• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Idhayam vendam irandhuvidu 18

charu

Author
Author
#1
18

வெள்ளக்கிணறு மேப்பையே உற்றுபார்த்துகொண்டு இருந்தார் ராஜாராம்...

மூன்று இடங்களில் புள்ளி வைக்கப்பட்டு வட்டமிடபட்டிருந்தது... ஹௌசிங் யூனிட் , மாரியம்மன் கோவில் அருகே மற்றும் வெள்ளகிணறு குளம் ....

உங்களுக்கு ஏதாவது புரிகிறதா வாசகர்களே !!

மூன்று கொலைகள் நிகழ்ந்த இடங்கள்.... ராஜாராம் இப்பொழுது புது பாதை ஒன்றை தொட்டு இருக்கிறார் ...

சரியான வழியா? அல்லது முட்டாள்தனமான முடிவா? என்று தெரியவில்லை.. உள்ளுக்குள்ள ஒரு உறுத்தல் இருந்ததால இந்த வழியை முயற்சி செய்து பாப்போம் .. அதுமட்டும் காரணம் இல்லை... வேற எந்த வழியும் கிடைக்க வில்லை என்பதே நிதர்சனம் ...

கொலைகாரன் வேற எந்த தடையமும் விடவில்லை... மார்ச்சுவரி ரிப்போர்ட்டும் கொலை நடந்த விதத்தை தவிர வேறெந்த தகவலையும் தரவில்லை... கொலையானவர்களுக்கு இடையே இருந்த லிங்க்கும் ஒத்துவர வில்லை ... வேற வழிதான் என்ன ?

மூன்று வட்டங்களிட்ட இடத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தார் ..

மூன்று திசைகள் ... இன்னும் ஒரே ஒரு திசை இருக்கிறது ... கொலைகாரன் ஒரு டிசைனோட கொலைசெய்கிறவனாக இருந்தால் , அடுத்த கொலை கண்டிப்பாக நான்காவது திசையில் தான் செய்யவேண்டும்.. இன்றிலிருந்து அந்த இடத்தை அல்லது அந்த திசை இருக்கும் ஏரியா முழுதும் கண்காணிக்க வேண்டும் ...

மணியை பார்த்தார் இரவு ஒன்பது நாற்பது ... எழுந்தார் ....

இரு கான்ஸ்டபிளை அழைத்தார் ... குமார் மற்றும் குரு ...

“நீங்கள் ரெண்டு பெரும் இனி இரவு ரோந்துக்கு வர வேண்டாம் .. உங்களுக்கு ஒரு சிக்கலான கடினமான வேலை இருக்குது..” இருவரும் விழித்தனர் ...

அவர்களிடம் டேபிளில் இருந்த மேப்பை காட்டினார் ... மூன்று இடங்கள் வட்டமிடபட்டிருந்ததை காட்டி .. “ இந்த இடத்திற்கு திசைகளை அடையாளமாக வைத்தால் மீதம் இருக்கும் திசை சரவணம்பட்டி செல்லும் ரோட்டிற்கு இடப்பக்கம் இருக்கும் முள்ளு காடுதான் ...”

“ சமீபமாக நடந்த கொலைகளுக்கும் இந்த திசைகளுக்கும் எதோ ஒரு லிங்க் இருக்கணும்... அதனால நீங்க என்ன செய்யுறீங்கனா ... இந்த ஏரியாவ கண்ட்ரோல் எடுத்துகோங்க ... !!

“இன்னைக்கு நைட்ல இருந்து இந்த ஏரியாவில்தான் உங்க டூட்டி...

என் யூகப்படி அடுத்த கொலை நடந்தா அங்கதான் நடக்கும்.. ஒரு ஈ எறும்பு உங்க கண்ணுல இருந்து மிஸ் ஆக கூடாது... எந்த நேரம் எது நடந்தாலும் எனக்கு தகவல் தரனும்... ஓகே? “

இருவரும் தங்களை ஒருவரை மாற்றி ஒருவர் பார்த்துகொண்டனர்...

குரு இன்ஸ்பெக்டரை பார்த்து .. “ ஒருவேள அடுத்த கொலை நடக்கலானா என்னசார் பண்றது .... கொலை நடக்கிற வரைக்கும் அங்கேதான் டூட்டியா சார் ? “

“ கொலை நடக்குலன்னா நானே ஒரு கொலைய நடத்திட்டு உங்கள அந்த ஏரியா டூடில இருந்து மாத்திவிடுறேன் போதுமா? “ கடுப்புக்கு மாறி இருந்தார் இன்ஸ்பெக்டர்..

“ சாரி சார் ... நாங்க கிளம்புறோம் ... மார்னிங் எப்போ ஸ்டேஷனுக்கு வரணும் சார் ? “

“ ஏழு மணி வரை அங்கே ரோந்துல இருங்க ... அப்புறம் வந்தா போதும்... அதிகாலை சமயங்களில் தான் கொலைகள் நடந்திருக்கு ...”

“ ஓகே சார் “

புறப்பட்டு சென்றார்கள் இருவரும் ...

'ஒருவேள அடுத்த கொலை நடக்கலைனா ?? '

"அவனோட டார்கட் இந்த மூணு பேர் மட்டும் என்று இருந்தால் ? "

கான்ஸ்டபிளின் கேள்வி அவருக்குள் ஓர் கடுப்பை கிளப்பி இருந்தாலும் ... ஒருவேளை அது உண்மையாக இருந்தால் இப்பொழுது எடுத்த முயற்சி அடி முட்டாள்தனம்..

பொறுமையாக இருப்போம் ...

வெள்ளக்கிணறை எட்டி இருந்தனர் குமாரும்.. குருவும் ...

“ ஜி...” குரு பேச ஆரம்பித்தார் “ இத நான் எதிர்பார்க்கவே இல்லை ஜி.”.

“ போலிஸ் வேலைல இதெல்லாம் சகஜம் தான் பாஸு” “ இதுக்குதானே சம்பளம் வாங்குறோம் ?” இன்னைக்கு நேத்தா நடக்குது ...
இதெல்லாம் தேவலாம்... சமயத்துல பொணத்துக்கு காவல் காக்கணும்...

குமாரின் பேச்சில் அப்படி ஒரு வருத்தம் .... “ எங்கையாச்சும் காட்டுக்குள்ள வச்சி போட்டு தள்ளிருபானுங்க .. தகவல் கிடைச்சதும் ஸ்பாட்டுக்கு கிளம்பி போக சொல்லிடுவாங்க .. ஆம்புலன்ஸ் மற்ற ஆட்கள் வரும் வரை அங்கேயே காத்துகிடக்கணும்... “

"பகல்னா பரவாஇல்லை .. வேடிக்கை பாக்க ஆளு இருப்பாங்க... நைட்ல சிக்குனோம்... அவ்ளோதான்”

சரவணம்பட்டி சாலை ... இன்ஸ்பெக்டர் குறிப்பிட்ட முள்ளுக்காடு பகுதி .. சரி குரு நீங்க இங்கயே நில்லுங்க நான் அந்த எண்டுல இருக்கேன் ...

சந்தேகபடுற மாதிரி யார் வந்தாலும் விசாரிங்க .. எல்லா வண்டியையும் நிறுத்தி ஒரு பார்வை பார்த்துடுங்க ...” கைல மொபைல் வச்சிருக்கீங்களா ?

"இருக்கு குமார் சார்... வாக்கி டாக்கி இருந்திருந்தா நல்லா இருக்கும்... ரவுண்ட்ஸ்கு வேணும்னு அதையும் எடுத்துகிட்டு போய்ட்டாங்க..."

" எதாச்சும் எமர்ஜென்சினா கால் பண்ணிடுங்க .... வரேன் !!" வேக நடை போட்டு முன்னேறினார் குமார் ...

ஆள் நடமாட்டம் குறைந்திருந்தது .. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை லாரி மற்றும் இரு சக்கர வாகனகள் கடந்து சென்றுகொண்டு இருந்தது..

கால் மணி நேரம் இருக்கும்... வேக வேகமாக வந்துகொண்டு இருந்தார் குமார் ...

அருகில் வந்ததும் “ ஏன் சார் ? “ திரும்பி வந்துடீங்க ? “

“ குரு .. இன்ஸ்பெக்டர் கால் பண்ணி இருந்தாரு ... இன்னும் நாலு ஆட்கள அனுப்பி விடுறாராம் ... மூணு மூணு பேரா நின்னு பார்த்துக்க சொல்லிருக்காரு ...”

“ நாலு பேரா ? ஸ்டேஷன்ல ஏது சார் ஆளுங்க ? “

“ கமிஷனர் கிட்ட பேசி ஸ்ட்ரைகிங் ஃபோர்ஸ் ஆட்களை வர சொல்லிட்டாரு”

“ அதும் சரி ... இந்த குளிர்ல தனி ஆளா நிக்குறது எவ்ளோ கஷ்டம் ... அதை புரிஞ்சிகிட்டு தான் இந்த ஏற்பாட அய்யா பண்ணிருக்கணும் “

"சரி வெயிட் பண்ணுவோம் ...."

சரியாக பத்து இருபது மணி இருக்கும் ... நான்கு ஸ்ட்ரைகிங் ஃபோர்ஸ் ஆட்களும் வந்து விட்டனர்.. கைக்குளுக்கல்கள் மற்றும் சுயவிவரங்கள் பரிமாறப்பட்டு அறிமுகம் முடிந்தது...

இரு குழுக்களாக பிரிந்து கொள்வோம் என பேசிக்கொள்ளபட்டு குமார் தலைமையில் ஒருகுழுவும் குரு தலைமையில் ஒரு குழுவும் பிரிந்து சென்றனர்...

ஒரு வாகனத்தையும் விடவில்லை ... மிக தரமாக கண்காணித்தனர்...

இரண்டு மணி நேர இடைவெளியில் யாராவது ஒருவர் சென்று தார்பாய் போட்டு மூடி கடை நடத்தும் பேக்கரியில் டீ வாங்கி கொண்டு வந்துவிடுவார்..

இரவுபொழுது தனது ஆக்கிரமிப்பை முடித்து உறங்கச்செல்ல தயாராகி இருந்தது ...

அதிகாலை ஐந்து மணி நாற்ப்பது நிமிடம் ... இதுவரை எந்த ஒரு உருப்படியான நிகழ்வும் இல்லை ... குருவை தவிர அனைவரது கண்முழிப்பும் வீண்தான்..

குரு மட்டும் இரவு முழுதும் நடத்திய கண்காணிப்பு சோதனை மூலம் ‘பார்த்துகொண்டே’ வேலையை பார்த்துகொண்டார் ...

நிறுத்திய அணைத்து கனரக வாகன ஓட்டுநரிடமும் யாருக்கும் தெரியாமல் ரூபாய் நூறை வசூலித்துவிட்டார்...

அனைவரும் மீண்டும் ஓரிடத்தில் கூடினர் .. “ குமார் சார் .. இன்னைக்கு வசூல் கொஞ்சம் தாராளம் தான் ...”

“ வசூலா ? “ திகைத்தார் குமார்

“ ஷேரிங் இல்லைல அதான் கொஞ்சம் தாராளமா கிடைச்சிடுச்சி.. ஏன் சார் நீங்க ஏதும் வசூலிக்கலையா ? “ பேசிகொண்டே போன குரு தன் பேன்ட் பாக்கெட்டை தட்டி காமித்தார் ..

‘வீக்கம்’ இருந்தது

“ எப்போயா ஆரம்பிச்ச ? “குமார் ஆச்சரியமாக கேட்டார் ..

“ மொதோ வண்டியி மறிச்சப்பவே ... அவனா குடுத்தான் .. வேணாம்னு சொல்ல தோனல “

“ சரி கிடைக்கிற வரை கிடைக்கட்டும்னு எல்லா வண்டிகாரனிடமும் வளைச்சி வளைச்சி வாங்கிட்டேன் “

“ டூட்டி முடிஞ்சது வீட்டுக்கு போய்ட்டு சாப்பிட்டு கிளம்பி என் வீட்டுக்கு வந்துடுங்க சார் ... இன்னைக்கு ஒரு ஃபுல் வாங்கி அடிச்சிட்டு மட்டையாகிடலாம்.. “

“ மெதுவா பேசுயா .. அவங்க காதுல விழுந்துட போகுது ..” சற்று தூரத்தில் நின்றுகொண்டு இருந்த ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸ் ஆட்களை பார்த்துகொண்டே சொன்னார் ..

தனது பாக்கெட்டில் இருந்த செல் ஃபோனை எடுத்து டயல் செய்தார் ..

மறுமுனையில் ரிங் அடித்து எடுக்கப்பட்டதும் “ அய்யா குமார் பேசுறேன், இதுவரை சந்தேகப்படுறமாதிரி ஏதும் நடக்கல “

ஒரு ஆறரை மணி வரை இங்க இருக்கோம் ... அப்புறம் கிளம்பி வந்துடுறோம் சார் “

மறுமுனையில் எதோ பதில் கிடைதததும்.... “ ஆகட்டும் சார் ... அனுபிடறோம் “ சொல்லிவிட்டு செல்லை கட் பண்ணினார் ...

“ நீங்க கிளம்புங்க சார் ... அய்யா சொல்லிட்டார் ... நீங்க போலாம் “ ஸ்ட்ரைகிங் ஆட்களை பார்த்து சொல்லவும் , அவர்கள் பரஸ்பரம் விஷ் பண்ணிவிட்டு நடையை கட்டினர் ....

இரண்டு மூன்று நாட்கள் ஆகி விட்டது ... கண்காணிப்பு பனி தொடர்ந்து அதே பகுதியில் தொடர்ந்தார்கள் .. ஆனால் ஒரு பயனும் இல்லை ...

என்ன... இப்போது குமாரும் குருவுடன் சேர்ந்து வசூல் வேட்டையில் காசு பார்க்க ஆரம்பித்திருந்தார் ....

இன்ஸ்பெக்டர் ராஜாராம் குழம்பி போய் இருந்தார் ... “தவறான பாதையில்தான் செல்கிறோமா ?” தனக்குத்தானே கேட்டுகொண்டார் ...

“ இன்னையோட நாலாவது நாள் ... ஒன்னும் நடந்தமாதிரி தெரியல .. “

“ ஒருவேள செய்யவேண்டிய கொலைகள் அத்தனையும் முடிந்து விட்டதா?... என்றால் கொலையாளி இந்நேரம் கண்ணுக்கு எட்டாத தொலைவிற்கு போயிருக்கனும் ...”

அதிகாலை குளிரையும் மீறி கண்கள் எறிந்ததன ... இரவு முழிப்பு என்றாலே முதல் பாதிப்பு கண்களுக்குத்தான் ... “

அமர்ந்தபடியே இருக்கையில் சாய்ந்து தலையை மேல்நோக்கி வைத்து கண்களை மூடினார் ...

“ கிணிங் கிணிங் “ ஸ்டேஷன் தொலைபேசி கதறியது ...

“ ச்சே .... சலித்துகொண்டார் .. ரிசீவரை எடுத்து காதுக்கு கொடுத்தார் ...

“ போலிஸ் ஸ்டேஷன் துடியலூர் “ என்றார் ..

“ இன்ஸ்பெக்டர் இருக்காருங்களா ?’ என்றது ஒரு சன்னக்குரல் ..

“ ஹோல்டிங் “.......... “என்ன விஷயம் ?”

“ ரெண்டு நாள் ஆகிடுச்சி சார் ... இந்நேரம் நாறி போய் கிடக்கும் ... எப்போதான் போவீங்க ? “ என்றது அந்த குரல் ...

“ யோவ் என்னய்யா ஒலர்ற? யாரு நீங்க ? என்ன வேணும் ?”

“ வெள்ளகிணறு சரவணம்பட்டி கணபதி மூணு ஊருக்கும் போகும் ரோடு சேரும் இடம் ... பூமாரியம்மன் கோவில் இருக்கும் தெரியுமா? “ கோவிலுக்கு பின்பக்கம் ஒரு நூறு அடி உள்ள போங்க சின்ன பாழடஞ்ச கிணறு இருக்கும் ... நல்லா தேடிப்பாருங்க .. நீங்க எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த கொலை அங்கதான் நடந்தேறி இருக்கு ...”

“ டொக்”

வெளிறிப்போனார் ராஜாராம் ... பரபரப்பானார் ... தூக்கம் தூர ஓடியது ...

ஸ்டேஷனை விட்டு வெளியே ஓடினார் ... அங்கிருந்த தனது புல்லட்டை எடுத்துகொண்டு பறக்க தயாரானார் ...

அவரை பார்த்து கொண்டிருந்த ஒரு கான்ஸ்டபிள் எதோ அவசரம் என்பதை புரிந்து கொண்டு “ எந்த இடம் சார் ?... நாங்க கிளம்பி வரோம் சார்” என்றார் ..

அவசர அவசரமாக இடத்தை சொல்லிவிட்டு வண்டியை முறுக்கினார் இன்ஸ்பெக்டர்.
 

sridevi

Well-known member
#2
“ கொலை நடக்குலன்னா நானே ஒரு கொலைய நடத்திட்டு உங்கள அந்த ஏரியா டூடில இருந்து மாத்திவிடுறேன் போதுமா? “ கடுப்புக்கு மாறி இருந்தார் இன்ஸ்பெக்டர்..
good idea:D:D:D
மொதோ வண்டியி மறிச்சப்பவே ... அவனா குடுத்தான் .. வேணாம்னு சொல்ல தோனல “

“ சரி கிடைக்கிற வரை கிடைக்கட்டும்னு எல்லா வண்டிகாரனிடமும் வளைச்சி வளைச்சி வாங்கிட்டேன் “
ithu than cycle gapla auto votratha............ collection mannan aayitanga.............:p:p:D:D:Drajaram correcta than spota locate pani irukaru, aana kolaiyali thelivu.......... nice epi sago(y)(y)(y)(y).......waiting eagerly.....intha murai idhayathai koduthavan yaaru:unsure::unsure::unsure::unsure::unsure:
 
#10
அருமை போலீச டைவர் பன்ன கொலையாளி பன்ற முயற்சியா அந்த போன் கால் சொல்லுங்க
KOLAI PANNI 2 DAYS AAGIDUCHI... BUT POLICE SEARCHING IN OTHER AREA.. THATS WHY THE MURDERER CALLED AND INFORM TO THE POLICE... ITS SHOWS HIS GETHU....
 

Latest profile posts

banumathi jayaraman wrote on thanikag4u's profile.
My heartiest birthday wishes to you, Thanikag4u Sir/Madam
banumathi jayaraman wrote on Sugan's profile.
My heartiest birthday wishes to you, Sugan Sir
banumathi jayaraman wrote on Safina's profile.
My heartiest birthday wishes to you, Safina Madam
banumathi jayaraman wrote on Priyanandhini23's profile.
My heartiest birthday wishes to you, Priyanandhini23 Madam
banumathi jayaraman wrote on Priya Vijayakumar's profile.
My heartiest birthday wishes to you, Priya Vijayakumar Madam
banumathi jayaraman wrote on kumarrsm's profile.
My heartiest birthday wishes to you, Kumarrsm Sir
banumathi jayaraman wrote on Jeni's profile.
My heartiest birthday wishes to you, Jeni Madam
நண்பர்களே.....அப்பலோ 21 பதிவேற்றம் செய்திருக்கிறேன். வாசியுங்கள். கருத்து பகிருங்கள் .
Apollo - 21 https://www.smtamilnovels.com/community/index.php?threads/apollo-21.628/
Dear frens, uyir vidum varai unnoduthaan -- epi 13 posted. pls read and comment

Advertisements

New Topics