Azhagiyin Kadhal Thavam 5

How is the story going?

  • intersting

    Votes: 12 100.0%
  • boring

    Votes: 0 0.0%

  • Total voters
    12

umadeepak25

Well-known member
#1
ஹாய் மக்களே இதோ ஐந்தாம் பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் கருத்துகளை, என்னோடு பகிர்ந்திடுங்கள் .

தவம் - 5

ஐநூறு வருடங்களுக்கு முன்பு:
இளங்காலை பொழுதில், அந்த அரண்மனை தோட்டத்தில் இளவரசி மதியழகி அந்த இயற்கை அழகை கண்டு அதனோடு மனதில் உரையாடிக் கொண்டு இருந்தாள்.

“ரோஜாவே! நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய்! உன்னை யாரும் தொட்டால், உன் மணாளனான முள்ளுக்கு கோபம் வருகிறது.”

“உன்னை என் கூந்தலில் சூடிக் கொள்ள, நான் உன்னை நெருங்க, உன் மணாளன் அவளை தொடாதே! அவள் என்னுடையவள்! என்று கோபம் கொள்ளுகிறான்”.

“அதையும் மீறி உன்னை நான் பறித்து என் கூந்தலில் சூடினால், அவனை பிரிந்த துயரத்தில் நீயோ வாடி விடுகிறாய்! நீ ஒரு பக்கம் இப்படி இருக்கிறாய் என்றால், அதோ அந்த வண்ணத்துப்பூச்சி எனக்கு நன்றாக ஆட்டம் காட்டுகிறாள்”.

“அவளை என் கைகளுக்குள் பொத்தி வைக்க நான் விரும்ப, அவளோ என்னை பிடிக்க வா என்று ஆட்டம் காட்டி ஓடி விடுகிறாள். அவள் தான் ஓடி விடுகிறாள் என்று, நான் குளத்தில் உள்ள மீன்களை பிடித்து விளையாடலாம் என்று சென்றால், அதுவும் என் கைக்கு அகப்படவில்லை”.

“நீயும் உன் மணாளன் முள்ளும் இருப்பது போல், அதுவும் தண்ணீர் விட்டு வர மறுக்கிறது. அப்படியே அது என் கைக்கு கிடைத்தாலும், வேதனை தாங்காமல் உயிரை விடுகிறது”.

“நானும் என் மணாளனை கனவில் கண்டேன், அவரோ அந்த வண்ணத்துப்பூச்சி போல் எனக்கு ஆட்டம் காட்டுகிறார். இன்னும் அவரை நான் நேரில் சந்திக்கவில்லை, அவருக்கு என்னை பிடிக்குமா, இல்லையா என்பது கூட தெரியாது”.

“அப்படி அவருக்கு, என்னை பிடிக்கவில்லை என்றால் நான் இப்படியே இருந்துவிடுவேனே தவிர வேறு ஒருவனை மணக்க மாட்டேன். அந்த அளவிற்கு, அவர் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்”.

“அவருக்கு என்னை பிடித்து இருந்தால், என்னை நிச்சயம் பாதுகாத்து என் மேல் அன்பை பொழிவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று ரோஜாவிடம் பேசிக் கொண்டே, மதியழகி அந்த அரண்மனை தோட்டம் அருகே உள்ள குளத்தின் பக்கம் வந்துவிட்டாள்.

அவள் வந்த வழி முழுவதும், ரோஜா செடிகளே அதிகம் இருந்தது. அவளுக்கு பிடித்ததும் ரோஜா தான், அது அவளின் உயிர் தோழி என்றே சொல்லலாம்.

இளவரசி மதியழகி, அவளின் சந்தோசம் துக்கம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வது அவளின் உயிர் தோழி ரோஜா பூக்களிடம் தான்.

அந்த குளக்கரையில் அமர்ந்து, தண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கும் மீன்களை பார்த்தவாரு அமர்ந்து இருந்த மகளை பார்த்து பெருமூச்சு விட்டார் மன்னர் இளங்கோவன்.

மகள் விருப்பப்பட்டு தன்னிடம் கேட்ட ஒரே விஷயம், அவளின் மணாளனை தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்பதே. இதோ நான்கு வருடங்களாக படை வீரர்களை கொண்டு தேடிக் கொண்டு தான் இருக்கிறோம், அவன் எங்கு இருக்கிறான் என்பது தெரியவில்லை.

அப்படி ஒருவன் இல்லை என்று கூறி, வேறு ஒருவனுடன் மணம் முடித்து வைக்கலாம் என்றால், அவள் அதற்க்கு சம்மதிக்கவில்லை. மனைவி மங்கை வேறு, மகளிடம் எடுத்துக் கூற சொல்லி அழுது புலம்புகிறாள்.

இன்று இதைப் பற்றி மகளிடம் பேச வேண்டும் என்ற ஒரு முடிவோடு, மகள் அருகே சென்றார்.

“மகளே மதியழகி! தோழிகளுடன் நேற்றைய பொழுது, நன்றாக சென்றதா? மகிழ்ச்சியாக பொழுதை கழித்தாயா?” என்று விசாரித்தார்.

தன் அருகில் தந்தையின் குரலை கேட்ட, இளவரசி மதியழகி தன் சிந்தனையில் இருந்து மீண்டு, தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் எழுந்து சென்று அவரை அனைத்துக் கொண்டாள்.

“தந்தையே! நேற்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தோம். ஆனால் அங்கே நடந்த சில சம்பவங்கள், மனதிற்கு சங்கடத்தையும், வருத்தத்தையும் சேர்ந்தே தருகிறது எனக்கு”.

“தந்தையே! நேற்று புறாவில், நான் அனுப்பிய செய்தி தங்களுக்கு கிட்டியதா?” என்று கேட்டாள் மகள்.

“ஆம் மகளே! எனக்கு செய்தி கிடைத்தது, அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்க்கான வேலையும் தொடங்கி விட்டேன், இனி அங்கே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்” என்று உறுதி அளித்தார்.

அதைக் கேட்டவுடன், இளவரசிக்கு நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அடுத்து தந்தை கூறிய செய்தியில், அவள் முகம் வாட்டம் அடைந்தது.

“தந்தையே! தாங்களும் என்னை புரிந்து கொள்ளவில்லையே?” என்று கண்களில் நீர் முட்ட கேட்டாள் மதியழகி.

“மகளே மதி! உன் தாயார் கவலை நியாயமானது தானே! இன்னும் இப்படியே நீ இருப்பது எனக்கு சரியாக தோன்றவில்லை, ஆகையால் இன்னும் மூன்று மாதத்தில் நல்லவன் ஒருவன் கையில் உன்னை ஒப்படைக்க, நான் முடிவெடுத்து விட்டேன்”.

“தந்தை மீதும், உன் தாய் மீதும் உண்மையான அன்பு இருந்தால் நீ இதற்க்கு சம்மதித்து தான் ஆக வேண்டும் மகளே. இது என் மேல் ஆணை! இதை நீ மீறமாட்டாய் என்று நம்புகிறேன்” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

தந்தை அவ்வாறு கூறிவிட்டு சென்ற பின், கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தோடியது. அவளின் கண்ணீர் அந்த குளத்தில் பட்டு, அந்த மீன்களிடம் கதை பேசியது.

அந்த மீன்களும், அவளின் துக்கத்தில் பங்கு எடுத்து அவளுக்காக கவலை கொண்டது.

அரண்மனை நோக்கி சென்ற அரசர் இளங்கோவன், அங்கே துறவர் ஒருவர் வாயிற் காவலர்களிடம் ஏதோ சண்டை பிடிப்பது போல் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தார்.

“யார் அங்கே? அந்த துறவியை உள்ளே அனுப்ப கூறி, காவலர்களிடம் உத்தரவிடுங்கள்” என்று அரசர் கட்டளையிட்டார்.

அரசரின் கட்டளையை ஏற்று, காவலர்கள் துறவியை உள்ளே அனுப்பினர். துறவியோ, அவர்களை முறைத்துவிட்டு உள்ளே நுழைந்தார்.

உள்ளே அரண்மனை நோக்கி வந்தவரை, அரசர் கை கூப்பி வரவேற்றார். துறவரும் அதை ஏற்றுக் கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

“மன்னிக்க வேண்டும் துறவரே! வாயிற் காவலர்களுக்கு, புதிதாக யார் வந்தாலும் உள்ளே விடுவதற்க்கு முன், என் உத்தரவின்றி உள்ளே அனுப்ப வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்து இருக்கிறேன்” என்று காவலர்களின் செயலுக்கு, அரசர் இளங்கோவன் விளக்கம் அளித்தார்.

“ம்ம்.. புரிகிறது அரசே! தங்களோடு தனியாக நான் சற்று, முக்கியமான விபரம் பேச வேண்டும். ஆகையால் தான், நான் இந்த காலை வேளையில் வந்ததே” என்று துறவர் கூறவும், அரசரும் அதை உணர்ந்து இருந்ததால் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

அரசர் அவரின் தனி அறைக்கு, துறவியை அழைத்து சென்றார். அங்கு அவர் பணிப்பெண்களை அழைத்து, துறவிக்கு பருக பானம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார்.

அவர்கள் பானம் கொண்டு வந்து கொடுத்த பின்பு, துறவி அதை அருந்துவதற்கு முன்பு அரசரை ஒரு பார்வை பார்த்தார். அரசர் அதை புரிந்துகொண்டு, பணிப்பெண்களிடம் செல்லுமாறு கூறினார்.

அவர்கள் சென்றதை உறுதி படுத்திவிட்டு, துறவி அரசரிடம் தான் வந்த விஷயத்தை கூற தொடங்கினார்.

“அரசரே! நான் நல்ல செய்தி ஒன்றும் கொண்டு வரவில்லை. இப்பொழுது நான் சொல்ல போவது, என் ஞான திருஷ்டியில் இனி நடக்க போவதை நான் அறிந்த விஷயங்களை சொல்லிவிட்டு செல்லலாம் என்று வந்தேன்” என்று துறவர் கூறவும், அரசர் திடுக்கிட்டார்.

“தாங்கள் என்ன கூற வருகிறீகள், துறவரே! நாட்டு மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வரவிருக்கிறதா?” என்று கேட்டார் அரசர்.

ஒரு நல்ல அரசருக்கு , அவரின் முதல் கவனம் நாட்டு மக்களிடம் தான் செல்லும். அதன் பின் தான், குடும்பத்தை பற்றி யோசிப்பார்கள்.

இப்பொழுது அரசர் இளங்கோவனும், இப்படி ஒரு செய்தி கேட்ட பின்பு, அவரின் கவனம் நாட்டு மக்களிடம் தான் சென்றது. ஒரு நல்ல அரசனாக நாட்டு மக்களுக்கு, எந்த விதமான ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொள்வதே அவரின் முதற்கண் கடமையாக இருக்கிறது.

துறவர், அதை தான் கூறுகிறாரோ என்று எண்ணி, படபடத்தார். ஆனால், துறவியோ வேறு கூற தொடங்கினார்.

“அரசே! ஆபத்து நாட்டு மக்களுக்கு அல்ல, தங்களின் மகளுக்கு” என்று கூறி நிறுத்தவும், அரசர் அதைக் கேட்டு வருத்தம் கொண்டார்.

“என்ன விதமான ஆபத்து துறவரே! அதற்கு ஏதும் பரிகாரம் இருந்தால் கூறுங்கள், அதை செய்து விடுகிறேன்” என்று கூறினார் அரசர்.

“மன்னிக்க வேண்டும் அரசே! பரிகாரம் ஏதும் இல்லை, ஆனால் ஆபத்து காவிரிபூம்பட்டினத்தில் இருந்து வருகிறது. தங்களுக்கு கூட அது தெரியும், ஆகையால் இனி இளவரசி சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்”.

“அவர் அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்கும் மார்க்கம், நான் அறிந்தால் உடனே தங்களிடம் தெரிவித்து விடுகிறேன்” என்று கூறிவிட்டு அவரிடம் விடை பெற்று சென்றார்.

அவரை வழியனுப்ப, தன் வீரர் ஒருவரை அவரோடு அனுப்பி வைத்துவிட்டு, அரசர் அவரின் மனைவி குமாரிதேவி இருக்கும் அறைக்கு சென்றார்.

அரசர் வருத்தம் தேய்ந்த முகத்துடன் வருவதை பார்த்த, அவரின் மனைவி குமாரிதேவி அவரை தேற்றும் பொருட்டு அவரை அழைத்துக் கொண்டு, அங்கு இருந்த பெரிய சாய்வு இருக்கையில் அமர வைத்து அவர் தலையை வருடிக் கொடுத்தார்.

“அரசே! ஏன் இந்த வேதனை? யாருக்கேனும் ஏதும் ஆபத்தா?” என்று விசாரித்தார் குமாரிதேவி.

“ஆம்! நம் மூத்த மகள், இளவரசி மதியழகிக்கு தான் ஆபத்து” என்று கூறி காலை துறவி வந்து கூறிய விஷயத்தை, அவரிடம் கூறினார்.

அதைக் கேட்ட குமாரிதேவி, மனதளவில் நொறுங்கி விட்டார். அவர் வளர்த்த மகள் அல்லவா! மகளுக்கு ஆபத்து என்னும் பொழுது, அவர் துடிதுடித்து விட்டார்.

“அரசே! தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? யாருக்கும் தீங்கு இழைக்காத, நம் மகளுக்கு ஆபத்து என்றா!”.

“இந்த செய்தியை மங்கை அக்கா கேட்டால், அவர் துடிதுடித்து போய் விடுவாரே! இப்பொழுது நாம் என்ன செய்வது அரசே?” என்று பரிதவிப்புடன் கேட்டார்.

“கடவுளை தவிர, இனி வேறு யார் காப்பாற்ற முடியும்? அந்த ஈசனை தரிசிக்க, நாம் செல்லலாம். இனி ஈசன் விட்ட வழி, இளவரசியை இனி அவர் காப்பாற்றுவார் என்று நம்புவோம்” என்று கூறிவிட்டு குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, அவரின் மூப்பாட்டனார் ராஜராஜ சோழன் கட்டிய கோவிலுக்கு சென்று வழிபட எல்லா ஏற்பாடையும் செய்தார்.
 

umadeepak25

Well-known member
#2
இன்று:
அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இருவரையும், அழைத்து செல்ல ஆதியின் நண்பன் விஷ்வா, ஆதியின் புது ஆடி வண்டியை எடுத்து வந்து இருந்தான்.

“டேய் விஷ்வா! எதுக்கு டா, இந்த வண்டியை எடுத்துட்டு வந்த?” என்று சிடுசிடுத்தான் அவனிடம்.

“டேய்! அப்பா தான் இந்த வண்டியை எடுத்துட்டு போய், உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர சொன்னார்” என்று கூறிய நண்பனை சந்தேகத்துடன் பார்த்தான்.

“அப்படி சந்தேகமா பார்க்காத மச்சி! சத்தியமா அப்பா தான் எடுத்துட்டு போக சொன்னார்” என்று அழுத்தத்துடன் கூறினான் விஷ்வா.

தந்தை அப்படி செய்யக்கூடியவர் தான் என்பதால், அவன் கூறியதை ஏற்றான். பிறகு மதியிடம் அதில் ஏற சொல்லிவிட்டு, விஷ்வாவிடம் கார் சாவியை வாங்கி, தான் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

மதியழகிக்கு, இங்கு நடப்பவை எல்லாம் வித்தியாசமாக தெரிந்தது. அரண்மனையில் உள்ள அவள் அறை, இந்த மொத்த மருத்துவமனை பரப்பளவு இருக்கும்.

வெளியே செல்வதானால், அவள் ரதத்தில் ஏறி அந்த சுத்த காற்றை இழுத்து சுவாசித்து அனுபவித்து செல்வாள். இங்கோ மருத்துவமனை விட்டு வெளியே வந்த உடனே, அவளுக்கு தெரிந்தது எல்லாம் ஒரே புகை மாசுபடிந்த அந்த சுகாதாரமற்ற இடம் தான்.

இப்பொழுது காரில் பயணம் செய்யும் பொழுது, அந்த ஏசி காற்று அவள் உடலில் ஊடுருவி ஊசியாக குத்தியது, அவளால் தாங்க முடியாததாக இருந்தது.

பின் சீட்டில் அமர்ந்து இருந்தவள், கண்களை முன் பக்கம் திருப்பி ஆதியை ஆராய்ந்தாள். அவனுக்கும், இப்படி ஊசி குத்துவது போல் எரிச்சல் ஏற்படுகிறதா என்று பார்த்தாள்.

அவனிடம் அப்படி ஒன்றை காண முடியாமல் போனதில், அவள் யோசனைக்கு சென்றாள். அதற்குள் அவன் காரை, ஒரு பெரிய பங்களா போல் உள்ள வீட்டில் நிறுத்தினான்.

அவனுக்கு அது தான் அரண்மனை, ஆனால் அவளுக்கு அது அவள் வாழ்ந்த அரண்மனைக்கு இது கால்வாசி மட்டுமே. காரில் இருந்து இறங்கியவளும், அந்த பங்களாவை பார்த்ததும் உணர்ந்தது இது தான்.

சுற்றி இருந்த தோட்டம் கண்ணில் பட்டு, அதுவரை இருந்த இறுக்கம் சற்று தளர்ந்து அதை ரசிக்க தொடங்கினாள். கார் வந்த சத்தம் கேட்டு, வாசலுக்கு ஓடோடி வந்தார் ஆதியின் அன்னை காமாட்சி தேவி.

“அங்கேயே நில்லு கண்ணா! அம்மா ஆரத்தி சுத்தி போட்ட பிறகு நீ உள்ளே போ” என்றவரை உருத்து விழித்தான்.

அவரோ அதை கண்டுகொள்ளாமல், அங்கு ஓரமாக நின்று இருந்த மதியழகியின் கையை பிடித்து இழுத்து, ஆதியுடன் சேர்த்து நிற்க வைத்து, ஆரத்தி சுற்றினார்.

“அம்மா! என்னது இது? அடிபட்டு இருந்த பொண்ணை ஆஸ்பத்திரியில் இருந்து கூட்டிட்டு வரேன். நான் ஒன்னும் இவளை கல்யாணம் பண்ணிட்டு வரல மா, புரியுதா உங்களுக்கு?” என்று சற்று எரிச்சல் மிக கேட்டான்.

“அது எல்லாம் புரியுது, கொஞ்ச நேரம் பேசாம இரு. அந்த பொண்ணு பயந்திட போறா, நீ போடுற அரட்டல் சத்தத்துக்கு” என்று கூறி அவனை இன்னும் எரிச்சலின் உச்சத்திற்கு, அழைத்து சென்றுவிட்டார்.

ஆரத்தி சுற்றி விட்டு, இருவரையும் வலது கால் எடுத்து வைத்து உள்ளே நுழைய சொல்லவும், அவன் கோபத்தில் இடது காலை தூக்கி வைக்க சென்றான்.

அதை அறிந்த அவனின் அன்னையோ, லேசாக அவனின் காலை தட்டி விட்டார். அவ்வளவுதான், அப்பொழுது இருவரும் ஒன்று போல் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தனர்.

“எம்மா! வர வர உன் கற்பனை வளம் எல்லாம் கூடிகிட்டே போகுது, இது சரியில்லை சொல்லிட்டேன். நான் என் ரூம் போறேன், அவளுக்கு அவ ரூம் நீங்களே காட்டுங்க” என்று கூறிவிட்டு மாடியில் இருக்கும் அவன் அறைக்கு சென்றான்.

மதிக்கு அங்கு என்ன நடக்கின்றது, என்ன பேசுகிறார்கள் என்று புரியவே நேரம் பிடித்தது. காமாட்சி தான், அவளை மாடிக்கு அழைத்துக் கொண்டு அவன் அறைக்கு எதிர் அறை ஒன்றை காட்டி, அவளுக்கு தேவையானதை செய்து கொடுத்தார்.

“ஏன் மா, யார் நீ? எப்படி நீ மேல இருந்து விழுந்த? உன் வீடு எங்க இருக்கு? உன் அப்பா, அம்மா எங்க?” என்று பாசமாக அவளின் தலையை வருடிக் கொண்டே விசாரித்தார்.

அவரின் கேள்விகளை கிரகித்து, ஓரளவு புரிந்தவுடன் அவருக்கு பதிலளிக்க தொடங்கினாள்.

“நான் மதியழகி! என் நாடு மிடார நாடு, தஞ்சை அருகே இருக்கிறது. மிடார நாட்டு, அரசர் இளங்கோவனின் மகள் நான்” என்று அவள் கூற ஆரம்பிக்கும் பொழுதே, அவருக்கு தலை சுற்றியது.

அவர் வரலாறு ஆசிரியர், அதுவும் தஞ்சை அருகே உள்ள இடத்தை எல்லாம் அக்குவேறாக, பிரித்து படித்து இருக்கிறார். மதி சொன்ன மிடார நாடு, கிட்ட தட்ட ஐநூறு வருடம் பழமை வாய்ந்த நகரம்.

இப்பொழுது அது அழிந்து, அங்கே சில பாக்டரி தான் இருக்கிறது. அவரும் அரசர் இளங்கோவன் பற்றி படித்து இருக்கிறார், அதில் அவள் மகள் காணாமல் போனது போல் தான் இருந்தது.

இப்பொழுது, இவள் இப்படி கூறவும் அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் பைத்தியமா? இல்லை ஐநூறு வருடம் கடந்து, நிஜமாவே இங்கே வந்து இருக்கிறாளா? என்று பிரித்தறிய முடியாமல் தடுமாறினார்.

அவளோ தான் யார், என்ன என்பதை கூறிக் கொண்டு இருந்தவள், ஒரு சத்தமும் இல்லாமல் இருக்கவும் திரும்பி பார்த்தாள். அங்கே அவர் குழப்பத்துடன் அமர்ந்து இருப்பதை பார்த்து, அவரின் தோல் தொட்டு அழைத்தாள்.

“நான் கூறுவது, தங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியவில்லை போல் தெரிகிறது. தாங்களே ஒரு நாள் புரிந்து கொள்வீர்கள், அப்பொழுது என்னை உங்கள் மருமகளாக முழு மனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள்” என்று கூறிய மதியை பார்த்து, அவர் சிரித்தார்.

பின்னர் அவர் வெளியேறியதும், பெருமூச்சொன்றை வெளியேற்றி விட்டு, அன்று நடந்த சம்பவங்களை நினைத்து பார்க்க தொடங்கினாள்.

ஆனால் அவள் நினைத்து பார்க்க முடியாதபடி, ஆதி அவளுக்கு அடுத்த அடுத்த கட்டளை பிறப்பித்து அவளை அவன் வளையத்தினுள் கொண்டு வந்து விட்டான்.


தொடரும்..
 
#12
Rojavoda 🌹madhi paysura andha edam romba alaghu evalavo rasanaya eyludure gha uma👌👏🏻rojava 🌹pakkum phodeyellam indha varigal Nyabagum.varum☺️👌
 

Today's birthdays

Latest profile posts

Shanthini Dos's Un Uyir thaa..! Naam Vazha..! Next epi updated..read and share ur valuable views
next episode of "Mayanathi Suzhal" is updated....Happy reading...
ருத்ராங்கி வருவாள்
ஹாய் மக்களே போஸ்டட் 7த் எபி மன்னவன் கரம் பிடித்தேன்.
Devi's Neenga Kanale next epi posted..read and share ur valuable views makka
எனதன்புத் தோழமைகளே! செங்கல் பூக்களின் அடுத்து இரு அத்தியாயங்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. (சு)வாசித்து உங்களது கருத்தை எனக்குச் சொல்லுங்கள்!
Hi dearies, uyir vidum varai unnoduthan-- epi 4 posted :)
kanadharva logaa - 12 updated friends.. marakkaama unga karuththai sollunga pa....
Latest ah memes kadai open panni irukken.... Vanga pazhagalam...
https://www.smtamilnovels.com/community/index.php?threads/little-hearts-memes-shop-vanga-pazhagalam.305/
(Ithu Athula....) doubt eh venam.... Athe than Ithu.. 😉😉
அன்புடையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு மக்களே:) படிச்சுட்டு என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிடுங்க:)

Advertisements

Online statistics

Members online
92
Guests online
1
Total visitors
93