• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Kadhal Neelambari. 11

Brother romba nalla story... Pls continue this... Impressive lines nala impress pannitu tidernu stop pnaitenga le.... Romba naala waiting... Pls continue...[/QUOTE
Brother romba nalla story... Pls continue this... Impressive lines nala impress pannitu tidernu stop pnaitenga le.... Romba naala waiting... Pls continue...
Continue aagumunga. Koncha naan aagumunga
 
அதே நேரம்..

ஆஸ்பிடலில்..

சக்தி வெடிக்கும் எரி மலையாய் அந்த நபர் முன்னாவ வார்த்தைகளை லார்வாக்களாக்கி பொசுக்கிக் கொண்டிருந்தான்.. திரும்பின நொடியே அவன் டாக்டர அடையாளம் கண்டுக்கிட்டதால ஆவேசமா சொன்னான்..

''கல்வியவும்,மருத்துவத்தையும் சேவையா பண்ணினதும்.. டாக்டரையும்,ஆசிரியரையும் தெய்வங்களா பாத்த மனோ பாவமும் போன தலை முறையோட மலை ஏறிடுச்சு.. நீங்க பண்றது பிசினஸ்.. இதுல வாடிக்கையாளனா நாங் கேக்கற கேள்விகளுக்கு பதில் சொல்லி திருப்திப் படுத்த வேண்டியது இந்த ஆஸ்பிடலோட ஒவ்லொரு ஸ்டாப்ஸ்க்கும் உண்டான கடமை .. கேள்வி கேட்டா கலாட்டவா டாக்டர்?"

இவன் தீப்பிழம்புக் கண்களுக்கும், புடைத்துத் தெறிக்கும் நிலையிருந்த நெற்றி நரம்புக்கும் டாக்டர் பயந்து கலவரமாகி அவசரமாய் செல்லை எடுத்து இயக்கி ஒரு நம்பரைத் தேடி எடுத்து அழைக்க.. சக்தியும் ஆஃப் பண்ணி வைத்திருந்த செல்லை எடுத்து இயக்கத்திற்குக் கொண்டு வந்து ஒரு நம்பருக்கு அழைத்தான்.. ஆனால்,டாக்டர் அழைத்த நம்பர் பிஸியாய் இருக்க சக்திக்கோ உடனே லைன் கிடைத்தது..

".............."

"வணக்கம் டி.எஸ்.பி சார்.. இங்க ஒரு டாக்டர் மெனக்கெட்டு ஸ்டேஷன் எஸ்.ஐயத் தொல்ல பண்ணிட்டிருக்கார்... கொஞ்சம் என்னன்னு கேளுங்க.."

"................."


"சேச்சே.. ஒண்ணும் பண்ணல.. மாலை போட்டிருக்கறதால தான் உங்க வரைக்கும் விசயத்தக் கொண்டு வந்தேன்.. இல்லைன்னா என் வழில டீல் பண்ணிட்டுப் போயிட்டே இருந்திருப்பனே?.. "

".....................'

"இதோ.. குடுக்கறேன்.. நீங்களே பேசிக்கங்க"

சக்தி போனை நீட்டிய படி சொன்னான்..

"ஸ்டேஷனுக்குத் தான கால் போட்டீங்க? உங்களுக்கு எதுக்கு சிரமம்? டிஸ்டிரிக்ட் டி.எஸ்.பியே லைன்ல இருக்கார்.. இந்தாங்க.. "

டாக்டர் பதற்றமாய் போனை வாங்கி காதில் வைத்து 'டாக்டர் நாதன் ஹியர்" என்றதும் மறு பக்கமிருந்து ஆயிரம் வாலா சர வெடிகளாய் வார்த்தைகள் வெடித்தன..

"இதெல்லாம் தேவையா டாக்டர் நாதன்.. எதுக்க இருக்கறவர யாருன்னு நெனச்சீங்க.. ?நேரடியா சுகாதார அமைச்சரையே கூப்பிட்டு பேசற அளவுக்கு பவர் உள்ளவரு.. உங்க நல்ல நேரம் எனனக் கூப்பிட்டார்.. மிஸ்டர் சக்திய சீண்டற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க டாக்டர்.. வெடியறதுக்குள்ள உங்க ஆஸ்பிடலே தரை மட்டமாகறதோட உங்களையும் ஐயர் குளத்துல கண்ட துண்டமா வெட்டிப் பொதச்சுடுவாங்க.. பணிஞ்சு போனா சேதாரம் இல்லாம தப்பிக்கலாம்.. இல்லாட்டி.. உங்க இஷ்டம்..."

கட் பண்ணிட்டார்.. டாக்டர் மூஞ்சி வெளுத்து வேர்க்க போனை நீட்டிக்கிட்டே சொன்னார்..

"ஸாரி மிஸ்டர் சக்தி.. வாங்க.. என் ரூம்ல உக்காந்து பேசலாம்"

சக்தி அலட்சியமா தோளக் குலுக்கிச் சொன்னான்..

"பரவால்ல டாக்டர்.. சில வார்த்தைகள்ல எனக்கு பேஷண்டோட இப்போதைய நெலமையச் சொன்னாப் போதும்.. நான் இப்ப அவரோட பேச முடியுமா?"

"மைல்ட் அட்டாக் தான்.. கொஞ்ச நேரத்துல அவருக்கு கான்ஷியஸ் வந்ததும் நீங்க பேசலாம்.. "

சக்தி தன் கையிலிருந்த ஃபோனை ஆஃப் செய்த படி.யோசனையாய் சுவற்றிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தான்..

12.34....!

======================
இங்கு..

மாலை மணி 4.00..

சோர்ந்து அமர்ந்திருந்த மனுவிடம் சேச்சி மன்றாடிக் கொண்டிருந்தார்கள்..

"என்ட பொன்னு மோளே.. எந்திரிச்சு வாடி.. எல்லாக் கட்டும் கட்டியாச்சு.. இனி மேலா அந்தத் தம்பி வரப் போவுது?நீ வந்து படிப் பாட்டுப் பாடினாத் தான் அப்பா பூஜைய முடிப்பார்.. இல்லேன்னா மனுசன் சாமியாடிடுவார்.. உங்கப்பா குணம் தெரிஞ்சது தான மோளே..? அம்மாவுக்காக எந்திரிச்சு வாடி தங்கம்"

மனுவுக்கு தன் உடலில் சக்தியோடு உயிரும் வற்றி விட்ட உணர்வு.. அம்மா சொல்வதும் நிஜம் தான்.. இப்போது சாந்த சொரூபியாய் காட்சி தரும் அப்பா கோயிலுக்குப் போயிட்டு வந்து இதையே சாக்கா வச்சு மூணு நாளைக்குத் தண்ணியப் போட்டுட்டு ஆடுவார்.. அம்மாவுக்குத் தான் பெரும் வேதனை.. மூலையில் உட்கார்ந்து அழுது தீர்ப்பார்கள்.. அம்மாவுக்காகவாவது தான் போயே ஆக வேண்டும் என்ற முடிவில் தன் தெம்பனைத்தையும் திரட்டி எழுந்தாள்..

நடைப் பிணமாய் வந்தவள் பதினெட்டாம் படி மேல் சின் முத்திரையோடு புன்னகை காட்டும் ஐயப்பனின் படத்தின் நின்று கை கூப்பி கண் மூடினாள்.. நாயர் பூஜைக்கான வேலைகளில் வேகமாய் இறங்கினார்.. பத்திகளை கொழுத்தி தீபங்களுக்கு நெய் விட்டவர் மனு பக்கம் திரும்பி அவள் கண் மூடி நிற்பதைப் பார்த்ததும் எரிச்சலாய்ச் சொன்னார்..

"ம்.. பாடு மோளே...'

பொங்கி வரும் கண்ணீரை வலிந்து அடக்கி தொண்டையச் செருமி தன் பவள வாயைத் திளந்தாள்..

"ஒண்ணாம் திருப்படி..."

குறுக்கிட்டு ஒரு குரல் கம்பீரமாய் ஒலித்தது..

"சாமி சரணம் மனு சாமி.. பாடறத நிறுத்து.. உனக்கு மாலை போட்டு ரெண்டு பேருக்கும் கட்டு நிறைக்காம அதெப்படி படிப் பாட்டுப் பாடி பூஜைய முடிக்க முடியும்? குடுத்த வாக்கு என்ன ஆகறது?"

உடம்பு சிலிர்க்க மனு கண் திறந்து பார்க்க.. சக்தி களைந்த தலையோடு, வேர்வை பூத்த முகத்தோடும் ஆனால் புன்னகை நிரம்ப கம்பீரமாய் கை கட்டிய படி நின்றிருந்தான்..

சக்தி.. அவள் சக்தி.. அளவு கடந்த சந்தோசம் உள்ளுக்குள் வெடித்து மண்டைக்குள் பாய இவ்வளவு நேரமாய் அளவு கடந்த துக்கத்தால் சுருண்டிருந்த அவள் மனம் இந்த சந்தோசத்தை ஜீரணிக்க முடியாமல் சுருள.. அவனை நோக்கி எட்டி வைக்க நினைத்தவள் உடல் ஓத்துழைக்காமல் கால்கள் துவள முன்னே சாய.. மிகப் பெரிய குத்து விளக்கு கூர் முனையுடன் கீழே..

(தொடரும்....
மாம்சு அருமையான தொடர்கதை எங்க ஆளயே காணோம்...!!??
 

Latest profile posts

ஹாய் நட்பூஸ்,
“நேசித்த இரு நெஞ்சங்கள்..” முப்பத்தி எட்டாவது அத்தியாயம்..! பதிவிடுகிறேன்.. படித்துவிட்டு உங்களின் கருத்துகளை மறக்காமல் பதிவிடுங்கள் தோழிகளே.. உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்களின் தோழி சந்தியா ஸ்ரீ
உன் விழிகளில் விழுந்த நாட்களில் 2 போட்டாச்சு ப்ரெண்ட்ஸ்.. உங்க கமண்ட்ஸ்காக வெய்டிங் யா...
first my wishes to u pritu thentell me ur story name and author name Prittu
banumathi jayaraman wrote on Uma Dhanasekar's profile.
My heartiest birthday wishes to you, Uma Dhanasekar Madam
banumathi jayaraman wrote on Subq's profile.
My heartiest birthday wishes to you, Subq Sir/Madam
banumathi jayaraman wrote on PERIASAMY. M's profile.
My heartiest birthday wishes to you, PERIASAMY. M Sir
banumathi jayaraman wrote on Muthuselvigopal's profile.
My heartiest birthday wishes to you, Muthuselvigopal Madam
banumathi jayaraman wrote on Indra's profile.
My heartiest birthday wishes to you, Indra Madam
banumathi jayaraman wrote on dkk's profile.
My heartiest birthday wishes to you, DKK Sir/Madam
banumathi jayaraman wrote on Dhanasudha's profile.
My heartiest birthday wishes to you, Dhanasudha Madam

Today's birthdays

Advertisements

Latest Episodes