• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Aththiyaayam 23: Kanakambarap poo

#1
கனகாம்பரப்பூ...23.

சாவியைக் கையில் வைத்துக்கொண்டு யோசித்தபடி நிற்கும் உதயாவை உலுக்கினாள் ஸ்வேதா.

"என்ன அப்படியே நின்னுட்ட? கதவைப் பூட்டு! நமக்கு நேரமாகுது இல்ல?" என்றாள்.

"ஒரு நிமிஷம் உள்ள வாயேன்" என்று அழைத்தாள் தோழியை. நெற்றி சுருங்க உள்ளே நுழைந்தாள் ஸ்வேதா.

"இப்ப என்ன?" என்றாள் ஸ்வேதா எரிச்சலாக.

"ஸ்வே! இப்ப வந்துட்டுப் போனாங்க இல்ல ஒரு பொண்ணு! அவங்களுக்கு நாம உதவி செஞ்சா என்ன?" என்றாள்.

"அவங்களை நமக்கு தெரியாதே உதயா? அதுவும் போக இப்பத்தானே புதுசா ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றாங்க?" என்றாள்.

"அவங்களைப் பார்த்தா எனக்கு என்னை நானே பார்த்துக்குறா மாதிரி இருக்கு ஸ்வே! நானும் முதல்ல பிசினஸ் ஆரம்பிச்சுட்டு எனக்கு யாராவது காண்டிராக்ட் குடுக்க மாட்டாங்களான்னு இப்படித்தான் ஏங்கினேன். நல்லவேளை சிவ சாமி சார் நமக்கு உதவுனாரு. அதே மாதிரி நாம ஏன் உமாவுக்கு உதவக்கூடாது?"

சட்டென உதயாவை நெருங்கி அணைத்துக்கொண்டாள் ஸ்வேதா. அவள் கண்களில் நீர் இருந்தது.

"உதி! நீ ரொம்பவே உசந்துட்டடி! எப்படி சிவசாமி சார் நமக்கு கை கொடுத்தாரோ நாம அதே மாதிரி உமாவுக்குக் கை கொடுப்போம். ஆனா அதே நேரம் அவங்களுக்குத் திறமை இருக்கான்னு பார்க்கணும். சரியா?"

"கண்டிப்பா! திறமை இருந்தா மட்டுமே நாம அவங்களை கை தூக்கி விடுவோம்."

"இப்ப அவங்களைக் கூப்பிடலாமா?"

"வேண்டாம்! நாம முதல்ல அந்த கேட்டரிங்க் சர்வீசுக்குப் போவோம். அவங்க கொட்டேஷன் என்னன்னு கேட்டு வாங்குவோம். அப்புறம் அங்க இருந்து நேரா அந்தப் பொண்ணு உமா வீட்டுக்குப் போவோம். நம்ம ரெண்டு பேருக்கும் மதிய சாப்பாடு தயார் பண்ணச் சொல்லி சாப்பிட்டுப் பார்ப்போம். டேஸ்ட் நல்லா இருந்ததுன்னா மேற்கொண்டு பேசுவோம் என்ன?" என்றாள்.

"ஏயப்பா! நீ எங்கியோ போயிட்டடி" என்று பாராட்டினாள் ஸ்வேதா.

"எங்கேயும் போகல்ல இங்கே தான் நின்னுக்கிட்டு இருக்கேன். வா இப்ப போயி அந்த கேட்டரிங்க் ஆளுங்களைப் பர்க்கலாம்" என்று சொல்லி படியிறங்கினாள். அவளை முதுகில் லேசாக அடித்தவாறே ஸ்வேதாவும் இறங்கினாள். மதிய வெயில் கண்ணைக் கூச வைத்தது. ஒரே வண்டியில் தான் இருவரும் பயணித்தனர். அரை மணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்து விட்டனர். அதுவும் ஒரு வீடு போலத்தான் இருந்தது. பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது அந்த இடம். இவர்களைப் பார்த்ததும் யாரும் எதுவும் கேட்கவில்லை அவரவர் தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கே பார்சலைக் கொண்டு போய்க்கொண்டிருந்த ஒரு பையனை நிறுத்தி விசாரித்தார்கள்.

"எனக்கு இங்க ஒருத்தரைப் பார்க்கணும்?"

"யாரு? என்ன பேரு?"

"வந்து பேரு தெரியாது ஆனா நாங்க கேட்டரிங்க் சர்வீஸ் பத்தி விசாரிக்க வந்தோம்"

"அப்ப நேரா போயி ரைட்டுல திரும்புங்க! அங்க கலா மேடம் இருப்பாங்க! அவங்க கிட்ட பேசுங்க" என்று சொல்லி விட்டுப் போய் விட்டான்.

சிறிய மேஜையின் மேல் கலா மேடம் அமர்ந்திருந்தார்கள். விவரத்தைச் சொன்னதும் ஒரு ஃபார்மை எடுத்து வைத்துக்கொண்டு அதில் எழுத ஆரம்பித்தார்கள்.

"எத்தனை பேருக்கு சாப்பாடு? எங்கே சப்ளை செய்யணும்? "

"உங்க கிட்ட ரேட் கார்டு ஏதாவது இருக்கா? அதைப் பார்த்து நாங்க முடிவு செய்யறோம்?"

"அப்படி எதுவும் இல்ல! நீங்க சொல்லுங்க எவ்வளவு ஆகும்ன்னு நான் கணக்குப் போட்டு சொல்றேன்" என்றாள்.

விவரத்தை அறிந்து கொண்டு கம்ப்யூட்டரில் கொஞ்ச நேரம் பார்த்தாள். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து எழுதினாள்.

"மாசம் 38,000 ரூவாய் ஆகும். இது தவிர டிராஸ்போட்டேஷன். எல்லாம் சேர்த்து 40,000 அட்வான்ஸ் 20,000 மாச ஆரம்பத்துல கொடுக்கணும். மாத முடிவுல மீதிப்பணத்தைக் கட்டணும். இப்பவே கட்டிட்டீங்கன்னா நாளையில இருந்து சாப்பாடு உங்க சைட்டுக்கு வந்துரும்" என்றாள்.

மிக அதிகமாக இருப்பதாக கருதினார்கள் இருவரும் என்பதால் நாங்க யோசிச்சு சொல்றோம் என்று சொல்லி விட்டு புறப்பட்டார்கள். நேரே அவர்களது வண்டி உமா கொடுத்த அட்ரசில் போய் நின்றது. அவர்களது வேலை நடக்க இருக்கும் சைட்டுக்கு மிக அருகிலேயே இருந்தது அந்த இடம். அதனால் வண்டியை சைட்டில் போட்டு விட்டு நடந்து சென்று அந்த வீட்டை அடைந்தனர். சிறிய வீடானாலும் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டிருந்தது அது. இவர்களைக் கண்டதும் ஓடி வந்தாள் உமா.

"நீங்க இப்படி என்ற வூடு தேடி வருவீங்கன்னு நான் நெனச்சே பார்க்கலீங்க!" என்று வேக வேகமாக வெளியில் வந்து இவர்களை வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்றாள் உமா.

"உமா! நாங்க சைட்டுக்கு வந்தோம் அப்படியே உன்னையும் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம். எங்களுக்கு மதிய சாப்பாடு தயார் செஞ்சு தருவியா? பசிக்குது! உண்டான காசைக் கொடுத்துடறோம்" என்றாள் ஸ்வேதா நேரிடையாக.

"ஓ! நல்லாவே செஞ்சு தரேனே! அரை மணியில எல்லாம் ரெடி பண்ணிடறேன். " என்று அமர வைத்து விட்டு பரபரவென செயல்பட்டாள். அவர்களிடம் பேசிக்கொண்டே காய் நறுக்கினாள்.

"என்ற ஊட்டுக்காரரு நல்லவரு தாங்கோ! ஆனா யாரோ வேண்டாதவங்க பேச்சைக் கேட்டு இப்படி ஆயிட்டாரு" என்று ஒரு மூலையில் கை காண்பித்தாள். அப்போது தான் அங்கே ஒரு இருண்ட மூலையில் போர்வையைப் போர்த்திக்கொண்டு ஒரு உருவம் படுத்திருப்பதை கவனித்தார்கள்.

"என்ன வேலைக்குப் போகாம தூங்குறாரு?" என்றாள் ஸ்வேதா.

"ம்ச்! அந்த மனுஷன் வேலைக்குப் போகுறதே இல்லீங்க! அதனால தானே நான் இப்படி சமையல் செஞ்சு குடுத்து பொழைக்கறேன். அதனால என்ன? எங்களுக்கும் நல்ல காலம் வரமாலா போயிடப்போகுது?" என்று சொல்லி விட்டு சமையலில் மும்முரமாகி விட்டாள். அவளை நிம்மதியாக வேலை செய்ய விட்டு விட்டு சைட்டின் பக்கம் வந்தார்கள். நாளையே இங்க ஒரு தற்காலிக கொட்டகை ஒன்று போட்டு சிமிண்டு மூட்டைகளை அடுக்கவும் செங்கற்களை இறக்கவும் வேண்டும். இவைகளைப் பார்த்துக்கொள்ள நல்ல ஆளாகக் கிடைத்தால் பரவாயில்லை எனப் பேசிக்கொண்டு தோழியர் இருவரும் நின்றிருந்தனர்.

அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ராஜகோபாலும் இன்னொருவரும் வந்து இறங்கினார்கள். ராஜகோபாலைப் பார்த்ததம் முகம் சுண்டிப்போனது இருவருக்கும். அவர் இவர்களை அங்கே எதிர்பார்த்தவரைப் போலக் காணப்பட்டார்.

"ஹலோ உதயா?" என்றார் எதுவுமே நடக்காதவரைப் போல. மரியாதை கருதி உதயாவும் பதிலுக்கு ஹலோ என்றாள். ஸ்வேதா பற்களைக் கடித்தாள்.

"நான் எதுக்கு இங்கே வந்தேன்னு பர்க்கறீங்களா? சிவசாமி இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே வரேன்னு சொல்லியிருக்காரு. அவரைப் பார்க்கத்தான் வந்தேன்" என்றார்.

பதறிப்போனார்கள் தோழிகள் இருவரும்.

"நீங்க கவலைப்படாதீங்க! உங்களுக்கு இந்த காண்டிராக்ட் கட்டாயம் கிடைக்கும் அதுக்கு நான் கியாரண்டி" என்றார். அவரது அமைதியான பேச்சில் ஏதோ ஒரு வஞ்சகம் மறைந்திருப்பதாகப் பட்டது இருவருக்கும். நாம் இந்த காண்டிராக்டை எடுத்திருக்கிறோம் என்று இவருக்கு யார் சொன்னது? சிவசாமியை எப்படி இவர்களுக்குத் தெரியும்? என்ன திட்டத்தோடு இந்த ஆள் இங்கே வந்திருக்கிறார்? என யோசித்தபடியே நின்றிருந்தனர்.
 

Latest profile posts

ஹாய் டியர்ஸ்...
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 24 ( PRE - FINAL ) எபி போடுறேன்..
படிச்சு கருத்தை சொல்லுங்க...
akila kannan's thaagam 18 updated friends...
Porkalathil oru pen puraa... (part-9) posted
Karuppu rojakkal part-17 posted... தன் மனதில் நுழைந்தவள் விபச்சாரியென்று பின் தெரிய வரும்போது மகேசின் மனநிலையென்ன???
ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி ஒன்பதாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
தேடி வந்த தேவதையே FINAL EPISODE போட்டாச்சு மக்களே இறுதி அத்தியாயத்தை படித்துவிட்டு கருத்தை சொல்லுங்க
Hi Dearies! Idhu Irul Alla! 24th episode updated! Looking forward for your valuable comments! Will come back with Climax soon! Till then, Happy Reading!
banumathi jayaraman wrote on Nalinimani's profile.
My heartiest birthday wishes to you, Nalinimani Madam
தேடி வந்த தேவதையே PREFINAL EPISODE விரைவில் வருகிறது
உமா தீபக்கின் அழகியின் காதல் தவம் பகுதி 9 போட்டாச்சு மக்களே!!

Advertisements

Latest Episodes