• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Kaadhalaam Paingili... Ungal Paarvaiyil

Anna Sweety

Author
Author
#1
காதலாம் பைங்கிளி வாசிக்கும் உங்களிடம் இருந்து வந்த கதைப் பற்றிய பார்வைகள், கருத்துக்கள் என்னை தொட்டவிதத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ஃப்ரெண்ட்ஸ். இது பற்றி நீங்கள் எதை பகிர்ந்து கொள்ள விரும்பினாலும் செய்யுங்கள், தெரிந்திட காத்திருக்கிறேன்.
 

Anna Sweety

Author
Author
#2
தன் உயிரையும் பணயம் வச்சு ,அடுத்தவங்களை காப்பாத்த நெனைக்குற ,தன் முடிவுல அடுத்தவங்களோட தலையீடு வர்றதையே அடிமைத்தனம்னு நெனைக்குற,இன்னும் எத்தனையோ நல்ல குணங்கள் கொண்ட ஒரு மனிதனை கூட ஜாதி உள்ள புகுந்தா எவ்ளோ குரூர மிருகம் போல மாத்திரும்னு சொல்லிருக்கீங்க. முதல்ல என்ன இப்டி ஒரு முரண்னு தோணுச்சு, யோசிச்சு பார்த்தால் இது முகத்தில் பளார்னு அறையும் உண்மை.லிக்கர்க்கு நிகரா , தெளிவான சிந்தனையை மழுங்கடிச்சு ,அடிப்படை மனிதத்தன்மை கருணைலாம் காத்துல கரைய வச்சிருது...

Siva Ranjani..

கருணாகரன் கேரக்ட்டர் மூலம் நான் சொல்ல விரும்பியது இதைத் தான்.

அதை அப்படியே grasp செய்து சில வரிகளில் நச்சுன்னு சொல்லீட்டீங்க நீங்க...
Thanksssssssssssss 💖💖😍😍😍😍💖💖💖😍😍😍

நான் அறிந்த பலரது அப்பாக்களை இப்படியாக பார்த்திருக்கிறேன். பாசம் நேர்மை தன்மை, தெளிந்த சிந்தனை சமூக அக்கறை என எல்லாம் இருக்கும்...

"திருமணத்தை தவிர எதற்கும் ஜாதி பார்க்க மாட்டேன்... "

இது நான் அப்படி பட்டவர்கள் சொல்லி காதில் கேட்ட வார்த்தைகள்தான்.
ஏன் அப்படி என்றெல்லாம் கேட்டுப் பார்த்திருக்கிறேன்.

நம்ம ஜாதின்னா ஒரே பழக்க வழக்கம் உணவு முறை எல்லாம் இருக்கும் என்பதுதான் சொல்லப்பட்டவைகளில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய காரணமாக இருக்கும்.

அரேஞ்ச்ட் மேரேஜ்னு வர்றப்ப... இந்த பார்வை தவறாய் தோன்றவில்லைதான்.

ஆனால் ஏதோ ஒரு சூழல் பெண்க்கும் பையனுக்கும் விருப்பம் என்றான பின், வேண்டாம் எனச் சொல்ல வேறு எந்தக் காரணங்களும் இல்லாத பட்சத்தில் கூட,

ஜாதியைக் காரணமாக்கி, அடித்து நொறுக்குவது அடைத்து வைத்து பட்டினி போட்டு அடுத்த திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பதுன்றது எந்த வகையிலும் குரூரத்தைவிட குறைவான செயலாகப் படவில்லை.

( இப்படி நடக்கும் மிரட்டல் திருமணங்கள் பெரும்பாலும் இவங்க பொருளாதார நிலையை விட ரொம்பவும் பின் தங்கியவனுடனாய் இருக்கும்...

எதுக்கும் இருக்கட்டும்னு லைட்டா விஷயத்தை சொல்லி வைக்கிறேன்னு அவன்ட்ட சொல்லிட்டு
கல்யாணம் செய்து வைக்கிறவங்களும் உண்டு.

இவங்க காசுக்காக மட்டுமே பொண்ணக் கல்யாணம் செய்றவனா இருப்பான் அவன். அப்படினாலும் ஜாதியக் காப்பாத்துனா போதும்னு கல்யாணம் செய்து வைப்பாங்க.

அப்படி கல்யாணம் செய்தவன் என்னைக்கு இந்தப் பொண்ண ஒழுங்கா ட்ரீட் செய்ய? அவ ப்ரச்சனைக்கு அடுத்து பெற்றோரும் உதவிக்கு போக மாட்டாங்க, இப்படி போய் மாட்டும்வாங்க அந்தப் பொண்ணுங்க.)

இதில் படித்த பெற்றோர் படிக்காதவங்க, பணக்காரங்க ஏழை, இந்த குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே இப்படின்னு எந்த பாராபட்சமும் கிடையாது.

இப்போல்லாம் முன்பைவிட ஆணவக் கொலைகள் இந்த விஷயத்தில் அதிகமாகி இருப்பதாய் சொல்கிறது புள்ளி விபரம்.

ஒரு குடிகாரனையோ, வேலைக்கு செல்லாமல் வெட்டியாய் சுற்றிக் கொண்டு இருக்கும் உதவாக்கரையையோ, மனைவியை எதுக்கெடுத்தாலும் வீட்டுக்கு போய் காசு வாங்கிட்டு வான்னு அடித்து அனுப்புபவனையோ, ஏன் அடுத்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பவனையும், வேலை செய்யும் இடத்தில் பணம் கையாடல் செய்பவனையும் கூட

"மாப்பிள்ளை" என சொல்லிக் கொள்ள தயங்காத மக்கள், அடுத்த ஜாதியில் கல்யாணம் செய்வதால் மட்டும் மானம் போய்விடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள் பாருங்கள்

அது தான் என்ன மானம்னு எனக்கு புரியவே மாட்டேங்குது.
 
#3
காதல் கல்யாணத்தையே ஆக்ஸ்ப்ட்பண்றதில்லை sis parents appuram than ஜாதிய பத்தின பிரச்சனை............நம்ம பிள்ளை நம்மள மீற கூடாதுனு...........இதையும் தாண்டி50%of marriages in It field love marriagea than irukku(my opinion)
மாப்பிள்ளை" என சொல்லிக் கொள்ள தயங்காத மக்கள், அடுத்த ஜாதியில் கல்யாணம் செய்வதால் மட்டும் மானம் போய்விடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள் பாருங்கள்
namma pillainu ninaikama society enna ninaikum, mathavanga enna solvangalo endra payam:):):):)
 

Anna Sweety

Author
Author
#4
தேடல் 2018
காதலாம் பைங்கிளி

வெற்றி என்பது யாதெனில்…

1.

My daughter is just 9 now. Last wk I told her this… if you are ABLE to speak up your actions to your mother, then it is correct. The moment you feel something cannot be discussed with mother it is wrong… she understood clearly. This was the conversation bw Kirupa and her mother in காதலாம் பைங்கிளி 2 episodes ago when Kirupa decided to meet Meerut. Thanks Sweety for teaching such ways of life. God bless you!!!!

– ஜெயஸ்ரீ பாலசுந்தரம் on காதலாம்பைங்கிளி 5 வது அத்தியாயம்.

2.

நிறைய விஷயம் வாணி பத்தி சொல்லி இருந்தாலும் இந்த எப்பில எனக்கு மனசு full இருக்றது அவங்க parents ஓட love story தான். என்ன ஒரு understanding அந்த lovely couplesகிட்ட. ரொம்ப ரசிச்சு திரும்ப திரும்ப படிச்சேன் அந்த பார்ட்ட.

I don’t no whether I can tell my love story to my daughter but will definitely give her your books in her teenage to understand about love..

The happiness u give us through ur writings is something which cannot be compared to anything else..

– சகிலா பாஷா on காதலாம் பைங்கிளி 8வது அத்தியாயம்.


3.

இது ஒரு நிகழ்வு..


சில தினங்கள் முன்பு chatல் “நாங்கல்லாம் எங்க க்ளாஸ்ல எல்லோருமா உட்காந்து காதலாம் பைங்கிளி படிப்போம்கா” என கல்லூரி மாணவி ஒருவரிடமிருந்து மெசேஜ்.

இதில் இந்த நேரத்தில்தான் தளத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.

அக்கா வோட்டிங் வெள்ளிக்கிழமை வரைக்கும் இருக்குமா? எங்களுக்கு பரீட்சை நடந்துட்டு இருக்கு, வெள்ளிக் கிழமை கடைசி பரீட்சை முடியவும் நாங்க ஓட் செய்யணும்

என ஒரு கேள்வி அந்த மாணவியிடமிருந்து.

சொன்னது போல் வெள்ளிக் கிழமை கடைசிப் பரீட்சை முடியவும் திட்டமிட்டு, தளத்தில் இதற்கென பதிவு செய்து வாக்களித்திருக்கின்றனர்.அவங்க ரெஜ் ஐடியெல்லாம் எப்படி முடிவு செய்தாங்கன்னு சொல்லி இருந்தாங்க பாருங்க…

நான்:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:


It was a celebration.

_ எழுத்தாளராக என்ன வேண்டும் எனக்கு?

எங்கோ ஒரு மூலையில் எனது எழுத்துக்கள் ஏதோ சிலரை சிரிக்கவும் மகிழவும் சுகிக்கவும் செய்விக்க வேண்டும். அது அரைசதம் என்றால்,

நான் வாழும் பரந்துபட்ட மனித சமூகத்தில் ஒரே ஒரு நன்மையையாவது என் வார்த்தைகள் விதைத்துச் சென்றால், என் எழுத்துக்கள் ஒரே ஒருவருக்கேனும் ப்ரயோஜனமாய் இருந்தால்
அப்போது அது முழு சதமாகிறது.

அந்த வகையில் இப்பொழுதே முழு நிறைவுதான்.


Thank you all
 

Anna Sweety

Author
Author
#5
காதல் கல்யாணத்தையே ஆக்ஸ்ப்ட்பண்றதில்லை sis parents appuram than ஜாதிய பத்தின பிரச்சனை............நம்ம பிள்ளை நம்மள மீற கூடாதுனு...........இதையும் தாண்டி50%of marriages in It field love marriagea than irukku(my opinion)

namma pillainu ninaikama society enna ninaikum, mathavanga enna solvangalo endra payam:):):):)
unmai thaan sis..aduthavanga enna ninaipaangandra tha thaan reasonnu solraanga... bt matha ethanaiyo vishayathil namma pathi aduthavanga enna solraangannu kandukaama ishtam pola thappu seyraangaley...inga ithuku mattum kavalai vanthuduthaam.. vinotham thaan

amaam sis..educated working community..in city...la oralavu love mrg nadakuthu...


Thanksssss for sharing your viewsss sis:love::love:
 

Latest profile posts

அன்பு நட்புகளே, பிழை பொறுக்க வேண்டும். எனது சிஸ்டத்தில் ஏதோ ஒரு கோளாறினால் பழைய பதிவுகளைக் காட்டியது. நானும் போட்ட பதிவையே போட்டு விட்டேன். உங்களிடமிருந்து பின்னூட்டம் வந்த பின்னர் தான் புரிந்து கொண்டேன். தவறுக்கு மன்னிக்கவும். இப்போது செங்கல் பூக்கள் அத்தியாயம் 29 மற்றும் 30 பதிவிட்டு விட்டேன். இவை முற்றிலும் புதியவை ஏனென்றால் இன்று காலை தான் இவற்றை எழுதினேன். படித்து விட்டுக் கருத்தைப் பகிரவும். உங்கள் அன்புத்தோழி
தேடி வந்த தேவதையே அத்தியாயம் 12 போட்டாச்சு படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!
அப்பலோ - 39 விரைவில்...
Porkalathil oru pen pura. (Part-6) posted ...pls read and register ur valuable comments
banumathi jayaraman wrote on Thirunav's profile.
My heartiest birthday wishes to you, Thirunav Sir
banumathi jayaraman wrote on Sowmya's profile.
My heartiest birthday wishes to you, Sowmya Madam
banumathi jayaraman wrote on Manjula's profile.
My heartiest birthday wishes to you, Manjula Madam
banumathi jayaraman wrote on Maniroopa's profile.
My heartiest birthday wishes to you, Maniroopa Madam
banumathi jayaraman wrote on Kani's profile.
My heartiest birthday wishes to you, Kani Sir/Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes