4.
காதல் நீலாம்பரி.....!!!
சிவப்பு மையாய்....கோடாய் ....அவள் மூக்கிலிருந்து வழிந்த இரத்தத்தைக் கண்டதும் சக்திக்கு பாதி போதை ஓடியே விட்டது... என்ன மடத் தனம் பண்ணிட்டோம்னு வேதனைப் பட்டான்..
குடி எதையுமே யோசிக்க விடாம பண்ணிடும்னு அவனுக்கும் தெரிஞ்சது தான்.. அதுக்காக இப்படியா?நமக்கு சுகமோ,துக்கமோ ஏதோ ஒரு எழவக் காரணமா காட்டிக் குடிச்சாலும் அடுத்தவங்க சுக, துக்கங்களக் கெடுக்க தனக்கு உரிமையுண்டான்னு யோசிச்சவன் இது யோசிச்சுட்டு நிக்கற நேரமில்லேன்னு புரிஞ்சதும் வேகமா செயல் பட்டான்..
பாக்கெட்ல இருந்து கர்சீப்ப எடுத்து வெளிய வந்து தண்ணில நனைச்சுட்டுப் போனவன் மனுவோட மூக்குல அவ தடுத்தும் கேக்காம மென்மையா வச்சு அழுத்திப் பிடிச்ச படி சொன்னான்..
"முட்டாள்.. பேசாம சேர்ல உக்காந்து தலையப் பின்னால சாச்சுக்கோ.. ரத்தம் நின்ன பின்னால நம்ம சண்டையத் தொடருவோம்"
முதலில் மறுத்தாலும் பிறகு அமைதியாகக் கட்டுப் பட்டு சேரில் அமர்ந்து தலைய பின்னுக்கு சாச்சு யோசிச்சா.. நல்ல வேளையா 'ச்சீ'ன்னுட்டுப் போகலை.. பேசறான்.. அதோட இன்னும் பேசணும்னு சொல்றான்.. அது போதும்.. தன் காதல் உண்மையா, உறுதியா இருந்தா அத அவனுக்குப் புரிய வைக்க முடியும்னு உறுதியா நம்பினா..
"இந்த கர்சீப்ப லைட்டா அழுத்திப் பிடிச்சிக்கோ மனு.. இதோ.. வந்துடறேன்"
எங்க போறான்னு புரியாம இவ அழுத்திப் புடிச்சதும் அவன் வேகமா வெளிய போறத சலனங்கள் சொல்லவும் மறு படியும் தன் சிந்தனைக்குள்ள போனா..
முட்டாள்னு சொன்னானே? அவனா, நாமான்னு யோசிக்கவும் அத்தன வலிலயும்,வேதனைலயும் அவளுக்குச் சிரிப்பு வந்தது..
மை டியர் சக்தி.. உனக்குள்ள ஒரு கோட்டை கட்டி அதுக்குள்ள தனிமைல ஆழ்ந்து போகாம உன்னச் சுத்தியும் இருக்கற உலகத்தையும், உனக்காக காத்திருக்கும் ஜீவனையும் கவனியேன்..
ப்ளீஸ்னு சொல்ல மனசு ஆசைப் பட்டாலும் புத்தி 'சரி தான்.. இப்பத் தான் ராட்சசன் ஆடி அடங்கி இருக்கான்.. மறு படியும் கெளப்பி விடணுமான்னு ஆட்சேபணைய கெளப்புச்சு.. 'சரக் சரக்'னு சத்தம் கேட்க கண்ண முழிச்சுப் பாத்தவ பதறிப் போனாள்..
சக்தி துடைப்பத்த தேடி எடுத்துட்டு வந்து அந்த ரூம்ல கிடக்கிற கண்ணாடி சில்ல பெருக்கிட்டிருந்தான்..
"ஏய்.. என்ன பண்றே?"
"பேசாம அமைதியா உட்கார்.. எந்திரிச்சா இன்னொரு சில்லி மூக்குக்கும் சேதாரம் நிச்சயம்.. நான் பண்ணின ஆபத்தான குப்பையை நானே கூட்டிச் சுத்தம் பண்ணிடறேன்"
சிரிச்ச முகத்தோட சொல்லிட்டு பர பரன்னு வேலையப் பாக்கற சக்தி அவளுக்கு ஆச்சரியமில்ல.. ஏன்னா, அவனுக்கு எல்லா வீட்டு வேலையும் தெரியும்.. சூப்பரா சமைப்பான்.. செய்யணும்னு எறங்கிட்டா எந்த வேலையையும் பூரணமா அனுபவிச்சுச் செய்வான்.. கண்ணாடி சில்லப் பெருக்கறதுலயும் கூட! ஒரு தடவைக்கு ரெண்டு தடவ பெருக்கி பிளாஸ்டிக் முறத்துல அள்ளிக் கொண்டு போயி வெளிய கொட்டிட்டு வந்தான்.. சுத்தியும் ஒரு தடவ திருப்தியா பாத்துட்டு புன்னகையோட அவளக் கேட்டான்..
"ரத்தம் நின்னுருச்சா பேபி?"
அவ கர்சீப்ப மெதுவா எடுத்துப் பாத்தா.. வழியறது நின்னிருக்க 'ம்'னு பதில் சொல்லவும் புன்னகை மாறாம சொன்னான்..
"அப்ப எந்திரி.. இனி எனக்கான நேரம்.. இது என்னன்னு பாரு"ன்னு சொல்ல அவ புரியாம அவசரமா எந்திரிக்கவும் உக்காந்து வலது கால டேபிள் மேல தூக்கி வெக்கவும் தான் கவனிச்சா.. அடிப் பாதத்துல ரெண்டங்குல நீளத்துக்கு கண்ணாடிச் சில்லால கிழி பட்ட காயம்.. தன் ரத்தத்துக்கு பதறாதவ அவன் காயத்துல துளிர்த்த ரத்தப் பூக்களுக்குப் பதறினா..
''ஐயோ சக்தி...."
"உஷ்.. கத்தாத.. ஆத்திரமா சிகரெட்ட கால்ல போட்டுத் தேய்ச்சவன் கண்ணாடிச் சில்லக் கவனிக்கலை.. இது எனக்கு வேண்டியது தான்.. உன் ரூம்ல பாட்டில ஒடைச்சதோட உன்னையும் ரத்தம் வர அடிச்சதுக்கு தண்டனை வேணாமா? கொஞ்சம் மஞ்சள் தூளக் கொண்டு வந்து அது மேல கொட்டு.. சரியாயிடும்"
"காயம் பெருசா இருக்கு ச்க்தி.. ஆஸ்பிடல் போறது நல்லது "
"இதுக்கு அப்பனான காயத்துக்கே சொந்த வைத்தியம் தான் மனு.. மஞ்சள் தூள் ஒரு கிருமி நாசினி.. அத வச்சு விடு.. வீட்ல மருந்திருக்கு.. போய் போட்டுக்கறேன்"
இதுக்கு மேல எது சொன்னாலும் அவன் காதுல ஏறாதுன்னு புரிஞ்சதும் அவ மஞ்சள் தூளக் கொண்டு வந்து ரத்தம் துடைச்சு காயத்துல அப்பின பின்னால கால கீழ எறக்கிட்டு ஒரு சிகரெட்டப் பத்திக்கிட்டே சொன்னான்..
"உட்கார் மனு.. உங் கிட்ட பேசணும்"
அவளுக்குப் புரிஞ்சு போச்சு.. இனித் தான் உண்மையான அட்டாக்க சந்திக்க வேண்டி இருக்கும்ங்கறது.. ஏன்னா,சக்தி முட்டாள் அல்ல.. அதும் இது அவன மையமா வச்சிக் கிளம்பி இருக்கற புயல்.. அவன் கேள்விங்க துல்லியமாயும்,கூர்மையாயும் இருக்கும்.. தெளிவான பதில் சொல்லாம போனா காலம் பூராவும் அவன் உறவை இழக்க வேண்டியது தான்னு அவளுக்குப் புரிய எது வந்தாலும் சரிங்கற திடத்தோட எதுக்க இருந்த டேபிள் மேல உக்காந்து சொன்னா..
"ம்... நா ரெடி.. சொல்லு"
அவள சில நொடி உத்துப் பாத்துட்டு அமைதியா பேச ஆரம்பிச்சான்..
"என்ன உனக்கு எத்தன வருசமா தெரியும் மனு? நம்மோட முதல் சந்திப்பே ஒரு சண்டைல தான் ஆரம்பிச்சது.. உனக்கு ஞாபகமிருக்கா?"
அவள் உள்ளுக்குள்ள சில நொடிகள் பத்து வருசத்துக்கு முன்னையே போயிட்டா.. அதுல ஆழ்ந்து உள்ள போகப் போனவள தடாலடியான அவன் குரல் இந்த உலகத்துக்கு இழுத்துட்டு வந்தது..
"உன்ன ஒரு கேள்வி கேட்டேன் மனு"
"ம்.. நல்லாவே ஞாபகமிருக்கு.. பத்து வருசத்துக்கு முன்ன.."
அதுக்கு மேல அவளப் பேச விடாம கத்தியா எறங்குச்சு அவன் கேள்வி..
"பத்து வருசம்.. யோசிச்சுச் சொல்லு மனு.. நீண்ட நெடிய இந்தப் பத்து வருசத்துல உனக்கு எம் மேல இப்படியொரு எண்ணம் வரக் காரணமா என் ஒரு நடத்தையையாவது உன்னால சுட்டிக் காட்ட முடியுமா?"
அவன் கேட்டு முடிக்கறதுக்கு முன்னையே அவ கிட்ட இருந்து அதிரடியா வந்தது அந்த பதில்..
"ஒரு வேளை அதுவே கூட காரணமா இருக்கலாமில்லையா?"
"புரியல மனு"
அவள் அமைதியாகக் சொன்னாள்..
"என் வாழ்க்கைல எதையுமே உங் கிட்ட மறைச்சதில்ல சக்தி.. பத்தாவது படிக்கைல காலி செஞ்சுட்டுப் போன பக்கத்து வீட்ல கெடந்த பலான புத்தகம் படிச்சதுல இருந்து பிளஸ் டூ படிக்கற போது ஜஸ்டின காதலிச்சு அவனோட ஈரோடு வ.உ.சி பார்க்குக்குப் போயி ரெண்டாவது நிமிசம் மேல அவன் கை போட்டது வரைக்கும் எதையுமே உங் கிட்ட மறைக்கல..
இத்தன வருச வாழ்க்கைல நான் சந்திச்ச பெரும் பாலான ஆம்பளைங்களுக்கு மொதல்ல என் உடம்பு மேல தான் கண்ணு மேயும்.. சின்ன வயசுல இருந்து கூடவே ஓடியாடி வளர்ந்த சொந்த பெரியம்மா பையனே நைட்ல கை போட்ட அதிர்ச்சிய சந்திச்ச உடம்பும் மனசுமிது.. இதையும் மறைக்கல.. அதக் கூட பெத்தவங்க கிட்டக் கூடச் சொல்லாம உங்கிட்டத் தான் சொன்னேன்.. விசயம் வெளிய வராம அவன் கைய முறிச்சு ஊருக்கே துரத்தி விட்டவனும் நீ தான்.. நீயும் எல்லாரையும் போல சராசரி ஆம்பளையா எங் கிட்டப் பழகியிருந்தா நானும் உன்ன லட்சியம் பண்ணாம போயிருப்பேன்..
நான் அழகின்னு உனக்கே தெரியும்.. அப்படிப் பட்ட அழகி பக்கத்துல இருக்கைல சரக்கடிச்சுட்டு புத்தகம் படிக்கறவன் எனக்கு ஆச்சரியம் சக்தி.. நீ சராசரி ஆம்பள இல்லேங்கறதாலையே உம் மேல ஈர்ப்பு வந்திருக்கலாமில்லையா?"