Category: KrishnaPriya Narayan

Maya-3

மாயா-3 அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள்ளும் உஷ்ணம் தகிப்பதுபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது மாதினிக்கு. கூடவே மகிழம் பூவின் மணம் வேறு சேர்ந்துகொள்ள யாமினியின் நினைவு வந்தது அவளுக்கு. அவர்கள் கிராமத்து வீட்டில் மிகப்பெரிய மகிழ மரம் ஒன்று உண்டு. அதில் உதிரும் பூக்களை அள்ளி வந்து, வாயிற் திண்ணையில் உட்கார்ந்தவாறு  ஏதேதோ கதைகளைப் பேசிக்கொண்டே அழகாகக் கோர்ப்பது அவர்களுடைய சாந்தா மற்றும் கனகா என இரண்டு பாட்டிகளுக்கும் மிகவும் பிடித்தமான  பொழுதுபோக்கு. அதைப் பேத்திகளுக்குச் சூட்டி அழகு …

Maya-3Read More

Maya-2

அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மென்காதலுடன் கரை நனைக்கும் கடல் அலைகளுடன் அன்றைய சூர்யோதயம்! அந்த உடைந்த பாலத்தினின்று அதைப் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. ஒளிக் கற்றைகளை வாரி இறைத்துக்கொண்டு ஆதவன் புறப்பட, அவனுடைய கிரணங்கள் மாதியினியின் முகத்தில் தெறித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன. முந்தைய தினம் சிந்துஜாஸ்ரீயிடம் பேசிமுடித்து விடைபெற்று வெளியில் வந்ததும், வேதனையின் சாயல் அளவுகடந்து அவளுடைய முகத்தில் படிந்திருக்க, இறுகிப்போயிருந்தாள் மாதினி. மயிலாப்பூரில் உள்ள அவளுடைய அலுவலகத்தில் அவளுடன் போய் இறங்கும் வரையிலும் …

Maya-2Read More

Maya-1

மாயா-1 சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே  பறந்து கொண்டிருக்கும்  நண்பகல்வேளை;  தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா. ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன்  கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதிவேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்! ‘அவளாஆஆஆ?’ …

Maya-1Read More

Maya – teaser?

சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க… மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் மட்டுமே பறந்து கொண்டிருக்கும் நண்பகல்வேளை… தன் பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் நந்தா. ஏதோ ஒரு வாடை நாசியில் துளைக்க, வண்டி அவன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கி அதிவேகமாக பாய்ந்த நொடி கண்கள் இருட்டத் தொடங்க காட்சிகள் இரண்டிரண்டாக, அவன் பார்த்த அந்த உருவம்… அவளாஆஆஆ???? மருத்துவமனையில் …

Maya – teaser?Read More

PNV Epilogue

கடைக்காப்பு! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தத்தி ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும் மந்திரங்கள் வீட்டில் எதிரொலிக்க, வீடு முழுதும் ஹோம புகை பரவி இருந்தது. அவர்களது நாமக்கல் வீட்டில் உறவுமுறை பங்காளிகள் எல்லோரையும் அழைத்து வசந்த் இறந்ததற்காக அவனுக்குச் செய்யவேண்டிய காரியங்களை முறைப்படி செய்து முடித்தவர்கள், காலம் கடந்து அதனைச் செய்தற்காக சில பரிகாரங்களுடன் கணபதி ஹோமம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய அழைப்பை ஏற்று உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் என அனைவரும் அங்கே …

PNV EpilogueRead More

PNV-Final-2

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத் தூக்கிச்சென்று அவரது கட்டிலில் படுக்க வைத்தவர், ஏதோ யோசனையயுடன் சாப்பாட்டு மேசையைப் பார்க்கவும்,  அவசரம் அவசரமாக மகனுடைய அறையைப் பூட்டிவிட்டு, வீதியை எட்டிப்பார்க்க, அக்கம்பக்கத்து வீடுகளிலெல்லாம் தொலைக்காட்சி அலறிக்கொண்டிருக்கவே அங்கே நடந்தவற்றை யாருமே கவனிக்கவில்லை என்பது அவருக்கு புரிந்தது. உடனே, “வசுவை உங்க வீட்டுல கொஞ்ச நேரம் வெச்சுக்கோ மாரி! இங்க நடந்தது இப்போதைக்கு யாருக்கும் …

PNV-Final-2Read More

PNV-Final-1

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான் இருந்தான் அவன். அவனுடைய இந்த நிலை தீபனை வெகுவாக பாதித்திருப்பது நன்றாகவே விளங்கவும், அவனுடைய மனநிலையை ஓரளவுக்கு உணர்ந்தவளாக, “ப்ச்.. இதை ஒரு லஸனா எடுத்துக்கோங்க மிஸ்டர் தீபன்! இனிமேலாவது இப்படி செய்யமாட்டீங்கன்னு நம்பறேன்!” என்றவள் அவன் எந்த ஒரு பதிலையும் சொல்லாமல் இறுகிப்போய் இருக்கவும், “டயர்டா தெரியறீங்க; நீங்களும் கொஞ்சம் தூங்குங்க! நான் போய் …

PNV-Final-1Read More

PNV-33

இதழ்-33 கிழக்கு கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து அபரிமிதமான வேகத்தில் பறந்துகொண்டிருந்தது தீபனின் வாகனம். அருகில் சந்தோஷ்! அவனது மூளைக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பை அணைக்கும் என நினைத்து அவன் அங்கே செலுத்தியிருந்த போதை, அணைப்பதற்குப் பதிலாக அந்த நெருப்பை இன்னும் அதிகமாகக் கொழுத்து விட்டு எரியும்படியே செய்துகொண்டிருந்தது. நியாயத்திற்கு ஜவஹருடைய மரணம் அவனுக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்க வேண்டும். பதிலாக அவனுடைய கோபத்தை மிகைப் படுத்தியிருந்தது. மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு மட்டுமேயான ஒரு சிறிய …

PNV-33Read More

PNV-32

நொடிக்கும் குறைவான நேரத்திற்குள் சந்தோஷ் தன்னை சமாளித்துக்கொண்டு, “தீபன்! நான் இப்ப சந்தோஷ் இல்ல; தீபனோட ஃப்ரெண்ட் இல்ல! சரிகாவோட ஹஸ்பண்டும் இல்ல; ஜஸ்ட் இந்த வீடியோவை எடிட் பண்ணப்போற ஒரு டெக்கீ அவ்ளோதான்; இந்த வீடியோவை பார்க்கறதால சரிகா மேல எனக்கு இருக்கற அன்பு மாறிடப்போறதில்ல! ஏன்னா இதோட பாதிப்பை பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்!” என்று சொல்லிவிட்டு, “ஹால் பிரிட்ஜ்ல கூலா எதாவது இருந்தா எடுத்துட்டு வா!” எனச் சொல்ல அங்கிருந்து சென்றான் தீபன். …

PNV-32Read More

PNV-31

இதழ்-31 “டேய் தீபா! என்னடா சொல்ற; அந்த பொண்ணை பழி வாங்கறதுக்காக காதலிக்கற மாதிரி நடிக்கறியா! தப்புடா! முடிஞ்சா அந்த வசந்தை கண்டுபிடிச்சி அவனை என்ன வேணா பண்ணு! கொலையே பண்ணா கூட நான் ஏன்னு கேட்கமாட்டேன்! ஆனா ஒரு பெண்ணை ஏமாத்தறது ரொம்ப பாவம்டா!” எனப் பதறினார் அருணா. “அண்ணனோட கேடுகெட்ட புத்திதானே தங்கையும் இருக்கும்! அவளை இப்படி செஞ்சா தப்பே இல்ல” என அவன் மறுப்பாகச் சொல்ல, “சச்ச! மித்ரா அப்படிப்பட்ட பொண்ணெல்லாம் இல்லண்ணா! …

PNV-31Read More

error: Content is protected !!