Idhayam vendam irandhuvidu 10

charu

Author
Author
#1
10

போலிஸ் தொப்பிகளின் பரபரப்புக்கு நடுவே ராஜாராம் நிதானமாக உத்தரவுகளை கொடுத்துக்கொண்டு இருந்தார்..

கும்பலின் நடுவில் அப்போதைக்கு நாயகனாக கனகசுந்தரம் பிணமாக கிடந்தார்.

கஜேந்திர பூபதியின் கொலையை பிசிறின்றி ஜெராக்ஸ் செய்து வைத்திருந்தான் கொலைகாரன்...

வழக்கம் போல தடையங்கள் கைரேகைகள் எதுவும் கிடைக்க வில்லை !!

ராஜாராம் அருகே வந்தார் ...

“ அய்யா !! பவ்யமாக கூப்பிட்டார் டிரைவர் ..

“சொல்லுங்க” – ராஜாராம் டிரைவரை பார்த்து கேட்டார்...

“ தேனம்மாள் , அதாங்க பூபதி சார் வீட்டு வேலைக்காரி ..... “

விசாரிசிட்டேன் ... ஒரு சின்ன க்ளு கிடைச்சது ... அன்னைக்கு பூபதி வீட்டுக்கு போனப்ப தேனம்மாள் கொடுத்த போன் நம்பருக்கு அன்னைக்கு ராத்திரியே கூப்பிட்டு விசாரிச்சேன் “ நேர்ல வாங்கைய்யா விவரமா சொல்லணும்னு சொன்னா..”

“ அவ வீட்டு விலாசம் வாங்கி நேர்லயே போய்டேன் “

என்.ஜி.ஜி.ஓ காலனி கேட் கிட்ட தாஸ் எலக்ட்ரிகல்ஸ் இருக்கு தெரியுமா ? அந்த கடை ஓனர்க்கும் ராணிகுமாரிக்கும் இந்த கொலைல எதாச்சும் பங்கு இருக்கலாம்ங்கறது வேலம்மாளின் சந்தேகமாம்.. “

பூபதி கொலை ஆன நாளுக்கு முன்னாடி நாள் இரவு பதினோரு மணி சுமாருக்கு ராணிகுமாரி தேனம்மாள் போனை கேட்டு வாங்கி யார்கூடையோ கால் பண்ணி பேசிட்டு இருந்திருக்காங்க “

நம்ம போன எதுக்குடா வாங்கி பேசுறாங்க? ன்னு யோசிச்சேன் .. அதனால ஒட்டு கேட்டு பார்த்தேன் அய்யா “ அப்படின்னு சொன்னவ அவங்க பேசுனதை அப்படியே ஒப்பிச்சா

ராணிகுமாரி - “ தாஸு நாளைக்கு எப்படியாச்சும் முடிச்சிடுடா “ எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது .. மனசுல நிம்மதியே இல்ல.. “

எதிர் முனைல அவன் என்னமோ பதில் சொல்ல, அதுக்கு ரணிகுமாரி “ ச்சீ , போடா “ எப்ப பாரு அதே நினைப்பு “

“ டேய் தாஸ், உன்கிட்ட பேசும்போது எனக்கு என் வயசே மறந்து போகுதுடா “

“ இவ்ளோ வயசுக்கு அப்புறம் இதெல்லாம் தேவையான்னு மூளைக்கு தோணுது ஆனா மனசுக்கு தோன மாட்டேங்குது “

“ இந்த வார்த்தைகள கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டுடிசிங்க “

“ இந்த வயசுல கள்ளகாதல்..!! . ‘த்தூ’ என்று துப்பாத குறை

தொடர்ந்தாள் .....

ஒருவேள இவங்க கள்ளகாதல் விவகாரம் பூபதி அய்யாவுக்கு தெரிஞ்சிருக்கனும்... அதனால ரெண்டு பெரும் சேர்ந்து அய்யாவ கொலை பண்ணியிருக்கலாம் னு தோணுதுங்க “ என தேனம்மாள் சொன்னாள்..

எனக்கு கிடைச்ச ஒரு நூல் முனை இதுதான்

நூலை பிடிச்சிட்டே போனேன் ... ராணிகுமாரிக்கு அந்த கொலையில் சம்மந்தம் இருக்குறது போல எல்லாம் அமைஞ்சது ...

“ தேனம்மாள் சொன்ன மாதிரி தாஸ் எலக்ட்ரிகல் இருந்தது “

மிரட்டி விசாரிச்சதில் “ கள்ள காதலும் “ இருந்தது ...

டிரைவர் கண்கள் விரிய கேட்டு கொண்டு இருந்தார் ...

தாசுக்கு பணம் தேவை அதிகம் ... அப்பப்போ பூபதி இல்லாத சமயங்களில் “ அழைப்பு பையன் “ வேலையை செய்து அதுக்கு கூலியா கணிசமான தொகையை வாங்கிகுவானாம் “

இது மட்டும்தான் அவங்களுக்குள்ள இருந்த விஷயம் ...

“ ஸ்டேஷன்க்கு நடக்குறியா ... “

“பூபதிய கொலை செய்த குற்றத்திற்கு உன்ன கைது செய்யணும் .. ராணிகுமாரிக்கு இதுல என்ன பங்கு ? எல்லாத்தையும் ஸ்டேட்மெண்ட் ஆ எழுத்து குடுத்துட்டா என் வேலை முடிஞ்சிடும் .. போலாமா ?” ன்னு கேட்டேன்

இப்படி ஒரு கேள்விய கேட்ட அடுத்த நிமிஷம் அவன் என் காலுல விழுந்து கிடந்தான் ...

“அய்யா, கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்கைய்யா” னு அழ ஆரம்பிச்சிடான் “

“ டேய், கொலை நடந்த நாளுக்கு முன்னாடி ராத்திரி பதினோரு மணிக்கு மேல ராணிகுமாரி உன்கூட பேசி இருக்காங்க . சரியா ? “ அப்போ உன்கிட்ட ராணிகுமாரி சீக்கிரம் முடிச்சிடுடானு சொல்லி இருக்காங்க “

“ போலீஸ் நெனச்சா ரெகார்ட் எடுத்து தரமுடியும் .. ஓகே ஆ? “

“ இப்போ சொல்லு ... அடுத்த நாள் காலைல நீ பூபதிய எப்படி முடிச்சன்னு “

“ சார் ‘ அவங்க “எப்படியாச்சும் முடிச்சிடுன்னு” சொன்னது வேற விஷயம்ங்க”

கண்கள் குறுக அவனை பார்த்தேன்

“ ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நானும் ரணிகுமாரியும் ஒண்ணா இருந்த சமயம் அவங்க வாடிக்கையா போற லேடீஸ் கிளப்ல இருக்குற மெம்பர் ஒருத்தங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க ... நாங்க ஒண்ணா இருந்தத எங்களுக்கு தெரியாம அவங்க மொபைல் ல வீடியோ எடுத்துட்டாங்க ...

“ ராணிகுமாரிகிட்ட அத வச்சி பணம் பாக்க திட்டம் போட்டாங்க “

அவங்க கிட்ட இருந்து அந்த மொபைல் போனை எப்படியோ அபேஸ் பண்ணி கொண்டு வந்துட்டாங்க , ஆனா அந்த வீடியோ பாஸ்வார்ட் போட்டு லாக் பண்ணி இருந்ததால அவங்க அத என்கிட்ட குடுத்து டெலிட் பண்ண சொன்னாங்க .. இரண்டு மூணு நாள் முயற்சி பண்ணி பார்த்தேன் அவங்க பாஸ்வர்ட் அ ஹேக் பண்ண முடியல ..

இதுக்கு இடையில் அந்த கிளப் மேம்பர், மொபைல் தெஃப்ட் கேஸ் குடுக்க போறேன் நீங்களா அத குடுத்துட்டா நல்லது ... அப்டின்னு கிளப் நோட்டீஸ் போர்டில் போட்டாங்க..

போலீஸ் க்கு கேஸ் போனதுனா தான் திருடினது எல்லாருக்கும் தெரிஞ்சிடும் , ஏன் திருடுனோம் அப்டின்னு விளக்கம் சொல்ல போனால் அதற்கான காரணம் சொல்லகூடியதாவா இருக்கும் ? “ அதனாலதான் அவங்க கேஸ் கொடுக்குறதுக்குள்ள “ சீக்கிரம் முடிச்சிடு” னு என்கிட்டே சொன்னாங்க சார் ... மத்தபடி கொலைக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைங்க சார் “

“ ஏண்டா ... மொபைல் போனை ஒடைச்சியோ எரிச்சியோ போட்டிருந்தாவே போதுமே... எதுக்குடா பாஸ்வர்ட் ஹேக் பண்ண பார்த்த ? “

சார் , மொபைல் போன திருடி வீட்டுக்கு எடுத்து வந்துட்டாங்க .. ஒருவேள போலீஸ் கேஸ் போனதுனா கடைசி டவர் சிக்னல் வச்சி போலீஸ் ஈஸியா ராணிகுமாரி வீட்டுக்கே வருவாங்க..

அதனால அந்த வீடியோவ டெலிட் பண்ணு போதும்.. போனை அவகிட்ட குடுக்க வேண்டிய முறையில குடுத்துடுவேன்னு சொன்னாங்க “ அதான் சார் “!!

நடந்தவைகளை சொல்லி முடித்த ராஜாராம் இப்பொழுது டிரைவரை பார்த்து “

இப்போ நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் ...

பூபதி கொலைக்கும ராணிகுமாரிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது .. !!

“ எப்படிங்க அய்யா சொல்றீங்க ?” டிரைவருக்கு புரியாமல் போனதால் கேட்டார்..

“ தாஸ் பொய் சொல்லல.. நான் அவன் சொன்ன கிளப் மெம்பரை விசாரிச்சுட்டேன்.. தாஸ் சொன்னது எல்லாம் உண்மை ... அவங்க வீடியோ எடுத்தது .. பணம் கேட்டு மிரட்டியது , மொபைல் திருட்டு போனது எல்லாத்தையும் சொல்லிடாங்க “

ராணிகுமாரி ,தாஸ்.தேனம்மாள் அந்த கிளப் மெம்பர் எல்லாருடைய போன் கால்களையும் டிரெஸ் பண்ணி செக் பண்ணிட்டேன்...

எல்லாத்துக்கும் மேல...

“இதோ இங்க செத்துபோய் கிடக்குறாரே, இவருதான் நீங்க புரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விடை “

இன்னும் புரியாமல் விழித்தார் டிரைவர் ...

“ இது ஒரு தொடர் கொலை ... ஒரே மாதிரி செஞ்சிருக்காங்க ... கழுத்துல ஊசி முதற்கொண்டு இதயம் வெளிய இருக்குற வரைக்கும் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு... “

“ மோட்டிவேஷன் மர்டர் !!” எதோ ஒரு காரணத்துக்காக , தொண்ணூறு சதவீதம் பழிவாங்கும் எண்ணத்தில் இந்த கொலைகள் நடத்தபட்டிருக்கணும் .

“ யாருக்கோ எதோ மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கு .. “

“ இப்போதான் எனக்கும் ஒரு தெளிவு கிடைச்சிருக்கு ... “

ஏன்னா தொடர் கொலைகள் பெரும்பாலும் ஒரு சின்ன புள்ளிய மைய்யம்மா வச்சி நடக்கும் ... அந்த புள்ளி என்னன்னு தெரிஞ்சிகிட்டாலே கொலையாளிய நாம நெருங்கிடலாம் ...

இப்போ நான் கொலைகாரன தேடி போக வேண்டிய அவசியம் இல்லை... ஏன் அவன் இப்போ நம்ம பக்கத்துல கூட இருக்கலாம். நம்மள க்ளோசா அப்சர்வ் பண்ணிட்டு கூட இருக்கலாம் ... “ அதனால அவன் நம்ம எடுக்குற அடுத்த ஸ்டெப் என்னன்னு தெரிஞ்சிகிட்டு அதுக்கு ஏத்த மாதிரி வேற ஸ்டெப் எடுப்பான்..”

“ சோ , நான் என் ரூட்ல போறது தான் எனக்கு சரின்னு தோணுது ...”

“ அய்யா எதுக்கும் அந்த ராணிகுமாரி மேல ஒரு கண்ணு வைக்கணும்...”

டிரைவர் மீண்டும் மீண்டும் அதே இடத்துக்கு வந்தார் ..

குழப்பமாகதான் இருந்தது எனக்கும் ...!!!

அடுத்த கொலை இதற்க்கு விடை சொல்லலாம் ......
 
#3
serial killera irukumnu police kandupidichiukanga nice......(y)(y)(y)(y)police is waiting for next crimea bro. nalla epi bro.what happened to david? waiting bro:):):):)
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on நதியா's profile.
My heartiest birthday wishes to you, நதியா Madam
banumathi jayaraman wrote on Rranii's profile.
My heartiest birthday wishes to you, Rranii Madam
kattangal part 8 updated friends...
banumathi jayaraman wrote on vishnuprasanth's profile.
My heartiest birthday wishes to you, Vishnuprasanth Sir
banumathi jayaraman wrote on priyaanandh's profile.
My heartiest birthday wishes to you, Priyaanandh Madam
banumathi jayaraman wrote on Asath's profile.
My heartiest birthday wishes to you, Asath Sir/Madam
banumathi jayaraman wrote on Arya's profile.
My heartiest birthday wishes to you, Arya dear
sandhiya sri wrote on Arya's profile.
wish you happy birthday sister..

Advertisements

Latest Episodes

Today's birthdays