Kaadhalaam paingili .The End

Ratio thaaney sis ranking la paarpaanga... athoda ithu reported cases basela vaikura stats...inga report seyrathu one in millon incidents ah irunthaaley athisayam athai thaan mean seytheyn... UK US innum sila european nationsla child abuse na public kulanthai alutha kooda report seyvaanga... kulaanthaiye helpline ku call seythaa action kandipa edupaanga...kid keezha vilunthutunnu hospital two times poitaa parents mela enquiry aakidum...
inga parents kulanthaiya thooki pottu adi veluthaalum yaarum ketka mudiyaathu... naan counsellingla paartha girl baby sex abuse incidents ethilayum parents sambanthapatta aanai kandichathu kooda kidaiyaathu...rakasiyamaa vachuka thaan try pannuvaanga... veliya therinjuda koodaathu..athu thaan prime care ah irukum... infact schools la irunthu ella idathilum athu thaan sarinnu nambikai iruku... oru paiyan oru kid ai school la abuse seythathukku avanga teacher antha paiyan mela action edukanumnu sonnathuku mathavanga athu eppadi appadi solvaangannu sandai pottellam paarthuruken... inga appadi thaan...kadhal veliyidai shrusti character..athellam real incident... she was sexuly abused by her own elder brother... avan avalai vida 8 yrs ennamo moothavan... many number of times ithu nadakavum veetla parents ivalai kondu 3rdla irunthu hostel la vittutaanga...paiyanai kandikavey illa...vishayam veliya therinjudumaam.. inga ulla culture barrier appadi. niraiaa naama maara vendi iruku... but konjam konjamaa maaruvamaa irukum. btw so sweet of you... Child abuse line la ivlavu concerned ah iruka teacher studentsku blessing:love::love::love:
That’s true Anna but parents should talk to their kids about child abuse and teach them how to protect themselves. First teach them diff between good touch n bad touch and who can allowed to see or touch their private parts ... I used to explain all these things to my little one when she was 3 years old.. train them to oppose such incidents.., Parents have to create a comfort zone with their children where they can share everything with their parents ...

I am very emotional person as mother of 2 girls. In recent days hearing lots of child abuse news that makes me very upset.

காட்டில் மிருகத்துடன் வாழும் போது கூட மனிதன் இந்த அளவிற்கு கேடுகெட்டு நடக்கவில்லை என்று நினைக்கிறேன் இப்ப தான் நாகரிகம் வந்த பின் இப்படி பட்ட ஈன செயல்கள் நடக்கிறது. நெஞ்சு பொறுக்கவல்லை இந்த நிலைகேட்ட மனிதர்களை நினைக்கையில்
 
காதலாம் பைங்கிளி ரிவ்யூ ( என் பார்வையில்):

கதை:
ஜாதி என்ற ஒரு பிரச்சினையால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் இரு நாயகர்களின் வாழ்வில் வரும் இரு பெண்களின் தன்னலமற்ற அன்பினால் அவர்களின் வாழ்வு அழகாக மாறுவதை அழகான காதல் பின்னணியில் பின்னப்பட்ட பின்னி பெடலெடுக்கும் கதை.

துள்ளலும் துடிப்புமாக இளமை போக்குடன் மஜாவாக ஆரம்பித்து மெது மெதுவாக அதன் தீவிரத்துள் பல திருப்பங்களுடன்,சுவாரஸ்யமாக , சிறிதும் லயம் குறையாமல் பயணித்து,நம்மை இருக்கை நுனியிலேயே வைத்திருந்து, நம் நகங்களை பதம் பார்த்துவிடும் நேர்த்தியான நயமான கதை நகர்வு.

கதை நிறைவடையும் போது நம் மனதில் முழு நிறைவையும் அனைவரும் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நிறைவான கருத்தினையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

சமூக நல்லிணக்கத்திற்கு சவாலாகவும் மக்களின் உணர்வுடன் கலந்துவிட்டதாகவும் உள்ளது ஜாதியம்.இதனை கதையில் கையாள்வதும் சவாலான விஷயமே.அதனை மிக அழகாக கையாண்டு, ஜாதியத்தின் தீவிரமான மோசமான விளைவுகளை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்த அதே வேலையில் கதையின் கிரேஸ் எந்த இடத்திலும் அணு அளவும் குறையவில்லை.இது அவரது தனித்துவம்.எழுத்து திறமையின் உச்சம் தொடும் இடமாக எனக்கு தோன்றும்.

மொழி பிரயோகம்:

" இதை நான் சொல்லியே ஆகணும்,இதுக்கு முன்னாடி இவ்ளோ அழகை யாராச்சும் பார்த்திருப்பாங்களா தெரில.இப்போ நான் பார்க்கறேன்.நீ அவ்ளோ அழகு " இப்படி இவங்க மொழிக்கு வாரணம் ஆயிரம் சூர்யா ஸ்டைல்ல தான் ப்ரொபோஸ் செய்யணும்,அதுவே ரொம்ப குறைவுதான் என்னளவில்.
நான் எப்போவும் சொல்றதுதான்.உணர்வுகளைவிட அதை வர்ணிக்கும் மொழி அவ்ளோ அழகா இருக்கும்.நீங்க ஏற்கனவே காதல் என்ற உணர்வை கடந்து வந்தவரா இருந்தா இவங்க மொழில காதலை படிச்சப்பறம் மீண்டும் காதலுக்குள்ள பயணிக்கும் போது முன்னை விடவும் ரசனையா உணர்வீங்க அதே உணர்வை.இது காதல்னு இல்ல.எல்லா உணர்வுக்கும் பொருந்தும்.

அழகியல்:

நாயகன் நாயகிக்கு இடையில் உள்ள காதல்னு மட்டும் இல்ல.அம்மா பையன்,அக்கா தம்பி,நண்பர்கள்,குழந்தை etc,இப்டி எந்த உறவா இருந்தாலும் அவங்களுக்கு இடையில் உள்ள இணக்கம்,இழைவு , உறவை இன்னும் பலமாக்கும் அவங்க குடுத்துக்குற இடைவெளி இதெல்லாம் படிக்க படிக்க திகட்டாது.அவ்ளோ ரசனையா கட்டமைச்சிருப்பாங்க. நானும் என்னை சுத்தி இருக்கறவங்ககிட்ட இப்டி ஒரு அழகான உறவு நிலையை ஏற்படுத்திக்கணும்னு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும்.படிக்கறவங்க தன்னை சுத்தி உள்ளவர்களை நல்லா நடத்தணும்னு மனசுல விதைக்கிற எந்த ஒரு படைப்பும் ஆகச்சிறந்த படைப்பே.இதுதான் சமூக மாற்றத்தின் முதல் படி.அந்த வகையில் இந்த படைப்பு ஆகச்சிறந்த படைப்பு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

வாழ்வியல்:

கருத்து சொல்றேன்னு அட்வைஸ்லாம் எங்கயும் இருக்காது.கதையோடவே இழைஞ்ச மாதிரி நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான ,சின்னதும் பெருசுமான அத்தனை வாழ்வியல் விழுமியங்களும் இருக்கும்.நம்மையும் அறியாமை நமக்குள்ள ஒரு ஆரோக்யமான மனநிலையை கட்டமைக்கும் இவரோட எல்லா படைப்புகளுமே.

காதல்:

காதல் ரொம்ப அழகான விஷயம்.அதை ரொம்ப தப்பா புரிஞ்சுக்கறதாலதான் சமூகத்துல நிறைய பிரச்சனைகள் தீராம இருக்குனு எனக்கு தோணும்.இதுதான் காதலாம் பைங்கிளினு நாயகிக்கு மட்டும் இல்ல,படிக்குற எல்லாருக்கும் காதல்னா எவ்ளோ அழுத்தமான ஆழமான அழகான விஷயம்னு அழகா பதிய வச்சிருப்பாங்க.

மொத்தத்தில் காதலாம் பைங்கிளி அழகான பயனுள்ள நிறைவான காதல் பயணம்.அனைவரும் பயணித்து இன்புறுங்கள்.

வெற்றி:

ஏற்கனவே பல வகைமைகளில் வெற்றி அடைந்துவிட்ட தங்களின் எழுத்து,தேடல் 2018 இலும் வெற்றி பெறுவதோடு, தங்களின் எழுத்து இன்னும் நிறைய நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்று மனமார இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

நன்றிகள்: இக்கதையை தந்தமைக்கு ஸ்வீட்டிக்கும்,இக்கருத்து பகிர்வினை பொறுமையுடன் வாசித்த வாசக நண்பர்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்...
:love::love::love::love::love::love::love:
ரொம்ப ரொம்பவும் அழகான ஆழமான ரிவ்யூ ரஞ்சனி. ரொம்பவும் நிறைவா இருக்குது.
நன்றி

துவக்கம் முதலிறுதி வரை கொடுத்த அனைத்து ஊக்கம் ஆதரவு அனைத்துக்கும் அனேக நன்றிகள்
 
அடுத்த தொடர் எது? எப்போது ? இந்த கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

துளி தீ நீயாவாய் துவங்கிய நிலையிலும் மன்னவன் பேரை சொல்லி, முடியும் நிலையிலும் இருப்பதால் இவைதான் அடுத்த தொடராக இருக்கும்.



'கல்யாணத்தில் சொதப்புவது எப்படி?' இது டைட்டில் இல்லை, ஆனால் இதுதான் கான்சப்ட், இதை வைத்து ஒரு முழு நீள காமடி தொடர் ஒன்றும் எண்ணத்தில் இருக்கிறது.


எந்த கருத்து சஸ்பென்ஸ்னு எதுவும் இல்லாம சிரிக்கிறதுக்காக மட்டுமே இதை எழுத இருப்பதால், சைட் பை சைடா இதை எழுத வெகு ஆசை.

ஆனால் இது எல்லாவற்றுக்கும் முதலில் தேவை உடல் நலம். ஆக என் மருத்துவமனை காரியங்களை எல்லாம் முடித்த பின்தான் எழுதுவதில் கை வைப்பேன்.

எப்படியும் ஓரிரு மாதங்களாவது ஆகும் அதற்கு.

கடவுளுக்கு சித்தமான நாளில் எழுத திரும்பி வருகிறேன்.

உங்களின் அனைத்து அன்புக்கும் ஆவலுக்கும் அனேக நன்றிகள்.❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Unga kadhailaye lollu, kusumbu lam konjam thookala semmaya irukum. Idhula full on romcom a ???? Engaluku gubeer siripu moments neraya kathuru irukunu nenaikren. Seekrame kadhaiyoda ododi vanga.
OnHold epis continue seireengala?super, adhukum waitinggggg...
Health a pakkava restore panitu, chuma jammmunu adutha padaipoda vanga Ma'am.
 
Unga kadhailaye lollu, kusumbu lam konjam thookala semmaya irukum. Idhula full on romcom a ???? Engaluku gubeer siripu moments neraya kathuru irukunu nenaikren. Seekrame kadhaiyoda ododi vanga.
OnHold epis continue seireengala?super, adhukum waitinggggg...
Health a pakkava restore panitu, chuma jammmunu adutha padaipoda vanga Ma'am.
:love::love::love::love::love:
Thankss a lot ji
 

Latest profile posts

banumathi jayaraman wrote on vijianna's profile.
My heartiest birthday wishes to you, Vijianna Sir/Madam
banumathi jayaraman wrote on noordeen781's profile.
My heartiest birthday wishes to you, Noordeen781 Sir/Madam
banumathi jayaraman wrote on Maria's profile.
My heartiest birthday wishes to you, Maria Sir/Madam
banumathi jayaraman wrote on manomithran's profile.
My heartiest birthday wishes to you, Manomithran Sir
banumathi jayaraman wrote on hameetham's profile.
My heartiest birthday wishes to you, Hameetham Sir/Madam
banumathi jayaraman wrote on divya75's profile.
My heartiest birthday wishes to you, Divya75 Madam
banumathi jayaraman wrote on Amarnath's profile.
My heartiest birthday wishes to you, Amarnath Sir
ஹாய் நட்பூஸ்,
இதோ “உனது விழியில் தொலைத்தேன் பெண்ணே!” ஏழாவது அத்தியாயம் பதிவிடுகிறேன் . படித்துவிட்டு உங்களின் கருத்தை என்னுடன் பகிருங்கள். உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
காதலாம் பைங்கிளி வைத்து நிறைய gameவிளையாடி இருக்கோம், இப்ப இங்க ஒரு game. வாங்க விளையாடலாம்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/vaanga-vilaiyaadalaam.1898/
meme பார்க்க பிடிக்கும்னா இந்த லிங்லை ஒரு டைம் பார்த்துக்கோங்க ஃப்ரெண்ட்ஸ், வச்சு செஞ்சுருக்காங்க மக்கள்
https://www.smtamilnovels.com/community/index.php?threads/kaadhalaam-paingili-memes.186/

Advertisements

Latest Episodes