வெகு அன்னியமாய், சுண்ணாம்புக் காளவாயாய், சுடும் பாலைவனமாய், செத்த விலங்கின் சடல பிண்டமாய் தோன்றியது வாணிக்கு.
ஆனால் எல்லாம் ஒரு நொடிதான், தன் மீது அன்பாயிருந்த தன் குழந்தை பருவ நட்பின் மீது யாருமற்ற நிலையில் அவனுக்கு வந்துவிட்ட ஒரு எதிர்பார்ப்பிற்காக,
ஒரு வறண்ட நில வழிப் பயணி கண்ணில் பட்ட கானல் நீரைக் கண்டு சந்தோஷப்பட்டுவிட்ட தடுமாற்றத்துக்காக,
அவனது உழைப்பின் கனியை, அவன் கனவுகளை அருவருப்பாளாமா இவள்?