Apollo ( ஒரு மரணத்தின் கதை ) - 4

#1
அப்பலோ
பகுதி - 4

பத்துவீட்டிற்கு ஒரு வழிப்பாட்டுத்தளமெனக் கொண்டது டிராய் தேசம்.தேசக்கடவுள் நெப்டியூன்.அழித்தலும்அழித்தல் நிமித்தமுமே அதன் தொழில்.

வழிப்பாட்டுத்தளத்தில் வழிப்பாட்டு சிலைகள்இருக்கிறதோ,இல்லையோதளத்தின் உச்சியில் டிராய்தேசத்தின் கொடிகள் பறக்கும்.அன்றையதினம் பறந்த கொடிகள் இரண்டுமுனைகளையும் உட்புறமாக மடக்கிஇரண்டு விரல்களை நீட்டி தென்திசையைக் காட்டிப் பறந்துகொண்டிருந்தன.

கொடிகாட்டும் திசையைப் பார்க்கிறார்கள்மக்கள்.அரண்மனைஉச்சியிலிருந்து பார்க்கையில்தூரத்தில் எலியின் கண்ணைப்போலஒரு புள்ளித் தெரிகிறது.அப்புள்ளிதன் திசையை நோக்கிவருவதைப்போலிருக்கிறது.

‘ ஆம்!தேர்தான்அது.மன்னனின்தேர்...’

ஒளிப்புள்ளிஅசைகிறது.நகர்கிறது.கிட்டக்கிட்டேவருகிறது.

தேர்வருவதற்கு முன்பே சிப்பாய்கள்.அவர்கள்சிலம்பைச்சுற்றிக்கொண்டுமன்னனின் புகழை பாடி போரில்மன்னன் நிகழ்த்திய சாகசத்தைச்சொல்லி வந்திருந்தார்கள்.

முதலில்ஒட்டகப்படை.

ஒட்டகங்கள்தன் மீது புழுதி வாறி தூற்றிக்கொண்டுவருவதாக இருந்தன.ஒட்டகத்தின்திமிலில் பல்லக்கும்,முதுகில்போர்க்காலத் தேவைக்கெனத்தானிய முடிச்சுகளும் இருந்தன.

அடுத்ததாககுதிரைப்படை,தரைப்படை.

கப்பற்படைஆழ்க்கடல் வழியே காற்று வீசும்திசையில் டிராய் துறைமுகத்தைநோக்கி வந்தபடி இருந்தன.

சிப்பாய்கள்மன்னனின் வெற்றியை புகழ்பாடினார்கள்.அவர்களின்கையில் டிராய் தேசத்தின் கொடி இருந்தது.சாம்பல்நிறக் கொடி அது.ஆசியமைனர்முழுமையையும் டிராய் தேசம்எனும் ஒற்றைக்கொடியின் கீழ்கொண்டு வரும் சபதக் கொடியாக அது இருந்தது.

டிராய்தேசத்து மக்கள் ,பாரிஸ்மன்னனை வரவேற்க மாலையும்கையுமாக நின்றார்கள்.வெற்றியுடன்கூடிய மன்னனின் வருகையால்நாடு திருவிழா கண்டது.நெடுங்கடைகள்திறக்கப்பட்டன.

சந்தைகள்கூடின.

விடுமின்பிடிமின்...- மக்கள்.

டிராய்தேசத்தில் நடப்பது கனவா,நனவா,...?மக்களால்நம்ப முடியவில்லை.ஆக்ரோநாட்டின் மீது போர்த்தொடுத்துபுறமுதுகுக்காட்டி ஓடி வந்தநம் மன்னனா போரில் வென்றுவாகை சூடி வருகிறான்....?மக்கள்ஒரு முறை தன்னை கிள்ளிப்பார்த்துகொண்டார்கள்.

‘புறமுதுகிட்டுஓடி வந்த ஒருவனால் ஒரு முறைவெல்ல முடியுமா...?’

‘ முடியுமெனகாட்டியிருக்கிறாரே,நம்மன்னர்...’

‘தனதடங்,தனதடங்,...’பறையொலி.

‘டங்கண்,டங்கண்...’- மேளதாளங்கள்

முத்துமாலையும்,பவளமாலையும் சந்தைக்கு வந்தன. முத்துவடஞ்சேர்,பவளவடம்,மணிப்பொற்கபாடம்,,..எனமன்னனுக்குரிய அணிகலன்கள்குறைந்த விலைக்கு விற்றன.ஒருசங்கு கொடுத்தால் ஒரு முத்துமாலை.ஒருமுத்து கொடுத்தால் இரண்டுபவள மாலை,...- வணிகர்கள்

சிலபெண்கள் அவரவர் கணவனை வரவேற்கஅவர்கள் சேமித்து வைத்திருந்தமுத்துகளை விற்று பவளமாலைவாங்கியிருந்தார்கள்.அவர்களின்கைகள் மாலை சூட நான்குபுறத்திசைகளையும்துலாவிக்கொண்டிருந்தன.

மகளிர்கண்களில் உறக்கமில்லை.கணவனைகடலுக்கு அனுப்பி கரையில்நின்று காத்திருப்பதைப்போலதான்அவர்கள் தன் கொழுநனுக்காகக்காத்திருந்தார்கள்.

டிராய்நகரத்து மக்கள் கால் தூக்கம்,அரைத்தூக்கத்தில்இருக்கையில்தான் குதிரையில்ஈட்டியென பாய்ந்து வந்த ஒருவன்குதிரையை ஒரு கணம் நிறுத்திநான்கு திசைகளும் முழங்கும்படியாகச்சொல்லிச் சென்றான்.

‘நம்மன்னன் பாரிஸ்,ஆக்ரோமன்னனான மெனிலாஸை வென்றுவிட்டான்...’

அக்குரலைக்கேட்டதும் சேரியும்,தெருவும்,கிராமமும்,நகரங்களும்விழித்துக்கொண்டன.இரவுக்குகண்கள் முளைத்தன.வீட்டுக்குவீடு,தெருவிற்குபத்து ,இருபது,...எனதீப்பந்தங்கள் ஒளிர்ந்தன.சூரியன்இன்னும் கிழக்கினில் உதிக்கவில்லை.சேவல்தன் நீள் கழுத்தை நீட்டிகூவவில்லை.செக்குந்தான்அலறவில்லை.காகம்கரையவில்லை.அதற்குள்டிராய் தேசம் உச்சிப்பகலெனவிழித்துக்கொண்டது.

‘மன்னன்பாரிஸ் போரில் வென்றுவிட்டான்..’என்பதைக்கேட்கையில் பெண்களின்கொங்கைகளில் காமநரம்புகள்விடைத்தன.நரம்புகளில்பச்சை இரத்தம் பாய்ந்தது.

ஒருபுதுமணப் பெண் ,திருமணம்முடிந்து முதலிரவு அறைக்குள்நுழைந்தாள்.புதுக்கணவன்தன் காமப்பசியை அமர்த்திக்கொள்ளஅவளை நெருங்கினான்.கணவனின்சுண்டிவிரல் தன் மீது பட அவள்அனுமதிக்கவில்லை.‘ ஆக்ரோதேசத்திற்கும் நம் தேசத்திற்கும்இடையில் போர் நடக்க இருக்கிறது.இதற்குமுன் நடந்தேறிய அத்தனைப்போரிலும்நம் மன்னன் தோல்வியைக்கண்டிருக்கிறான்.இப்போரில்நீ ஆயுதம் ஏந்து.இப்போரில்வென்றுவந்து என்னைத் தழுவு.அதுநாள்வரைக்கும் என் கொங்கைகள்உனக்காக காத்திருக்கும்...’அத்தகையவளின்மார்புகள் வெற்றியுடன்திரும்பிவரும் கணவனின்அணைப்பிற்காக விடைத்து நின்றன.

முந்தையப்போரில் தோல்வியைத் தழுவிதிரும்பியிருந்த ஒருவனைஅவளது காதலி திரும்பிக்கூடபார்க்கவில்லை.போரில்எதிரியை வீழ்த்த முடியாத நீ,எப்படியாம்என் காமப்பசியைத் தணிப்பாய்.நீகோழை.என்னைநீ மறந்துவிடு...’எனகாதலைத் துண்டித்துச் சென்றவள்வெற்றியோடு திரும்பிவரும்காதலனுடன் கரம் கோர்க்க வழிமீது விழி வைத்து காத்திருந்தாள்....

தன்கணவன் போர்க்களத்தில்எப்படியெல்லாம் போர்ப்புரிந்திருப்பான்என்பதை நினைத்தாள் ஒருவள்.மணம்முடித்து முதல்நாள்பள்ளிக்கொள்கையில் அவன் தன்மீது காட்டிய முரட்டுத்தனம்அவளது நினைவிற்கு வந்தது.கணவன்தழுவ,தழுவலிருந்துஅவள்.விலக,தழுவியகை மேலும் இறுக....இச்சீ....கண்களைமூடி வெட்கத்தில் சிணுங்கிசிரித்தாள் அவள்.

மன்னன்பாரிஸை தாங்கிவரும் தேர்முழுமையாகத் தெரியும்படியானத்தொலைவிற்கு வந்திருந்தது.தேரைச்சுற்றி மொய்த்தது பெருங்கூட்டம்.

வாலிபர்கள்கையில் தீப்பந்தங்களை ஏற்றிவிண்ணை நோக்கி விட்டெறிந்ததுபார்க்க கண்கொளாக் காட்சியாகஇருந்தது. வீதியெங்கும்தோரணங்கள்.தோரணமலர்களில் மொய்க்கும் தேனீக்கள்.தேனீயைவிழுங்க வரும் வண்டுகள்.வண்டுகளுக்காகபல்லிகள்.பல்லிகளைநம்பி ஊர்வன,- பறப்பன.,- விலங்கின.

மன்னன்தேருக்கு முன்பு குதிரைப்படைதளபதி வந்தான்.அவன்மன்னனி்ன் வெற்றியை அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கச் செய்தான்.

பெண்கள்மன்னனை மொய்த்தார்கள்.மன்னனுக்காகதன் சிரத்தைக் காவுக்கொடுக்கநின்றவர்கள் மன்னன் வென்றச்செய்திக் கேட்டு ஓடிவந்தார்கள்.பலிபீடத்திலிருந்துதன் தலை தப்பித்த ஆயாசம்அவர்களின் முகத்தில் இருந்தது.

அரண்மனை,கோட்டைமெய்க்காப்பாளர்கள் மேற்கூரைஇடிக்கும்படியாக ஒரு குதிகுதித்துக்கொண்டார்கள்.மன்னன்வெற்றிப்பெற யாகமிருந்தபெண்கள் யாகம் முடித்துசந்திக்கு ஓடி வந்தார்கள்.

தெருவெங்கும்வெற்றிக்கொள் நடனம்.
களிப்பால்நடிப்பு,பசிமறந்த கெலிப்பு,பல்லியமுழக்கம்.
சிறுவர்,சிறுமிகள்வீரவாள் ஏந்தி வாளாட்டம்,யானையேற்றம்,குதிரையேற்றம்.

ஒருவன்கையிலிருந்த ஒற்றை நிறக்கொடியைஎடுத்து அம்பில் தொடுத்துவான்தொடும் மரம் நோக்கிஎய்தான்.மரத்தின்நுனியைக் கொய்து நின்றதுஅம்பு.அம்பில்நின்று பறந்துகொண்டிருந்ததுகொடி.

தாமரைப்பூத்த தடாகமாக மக்கட்நிரல்.கொடிநிரை.

புழுதிஅடங்குகிறது.அடங்கிஎழுகிறது.

கொண்டைமுடிந்த பெண்கள் தாவிக்குதிக்கையில்கொண்டை அவிழ்ந்து கூந்தல்தரையைக் கூட்டுகிறது.மலைகளில்மொய்க்கும் மரங்களைப்போல,வசந்தம்திரும்பும் கிளைகளைப்போல,பூக்களில்சொரியும் இலைகளைப்போல ,பூக்களில்மொய்க்கும் வண்டுகளைப்போலபெண்கள்,பெண்கள்,பெண்கள்....

மன்னனதுகழுத்தில் முத்துமாலைகள்சரம் ,சரமாகவிழுகின்றன.மன்னனைஏந்தி வரும் தேருக்கு பவளமாலைகள்.தேரையைஎழுத்து வரும் யானைகளுக்குவைர,வைடூரியங்கள்.

மன்னன்வெற்றியை கொண்டாடும் பொருட்டுஒருவன் தேரின் சக்கரத்தில்தலையைக் கொடுக்கிறான்.ஒருவன்பலியின் பீடத்தில் தலையைக்கத்தரித்து இரத்தத்தை டிராய்தேசத்திற்கு கொடுக்கிறான்.

தேரிலிருந்துஇறங்கினான் பாரிஸ்.நடந்துவருகிறான்....

தேர்ப்போல

தோகைவிரித்த மயிலைப்போல

தேவதைகளின்தேவதை டயானாவை வசீகரத்தால்கவர்ந்து வருகையில் அவனதுபரந்து விரிந்த மார்பகம்எப்படி குலுங்கியதோ அப்படியாகஅவன் நடந்து வருகிறான்.

எங்கும்‘ கொய்ங்...’இரைச்சல்.

சிங்கம்போல உடம்பைக் குலுக்கிநடக்கிறான்.அவனதுநடை குதிப்பதைப்போலிருக்கிறது.வரிசையாகஅமைச்சர்கள். மன்னன்அவர்களின் பெயரைச் சொல்லிவிளிக்கிறான்.சிரிக்கிறான்.

யானைகள்தன் தும்பிக்கையைத் தூக்கிஎண்திசைகள் முழங்க பிளிறின.குரங்குகள்தன் வாலைத் தூக்கி மன்னனுக்குமாலைகள் அணிவித்தன.அணில்கள்மன்னன் நடந்துவரும் பாதையில்பூத்தூவின.

திசையெட்டும்படைகளின் பரப்பு.வீரர்களின்சிரிப்பொலி .கெக்கெலிப்பு.சிங்கம்பிடறி குலுங்க மன்னன் தன்அரண்மனைக்குள் நுழைகிறான்.

டிராய்அரண்மனை.

எங்கும்வண்ணவிளக்குகள்.அலங்காரம். ஆராதணை.

அமைச்சவைகூடியிருக்கிறது.தென்தேசத்தின்மீதான படையெடுப்பிற்கு பிறகுகூடும் முதல் அமைச்சரவை இது.

ஒருதளபதி எழுந்து பரணி வாசித்தான்.

அமைச்சர்கள்மன்னனின் வெற்றிக்காக அவரவர்வைத்திருந்த பரிசுகள்,தந்தங்கள்,முத்துக்கள்,வைரங்களைதலையில் சுமந்து வந்து அவனதுகாலடியில் கொட்டினார்கள்.

பாராட்டுகள்,பரிசளிப்புகள்,..

சிம்மாசனத்தில்அமர்ந்தான் மன்னன்.வாளெனநிமிர்ந்தான் .மின்னல்வெட்டுவதைப்போல மூன்றுதிசைகளையும் பார்த்தான்.

தென்னாடுகளில்ஆக்ரோ,மைசின்இரு தேசங்களும் பெரியவை.பழையவை.தன்னாட்சிக்குஉரியவை.

இரண்டில்ஆகப்பெரியது ஆக்ரோ.அத்தேசத்தின்மன்னன் மெனிலாஸ்.அவன்தான்டிராய் தேசத்தின் சிம்மச்சொப்பணமாக இருந்தவன்.அவனைவீழ்த்தி அப்பலோ மருத்துவசாலைக்குஅனுப்பி வைத்திருக்கிறேன்இந்த பாரிஸ்...ஹக்...ஹக்...ஹக்....’ தன்பெருமையைத் தானே பாடினான்.மேனிகுலுங்கினான்.

இனிஆக்ரோ தேசம் என் தேசம்.என்தேசம் நம் தேசம்.நம்தேசம் ஆசியமைனரின் ஒற்றைத்தேசம்.நாம்கண்ட கனவு நிறைவேற இருக்கிறது.ஒற்றைமொழி.ஒற்றைக்கொடி.ஒற்றைகலாச்சாரம்....ஹக்...ஹக்...

அக்ரோதேசத்தை இனி நான் என் சாட்டையால்ஆட்சி புரிவேன்.அத்தேசத்தின்அமைச்சர் சபை,சட்டஅவை அத்தனையும் என் விரல்நுனிப்படி நடக்கும்.ஓடுமின்என்றால் ஓடும்.முழங்காலிடுமின்என்றால் முழங்காலிடும்.

ஆக்ரோதேசத்தில் நம் டிராய் கொடி ஏறியிருக்கிறது.பறந்துகொண்டிருக்கிறது.என்அடுத்த இலக்கு அகமெம்னான்.அவன்ஆளும் மைசின்.....’

பாரிஸ்அதை முழுமையாகச் சொல்லிமுடிக்கவில்லை.அரண்மனையின்உச்சத்திலிருந்து எதோவொன்றுகீழே விழும் அரவம் கேட்டது.அமைச்சர்கள்எழுந்து அரண்மனையை ஒரு சுற்றுபார்த்தார்கள்.

அரண்மனைக்குவெளியே குதிரைகள் கனைத்தன.ஒட்டகங்கள்ஒன்றையொன்று முட்டிக்கொண்டுபுழுதி எழுப்பின.போர்ஆயுதங்கள் ஒவ்வொன்றாக விழுந்துதெரித்தன.

‘ எங்கும்சலசலப்பு...’

எந்தப்பக்கம்....என்னவிழுந்தது....?

அரண்மனைக்குவெளியே தென்முகத்திலிருந்துஒரு குரல் எழுந்தது.‘ஆம்,ஒற்றன்...ஒற்றன்...’

‘ பிடியுங்கள்அவனை...’மன்னன்கர்ஜித்தான்.

குதிரைகள்தானே அறுத்துக்கொண்டுநாலாபுறமும் பறந்தன. ‘ அதோ...அதோ...அவன்தான்...

அவனேதான்...’

குதிரைக்கொட்டிலிருந்துஅம்பென பாய்ந்தது ஒரு குதிரை.அதைபல குதிரைகள் விரட்டின.முன்குதிரையில் சவாரி செய்பவனின்களைந்த முடிகள் காற்றில்அலாவின.அதைதன் கையால் பற்ற ஒருவன் கையைநீட்டுகிறான்.நூலிழைதொலைவில் முன்னவன் தலையைச்சிலுப்பி தன் தலையை காத்துக்கொண்டான்.

முன்குதிரை...

இமைக்கும் பொழுதிற்குள் சமவெளி கடக்கிறது.

பீடபூமியைத்தாண்டுகிறது.

காடு,கரைகளைத்தழுவி,பாலைவனம்நீந்தி ஒரு பள்ளத்தாக்கைநோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

இதுநாள்வரைக்கும் இப்படியான ஒருபள்ளத்தாக்கை எக்குதிரையும்கண்டிருக்கவில்லை.பூமியைஒரு கிரகணத்தைக்கொண்டு குடைந்ததைப்போன்று அதன்பாதாளம் .இதைஇக்குதிரைத் தாண்ட வேண்டும்.தாண்டுமா,முடியுமா....?

குதிரையின்மீது ஏறி நின்றுகொண்டான்ஒற்றன்.குதிரையின்கடைவாய் கயிற்றை இறுகப்பற்றிக்கொண்டான்.குதிரைத்தாண்ட முடியாத மிச்சத் தூரத்தைதான் தாண்டுவதற்கு இலகுவாகஒரு பக்கத் திசைக் காற்றைஉள்வாங்கிக்கொண்டான்.எலும்புபோர்த்திய உடம்பை முன்பக்கமாகக்கொடுத்து பட்டம் போல இலகுவாக்கி‘ இம்...’என்றான்.குதிரைதன் தலையை முன்னே நீட்டிவாலைத் தூக்கி குன்றுஉயரத்திற்குத் தாவி பள்ளத்தாக்கின்மேலே பறந்துகொண்டிருந்தது.
 
#3
"பூமியைஒரு கிரகணத்தைக்கொண்டு குடைந்ததைப்போன்று அதன்பாதாளம் .இதைஇக்குதிரைத் தாண்ட வேண்டும்.தாண்டுமா,முடியுமா....?"
தாண்டுவதர்க்கு என் வாழ்த்துக்கள்....!
சிறப்பு.....!!
 
Last edited:
#4
நண்பரின் ஊக்குவிப்பிற்கு நன்றி"பூமியைநஒரு கிரகணத்தைக்கொண்டு குடைந்ததைப்போன்று அதன்பாதாளம் .இதைஇக்குதிரைத் தாண்ட வேண்டும்.தாண்டுமா,முடியுமா....?"
தாண்டுவதர்க்கு என் வாழ்த்துக்கள்....!
சிறப்பு.....!!
 
#8
டிராய் தேசம், அதன் மன்னன் பாரிஸ் குறித்த கதை விரிப்பை வாசிக்கையில் இவன் யாருக்கான வில்லன் என்பதை யோசிக்க வைக்கிறது. எனக்கு என்னவோ இவன் மெனிலாஸ்க்கு எதிரி என்றே நினைக்கத் தோன்றுகிறது.
 
#9
ஆமாம்...அந்த ஒற்றன் யார் சாரே....அவன் விரைவில் பிடித்து அவன் யாரென்று காட்டினால் போதுமென்று நினைக்கிறேன். விரைவில் அவனது முகத்தைக் காட்டுங்கள்...
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on நதியா's profile.
My heartiest birthday wishes to you, நதியா Madam
banumathi jayaraman wrote on Rranii's profile.
My heartiest birthday wishes to you, Rranii Madam
kattangal part 8 updated friends...
banumathi jayaraman wrote on vishnuprasanth's profile.
My heartiest birthday wishes to you, Vishnuprasanth Sir
banumathi jayaraman wrote on priyaanandh's profile.
My heartiest birthday wishes to you, Priyaanandh Madam
banumathi jayaraman wrote on Asath's profile.
My heartiest birthday wishes to you, Asath Sir/Madam
banumathi jayaraman wrote on Arya's profile.
My heartiest birthday wishes to you, Arya dear
sandhiya sri wrote on Arya's profile.
wish you happy birthday sister..

Advertisements

Latest Episodes

Today's birthdays