• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Idhu Irul Alla! - 8

#1
இது இருளல்ல!8.

திருமண வரவேற்பு இப்போது வேண்டாம் என்று வாசு சொல்லிவிட்டதால் பாஸ்கர் மாமா ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார். அவருக்கு கோபம் குறைந்தபாடில்லை!

பாவம் ருக்மணி மாமி! பத்து நாள் இருந்துவிட்டுப் போகலாம் என்று சொல்லி குன்னூரிலிருந்து அழைத்து வந்தவர் இப்போது திடீரென்று காரணமே சொல்லாமல் இரண்டு நாட்களுக்குள்ளேயே திரும்பவும் கிளம்பு என்றால் ஒருத்திக்கு கோபம் வராதா?

ஆனால் கோபம் வந்து என்ன பயன்? வந்த கோபத்தை மாமாவிடம் காட்ட முடியாதே! அவர்தான் ருத்ர மூர்த்தியாயிற்றே! இவள் கோபமெல்லாம் அவரிடம் செல்லுபடியாகுமா?

"டேய்! வாசு! எப்டியாவது உங்க மாமாகிட்ட பேசி ஒரு வாரமாவது இருக்க பர்மிஷன் வாங்கிக் குடுடா! ப்ளீஸ்!" என்று ருக்மணி மாமி வாசுவிடம் கெஞ்ச,

வாசு எதுவும் பேசாமல் எழுந்து போனதிலிருந்தே மாமிக்குப் புரிந்துவிட்டது, பிரச்சனை மாமனுக்கும் மருமகனுக்கும்தான் என்று!

ஹூம்... இந்த மனுஷனை நம்பி நானும் கௌம்பினேன் பாரு! என்ன ......லயே அடிக்கணும்! என்று மனதுக்குள் புலம்பியபடியே தன் பொருட்களை எடுத்து வைக்கலானாள்.

ப்யூட்டி எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளைக் கூட்டிக் கொண்டு போய் கோவையில் அவளுடைய கல்லூரி விடுதியில் தள்ளிவிட்டு அவர்கள் குன்னூருக்குப் போய்விடுவார்கள். எப்படியும் இன்னும் இரு தினங்களில் கிளம்பத்தானே போகிறோம் என்று சும்மா இருந்துவிட்டாள். அதுமட்டுமல்ல! வாசுண்ணாவுக்கும் அப்பாவுக்கும் எப்போதுமே இப்படித்தான், பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கும் என்பது தெரியுமாதலால் அவளுக்கு இது பழகியும்விட்டது!

ப்யூட்டி கிளம்புவதால் ஸ்வீட்டியும் கிளம்ப வேண்டும் என்றாக, அவள் கிளம்பாமல் முரண்டு பிடித்தாள். மாமாவின் கோபமெல்லாம் அவளிடம் செல்லுபடியாகாது! வல்லவனுக்கு வல்லவன்தான் வையகத்தில் உண்டே!

"என்ன மாமா? ஒரு வாரம் அப்பாம்மாவோட இருக்க விடாம இப்டி பண்றீங்க? இப்ப உங்களுக்கு என்ன வந்திச்சு?" என்று கோபமாகக் கேட்க,

"என்ன? நீயும் உங்கண்ணனாட்டம் எதுத்துப் பேசற? பொண் கொழந்தையா லட்சணமா அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா?" என்றார் மாமா!

"இங்க பாருங்க மாமா! நா எதுத்து பேசறதுனால அடங்கப் பிடாரியும் கெடையாது! வாய மூடிண்டிருந்தா நல்ல பொண்ணுன்னு நீங்க ஒண்ணும் எனக்கு சர்டிஃபிகேட்டு தரப் போறதில்ல! ஓவரா சீன் போடாதீங்க! இப்ப ஏன் கௌம்பணும்னு சரியான ரீசன் சொல்லுங்க?" என்றாள் ஸ்வீட்டி!

"அதெல்லாம் சொல்ல முடியாது! கௌம்புன்னா கௌம்பு! அவ்ளோதான்!"

"நா கௌம்ப மாட்டேன்! வேணும்னா நீங்க கௌம்புங்க! நா இங்கதான் இருப்பேன்! நா மட்டுமில்ல! ப்யூட்டியும் சரி! மாமியும் சரி! இங்கதான் இருப்பாங்க!" என்றாள் உறுதியாக.

"நீ வேண்ணா இரு! மாமியும் சௌமியும் இங்கதான் இருப்பான்னு நீ எப்டி சொல்லுவ?" என்றார் மாமா கோபமாக!

"த்தோடா! ஓவராதான் இருக்கு! நீங்க என்ன கௌம்புன்னு சொல்றதுக்கு உங்களுக்கு எவ்ளோ உரிமையிருக்குன்னு நெனக்கிறீங்களோ..... அதே அளவு அவங்க எங்கூடதான் இருப்பாங்கன்னு சொல்ற உரிமை எனக்கும் இருக்கு!" என்றாள் ஸ்வீட்டி அழுத்தமான குரலில்.

மாமா ஒரு நிமிடம் ஆடித்தான் போனார். ஆனாலும் மனிதர் அசரவில்லை.

"ஓஹோ! உரிமை கொண்டாடறியோ! அப்ப நானும் உரிமையா கேப்பேன்! உங்கண்ணன் கல்யாணம்தான் பண்ணிகிட்டான்ல! அப்ப ரிசப்ஷன் வெக்க ஏன் ஒத்துக்க மாட்டேங்கறான்னு கேட்டு சொல்லு!" என்று தன் கோபத்துக்கான காரணத்தை கூறினார் மாமா.

அட்ரா சக்கை.... அட்ரா சக்க... அட்ரா சக்க... அட்ரா சக்க... இதான் மேட்டரா? அண்ணன் சரியான ஆப்பு வெச்சான் இந்த மாமாவுக்கு! என்னடா..... இந்த மாமா ஓவரா துள்றாரேன்னு பாத்தேன்! என்று மனதில் எண்ணியபடியே கௌண்டமணி போல துள்ளினாள் ஸ்வீட்டி!

அவள் போடும் துள்ளாட்டத்தைப் பார்த்து கடுப்பான மாமா அவளிடம் மேலும் கோபித்தார்.

"ஏய்! என்ன நக்கலா?! இப்ப இப்டி துள்ளுற அளவு என்ன நடந்தது? நா கேட்டதுக்கு பதில் கேட்டுச் சொல்லு உங்கண்ணன் கிட்ட!" என்றார் மாமா.

"சான்ஸே இல்ல! எங்கண்ணன் ஒண்ணு சொன்னா அதுக்கு பல காரணம் இருக்கும்! அதுவும் நல்ல காரணமா மட்டும்தான் இருக்கும்! இத்தன வருஷமா அவன் கூட பழகிட்டு இது கூட உங்களுக்குத் தெரீலயா மாமா?" என்று திருப்பினாள் இளையவள்.

"அது என்ன காரணம்? பெரிய காரணம்!"

"அதெல்லாம் உங்களுக்கெதுக்கு? அவனுக்கு எப்ப தோணுதோ அப்ப ரிசப்ஷன் வெச்சுப்பான்!"

மாமாவுக்கு இந்த பதில் சரியானதாகப் படவில்லை!

"அதெப்டி? இவனா ஒருத்திய கட்டிகிட்டு வருவானாம்! நாங்க ஒத்துக்கணுமாம்! இவன் இப்ப ரிசப்ஷன் வேணாம்னு சொல்வானாம்! அதையும் நாங்க ஒத்துக்கணுமாம்! இதென்னது இது! வீட்டு பெரியவங்களுக்குன்னு ஒரு மரியாதை கெடையாதா?"

"மாமா! வீட்டுப் பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கறதுனாலதான் அண்ணன் அமைதியா இருக்கான்! இல்லன்னா நடக்கறதே வேற! உங்களுக்கு அண்ணனைப் பத்தி நல்லாவே தெரியும்!" என்று பதில் தந்தாள் இளையவள்.

மாமா அமைதியாக ஒரு நிமிடம் இருந்தார்! ஆனால் உடனேயே திரும்பவும் ஆரம்பித்தார்!

"நா அவங்கிட்ட பெரிசா என்ன கேட்டேன்! ரிசப்ஷன்தானே வெச்சுக்க சொல்றேன்! அவன் கல்யாணத்ததான் பாக்க குடுத்து வெக்கல! ஏதோ அவன் ரிசப்ஷனையாவது கண் குளிர பாக்கணும்னு ஆசப்படறது தப்பா? சொல்லுமா தப்பா?" என்று இரைஞ்சினார்.

"மாமா! இது எமோஷனல் ப்ளாக் மெய்ல்! இப்டில்லாம் நீங்க பேசினீங்கன்னா அண்ணன் அப்றமா வெச்சுக்கலாம்னு சொன்னத எப்பவுமே வேணாம்னு சொல்லிடுவான்! உங்களுக்கு பல்புதான்!?!" என்றாள் ஸ்வீட்டி நக்கலாக!

இது அனைத்தையும் வீட்டிலிருந்த அனைவரும் அருகருகே அமர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தனர்! ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை!

"என்ன கிருஷ்ணா? நீயாவது சொல்லக் கூடாதா?"

கிருஷ்ணா தன் இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி, "ஆள வுடு சாமி!" என்றார்.

மாமா, பவதாரிணியைப் பார்க்க, அவள் தன் வாயில் ஜிப் போட்டுக் கொண்டுவிட்டதாக சைகை செய்தாள்.

ப்யூட்டியும் ருக்மணியும் இதற்கும் தனக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பதாக அமர்ந்திருந்தனர். ஆனால் இருவருமே மனதுக்குள் இதை முழுதாக ரசித்துக் கொண்டிருந்தனர்! ஏனெனில் அவர்கள் இருவராலும் மாமாவிடம் இப்படி பேச முடியாதே! பேசினால் அவர்களை சும்மா விட்டுவிடுவாரா என்ன?

வாசு அங்கு இல்லவேயில்லை! அவனுடைய அறையில் மிக மிகக் கோபமான மனநிலையில் அமர்ந்திருந்தான்!

கடைசியாக மாமாவின் பார்வை யாமினியின் பக்கம் திரும்பியது!

அவளோ, வாசு திருமண வரவேற்பை வேண்டாம் என்று சொன்னான் என்பது தெரிந்ததிலிருந்து திரும்பவும் குழம்பிய மனநிலைக்கு தள்ளப் பட்டிருந்தாள்.

அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த மாமா,

"ஏம்மா! யாமினி! நீயாவது உன் புருஷன்கிட்ட என் பேச்சைக் கேக்கச் சொல்லி எடுத்து சொல்லக் கூடாதா?"

எல்லாரும் யாமினி என்ன கூறப் போகிறாள் என்றறிய ஆவலாக இருந்தனர்!

அவருடைய அழைப்பில் கவனம் திரும்பிய யாமினி,

"அவர் என்ன செஞ்சாலும் அதுக்கு கண்டிப்பா ஒரு நல்ல காரணம் இருக்கும்!" என்றாள் யாமினி மெல்லிய குரலில்!

எல்லாருக்கும் யாமினியின் பதில் ஆச்சர்யத்தை தந்தது!

"பாத்தீங்களா மாமா! அண்ணி நேத்திக்கு வந்தவங்க! ஆனா அவங்களே எங்கண்ணனப் பத்தி நல்லா புரிஞ்சி வெச்சிருக்காங்க! இத்தன வருஷமா பழகறீங்க! உங்களுக்குத் தெரியல!" என்று கிண்டல் செய்தாள் ஸ்வீட்டி!

வாசு உள்ளேயிருந்து இதைக்கேட்டு வியந்து போய் தனக்குள் சிரித்துக் கொண்டான்!

"ஏம்மா! இந்த கிழவன் தன் மருமகன கல்யாணக் கோலத்தில பாக்க ஆசப்படக் கூடாதாம்மா?"

இப்போது யாமினி கூறினாள்.

"ஆசப்படறதில என்ன தப்பு!? எல்லாருக்கும் கண்டிப்பா ஏதாவது ஆசையிருக்கும்! ஆனா எல்லாருக்கும் எல்லா ஆசையும் நிறைவேறிடுமா என்ன?" என்றாள் மெல்லிய குரலில்.

அவளுடைய பதிலில் மாமா மொத்தமாக அடங்கிப் போனார்!

எல்லாரும் கலைந்து செல்ல, மாமா ருக்மணி மாமியிடம்,

"ருக்மணி! அவ சொல்றது கரெக்ட்டுதான்! என் ஆசைதான் நிறைவேறல! உன் ஆசையாவது நிறைவேறட்டும்! சந்தோஷமா இரு! நாம அடுத்த வாரம் ஊருக்கு போலாம்!" என்று எங்கோ பார்த்து கூறிவிட்டு எழுந்து போனார்!

ருக்மணி மாமியும், ப்யூட்டியும், ஸ்வீட்டியும் ஓடி வந்து யாமினியை அணைத்து முத்தமிட்டனர்!

"கலக்கிட்டடீ கொழந்த! ஆனானப்பட்ட பாஸ்கரனையே ஆஃப் பண்ணிட்டியே! ஹப்பா! இப்பதான் நேக்கு திருப்தியாயிருக்கு!" என்று ருக்மணி மாமி யாமினியை புகழ்ந்து தள்ளிவிட்டாள்!

"சூப்பர் மன்னி! எங்கப்பாவை ஒரே வார்த்தைல ஜெய்ச்சுட்டீங்களே! இனிமே எனக்கு ஏதாவது வேணும்னா உங்க கிட்டதான் சொல்லி அப்பாட்ட கேக்க சொல்வேன்!" என்றாள் ப்யூட்டி!

ஸ்வீட்டியோ, "அண்ணி! செம்ம! அண்ணனுக்கேத்த அண்ணி! பாஸ்கர் மாமாவ எப்டி கவுக்கணும்னு அண்ணனுக்கு மட்டும்தான் தெரியும்னு நெனச்சேன்! ஆனா..... இன்னிக்கு அண்ணிக்கும் தெரியும்னு தெரிஞ்சுகிட்டேன்!" என்றாள்.

இப்போது ஊருக்கு போகவில்லை என்பதால் ப்யூட்டியும் ஸ்வீட்டியும் ஷாப்பிங் கிளம்ப, நானும் வரேன்! என்று ருக்மணி மாமியும் அவர்களுடன் கிளம்பிவிட்டாள்!

கிருஷ்ணா பாஸ்கர் மாமாவை சமாதானப்படுத்தி வெளியில் எங்கோ அழைத்துச் சென்றுவிட்டார்!

நேற்று முழுதும் ஓய்வின்றி வேலை செய்ததால், வாசுவுக்கு இன்று விடுப்பு கொடுத்திருந்தனர்! அதனால் அவன் இன்று அலுவலகம் செல்லவில்லை! ஆனால் ஏதோ அவசர வேலையென்று தன் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் போனான்!

வீட்டில் இப்போது பவதாரிணியும் யாமினியும் மட்டும் இருந்தனர்.
பவதாரிணி மெதுவாக வந்து யாமியைக் கேட்டாள்!

"என்னம்மா ஆசையிருந்தது ஒனக்கு? சொல்லுமா! நா நெறவேத்தறேன்!" என்றாள் கனிவான குரலில்!

"அதெல்லாம் ஒண்ணுல்லங்க!" என்றாள் யாமினி!

"பரவால்லமா!" என்று அவளுடைய கையை ஆதரவாய் பற்றினாள்.

சட்டென்று அழுகை வந்துவிட்டது யாமினிக்கு!

"எனக்கு கூடதான்..... கை நெறைய அரைச்ச மருதாணி இட்டுகிட்டு, கம்மி விலையிலயாவது ஒரு பட்டுப்புடவை, அதுக்கேத்த மாதிரி நானே என் கையால அலங்காரம் பண்ணி தைச்ச டிசைனர் ப்ளவுஸ், சிம்பிளா ஒரு ஹேர் ஸ்டைல் பண்ணிகிட்டு...... பெரிசா கல்யாண சத்திரத்தில இல்லன்னாலும் ஒரு சின்ன அம்மன் கோவில்ல வெச்சி...... எனக்கு பிடிச்சவர்...... கண்ணாலயே நா பண்ணியிருக்கற ட்ரஸ் நல்லாயிருக்குன்னு சொல்ற மாதிரி...... நா அவர பாத்து மெதுவா சிரிக்கற மாதிரி...... நாங்க இப்டி நடந்துக்கறதப் பாத்து பக்கத்தில இருக்கறவங்கல்லாம் கேலி பண்ற மாதிரி......மாவிலை தோரணம்லாம் கட்டி, மேள தாளத்தோட.... ஊரே வாழ்த்த.... அந்த தெய்வத்தோட சாட்சி வெச்சி..... ஒரு அழகான வைபவமா என் கல்யாணம் இருக்கணும்னு ...... ம்ச்! ஆசப்பட்டதெல்லாம் நடந்துடுமா என்ன? இல்ல உங்களால இப்ப அத நெறவேத்ததான் முடியுமா?

என் கல்யாணம் இப்டியா நடந்துச்சி? உங்க பிள்ள தப்பு பண்ணினவர்னு அவர நா எவ்ளோ கொல வெறில பாத்துகிட்டிருந்தேன்? அவர் வாழ்க்கைய நா கெடுக்க வந்தேன்னு அவர் என்னை எவ்ளோ கொல வெறியில பாத்துகிட்டிருந்தார்? ஒரு கோவில்லயாவது நடந்துச்சா? அட்லீஸ்ட் ஒரு சாமி படம்! ஒரு கெட்டி மேளம்... யாராலயாவது ஒரு அட்சதையாவது தூவ முடிஞ்சிதா? இல்லன்னு சொல்லாம ரெண்டு பேருக்கும் புதுசா ட்ரஸ் வாங்கி போட சொன்னீங்க! நாங்களும் மறுப்பு சொல்லாம போட்டுகிட்டோம்! இப்டியா கல்யாணம் பண்ணிக்குவாங்க?" என்று கூறி கசியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் யாமினி.

பவதாரிணியின் கண்களில் குளம் கட்டியது! ஆனாலும் யாமினியிடம் கூறினாள்.

"நீ சொல்றது எல்லாமே சரிதான்! ஆனா உனக்கொரு விஷயம் தெரியுமா? இப்டியாவது ஒரு கல்யாணம் வாசுவுக்கு பண்ணிட முடியாதான்னு நானும் அவரும் வேண்டாத நாளேயில்ல!"

"ஏன்? அவருக்கென்ன கொறச்சல்? நல்லா ராஜாவாட்டம் இருக்கார்! அப்றம் அவர் கல்யாணம் பண்றதுல என்ன பிரச்சனை?"

"நேரம் வரும்போது உனக்கே புரியும்மா! ஆனா அப்பவும் நீ என் மகனை ராஜான்னு சொல்வியா? சந்தேகம்தான்!" என்று கூறியபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு போனாள் பவதாரிணி!


- இது இருளல்ல...... விரைவில் வெளிச்சம் வரும்!
 

Vijayasanthi

Well-known member
#6
வாசுவின் வாழ்க்கையில் வந்த இருள் என்ன??? அது யாமினிக்கு தெரிந்து அவன் வாழ்வு எப்ப வெளிச்சமாகும்??? Flashback சீக்கிரம் கொண்டு வாங்க...
 
#7
hi,
interesting update.
Thank you Usha!
arumaiyana pathivu sis:love::love::love::love:. yaminiyin aasaikal nyayamanavai:):):)

appidi enna problem vasuvuku:unsure::unsure::unsure::unsure::unsure:waiting eagerly
Thankyou Sridevi! Seekirame adutha padhivudan varugiren!
Nice update annam
Thankyou Saru!
Vasu lifela appati ennathan problem build ub thanga mudiyala,,very nice ud sis
Thankyou Kayal! Achicho! Buildup thanga mudilaya? Sorry ma! Seekiram FB podaren!
வாசுவின் வாழ்க்கையில் வந்த இருள் என்ன??? அது யாமினிக்கு தெரிந்து அவன் வாழ்வு எப்ப வெளிச்சமாகும்??? Flashback சீக்கிரம் கொண்டு வாங்க...
Thankyou Viji! Seekirame FB kondu varenpa!

Thankyou friends! Thanks for your support! Voting start ayiduchu! Ungal ponnaana vaakkugalai padhivid marakkadheergal!
 

Latest profile posts

banumathi jayaraman wrote on thanikag4u's profile.
My heartiest birthday wishes to you, Thanikag4u Sir/Madam
banumathi jayaraman wrote on Sugan's profile.
My heartiest birthday wishes to you, Sugan Sir
banumathi jayaraman wrote on Safina's profile.
My heartiest birthday wishes to you, Safina Madam
banumathi jayaraman wrote on Priyanandhini23's profile.
My heartiest birthday wishes to you, Priyanandhini23 Madam
banumathi jayaraman wrote on Priya Vijayakumar's profile.
My heartiest birthday wishes to you, Priya Vijayakumar Madam
banumathi jayaraman wrote on kumarrsm's profile.
My heartiest birthday wishes to you, Kumarrsm Sir
banumathi jayaraman wrote on Jeni's profile.
My heartiest birthday wishes to you, Jeni Madam
நண்பர்களே.....அப்பலோ 21 பதிவேற்றம் செய்திருக்கிறேன். வாசியுங்கள். கருத்து பகிருங்கள் .
Apollo - 21 https://www.smtamilnovels.com/community/index.php?threads/apollo-21.628/
Dear frens, uyir vidum varai unnoduthaan -- epi 13 posted. pls read and comment

Advertisements

New Topics