En vaanile ore vennila

#11
super start. valthukkal :)
 
#14
2
விளக்குத் தூண் கடை வீதி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அண்மையில்
புதிதாகத் திறந்திருந்த ஐவுளிக் கடை/கடல் நான்கு மாடிக் கட்டடத்தில் வண்ண
நியான் விளக்குகள் கடையின் பேரை பறை சாற்றிக் கொண்டிரு.ந்தன.
கடை வாசலில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் அலைமோதிக்
கொண்டிருந்தனர். கடையின் உள்ளே இருந்து வருபவர்கள் ஏதோ போட்டியில்
வென்று பரிசுகளை அள்ளிக் கொண்டு வருவது போல கையில் புதுத் துளிகள் அடங்கிய கட்டைப் பைகளுடன் வந்தனர். அவர்கள் முகமெல்லாம் சிரிப்பு.
கடைக்குள் நுழைபவர்கள் எந்தப் பக்கம் செல்வதெனத் தெரியாமல் வாசலில்
வரிசையாய் நிற்கும் பணியாளர்களிடம் விவரம் கேட்டுக் கொண்டிருந்தனர்.
புத்தம் புதிய கடை என்பதால் கடையை பார்க்க வரும் கூட்டம், குழந்தைகளுக்கு
வேடிக்கை காட்ட வந்த கூட்டம், புதிய துணிகளின் புதிய ரகங்களை வாங்க வந்த
கூட்டம், இந்தக் கூட்டத்தையும், வண்ணவண்ண உடையணிந்திருக்கும் இளம்
பெண்களைப் பார்க்க வந்த கூட்டம் என ஒரே திருவிழாக் கட்டமாய் இருந்தது.
வாசலில் கடையைச் சுற்றி அருகாமை இடங்களில் புதிதாய் முளைத்த
நடமாடும் கடைகள்....பலூன், பொமம்மை விற்பவர், பஞ்சு மிட்டாய் விற்பவர்,
பருத்திப் பால் விற்பவர், பனிக் கூழ் விற்பவர், பேன்சி பொருட்கள் விற்பவர், ஜிகரதண்டா பானம் விற்பவர் இப்படி பலவகையான சிறுசிறு வியாபாரிகள்.
ஒரு பெருங்கடையை நம்பி இத்தனை சிறுவியாபாரிகள்.....அவரவர்
தகுதிக்கும், சக்திக்கும்,திறமைக்கும் ஏற்ப வியாபாரம் செய்து பொருளீட்டுகிறார்கள்.
ஒன்றைச் சார்ந்து ஒன்றொன்று...இது தான் வணிக உலகம்.
புதுக் கடை அமைந்திருந்த இடம் கீழமாசி வீதியும் தெற்கு மாசி வீதியும்
சந்திக்கின்ற இடமாதலால் இயல்பாகவே போக்குவரத்து நிறைந்த இடம்.
நடைதூரத்தில் அழகாய்அமைந்திருக்கும மீனாட்சி அம்மன் கோவில்.
கோவிலுக்கு வருகின்ற கூட்டமும் கடைகளை எட்டிப் பார்த்துச் செல்லும்.
இப்படிப் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் கடையின் வாசலில்
108 ஆபத்துதவி விரைவு வண்டி இடைவிடாத ஒலியெழுப்பி வந்து நின்றால்
யார் தான் திடுக்கிடாமற் போவார்கள்!
108 சிப்பந்திகள் வண்டியிலிருந்து ஸ்ட்ரெச்சரை அவசர அவசரமாகக்
கடையின் உள்ளே எடுத்துச் செல், கூட்டமே வழிவிட்டது.
"யாருக்கு..... என்னவாம்....."
"எனக்கெப்படித் தெரியும் ....நானும் உன்ன மாதிநி இங்கே தானே
நிக்கிறேன்."
உள்மிருந்து வந்த யாரோ ஒருவர்...
"யாருக்கோ மாரடைப்பாம்.......துணி பாத்துக்கிட்ருந்தவர் அப்படியே
மயங்கி விழுந்துட்டாராம்....அதான் 108க்கு போன் பண்ணிட்டாங்களாம்.....
என்னன்னு தெரியலே......கடை ஆளுங்கிறாங்க....துணி எடுக்க வந்த ஆளுங்கிறாங்க
ஒண்ணும் புரியலே......."
உள்மிருந்து வேகவேகமாக வந்த ஓர் இளம்பெண் பதட்டத்துடன் தன்
கைப்பையிலிருந்த அலைபேசியை எடுத்தாள்.
************
 
#15
இரண்டாம் நூலிழை பதிவுஂசெய்துள்ளேன் , பார்த்தவர் படிக், பாராட்டுக. அடுத்த நூலிழைக்கு ஊக்கந் தருக.
இப்படிக்கு, இளவல் ஹரிஹரன்.
 

Latest profile posts

banumathi jayaraman wrote on vijianna's profile.
My heartiest birthday wishes to you, Vijianna Sir/Madam
banumathi jayaraman wrote on noordeen781's profile.
My heartiest birthday wishes to you, Noordeen781 Sir/Madam
banumathi jayaraman wrote on Maria's profile.
My heartiest birthday wishes to you, Maria Sir/Madam
banumathi jayaraman wrote on manomithran's profile.
My heartiest birthday wishes to you, Manomithran Sir
banumathi jayaraman wrote on hameetham's profile.
My heartiest birthday wishes to you, Hameetham Sir/Madam
banumathi jayaraman wrote on divya75's profile.
My heartiest birthday wishes to you, Divya75 Madam
banumathi jayaraman wrote on Amarnath's profile.
My heartiest birthday wishes to you, Amarnath Sir
ஹாய் நட்பூஸ்,
இதோ “உனது விழியில் தொலைத்தேன் பெண்ணே!” ஏழாவது அத்தியாயம் பதிவிடுகிறேன் . படித்துவிட்டு உங்களின் கருத்தை என்னுடன் பகிருங்கள். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
காதலாம் பைங்கிளி வைத்து நிறைய gameவிளையாடி இருக்கோம், இப்ப இங்க ஒரு game. வாங்க விளையாடலாம்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/vaanga-vilaiyaadalaam.1898/
meme பார்க்க பிடிக்கும்னா இந்த லிங்லை ஒரு டைம் பார்த்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ், வச்சு செஞ்சுருக்காங்க மக்கள்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/kaadhalaam-paingili-memes.186/

Advertisements

Latest Episodes