Idhu Irul Alla! - 2

#1
இது இருளல்ல!

2.

அவன் அதிர்ந்து போய் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்தான். அவன் முகம் அவனுடைய வேதனையை அப்பட்டமாகக் காட்டியது.

அவனுடைய முகத்தைப் பார்த்தவள் அவரசரமாக முடிவு செய்து சட்டென்று எழுந்து சமையறைக்குள் ஓடினாள். ஏதோ நினைத்துக் கொண்டிருந்தவன் அவள் எழுந்து போவதை கொஞ்சம் தாமதமாகவே உணர்ந்தாலும் அவளின் விபரீத முடிவை யூகித்தவனாய் வேகமாக சமையலறைக்குள் நுழைந்தான்.

அவன் எதிர்பார்த்தபடியே அவள் கத்தியை தேடியெடுத்திருந்தாள். தன்னுடைய மணிக்கட்டில் அறுத்துக் கொள்ள முற்பட்டவளை வலுக்கட்டாயமாகத் தடுத்து அவளுடைய கையிலிருந்து கத்தியை பிடுங்கியெறிந்தான்.

"அறிவிருக்கா! இல்ல அறிவிருக்கா ஒனக்கு! எப்பவுமே இப்டிதான் அவசர முடிவு எடுப்பியா? இதுனால திருப்பியும் எனக்குதான் ப்ரச்சனை வரும்!" என்றான் கடுப்பாக!

"இல்லங்க! என்னால உங்களுக்கு இனிமே பிரச்சனை வராதுங்க! ப்ளீஸ்! திருப்பியும் தப்பே பண்றேன்! சாரிங்க! நா உங்க வீட்ட விட்டு போய்டறேங்க! நீங்க நிம்மதியா இருக்கணும்ங்க! சாரிங்க" என்று ஏதேதோ பிதற்றினாள்.

அவனுக்கு அவளைப் பார்க்க பாவமாய் இருந்தது. தவறாக குற்றம் சாட்டிவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.

"இங்க பாரு பொண்ணு! ம்ச்! உன் பேர் என்ன? மொதல்ல அத சொல்லு! பொண்ணு பொண்ணுன்னு கூப்பிட என்னமோ மாதிரி இருக்கு!" என்றான்!

"யா... யாமினி!" என்றாள்!

"ம்! குட் நேம்! ஓகே யாமினி! ப்ளீஸ்! தயவு செஞ்சு அழாத! நீ மொதல்ல சாப்பிடு! நம்ம அப்றம் பேசிக்கலாம்!" என்றான்.

அவளால் தன்னை சமாதானப் படுத்திக் கொள்ள முடியவில்லை. சாப்பிட முடியாமல் தவித்தாள்.

"சாப்பாடு வேணாம்!"

"யாமினி! நா சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு! நீ எதப்பத்தியும் யோசிக்காத! எந்த கில்ட்டி ஃபீலிங்கும் வேணாம்! நா உன்ன தப்பா நெனக்கல! உன் நிலைல யார் இருந்தாலும் உன்னளவு ப்ரேவா இருக்க மாட்டாங்க! நீ ரொம்ப தைரியசாலி! ஆனா இனிமேதான் நீ இன்னும் தைரியமா இருக்கணும்! புரியுதா?"

"ம்!" என்றாளே தவிர அவளுக்கு அவன் சொல்வது சத்தியமாய் புரியவில்லை!

நேற்று முதல் தனக்கு கெடுதல் செய்தவனை தண்டிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவள் இன்று தன்னால் ஒருவரின் வாழ்வு நாசமானதை நினைத்து நினைத்து வருந்தினாள்! சற்று முன்பு வரை இருந்த பசி உணர்வு சுத்தமாக அற்றுப் போய் அழுகை ஒன்றைத் தவிர வேறு ஒன்றும் தெரியாதவளாக அழுது அரற்றிக் கொண்டிருந்தாள்!

அவன் எதற்கோ எழுந்து உள்ளே போகும் போது திரும்பவும் எதாவது கூரான ஆயுதம் கிடைக்கிறதா எனத் தேடினாள்! எதையோ கண்டெடுத்தவள் தன்னைத் தானே தாக்கிக் கொண்டு அலறியவளின் சத்தம் கேட்டு ஓடி வந்தவன் அவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டான்!

"அறிவுங்கறது சுத்தமா இல்லயா ஒனக்கு! கடவுளே! என்ன ஏன் இப்டி சோதிக்கற!" என்றபடி அவள் கையிலிருந்த கூரான ஆயுதத்தை பிடுங்கியெறிந்தான்!

அவள் தன் கையில் அறுத்துக் கொண்ட இடத்திலிருந்து ரத்தம் வழியத் தொடங்கியிருந்தது! அவன் வழியும் ரத்தத்தை நிறுத்த முற்பட அவள் அவனைத் தொடவிடாமல் தடுத்தாள்!

"உங்கள நா ரொம்ப தொந்திரவு செய்றேன்! என்ன விட்டுடுங்க! நா செத்திடறேன்! உங்களுக்கு என்னால தொல்லை வேணாம்!" என்று அழுதாள்.

"கடவுளே! இங்க பாரு யாமினி! நீ செத்துப் போனா பிரச்சனை சரியாகாது! புரிஞ்சுக்கோ! நீ என்ன பஞ்சாயத்து வெச்சி கல்யாணம் பண்ணிகிட்டு வந்திருக்க! இப்ப நீ செத்தா, நாந்தான் உன்ன கொலை பண்ணேன்னு என்னத் தூக்கி ஜெயில்ல வெச்சிருவாங்க! அப்ப மட்டும் எனக்கு அது கெடுதல் இல்லையா?" என்றான் கோபமாக!

இப்போதுதான் தான் செய்யவிருந்த காரியத்தின் வீரியம் அவளுக்கு புத்தியில் உறைத்தது!

"இப்ப நா என்ன செய்யறது! கடவுளே! எனக்கு மட்டும் ஏன் இப்டி தொல்லைக்கு மேல் தொல்லை தர!" கதறினாள். ஆனாலும் அவனை முதலுதவி செய்யவிடாமல் அமர்க்களம் செய்தாள்!

அவளின் கதறல் அவனுக்கு வேதனையாகவும் இருந்தது! அதே சமயம் கடுப்பாகவும் இருந்தது!

இல்ல! எல்லா நேரத்திலயும் சாத்வீகமா நடந்துக்க முடியாது! சில நேரத்தில அதிரடி வேலையும் பண்ணியாகணும்! என்று நினைத்தபடி, பளாரென்று அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தான்!

ஆ...... வென்று அலறியபடி மயங்கினாள்!

"சாரி யாமினி! எனக்கு வேற வழி தெரியல!" என்று கூறிக் கொண்டே அவள் கையிலிருந்து வழியும் ரத்தத்தை நிறுத்த தன் கைக்குட்டையை கொண்டு வெட்டுப்பட்ட இடத்தில் இறுகக் கட்டினான்!

தன் கைப்பேசியில் யாரையோ அழைத்தான்! தன் வீட்டுக்கு பின்பிறமுள்ள காரேஜிலிருந்து தன் காரை எடுத்து வந்து வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வந்து அவளைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு போய் வெளியே நிற்கும் காரில் அவளை படுக்க வைத்தான்! வீட்டைப் பூட்டிக் கொண்டு காரைக் கிளப்பினான்!

கார் அவன் கையில் சீறிப் பாய்ந்தது! அதில் அவனுடைய கோபமும் வெறுப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது!

"ஏந்தான் இப்டி அடுத்தடுத்து தப்பு பண்ணி என் உயிர வாங்கறாளோ! இவளெல்லாம் பெத்தாங்களா? செஞ்சாங்களா? நிதானம்ங்கறது இவ வாழ்க்கைல கெடையவே கெடையாதா? பின்விளைவப்பத்தி எதையும் யோசிக்காம இப்டியா வேல பண்ணுவாங்க?" என்று முணுமுணுத்தபடி வண்டியோட்டிக் கொண்டிருந்தான்!

சில நிமிடங்களில் கார் ஒரு பெரிய வீட்டு வாசலில் வந்து நின்றது!

இவன் காரிலிருந்து யாமினியை வெளியே தூக்கி வரவும் வீட்டு வாசலை ஒரு நடுத்தர வயதுப் பெண் வந்து திறக்கவும் சரியாக இருந்தது!

"வாங்க தம்பி!"

"ஆகாஷ் வந்துட்டானா முத்துலக்ஷ்மிம்மா!?"

"வந்துட்டாரு தம்பி! தூங்கிட்டிருக்காரு! சின்னம்மா இருக்காங்க!"

"அவளா... ஆயிரம் கேள்வி கேப்பாளே..." என்றபடியே ஹாலின் பக்கவாட்டில் இருந்த அறையில் யாமினியை படுக்க வைத்தான்!

"ஆமாடா... ஆயிரம் இல்ல ..... ரெண்டாயிரம் கேள்வி கேப்பேன்!" என்றபடி அறைக்குள் நுழைந்த இளம்பெண் அழகாய் இருந்தாள்!

"ரெண்டாயிரம் என்ன..... பத்தாயிரம் கேள்வி கேளு! ஆனா மொதல்ல ட்ரீட்மென்ட் பண்ணு!" என்று கூறினான்.

"என்ன ஆச்சு?"

இந்த ஒற்றைக் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருந்ததை அவனும் உணர்ந்துதான் இருந்தான்!

"சூசைட் பண்ண ட்ரை பண்ணி கைய கட் பண்ணிகிட்டா! நான் இங்க தூக்கிட்டு வந்தேன்!"

அந்தப் பெண் தன் மருத்துவத்தை ஆரம்பித்தாள்! ஆனால் கேள்வியை நிறுத்தவில்லை!

"சூசைட் அட்டெம்ட்ன்னா ஹாஸ்பிடல் தூக்கிட்டு போறதுதானே! இங்க ஏண்டா தூக்கிட்டு வந்த?"

"ச்சும்மா நொச்சு நொச்சுன்னு கேள்வி கேக்காம வேலையப் பாரு!"

"இவ யார்ன்னாவது சொல்லுடா?"

"ஹேங்....... தமிழக அரசாங்க ரெக்கார்டு படி நேத்திலேந்து இவ எம் பொண்டாட்டி! போதுமா?" என்றான் ஆற்றாமையுடன்!

"வாவ்! கங்க்ராஜுலேஷன்ஸ்! வெரி ஸ்வீட் ந்யூஸ்!" என்றாள் வாய் நிறைய சிரிப்புடன்!

"வேணாம் ஷிவானி! நானே கடுப்பில இருக்கேன்! என் கோவத்த கௌறாத!"

"ஓகே! ஓகே! ரிலாக்ஸ் டியர்! நீ கொஞ்சம் வெளிய இரு! நா இவங்களுக்கு இஞ்செக்ஷன் குடுக்கணும்!" என்றாள்.

வெளியே செல்ல எத்தனித்தவன்,

"ஷிவானி! ஷீ ஹேஸ் பீன் செக்சுவலி ஹேரஸ்டு! அதுக்கு ட்ரீட்மென்ட் பண்ணின மெடிகல் ரிப்போர்ட் இது!" என்று தன் பேன்ட் பேக்கெட்டிலிருந்து சில காகிதங்களை எடுத்து அவளிடம் கொடுத்தான்! அதை வாங்கிக் கொண்டே,

"ஐல் டேக் கேர்!" என்றாள் ஷிவானி!
 
#2
இவன் வெளியே வரவும் ஆகாஷ் எழுந்து வரவும் சரியாக இருந்தது!

"என்னாச்சுடா?" கேட்டான் ஆகாஷ்!

"ம்ச்! என்ன சொல்ல! சாரிடா! உன்ன தூங்கவிடாம தொந்திரவு செஞ்சுட்டேன்!"

"ஹே! கமான் யா! இட்ஸ் ஓகே! சரி! சாப்ட்டியா?" என்று கேட்டுவிட்டு,

"நீ எங்க சாப்பிட்டிருக்கப் போற?" என்று பதிலையும் தானே கூறினான்! உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்!

"முத்தக்கா! சாப்பாடு ரெடியா?"

"ரெடி தம்பி! சாப்பிடலாம் வாங்க!" என்றாள் முத்துலக்ஷ்மி!

"இருடா! உன்னோட அருமை மனைவி வந்திடட்டும்! இல்லன்னா பத்ரகாளியோட அல்லக்கையா மாறிடுவா!" என்றான் வாசு!

"ஹா.....ஹா.....ஹா....." வாய்விட்டு சிரித்தான் ஆகாஷ்!

"டேய்! அவன் என்ன பத்ரகாளியோட அல்லக்கைன்னு சொல்றான்! உனக்கு அது சிரிப்பா இருக்கா?" என்று கோபப்பட்டாள்!

"ஆமாடீ! எல்லாரும் பத்ரகாளியா மாறிடுவான்னுதான் சொல்வாங்க! இவன் பத்ரகாளியோட அல்லக்கைன்னு சொல்றானே! அதான் சிரிப்பு வந்திச்சு!" என்றான் ஆகாஷ் சிரித்துக் கொண்டே!

"ஆமாண்டா! அந்தம்மா பத்ரகாளி கூட ஈஸியா மலையிறங்கிடுவாங்க! ஆனா இந்த அல்லக்கைங்க எல்லாம் அவ்ளோ சீக்ரம் மலையிறங்க மாட்டாங்க! அதான்!" என்று வாசு சிரிக்காமல் சொன்னதும் அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட்டாள் ஷிவானி!

"ஆ...... டேய்! ஆகாஷ்! நெஜமாவே பத்ரகாளியோட அல்லக்கைதாண்டா!" என்றுவிட்டு மேலும் சிலபல அடிகளை ஷிவானியிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொண்டான்!

ஆகாஷால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை!

ஷிவானி கோபத்துடன் போய் சோஃபாவில் அமர்ந்தாள்!

"சரி! சரி! வா! சாப்பிடலாம்! பசிக்கிது!" என்றான் ஆகாஷ்!

"போடா! நா சாப்பிட மாட்டேன்! நீயும் இந்த தடியனுமே போய் சாப்பிடுங்க!" என்று தன் மூக்கை உரிஞ்சினாள்!

"ஏய்! சாப்பிட வா!" என்றான் வாசு!

"ப்பெ!" என்றாள்.

"ஹேய்! சாப்பிட வாம்மா! இந்த மாதிரி நேரத்தில நீ சாப்பிடாம இருக்கக் கூடாதுடா செல்லம்!" என்றான் ஆகாஷ்!

"போடா!" மேலும் முறுக்கிக் கொண்டாள்!

ஆகாஷ் செய்வதறியாது திகைக்க, வாசு தட்டில் சாப்பாடு எடுத்து வந்து ஷிவானியின் அருகில் அமர்ந்தான்!

"வாயத் தெற!" என்று அதிகாரமாய் சொன்னதும் ஷிவானி அமைதியாய் வாயைத் திறந்து அவன் ஊட்டியதை வாயில் வாங்கி உண்ணலானாள்!

"ஏண்டீ! இன்னும் அதே பிடிவாதமா?" என்றான் வாசு!

"ம்ச்! ஒழுங்கா ஊட்டுடா! கேள்வி கேக்காத!"

"உன்னல்லாம்......" என்று கடுப்பாக கூறிவிட்டு தட்டை ஆகாஷிடம் கொடுத்துவிட்டு வாசு அங்கிருந்து நகர,

"டேய்! எங்க எஸ்கேப் ஆகப் பாக்கற! மரியாதையா என்னாச்சுன்னு சொல்ட்டு போ!" என்றாள் அவன் காட்டிய அதே அதிகாரத்துடன்!

"விட மாட்டாளே! ராட்சசி!" என்று தெளிவாக முணுமுணுத்தான்!

"அங்க என்ன முணுமுணுப்பு?"

"இல்லங்க டாக்டர் மேடம்! சாப்ட்டு சொல்றேன் டாக்டர் மேடம்!" என்று போலியான பவ்யத்துடன் வாசு சொல்லவும் ஷிவானி,

"ஆங்! அந்த பயமிருக்கட்டும்!" என்றாள்!

"அடிங்... எவ்ளோ வாய் உனக்கு!" என்று வாசு அவளை அடிப்பது போல பாவனை காட்ட, அவள் வாய்விட்டு சிரித்தாள்! ஆனால் சாப்பிடும் போது சிரித்ததனாலோ இல்லை வேறு எதனாலோ அவளுக்கு குமட்டிக் கொண்டு வர, ஓடிப் போய் வாந்தியெடுத்தாள்!

முதலில் அவள் சிரிப்பதைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்த வாசுவும் ஆகாஷும் அவள் வாந்தியெடுக்க ஓடியதைக் கண்டு அமைதியானார்கள்!

அவள் வாயை கொப்பளித்துவிட்டு வந்து அமர்ந்தாள்!

"சாரிடீ! இந்த மாதிரி வாயும் வயிறுமா இருக்கற நேரத்தில உன்ன ரெஸ்ட் எடுக்க விடாம நா ரொம்ப தொந்திரவு குடுக்கறேன்!"

"ம்ச்! சும்மா ஃபீல் பண்ணாதடா! சொல்லு! என்னாச்சுன்னு!"

"நேத்தி எனக்கு ஆஃப்! அம்மாவோட சைட் ரிலேஷன் வீட்ல ஒரு மேரேஜ்! கட்டாயப் படுத்தி என்னையும் கூட்டிட்டு போனாங்க! முஹூர்த்தம் முடிஞ்சி கௌம்பலாம்னா எல்லாரும் இருந்து சாயங்காலம் ரிசப்ஷன் அட்டன்ட் பண்ணுங்கன்னு ஒரே அன்புத் தொல்லை! சரீன்னு மண்டபத்தில பெரிசுங்களோட மொக்க போட்டுகிட்டிருந்தேன்! அப்ப ஒரு பெரிசு பாத்ரூம் போணும்னு எழுந்து போச்சு! போய்ட்டு ரொம்ப நேரமா வரலயேன்னு போய் பாக்க போனேன்! அங்க காலைல கல்யாணம் ஆன பொண்ண யாரோ ஒருத்தன் மெரட்டிகிட்டு இருந்தான்! அவன ரெண்டு தட்டு தட்டி அந்த பொண்ண அனுப்பிட்டு திரும்பினா இந்தப் பொண்ணு வந்து நா அவள கெடுத்துட்டேன்னு பழி போட்டுச்சு! இல்லன்னு போராடினேன்! எல்லாரும் ஆ...ஊன்னு கத்த, என்னப் பெத்த நல்லவர் அவ கழுத்தில தாலியக் கட்டுன்னு ஆடர் போடறார்! எங்க போய் முட்டிக்க?! நேரா ரிஜிஸ்ட்டர் ஆஃபீஸ்க்கு என்ன இழுத்துகிட்டு போய் கல்யாணத்த முடிச்சி வெச்சுட்டாங்க! இந்த பொண்ணு கல்யாணம் ஆனக்கப்றமும் என்ன ஒரே டார்ச்சர் பண்ணிச்சி! அப்பாம்மா கோச்சிகிட்டு குன்னூர் போய்ட்டாங்க! நானும் கோச்சுகிட்டு நைட்டு வீட்டு பக்கத்தில இருக்கற பார்க்ல போய் படுத்திட்டேன்! காத்தால வீட்டுக்கு வந்தா இந்த பொண்ணு என்னத்த பாத்திச்சோ.... நீங்க என்ன கெடுக்கல.... சாரின்னு கதறுது! உன் வாழ்க்கைய நா கெடுத்திட்டேன்னு சொல்லிட்டு கைய கட் பண்ணிகிச்சு! அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்!" என்று நடந்ததை சுருக்கமாக சொல்லி முடித்தான்!

"ஹூம்!" பெரு மூச்சு விட்டாள் ஷிவானி!

"உங்கப்பா உனக்கு எப்டியாவது கல்யாணம் பண்ணிடனும்னு துடிச்சுகிட்டிருந்தார்! கிடைச்ச சந்தர்ப்பத்த நல்லா யூஸ் பண்ணிகிட்டார்!" என்றான் ஆகாஷ்!

"ஆமாடா! அதான்! நா எங்கனா கோவிச்சுக்கப் போறேனோன்னு நெனச்சு நைசா குன்னூர் கௌம்பி போய்டுச்சு பெரிசு!" என்றான் வாசு!

ஷிவானி சிரித்தாள்!

"இதுல ஐயா எங்கிட்ட கோவிச்சுக்கற மாதிரி ட்ராமா வேற! இந்த ட்ராமால எங்கம்மா என்னமா ஆக்ட் குடுத்தாங்க தெரியுமா? சாப்பாடு போட மாட்டேன்னு சொல்றாங்க! வாய் பொத்தி அழற மாதிரி சீன் வேற! எனக்கு செம்ம சிரிப்பா வந்துச்சு! ஆனா அவங்க மனசு நோகுமேன்னு அவங்க போடற ட்ராமா எனக்கு தெரியாத மாதிரியே நானும் நடிச்சேன்!" என்றான் வாசு!

"ச்சி! பாவம்டா உங்க பேரண்ட்ஸ்! உனக்கொரு கல்யாணம் பண்ணனும்னு அவங்க ஆசப்படறது தப்பா?" என்றாள் ஷிவானி!

"அதுக்கு நா என்னடீ பண்ண முடியும்!" என்றான் விரக்தியுடன்!

"ஆனா வாசு! நீ... இவள...." ஆகாஷ் எதையோ கேட்க வந்து நிறுத்த,

"எங்கப்பாவோட பேச்ச என்னிக்குமே மீற மாட்டேன்டா! இந்த ஜென்மத்தில இவதான் என் மனைவி! இத மனசில வெச்சுகிட்டுதான் என் மனசாற ஒப்புகிட்டு இவ கழுத்தில நா தாலி கட்டினேன்! இது வரைக்கும் எப்டியோ? இனிமே இவளோட சுக துக்கத்துக்கு நா பொறுப்பு!" என்றான் அழுத்தமாக!- இது இருளல்ல..... விரைவில் வெளிச்சம் வரும்!
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on நதியா's profile.
My heartiest birthday wishes to you, நதியா Madam
banumathi jayaraman wrote on Rranii's profile.
My heartiest birthday wishes to you, Rranii Madam
kattangal part 8 updated friends...
banumathi jayaraman wrote on vishnuprasanth's profile.
My heartiest birthday wishes to you, Vishnuprasanth Sir
banumathi jayaraman wrote on priyaanandh's profile.
My heartiest birthday wishes to you, Priyaanandh Madam
banumathi jayaraman wrote on Asath's profile.
My heartiest birthday wishes to you, Asath Sir/Madam
banumathi jayaraman wrote on Arya's profile.
My heartiest birthday wishes to you, Arya dear
sandhiya sri wrote on Arya's profile.
wish you happy birthday sister..
banumathi jayaraman wrote on Sowmi's profile.
My heartiest birthday wishes to you, Sowmi Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays