• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Apollo ( Oru maranathin kathai ) - 38

#1
அப்பலோ - 38

எடும் எடும் எடும்,... சிப்பாய்கள் ஆயுதம் எடுக்கும் அரவம் இடியோசையை விடவும் பலமாகக் கேட்டது.

விடு விடு விடு,.. குதிரைகள் கொட்டிலிருந்து கிளம்பின. .

விடும், விடும் , விடும்,.. அம்புகள் வில் நாணில் கோர்த்தன.

ஆக்ரோ தேசம் போர்க்களத்திற்குத் தயாரானது.
கொரில்லாவின் வேகமும் சிம்பன்சியின் உக்கிரமும் மெனிலாஸ் முகத்தில் தாண்டவமாடின. தன் மார்பை முள்ளெலியைப்போல பெருக்கிக்காட்டினான். சண்டைக்கோழியின் இறக்கைகளைப்போல கைகளை அசைத்திட்டான்.

போர்க்குக் கிளம்பிய கனமே விரல் நகங்கள் வளர்ந்திட்டன. பற்கள் கடித்துக் குதற்வதற்கு தகுந்தவாறு கிற்றிற்றன. இளம் இரத்தம் நெருப்பு ரத்தமானது. இடப் பக்க நெஞ்சு மட்டும் தனியே துடித்தது.

அமைச்சரவை கூட்டி முடிவு செய்ய வேண்டிய போரை அவசரக்கதியில் முடிவு செய்தான். வரும் பௌர்ணமிக்குள் வந்தால் வாளுக்கு என் தலை. இல்லையேல், அவன் அரண்மனைக்கு என் மனைவி...பாரிஸ் விடுத்த சவால், இதயச்சவ்வை கிழிப்பதைப்போலிருந்தது.

போரின் முதற்படி ஆயத்தமாதல். அதன் பிறகே தயாராதல், கிளம்புதல், விரைதல், தொடுத்தல்,கொய்தல், கதையை முடித்தல், வாகைச்சூடல்,... எல்லாம்.

தூதுவன் போருக்கான அழைப்பைச் சொல்லிவிட்டுச் சென்ற மறுநொடி மெனிலாஸ் போருக்குத் தயாரானான். அவனது குதிரையான டபுளன் மீது தாவி ஏறினான். குதிரையில் கோட்டை, அரண்களை ஒரு சுற்று வந்தான். குதிரைகள் கொட்டிலை உடைத்துகொண்டு மன்னன் பின் வந்தன. கால்களைத் தூக்கி உரக்கக் கனைத்தன.

டபுளன் . உலகின் விசித்திரக்குதிரை. மெனிலாஸ் பிட்டத்து சூட்டில் பறக்கும் குதிரை அது. குதிரை பறக்குமா,..? காற்றில் மிதக்கும் குதிரை இது. வில் நாணிலிருந்து புறப்பட்ட அம்பை விடவும் விரைந்து செல்லும் குதிரை.

குதிரைப்படை கிளம்பியதும் தேர்ப்படை கிளம்பியது. அதைத் தொடர்ந்து யானைப்படை, கப்பற்படை, தரைப்படை, ஒட்டகப்படை....

புழுதி பறக்க குதிரைப்படை விரைந்துகொண்டிருந்தது. இரைதேடச் செல்லும் நாரையின் வேகம்.

‘ கடக், கடாடக், கடக், கடாடக்....’

குதிரையின் கடாவாய் கயிறு இழுக்க, இழுக்க குதிரையின் வேகம் கௌதாரி வேகமெடுத்தது.

மெனிலாஸ் நினைத்தான். சிப்பாய்களை ஆயத்தப்படுத்தாமல் போருக்குச் செல்கிறோமே, போருக்கான காரணமே போரின் மூர்க்கத்தைக் கூட்டும். எதிர்ப்படையின் மூக்குகளை அறுக்கும். காரணமற்ற போர் காலமற்றுப்போகும். யாருடன் போர் என்பதை விடவும் யாருக்கானப்போர் என்பதே போரின் பிரதானம். மண்ணுக்கானப் போரை மேலும் சில மாதம் கழித்து தொடுக்கலாம். பெண்ணுக்கானப்போரை நாழிகை தாமதிக்கக் கூடாது...

சிப்பாய்களிடம் தான் பேச வேண்டுமே, படையை நிறுத்தலாமா..? போரில் இளைப்பாறலாம். போர் பயணத்தில் இளைப்பாறுதல் கூடாது. தாமதித்து போர்க்களம் புகுவது, பயத்தின் வெளிப்பாடு. என்ன செய்யலாம்...? மெனிலாஸ் யோசித்தான். தொடையைச் சட்டெனத் தட்டி உடம்பைக் குலுக்கி எம்பி குதிரையில் திரும்பி உட்கார்ந்தான்.

சிப்பாய்கள் ‘ ஆகா...’ வென வாய் பிளந்தார்கள்.

குதிரையின் போக்கில்தான் சவாரிப்பவனின் உடல்வாகு இருக்க வேணும். ஆனால் மெனிலாஸின் இருப்பு குதிரையின் வேகத்திற்கு எதிரானதாக இருந்தது. முன்னே விடவும் குதிரையின் வேகத்தை வேகமாக இயக்கினான். தனக்குப்பின்னால் பின்தொடரும் சிப்பாய்களைப் பார்த்து முழங்கினான்.

‘ சிப்பாய்களே, மரம் அறுப்பதற்கான நேரத்தை விடவும் ஆயுதம் கூர்தீட்டுவதற்கான நேரம் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதே போரின் நியதி. போரின் முதற்படி பயணித்தல் அல்ல, தயாராகுதலே. ஆனால், அதற்கான அவகாசம் நம்மிடமில்லை. குதிரை, ஓடும் பொழுதே அதற்கானச் சக்தியை அது திரட்டிக்கொள்வதைப்போல நாமும் பயணத்தின் போதே, போரின் போக்கைக்கணித்துகொள்வோம்...இக்கணமே வாளையும், வேலையும் கூர்தீட்டிக்கொள்ளுங்கள். குதிரையின் வேகத்தை விடவும் நம் விவேகத்தின் வேகம் கூடுதலாக இருக்க வேண்டும். பாயும் அம்புகளை விடவும் நம் வியூகம் கூர்மையானதாக இருக்க வேண்டும். இப்போர் பெண்ணுக்கான போர்... முடுக்குங்கள் படையை... விரட்டுங்கள் சேனையை....’ அரற்றினான் மெனிலாஸ்.

சாரைப்பாம்பின் வேகத்தில் குதிரைப்படை நிழல் வேகமிருந்தது.

மெனிலாஸ் பயணித்தபடியே அவனை விட்டு விலகி தூரத்திற்குச் செல்லும் ஆக்ரோ தேசத்தைப் பார்த்தான். தேசம் புழுதிக்காடாகத் தெரிந்தது. பாலைவனப்புழுதியைச் சோலைவனம் கண்டது.

‘ போருக்குத் தலைவன் நீர். தளபதி யாரும்...’ கேட்டான் ஒரு சிப்பாய்.

‘ இப்போரின் தளபதியாக மன்னராயனை அறிவிக்கிறேன்....’ என்றவாறு மன்னராயனைச் சுட்டினான்.

மன்னராயனின் தலை ஒரு கணம் குனிந்து நிமிர்ந்தது. தன் கையில் வைத்திருந்த வாளை ஒரு இலக்கு நோக்கி எறிந்தான். எறிந்த வாள், பறந்த கழுகு ஒன்றின் தலையைக் கொய்து அவனது கைக்குத் திரும்பி வந்தது.

‘ பலே...’ மெனிலாஸ் தன் கையைத் தட்டிக்கொண்டான்.

மன்னராயன் முழங்கினான் ‘ மெனிலாஸ் வாழ்க...’

‘ வாழ்க, வாழ்க...’

‘ பட்டத்து ராணி ஹெலன் வாழ்க...’

‘ வாழ்க, வாழ்க...’

‘ ஆக்ரோ தேசம் வீரம் வாழ்க...’

‘ வாழ்க, வாழ்க...’

ஓட்டகப்படை வீரர்கள் கையில் வைத்திருந்த சூலத்தால் மலையின் முகட்டைக் கொய்தார்கள். அதைத் தோளில் சுமந்து கொண்டு இலக்கு நோக்கி விரைந்தார்கள்.

யானைகள் தன் தும்பிக்கையை உயரத்தூக்கி ஒரு பிளிறு பிளிறு நிறுத்தியது. யானையின் பிளிறலில் எண் திசைகளும் முழங்கின. மேல், கீழ் திசைகள் எதிரொலித்தன.

தரைப்படை சிப்பாய்கள் ஆயுதம் ஏந்திக்கொண்டு பின்னே ஓடி வருவதாக இருந்தார்கள். கையில் வைத்திருந்த சிலம்புகளைச் சுற்றி சாகசம் புரிந்தார்கள். சிலம்பைச் சுற்றி காற்றின் திரையை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தினார்கள்.சிலம்பைத் தரையில் ஊன்றி அதன் மீது ஏறி நின்று குனிந்து நிமிர்ந்தார்கள்.

வாள்கள் ஒன்றோடொன்று மோதின. சிம்பன்சி தன் ஜோடியுடன் சண்டையிட்டு சிங்கத்திற்கு எதிரான போருக்கு தன்னைத் தயார்படுத்திக்கொள்வதைப்போல சிப்பாய் தன் வாள் கொண்டு தன் வாளைக் கூர்த்தீட்டிக்கொண்டார்கள். வாள்கள் உரசலில் ‘ பளிச், பளிச்...’ என்றன. வேல்கள் , தீயில் சற்று முன் வெந்ததைப்போல மின்னிற்றன.

கூடாதப் போர் தொடங்கிவிட்டதென சில தாய்கள் மகன்களைப் போருக்கு அனுப்பி வைத்துவிட்டு மடியில் உயிரைக் கட்டிக்கொண்டு பரிதவித்து நின்றார்கள். சில தாய்கள் என் பிள்ளையும் என் மன்னனும் வெற்றி வாகைச் சூடி வர பலி பீடத்திற்கு தன் தலையைக் கொடுத்தார்கள். ஒரு தாய் தன் கணவனை அனுப்பி வைத்துவிட்டு ஒரு மகனைப் போருக்கு தயார்படுத்தினாள். இன்னொரு தாய் ஆணோடு ஆணாக ஆண் வேடம் பூண்டு சேனையோடு சங்கமித்தாள்.

போர்த் தொடங்கிய சங்கதி போர்ஆயுத வியாபாரிகளுக்குத் தெரிய வந்தது. பழைய ஆயுதம் கொண்டு போர்த்தொடுப்பதா...? அப்படியானால் வணிகம் எதற்கு..? வியாபாரி எதற்கு..? வியாபாரம், சந்தை, சங்கதி எதற்கு...? வியாபாரிகள் கடைகளைத் திறந்து வைத்துகொண்டு கூர்தீட்டினார்கள். ஆயுதங்களைக் கடை விரித்து ஆயுதத்தின் புகழைப் பாடத் தொடங்கினார்கள்.

‘ இவ்வாயுதம் தலைகளைக் கொய்யும்.

இவ்வாயுதம் கரங்களை முறிக்கும்.

இவ்வாயுதத்தின் சிறப்பு என்னத் தெரியுமா...?

‘ என்ன...?’

‘ பெண்களின் கொங்கைகளை அறுக்கும்...’

‘ பலே...’

‘ இவ்வாயுதம் அதைவிடவும் மேலானது...?’

‘ எப்படி..?’

‘ குழந்தைகளை மட்டும் கண்டறிந்து உயிரைப் பறிக்கும்...’

‘ பலே...பலே...’

‘ இது கிழடுகளைக் கொல்ல, இது இளைஞர்களைக் கொய்ய,...’

‘ இது என்னது புதிதாக இருக்கிறது....’

‘ கன்னி வெடி...’

‘ அப்படியென்றால்...?’

‘ மிதித்தால் வெடிக்கும்..’

‘ கன்னிப்பெண்கள் மிதித்தால் அப்படித்தானே...’

‘ என்னச் சொல்கிறீர்கள் நீங்கள். போர் என்பதே பெண்களை அழிக்கத்தான். அவர்களின் தாலியை அறுக்கத்தான். அவர்கள் மிதித்து வெடிப்பதென்பது வெடிக்கு இழிவு இல்லையா! கன்னி வெடி என்பது சின்ன வெடி. சிறுவர்களைக் கொள்வதற்காக கண்டுப்பிடிக்கப்பட்ட வெடி...’

‘ கர்ப்பப் பையிலுள்ள கருவை அழிக்கும்படியான ஆயுதமிருந்தால் கொடும்...’

‘ விலை அதிகமாகயிருக்கும் பரவாயில்லையா...?’

‘ விலையா முக்கியம். ஆயுதத்தின் வினையே முக்கியம்...’

‘ இந்த ஆயுதத்தின் சிறப்பு என்ன..?’

‘ அரசாண்டவனையும் அகதியாக்கும்...’

‘ இது அகதியையும் திதியாக்கும்...’

ஆயுத விற்பனை இருபுறமும் அனல் பறந்தன. ஆக்ரோ தேசத்தை விடவும் ட்ராய் தேசமே ஆயுதம் கொள்முதலில் முதலிடம் பிடித்தது.

ட்ராய் மன்னன் பாரிஸ் , அவனது தேசத்தில் அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தான். தன் நிதிநிலை அறிக்கையில் உணவிற்கு ஒதுக்கிய எண்பது விழுக்காடு நிதியை ரத்து செய்து ஆயுதம் கொள்முதலுக்கு ஒதுக்கினான். அந்நிய வியாபாரிகள் ட்ராய் தேசத்தில் குவிந்தார்கள். கையில் துண்டைப்போட்டுக்கொண்டு ‘ அடங்கும் அடங்காது, படியும், படியாகாது...’ எனத் தரகு பேசினார்கள்.

மக்கள் கூடும் சந்தை ஆயுதச் சந்தையானது. தானியக்கிடங்கு இரசாயன கிடங்கானது.

‘ இந்த இரசாயனம் நேற்று வந்தது...’

‘ என்ன சிறப்பு...?’

‘ நீரை விஷமாக்கும்...’

‘ இது...?’

‘ நிலத்தை நஞ்சாக்கும்....’

‘ இதெல்லாம் வேண்டாம். காற்றை நஞ்சாக்கும் இரசாயனம் இருக்கிறதா...?’

‘ ஆம், இருக்கிறது. எவ்வளவு வேணும்...?’

‘ மொத்தமாகக் கொடும்..’ என்றான் பாரிஸ். பிறகு அதை மறுத்து ‘ வேண்டாம், வேண்டாம், அந்த இரசாயனம் தயாரிக்கும் தொழிற்பட்டறையை விலைக்குக் கொடும்...’ என கேட்டு மிரட்டி வாங்கினான்.

‘ போர் தேசத்திற்கு ஆயுதங்களை விடவும் ஆண் பிள்ளைகளே தேவை. ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுக்க திடகாத்திரமான பெண்கள் தேவை...’ அதைக்குறித்து பாரிஸ் யோசித்தான். அவனது யோசனையில் தென்பட்ட வித்துகளை மந்திரி சபை கூட்டி விதைத்தான்.

' ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்க வெளிநாட்டிலிருந்து பெண்கள் இறக்குமதி செய்யப்படுவார்கள் '

‘ நாட்டில் கர்ப்பத்தடை கிடையாது. யாரும் எத்தனைக் குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்..’

‘ ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும்...’

‘ பெற்றெடுக்கும் குழந்தைகளை சிப்பாயாக மட்டுமே உருவாக்க வேண்டும்...’

‘ பெண் குழந்தை பிறக்கத் தடை..’

‘ பிறந்தால் வளரத் தடை...’

‘ பெண் குழந்தைகள் பொது இடத்தில், காடு , கழனியில் விளையாடத் தடை...’

‘ பாலியல் பலாத்காரம் குற்றமன்று. ட்ராய் தேசத்தின் தேசிய விளையாட்டு அது. யாரும் யாரையும் கடத்தலாம். கற்பழிக்கலாம்., கொல்லலாம், கொன்றுப்புதைக்கலாம்..... ’

‘ ட்ராய், தாய் தேசமன்று. ஆண் தேசம்....’

பாரிஸ் இயற்றிய அவசரத் திட்டங்கள் சட்டங்களாகக் கொம்புகளைச் சிலுப்பிக்கொண்டுத் திரிந்தன. யாரும் தேரில் தனியே பயணிக்கிறார்களா, ஒட்டகங்களைத் தனியே மேய்க்கிறார்களா,...எனக் கவனித்து திரிந்தன.

ட்ராய் தேசத்தில் பேய்கள் தலையெடுத்தன. பிணங்களை சாத்திரங்களாகத் தின்றன.

ஆயுதங்களைத் தீட்டிக்கொண்டு மெனிலாஸ் வரும் வழியைப் பார்த்து காத்திருந்தான் பாரிஸ். அவனது படையில் திட, திரவ,வாயு இரசாயன முடிச்சுகள் இருந்தன.

ஒற்றன் மூலமாக பாரிஸ் காதிற்கு ஒரு செய்தி வந்தது. ஆக்ரோ படை கிளம்பிய வேகத்திற்கு இந்நேரம் நம் தேசத்தின் எல்லையைத் தொட்டிருக்க வேணும். ஆனால் இந்நேரத்து வரைக்கும் படையைக் காணோம். படைக்கு முன் வரும் புழுதியும் காணோம்....

‘ ஹ்...ஹ்...ஹ்...’ வெடித்தான் பாரிஸ். தொடைகளைத் தட்டிக்கொண்டு ஹெலன் கூண்டு நோக்கி ஓடினான். ‘ உன் கணவான்....ஹ்ஹ்ஹ்...பயந்து....ஹ்ஹ்ஹ்....ஓடி ஒளிந்து விட்டான் ஹ்ஹ்ஹ்...’

வெடித்த சிரிப்பு அவனது படைகளைச் சிரிக்க வைத்தது. அவனது குதிரைப்படைகள் கால்களைத் தூக்கி கனைக்க வைத்தது.

மெனிலாஸ், தமக்கு எதிராக பாரிஸ் வகுத்திற்கும் வியூகத்தைச் சொல்லி தன் படைகளைத் தயார்படுத்திக்கொண்டு வந்தான். அவனது மூளையில் சட்டென ஒரு யோசனை துளிர்விட்டது. போருக்குப் படை கிளம்பி இருபது நாட்களைத் தாண்டி விட்டன. இந்நாட்களுக்குள் படை ட்ராய் எல்லையைத் தொட்டிருக்க வேண்டும். போர் இந்நேரத்திற்குள் தொடங்கியிருக்க வேணும். இன்னும் ஏன் தூரம் நீண்டுக்கொண்டிருக்கிறது...? தொடையைத் தட்டிக்கொண்ட மெனிலாஸ் உந்தி முன் பக்கமாகத் திரும்பி குதிரைப் போகும் திசையைப் பார்த்தான். அவனுக்கு ‘ பகீர்..’ரென இருந்தது.
 
Last edited:
#3
கொரில்லாவின் வேகமும் சிம்பன்சியின் உக்கிரமும் மெனிலாஸ் முகத்தில் தாண்டவமாடின. தன் மார்பை முள்ளெலியைப்போல பெருக்கிக்காட்டினான். சண்டைக்கோழியின் இறக்கைகளைப்போல கைகளை அசைத்திட்டான்.
சாரைப்பாம்பின் வேகத்தில் குதிரைப்படை நிழல் வேகமிருந்தது.
வர்ணனைகள் அருமை சகோ:):):):):)எத்தனை போர் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ பெண்களும் , குழந்தைகளும் தான்...........இன்று நம்ம தேசத்தில் கூட சில எத்தர்கள் பிஞ்சுகளை சீரழித்து நம்ம தேச தாயை தலை குனிய வைத்து தான் இருக்கிறார்கள் . காலம் மாறினாலும் கோலம் மாறாதுபோலவே:(:(:(
இன்னும் ஏன் தூரம் நீண்டுக்கொண்டிருக்கிறது...? தொடையைத் தட்டிக்கொண்ட மெனிலாஸ் உந்தி முன் பக்கமாகத் திரும்பி குதிரைப் போகும் திசையைப் பார்த்தான். அவனுக்கு ‘ பகீர்..’ரென இருந்தது.
kuthirai troy desam chellavillaya:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:nice epi sago:):):):)
 
#5
வர்ணனைகள் அருமை சகோ:):):):):)எத்தனை போர் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ பெண்களும் , குழந்தைகளும் தான்...........இன்று நம்ம தேசத்தில் கூட சில எத்தர்கள் பிஞ்சுகளை சீரழித்து நம்ம தேச தாயை தலை குனிய வைத்து தான் இருக்கிறார்கள் . காலம் மாறினாலும் கோலம் மாறாதுபோலவே:(:(:(

kuthirai troy desam chellavillaya:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:nice epi sago:):):):)
ஆமாம் சகோ... வெட்கம் , வேதனை...
 
#6
டபுளன் . உலகின் விசித்திரக்குதிரை. மெனிலாஸ் பிட்டத்து சூட்டில் பறக்கும் குதிரை அது. குதிரை பறக்குமா,..? காற்றில் மிதக்கும் குதிரை இது. வில் நாணிலிரு
ஆமாம் தொடக்கப் பகுதியில் வாசித்த ஞாபகமிருக்கிறது....
 
#7
ஹ்...ஹ்...ஹ்...’ வெடித்தான் பாரிஸ். தொடைகளைத் தட்டிக்கொண்டு ஹெலன் கூண்டு நோக்கி ஓடினான். ‘ உன் கணவான்....ஹ்ஹ்ஹ்...பயந்து....ஹ்ஹ்ஹ்....ஓடி ஒளிந்து விட்டான் ஹ்ஹ்ஹ்...’
ஹ்.....ஹ்....சிரிப்பு கர்ஜிக்கிறது.....
 
#8
பெண் குழந்தை பிறக்கத் தடை..’

‘ பிறந்தால் வளரத் தடை...’

‘ பெண் குழந்தைகள் பொது இடத்தில், காடு , கழனியில் விளையாடத் தடை...’

‘ பாலியல் பலாத்காரம் குற்றமன்று. ட்ராய் தேசத்தின் தேசிய விளையாட்டு அது. யாரும் யாரையும் கடத்தலாம். கற்பழிக்கலாம்., கொல்லலாம், கொன்றுப்புதைக்கலாம்..... ’
😫😨
 

Latest profile posts

banumathi jayaraman wrote on vidya_s's profile.
My heartiest birthday wishes to you, Vidya_S Madam
Dear Friends,

Idhu Irul Alla! - 22nd Episode updated! Will be back with next episode soon! Happy Reading!
வணக்கம் நட்பூஸ் -- உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 30 போட்டாச்சு.
Akila Kannan's thaagam 14 updated friends
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி ஐந்தாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
என் இனிய நட்புகளுக்கு,

உங்கள் அனைவரின் பாராட்டுகளைப் பெற்ற அகத்திய ரக்சியம் நாவலின் அடுத்த மூன்றூ அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன. படித்து விட்டுக் கருத்த்க்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Dear friends, some of you would have missed the interesting pages while reading the story link. Kindly check it out as our admin has now fixed it. Those who have read in the morning in doc form had no problem.
உன் விழிகளில் விழுத்த நாட்களில்... இன்ட்ரோ..... https://www.smtamilnovels.com/community/index.php?threads/un-vizhigalil-vizhuntha-naatkalil-intro.1391/
காதலாம் பைங்கிளியின் இறுதிப் பகுதியின் பார்ட் 2 இங்கிருக்கிறது
https://www.smtamilnovels.com/community/index.php?threads/kaadhalaam-paingili-final-part2.1386/
காதலாம் பைங்கிளியின் இறுதிப் பகுதியின் துவக்கம் இங்கிருக்கிறது.https://www.smtamilnovels.com/community/index.php?forums/kadhalaam-paingili.140/

Today's birthdays

Advertisements

Latest Episodes