Irattura mozhi story thread

smteam

Administrator
Staff member
#1
1

அந்த தெரு நிசப்தத்தின் உச்சத்தை தொட்டிருந்தது. இருள் தன் கைக்குள் அனைத்தையும் அடக்க முயன்றபோது ஒரு அறையின் வெளிச்சம் அதை தடுத்தது.

அந்த அறை வோல்டேஜ் பிலக்ச்சுவேசன் காரணமாக தனது மின்விளக்குகளை மின்மினி பூச்சிபோல் மினுங்கவிட்டது. அதில் ஒரு லேன் லைன் மேஜையில் படர்ந்திருக்க அதன் ரிசீவர் தரையில் இருந்து தன்னுடன் இனைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங் வயரின் உதவியுடன் குதிக்க முயற்ச்சி செய்தது.

ஒரு நாற்காளி தன் பின் இரு கால்களால் தரையை மிதித்து முன் இரு கால்களை காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. உருண்டுகொண்டிருந்த கோக் பாட்டில் மின் விளக்கின் வெளிச்சத்தை இரட்டித்தது. தரையில் நொருங்கி இருந்த பிஸ்கட்டுகளை சில எரும்புகள் மொய்த்துக்கொண்டிருக்க, அதில் இருந்து ஒரு எரும்பு மட்டும் தனதுப் பங்கினை எடுத்துக்கொண்டு தனது இடம் நோக்கி நகர்ந்தது.

அப்போது அதன் வழியை ஒரு சிறிய சிவப்பு நீர் தேக்கம் கடலாக தெரிய, தன் வழியை மாற்றிக்கொண்டு வேறு வழியாக சென்றது. அந்த சிறு சிவப்பு கடல் தனது கொள்ளலவை பெருக்க அதில் விழுந்த சிவப்பு துளிகளை பயன் படுத்தியது. அந்த சிவப்பு துளிகள் அங்கு நாற்காளியில் கட்டி வைக்கப் பட்டவனின் நெற்றிக்காயத்தில் இருந்து வெளிப்பட்டு அவன் மூக்கு வழியாக வழிந்து தரையில் விழுந்து கடிகாரத்தின் நொடிமுள் போல நிசப்தத்தை கலைத்தது.

உடலின் மா நிறத்தை குருதி சிவப்பு சாயம் பூச, அவனது கண்கள் தங்களது பழக்கத்தை மாற்றாமல் அங்கும் இங்கும் அலை மோதியது. கண்ணின் கருவிழிகள் தேங்கி இருந்த கண்ணீரில் சிரமப்பட்டு நீந்தியது. மேலும் அந்த காயத்தில் இருந்து குருதி வெளிப்பட அவன் அதை தன் கைகளால் துடைத்துவிட்டு நிமிற்ந்தான்.

அவன் கண்கள் கலங்கி இருந்தன. சுயநினைவிற்கு வர முயற்ச்சி செய்து தோற்றான். அவன் முன்னால் ஒரு பெண் கிடத்தப்பட்டிருந்தாள். உடல் தன்னை சுற்றி நடக்கும் எதையும் பொருட்படுத்தாமல் மயக்க நிலையில் இருந்து விடுபட மறுத்தது. அவளது பாதங்களுக்கு மேல் தனது நீல சுடிதாருக்கு பொருத்தமாக அணிந்திருந்த லெக்கின்ஸ் தோளுக்கு மேல் ஒட்டி இருக்க, முலங்காலுக்கு மேலுள்ள அனைத்தும் ஒரு பர்தாவால் மூடப்பட்டு இருளுடன் அவளது உடலைக் கரைத்தது.

இருளில் இருந்து வந்த அந்த நிழல் அவளை மறைக்க வெளிப்பட்டான் அந்த வினோத மனிதன். அவனது கண்கள் முழுவதும் ஒரு மை பூசப்பட்டு கண்ணீரில் நனைந்து கன்னத்தில் வடிந்தது. தலைமுடி ஒவ்வொன்றும் தனித்தனி நட்டுவைத்ததைப் போல் மேல் நோக்கி எழுந்து நின்றது.

அவன் வாயில் ஒரு கருப்பு நிற செல்லோ டேப்பை ஒட்டி இருந்தான். வெள்ளை டீ சர்ட்டு அணிந்து அதில் சில ஆங்கில வாக்கியத்தை நிரப்பி இருந்தான். அதற்க்கு மேல் ஒரு கருப்பு ஜர்க்கின் மூட காவி நிற பேன்ட் அணிந்து, காலின் கட் ஷூ தரையில் மூழ்க அவளது பக்கத்தில் வந்து நின்றான்.

அவன் அந்த பெண்ணின் கால்களை பிடித்து இழுத்து அவளது உடலை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நெய்ல் கட்டரின் பாட்டில் ஓப்பனரைத் திறந்து அந்த நாற்காளியில் அமர்ந்திருந்தவனின் கண்களுக்கு அருகில் இமைகளில் உறசுமாரு வைத்தான். நாற்காளியில் கட்டப்பட்டிருந்தவன் சிரமப்பட்டு வாயசைத்தான்.

“யார் நீ?”

************************

சாம்வேல் தனது பெட்டில் இருந்து உருண்டு கீழே விழுந்தான். எழுந்து பார்த்தான். காலை மணி ஒன்பது. டேபிலில் ஒரு பேப்பர் காமடி கிங் என்ற டீ.வீ நிகழ்ச்சியின் ஆடிஷனைத் தாங்கி பிடிக்க, போன் ரிசீவர் வழக்கம் போல தரையை உரசிக்கொண்டிருந்த்து. அதை எடுத்து மேலே வைத்துவிட்டு பிரஷ் மற்றும் டூத் பேஸ்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் அடைந்தான். அந்த ரூம் பீரோமேல் சில கலர் செல்லோ டேப்கள் ஒட்டப்பட்டிருந்தது.

பாத்ரூமில் இருந்து வெளிபட்டவன் தனது ஹேன் பேகில் ஒரு கத்தி, ரப்பர் பேண்டு, ஹேர் பின், பலூன் மற்றும் சிலவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளிபட்டான். அவன் ஐ.ஓ.பி ஏ.டீ.எம்-ஐ தாண்டிய போது தெரு ஓரத்தில் நின்ற சிலர் தன்னை நோட்டமிடுவதை கவனித்தான். அந்த கும்பல் விக்கி, அவனது நண்பர்கள் ராம் குமார், டேவிட், மற்றும் இரண்டு பேரை அடக்கியிருந்தது. ராம் குமார் விக்கியை நோக்கி

“இவனா தான் இருக்கும்னு நினைக்கிறேன்........ரொம்ப மொக்கையா இருக்கான் ஐந்து பேர் வேணுமா?”. விக்கி குறுக்கிட்டான்.

“என்னைய பொருத்தவரைக்கும் பாசிபிலிட்டி ஆப் பெய்லியர் ஸிரோ தான் இருக்கனும்...” டேவிட் தனது பங்கிற்க்கு,

“அவசர பட வேணாமே.......கரக்ட் டைம் வர வரைக்கும் காத்திருக்கலாம்ல...”. விக்கி டேவிட்டை நோக்கி,

“இன்னைக்கு நைட் வரைக்கும் காத்திரு அது போதும்”.

விக்கியின் கண்கள் சாம்வேலையே நோக்க, சம்வேலின் உடல் தெருவைவிட்டு விலக அந்த இயற்க்கை வண்ண சூழலுக்குள் அடங்காமல் தெரிந்த அந்த கருப்பு உருவம் விக்கியின் கண்களை ஈர்த்தது. விக்கியின் நண்பர்கள் யாவரும் பேசிக்கொண்டிருக்க, விக்கி அந்த உருவத்தின் ஈர்ப்பு விசைக்குள் ஊடுருவி அதை நோக்கி பயனித்தான். பக்கத்தில் செல்ல செல்ல அந்த கருப்பு உடைக்குள் இருந்த அஃப்சனாவின் முகம் ஒருவித பதட்டத்திற்குள் மூழ்கி இருப்பதை உணர்ந்தான். அவளின் அருகில் சென்ற அவனின் கைகளை இருக்கமாக பிடித்துக்கொண்ட அவள்

“இன்னும் எத்தன நாள் ஓடப்போறோம்....?”.

அவளது கண்கள் நீரில் ததும்பி இருந்தது. விக்கி அவளது கைகளை தனது விரல்களுக்குள் அடக்கி.....

“இனிமே தான் நம்ம ஓட்டத்தையே ஆரம்பிக்கனும் ஒரு புது மனிசனா, எல்லாம் மாறிடும்”.

அவளது ததும்பிய கண்ணிர் விக்கியின் கைகளில் வடிய அவள் அவனை அணைத்துக்கொண்டு அவன் காதருகே அவளது மூச்சுக் காற்று பட விக்கியை ஏறிட்டாள்.

“நீ மாறிட்ட நான் நம்புறேன்”.

அந்த தெருவின் கண்கள் அவர்களை நோட்டமிடத் தொடங்க டேவிட் எச்சரித்தான்.

“டேய் எல்லாரும் பாக்குறாங்க வா”.

விக்கி அவளது கண்ணீரை தன் கைகளில் தாங்கி அவளை அணுப்பி வைத்தான். அஃப்சனா அந்த இடத்தை விட்டு அகல, அந்த தெருவின் கண்கள் மட்டும் அவளை விட்டு அகலாமல் நிலைத்திருந்தது. அவள் கூச்சத்தில் தன் பர்தாவின் முகத்திரையை கீழ் தள்ளி தனது ஸ்கூட்டியில் ஏறி வேகம் பிடிக்கத் தொடங்கினாள்.

நேராக சிஸ்டெக் என்ற ஐ.டி நிருவனத்திற்க்குள் நுளைந்தது அவளது ஸ்கூட்டி. லிப்ட் வழியாக மூன்றாவது ஃப்லோருக்குள் நுளைந்த அவள் ரெஸ்ட் ரூமிற்க்குள் நுளைந்து கையில் தன் பர்தாவுடன் வெளி வந்தாள். ஒரு கண்ணாடி அறைக்குள் பலரும் தனித்தனி கேபினுக்குள் அடைக்கப்பட்டிருந்தனர். சுற்றி ஒரு இடத்திலும் கடிகாரம் இல்லை. கடிகாரம் இல்லாத குறையை கடிகாரம் போல் வேலைப் பார்க்கும் அட்கள் தீர்த்தனர்.

அந்த அறை சுற்றி ஒட்டிருந்த ஸ்டிக்கர் மற்றும் சார்டுகள் உடல் எடை குறைப்பு, மன அமைதிக்கு வழி வகுக்கும் செயல்களை வரிசை படுத்தி இருந்தது எனினும் அவற்றை படிக்க நேரமில்லாத சில ஆட்கள் கால்களில் பம்பரம் கட்டியதைப் போல் வேலை செய்துகொண்டும் சிலர் அரட்டை அடித்துக்கொண்டும் இருந்தனர். அப்போது அவசரமாக தனது கேபினுக்குள் நுளைந்த அஃப்சனாவை விழிமறித்தான் சரண்,

“இது தான் அரைமணி நேரத்துல போய்ட்டு வர்ரதா?”.

அஃப்சனா தனது பாவனையை மாற்றிக்கொண்டு.

“மேனேஜர் எதாவது சொன்னாரா ஜி?, சமாலிக்க சொன்னேன்ல......சொதப்பிட்டிங்கலே....”.

சரண் அஃப்சனாவை ஆஸ்வாஸப்படுத்திவிட்டு.

“இங்க பாருங்க மிஸ் அஃப்சனா எதுக்கு இவளோ பயம்? அதெல்லாம் சமாளிச்சாச்சு நீங்க ஏன் லேட்டுனு சும்மா கேஸ்வளா கேட்டேன் அவ்ளோ தான்”.

அவள் ஏதும் கூறாமல் அவளது கேபினை ஆதரித்தாள். சரண் தொடர்ந்தான்.

“ஏம்மா ஒரு தேங்க்ஸ் கூட கிடையாதா?”.

“இவன் கிட்ட சொன்னது என் தப்பு” என்று நினைத்துக்கொண்ட அஃப்சனா அதனை வெளிக்காட்டாமல் “ரொம்ப தேங்க்ஸ் போதுமா?” என்றாள். சரண் தொடர்ந்தான்.

“இதுக்கு சொல்லாமையே இருக்கலாம் அப்புறம் ஜி உங்கலுக்கு ஒரு பார்சல் வந்துச்சு ஸ்னப் டீல ஏதாவது ஆர்டர் பன்னிங்கலா?”

என்று ஒரு ஸ்னப் டீல் லேபில் ஒட்டிய கவரை அவள் முன் வைத்தான். அது ஒரு காவி நிற அட்டைப்பெட்டி, அதை சுற்றி முழுவதும் ஸ்னேப் டீல் என்ற ஸ்டிக்கர் பூசி இருந்தது. முன் பகுதியில் ஒரு சிவப்பு நிற மார்கறால் எழுதி இருந்தது. குழுக்கி பார்த்தாள், அதர்க்குள்ளும் சில அட்டைப்பெட்டிகள் இருப்பது போல சத்தம் கேட்டது. அதன் பின்னால் திருப்பி பார்த்தாள், ஒரு லார்ஜ் வித் செல்லோ டேப்பினால் ஒட்டப்பட்டிருந்தது. அதை அவள் திறக்க முயர்ச்சித்த போது சரண் குறுக்கிட்டான்.

“ஜி மேனேஜர் வராரு.....”.

அவன் விருவிரு என தனது கேபினுக்கு ஓடினான். அஃப்சனா அந்த பெட்டியை எடுத்து தன் காலுக்கு அடியில் உள்ள டேபிளுக்கு அடியில் தள்ளிவிட்டு கணினியில் மும்மறமானாள்.

*******************************
 

smteam

Administrator
Staff member
#2
சாம்வேல் ஒரு கருப்பு ஜர்க்கின் வெள்ளை டி-சர்ட் கருப்பு பேன்ட்டுடன் தனது உருவத்தை சரி செய்துக்கொண்டான். தனது ஹேன் பேக்கில் இருந்து ஒரு ஐக்கானிக் மையை எடுத்து தன் கண்களை சுற்றிப் பூசிக்கொண்டான். பின் பையில் இருந்த ஜெல்லினை தன் கைகளில் பறப்பி தலையில் தேய்த்து, ஒரு சீப்பை வைத்து வகுடெடுத்து சீவி, பின் தலையை மட்டும் முடி அனைத்தும் மேல் நோக்கி நிற்குமாறு செய்தான். பின் தனது மொபைலை எடுத்து சில போட்டோக்களை ஒரு நம்ருக்கு வாட்சப் செய்தான். தன் பையில் இருந்து ஒரு கருப்பு செல்லோ டேப்பினை எடுத்து அதில் ஒரு சிறு துண்டை வெட்டி தனது வாயில் ஒட்டிக்கொண்டான். தன் ஜர்க்கினை கழற்றி ஒரு கோர்ட்டை உடுத்தி, அந்த ஆடிசனில் வரிசையாக நின்றிருந்த ஆட்களில் கடைசியாக போய் நின்றான். அந்த பில்டிங்கின் ஓரத்தில் ஆட்களின் கூட்டம் அலைமோத ஒரு ஓரமாக லேம்ப்போஸ்டின் பக்கமாக தனது நண்பர்களுடன் வந்து நின்றான் விக்கி. ராம் குமார் விக்கியை நோக்கி பேசத் தொடங்கினான்.

“இங்க தான நிற்கிறான் இப்பவே போட்டுடலாம் எதுக்கு நைட்டு என்ன பன்னனும்னு சொல்லு விக்கி”.

“கொஞ்ச தூரம் தள்ளி ஒரு குப்ப மேடு இருக்குது ஆள் நடமாட்டம் அவலவா இருக்காது, அங்க நிற்கிறோம்”.

ராம் குமார் மட்டும் அதே இட்த்தில் நிற்க மற்ற அனைவரும் குப்பை மேடு நோக்கி சென்றனர். ராம் குமார் மட்டும் சாம்வேலின் அருகில் சென்றான்.

“உங்க பேரு ஆண்டர்சன் சாம்வேல் தான?”.

சாம்வேல் தனது தலையை ஆட்டினான், பின் ராம் குமாரை தனது ஆள்காட்டி விரலால் குறிப்பிட்டு ராம் குமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். ராம் குமார் தொடர்ந்தான்.

“நீங்க சாம் தான நான் விக்கி ப்ரென்ட் ஐ மீன் விக்னேஷ்வரன் ப்ரென்ட்”.

சாம்வேவிலின் முகம் பரிட்சயமானது போல் மாற விக்னேஷை நோக்கி தனது பெருவிரலைத் தூக்கி இரண்டு முறை கைகளை மேலும் கீழும் ஆட்டினான். ராம் அவனது சைகையினை கவனமாக பார்த்துவிட்டு...

“யாரு விக்கியா? அவன் இங்க கூட்டமா இருக்குனு கொஞ்சம் தள்ளி நிக்கிறான், என்னைய மட்டும் உங்கள கூட்டிட்டு வர சொல்லி அனுப்புனான்”.

என்று தன் கையை விக்கி நிற்க்கும் திசை நோக்கி காட்ட, இருவரும் அவர்களை நோக்கி சென்றனர். சாம்வேல் அந்த இடத்தை சுத்தி பார்த்தான். சுற்றி யாரும் இல்லை, அந்த இடம் அமைதியின் மரு உருவமாகத் தெரிந்தது. அவன் விக்கியின் முன் வந்து நின்றான். சாம்வேலின் முன் வந்து நின்ற விக்கி,

“என்ன கூப்பிட்டதும் வந்துட்ட.......எதுக்கு கூப்பிட்டோம்னு தெரியுமா?”

டேவிட் சாம்வேலை பின்னால் இருந்து பிடித்துக்கொள்ள விக்கி சாம்வேலின் வையிற்றில் எட்டி உதைத்தான். சாம்வேல் வலி தாங்காமல் கீழே விழுந்தான். டேவிட் விழுந்தவனை மீண்டும் இழுத்து பிடித்துக்கொள்ள விக்கியின் கைகள் சாம்வேலின் கைகளை நோக்கி பாய்ந்தது. சாம்வேல் வழி தாங்க முடியாமல் சுருண்டான். இதை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் தன் மொபைலை எடுத்து போலீஸ்க்கு தெரிவித்தார். டேவிட் சாம்வேலை மீண்டும் இழுத்து பிடித்தான், விக்கி அவனை குத்த வந்த போது சாம்வேல் அதை சட்டென தடுத்து டேவிட்டையும் விக்கியையும் தள்ளிவிட்டு ஒரு கூட்டத்திற்க்குள் சென்று மறைந்தான். விக்கியும் அவனது நண்பர்களும் ஓடியவனை துரத்த முயல சட்டென அவர்களை வழி மரித்தது அந்த போலிஸ் ஜீப். அதில் இருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர்,

“ஒருத்தன விடாம வண்டில ஏத்து........”

“சார் ப்லீஸ் நாங்க போகனும்.....”

விக்கி கத்த அதை பொருட்படுத்தாமல் அனைவரையும் தனக்குள் அடைத்து அந்த ஜீப் ஸ்டேசன் நோக்கி விரைந்தது. விக்கி மற்றும் அவனது நண்பர்கள் செல்னுக்குள் இருக்க இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து விக்கி முன் நின்றார்.

“நான் எதுவுமே கேட்க மாட்டேன் நீங்கலா சொல்லனும்........”

“எனக்கு ஒரு போன் பன்ன்னும் சார்”

“நான் எதுக்கு அவன அடிசிங்கனு கேட்டேன்?”

திடீரென போலிஸ் ஸ்டேசனுக்கு போன் வர, இன்ஸ்பெக்டர் வெலியில் சென்று அட்டன்ட் செய்தார்.

“ஹலோ ஆர் த்ரீ போலீஸ் ஸ்டேசன்.”

“.........................................”

“இல்ல சார் இன்னும் விசாரிக்கல”

“..........................................”

“ஓகே சார் நோ ப்ராப்லம்”

போன் ரிசீவரை கீலே வைத்து விட்டு திரும்பினார்.

“கான்ஸ்டபில் அவனுங்கல ரிலீஸ் பன்னு யா....”

*****************************

விக்கியும் அவனது நண்பர்களும் சாம்வேலின் வீட்டுக்கு ஒரு தெரு தள்ளி நின்றிருந்தனர். சாம்வேல் இவர்கள் நிற்பதை கவனிக்காமல் தன் வீட்டிற்குள் சென்றான். இதை கவனித்த டேவிட் வேகமாக விக்கியிடம் சென்று,

“மச்சான் வந்திட்டான்....”

விக்கி மெதுவாக தன் நண்பர்களை நோக்கி திட்டத்தை கூறத் தொடங்கினான்.

“இங்க பாரு இன்னைக்கு தான் கடைசி சேன்ஸ் மிஸ் ஆக கூடாது. நான் மட்டும் உள்ள போறேன். நீங்க மூனு பேரும் வீட்டுக்கு மூனு பக்கமா நின்னுக்கோங்க. நான் அவன பிடிச்சாலோ இல்ல அவன் என்னைய எதாவது பன்னாலோ சத்தம் போடுறேன். அப்படி நான் சத்தம் போடலேனா அரைமணி நேரத்துல நீங்க மூனு பேரும் உள்ள வந்திடுங்க.”

அனைவரும் தலையாட்ட விக்கி மெதுவாக அந்த வீட்டிற்க்குள் சென்றான். அவன் நண்பர்கள் மூவரும் அவர்களது இட்த்தில் போய் நின்றனர். விக்கி சாம்வேலின் ரூம் நம்பரை நினைவிற்க்கு கொண்டுவந்து மெதுவாக அந்த ரூம் நம்பருக்கு சென்றான். பொருமையாக உள்ளே சென்ற அவன் உள்ளே ஒரு கருப்பு உருவம் படுத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான். அவன் மெதுவாக அதற்கு அருகில் சென்ற போது அந்த இடம் அவனுக்கு இதற்க்கு முன் பழக்கப்பட்ட்து போல் இருப்பதை உணர்த்தியது. அந்த உருவத்திற்கு அருகில் அவன் மௌனமாக அதை திருப்பியபோது அதிற்ந்தான். அது அஃப்சனா ரக்மான். செய்வதறியாது திகத்துப் போனான். அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டு கதரினான்.

“அஃப்சனா......இங்க பாரு.......எப்படி இங்க வந்த........பேசு மா....”

அவளை உழுக்கினான். பதில் இல்லை. அவனது உடல் குளிர்ச்சி ஆவதை உண்ர்ந்தான். ஒரு பெரிய நிழல் அவனது உருவத்தை மறைத்தது. சட்டென தலையில் ஏதோ வேகமாக வந்து அடிப்பது போல் இருந்தது. பார்வை கலங்கி கீழே சரிந்தான். அவன் கண் விழித்து பார்த்த போது.....

அந்த அறை வோல்டேஜ் பிலக்ச்சுவேசன் காரணமாக தனது மின்விளக்குகளை மின்மினி பூச்சிபோல் மினுங்கவிட்டது. அதில் ஒரு லேன் லைன் மேஜையில் படர்ந்திருக்க அதன் ரிசீவர் தரையில் இருந்து தன்னுடன் இனைக்கப்பட்டிருந்த ஸ்பிரிங் வயரின் உதவியுடன் குதிக்க முயற்ச்சி செய்தது.

ஒரு நாற்காளி தன் பின் இரு கால்களால் தரையை மிதித்து முன் இரு கால்களை காற்றில் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. உருண்டுகொண்டிருந்த கோக் பாட்டில் மின் விளக்கின் வெளிச்சத்தை இரட்டித்தது. விக்கி ஒரு நாற்களியில் கட்டப்பட்டிருந்தான்.

உடலின் மா நிறத்தை குருதி சிவப்பு சாயம் பூச, அவனது கண்கள் தங்களது பழக்கத்தை மாற்றாமல் அங்கும் இங்கும் அலை மோதியது. கண்ணின் கருவிழிகள் தேங்கி இருந்த கண்ணீரில் சிரமப்பட்டு நீந்தியது. மேலும் அந்த காயத்தில் இருந்து குருதி வெளிப்பட அவன் அதை தன் கைகளால் துடைத்துவிட்டு நிமிற்ந்தான். அவன் கண்கள் கலங்கி இருந்தன. சுயநினைவிற்கு வர முயற்ச்சி செய்து தோற்றான்.

அவன் முன்னால் அஃப்சனா இன்னும் மயக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் கிடத்தப்பட்டிருந்தாள். இருளில் இருந்து வந்த அந்த நிழல் அவளை மறைக்க வெளிப்பட்டான் அந்த வினோத மனிதன். அவனது கண்கள் முழுவதும் ஒரு மை பூசப்பட்டு கண்ணீரில் நனைந்து கன்னத்தில் வடிந்தது. தலைமுடி ஒவ்வொன்றும் தனித்தனி நட்டுவைத்ததைப் போல் மேல் நோக்கி எழுந்து நின்றது.

அவன் வாயில் ஒரு கருப்பு நிற செல்லோ டேப்பை ஒட்டி இருந்தான். வெள்ளை டீ சர்ட்டு அணிந்து அதில் சில ஆங்கில வாக்கியத்தை நிரப்பி இருந்தான். அதற்க்கு மேல் ஒரு கருப்பு ஜர்க்கின் மூட காவி நிற பேன்ட் அணிந்து, காலின் கட் ஷூ தரையில் மூழ்க அவளது பக்கத்தில் வந்து நின்றான். அவனது சாயல் விக்கியிற்கு சாம்வேலை நினைவு படுத்தியது.

அவன் அஃப்சனாவின் கால்களை பிடித்து இழுத்து அவளது உடலை ஓரமாக வைத்துவிட்டு, ஒரு நெய்ல் கட்டரின் பாட்டில் ஓப்பனரைத் திறந்து அதை விக்கியின் கண்களுக்கு அருகில் இமைகளில் உறசுமாரு வைத்தான். விக்கி சிரமப்பட்டு தன் வாயை அசைத்தான்.

“யார் நீ?”

அந்த வினோத மனிதன் ஒரு பேப்பரில் சில வாக்கியத்தை எழுதி விக்கியின் முன் நீட்டினான். விக்கி அதை உத்து பார்த்த போது அதில் எழுதி இருந்த வாக்கியம்.

‘டேப் பேஸ்” (TAPE FACE)

(தொடரும்......)


 

sridevi

Well-known member
#11
storyname differenta irukku(y)(y)
அப்போது அதன் வழியை ஒரு சிறிய சிவப்பு நீர் தேக்கம் கடலாக தெரிய, தன் வழியை மாற்றிக்கொண்டு வேறு வழியாக சென்றது. அந்த சிறு சிவப்பு கடல் தனது கொள்ளலவை பெருக்க அதில் விழுந்த சிவப்பு துளிகளை பயன் படுத்தியது. அந்த சிவப்பு துளிகள் அங்கு நாற்காளியில் கட்டி வைக்கப் பட்டவனின் நெற்றிக்காயத்தில் இருந்து வெளிப்பட்டு அவன் மூக்கு வழியாக வழிந்து தரையில் விழுந்து கடிகாரத்தின் நொடிமுள் போல நிசப்தத்தை கலைத்தது.
nalla varnanai(y)(y)afsana deada.......... karuppu uruvam yaaro........ nice thrilling ud...... tapemana kiiller name interesting(y)(y)(y)
 

Today's birthdays

Latest profile posts

Shanthini Dos's Un Uyir thaa..! Naam Vazha..! Next epi updated..read and share ur valuable views
next episode of "Mayanathi Suzhal" is updated....Happy reading...
ருத்ராங்கி வருவாள்
ஹாய் மக்களே போஸ்டட் 7த் எபி மன்னவன் கரம் பிடித்தேன்.
Devi's Neenga Kanale next epi posted..read and share ur valuable views makka
எனதன்புத் தோழமைகளே! செங்கல் பூக்களின் அடுத்து இரு அத்தியாயங்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. (சு)வாசித்து உங்களது கருத்தை எனக்குச் சொல்லுங்கள்!
Hi dearies, uyir vidum varai unnoduthan-- epi 4 posted :)
kanadharva logaa - 12 updated friends.. marakkaama unga karuththai sollunga pa....
Latest ah memes kadai open panni irukken.... Vanga pazhagalam...
https://www.smtamilnovels.com/community/index.php?threads/little-hearts-memes-shop-vanga-pazhagalam.305/
(Ithu Athula....) doubt eh venam.... Athe than Ithu.. 😉😉
அன்புடையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு மக்களே:) படிச்சுட்டு என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிடுங்க:)

Advertisements

Online statistics

Members online
91
Guests online
1
Total visitors
92