KKMM-3

#1
அடுத்த அரைநாள் பயணத்தை தொடர்ந்து மதராஸிற்குள் நுழைந்தவர்கள் அடையாரை அடைந்து அவர்களுக்குத் தேவையான விலாசத்தை விசாரித்து செல்ல சிறிதான ஓட்டு வீடாக இருந்தது அது..இருவருமாய் சென்று கதவை தட்ட 13-14 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி கண்களை கசக்கியவாறே வெளியே வந்து அவர்களை ஏறிட்டாள்.

“யாரை பாக்கணும்??யாரு நீங்க??”,என இன்னும் மழலை மாறாத குரலில் கேட்டவளை பார்த்தவளுக்கு மனம் உருகிவிட்டது..

“நீ ராணி தானே??”

“ஆமாம் என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்??நான் உங்களை இதற்கு முன் பார்த்ததில்லையே..”

“என் பெயர் அலர் உன் அத்தையின் மகள்.இது மல்லிகா என் உயிர்த்தோழி.நாங்கள் இருவரும் உன்னோடு சில நாட்கள் தங்கிவிட்டு போகலாம் என வந்துள்ளோம்..விவரம் போதுமா உள்ளே போலாமா???'

“அக்கா என அவளை இடையோடு கட்டிக் கொண்டாள்..அப்பா என்னை இப்படி தனியே விட்டுச் செல்வார் என நான் நினைக்கவே இல்லை.அண்ணாவும் எனைப் பார்க்க முடியாத நிலை மிகவும் பயந்துவிட்டேன் அக்கா.நீங்கள் இங்கே வந்தது எனக்கு பெரும் பாரம் குறைந்ததைப் போல் இருக்கிறது..”

“அது தான் நாங்கள் வந்துவிட்டோமே பிறகு ஏன் அழுகிறாய்..பெண்கள் எப்போதும் தைரியமாய் இருக்க வேண்டும் புரிந்ததா??”

ம்ம் சரி அக்கா என வேகமாய் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

அவளை அமர வைத்து சிறிது நேரம் கதைகளைப் பேசிய பின் மூவருக்குமாய் உணவை தயார் செய்து சாப்பிட அமர்ந்தனர்.

சற்று நேரம் இளைப்பாறியவர்கள் சிறியவளை அழைத்துக் கொண்டு காலாற நடந்து வரலாம் எனக் கூறி அவர்கள் இருந்த பகுதியை வலம் வந்தனர்..அனைவருக்கும் ராணியை தெரியும் என்பதால் அவர்களை யார் யார் என விசாரித்து தெரிந்து கொண்டனர்..

“அக்கா இந்நேரம் உங்களைப் பற்றிய செய்தி அந்த ஜான் துரைக்குச் சென்றிருக்கும்..எப்போது என்ன செய்வானோ என பயமாய் இருக்கிறது..”

“ஏன் நாம் என்ன தவறு இழைத்தோம் பயப்படுவதற்கு??”

“அக்கா சத்தமாக பேசாதீர்கள்..வாருங்கள் வீட்டிற்கு சென்று பேசிக் கொள்ளலாம்..”

வீட்டிற்கு வந்தவர்கள் கதவை தாழிட்டு அமர ராணி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தாள்..

“அக்கா என் அண்ணன் இங்கே வர முடியாததிற்கு காரணம் அந்த ஜான் துரை தான்..ஆனால் வெளியில் யாரிடமும் இதைப் பற்றி எதுவும் கேட்டு விடாதீர்கள்..”

“அட பீடிகை எல்லாம் அதிபயங்கரமாக இருக்கிறதே!!!சரி கூறு கேட்போம் அந்த துரையை பற்றி..”

“அவன் இங்கு இருக்கும் கவர்னர் ஜெனரலுக்கு அண்ணன் மகன்..ஜெனரலின் மகனும் இவனும் சேர்ந்து நம் மக்களுக்கு பல அட்டூழிங்கள் இழைத்தனர்..மானியம் என்ற பெயரில் ஏழைகளின் தினக் கூலி அனைத்தையும் பறித்தனர்..அது மட்டுமில்லாமல் இட அபகரிப்பு போன்ற கொடுமைகளையும் செய்து கொண்டிருந்தனர்..

ஓரளவிற்கு மேல் பொறுக்க முடியாத சிலர் எதிர்த்து பேசி விட எங்களின் கண் முன்னே அவர்களில் இருவரை கொன்றுவிட்டனர்..அதில் ஒன்று என் அண்ணணின் நெருங்கிய தோழனான வீரா அண்ணணின் தந்தை..விடயம் அண்ணணின் படைக்கு எட்டி விட வீரா அண்ணன் பழி தீர்க்க கிளம்பிவிட்டாராம்..

அண்ணன்தான் அவரைத் தடுத்து அமைதிப்படுத்தி தடுத்து வைத்தாராம்..ஆனால் சில திங்கள் கழித்து வீரா அண்ணாவிற்குத் தெரியாமல் அண்ணணே இங்கு கிளம்பி வந்துவிட்டார்..வந்தவர் செய்த காரியமோ யாரும் எதிர்பாராதது நேரே அவர்களின் இருப்பிடத்திற்குச் சென்றவர் அந்த ஜான் துரையையும் அவன் தம்பியையும் கொன்று வீழ்த்த எண்ணி தன் வாளால் தாக்க அந்த ஜானின் தம்பி மட்டும் இருந்ததால் அவனைத் தான் கொல்ல முடிந்தது..

சரியாய் அந்த நேரம் உள்ளே நுழைந்த அந்த ஜானுக்கும் அண்ணணுக்கும் கடும் சண்டையாம் அதில் அவன் அண்ணணின் முகத் துணியை பிரிக்க தப்பித்துச் செல்லும் நேரம் அண்ணனின் முகத்தை கண்டு கொண்டானாம்..அவன் ஓவியம் வரைவதில் தேர்ந்தவன் என்பதால் அப்படியே தத்ரூபமாய் வரைந்து அனைத்து அதிகாரிகளிடமும் கொடுத்து விட்டான்..

இப்போது இருக்கும் நிலையில் அண்ணனை கண்டதும் சுடும் உத்தரவு தான்..இருப்பினும் நம் காவல் அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு மறைமுகமாய் உதவி வருவதால் அண்ணன் தப்பித்து கொண்டிருக்கிறார் இல்லையெனில் எப்போதோ நான் அநாதை ஆகியிருப்பேன்..”

“ம்ம் சரியான பொருத்தம்தான்”,என மல்லிகா அவளிடம் சமிக்ஜை செய்ய அவளை பார்வையாலே எச்சரித்தவள்,

“சரி அதன் பின் உன் அண்ணன் இங்கு வரவே இல்லையா??”

“ஏன் இல்லை..அவர்களுக்கு பயந்தவரா என் அண்ணன் மாறுவேடத்தில் இரண்டு மூன்று முறை வந்து சென்றார்..இப்போதும் கண்டிப்பாக வர முயற்சி செய்வார் ஆனால் அப்பா இறந்ததால் அவர் வருவார் என அந்த துரை எதிர்பார்த்திருக்க கூடும் இல்லையா எனவே வராமல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது..”

“ம்ம் அதெல்லாம் வர மாட்டார்..என்றவள் அவனை சந்தித்ததை பற்றி அவளிடம் கூறினாள்..ஆனாலும் நீ பார்ப்பதற்குத் தான் சிறு பெண் எவ்வளவு நன்றாய் பேசுகிறாய்..?”

ம்ம் சிறு வயதிலிருந்தே அண்ணன் நிறைய கதைகள் கூறிதான் வளர்த்தார்..பெண் என்றால் மென்மை மட்டும் அல்ல வீரமும் கலந்தே இருக்க வேண்டுமென்று..”

“ம்ம் சரி தான் சரி நீ உறங்கச் செல்..நீண்ட நேரம் ஆகிவிட்டது..போ “,என ராணியை உறங்க கூறிவிட்டு வந்தவளை பார்த்து மல்லிகா ஏளனமாய் சிரித்தாள்..

“என்ன டீ சிரிப்பெல்லாம் ஒரு விதமாக இருக்கிறது??”

“ம்ம் இல்லை நாத்தனாரை இத்துனை பாசமாய் பார்த்துக் கொள்ளும் அண்ணியை இப்பொழுதுதான் பார்க்கிறேனா அதான் ஒரே சந்தோஷம்..”

“ஏய் தேவையில்லாமல் பேசாதே..நீ கூறுவதன் அர்த்தம் புரிகிறதா உனக்கு??”

“ஏன் புரியாமல் அவள் அண்ணன் பற்றி கூறும் போது இறக்கை விரித்து பறந்து கொண்டிருந்தாயே அப்போதே புரிந்துவிட்டது..”

“மல்லிகா!!!”

“ம்ம் மல்லிகாவே தான் அதனால் தான் உன்னை அறிந்து வைத்திருக்கிறேன்..என் ஆருயிர் தோழி தன்னை மறந்து செவி சாய்த்தது அவளின் அத்தை மகனைப் பற்றி கேட்ட போதுதான்..வேறு எந்த ஆண்மகனுக்கும் அந்த கொடுப்பினை இதுவரை கிடைத்ததில்லையே.என்ன சரி தானே???”

“ம்ம் நீ கூறுவதும் சரிதான்..ராணி அவரைப் பற்றி கூறிய சிறு சிறு விடயங்கள் கூட என்னோடு ஒத்துப் போவதைப் போன்று தோன்றியது..அதிலும் பெண்களை அடக்கி ஆள நினைக்கும் ஆண்கள் மத்தியில் பெண்கள் வீரமாக இருக்க விழைவது பெரிய விடயம் அல்லவா!!”

“ம்ம் ஆமாம் ஆமாம் காதல் கிறுக்கு உள்ளே புகுந்துவிட்டது..இனி அதன் ஆட்டத்தை காட்டாமல்விடாது..”

“காதலும் இல்லை ஒரு கருமமும் இல்லை..நீயாக அள்ளி விடாதே..போ போய் உறங்கு..” என அவளுக்கு முதுகு காட்டிப் படுத்தவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவாறே கண்ணயர்ந்தாள் மல்லிகா..
 
Thendral

Administrator
Staff member
#2
அடுத்த இரண்டு நாட்களில் சுற்று வட்டாரத்தை பற்றி நிறையவே தெரிந்து கொண்டிருந்தாள் அலர்..ஆங்கிலேய துரைகளைப் பற்றியும் மேலோட்டமாய் தெரிந்து வைத்துக் கொண்டாள்.

அவளின் செயல்களைப் பார்த்த ராணி ஆச்சரியத்தில் வாய் பிளந்தாள்.”அக்கா உங்கள் தைரியம் என்னை மிகவும் வியப்படையச் செய்கிறது..அப்படியே என் அண்ணணுக்கு நிகரான துணிச்சலும் வேகமும் உங்களிடம் இருக்கிறது..சிறு வயது முதலே நீங்கள் இப்படிதானா??”

“ம்ம் ஆம் ராணி நான் இவளை சந்தித்து நான்கு வருடங்கள் தான் இருக்கும் முதன்முதலில் பார்த்த போது நான் இவளிடம் பேசவே பயந்திருக்கிறேன்..”

“என் பால்ய வயதில் என் பாட்டியிடம் நிறைய கதைகள் கேட்டு வருவது பழக்கம்..அதில் அதிக தடவை நான் கேட்ட கதையென்றால் அது நம் வேலு நாச்சியாரைப் பற்றி தான்..அவர்களின் வீரத்தின் முன்னால் நான் எல்லாம் ஒன்றுமேயில்லை..”

“ம்ம் யார் அக்கா அவர்கள் எனக்கு அவர்களைப் பற்றி கூறுங்களேன்..”

“சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.

இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.
சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.

இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது. படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர். அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.

தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது.
“அனைவரும் வாருங்கள். நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது.

நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள். ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார். அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும். இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே சின்ன மருது அவசரமாய் இடைமறித்து,
“மகாராணி சிவகங்கைக் கோட்டையைக் கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”

“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”

“மகாராணி மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக் கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”

இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.

அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.

“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”

அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள்.

“பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.

ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.

“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.

ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது.

அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.

பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார்.

ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.

அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.

ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.

அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது.

வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது.
மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.

அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.

ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.

“சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.

வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.
ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள். அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.

ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.

பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.
திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன.

போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள்.

வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.

அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.”

“இப்போது புரிகிறதா இந்த கதைகளை கேட்டு, அவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து எப்படி துணிச்சல் வராமல் போகும் ராணி..புலியை முறத்தால் அடித்தவர்கள் நம் பெண்கள் என்பது வெறும் கதையல்ல அந்த புலியை விட கொடிய மிருகங்களான இந்த வெள்ளையர்களையும் ஓட ஓட விரட்டும் திறமை நம் இனத்திற்கு அதிகமாகவே இருக்கிறது..பெண் நினைத்து முடியாத காரியம் ஏதேனும் இருக்கிறதா என்ன??”

ஹாய் ப்ரெண்ட்ஸ்,வேலூ நாச்சியாரின் கதை இணையத்தில் தேடி பதிவிட்டது..பிழை இருந்தால் மன்னிக்கவும்...:)
 
sridevi

Well-known member
#7
வேலுநாச்சியார் கதை படிக்கும் போது நம்முள் வீர வேட்கை பிறக்கும்sis:):):):)
தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள்.”
அருமையான வரிகள்sis(y)(y)(y) nice ud sis:):):):)
 
#9
வேலுநாச்சியார் கதை படிக்கும் போது நம்முள் வீர வேட்கை பிறக்கும்sis:):):):)
அருமையான வரிகள்sis(y)(y)(y) nice ud sis:):):):)
Thank u so much sis :)
 
#16

வேலூ நாச்சியார் வரலாறு அருமை. தங்கள் பதிவை படித்து விட்டு மனதில் துணிச்சலுடன் பெருமையும் தோன்றுகிறது.
 
#17

Latest posts

Latest profile posts

Kandharva loga - 14 updated friends... pls read and give your precious cmnnts here.. thank u
Sorry Friends... wednesdayல இருந்து laptop issue. இதோ இப்ப சரி ஆகிடும் இதோ இப்பன்னு சொல்லியே இப்பவரை போய்ட்டு... இன்னைக்கு ஈவ்னிங் வந்தா கூட நைட்குள்ள எப்பி postசெய்துடலாம்னு இருந்தேன். நாளைக்காவது சரியாகுதான்னு பார்ப்போம்.
Hi.... Update only on Tuesday... Sry... Little busy... Bye.. Tc
banumathi jayaraman wrote on SR.Sharu23's profile.
My heartiest birthday wishes to you, SR.Sharu23 Madam
banumathi jayaraman wrote on Nandhini's profile.
My heartiest birthday wishes to you, Nandhini Madam
banumathi jayaraman wrote on Koolkeerthi's profile.
My heartiest birthday wishes to you, Koolkeerthi dear
banumathi jayaraman wrote on Jiffy's profile.
My heartiest birthday wishes to you, Jiffy Madam
உன் உயிர் தா..!! நாம் வாழ..!!! 7th எபி போஸ்ட் பண்ணியாச்சு..படிச்சு சொல்லுங்க...
அகத்திய ரகசியத்தில் அடுத்த மூன்று அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு விட்டன! ஆதவனும் பொன்மகளும் ஆசான் அகத்தியருக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லாத செயல்களைச் செய்கிறார்கள். அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்பதை அறிய அகத்திய ரகசியத்தைப் படியுங்கள் தோழிகளே! என்னிடம் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
உயிர் விடும் வரை உன்னோடுதான் -- எபி 5 போட்டாச்சு டியரிஸ் :)

Advertisements

Online statistics

Members online
67
Guests online
1
Total visitors
68