும் இல்லைனா, மாஸ்டர்ஸ்’க்கு அவங்க ஸ்பென்ட் பண்ணத டபுள்’ளா ரிட்டர்ன் பண்ணனும்” என்றான்.

“ஹ்ம்ம்… நீ பாண்ட் சர்வ் பண்ணிட்டு வர்றவரை இங்க வெயிட் பண்ணுவாங்களா?” ப்ரியா கேட்க…

“இல்ல. எக்ஸாம்ஸ் முடிஞ்சு நாலு மாசத்துல ஜாயின் பண்ணனும். இல்ல நெஸ்ட் பேட்ச்’ன்னா ஒரு வருஷம் கழிச்சு” என்றான்.

“சரி. உன் ஆஃபீஸ்’ல சிட்டுவேஷன் சொல்லி ரிலாக்சேஷன் கேட்டு பாரேன். மே பி அவங்க ஒத்துக்கலாம் இல்லையா?”

“கேட்டுட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க”

“ஹ்ம்ம். பாண்ட் பிரேக் பண்ணிடலாமா? பணம் வேணும்னா நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்ணவா?”

சில நொடி மௌனத்திற்குப்பின்…

“அவ்ளோ அவங்களுக்கு குடுக்குற அளவுக்கு ஒர்த் இல்ல. அதுக்கு தான் full term சர்வ் பண்ணிடலாம். என்னை ஒரு வருஷம் தானே. எக்ஸாம் எழுதி உள்ள வந்துடலாம்” ஒரு சின்ன தெளிவு கிடைத்ததுபோல் உணர்ந்தான் போல. அவன் பேச்சு ப்ரியாவுக்கு அப்படி தோன்றியது.

“Are you sure?” ப்ரியா கேட்க… ” ஹ்ம்ம் … தேங்க்ஸ்” என்ற பதில் வந்தது. இப்போது அவன் குரல் சீராக இருந்தது போல உணர்ந்தாள் ப்ரியா.

“எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்” ப்ரியா சொன்னவுடன்… “தேங்க்ஸ் வேணாம்னா கிஃபிட் வேணுமா?” அவன் இதை சொன்னவுடன்… ‘ஆஹ் நீயாடா பேசறது’ என முழித்தாள் ப்ரியா.

பின்… “குடுத்தா வேணாம்னு சொல்லவா போறேன்” என்றாள் புன்னகையுடன்.

செழியனிடம் பேசிவிட்டு ப்ரியா உள்ளே வர, ரிஷி அவளை பார்த்தான்.

அவள் இருந்த மனநிலையில், ரிஷியை பார்த்து புன்னகைக்க… அவன், “பரவால்ல. பிளான்’லாம் பலமா தான் இருக்கு. என்ன பாய் ஃபிரண்ட் கூட பேசப்போனேன்னு பொய் சொல்லபோறயா” என்றான் நக்கலாக.

அவள் கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்ததால்… “கம்மான் ரிஷி. நான் எதுக்கு பொய் சொல்லணும்? ஹி இஸ் இளஞ்செழியன். அதானி பவர்’ல ஒர்க் பண்ணிட்டு இப்போ மும்பை’ல டாடா பவர்’ல ஒர்க் பண்ணிட்டு இருக்காரு. ஹி இஸ் ஆல்சோ டூயிங் ஹிஸ் மாஸ்டர்ஸ். சீக்கிரம் முடிஞ்சிடும்” என சொன்னவள் தற்போது அவனுக்கு கிடைத்த PhD ஆஃபர் வரை சொல்லிமுடித்தாள்.

ரிஷியின் முகத்தில் ஏமாற்றம் வந்து சென்றது. ப்ரியா அதை பார்த்தது கொஞ்சம் வருந்தினாலும், இத்தோடு இதற்கு முடிவு கிடைத்துவிட்டது என நினைத்து வேலையில் மூழ்கினாள்.

சில நாட்களில், செழியனும் அவனுடைய முதுகலை படிப்பை முடித்தான். முடித்து மட்டும் இல்லாமல்… பல்கலைக்கழகத்தில் இரண்டாம் இடம். இளங்கலையில் விட்ட இடத்தை இங்கு பிடித்தான். அதையும் ப்ரியாவிடம் தான் சொன்னான்.

இப்படி நாட்கள் செல்ல… தீடீரென ஒரு நாள் மாலை நேரம் நெருங்கும்போது அவளை அழைத்தான் செழியன்.

“நீ ஃபிரீ’யா” அவன் கேட்க… “சொல்லு இளா” என்றாள்.

“நான் உன் ஆஃபீஸ் கிட்ட தான் இருக்கேன். மீட் பண்ண முடியுமா?” என கேட்க… மறுபடியும் இன்ப அதிர்ச்சி.

அவள் கேட்ட அதே… “லைன்ல இருக்கயா?” இப்போது அவன் கேட்க… “இதோ… அஞ்சு நிமிஷம்” என்றவள் கால்களும் கைகளும் பரபரத்தது. ஒரு முறை எழுந்ததாள். மறுபடியும் உட்கார்ந்தாள். ரிஷி இவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பின், அவசரமாக கிளம்பினாள். தரை தளத்தை அடைந்தபோதுதான்… “அட… ஒரு டைம் ரெஸ்ட் ரூம்’ல எப்படி இருக்கேன்னு பார்த்துட்டு கிளம்பியிருக்கலாமோ” என்றெல்லாம் நினைத்துக்கொண்டு அவன் முன்னே சென்று நின்றாள். கொஞ்சம் படபடப்பாக இருந்தது.

அவளை பார்த்தவுடன், அவன் புன்னகைத்தான். “சென்னை வந்ததை சொல்லவே இல்ல. என்னை திடீர்னு” கொஞ்சம் தடுமாறித்தான் வார்த்தைகள் வந்தது அவளிடமிருந்து.

“ஒரு சின்ன வேலையா இங்க வந்தேன். எங்கயாச்சும் உட்கார்ந்து பேசலாமா?” அவன் கேட்டவுடன், தலையை ஆட்டிவிட்டு அவனை அங்கிருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச்சென்றாள்.

“இங்க க்ரவ்ட் (crowd) கொஞ்சம் அதிகமா தான் இருக்கும். பட் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கும். எல்லாரும் நம்ம ஃபிரண்ட்ஸ் தான்” உள்ளே வந்தவுடன், அங்கு வேலைபார்ப்பவரைப் பார்த்து கையசைத்தாள் ப்ரியா.

இருவரும் ஒரு டேபிளில் உட்கார்ந்தனர் எதிரெதிரில். “ஏதாச்சும் சாப்பிட? இங்கே எல்லாமே கிடைக்கும். பஜ்ஜி போண்டா டு பெர்கர்” அவனை பார்த்துக்கேட்க…

“இல்ல எதுவும் வேணாம்” அவன் சொன்னதும்… “ஒருவேள கமரக்கட்டு, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், இஞ்சிமரப்பா இதுமாதிரி ஏதாச்சும்?” குறும்புடன் அவள் கேட்க… அவன் புன்னகையுடன் முறைத்தான்.

அவளும் புன்னகைத்துக்கொண்டே… “அண்ணா… ஒரு காஃபி, ஒரு ப்ளாக் டீ, அப்புறம் ஒரு பிளேட் பஜ்ஜி, பிரெஷ் வெஜ் வீட் சான்விச்”

சில நொடிகள் மௌனத்திற்குப்பின் “வந்த வேல முடிஞ்சதா?” ப்ரியா கேட்க…”ஹ்ம்ம்… முடிஞ்சது. உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” அவளைப் பார்த்து புன்னகையுடன் அவன் சொன்னதும்…

‘ஐயோ மறுபடியுமா? லவ் சொல்லப்போறானோ? இல்ல வேறு ஏதாச்சும்? ஏன் இப்படி பார்க்கறான்?’ நெஞ்சம் தடதடவென அடிக்க… ஒரு குரல் அவளை தன்னிலைக்கு கொண்டுவந்தது.

“சர். இடம் இல்ல. கொஞ்சம் அந்தப்பக்கம் உட்கார்ந்துக்கறீங்களா?” ஒருவன் ப்ரியா பக்கத்தில் இருந்த இருக்கையை காட்டி செழியனிடம் கேட்டான்.

செழியன் விழித்து ப்ரியாவை பார்க்க… அவள் கொஞ்சம் அதிர்ந்தாலும், கண்களாலேயே அவனை வரச்சொன்னாள்.

செழியனும் தலையை ஆட்டிவிட்டு உட்கார்ந்துகொண்டான். இப்போது இருவரும் பக்கத்து பக்கத்தில் கிட்டத்தட்ட இவரின் கைகளும் உரசிக்கொள்ளும் நெருக்கம். ப்ரியாவுக்கு வெளியே சொல்லமுடியாத பல உணர்வுகள் உள்ளத்தில்.

மனதிற்கு நெருக்கமானவனின் அருகாமை, அந்த ஸ்பரிசம், அவனிடம் இருந்து வரும் வூடி சென்ட் (Woody scent) நறுமணம் என அவள் மனம் கொஞ்சம் தடுமாற, மூச்சை மெல்ல உள்ளிழுத்து, தன்னை சமநிலை படித்துக்கொண்டு… அவனை பாராமல் “என்ன சொல்லணும் இளா” சாதாரணமாக இருக்க முற்பட்டாள்.

அப்போது சரியாக ஆர்டர் வந்தடைய… சர்வர் அவளிடம்… “என்ன ப்ரியா… பாய் ஃபிரண்ட்’டா” என சிரித்துக்கொண்டே கேட்க… ‘ஐயோ’ என்றாகிவிட்டது ப்ரியாவிற்கு.

செழியனை பார்த்தாள். அவன் வெறுமனே டேபிளை பார்த்து புன்னகைத்தான். ‘இதற்கு என்னை அர்த்தம்’ என நினைத்தாலும், அதை புறம் தள்ளிவிட்டு… “ரிலேட்டிவ்’ண்ணா” என்றாள் சர்வரிடம்.

“ஒ சரி சரி” என்றுவிட்டு அவர் செல்ல, செழியன் வந்த உணவை அவள் பக்கம் நகர்த்திக்கொண்டே…

“ஆஃபீஸ்ல பெனலிட்டி வேய்வ் அஃப் (waive off) பண்ணி ரிலீவ் பண்ண ஓத்துட்டாங்க. பட் பார்ட் டைம்’ஆஹ் அவங்க கேட்கறப்ப சின்ன சின்ன ஒர்க் செஞ்சு குடுக்கணும்ன்னு கேட்டுட்டாங்க” என்றான் திரும்பி அவளைப்பார்த்து.

“வாவ் இளா. தட்ஸ் கிரேட். இதை தானே முதல்ல சொல்லணும்? இவ்ளோ லேட்டா சொல்வயா?” புருவம் உயர்த்தி கேட்க… அவன் புன்னகைத்தான்.

“அப்புறம் என்ன… இனி Dr. இளஞ்செழியன் ஆயிடுவீங்க. IIT’ல டாக்டரேட். கலக்குங்க” அவளுக்கும் பெருமையாக இருந்தது இதை சொல்லும்போது. அவன் மறுபடியும் புன்னகைத்தான்.

“எதுல ரிசெர்ச் பண்ணலாம்ன்னு ப்ளான்?” அவள் கேட்க… “தெர்மல் அன்ட் ஃப்ளுய்ட் சயின்ஸ்” என்றான்.

இருவரும் அதைப் பற்றி பேசிக்கொண்டிருக்க…. திடீரென ஒரு யோசனை அவள் மூளையில் பளிச்சிட்டது. அடுத்த திட்டத்திற்கு தயாராகிவிட்டதுபோல அவள் கண்கள் மின்னியது.

‘தன்னால் முடியுமா?’ என மனம் ஒருபுறம் யோசித்தாலும், ‘முடிச்சு காட்டறேன்’ தன்னம்பிக்கையுடன் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்!!!

Pallavan kavithai 8

0

அன்று பொழுது புலர இரண்டு ஜாமங்கள் இருக்கும் போதே அந்த மாட்டுவண்டி காஞ்சியிலிருந்து புறப்பட்டு விட்டது. ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்த அந்த அதிகாலைப் பொழுதில் காளைகளின் கழுத்தில் குலுங்கிய மணிகள் ஜல் ஜல் என்று ஒலி கிளப்ப வண்டி வெகு வேகமாக போய் கொண்டிருந்தது.
யாரிற்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் சாதாரண மாட்டுவண்டியைத் தெரிவு செய்திருந்தாள் பரிவாதனி. வண்டியின் உட்புறமாக மகிழினி அமர்ந்திருக்க அதற்கு அடுத்தாற்போல் பரிவாதனி உட்கார்ந்திருந்தாள். கால்கள் இரண்டையும் வெளியே போட்டுக்கொண்டு உபாத்தியாயர் தங்களை விட்டு தொலைதூரம் போய்க்கொண்டிருக்கும் காஞ்சி மாநகரை வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தார்.
அப்போது வாதாபி அரண்மனையில் உபாத்தியாயர் வேலையில் அமர்த்தப்பட்டிருத்தார் சேந்தன். மாளிகையில் நடக்கும் எந்த பிரச்சனையையும் கண்டும் காணாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று வாழ்ந்த மனிதர்.
இருந்தாலும் இளவரசர் மங்களேசன் மேல் அவருக்கு அலாதியான பாசம் இருந்தது. ஆட்சிப்பொறுப்பை ஏன் இவரிற்குக் கடவுள் கொடுக்கவில்லை என்று சேந்தன் பலமுறை நினைத்ததுண்டு. அவர் வேண்டுகோள் ஆண்டவனிற்குக் கேட்டதோ என்னவோ! மந்திரி பிரதானிகள் அனைவருமாக சேர்ந்து இளவரசரை அரியணையில் அமர்த்தினார்கள். மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதுபோல சேந்தனும் நிம்மதி அடைந்தார்.
ஆனால் அந்த நிம்மதி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சிம்மவிஷ்ணு மகாராஜா வாதாபிக்கு விஜயம் செய்திருந்த போது எதிர்பாரா விதமாக சக்கரவர்த்தி மங்களேசர் படுகொலை செய்யப்பட்டார். நாடே ஸ்தம்பித்து போனது! சேந்தனும் உறைந்து போனார்!
தெய்வாதீனமாக குழந்தை பரிவாதனி உயிர் தப்பிய போது சிரிப்பதா அழுவதா என்றே அவரிற்குப் புரியவில்லை. ஆனால் குழந்தையை வளர்ப்பதற்காக வாதாபியைச் சேர்ந்த ஒருவர் கண்டிப்பாக வேண்டும் என்று சிம்மவிஷ்ணு மகாராஜா சொன்னபோது அதைச் சிரமேற்கொண்டு ஏற்றுக்கொண்டார்.
இன்றைக்கு நேற்றைக்கு அல்ல… கடந்த சுமார் பதினெட்டு வருடங்களாக அஞ்சான வாசம் போல அந்த மாளிகையில் வாழ்ந்து பரிவாதனியை வளர்த்தார் சேந்தன்.
வெளி உலகிற்கு இவர்களை யாரென்று இனங்காட்டாத போதும் ஒரு இளவரசி வளருவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார் சிம்மவிஷ்ணு மகாராஜா.
மாட்டுவண்டி திடீரென்று நிற்கவும் சிந்தனைக் கலைந்து நிமிர்ந்து பார்த்தார் உபாத்தியாயர். ஒரு ஆற்றங்கரையின் ஓரமாக மாட்டுவண்டி நிறுத்தப்பட்டிருந்தது. வண்டிக்காரரை கேள்வியாக பார்த்தார் உபாத்தியாயர்.
“ஐயா! ஆத்தங்கரை ஓரம்… வயிறு காலியா இருக்கு, எதையாவது உள்ள தள்ளிட்டோம்னா அது பாட்டுக்குக் கெடக்கும்…” இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அதனால் பாதி வாயை மூடிக்கொண்டு பவ்யமாக சொன்னான் வண்டிக்காரன்.
“சரிப்பா.” வண்டியிலிருந்து இறங்கினார் உபாத்தியாயர். பெண்களும் இறங்கி கொண்டார்கள். மகிழினி தான் தயாரித்து கொண்டுவந்திருந்த உணவுப்பொட்டலங்களில் ஒன்றை உபாத்தியாயரிடம் கொடுத்துவிட்டு இன்னொன்றைத் தனக்கும் தோழிக்குமாக பிரித்தாள்.
அப்போதுதான் லேசாக இருள் பிரிந்து சுள்ளென்ற சூரிய கிரணங்கள் ஓடும் ஆற்றுநீரை முத்தமிட்டு கொண்டிருந்தன. தன் காதலன் அணைத்த மாத்திரத்திலேயே ஜொலிக்கும் புது பெண்ணைப் போல அந்த ஆற்றுநீரும் அப்போது புது மினுமினுப்போடு ஓடிக்கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக இருந்த ஒரு பெரிய மரத்தின் வேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள் பரிவாதனி. அந்த முகத்தில் எப்போதும் இருக்கும் குழந்தைத்தனம் போய் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. கடந்து இரண்டு நாட்களாக சதா யோசனையையே காட்டின அந்த அஞ்சன விழிகள்.
மகிழினியும் தோழியை அதிகம் தொந்தரவு பண்ணவில்லை. உபாத்தியாயரும் மகளும் ஊரை விட்டே போகப்போகிறார்கள் என்று தெரிந்தபோது தன் மூட்டை முடிச்சுகளையும் கட்டி ஆயத்தமாகி கொண்டாள். அவர்கள் வீட்டில் யார் எது பேசியும் அவள் காதில் ஏறவில்லை.
பரிவாதனி இரண்டு நாட்கள் தீவிர சிந்தனையின் பிறகு தன் முடிவுகளைத் திடமாக வகுத்துக்கொண்டாள்.
பல்லவ சாம்ராஜ்யத்தின் வட எல்லையில் இடதுபுறமாக வாதாபியும் வலது புறமாக வேங்கியும் இருப்பதால் அந்த திக்கையே தவிர்த்தாள் பரிவாதனி. தென் எல்லையில் காவிரி நதி வரைப் பரவியிருந்த பல்லவ ராஜ்ஜியமே தாங்கள் குடியேற தற்போது சிறந்த இடமாக தோன்றியது. அதை உபாத்தியாயரிடம் அவள் பிரஸ்தாபித்த போது அவரும் எந்த மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டார்.
அத்தோடு காவிரிக்கு அருகிலிருக்கும் ‘கொற்கை’ எனும் ஊரில் தனக்கு நண்பர் ஒருவரும் இருப்பதால் அங்கு போவது இப்போதைய அவர்கள் நிலைமைக்கு அனுகூலமாக இருக்கும் என்றும் நம்பினார்.
உபாத்தியாயர் அவர்களின் பயணம் பற்றி மன்னருக்கு அறிவிக்க முயன்ற போது பரிவாதனி அதைத் தடுத்து விட்டாள். அவர்கள் இருப்பிடம் யாரிற்கும் தெரியக்கூடாது என்பதில் பெண் மிகவும் கவனமாக இருந்தாள்.
அவள் கைப்பட முந்தைய நாள் இரவே இரண்டு ஓலைகளை எழுதி வைத்துக்கொண்டாள். அதில் ஒன்றை அடிகளாரிற்கும் இன்னொன்றைப் பல்லவ குமாரனிற்கும் விலாசமிட்டு அவர்கள் மாளிகையின் முதலாம் கட்டிலேயே பார்வைக்குப் படும்படி வைத்துவிட்டுக் கிளம்பி இருந்தாள்.
இன்னும் சற்று நேரத்தில் அடிகளார் நிச்சயமாக அவர்கள் மாளிகைக்கு வருவார். அவர் கண்களில் ஓலைகள் கண்டிப்பாக படும். பல்லவ இளவல் கைக்கும் அதற்கடுத்தாற் போல ஓலைப் போகும். இப்போது மட்டும் அவள் கண்களில் லேசாக கண்ணீர் பளபளத்தது.
“பரிவாதனி…” மகிழினியின் அழைப்பில் திடுக்கிட்டு பார்த்தாள் பெண்.
“ஏன்? எதற்கு இப்படி திடுக்கிடுகிறாய் பரிவாதனி?”
“ஒன்றுமில்லை மகிழினி… வேறு சிந்தனையில் இருந்துவிட்டேன்.”
“இந்தா… இதைச் சாப்பிடு.” உரிமையோடு தோழி நீட்டிய உணவை வாங்கி கொண்டாள் பரிவாதனி. இரண்டு நாட்களாக உணவு இறங்க மறுத்தது. இருந்தாலும் தந்தைக்காகவும் தோழிக்காகவும் எதையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்து கொண்டாள்.
“பரிவாதனி… நீ கொஞ்சம் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டாயோ என்று எனக்குத் தோன்றுகிறது.” உணவை உண்டபடி நாசூக்காக பேச்சை ஆரம்பித்தாள் மகிழினி.
“இல்லை மகிழினி… நிறுத்தி நிதானமாக சிந்தனைச் செய்து விட்டுத்தான் இந்த முடிவிற்கு வந்தேன்.”
“அப்படியானால் உன் எதிர்காலத்திற்கு என்ன பதில்?”
“ஏன்? என் எதிர்காலத்திற்கு என்ன குறை வந்துவிட்டது?”
“புரிந்துதான் பேசுகிறாயா? இல்லைப் புரிய மறுக்கிறாயா?”
“நன்றாக புரிகிறது மகிழினி, சிறிது காலமாக இருந்தாலும் அவரோடு நான் வாழ்ந்த வாழ்க்கை எனக்குப் போதும்!”
“நீ எங்கே அவரோடு வாழ்ந்தாய்?! உனக்கே இது முட்டாள்தனமாக இல்லையா பரிவாதனி?” மகிழினியின் குரலில் கோபம் தொனித்தது.
“மகிழினி… இப்போது இந்த நிமிடம் பல்லவ இளவலை நான் நாடினால் நிச்சயமாக அவர் மகாராஜாவை எதிர்த்து என்னை மணந்து கொள்வார்.”
“கண்டிப்பாக! அதில் என்ன சந்தேகம் உனக்கு?”
“அதனால் யாரிற்கு என்ன லாபம் மகிழினி?”
“எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை, நீ நன்றாக இருக்க வேண்டும், அது மட்டுந்தான் என் கவலை.”
“அப்படி நீயும் நானும் நினைக்கலாம், நாளை நாட்டை ஆளப்போகும் இளவரசர் நினைக்கலாமா?”
“…………..”
“அவர் மன்னர் குலத்தில் பிறந்தவர் மகிழினி… மக்கள் நலன் ஒன்று மட்டும்தான் அவரிற்கு முக்கியமாக இருக்க வேண்டும்!”
“அப்போது எதற்கு இந்த வீணாய்ப்போன காதல்? உன் வாழ்க்கையைப் பாழாக்கி கொள்ளவா?”
“அது அப்படியில்லை மகிழினி… நான் யாரென்று அறியாத நாட்களில் என்னை இளவரசர் காதலித்ததில் எந்த பழுதும் இருக்கவில்லை.”
“இப்போது மட்டும் என்ன பழுது வந்துவிட்டது?”
“இப்போது அவர் என்னை மணந்து கொண்டால் இரண்டு பெரும் ராஜ்ஜியங்களைப் பகைத்துக்கொள்ள வேண்டும், அதற்கு மகாராஜா ஒப்பமாட்டார்.”
“இது மன்னர் குலத்திற்குப் புதிதா என்ன? போர் மூண்டால் படைத்திரட்டி போர் புரிவதுதானே?”
“போர் புரிவது மன்னர் வழக்கம்தான்… இல்லையென்று சொல்லவில்லை, ஆனால் அதற்கு வலுவான ஒரு காரணம் வேண்டாமா? ராஜ்ஜியத்திற்கு எதிராக வைரிகள் இருக்கிறார்கள் போரிடுகிறோம் என்றால் கேட்க நன்றாக இருக்கும், என் பட்டத்து ராணிக்கு அவள் ஒன்றுவிட்ட சகோதரர்களே வைரியாக இருக்கிறார்கள், அதனால் போர் மூண்டுள்ளது என்று சொன்னால் உலகம் பல்லவ சாம்ராஜ்யத்தைப் பார்த்து சிரிக்காதா மகிழினி?”
“…………..”
“நான் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கவில்லை மகிழினி… இரண்டு நாட்கள் நிதானமாக சிந்தித்தேன், என்னால் அவர் வாழ்வு சிறப்புற்றதாகத்தான் இருக்க வேண்டும், அதில்தான் எனக்கு மகிழ்ச்சி!”
“உன்னைப் பிரிந்து இளவரசர் மகிழ்ச்சியாக இருந்து விடுவாரா?”
“எனக்கும் அந்த கஷ்டம் உண்டுதான் மகிழினி, இல்லையென்று நீ நினைக்கிறாயா?” சொல்லிவிட்டு அழகாக புன்னகைத்தாள் பரிவாதனி. மகிழினியின் உள்ளத்தில் தன் தோழியைப் பார்த்த போது வேதனை நிரம்பியது.
“அரச குலத்தினரிற்கு இதுவெல்லாம் சகஜம் மகிழினி, ராஜ்ஜியத்தின் நன்மைக்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்த எத்தனையோ வீர புருஷர்களின் கதைகளை நாம் படித்ததில்லையா? பல்லவ இளவலும் அத்தகைய வீர புருஷர்தானே! அவரால் நிச்சயம் இதிலிருந்து மீண்டு வர முடியும்!”
அதற்கு மேல் தோழிகள் இருவரும் பேசிக்கொள்ள வண்டிக்காரன் இடம் கொடுக்கவில்லை. காலை ஆகாரத்திற்காக ஆற்றங்கரையோரம் நின்ற பயணம் மீண்டும் ஆரம்பித்தது கொற்கையை நோக்கி.
***
பயிற்சி கூடத்தில் வாட்பயிற்சி மும்முரமாக நடைபெற்று கொண்டிருந்தது. கூரிய வாட்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று உரசும் சத்தம் நெடுநேரமாக கேட்ட வண்ணமே இருந்தது.
மகேந்திர வர்மன் தனது வாளை வெகு லாவகமாக சுழட்டி கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல அவன் வாள் வீச்சில் ஒரு மூர்க்கத்தனம் தெரிந்தது. எதிரே பொதிகை மாறன்!
இதுவரை பல்லவ இளவலின் நியாயமான போர் முறையை வெகு அனாயாசமாக சமாளித்த பொதிகை மாறன் இப்போது திணற ஆரம்பித்தான். ஏனென்றால்… மகேந்திரன் போர் தர்மங்களுக்கு அப்பாற்பட்ட விதத்தில் தன் வாளைச் சுழற்ற ஆரம்பித்திருந்தான்.
“இளவரசே!” பொதிகை மாறனின் குரல் தன் நண்பனை எச்சரித்தது. ஆனால் அதை மகேந்திரன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. எதிலிருந்தோ தப்பிப்பவன் போல எதிரிலிருப்பவனை மூர்க்கத்தனமாக தாக்கிக்கொண்டே இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் மகேந்திரனின் போர் முறை விதிகளை வெகுவாக அலட்சியம் செய்யவே பொதிகை மாறன் பொறுமை இழந்தான்.
“இளவரசே! போதும் நிறுத்துங்கள்!” உப சேனாதிபதி போட்ட சத்தத்தில் மகேந்திரன் சட்டென்று போரிடுவதை நிறுத்தினான். முகத்தில் வியர்வை ஆறாக பெருகிக்கொண்டிருந்தது. விம்மி தணிந்த அவன் மார்பு உள்ளுக்குள்ளே அது எத்தனை வேதனைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது என்று பொதிகை மாறனிற்கு சொல்லாமல் சொன்னது.
உப சேனாதிபதி கையைத் தட்டவும் வேகமாக ஒரு பணியாள் ஓடி வந்தான்.
“இளவரசருக்கு குடிக்க சில்லென்ற நீர் கொண்டு வா!” பொதிகை மாறன் ஆணையிட அடுத்த நிமிடமே தங்க குவளையில் நீர் கொண்டுவரப்பட்டது. இது எதையுமே உணராமல் மூச்சுவாங்க நின்றுகொண்டிருந்தான் மகேந்திர வர்மன்.
மனம் முழுவதும் வெறுமையாகி போயிருந்து. இனி தன் வாழ்க்கையில் என்ன மீதமிருக்கிறது என்று புரியாமல் பித்து பிடித்தவன் போல நின்றிருந்தான் பல்லவ குமாரன்.
“இளவரசே! இந்த நீரை முதலில் அருந்துங்கள்.”
“ம்..‌. என்ன சொன்னாய் மாறா?”
“மிகவும் களைப்பாக தெரிகிறீர்கள், இந்த நீரைக் கொஞ்சம் அருந்துங்கள்.”
“ஓ… சரி சரி…” பொதிகை மாறனின் கையிலிருந்த குவளையை வாங்கி நீரைப் பருகினான் மகேந்திரன். இளவரசனைப் பார்க்கவே மாறனிற்கு மிகவும் வேதனையாக இருந்தது!
பரிவாதனியின் ஓலைக் கிடத்த தினத்திலிருந்து இப்படித்தான் இருக்கிறார். அடிகளாரின் மூலம் மன்னரிற்கும் விஷயம் தெரிந்திருக்க வேண்டும். அவர் வதனமும் எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இறுக்கமாகவே இருந்தது.
காஞ்சி மாநகரைச் சல்லடைப் போட்டாகிவிட்டது. பரிவாதனி எங்கேயும் அகப்படவில்லை. அத்தோடு மன்னர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டார். உபாத்தியாயரும் கூட சென்றிருப்பதால் அவர் மனதில் சற்றே சாந்தி இருந்தது.
ஆனால் மகேந்திரன் தவித்தான்! காஞ்சியையும் தாண்டி அவன் தேடுதல் தொடர்ந்தது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை!
தன் ஊனொடு உயிராக கலந்தவளை நினைத்து மகேந்திரனின் உள்ளம் சொல்லொணா வேதனையில் தவித்தது! அவளாகத்தான் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அவள் பிறப்பு ரகசியத்தில் இருக்கும் சிக்கலைத் தவிர்ப்பதற்காக என்னிடமிருந்து விலகி ஓடுகிறாள். ஆனால் அந்த ரகசியம்தான் என்ன?! பல்லவனுக்குத் தலைச் சுழன்றது.
“இளவரசே!” இதமாக அழைத்தான் பொதிகை மாறன்.
“மாறா! என் நெஞ்சே வெடித்துவிடும் போல இருக்கிறது!”
“சற்று அமைதியாக இருங்கள்! ஏதாவது தகவல் கிடைக்காமல் போகாது.”
“நம்பிக்கை இல்லை மாறா! ஒளிந்து கொள்ள நினைத்தவள் அதற்கு ஏற்றாற் போலத்தானே இடத்தையும் தேர்ந்தெடுத்திருப்பாள்!”
“ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் இளவரசே? இவர்களோடு போராடலாமே? உங்கள் துணை இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை?”
“இல்லை மாறா… போராட பயந்து அவள் போகவில்லை, எனக்கு நன்மை நினைந்துதான் போயிருக்க வேண்டும்.”
“கண்டுபிடித்துவிடலாம் இளவரசே!”
“மாறா… நீ என் நண்பன் இல்லையா?!” கண்களில் அத்தனை வேதனையைத் தாங்கி தன் கைகளைப் பிடித்துக்கொண்டு கேட்ட பல்லவ குமாரனிற்கு சட்டென்று பதில் சொன்னான் மாறன்.
“அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் இளவரசே?”
“மாறா… என் அந்தரங்கங்களை நான் உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?” இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலையை ஆட்டினான் பொதிகை மாறன்.
“மாறா! அன்றைக்கு அமரா என்னோடு சண்டைப் போடும்போது அந்தப்புர தேரை நான் உபயோகித்ததாக என் மீது குற்றம் சொன்னதை நீ அறிவாய் அல்லவா?”
“ஆம் இளவரசே!”
“அன்றைக்கு நான் பரிவாதனியோடு காட்டிற்குப் போயிருந்தேன்.”
“ஓ…”
“ஆமாம்… அன்று முழுவதும் அங்குதான் நேரம் செலவழித்தோம், என் அணை மீறிய ஆசைகள் அனைத்திற்கும் இடம் கொடுத்த பெண்மையை இன்று தொலைத்துவிட்டு நிற்கிறேனே மாறா!” இளவரசன் புலம்ப ஆரம்பித்திருந்தான்!
“இந்த கைகளில் நெகிந்து கிடந்த அந்த மோகன அழகை இனி என்று காண்பேன் மாறா!” தன் இரு கைகளையும் நீட்டிக்கொண்டு அதைப் பார்த்தபடி பித்துப் பிடித்தவன் போல பேசிக்கொண்டிருந்தான் மகேந்திரன். பொதிகை மாறன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான்.
“மாறா! உனக்கொன்று தெரியுமா?” திடீரென்று மகேந்திரன் முகத்தில் புன்னகைத் தோன்றியது.
“பரிவாதனிக்கு குதிரை ஏறக்கூட தெரியவில்லை!” சொல்லிவிட்டு இப்போது கடகடவென்று சிரித்தான் இளவரசன்.
“அவளுக்காக இன்னொரு புரவியோடு போயிருந்தேன்… ஆனால் பாவம் சித்தரஞ்சன், எங்களிருவரையும் தாங்கிக்கொண்டான்.” சொல்லிவிட்டு மீண்டும் பல்லவ குமாரன் சிரிக்க உப சேனாதிபதியும் புன்னகைத்தான்.
“சித்தரஞ்சனை அன்று அவளுக்கு அறிமுகப்படுத்தினேன்.” இப்போதும் அன்றைய நிகழ்வுகளை அசைப்போடுபவன் போல சற்று நேரம் அமைதியாக இருந்தான் இளவரசன்.
“மாறா! இந்த பெண்களுக்கு ஆண்களுக்கு இல்லாத இத்தனை நாணம் எங்கிருந்து வருகிறது?” படக்கென்று இளவரசன் கேட்க மாறன் திணறிப்போனான். அவன் கண்களிற்குள் அந்த கணம் அமரா தேவி வந்து போனாள்!
“அவளுக்கு என்னிடம் நாணம் எதற்கு மாறா?”
“இளவரசே…” பேச்சு சற்றே எல்லை மீறிப்போகவும் மாறன் சட்டென்று பல்லவ இளவலை அழைத்தான்.
“அடடா! உனக்கு எதற்கு இத்தனைச் சங்கோஜம்? அவள்தான் பெண், அத்தனை நாணப்பட்டாள்… உனக்கென்ன ஆனது மாறா?” தன் கவலைகளையெல்லாம் மறந்து மீண்டும் வாய்விட்டு சிரித்தான் மகேந்திரன்.
“இளவரசே! வடக்கே போன வீரர்கள் ஏதாவது சேதி கொண்டு வந்தார்களா?”
“இல்லை மாறா… வடக்கே போனதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை, ஆனால் தெற்கே போகும் வீதியில் போன ஒரு வண்டியில் உபாத்தியாயர் போல ஒருவரைப் பார்த்ததாக அரண்மனைக் காவலுக்கு வந்த ஒரு வீரன் சொல்லி இருக்கிறான்.”
“உபாத்தியாயர் என்று உறுதியாக சொல்லவில்லையா?”
“இல்லை… அதிகாலை என்பதால் சரியாக தெரியவில்லை என்று சொல்கிறான்.”
“ஓ… அப்படியானால் அதிகாலையிலேயே புறப்பட்டிருக்க வேண்டும்!”
“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்… யார் கண்ணிலும் படக்கூடாது என்று நினைத்திருக்கிறார்கள்.”
“ஆமாம்.”
“ஆனால் நான் விடமாட்டேன் மாறா! அவளைக் கண்டுபிடித்து என்னருகில் கொண்டுவந்தே தீருவேன்!” அது அத்தனைச் சுலபமில்லை என்று புரியாமல் சூளுரைத்தான் இளவரசன்.
***
நான்கு நாட்கள் தொடர்ந்து பயணம் செய்து பல்லவ எல்லையின் தென்கிழக்குப் பக்கமாக காவிரிக்கு அருகில் அமைந்திருந்த கொற்கை எனும் ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பரிவாதனி.
நான்கு நாட்கள் இடைவிடாது பயணப்பட்டதால் உபாத்தியாயர் வெகுவாக களைப்படைந்திருந்தார். உடம்பு மட்டுமல்லாது மனதும் வெகுவாக களைப்படைந்திருந்ததால் ஏதோ திடீரென பத்து வயது மூப்படைந்துவிட்டவர் போல சோர்ந்து போனார்.
காவிரியை அண்மித்திருந்ததால் பசுமைக்குக் குறைவில்லாமல் இருந்தது கொற்கை. சாதாரணமான வீடுதான் என்றாலும் விசாலமாக காற்றோட்டமாக இருந்தது.
வீட்டைப் பார்த்த போது மகிழினியின் கண்கள் கலங்கிவிட்டன. இருந்தாலும் பரிவாதனி எதையும் கவனிக்காதவள் போல உற்சாகமாகவே நடமாடினாள். ஒரு எல்லைக்கு மேல் மகிழினியால் வாளாதிருக்க முடியவில்லை.
“பரிவாதனி! எத்தனைப் பெரிய மாளிகையில் ராஜகுமாரி போல வாழ்ந்துவிட்டு இன்றைக்கு இப்படி வாழ வேண்டும் என்று உனக்கு என்ன தலையெழுத்தா?” பொங்கி வெடித்த தோழியைப் பார்த்து புன்னகைத்த பெண்ணின் குரலில் திருப்தியே மிதமிஞ்சி இருந்தது.
“மகிழினி…‌ எனக்கு சௌகர்யங்கள் குறைந்து போயிருக்கலாம், ஆனால் மனதில் நிம்மதி நிறைந்திருக்கிறது!”
“ஏது… இளவரசரைப் பிரிந்திருப்பதில் உனக்குப் பரம திருப்தி போல தெரிகிறது!”
“அப்படியில்லை மகிழினி… அவரைப் பிரிந்து வாழ்வது எனக்கு வேதனையான விஷயம்தான், இருந்தாலும் அவர் கடமைகளை அவர் சரிவரவே செய்யப்போகின்றார் என்பதில் என மனதிற்கு எவ்வளவு நிறைவு தெரியுமா?”
“ஏன்? உன்னை நன்றாக வைத்திருப்பது இளவரசர் கடமைகளில் ஒன்றில்லையா?” மகிழினியின் முகத்தில் கோபம் கொப்பளித்தது.
“வீடா நாடா என்ற கேள்வி வரும்போது அவருக்கு நாடுதான் முக்கியம், நானும் அதைத்தான் ஆமோதிப்பேன்.”
“நல்ல கூத்துதான்!” தலையில் அடித்துக்கொண்டு கோபமாக நகரப்போன தோழியின் கையைப் பிடித்து நிறுத்தினாள் பரிவாதனி.
“நான் எத்தனைப் பாக்கியவதி என்று உனக்குத் தெரியுமா மகிழினி?!” இதைக் கேட்ட போது பரிவாதனியின் குரல் அத்தனை மதுரமாக இருந்தது. அந்த குரலிலேயே மகிழினி திகைத்துப்போய் நின்று விட்டாள்.
‘இப்போது இவள் இத்தனை இன்பப்பட அப்படி என்ன அதிசயம் இங்கே நிகழ்ந்துவிட்டது?!’
“பல்லவ குமாரனின் அன்பு எத்தகையது என்று உனக்குத் தெரியாது மகிழினி! அவர் அன்பு முழுவதற்கும் நான்தான் சொந்தக்காரி!”
“ஆமாம்! இதை நீதான் மெச்சிக்கொள்ள வேண்டும்!”
“ஏன் இத்தனை ஆத்திரம் மகிழினி?”
“ஆத்திரப்படாமல் வேறு என்ன செய்வது? இதோ பார் பரிவாதனி! உன்னைப்போல நான் அரச குலத்தில் பிறக்கவில்லை, நான் சாதாரண பெண், எனக்கு உன் வாழ்க்கை முக்கியம்!”
“என் வாழ்க்கைக்கு இப்போது என்ன கேடு வந்துவிட்டது மகிழினி?”
“புரிந்துதான் பேசுகிறாயா பரிவாதனி? இளவரசர் உன்னை நினைந்து கொண்டே வாழ்க்கையைக் கடக்க முடியுமா?”
“முடியாதுதான்!”
“மகாராஜாவும் ராணியும் அவரை அப்படியே விட்டு விடுவார்களா?”
“மாட்டார்கள்!”
“கல்யாணம் பண்ணி வைப்பார்கள்! நீ இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு யுவதி வந்து உட்காருவாள்! உலகமே அவளை மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி என்று கொண்டாடும்!”
“ஆமாம்… கொண்டாடும்!” இப்போது மட்டும் பரிவாதனியின் கண்கள் லேசாக கலங்கியது. ஆனாலும் கம்பீரத்தோடு மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“எத்தனைப் பெண்கள் அவரின் அந்தப்புரத்தை அலங்கரித்தாலும் அவர் மனதில் என்றைக்கும் கோலோச்ச போவது இந்த பரிவாதனிதான் மகிழினி!” தோழியின் பேச்சில் மகிழினி திடுக்கிட்டு போனாள்.
“இதுவெல்லாம் நடக்கின்ற காரியமா பரிவாதனி?! ஆண்களின் மனதை உனக்குத் தெரியாதா? மனைவி இறந்த மறுநாளே புதுமாப்பிள்ளை ஆகின்ற ஜென்மங்கள் அவர்கள்! இளவரசர் மட்டும் அதற்கு விதிவிலக்கா பெண்ணே?!”
“எப்போதும் விதி என்றொன்று இருந்தால் அதற்கு விலக்கும் இருக்கும் மகிழினி! இளவரசரைப் பற்றி நீ அறியமாட்டாய், நான் நன்கு அறிவேன்! இன்று நான் சொல்வதை என்றைக்காவது உனக்குக் காலம் உணர்த்தும்! அவர் அன்பை அள்ளி அள்ளி பருகிய நான் சொல்கிறேன் கேட்டுக்கொள் மகிழினி! விதி எனும் சூறாவளி எங்கள் வாழ்க்கையில் இப்போது பலமாக வீசுகிறது! ஆனால் என்றைக்கும் இது நீடிக்காது!”
“ஆமாம் ஆமாம்! நீ சொல்கின்ற சூறாவளி ஓய்ந்து இன்ப தென்றல் வீசுகின்ற ஓர் நாளும் வந்து சேரும்! அதற்குள் என் பிராணன் போய்விடாமல் நான் உயிரோடு இருக்க வேண்டுமப்பா ஆண்டவா!” கோப மிகுதியில் சட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள் மகிழினி.
ஆனால் பரிவாதனி அங்கிருந்த மஞ்சத்தில் சாய்ந்து கொண்டாள். தான் எடுத்திருக்கும் முடிவு தவறென்று அவளுக்கு லவலேசமும் தோன்றவில்லை. அப்படி என்றைக்கும் தோன்றப்போவதும் இல்லை. தன் மேல் கொண்ட அன்பினால் தன் தோழி கோபித்து கொள்கிறாள், அவ்வளவுதான்.
பிரிவு எனக்கு மட்டும்தானா? அவருக்கும்தானே?! நான் காஞ்சியில் இல்லையென்று தெரிந்தபோது அவர் மனம் என்ன பாடுபட்டிருக்கும்! துடித்துப்போயிருக்க மாட்டாரா?!
பஞ்சணையில் கிடந்த அவள் மேனியைத் தென்றல் இதமாக வருடிக்கொடுத்தது! அந்த தென்றல் கொடுத்த சுகத்தில் பரிவாதனியின் கண்கள் லேசாக மூடிக்கொண்டன. மனக்கண் அந்த அடர்ந்த காட்டை நோக்கி போனது.
பிரிவொன்று நிச்சயம் என்பது அன்றைக்கே அவருக்குப் புரிந்துவிட்டதா?! அதனால்தான் தாகத்தோடிருந்தவன் ஒழுகும் பாத்திரத்தைக் கண்டதுபோல நடந்து கொண்டாரா?!
‘ஏன்? அன்றைக்கு தாகித்திருந்ததும் மோகித்திருந்ததும் அவர் மட்டுந்தானா பரிவாதனி?’ தன் மனச்சாட்சியின் குரலில் முகத்தை மறுபுறமாக திருப்பிக்கொண்டாள் பெண். முகம் சிவந்து போனது!
இல்லை… அவர் மேல் அளவற்ற ஆசை வைத்தது நானும்தான்! நான் மீட்டும் வீணைப் போல எனை அவர் மீட்ட வேண்டும் என்று வேட்கைக் கொண்டது நானும்தான்!
அவள் கண்களிலிருந்து நீர்த்துளியொன்று ஓடி அவள் கன்னத்தை நனைத்து. வேதனையில்தானே கண்ணீர் சுரக்கும்? ஆனால் இன்பத்தில் முதன்முதலாக இன்று கண்ணீர் பூத்தது பெண்ணிற்கு. அழுவதில் சுகம் கண்டாள் அந்த காரிகை!
அருவிக்கரையும் அடர்ந்த காடும் அணைத்த அவனும் அப்போது அவள் சிந்தையை முழுதாக வியாபித்துக்கொண்டார்கள். எத்தனை சுகம்! ஒரு பெண்மை முழுமையடைவது தன் தலைவனின் தழுவலில்தானா?! அந்த ஆண்மையின் அரவணைப்பில்தானா?!
சித்தரஞ்சனை சிந்தையிலேயே கொள்ளாமல் தன்னை மீண்டும் மீண்டும் நாடியவனை நினைந்து அவள் மனம் உருகி கசிந்தது. எத்தனைப் பெரிய வேதனையை அவருக்கு அவள் கொடுத்திருக்கிறாள் என்றும் அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும்… நாளை மகேந்திர பல்லவரின் பெயர் சரித்திரத்தில் எழுதப்படும் போது தன்னால் அவருக்கு எந்த அவப்பெயரும் விளையாது! அது அவளுக்குப் போதும்.
‘புரிந்து கொள்ளுங்கள் அன்பரே! என்னை என் மனதைச் சரியாக புரிந்து கொள்ளுங்கள் அன்பரே! உங்களோடு வாழ்வது மட்டும்தான் எனக்கான வாழ்க்கை! அதைத் தவிர்த்து எனக்கென்று தனிப்பட்டதாக இனி எதுவுமே இல்லை! நீங்கள் அதை எனக்கு முழுதாக கொடுக்க ஆசைப்படும் போதும் அதை அனுபவிக்க நான் புண்ணியம் செய்திருக்கவில்லையே!
எனக்குள் நீங்கள் நிறைந்திருப்பது போல உங்களுக்குள்ளும் நான் நீக்கமற நிறைந்திருப்பேன்! அதில் எனக்குச் சந்தேகமே இல்லை!
உங்கள் மனதில் எனக்கான இடம்… இந்த பரிவாதனிக்கான இடம்… உங்கள் கலைவாணிக்கான இடம்… அது என்றைக்கும் நிரந்தரம்! எத்தனைப் பெண்கள் உங்கள் வாழ்க்கையில் வந்தாலும் பரிவாதனியை மறக்க உங்களால் முடியுமா அன்பரே!’
பஞ்சணையில் படுத்த படி தன் மன்னவனோடு மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தாள் பெண். ஆனால் மனதின் குரலை, அது பேசும் மொழிகளை அதற்குரியவர் அறியமாட்டாரா என்ன?!
சட்டென்று திடுக்கிட்டு விழித்தான் மகேந்திர வர்மன்! நான்கைந்து நாட்களாக இடைவிடாது பரிவாதனியை தேடுவதால் அவன் உள்ளமும் உடலும் வெகுவாக களைப்படைத்திருந்தது. உணவையும் மறுத்துவிட்டு தனது அறைக்கு வந்து மஞ்சத்தில் வீழ்ந்தவன் தன்னையும் மறந்து தூங்கி போயிருந்தான்.
“பரிவாதனி…” எதுவும் புரியாமல் அவன் வாய் அவளைச் சத்தமாக அழைத்திருந்தது.
“அழைத்தீர்களா இளவரசே!” இவன் குரல் கேட்டு பணிப்பெண் ஒருத்தி ஓடி வந்தாள்.
“இல்லை… உன்னை அழைக்கவில்லை…” இளவரசன் தடுமாற குழப்பத்தோடு அறையை விட்டு வெளியேறினாள் பணிப்பெண்.
மகேந்திரன் மீண்டும் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டான். அவன் மனது அந்த நொடி அவன் மனங்கவர்ந்தவளை வெகு அருகில் உணர்ந்தது! கண்களை மூடிக்கொண்டான்.
“எங்கிருக்கிறாய் தேவி?!” அவன் உதடுகள் முணுமுணுத்தன.

ithayamnanaikirathey-28

0

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 28

சாம்பலும், நீலமும் கலந்த நிறத்தில் உடையணிந்து வந்த காவல் துறையினர், “நீங்கள் கூச்சல் செய்து கொண்டும், வீட்டில் குதித்து கொண்டும் சுற்றி உள்ளவர்களுக்கு தொந்திரவு கொடுக்கிறீர்கள் என்று கீழ் வீட்டில் உள்ளவர்களும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களும் புகார் கொடுத்துள்ளார்கள்” என்று அவர்கள் ஆங்கிலத்தில் சற்று கடினமாகவே கூறினர்.

“நோ இட்’ஸ் எ  ரேட்” என்று துள்ளி குதித்து முன்னே வந்து சற்று கோபமாக  கூறினாள் தியா.

காவல் துறையினர் புரியாமல் பார்க்க, “911 ஃபார் எ ரேட். ஸோ பேட்” என்று தியா பக்கத்து வீட்டின் கதவை பார்த்து வருத்தம் தெரிவித்தாள்.

விஷ்வா, இதயா இருவரும் ஆங்கிலத்தில் சூழ்நிலையை பொறுமையாக விளக்க, காவல் துறையினர் சிரித்து கொண்டனர்.

அஜய், இவர்களை அமைதியாக பார்த்து கொண்டிருக்க, “யூ ஷுட் அரெஸ்ட் தி ரேட்” என்றாள்  தியா.

“ஸோ மிஸ்ச்சிவியஸ்…” என்று அவர்கள் தியாவை கொஞ்சிவிட்டு சென்றனர்.

“என்ன இதயா ஊரு இது? ஒரு எலி அடிச்சா போலீஸ் வருது.” என்று விஷ்வா புலம்ப, “தெரிஞ்சவங்க தான், இருந்தாலும் கம்பளைண்ட் பண்ணிட்டாங்க” என்றாள் இதயா வருத்தமாக.

“போலீஸ் வந்ததும் நான் பயந்துட்டேன்” விஷ்வா கண்களை உருட்ட, “போலீசுக்கு பயபடக்கூடாது. நாம என்ன தப்பு பண்ணோம். அவங்க நமக்கு ஃபிரெண்ட்ஸ். நம்ம நல்லதுக்கு தான் வருவாங்க. எங்க ஸ்கூலில் அப்படி தான் சொல்லிருக்காங்க” என்று தியா தோள்களை குலுக்கி கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

“நீ சொன்னா சரி தான்.” கூறியபடி அவளை இடித்து கொண்டு அமர்ந்தான் விஷ்வா.

அவன் அருகே அமர்ந்ததும், தியா இறங்கி செல்ல, “எலி…” என்று விஷ்வா அலற தியா, “அப்பா…” என்று அலறிக்கொண்டு அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

தன் மகளை சேர்த்து கொண்டு, “எப்பவும் அப்பா கூட இப்படி தான் இருக்கனும் ஒகேவா?” என்று அவன் கேட்க, தியா மறுப்பாக தலை அசைக்க, “நான் நிறைய எலியை பிடிச்சி வீட்டுக்குள்ள விட்டுருவேன். விடட்டுமா?” அவன் தியாவை மிரட்ட, “சரி சரி… நான் இப்படியே இருக்கேன்” மலை இறங்கி தன் தந்தையை கட்டிக் கொண்டாள் தியா.

அன்றிரவு குழந்தைகள் உறங்கிவிட, “இதயா” என்றான் அவன் தயக்கமாக, “சொல்லு விஷ்வா” என்று அவள் மெத்தையை சரி செய்தபடியே கேட்டாள்.

“நாம நான் பார்த்திருக்க வீட்டுக்கு போய்டுவோமா? நான், நீயும் தியாவும் வருவீங்கன்னு தனி வீடா கொஞ்சம் பெரிய வீடா பார்த்தேன்.” அவன் கூற, “அவ்வளவு நம்பிக்கையா?” புருவம் உயர்த்தினாள் புன்னகையோடு.

“எதுக்கு அபார்ட்மெண்ட்ல இருந்துட்டு? போலீஸ் எல்லாம் வந்துகிட்டு?” அவன் மேலும் மேலும் விளக்க முயற்சிக்க, “எதுக்கு விஷ்வா இவ்வளவு பேசிகிட்டு? நீ வான்னு சொன்னால் நான் வர போறேன்” என்று இதயா கண்சிமிட்டினாள்.

“லீஸிங் ப்ராப்லேம் எல்லாம் இல்லையா?” அவன் சந்தேகம் கேட்க, “நீ வந்த மாசத்திலிருந்து நான் மன்த்லி லீஸ் தான் பண்றேன். நீ எப்படியும் என்னை கூட்டிட்டு போய்டுவேன்னு எனக்கு தெரியுமே” என்று இதயா தோள்களை குலுக்கினாள்.

“அவ்வளவு நம்பிக்கையா?” அவளை போலவே கேட்டு அவன் புருவம் உயர்த்தி புன்னகைத்தான்.

“எனக்கு உன்னை பத்தி தெரியாதா?” அவள் கேட்க, “தெரிய வேண்டிய நேரத்தில் தெரியாமல் போச்சே?” அவன் வருந்த, “விஷ்வா…” என்று அவன் அருகே சென்று அவன் வருந்துவது பிடிக்காமல் அவன் மேல் சாய்ந்து கொண்டாள்.

“நான் உன்கிட்ட விவாகரத்து கேட்டிருப்பேனா?” அவன் குரல் உடைய, “அன்னைக்கு… அன்னைக்கு…” அவள் விம்மினாள்.

“அன்னைக்கு என்ன தான் நடந்துச்சு?” கேட்டுவிட்டான் விஷ்வா.

‘எத்தனையோ வருடங்களுக்கு முன் கேட்க வேண்டிய கேள்வி’ அவள் மனம் சுணங்கிக்கொண்டாலும், அதை வெளிக்காட்டவில்லை.

இதயா, பழைய நிகழ்வுகளை பகிர ஆரம்பித்தாள். அவர்கள் எண்ணங்களும் அன்றைய நாட்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.

அவர்களுக்கு இடையிலான பிரச்சனை சற்று வீரியமாகி இருந்தது. விஷ்வா, இதயாவின் பேச்சு முற்றிலும் குறைந்து நின்றுவிட்டது என்று கூறலாம்.

அஜயை அழைப்பதும், விட்டுச்செல்வதும் மட்டுமே விஷ்வாவிற்கும், இதயாவுக்கும் இடையிலான சம்பந்தமாக மாற, இரு வீட்டு பெற்றோர்களுக்கும் பயம் தொற்றி கொண்டது.

ஒருவருக்கு ஒருவர் சமாதானம் பேச செல்லலாம் என்று எண்ணுகையில், இதயாவும் விஷ்வாவும் தங்கள் பெற்றோரை தடுத்துவிட்டனர்.

அப்பொழுது தான், விஷ்வாவின் தாய் மாமா சுந்தரேசன் கூடே ஒருவரை அழைத்துக்கொண்டு  இதயாவின் வீட்டிற்கு சமாதானம் பேசிவந்தார்.

அன்று இதயாவின் நண்பன் நரேனும் அவர்கள் வீட்டில் தான் இருந்தான்.

‘யாரோ ஒருவர் விஷ்வாவின் வீட்டிலிருந்து வந்திருக்கிறார்களே’ என்ற சந்தோஷம் இதயாவின் பெற்றோர்களுக்கு.

இதயா, அஜயோடு அறைக்குள் அமர்ந்திருந்தாள்.

நரேனும், இதயாவின் பெற்றோர்களும் அவர் முன் அமர்ந்திருக்க, “இந்தா பாருங்க, விஷ்வா நல்ல பையன். அவனோட ஒரு பொண்ணு அனுசரிச்சு வாழ முடியலைன்னா, யார் கூடவும் வாழ முடியாது” சுந்தரேசன் நிதானமாக பேச, அங்கு அமைதி நிலவியது.

“ஏதோ, சின்ன சிறுசுக இப்படி நிக்குதுக. இதயாவை மன்னிப்பு கேட்டுட்டு அவனோட சேர்ந்து வாழ சொல்லுங்க” என்றார் அவர் பெருமிதமாக.

இதயா சுருக்கென்று எழுந்து வெளியே வர எத்தனிக்க, நரேன் அவளை கண்களால் அமைதி காக்கும் படி எச்சரித்தான்.

மீண்டும் அமைதி. இதயா வீட்டினர் எதுவும் பேசவில்லை .

“நான் என்ன சொல்றேன்னா, ஏதோ அவ படிக்கணும்னு சொல்லிட்டு தான் இதயா இங்க வந்து உட்காந்திருக்கா” சுந்தரேசன் கூற, இதயாவின் பெற்றோர் தலை அசைத்து கொண்டனர்.

“கல்யாணத்துக்கு அப்புறம் என்ன படிப்பு?” சுந்தரேசன் கேட்க, அவருக்கு ஆமோதிப்பது போல் இதயாவின் தந்தை தலை அசைக்க, இதயாவின் தாய் காபி கொடுத்தார்.

இதயாவின் பெற்றோர்கள் தலை அசைக்கவும், சுந்தரேசன் அவருக்கு இருக்கும் ஆதரவை அறிந்து கொண்டு, “விஷ்வா, அதை தான் சொல்லுறான். இதயா வரலைனா விஷ்வா வேற கல்யாணம் பண்ணிப்பான்” என்று அவர் கெத்தாக கூற, இதயா கோபமாக வெளியே வந்தாள்.

“அதுக்கு நான் சம்மதிக்கணும்.” என்று நறுக்கென்று கூறினாள் இதயா.

“என்னமா, உன் பேச்சு தொனியே சரியில்லை. மரியாதை தெரியாத பொண்ணா இருக்கியே. பெரியவங்க பேசும் பொழுது, நீயென் இப்படி குறுக்க வந்து பேசுற?” அவர் இதயாவை கண்டித்தார்.

“இதயா” இதயாவின் தாய், அவளை அடக்க, “இதுக்கு தான் லவ் கீவ்ன்னு வெளிய பொண்ணை கட்டிக் கொடுக்க வேண்டாம். என் பொண்ணு சங்கவியை கல்யாணம் செஞ்சி வைக்கலாமுன்னு சொன்னேன்” சுந்தரேசன் நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.

சங்கவியோடு திருமணம் என்ற வார்த்தையில் வெகுண்ட இதயா, “நீங்க எதுவும் பேச வேண்டாம். வீட்டை விட்டு வெளிய போங்க” அவள் எகிற, அவர் கோபம் உச்சத்தை தொட்டது.

“நானும் பேச வரலை இதயா. விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்க தான் வந்தேன். இது தான் உன் குணமுன்னு தெரிஞ்சி, விஷ்வா உன் கூட வாழ முடியாம  விவகாரத்து கேட்டு அனுப்பிருக்கான். நான் தான் பேசி சமாதானம் செய்யலாமுன்னு நினைச்சேன்” அவர் விவாகரத்து பத்திரத்தை நீட்டினார்.

“நோ… நான் நம்ப மாட்டேன். நம்ப மாட்டேன். விஷ்வா அப்படி சொல்லிருக்க மாட்டான்” இதயா உடைந்து வெடிக்க, “நீ நம்பினாலும், நம்பலைனாலும் இது தான் நிஜம்” என்று அவர் கூற இதயா ஸ்தம்பித்து நின்றாள்.

“விஷ்வா சம்மதம் இல்லாமல் நான் இதை எல்லாம் எடுத்துட்டு இங்க வருவேனா? இல்லை என் பொண்ணு சங்கவியை அவன் கூட சம்பந்தம் படுத்தி பேசுவேனா?” அவர் நக்கலாக கேட்டார்.

“இப்பவும் ஒன்னும் கேட்டு போகலை. உன் படிப்பு வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்முனு அவன் கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அவன் கூட வாழு. இல்லையா, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடு” அவர் நிதானமாக கூற, “விஷ்வா இப்படி சொன்னானா?” இதயா சந்தேகமாக கேட்டாள்.

“வேணுமின்னா விஷ்வாவுக்கு போன் பண்ணி தரேன். நீயே பேசு” அவர் அலைபேசியை எடுக்க, “மன்னிப்பு கேட்டுட்டு, படிப்பெல்லாம் வேண்டாம் புருஷனும், பிள்ளையும் தான் முக்கியனும்னு அவன் கிட்ட பேசு. பேசிட்டு வரியா?” அவர் கெத்தாக கேட்டார்.

“டைவோர்ஸ் பேப்பரை குடுங்க. நான் கொடுக்குறேன் டைவர்ஸ், விஷ்வாவை அவன் இஷ்டப்படி வாழ சொல்லுங்க” இதயா படபடவென்று கையெழுத்திட, அவள் பெற்றோர் அவளை தடுத்தும் இதயா கேட்கவில்லை.

நினைவுகளிலிருந்து மீண்டாள் இதயா. அவள் சற்று பதட்டமாக காணப்பட, விஷ்வா இதயாவுக்கு தண்ணீர் கொடுத்தான்.

“நீ ஏன் எனக்கு அன்னைக்கு ஒரு போன் பண்ணலை இதயா? கையெழுத்து போடுறதுக்கு முன்னாடி ஒரு ஃபோன் பண்ணிருக்கலாமில்லை?” அவன் அவளை கேட்க, இதயாவிடம் மௌனம்.

“கேட்குறேனில்லை” அவன் குரல் உயர, “நீ சொல்லி வேற அதை இன்னொரு தடவை கேட்கணுமான்னு தான் விஷ்வா. அவர் சொல்லி கேட்கவே எனக்கு தாங்கலை. அவ்வளவு வலிச்சுது” அவள் அவன் மேல் சாய்ந்து கொண்டு விசும்பினாள்.

அவள் முதுகை நீவியபடி, “நான் அப்படி சொல்லிருக்க மாட்டேன்னு உனக்கு தோணவே இல்லையா இதயா?” அவன் கண்ணீர் மல்க கேட்டான்.

“அன்னைக்கு உங்க மாமா அவ்வளவு உறுதியா பேசினார். அவரே ஃபோன் எல்லாம் பண்றேன்னு சொன்னாரு. நான் அப்படி தானோன்னு நம்பிட்டேன்” அவள் முகம் உயர்த்தி பரிதாபமாக கூறினாள்.

“உடனே மேடம் இது தான் சாக்குன்னு, எப்ப டைவர்ஸ் கேட்பாங்கனு கையெழுத்து போட்டு குடுத்துடீங்க?” அவன் அவளை சீண்ட, “நீ மட்டும் என்னவாம்? நான் எப்ப கையெழுத்து போடுவேன்னு பார்த்துட்டு உடனே கையெழுத்து போட்டுட்டு அடுத்த கல்யாணத்துக்கு ரெடி யாகிட்ட?” அவளும் அவனை சீண்டினாள்.

“இவ கண்டா நான் கல்யாணத்துக்கு ரெடியானதை… அப்படியே விட்டேன்னு வை தெரியும்.” என்று அவன் கோபம் கொள்ள, “விடுவ… விடுவ… நானும்  விடுவேன் திரும்பி.” அவள் முகம் சுழித்து கொள்ள, அவன் சிரித்து கொண்டான்.

அவள் தலை முடியை ஒதுக்கி, “மாமா வர விஷயமே எனக்கு தெரியாது இதயா. அங்க நடந்ததும் எனக்கு தெரியாது. அப்பா வேண்டாமுன்னு சொல்ல சொல்ல, அம்மா தான் அவங்க அண்ணனை நம்பி அனுப்பி இருக்காங்க. மாமாவுக்கு நான் சங்கவியை கட்டிக்கல்லை உன்னை லவ் பண்ணிட்டேன்னு கோபம்.“ அவன் நிறுத்த, இதயா தலை அசைத்துக் கொண்டாள்.

“அத்தோட, தான் எடுத்த காரியத்தை எப்படியாவது உன்னை டைவர்ஸ்ன்னு மிரட்டியாவது முடிக்கனுமுன்னு மிரட்டியிருக்கார். நீ மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆள் இல்லைன்னு, பாவம் அவருக்கும் தெரியலை” அவன் கேலியாக முடிக்க, அவள் அவனை முறைத்தாள்.

“தப்பு நடந்ததும் மாத்தி பேசிட்டார். நீ டைவர்ஸ் கேட்டதா தான் என் கிட்ட சொன்னாங்க. எனக்கும் அதிர்ச்சி தான். ஆனால், நீயே கேட்ட பிறகு, அப்புறம் என்னன்னு கோபத்தில் நான் டைவர்ஸ் பேபர்ஸ்ல  சைன் பண்ணேன்” அவன் கூற, “நான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணிருக்கணும். ஆனால், உங்க மாமா, அவ்வளவு உறுதியா ஃபோனை நீட்டவும் நான் நம்பிட்டேன்.” இதயா உதட்டை பிதுக்கினாள்.

“நானாவது உன் கிட்ட ஃபோன் பண்ணி பேசிருக்கலாம். பிரிஞ்சி இருக்கிற நாம பேச மாட்டோம். அப்படி பேசுறவங்க எப்படியோ பேசி சமாதானம் ஆகிருப்போமுன்னு மாமா கணிச்சிட்டார்” அவன் தன் தலையை சுவரோடு சாய்த்து கொண்டான்.

அங்கு அமைதி நிலவியது. மேலும் விஷ்வா தொடர்ந்தான்.

“நான் ஒரு நாள் வேலை விஷயமா பெங்களூர் போனப்ப தான் நரேனை ஆஃபீசில் சந்திச்சேன். நரேன் ரொம்ப வருத்தப்பட்டு, கோபப்பட்டு பேசினான். அப்ப தான் எனக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிது. எல்லாமே தப்பா போச்சேன்னு சரி பண்ண இங்க வரதுக்கு இத்தனை வருஷம் ஆகிருச்சு” அவன் விளக்கம் கொடுத்தான்.

“நரேன் சொல்லலைனா, நீ வந்திருக்கவே மாட்டியா விஷ்வா?” இதயா நேரடியாக கேட்டாள்.

“அஜய் உன்னை தேட ஆரம்பிச்சிட்டான்” விஷ்வா மழுப்ப, “என் நெஞ்சில் எட்டி உதைச்சி நீ அஜய்யை வாங்கின” இதயா குரலில் அத்தனை வருத்தம்.

“இதிம்மா…” அவன் குரல் வலியில் பிதற்றியது. அந்த வலி அவள் இதயத்தையும் சுட்டது.

“அப்படி சொல்லாத இதயா. என்னால தாங்க முடியலை” அவன் கண்கள் கலங்கியது.

“அன்னைக்கு என் கால் தெரியாம உன் மேல் பட்டுச்சு. அவ்வுளவு தான். நீ அழுறதை பார்க்க கூட பிடிக்கலை. அது தான் நான் திரும்பி பார்க்காம அஜயை  கூட்டிட்டு போய்ட்டேன். நீ சும்மா சும்மா இப்படி சொல்லிக்கிட்டு திரியாத” என்று வருத்தம் போல் அவளை கண்டித்தான் விஷ்வா.

அவள் பதில் பேசாமல் இருக்க, அவன் மேலும் தொடர்ந்தான்.

“நீ அன்னைக்கு கோர்ட் வாசலில் அப்படி என் காலில் விழுந்து கதறும் பொழுது, என்னால் உன்னை பார்க்கவே முடியலை. அஜயை உன்கிட்ட கொடுத்துட்டு போய்டணும்னு தான் நினச்சேன்” அவன் பொறுமையாக கூற, “அது தான் பிள்ளை மேல, அம்மாவுக்கு அக்கறை இல்லைனு. எங்கயோ போறான்னு சொன்னியாக்கும்?” அவள் கோபம் கொண்டாள்.

“எனக்கு வேற வழி தெரியலை இதயா. உனக்கும், எனக்கும் இருக்கும் ஒரே பாலம் அஜய் மட்டும் தான். அதையும் நான் உன்கிட்ட கொடுத்துட்டா, எனக்கும் உனக்குமான சம்பந்தம் மொத்தமா முடிஞ்சிருமோன்னு பயந்துட்டேன். அஜய் என்கிட்டே இருந்தா, பிள்ளைக்காகவாது வருவேன்னு என் ஆழ் மனம் நம்புச்சு” அவன் கூற, அவள் எதிரே இருந்த மெத்தையில் அமர்ந்து அவனை பார்த்து புன்னகைத்தாள்.

“உனக்காகவே வராத இதயா, உன் மகனுக்காக வந்திருவாளா? அப்படி என்ன அஜய் எனக்கு விஷ்வாவை விட உசத்தி?” அவள் புருவம் உயர்த்த, “இதயா…” அவன் குரல் காதலில் கசிந்து உருகியது.

அவள் முன் மண்டியிட்டு, அவள் மடி சாய்ந்து, “தியா பிறந்தது தெரிஞ்சு, நான் தியாவை பார்க்க வந்தனைக்கு, நீ தியாவை என் கண்ணில் கூட காட்டலை” அவன் அவள் முகம் பார்த்து தன் பேச்சை நிறுத்தினான்.

“தியா உண்டானதே, எனக்கு ரொம்ப நாள் தெரியாது விஷ்வா. நான் இருந்த பிரச்சனையில் அதை கவனிக்கலை. அப்புறம் என் படிப்பு பிளானும் அந்த வருஷம் நடக்கலை. வீட்டில் பயங்கர எதிர்ப்பு. இது எல்லாத்துக்கும் இடையில் நீ தியாவை பார்க்க வந்தப்ப, எனக்கு பயங்கர சந்தோஷம். நாம, சேர மறுபடியும் ஒரு வாய்ப்புன்னு” அவள் பேச்சை நிறுத்த, ‘என் இதயா, என்னை எத்தனை தூரம் தேடி இருக்கிறாள்’ அவன் இதயம் நனைந்தது.

“நீ வெளியில் காத்திருக்க, நான் தியாவை காட்ட வரணும்னு தான் நினச்சேன். நீ என்னவோ பெரிய இவன் மாதிரி, நான் இதயாவை பார்க்க வரலை. குழந்தையை தூக்கிட்டு போக தான் வந்தேன். அப்படி, இப்படின்னு ரொம்ப பேசின” அவள் குற்றம் சட்ட, “அது அஜய் வச்சி பண்ண முடியாததை, குட்டி பாப்பா வச்சி பண்ணிடலாமுன்னு எண்ணம்” அவன் அசடு வழிந்தான்.

“அது, தான் உன் கிட்ட தியாவை காட்டவே இல்லை” அவள் உதட்டை சுழித்து கொண்டே கூறினாள்.

“மாமா நடந்துக்கிட்ட முறையில் அப்பாவுக்கு பயங்கர கோபம். மாமா நான் சும்மா மிரட்டினேன், அந்த பொண்ணு கையெழுத்து போட்டிருச்சு. அப்படி பட்ட பொண்ணு விஷ்வாவுக்கு எதுக்குன்னு… மாமா நியாயம் பேசினார்.” அவன் நடந்ததை கூறினான்.

“நான் மாமா கிட்ட எதுமே கேட்கலை. தப்பு நம்ம மேல, புருஷன் பொண்டாட்டி விஷயத்தை நாமளே பேசி தீர்க்காம, மூணாவது மனுஷனை உள்ள விட்டது நம்ம தப்பு. இதுல அவரை என்னத்த கேட்க?” அவன் கூற, இதயா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“நரேன் சொல்லலைனாலும், நான் வந்திருப்பேன். அஜய்க்கு அம்மா வேணுமுன்னு சொல்லிகிட்டாவது” அவன் நிறுத்த, “நான், இப்பவும் அஜய்க்காக வரமாட்டேன் விஷ்வா. நீ இப்ப தியா மட்டும் வேணும்னு கேட்டாலும், நான் குடுத்திருவேன். விஷ்வா கேட்டு இல்லைனு சொல்ல என்ன இருக்கு. நீ வேணுமின்னு கேட்டன்னு தெரிஞ்சவுடனே விவகாரத்தை கொடுத்தேன் தானே?” அவள் எங்கோ பார்த்தபடி கூறினாள்.

“நான் என்ன கேட்டாலும் கொடுப்பியா இதயா?” அவன் கேட்க, அவள் ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

 அவன் கேட்டதில் அவள் இதயம் நனைந்தது. அவள் முகம் செவ்வானமாக சிவந்தது.

இதயம் நனையும்…

Malar – 2

0

அத்தியாயம் – 2

நாமக்கல் ரயில் நிலையம்..

கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் காற்றை சுவாசிப்பவளின் முகத்தில் மென்னகை பரவியது.

ஏற்கனவே வாழ்ந்த இடம் என்பதால் அங்கே வந்திருந்த பல மாற்றங்களை கண்டு வியந்தவள், “இவ்வளவு தூரம் மாறிப்போச்சே ஊரு” என்று நினைத்தபடி நடந்தவள் சிலநொடிகள் எந்த வழி என்று தடுமாறினாலும் பின்னர் விவரம்கேட்டு வந்து சேர்ந்தாள்.

நான்கு வழி சாலையின் முக்கில் அமர்ந்திருந்த புள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டவள், “உன்னை நம்பி வந்து இருக்கேன். என்னை கைவிட்டு விடாதே கணேசா” என்று வேண்டிக்கொண்டு திரும்ப வீடு வாடகைக்கு இருப்பதை பார்த்தாள்.

“தேங்க்ஸ் வழி சொல்லிட்டியே” என்று புன்னகைத்தபடி அங்கே இருப்பவர்களிடம் விசாரித்து அட்வான்ஸ் கொடுத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

ஒரு சமையலறை ஒரு ஹால் என்பது போல பத்துக்கு பதினாறு என்ற அறையை பார்த்து திருப்தியாக இருந்தது. அன்று கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்தவள் மறுநாள் காலையில் வீட்டிற்கு தேவையானது வாங்கிபோட்டு அவரை சரியான இடத்தில் வைப்பதற்குள் இரண்டு வாரங்கள் சென்று இருந்தது.

அவள் ‘ஹப்பாடா’ என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த பிரச்சனை ஆரம்பம் ஆனது. நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் பெரிய பிரச்சனையே வேலைதான். செவ்வந்தியின் எண்ணம் ஈடேற முதலில் தொழில் தொடங்க மூலதனம் வேண்டும் என்று சொன்னது அவளின் மனம்.

மறுநாள் காலை சீக்கிரமே கிளம்பிய செவ்வந்தி பேங்க் செல்ல அது பத்துமணிக்கு தான் திறக்கும் என்ற காரணத்தினால் பார்க்கின் உள்ளே நுழைந்தாள். நாமக்கல் மலையின் பின்புறம் இருந்த பெரிய குளத்தின் நீர் பரவிகிடக்க அதன் கரை பகுதியில் பார்க் அழகுற அமைக்கபட்டு நேர்த்தியாக பராமரிக்கபட்டு இருந்தது.

அவள் அங்கே ஓரிடத்தில் அமர்ந்து தோளில் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்த நேரம் ஒரு பெண்ணின் பேச்சுக்குரல் அவளின் கவனத்தை ஈர்த்தது. அவளின் காதலனுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கோபத்தை வார்த்தைகளில் காட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கு கொஞ்சம் கூட வாழ்க்கை பற்றிய எண்ணமே இல்லையா?” அவளின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. அவன் மெளனமாக அங்கிருந்த குளத்தை வேடிக்கைப் பார்க்க அவளின் கோபம் அதிகரித்தது.

“காலேஜ் படிக்கும்போது இருந்த மாதிரியே இருந்தால் எப்படிதான் உன்னைப் பற்றி வீட்டில் பேச முடியும்? படிப்பு முடிச்சு அப்பா தொழிலை கையில் எடுத்தும் அது நஷ்டத்தில் முடிந்துவிட்டது. அப்புறம் அடுத்தடுத்து தொடங்கிய தொழில்கள் தோல்வியில் முடிஞ்சிபோச்சு. உங்க வீட்டில் உன்னை மனுஷனாக கூட மதிக்கல..” அவள் தொடர அவனின் பார்வை அவளின் மீது நிலைத்தது.

பார்ப்பவர்களை திறம்ப பார்க்க வைக்கும் அளவிற்கு அழகு இல்லை என்றபோதும் அவளும் அழகாகவே இருந்தாள். இடைவரை தாண்டும் கூந்தல் இல்லை என்றபோது தோளை தொட்டு செல்லும் அவளின் முடி அவளை அழகாக காட்டியது. அவளுக்கு இருபத்து ஐந்து வயது என்று அவளே சொன்னாலும் நம்பமாட்டார்கள்.

ஐந்தடி  உயரத்தில் தன் எதிரே நின்றவளின் கோபமுகம் மட்டும் அவனை வெறுக்க வைத்த வித்தை என்னவென்று தீவிரமாக யோசித்தான் அவனுக்கே விடை தெரியவில்லை.

ஜனனி கல்லூரியில் இருந்தே வெற்றியை உயிருக்கு உயிராக நேசிப்பவள். இப்போது பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கிறாள். அவளுக்கு நல்ல இடத்தில் இருந்து வரங்கள் வந்தவண்ணம் இருக்க அவளின் கோபம் மொத்தமும் அவனின் புறம் திரும்பியது.

அவள் பேசுவதில் மனம் செல்வதை கவனித்த செவ்வந்தி, ‘மனசே உனக்கு இது தேவை இல்லாத விஷயம்.. நீ என்ன வேலைக்கு வந்து இருக்கிறாயோ அதமட்டும் பாரு..’ என்று தன் கவனத்தை திசை திருப்பிவிட்டாள்.

கனலை கக்கும் பார்வையுடன்,  “உங்கூடதானே நானும் படிச்சேன் இப்போ பெரிய நிறுவனத்தில் வேலையில் இருக்கேன்” அவள் குத்தி காட்டிட அவனுக்கு சுள்ளேன்று கோபம் வந்தது.

“நீ சொல்வது எல்லாமே சரிதான் நான் எதுக்குமே ஆகமாட்டேன். நான் தொட்டது எதுவும் தொலங்காது. இன்னும் என்ன சொல்றீயோ சொல்லிட்டுப் போ” என்ற வெற்றிக்கு ஏன் பிறந்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.

என்ன முயற்சி எடுத்தாலும் அது தோல்வியில் முடிவதை கண்டு அவன் துவண்டு போனான். அவனின் மனநிலை புரியாமல் எல்லோரும் அவனை மேலும் மேலும் காயபடுத்தி அது உண்மை என்றே நம்ப வைத்துவிட்டனர்.

எல்லோரும் அவனையும், அவனின் தோல்வியையும் கண்டு, ‘நல்ல காரியத்திற்கு வரும்போது இவனை ஏன்டா வீட்டிற்கு கூட்டிட்டு வர?’ என்று அவன் காதுபட பேசுவதை கண்டு எரிச்சலோடு நண்பர்களிடம் இருந்து விலகி நின்றான்.

இவன் பேசுவதை கவனிக்காத செவ்வந்தி கைகடிகாரத்தைப் பார்த்து, ‘இப்போ பேங்க் போனால் சரியாக இருக்கும்’ என்று அங்கிருந்து கிளம்பினாள்.

“நீ என்னவோ பண்ணு நான் கிளம்பறேன்” என்று ஹேன்ட்பேக்கை தோளில் போட்டுகொண்டு செவ்வந்தியை வேகமாக கடந்து சென்றாள்.

தன்னை கோபமாக கடந்து செல்லும் பெண்ணை பார்த்த செவ்வந்தி, ‘ஓஹோ இந்த பொண்ணுதான் கோபத்தில் பேசிட்டு இருந்தாளா? பாவம் அந்த மனுஷன் திரும்ப ஒரு வார்த்தை பேசாமல் பொறுமையாக இருக்காரு’ நினைத்தவளுக்கு ஏனோ திட்டு வாங்கிய அந்த நல்ல உள்ளத்தை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

அவள் சட்டென்று திரும்பிப் பார்க்க அவன் அவளின் எதிர்ப்புறம் திரும்பி நின்றிருந்த காரணத்தினால் அவனின் முதுகை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. தலையைக் குலுக்கிக்கொண்டு நேராக பேங்கிற்கு சென்றாள் செவ்வந்தி.

அதே நேரத்தில் ஜனனி பேசிய பேச்சில் இருந்து தன்னை மீட்டெடுக்க எண்ணிய வெற்றி அங்கேயே சிறிதுநேரம் அமர்ந்து இருந்தான். அவனின் கரங்களில் இருந்த ஃபைல் அவனை பார்த்து சிரிக்க, ‘உன்னை படிச்சிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை இருக்கே’ என்று நினைத்துக் கொண்டான்.

படிப்பிற்கு ஏற்ற வேலையைத் தேடினால் அது கிடைப்பதில்லை. தகுதிக்கும் குறைவான வேலையைத் தேடிக் கொண்டாளோ சுற்றி இருப்பவர்கள் மதிப்பதில்லை என்ற நிதர்சனம் உணர்ந்து அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவனுக்கு அன்று ஒரு முக்கியமான இன்டர்வியூ இருந்ததால் அதில் பங்கேற்க வந்தபோது தான் எதர்ச்சியாக ஜனனியை சந்தித்துவிட அவள் மொத்த கோபத்தையும் இவனிடம் கொட்டிவிட்டு சென்றுவிட்டாள். ஓரளவு மனம் அமைதியடைந்ததும் வெற்றி அங்கிருந்து கிளம்பினான்.

அவன் கலந்து கொண்ட இண்டர்வியூயில் இருந்து சுற்று வரை தேர்வான வெற்றி கடைசியாக அவர்கள் கேட்ட டெபாசிட் பணத்தை தன்னால் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டு தோல்வியுடன் நிறுவனத்தைவிட்டு வெளியே வந்தான்.

அவன் நினைத்தால் தந்தையிடம் பணத்தை வாங்கி கட்டிவிட்டு உடனே வேலைக்கு சேர முடியும். ஆனால் அவனுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதால் உண்மையை சொல்லிவிட்டு நிருவனத்தைவிட்டு வெளியே வந்தான்.

அவள் டெபாசிட் பண்ணியிருந்த பணத்தை எடுத்தவள், ‘இப்போதான் பணம் கைக்கு வந்து இருக்கு. இனிமேல் மற்ற விஷயத்தை எல்லாம் தெளிவாக திட்டம் போடணும்’ என்று நினைத்தபடி அவள் பேக்கில் பணம் வைத்தபடியே வெளியே வந்தாள்.

அவள் பேங்க் உள்ளே நுழைந்த நிமிடத்தில் இருந்து கவனித்த ஒருவன் அவளின் பணத்தை பறித்துகொண்டு ஓட்டம்பிடிக்க, “ஐயோ என் பணத்தை பிடிங்கிட்டு போறானே?” என்றபடி இவள் அவனை துரத்திக்கொண்டு ஓடினாள்.

அவளின் எதிர்புறம் வந்து கொண்டிருந்த வெற்றி அவள் சொல்வதை கேட்டு, “டேய் நில்லுடா” என்று ஓடும் அவனை பிடித்து இழுக்க திருடன் அவனிடமிருந்து தப்பியோட கையை தட்டிவிட்டான். வெற்றியின் கையிலிருந்த படிப்பு சான்றிதல்கள் உள்ள ஃபைல் கீழே விழுந்தது.

அவனை துரத்திக்கொண்டு ஓடும்போது அந்த ஃபைலை எடுக்க மறந்தான். திருடனை அவன் துரத்திக்கொண்டு ஓடுவதை கவனித்த செவ்வந்தி கீழே விழுந்து கிடந்த அவனின் பைலை கையில் எடுப்பதற்குள் அவனை இழுத்துக்கொண்டு அவளின் அருகே வந்தான்.

 திருடனின் கையில் இருந்த பணப்பை பறித்து அவளின் கையில் கொடுத்தான். தன் பணம் கைக்கு கிடைத்த நிம்மதியில் அவள் சில நொடிகள் அமைதியாக நின்றுவிட, “இனிமேல் பணம் திருடுவ.. திருடுவ..” என்று அவனை அடித்தான்.

அவனின் மொத்த பலமும் கண்டு திடுக்கிட்டு போனவன், “அண்ணா என்னை விட்டுடுங்க. நான் செய்வது தவறுதான் இனிமேல் இந்த மாதிரி விஷயம் செய்ய மாட்டேன்” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு நிற்காமல் ஓடிவிட்டான்.

“தேங்க்ஸ் ஸார். இன்னைக்கு நீங்க பண்ணிய உதவியை மறக்க முடியாது. இன்னைக்கு இந்த பணம் மட்டும் தொலைந்து போயிருந்தால் என் கனவு எல்லாமே கற்பனையாகவே போயிருக்கும்” என்று நன்றியுடன் அவனை கையேடுத்து கும்பிட்டாள்.

“இவ்வளவு பணத்தை எடுக்க வரும்போது கொஞ்சம் கவனமாக இருப்பது இல்லையா மேடம்” என்று அவன் கேட்துவிட்டு, “உங்க பணம் சரியாக இருக்கிறதா என்று பாருங்க” என்று சொல்ல அவள் பையை திறந்து பார்த்தாள்.

எல்லாம் சரியாக இருக்கவும், “ம்ம் இருக்கிறது ஸார். நான் கவனமாக தான் இருந்தேன். இந்த ஊருக்கு நான் புதுசு. திடீரென்று இப்படி நடக்கவும் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்” என்றாள் படபடப்புடன்.

“சரி கவனமாக வீடு போய் சேருங்க” என்று சொல்லிவிட்டு அவன் நகர அவளின் குரல் அவனை தடுத்தது.

“இவ்வளவு பெரிய உதவி பண்ணிட்டு இப்படியே போனால் என்ன அர்த்தம் வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டு போலாம்” என்றாள்.

சட்டென்று அவளின் புறம் திரும்பியவன், “உங்க பணத்தை அபேஷ் பண்ண நானும், அந்த திருடனும் திட்டம்போட்டு இதை செய்துவிட்டு இப்போ நான் உங்களிடம் நல்லவனாக நடிக்கலாம் இல்லையா?” அவன் புன்முறுவலோடு சொல்ல கலகலவென்று சிரித்துவிட்டாள் செவ்வந்தி.

அவள் சிரிக்கும்போது அவளின் முகம் மலர்வது அவனின் மனதிற்குள் ஏதோ செய்ய தலையைக் குலுக்கி தன்னை நிலைபடுத்திக்கொண்டு, “ஏன் சிரிக்கிறீங்க” என்று காரணம் புரியாமல் கேட்டான்.

“இவ்வளவு திட்டம் போட்டவர் தான் தன் ஒரிஜினல் சர்டிபிகேட் அடிங்க ஃபைலை தவறவிட்டு திருடனை பிடிக்க ஓடுவாரா?”தன் இடது கையில் இருந்த ஃபைலை அவனிடம் காட்டி கேள்வியாக புருவம் உயர்த்தினாள்.

அவனுக்கு உடனே சிரிப்பு வந்துவிட ஃபைலை வாங்க கைநீட்டிட, “என்னோடு காபி சாப்பிட வரீங்களா” என்று கேட்டாள் குறும்புடன்.

“ம்ம் வரலன்னு சொன்னால் விடவா போறீங்க” ஃபைலை அவளிடமிருந்து வாங்கிகொண்டு அவளை பின் தொடர்ந்தான். இருவரும் அருகில் இருந்த ஒரு காபி ஷாப் உள்ளே நுழைந்து, “டூ காஃபி” ஆர்டர் கொடுத்துவிட்டு ஒரு டேபிளில் அமர்ந்தனர்.

“நான் செவ்வந்தி” அவள் தன்னை தன்னை அறிமுகபடுத்திக் கொள்ள, “வெற்றி வேந்தன்” என்றான் புன்னகையுடன்.

“சூப்பர் பெயரில் வெற்றியை வெச்சு இருக்கீங்க” என்றாள்.

“அடப்போங்க பேரில் மட்டும் அது இருந்து என்ன பண்றது” என்றான் அவன் சலிப்புடன்.

“ஏங்க இப்படி எல்லாம் பேசறீங்க” என்று அவள் சொல்ல, “அதை விடுங்க” என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைக்க, “என்ன பண்றீங்க” என்று கேட்டாள்.

“பெருமையாக சொல்லும் அளவுக்கு ஒன்னும் இல்லங்க” என்றான் அவன் மீண்டும் சலிப்புடன்.

“என்னங்க எது கேட்டலும் சலிச்சுகிறீங்க. அப்போ லவ் பெயிலியர் ஆகிடுச்சா என்ன?” அவள் சந்தேகமாக அவனை நோக்கிட பக்கென்று சிரித்தவன், “என் லவ்க்கு என்ன குறைச்சல் அது நல்லாவே இருக்கு. காலையில் கூட லவரை பார்த்துட்டு தான் இன்டர்வியூ போனேன்” என்றான்.

அவளுக்கு உடனே பார்க்கில் தன்னை கடந்து சென்ற பெண்ணின் நினைவு வர, “காலையில் பார்க்கில் ஒரு பொண்ணு அவளோட லவரை வெளுத்து வாங்கிட்டா. பாவம் அந்தப்பையன் அவளை எதிர்த்து ஒரு வார்த்தை பேசல” என்றதும் வெற்றிக்கு உடனே ஜனனின் நினைவுதான் வந்தது.

அதற்குள் காபி வந்துவிடவே அந்தப்பேச்சு அதோடு நின்றுபோனது.

இருவரும் மெளனமாக அதை பருக, “நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க” என்று கேட்டான் வெற்றி.

“நான் தொழில் தொடங்க பிளான் பண்ணிட்டு இருக்கேன்” என்று சொல்லவும், “சரிங்க ஆல் தி பேஸ்ட்” என்று அவன் ஃபைலை எடுத்தவன், “நீங்க வாங்கிக் கொடுத்த காஃபிக்கு தேங்க்ஸ்” என்றான்.

“என்னங்க சந்திச்சோம். உங்களைபற்றி எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிறீங்க” என்று அவள் மீண்டும் அவனை வம்பிற்கு இழுக்க, “ரயில் சிநேகம் மாதிரிதாங்க நம்மளோட இந்த எதிர்பாராத சந்திப்பும். சோ அடுத்த சந்திப்பு பற்றி நான் பேசல. இப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

ஆறடி உயரத்தில் மாநிறத்தில் இருந்தான். திரண்ட தோள்களும், கட்டுகோப்பான உடலமைப்பும், அவனின் வசீகரமான முகமும் மற்றவர்களை கண்டிப்பாக வசிகரித்துவிட்டும். அலட்டல் இல்லாத பேச்சும், அசடு வழியாத அவனின் கம்பீரம் அவளை ஏதோவொரு விதத்தில் கவர்ந்தது என்றே சொல்லலாம்.

தன்னை மறந்து அவனை ஒரு நிமிடம் பார்த்தவள், ‘ஏய் நீ போற ரூட் சரியில்ல..’ என்று மனதிற்கு கடிவாளமிட்டு எழுந்து வீட்டிற்கு சென்றாள்.

மாலை வீடு திரும்பிய அண்ணனை எதிர்பார்த்து வாசலில் காத்துக் கொண்டிருந்தாள் ஜமுனா. அவன் சோர்வுடன் வருவதை பார்த்தும், ‘இந்த வேலையும் கிடைக்கவில்லை போல’ என்று நினைத்தவளுக்கு மனசு வருத்தமாக இருந்தது.

அதை உடனே மனதிற்குள் மறைத்துக்கொண்டு, “ஹப்பா என்னடா இன்னும் ஆளை காணலையேன்னு நினைச்சிட்டே இருந்தேன்” என்ற தங்கையை பார்த்தும் அவனுக்கு மற்ற விஷயங்கள் மறந்து போனது.

“இன்னைக்கு எதுக்கு எதிர்பார்த்து காத்திருந்த?” சந்தேகமாக அவளை ஏறிட்டான்.

“இன்னைக்கு கோதுமை மாவில் குலோப்ஜாமூன் செய்தேன் அதுதான் சாப்பிட ஆள் தேடிட்டு இருந்தேன்” என்று அவள் சிரித்தபடி கூற, “நான் என்ன எலியா என்னை வைத்து டெஸ்ட் பண்ணி பார்க்கிற” அவளோடு வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த நாளின் நிகழ்வுகளை அவன் அதோடு மறந்துவிட, அவளும் தன் தொழிலுக்கு தேவைப்படும் கடையை தேர்வு செய்ய இடம் தேடுவதில் மும்பரமாக இறங்கினாள்.

UUU–EPI 23

0

அத்தியாயம் 23

சாக்லேட் 34 செல்சியசில் உருகும் தன்மையுடையது. நமது உடலின் வெப்ப நிலையும் 34 செல்சியல் ஆகும். அதனால் தான் நாம் வாயில் வைத்ததும் சாக்லேட் உருகி கரைகிறது.

“ண்ணா!”

“பேசாதே போ!”

“நெஜமா போய்டவா?”

“போ போ! எனக்குன்னு யாரு இருக்கா? நான் இப்படியே அனாதையா இருந்துட்டுப் போறேன்” என்றவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி நின்றுக் கொண்டான்.

திரும்பி நடக்கும் காலடி ஓசை கேட்கவும், இவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

‘சின்ன புள்ள கிட்ட உனக்கு என்னடா கோபம்! வரல வரலன்னு ஒவ்வொரு நாளும் ஏங்கிட்டு, வந்ததும் போக சொல்லறியே மட்டி மடையா!’ என மனசாட்சி திட்ட, கண்ணைத் துடைத்துக் கொண்டவன் அவசரமாய்,

“பேபிமா” என கத்தியபடியே திரும்பினான்.

அவன் முன்னே உதட்டில் சிரிப்புமாய் கண்களில் கண்ணீருமாய் நின்றிருந்தாள் சிந்தியா. அவளைப் பார்த்ததும் இவனுக்கு சிரிப்பு பீரிட்டுக் கொண்டு வந்தது. சிரித்துக் கொண்டே தன் தங்கையை இறுக அணைத்துக் கொண்டான்.

தூரத்தில் இருந்து விசில் சத்தமும்,

“மச்சா! மாக்வே யே?(மச்சான், காதலியா)” எனும் கிண்டல் குரல்களும் கேட்க,

“ஹோய் போடோ! அடேக்லா!(முட்டாப்பசங்களா, தங்கச்சிடா)” என கத்தினான் இவன்.

விடலை பருவத்தில் இருக்கும் பையன்களுக்கு எல்லாவற்றிலும் கிண்டல் கேலிதான். இவன் பதினாறு வயதில், நெடுநெடுவென வளர்த்தியில், அரும்பு மீசையுடன், குச்சியாய் இருந்தான். மூர்த்தியின் ஜாடை அப்படியே இருந்தது. அவரைப் போலவே மாநிறத்தில், அழகனாய் இருந்தான்.

அவனைப் பார்க்க பள்ளி ஹாஸ்டலுக்கு வந்திருந்த தமக்கையிடம்,

“பேபிமா! தனியாவாடா வந்த? இங்கலாம் தனியா வரக்கூடாதுடா! எல்லாம் ஆம்பள பசங்க, கெட்ட பயலுங்க! ஆம்பள ஸ்கூல் வேறயா, அதான் பொம்பள புள்ளயப் பார்த்தா காணாதத கண்ட மாதிரி ஆன்னு வாயப் பொளந்துட்டு நிப்பானுங்க!” என்றான்.

“நீயும் யாராச்சும் கேர்ள் விசிட்டிங் வந்தா இப்படித்தான் பார்ப்பியா?” என கேட்டாள் சின்னவள்.

தலையை சொறிந்தவன், அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான். அண்ணனைப் பார்த்து இவளுக்கும் சிரிப்பு வந்தது.

“தில்லும்மா கூட வந்தேன். கூடவே இன்னொரு ஆளும் வந்திருக்காங்க! யார்னு சொல்லு பார்ப்போம்?”

“யார்டா? அப்பாவா? அவர் போன வாரம் தானே வந்துட்டு, என்னை ஷாப்பிங் கூட்டிட்டுப் போனாரு!”

“அப்பா இல்ல சில்லி! நம்ம கிரேட் சிவசு தாத்தா”

நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் பெரியவன். அவன் செயலைப் பார்த்து இன்னும் பொங்கி சிரித்தாள் சிந்தியா.

“கால் ரொம்ப வலிக்குதாம்! அதனால இங்கலாம் நடந்து வர முடியாதாம்! கார்லயே உக்காந்துருக்காரு! அவருக்கு பேச்சுத் துணையா தில்லும்மாவையும் புடிச்சு வச்சிருக்காரு! நாம பேசி முடிச்சுட்டு, அவங்கள விசிட்டர் கார் பார்க்கிங்ல போய் பார்க்கலாம்” என்றாள் சிந்தியா.

தாத்தா சொன்ன காரணம் தன்னைப் பார்க்கப் பிடிக்காமல் தான் என்பது அவனுக்கும் புரிந்தது, அவளுக்கும் புரிந்தது. ஆனாலும் இருவரும் அதை பெரிது படுத்திக் கொள்ளவில்லை.

தாத்தனின் தகிடுதத்தங்களை அறிந்ததில் இருந்து அவரை தன் வழிக்குக் கொண்டு வர பல திட்டங்களை வகுத்தாள் சின்னவள். தாயைப் போல பிள்ளை, நூலை போல சேலை என சொல்வது இங்கே பொருந்தவே பொருந்தாது. தாத்தனுக்கு மேலே பேத்தி, அவருக்கே இவள் வாத்தி என்று சொன்னால் சாலப் பொருத்தமாக இருக்கும். அதற்கு முதல் அடியாக தன் மாதாந்திர பரிட்சை ரிசால்ட்டுடன் தாத்தனின் முன் போய் நின்றாள் சிந்தியா.

“என்னடாம்மா? படிக்கற நேரத்துல இங்க வந்து நிக்கற? தலை கிலை வலிக்குதா? தாத்தா காபி போட்டு எடுத்துட்டு வரவாடா?” என பாசமாகக் கேட்டார் சிவசு.

“தாத்தா!” பேத்தி குயில் கொஞ்சியது.

“சொல்லுமா செல்லம்”

“மந்த்லி டெஸ்ட்ல நான் ஒரு பாடத்துல பெயில் ஆகிட்டேன்!” என சொல்லியபடியே ரிசால்ட்டை தாத்தனிடம் நீட்டினாள்.

அதிர்ந்துப் போனார் சிவசு. இது வரை குறைவான மார்க் என்றால் சில பாடங்களில் நூற்றுக்கு எண்பது எடுத்திருக்கிறாள். ஆனால் ஒரு முறை கூட பெயில் ஆனதில்லை. சிவசுவின் கற்பனையில், நார் நாராக கிழிந்துப் போன டாக்டர்களின் வெள்ளை அங்கி வந்துப் போனது. தலையை பலமாக உலுக்கிக் கொண்டார் அவர்.

“பெயில் ஆகற அளவுக்கு எப்படிடா போச்சு? இது வரைக்கும் இப்படி நடந்ததே இல்லையே! இன்னும் எக்ஸ்ட்ரா டியூசன் ஏற்பாடு பண்ணவா?” கேள்வியாய் கேட்டுத் துளைத்தார்.

“ம்ப்ச், போங்க தாத்தா! என்னால காண்சேண்ட்ரேட் பண்ணி படிக்கவே முடியல” என சலித்துக் கொண்டாள் பேத்தி.

“ஐயயோ! என்னம்மா குண்டத் தூக்கிப் போடற! ஏன், ஏன் படிக்க முடியல?”

“கொஞ்ச நாளா ஒன்னுமே சரியில்ல தாத்தா! அண்ணா ஞாபகமா இருக்கு! புக்க தொறந்தாலே அவன் மூஞ்சு தான் பக்கம் பக்கமா வருது! படிக்கவே முடியல. எங்க வர டெஸ்ட்லயும் மார்க் கொறஞ்சிடுமோன்னு பயமா இருக்கு தாத்தா”

“இவ்ளோ நாள் இல்லாம இப்போ என்ன அவன் ஞாபகம்?”

“சிவசியாம(வீட்டில் அழைப்பது சியாம்) பார்க்க பார்க்க மறந்து போன அண்ணா ஞாபகம் வருது போல தாத்தா! என்னமோ பார்க்கனும் மாதிரி இருக்கு! கூட்டிட்டுப் போறீங்களா தாத்தா ப்ளீஸ்!” என கெஞ்சியவளை முறைத்தார் சிவசு.

“சரி விடுங்க! அவன பார்க்காத ஏக்கத்துல நான் பெயில் ஆனா என்னைக் கோவிச்சுக்கக் கூடாது, சொல்லிட்டேன்” என அசால்ட்டாக சொல்லியவள், எழுந்து ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.

அந்த வாரக் கடைசியிலேயே பேத்தியையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு பள்ளி ஹாஸ்டலுக்கு வந்துவிட்டார் சிவசு.  

“எவ்ளோ நாள் கழிச்சு இன்னிக்குத்தான் உன்னைப் பார்க்கறேன்! தில்லும்மா வரப்பலாம் உன் போட்டோ காட்ட சொல்லிக் கேட்பேன்! வளந்துட்டடா குட்டிமா நீ! சரி, வா காண்டீன் போகலாம். அங்க அண்ணா உனக்கு பெலாஞ்சா(ட்ரீட்) பண்ணறேன்.” என தங்கையை அழைத்தான்.

“உனக்குன்னு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேன். அம்மாவும் தில்லும்மாவும் சமைச்ச ஐட்டம்ஸ். காண்டின்ல போய் சாப்பிடலாம் வா” என்றாள் இவள்.

காண்டினுக்கு அழைத்துப் போய் தங்கையை அமர்த்தியவன், ஜில்லென இரண்டு கேன் கோக் வாங்கி வந்தான். அதற்குள் உணவைப் பரிமாறி வைத்திருந்தாள் சின்னவள். இருவரும் சாப்பிட ஆரம்பிக்கும் போது, இவன் நண்பர்கள் நால்வர் கூட்டமாய் அருகில் வந்தார்கள். போங்கடா பக்கிங்களா என்பது போல முறைத்தான் இவன்.

“மச்சி, சாப்பிடற போல” என்றான் ஒருவன்.

“இது என்ன மச்சி, கோழி மாதிரி இருக்கு” என்றான் மற்றொருவன்.

“மச்சா, ஊடாங்(இறால்) தலைய தலைய காட்டுது” என்றான் இன்னொருவன்.

ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்து போய் கிடப்பவர்களாயிற்றே!

“நானும் தங்கச்சியும் ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்போத்தான் பார்க்கறோம்! எங்கள தனியா பேச விடுங்களேன்டா! சாப்பாடு தரேன்! குடுத்ததும் ஓடிப் போயிடனும்!” என காய்ந்தவன், தன் தட்டில் மீதம் இருந்த ஐட்டங்களை அப்படியே கொட்டி அவர்களிடம் நீட்டினான்.

“நம்ம தங்கச்சிட்ட எவ்ளோ நேரம் வேணும்னாலும் பேசு மச்சா! நாங்க இப்படியே கெளம்பறோம்” என சொல்லியவர்கள், சிந்தியாவைப் பார்த்து,

“ரத்தத்தின் ரத்தமே

என் இனிய உடன்பிறப்பே” என பாடியபடியே தட்டுடன் ஓடிப்போனார்கள்.

“ஆ காட்டு!” என தன் தட்டில் இருந்த உணவைப் பிசைந்து அண்ணனுக்கு ஊட்ட முனைந்தாள் சிந்தியா.

“நீ சாப்பிடுடா”

“வீட்டுல தெனம் இந்த மாதிரி தான் நான் சாப்பிடறேன்! நீ தான் நல்ல சாப்பாடு இல்லாம இளைச்சுப் போய் கிடக்கற! இன்னிக்கு உனக்குன்னு எடுத்துட்டு வந்ததயும் உன் ப்ரேண்டுங்க எடுத்துட்டு ஓடிட்டாங்க! நீ வாயத் தொற” என மிரட்டினாள் அவள்.

புன்னகையுடன் வாய் திறந்து அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான் பெரியவன்.

சில சமயங்களில், நம் மனதுக்கு மிக பிடித்த உறவுக்காரர்களையோ, நண்பர்களையோ பல வருடங்கள் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் திடீரென ஒரு நாள் பார்க்கும் போது அந்த வருட இடைவெளி என்பது இல்லாதது போல சகஜமாக நெருங்கி விடுவோம்! அது போலத்தான் இந்தப் பிரிவென்பது எங்களுக்கு ஒன்றுமே இல்லை என்பது போல பார்த்தவுடனே ஒட்டிக் கொண்டார்கள் ரத்த உறவுகள் இருவரும். உண்டு முடித்து, கோக்கையும் பருகி முடித்தார்கள்.

“அண்ணா மேல என்ன கோபம்? ஏன் என்னைப் பார்க்கவே வரல?” என சோகமான குரலில் கேட்டான் இவன்.

மூர்த்திக்கு திருமணம் ஆகி ஹாஸ்டலுக்கு வந்ததில் இருந்து அவன் வீட்டுக்கே வந்தது இல்லை. பள்ளி விடுமுறைக்கு கூட, ஹாஸ்டல் வாசம்தான். தனியார் பள்ளியாதலால் வருடம் முழுக்க ஹாஸ்டல் திறந்து தான் இருக்கும். தீபாவளி பண்டிகையின் போது, காலையில் சாமி கும்பிட்டு விட்டு, மருமகள்களிடம் பொறுப்பைக் கொடுத்து விட்டு பேரனைப் பார்க்க வந்துவிடுவார் தில்லும்மா! மீத பொழுது அவனுடன் தான் கழியும் அவருக்கு. இவனாலேயே சிவசுவுக்கும் தில்லும்மாவுக்கும் அடிக்கடி மாட்டிக் கொள்ளும்!

“என்னை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டனு கோபம் ண்ணா! அதோட என் கூட இருக்கறத விட இங்கதான் சந்தோசமா இருக்க நீன்னு தில்லும்மா சொன்னாங்களா! எனக்கு ரொம்ப சேடா ஆகிருச்சு! உனக்கு நான் யாருமே இல்லைத்தானேனு தோணிருச்சு! வெளாட நீ இல்லாம, என் காயத்துக்கு முத்தம் வைக்க நீ இல்லாம, சாக்லேட் குடுக்க நீ இல்லாம, நான் பாடறத கேக்க நீ இல்லாம, நான் சொல்ற ஜோக்குக்கு சிரிக்க நீ இல்லாம, என் கூட சேர்ந்து ஆட நீ இல்லாம நான் எவ்வளவு தவிச்சுப் போனேன் தெரியுமா! தாத்தா கதை சொல்லிட்டுப் போனதும், விடியற வரைக்கும் உன்னை நெனைச்சு நான் அழுதுட்டே இருப்பேன்! ஐ மிஸ்ட் யூ சோ மச் ண்ணா! அந்த சேட்நெஸ் தான் மேட்நெஸா மாறிடுச்சு! உன் மேல செம்ம கோபமா ஆகிருச்சு. ஆனா இப்போ எல்லாமே புரிஞ்சிகிட்டேன்ணா! மறுபடி என் கூட வீட்டுக்கு வந்துடு! நான் தாத்தா கிட்ட பேசறேன்” என கலங்கிய கண்ணைத் துடைத்தப்படியே சொன்னாள் சிந்தியா.

மெல்ல தலையை இடம் வலம் ஆட்டினான் அவன்.

“இங்க வந்த புதுசுல என்னால அட்ஜஸ்ட் பண்ணிக்கவே முடியலடா குட்டிமா! உன்னையும் தில்லும்மாவையும் நெனைச்சு ரொம்ப அழுவேன்! ஆனா தாத்தா முகத்த மனசுல கொண்டு வந்து, என் அழுகைய நிறுத்திக்குவேன். இங்க பழகற வரைக்கும் தனிமையா ஃபீல் பண்ணேண்டா. ஆனா போக போக அடாப்ட் ஆகிக்கிட்டேன். நெறைய குட் ப்ரேண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. நெறைய ஸ்போர்ட்ஸ் கத்துக்கறோம், நெறைய பாடம் படிக்கறோம், வேற நெறைய ஆக்டிவிட்டிஸ்னு நான் பிசியா இருக்கேன்டா. நம்ம வீட்டுல மாதிரி தாத்தா எப்ப கொட்டுவாரோன்னு பயம் இல்ல! அவர் வந்ததும் ஓடி ரூமுல ஒளியற அவசியம் இல்ல! அவர் எனக்கு செஞ்சதுலயே, இங்க சேர்த்து விட்டதுதான் ரொம்ப நல்ல விஷயம் பேபிமா” என பொறுமையாக விளக்கினான் அண்ணன்காரன்.

“அப்போ வரமாட்ட?” என கோபமாகக் கேட்டாள் சிந்தியா!

“புரிஞ்சுக்கோடா செல்லம்! நான் வீட்டுல இருந்தா, தாத்தாவுக்கும் தில்லும்மாவுக்கும் எப்போவும் சண்டையா இருக்கும். மேகலா சித்தி ஒரு மாதிரியா பீல் பண்ணுவாங்க! அதோட..”

“இன்னும் என்ன?” கத்தினாள் சிந்தியா.

சுற்றும் முற்றும் பார்த்தவன்,

“கத்தாதடா பேபிமா! எல்லாரும் நம்மள பார்க்கறாங்க பாரு! பொறுமையா சொல்லறத கேளுடா ப்ளீஸ்” என கெஞ்சினான் இவன்.

முகத்தைத் திருப்பிக் கொண்டவள்,

“சொல்லு, கேக்கறேன்” என்றாள்.

அவள் செயலில் புன்னகை விரிந்தது இவனுக்கு.   

“இப்போ உனக்கும் விவரம் தெரியுது! முன்னனா தாத்தா என்னை முறைக்கிறதோ, கொட்டறதோ புரியாத வயசு உனக்கு. சோ தாத்தா இஸ்டம் போல இருந்தாரு. இப்போ உன் முன்னுக்கு என்னை சகிச்சுக்க வேண்டிய கட்டாயமாகிடும் அவருக்கு. வயசான காலத்துல அவருக்கு எதுக்கு இந்த ஸ்ட்ரேஸ். அதோட என்னை மிஸ்ட்ரீட் பண்ணா உனக்கும் கோபம் வரும். உன்னை உயிரா பார்த்துக்கற தாத்தா கிட்ட சண்டை போட முடியாம உனக்கும் ஸ்ட்ரேஸ் ஆகும். என்னை வெறுத்தாலும், உன் மேல அவ்ளோ அன்பு வச்சிருக்காரு சிவசு தாத்தா! நான் மறுபடி வந்து உங்களுக்குள்ள பிளவைக் கொண்டு வர வேண்டாம்டா. புரிஞ்சுக்கோ! எனக்கு, என்னை விட உன் நிம்மதிதான் முக்கியம்” என ஐந்து வயது மூத்தவனாக அழகாய் புரிய வைத்தான் தங்கைக்கு.

அதற்கும் கண்ணைக் கசக்கினாள் அவள்.

“உனக்கு என் மேல பாசமே இல்லை” என குறைப்பட்டாள் அவள்.

“கிட்ட இருந்து பாசம்னு உன் நிம்மதிய பறிக்கறதுக்கு, தூரமா பாசமில்லாதவனாவே இருந்துட்டுப் போறேன் போ”

“எனக்கு நீ வேணா போ”

“இப்படி பொசுக்குன்னு இந்த அண்ணாவ வேணான்னு சொல்லிட்டியே! வாங்கிட்டு வந்த சாக்லேட்ட எல்லாம் குடுக்க இப்ப அவசரமா வேற தங்கச்சிய நான் எங்க போய் தேடறது?” என சத்தமாய் யோசித்தான் அவன்.

எழுந்து வந்து அவன் பின்னால் நின்று முதுகிலேயே மொத்தினாள் சிந்தியா. அவள் கொடுத்த அடியை சத்தம் போடாமல் வாங்கிக் கொண்டான் பெரியவன். பின்,

“ண்ணா” என இவள் கை நீட்ட, கோக் வாங்கும் போது வாங்கியிருந்த சாக்லேட்களை பாக்கேட்டில் இருந்து எடுத்து நீட்டினான் அவன்.

சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள் அவள். அவள் சாப்பிட்டு முடித்ததும், தாத்தா பாட்டியைப் பார்க்க போனார்கள் இருவரும். தில்லும்மா அவனைக் கட்டிக் கொள்ள, பேத்தி முன் வேறு வழி இல்லாமல் அவன் தலையைத் தடவி,

“நல்லா இருக்கியாப்பா? தாத்தாவுக்கு மில்லுல ரொம்ப வேலை. அதான் இத்தனை நாளா பாட்டிய மட்டும் அனுப்பி வச்சேன். இனி அடிக்கடி வரேன்” என சொல்லி வைத்தார்.

பேத்தி அந்த வார்த்தையை மெய்யாக்குவாள் என அப்பொழுது அவருக்குத் தெரியாது. அன்றிலிருந்து மாதம் ஒரு முறை தாத்தாவை கெஞ்சி கொஞ்சி மிரட்டி அண்ணனைப் பார்க்க வந்துவிடுவாள். தீபாவளிக்கு தில்லும்மாவுடன் இவளும் வந்து அவனோடு நேரத்தை செலவளிப்பாள்.

மார்க் தொன்னூறுக்கும் மேல் எடுத்து, அதற்கு பரிசாக அண்ணாவுடன் ட்ரீப் போக வேண்டும் என தாத்தனிடம் பேரம் பேசினாள். தனக்கு பிடித்த பல விசயங்களை படிப்பைக் காட்டியே நிறைவேற்றிக் கொண்டாள். ஸ்வீமிங் பூல், கம்ப்யூட்டர், அண்ணாவுக்கு கடிகாரம் வாங்கிக் கொடுக்க, நல்ல ப்ராண்டேட் சட்டை வாங்க, நைக்கி ஷூ வாங்க பணம் என எல்லாவற்றையும் சாதித்துக் கொண்டாள் சிந்தியா.

உடை, உணவு, படிப்பு எல்லாம் இன்னும் தாத்தாவின் சாய்ஸ் தான். ஒரு டாக்டராக அவளை சின்ன வயதிலேயே க்ரூம் செய்ய ஆரம்பித்தவர், அவள் உடைகளிலும் ஒரு கண்ணியத்தை கடைப்பிடிக்க வைத்திருந்தார். சிவசுவின் கைங்கர்யத்தால் சிந்தியா கங்காவாக மாறிப்போனாள். கங்கா சந்திரமுகியாய் நின்றாள், பாடினாள், ஆடினாள், ஓடினாள். சிந்தியா டாக்டராய் நின்றாள், உடுத்தினாள், சாப்பிட்டாள், படித்தாள், குளித்தாள், படுத்தாள், கனவு கண்டாள்.      

தன் மகனுக்காக தன்னை விட பாடுபடும் சிந்தியாவை தன் தந்தைக்குத் தெரியாமல் தங்கமாய் தாங்கினார் மூர்த்தி. தங்கள் ஒரே மகள் மீது கொள்ளைப் பாசம் வைத்திருக்கும் சிவராமனும், வாணியும் சிந்தியா அவள் அண்ணாவுடன் செல்லும் வெளிநாட்டு ட்ரீப்புகளுக்கு கூடவே சென்று தங்கள் நேசத்தைப் பகிர்ந்துக் கொண்டனர். எல்லோரும் நேராகவும் மறைமுகமாகவும் சிந்தியாவைத் தாங்குவதைப் பார்த்து, மேகலாவும் அவளை அனுசரித்துப் போய்விடுவார். இப்படித்தான் அந்த குடும்பத்தின் இளவரசியாய் வலம் வந்தாள் சிந்தியா.

அண்ணா தங்கையின் பாசம், அவர்கள் வளர வளர இன்னும் வலுப்பெற்றது. இவளை கேட்காமல் அவன் ஒரு காரியத்தையும் செய்யமாட்டான். இவளும் தன் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் அவனிடம் ஷேர் பண்ணிக் கொள்வாள். முதல் பீரியட், முதல் லவ் லெட்டர், யாருக்கும் தெரியாமல் நெஞ்சில் குத்திக் கொண்ட டாக்டர் சிந்தி டாட்டூ என எல்லாம் அவனிடம் சொல்லி விடுவாள்.

உள்நாட்டு காலேஜிலேயே டிப்ளோமா முடித்தவன், வெளிநாட்டுக்குப் போய் டிகிரி செய்ய விருப்பப்பட்டு தந்தையிடம் சொல்ல, அவர் அவருடைய தந்தையிடம் கேட்க,

“தொரை எடுத்த மார்க்குக்கு இங்க காலேஜ்ல சேர்த்து படிக்க வச்சதே பெருசு! இதுல வெளிநாட்டுக்குப் போகனுமாமா? யார் சேர்த்த சொத்த யார் அழிக்கறது?” என எகிறினார் சிவசு.

விஷயம் தில்லும்மா மூலம் சிந்தியாவின் காதுக்குப் போக, போன் போட்டு அண்ணனை வறுத்துவிட்டாள்.

“ஏன் வெளிநாடு? இவ்ளோ நாள் தூரம் இருந்த! படிச்சு முடிச்சுட்டு இந்த வீட்டுக்கு வராட்டியும் என் பக்கத்துல எங்கயாச்சும் இருப்பன்னு நெனைச்சேன்! ஆனா என்னை விட்டுப் போறதுலயே இருக்க நீ?” என கத்தித் தீர்த்தாள்.

“இப்படி ஒரு ரியாக்‌ஷன் வரும்னுதான் உன் கிட்ட இதப்பத்தி ஒன்னும் சொல்லலடா! எனக்குலாம் வெளிநாட்டுக்குப் போய் படிக்கக் கூடாதுன்னு விதிச்சிருக்குப் போல! விடுவிடு” என வருத்தப்பட்டான்.

படித்து முடித்ததும் இங்கேயே மில்லிலேயே வேலை செய்ய சொல்லி ஏற்கனவே சொல்லி வைத்திருந்தாள் சிந்தியா. அவனுக்கோ இங்கிருந்து கண்காணாமல் எங்கேயாவது போய் விட வேண்டும் எனும் எண்ணம். நம் காலையே சுற்றி வரும் பூனைக்கூட சீண்டி விட்டால் சீறி நிற்கும். அப்படி இருக்கையில் இள ரத்தம் பாயும் இவனை முதுகெலும்பு இல்லாதது போல நடத்தினால் இவனும் எவ்வளவு நாள் தான் பொறுப்பான்! நீரையும் தாயையும் பழிப்பது எவ்வளவு பாதகமான செயல்! தன்னை உலகுக்கு கொண்டு வந்து உயிரை விட்ட அப்பாவி ஜீவன், இன்னும் சிவசுவின் நாக்கால் செத்து செத்து மடிவதை எவ்வளவு காலம்தான் தாங்க முடியும் அவனால்!

தங்கைக்காக, அவள் காட்டிய பாசத்துக்காகப் பொறுத்து பொறுத்துப் போனவன், அவள் பெயரில் இருக்கும் சொத்துபத்துக்களை தன் பெயருக்கு மாற்ற முடிவெடுத்திருப்பதை தில்லும்மா மூலம் அறிந்ததில் இருந்து துடியாய் துடித்தான். கண்டிப்பாக இந்த விஷயம் தெரிந்தால் வீட்டில் போர் வெடிக்கும்! தங்கை, தாத்தாவின் கட்டுக்கடங்காத கோபத்தை சந்திக்க நேரும் என அறிந்து வைத்திருந்தவன், மொத்தமாய் வெட்டிக் கொண்டு போவது என முடிவெடுத்தான். படிக்கப் போவது போல போய் வெளிநாட்டிலேயெ செட்டில் ஆகி விடலாம் என்பது தான் அவன் திட்டம். மற்றவர்களிடம் உறவை வெட்டிக் கொண்டாலும் தங்கையைப் பார்க்காமல் முடியாது என நன்றாக புரிந்தது. உலகம் ஒரு க்ளோபல் கிராமம் தானே! எப்பொழுது வேண்டுமானாலும் அவளை வரவைத்து கொஞ்சிக் கொள்ளலாம் என முடிவெடுத்தப் பின் தான் நிம்மதியானது அவனுக்கு.

“அண்ணா இங்கயே படிண்ணா! என் கூடவே இருண்ணா! இந்த வீட்டுக்கு வர பிடிக்கலனா விடு! நான் அபார்ட்மேண்ட் வாங்கி போடறேன்! அங்க இருந்துக்கலாம் நாம ரெண்டு பேரும். உன் ப்யூச்சருக்கு நான் என்னலாம் ப்ளான் பண்ணிருக்கேன் தெரியுமா!”

“என்ன, என்ன ப்ளான் பண்ணிருக்க? உன் தாத்தன் காச எடுத்து எனக்குப் பிச்சை போட போறியா?” என மனதைக் கல்லாக்கி கொண்டு கோபத்தைக் கொண்டு வந்தான் குரலில்.

“ண்ணா” அவன் கோபக் குரலில் அதிர்ந்துப் போனாள் சின்னவள். குட்டிமா, பேபிமா என தன்னைத் தாங்கும் அண்ணனா குரலை உயர்த்திக் கத்துவது என தடுமாறிப் போனாள் சிந்தியா.

“இங்க பாரு பாப்பா! காசு குடுக்கறேன், வீடு குடுக்கறேன்னு எனக்காக எதாச்சும் செஞ்ச, நான் கண் காணாம போய்டுவேன்! அதுக்கப்புறம் என்னை நீ பார்க்கவே முடியாது! என்னைப் பெத்தக் கடமைக்கு எங்கப்பா காசு போட்டு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பட்டும். அனுப்பியே ஆகனும்! மத்த யாரும் எனக்கு எந்தப் பிச்சையும் போட வேணாம்” என்றவன் பட்டென போனை வைத்து விட்டான்.

“என் கிட்டயே ரோஷம்! என் கிட்டயே கோபம்! போடா போ! எனக்கும் நீ வேணா! எங்கயோ போ, என்னவோ படி! ஐ டோண்ட் கிவ் அ டேம்ன்” என கத்தியவள், போனை சுவற்றில் விட்டடித்தாள். அவள் மனதைப் போலவே, அதுவும் பாகம் பாகமாக உடைந்து விழுந்தது.

அவ்வளவு கோபத்திலும் அவன் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை தாத்தாவிடம் வாங்கியிருந்தாள் சிந்தியா. அதன் பிறகு இருவருக்குள்ளும் ஒரு கேப் விழுந்திருந்தது. இவன் அழைத்த போன் கால்கள் எடுக்கப்படாமல் போனது! அனுப்பிய மேசேஜ்கள் படிக்கப்பட்டு ரிப்ளை இல்லாமல் போனது, அனுப்பிய எண்ணிலடங்கா பரிசுகள் அப்படியே திருப்பி அனுப்பப்பட்டது! மறுபடி முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் பிடிவாதம் பிடித்த சிந்தியா. பாசம் நெஞ்சு முட்ட இருந்தது, அதைவிட அவன் விரும்பிய தனிமையைக் கொடுக்க வேண்டும் எனும் பேரன்பும் அவளுள்ளே ஒளிந்திருந்தது.

“அவனுக்கு நீ என்னலாம் செய்யப் போறேன்னு நான் எடுத்து சொல்லி கூட பிடிவாதம் புடிச்சு வெளிநாட்டுக்குப் போறேன்னு நிக்கறான். பிடிவாதத்துல நீயும் அவனும் அப்படியே உங்க தாத்தன கொண்டிருக்கீங்க” என தில்லும்மா புலம்பியதிலேயே அண்ணனின் மனதில் இருப்பதைப் புரிந்துக் கொண்டாள் சிந்தியா.

“ரோஷம், ரோஷம்! என் கிட்ட கூட ரோஷம்! நீ வேணாம்னு சொன்னா விட்டுருவனா! உனக்கு சேர வேண்டிய உரிமையான சொத்த, நேரம் வரப்போ உன் கிட்டயே சேர்ப்பேன்!” கோபம் போய் செல்லமாகத் திட்டிக் கொண்டாள் அவனை.

அவன் அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்க, இவள் மலேசிய எஸ்.பி.எம் பரிட்சையில் நல்ல ரிசால்ட் எடுத்து வெளிநாட்டில் ப்ரைவேட்டாக டாக்டர் படிப்பை தொடர்ந்தாள். ஆஸ்திரேலியாவில் படித்து, அதன் பிறகு லண்டனில் முடித்தாள் தனது படிப்பை. அவள் கிராடுவேஷனின் போது குடும்பமே குழுமி இருந்தது. பேத்தியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதுவிட்டார் சிவசு. தாத்தனின் கண்ணீர் துளிகள், தான் இத்தனை வருடம் பட்ட கஸ்டங்களை எல்லாம் கழுவி விட்டது போல உணர்ந்தாள் சிந்தியா. அண்ணன்காரன் யாருக்கும் தெரியாமல் ஓர் ஓரமாய் நின்று கண் கலங்க பார்த்துவிட்டுப் போனான்.

ண்ணா கை வலிக்குது, கால் வலிக்குது, தொண்டை வலிக்குது என சலுகையாய் அழுத தங்கை இன்று ஒரு டாக்டர் எனும் எண்ணமே அவனுக்கு புன்னகையையும் பெருமையையும் ஒருங்கே தோற்றுவித்தது.   

மலேசிய கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் குறிப்பிட்ட வருடங்கள் தன் சேவையை முடித்தவள், அதன் பிறகு ப்ரைவேட் ஹாஸ்பிட்டலில் தனது வேலையைத் தொடர்ந்தாள். இரண்டு வயதில் இருந்து தன் சக்திக்கு மீறிய உழைப்பைப் போட்டிருக்கிறாளே டாக்டராக! அந்த தொழில் அவளுக்கு வேலையாய் இல்லாமல் உயிராய் உணர்வாய் ஆகிப் போனது! டாக்டர் சிந்தி என மற்றவர்கள் அழைக்கும் போது, தானாகவே ஒரு புன்னகை அவள் இதழ்களில் வந்தமர்ந்து கொண்டது. பிரசவம் பார்த்து குழந்தைகளை கையில் ஏந்தும் போது, தானும் கடவுள் தான் எனும் இருமாப்பு வந்தது! டாக்டர் சிந்தியா சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள்.

ஓர் நாள் நடு இரவு அண்ணன்காரனுக்கு அவளிடம் இருந்து போன் வந்தது.

“பேபிமா!”

“எனக்கு இந்த விக்கியப் பிடிக்கல! தாத்தா ஒத்தைக் காலுல நிக்கறாரு! என்னை இந்தக் கல்யாணத்துல இருந்து காப்பாத்து!” என படபடவென சொல்லி போனை வைத்துவிட்டாள் அவள்.

அழுத்தக்காரியான தங்கையின் குரலில், அழுகை தெரிந்ததோ என சந்தேகித்தவன், அடுத்த நாள் இரவே வீடு வந்து சேர்ந்தான்.  அந்த கருப்பு தினம் இந்த அண்ணா தங்கையின் வாழ்க்கையை மட்டும் அல்ல அந்த இரட்டையர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது!

வாழ்க்கையையேப் புரட்டிப் போட்டது!

‘கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம்

கனவை பாடுபட்டு நனவாக்கிய சிந்தியாவுக்கு ஒரு சலாம்’

(உருகுவான்….)

போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் என் நன்றி. இவங்க ரெண்டு பேரோட போண்டிங்க ஓரளவு விளக்கிட்டேன்! எழுத எழுத நீண்டுட்டே போகுது எபி. சோ அடுத்த எபில ப்ளேஷ்பேக்க கதம் கதம் பண்ணிடலாம்! அண்ட்டில் தென் லவ் யூ ஆல்.

ஈஸ்வரனின் ஈஸ்வரி

0

அத்தியாயம் 14

மும்பையில் பீட்டருடன் ஹார்பரில் செய்த சோதனையில், கிடைத்த தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியின் உச்சத்தை அடைய வைத்தது ஈஸ்வருக்கு.

ஹார்பரில் வேலை முடிந்த கையோடு, அன்று காலை ஹோட்டல் வந்து சேர்ந்தவர்கள் அங்கே கிடைத்த தகவல்களை நினைத்து சிறிது அச்சம் கொண்டனர்.

“இனி ஒரு நிமிஷம் கூட நாம டைம் வேஸ்ட் பண்ண கூடாது, பீட்டர் விஷ்வாக்கு உடனே போன் போடு” என்று ஈஸ்வர் கூற உடனே அவன் விஷ்வாவுக்கு அழைத்தான்.

அந்த பக்கம் போனை எடுத்தவன், மேலும் சில அதிர்ச்சியான தகவல்கள் தரவும், ஈஸ்வருக்கு இனி இங்கு இருப்பதில் அர்த்தம் இல்லை என்று விளங்கியது.

அவனை உடனே கிளம்பி ஹோட்டலுக்கு வருமாறு கூறிவிட்டு, அவன் அடுத்து உடனே போனை போட்டது கமிஷ்னருக்கு தான்.

“என்ன ஈஸ்வர்! இந்த நேரத்துக்கு போன் பண்ணி இருக்கீங்க, எதுவும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

ஏனெனில் இப்படி காலை ஏழு மணிக்கு எல்லாம், போன் போடும் ஆள் ஈஸ்வர் கிடையாது. அவரின் வாக்கிங் நேரம், அதனை யாரும் தொந்தரவு செய்ய கூடாது அவருக்கு.
ஆகையால் இப்பொழுது ஈஸ்வர் அழைத்தவுடன், அவருக்கு முக்கியமான விஷயம் இல்லாமல் அவன் அழைக்க மாட்டான் என்று தெரிந்ததால், பிரச்சனையா என்று கேட்டார்.

“ஆமா சார்! நாம ஆழம் தெரியாம காலை வச்சுட்டோம் நினைக்கிறேன்” என்று கூறிவிட்டு அவன் அங்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அவரிடம் கூறினான்.

கேட்ட அவருக்கே, இது மிக பெரிய அதிர்ச்சி. உடனே கிளம்பி இங்கு வருமாறு பணித்தார் அவர். பேசிவிட்டு வைத்தவன், அங்கே பீட்டரை பார்த்தான்.

“மாம்ஸ்! டிக்கெட் புக் பண்ணிட்டேன், இனி அடுத்து என்ன செய்ய போறோம்?” என்று கேட்டான்.

“சத்தியமா என்ன செய்யணும்னு தெரியல, அந்த பிள்ளைகளை காப்பாத்திடலாம் நினைச்சேன். ஆனா அது இப்போ முடியாது போல தெரியுது, அந்த சேத்ரன் என் கையில் கிடைச்சான் அவனை கண்ட துண்டமா வெட்டி போட்டுவேன்”.

“மனுஷனா அவன்! அவன் இங்க வர முன்னாடி அவனை அங்கேயே தூக்கிடனும்” என்று முடிவு எடுத்துக் கொண்டான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், எல்லோரும் மும்பை ஏர்போர்ட்டில் விமானத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.

“டேய் விஷ்வா! அவனை வாட்ச் பண்ண ஆளுங்களை அனுப்ப சொன்னேனே அனுப்பிட்டியா என்ன?” என்று கேட்டான் ஈஸ்வர்.

“மச்சான்! பிளான் பண்ண மாதிரி ஏற்கனவே அவனை ஃபாலோ பண்ண ஆள் அனுப்பியாச்சு. இப்போ அவன் மதுரையில் தான் இருக்கானாம்” என்று கூறினான் விஷ்வா.

“அவனை சென்னைக்கு பேக் பண்ணணும், நம்ம இடத்தில் வச்சு போட்டா தான் எனக்கு திருப்தியா இருக்கும்” என்று கூறியவனின் கண்கள் பளபளத்தது.

“ஆஹா! இவன் வச்சு செய்ய பிளான் பண்ணிட்டான் போலயே. சரி! அதுவும் நல்லதுக்கு தான், அவன் அப்படி ஒன்னும் நல்லவன் இல்லையே” என்று எண்ணிக் கொண்டு அவன் செய்ய வேண்டியதை பற்றி, சுருக்கமாக அவனின் ஆட்களுக்கு செய்தி அனுப்பினான்.

சிறிது நேரத்தில் சென்னை செல்லும் விமானம், போர்டிங் டைம் என்று மைக்கில் ஒரு அழகிய மங்கை அறிவிப்பு விடவும், இவர்கள் அதன் பின் விமானம் ஏற சென்றனர்.
அங்கே மதுரையில் சேத்ரன், ஈஸ்வரியை கடத்த நேரம் பார்க்க, அவளோ இவனை அங்கு இருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் உணர்ந்து, அதற்கான செயலில் இறங்கினாள்.

“தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க, கொஞ்ச நாளைக்கு சஞ்சனாவும் பிள்ளையும் இங்கே இருக்கட்டும். அலைச்சல் இப்போ கூடாது, பிள்ளைக்கு கொஞ்சம் உடம்பும் முடியல அதனால நீங்க வேணும்னா கிளம்புங்க தம்பி”.

“எப்படியும் துக்கம் விசாரிக்க, அங்க உங்க வீட்டுக்கு ஆட்கள் வர, போக இருப்பாங்க தானே” என்று சேத்ரனிடம் நயமாக பேசினார் ஈஸ்வரியின் அன்னை.

அவனுக்கும் கிளம்பும் எண்ணம் தான், ஆனால் சஞ்சனாவை இங்கே விட அவனுக்கு விருப்பமில்லை. அவனின் லீலைகளை எல்லாம் இந்த ஈஸ்வரியிடம், அவள் கூறிவிட்டால் என்றால் அதன் பிறகு வரும் விளைவுகள், அவனால் அதன் பின் சமாளிக்க முடியாது.

ஏற்கனவே, அப்படி அனுபவப்பட்டு தான் இன்று சஞ்சனா அவனுடைய மனைவி என்னும் பதவியில் இருக்கிறாள். இனி ஒரு தவறு நடந்து விட கூடாது என்பதில், அவன் மிக கவனமாக இருக்க நினைக்கிறான்.

“இல்லை! நான் சஞ்சனாவையும் சேர்த்து தான் கூட்டிட்டு போகனும். அங்க எப்படியும் அவளோட உதவி இல்லாம, வீட்டுல ஒரு வேலை ஓடாது”.

“அதனால் அவளையும் கூட்டிட்டு போறேன், தப்பா நினைக்காதீங்க” என்றவனை இப்பொழுது யோசனையாக பார்த்தாள் ஈஸ்வரி.

“இவன் கிட்ட எதோ தப்பு இருக்கு, சஞ்சனா சொல்லுறது வச்சு பார்க்கும் பொழுது, மாமாவுக்கும் இவனுக்கும் எதோ தகராறு நடந்து இருக்கு”.

“அப்போ, இவனை பத்தின உண்மை எதோ அவர் தெரிஞ்சி வச்சுக்கணும். ஷெர்லாக் ஹோம்ஸ் அவதாரம் எடுக்க வேண்டியது தான், கண்டிப்பா கண்டுபிடிக்க தான் போறேன்” என்று எண்ணிக் கொண்டவள், தானும் கிளம்ப போவதாக கூறினாள்.

அவளின் இந்த முடிவில், ஈஸ்வரின் அன்னையும், தந்தையும் அதிர்ந்து போய் பார்த்தனர். மகன் வந்த பிறகு, செல்ல போவதாக சொன்ன மருமகள் உடனே கிளம்புகிறேன் என்கிறாள் என்று அவளை அதிர்ந்து போய் பார்த்தனர்.

ஆனால், அவளின் அன்னைக்கும், தந்தைக்கும் அவள் உடனே செல்வதின் நோக்கம் புரிந்து விட்டது. ஆகையால் ஈஸ்வரியின் அன்னை, தனியாக அவர்கள் இருக்கும் பொழுது விஷயத்தை சொல்லி விட்டார்.

“அண்ணி! அவன் அந்த அளவு கெட்டவன் சொல்லுறீங்க, அப்புறம் எப்படி நம்ம பொண்ணை அவன் கூட அனுப்ப முடியும்?” என்று கேட்டார் ஈசுவரின் அன்னை.

“அண்ணி! உங்க மருமக ஊரையே வித்திடுவா, உங்களுக்கு இன்னும் அவளை பத்தி தெரியல. அது எல்லாம் இந்நேரம், அவ பாதுகாப்புக்கும், சஞ்சனா, அப்புறம் அந்த குட்டி பிள்ளை பாதுகாப்புக்கும் எல்லா ஏற்பாடும் செய்து இருப்பா”.

“நாங்க இது மாதிரி நிறைய கடந்து வந்து இருக்கோம் அண்ணி, இவளோட இந்த துப்பறிவு வேலையை பார்த்து. நீங்க கவலையே படாதீங்க, அவ பத்திரமா இருப்பா” என்று வாக்களித்தார் ஈஸ்வரியின் அன்னை.

அவர் கூறியது போல் தான், எல்லாம் பக்காவாக செய்து இருந்தாள் ஈஸ்வரி. அதுவும், இந்த முறை எப்பொழுதும் விட சற்று கவனமாக எல்லாம் செய்து கொண்டு இருந்தாள்.

அவளின் உள்ளுணர்வு எப்பொழுதும், அவளை சரியாக வழி நடத்தி செல்லும். ஆகையால், இந்த முறை அது கொடுத்த எச்சரிக்கையை சரியாக புரிந்து கொண்டு, சற்று கூடுதல் கவனமுடன் இருந்தாள்.

“பழம் நழுவி பாலில் விழுரது இது தான் போல, இவளை வச்சே அவனை ஒரு வழி பண்ணுறேன்” என்று சபதம் எடுத்தான் சேத்ரன்.

அவன் அறியவில்லை, இவள் தான் அவனை வைத்து செய்ய போகிறாள் என்று. அங்கே ஈஸ்வர் சென்னை வந்து இறங்க, இங்கே ஈஸ்வரி கணவனுக்காக அவன் தேடிக் கொண்டு இருக்கும் கேடியோடு சென்னை பயணப்பட்டாள்

மதுரையில் இருந்து.
சென்னை வந்து இறங்கியதும், அவனுக்கு அப்பொழுது மனைவியின் நியாபகம் தன்னால் வந்து புன்னகைக்க செய்தது.

“மதுரையில் என்ன ஆட்டம் போடுறாளோ, அப்பாவும், அம்மாவும் இவளை சமாளிக்க முடியாமல் திணறி போவாங்களே” என்று அவர்களை நினைத்தும் சிரித்துக் கொண்டே, மனைவிக்கு அழைத்தான்.

அந்த பக்கம் சப்ஸ்கிரைபர் நாட் ரீச்சாபில், என்று செய்தி வரவும், அவன் மீண்டும் முயன்றான். அதே போல் செய்தி வரவும், இப்பொழுது அவன் புருவம் மேலேறி யோசனைக்கு தாவியது.

உடனே அடுத்து தன் அம்மாவுக்கு, தான் அழைத்தான். அங்கே அவர்களின் நல விசாரிப்பு முடிந்தவுடன், ஈஸ்வரியை பற்றி கேட்டான்.

அவர் நடந்ததை சொல்லவும், அவன் தலையில் இடி இறங்கியது போலானது. எதுவும் காட்டிக் கொள்ளாமல், பேசிவிட்டு வைத்தவன் உடனே பீட்டரையும், விஷ்வாவையும் முறைத்தான்.

“எங்களை ஏண்டா முறைக்குற? நாங்க என்ன பண்ணோம், நீ சொன்னதை தானே செய்துகிட்டு வரோம்” என்று கூறிய விஷ்வாவுக்கு ஒத்து ஊதினான் பீட்டர்.

“என் பொண்டாட்டிக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரி, எல்லாத்தையும் கத்து கொடுத்தது யாரு இதுல?” என்று கேட்டான் ஈஸ்வர்.

டக்கென்று பீட்டரின் கை, விஷ்வாவை நோக்கி கை காட்டியது.
“இப்போ எதுக்கு டா நீ இதை பத்தி கேட்கிற?” என்று தெரிந்து கொண்டே கேட்டான் விஷ்வா.

துப்பறியும் வேலை என்றால், ஈஸ்வரிக்கு சும்மா அல்வா சாப்பிடுவது போல் என்று தெரிந்தவன் தான் விஷ்வா. அவன் ஒரு தடவை இதை தெரிந்து கொண்டவன், அதற்கு தேவையான பாதுகாப்பும் செய்துவிட்டு அதன் பின் துப்பறிய செல்ல வேண்டும், என்று வலியுறுத்திய பின் தான் அவள் இவனை வைத்தே நிறைய வேலைகள் செய்து முடித்து இருக்கிறாள்.

இவன் அதன் பிறகு, அந்த ஊரில் இருந்து சென்ற பிறகு, அவளின் வீட்டிலும் படிப்பை கவனிக்க சொல்லி மிரட்டவும் தான் அவள் சற்று அதற்கு விடுமுறை விட்டு இருந்தாள்.

அதன் பின் பீட்டரின் துணை கொண்டு, மேலும் பல அடாவடி வேலைகள் எல்லாம் செய்து நிறைய பேரின் வாழ்கையை அவள் காப்பாற்றி இருக்கிறாள் என்றால் அது மிகையாகாது. 

“உன் வாலு தங்கச்சி, திரும்பவும் துப்பறியும் சாம்பு வேலை பார்க்க போய்ட்டா. அதுவும் அவ யாரை துப்பறிய போறா தெரியுமா, நாம தூக்கணும் நினைச்ச அந்த சேத்ரன் பின்னாடி போய் இருக்கா” என்று கூறிவிட்டு கவலையில் ஆழ்ந்தான்.

அந்த சேத்ரன் செய்து வந்த தொழில்கள் எல்லாம் தெரிந்து கொண்டு தானே, அவனை அவர்கள் வழியில் முடித்துவிட திட்டம் தீட்டி இருந்தனர்.

அவன் தொழிலுக்கு பிரச்சினை வந்தால், அவன் எந்த அளவு செல்வான் என்றும் தெரிந்து கொண்டவன், மனைவியின் பாதுகாப்பை எப்படி அறிவது என்று பெரிய குழப்பத்தில் இருந்தான்.

ஆனால் விஷ்வாவும், பீட்டரும் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினர்.

“மாம்ஸ்! நீங்க அவளை பத்தி கவலை படாதீங்க, அவளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் யாராலும் ஒன்னும் செய்ய முடியாது” என்றான் பீட்டர்.

“டேய்! நீ கவலைபடுறதா இருந்தா அந்த சேத்ரன், எந்த சேதாரமும் இல்லாம நம்ம கையில் கிடைக்கணும் அப்படினு வேண்டிக்க” என்றான் விஷ்வா. 

ஈஸ்வருக்கும், மனைவியின் தைரியம் எல்லாம் தெரியும் என்றாலும், அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அவனின் உணர்வை புரிந்து கொண்ட விஷ்வா, சேத்ரனை பின் தொடர செய்த அந்த வல்லுநர்களுக்கு போன் செய்து விசாரித்தான்.

“சார்! நாங்க அவனை ஃபாலோ செய்துகிட்டு தான் இருக்கோம். அவன் கூட ரெண்டு லேடீஸ், அப்புறம் ஒரு கை குழந்தை இருக்கு சார்”.

“அப்புறம் வண்டி, சென்னை போற மாதிரி இருக்கு. நாங்க தொடர்ந்து வாட்ச் செய்துகிட்டு தான் இருக்கோம் சார்” என்றனர்.

இது எல்லாம் ஸ்பீக்கரில் ஈஸ்வர் அறியும்படி தான், விஷ்வா இதை செய்தான். ஈஸ்வர் அதற்குள் பல மனகணக்கு போட்டுவிட்டு, அந்த பக்கம் இருந்தவர்களுக்கு சில தகவல்களை கூறி அதை செய்து முடிக்கும்படி கூறினான்.

“விஷ்வா! நமக்கு டைம் ரொம்ப கம்மியா தான் இருக்கு, வேகமா நாம அந்த இடத்துக்கு ரீச் ஆகுற மாதிரி வேகமா ஒரு வண்டியை புக் பண்ணிடு”. 

“நான் கமிஷ்னர் கிட்ட விஷயத்தை சொல்லி, மேலும் சில பாதுகாப்பு ஏற்பாடை பார்க்க சொல்லுறேன்” என்று கட்டளைகள் பிறப்பித்து கொண்டே, அவன் அடுத்து அடுத்து போன் காலில் பிசியாகி விட்டான்.

“ஆஹா! மாம்ஸ் செம ஸ்பீடா இருக்கார், அங்க அவ அவனை எந்த கண்டிஷனில் வச்சு இருக்கானே தெரியலையே?” என்று ஈஸ்வரியை நினைத்து புன்னகைத்துக் கொண்டான்.

இவன் எண்ணத்திற்கு ஏற்றபடி தான், அவள் இவனை வேறு ஒரு காருக்கு மாற்றி, இவனை கிட்டத்தட்ட டிக்கியில் தள்ளிவிட்டாள்.

அந்த காரில், தனக்கு தெரிந்த மேலும் இரண்டு பேரை அமர்த்திக் கொண்டு சென்னை நோக்கி வண்டியை விட்டாள்.

ஈஸ்வர், அவளின் இந்த செயல்களை கண்டு, கோபம் கொள்ளுவானா, இல்லை அவளை பாராட்டி மகிழ்வானா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

தொடரும்.. 

0