Maadhini/ Yamini

#11
ட்விட்டர்"KPN, post: 70233, member: 1734"]அதைத் பார்த்தபடியே பல வாகனங்கள் கடந்தது ஒருவரும் நிற்கவும் இல்லை, உதவவுமில்லை . போலிஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வந்து சேர்வதற்குள் அவள் உடலும் ஆன்மாவும் வெந்திருந்தது. அழகோவியமாய் திகழ்ந்த தன் மகளை அந்த நிலையில் கண்ட அவள் அன்னை கோமா நிலைக்குச் செல்ல, அவள் தந்தையோ மாதினியோ செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது அவர்களுக்கு உதவியாக இருந்தது, யாமினியுடன் புனே ஐஐடியில் படித்த மிக நல்ல நண்பன் ஜெய்கிருஷ்ணா.

முதல்கட்ட விசாரணையிலேயே இந்த கொலைக்குக் காரணம் வீராதான் என்பதை தெரிந்து கொண்ட செல்வம் வீராவின் தந்தை கொடுத்த சில இலட்சங்களுக்கு விலை போக, கல்லூரியில் யாரும் பயத்தினால் அதுபற்றி வெளியே சொல்லவில்லை. யாமினியும் வீட்டில் யாரிடமும் சொல்லாததால் அவர்களுக்கும் வீரா பற்றி தெரியவில்லை. பொதுவாக சொல்லப்படும் வட நாட்டுக் கொள்ளையர்கள், அவள் அணிந்திருந்த நகைகள் செல்போன் மற்றும் லாப்டாப் போன்றவற்றிர்க்காக செய்த கொலை. குற்றவாளியைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என்று காவல்துறை முடித்துவிட, மாதினிக்கு மட்டும் மனதிற்குள் நெருடலாக இருந்தது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் போராடி மாதினியின் அம்மா சற்று உடல்நலம் தேற அந்த வீட்டில் இருக்க முடியாமல் வருந்தும் அவரை அழைத்துக்கொண்டு அவர்களது கிராமத்திற்கு செல்லுமாறு அவள் தந்தையை வற்புறுத்தியவள், தன் மேற்படிப்பு மற்றும் பிராக்டிசை காரணம் காட்டி அங்கேயே இருந்தாள்.

பிறகு ஜெய்கிருஷ்ணாவை சந்தித்து தன் தமக்கையின் மரணத்திற்கான காரணத்தை அறிய உதவுமாறு கேட்க அவனும் தன் முயற்சியைத் தொடங்கினான்.

வீராவின் ஒன்று விட்ட பெரியப்பா மகன்தான் ஜெய்கிருஷ்ணா. அவன் வீடும் வீராவின் வீடும் ஒரு தெருவில்தான் உள்ளது. வீராவின் பொறியியல் கல்லூரி, கருங்கல் குவாரி, ஜெய்கிருஷ்ணாவின் JKகூல் பார், அது அமைந்துள்ள ஷாப்பிங் காம்ளக்ஸ் மற்றும் அவனது பெட்ரோல் பங்க் அனைத்துமே யாமினியை எரித்த அந்த சாலையின் வெவ்வேறு பகுதியில் அமைதிருந்தது. அவர்கள் வீட்டிற்கு JK கூல்பார் மற்றும் யாமினியை கொலைசெய்த அந்த விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். யாமினி நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெய் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படி ஒருநாள் அவளை வீட்டில் விட ஜெய் பைக்கில் அழைத்துச் செல்ல, அதைத்தான் வீரா பார்த்தது. ஆனால் அது ஜெய் என்பதையும் அவனுடனான அவளின் நட்பையும் அவன் அறியவில்லை.

மிக கடினமான முயற்சிகளுக்குப் பிறகு கல்லூரியில் வேலை செய்யும் தன் உறவினர் ஒருவர் மூலம் வீரா யாமினியை தொல்லை செய்ததை அறிந்த ஜெய் கொதித்தே போனான். ஒரு நாள் கூல்பாரில் நன்பர்கள் நால்வரும் போதையில் உளறிக் கொண்டிருக்க ஜெய் அதை கவனிக்கத் தொடங்கினான். அதிலிருந்து அவர்கள்தான் யாமினியை கொன்றது என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்கியது. உடனே மாதினியை அழைத்து அவளிடம் உண்மைகளைப் பகிற, தன் சகோதரியை இழந்து குடும்ப நிம்மதியை இழந்து தன் மனதை தேற்றமுடியாமல் தவித்த மாதினி, தனது சட்ட அறிவைப் பயன்படுத்தி அவர்களை பழிவாங்கத் துடித்தாள்.

அவளின் வேதனையையும் கோபத்தையும் புரிந்த ஜெய் அச்சு அசல் தன் தோழியைப் போலவே உள்ள அவள் தங்கைக்கு உதவ முடிவு செயதான். அதன்படி அவர்கள் திட்டம் மூன்று பேரை அடியோடு சாய்த்தது.

டிசம்பர் 14...

JK கூல்பாரில் அந்த மாலை நேரத்தில் நண்பர்கள் நால்வரும் சேர்ந்திருக்க, முதலில் மாட்டியது நந்தா. அவர்கள் தங்கள் அரட்டையில் மும்முரமாக இருக்க பைக்கின் பிரேக்வயர் அவர்களுக்கே தெரியாமல் கட் செய்யப்ட அவன்அருந்திய ஜூசில் போதை மருந்து கலக்கப்பட்டிருக்க, இதை அறியாமல் அவன் வண்டியைக் கிளப்பிச் சென்றான். லேசாக தலை சுற்ற அவன் யாமினி இறந்த இடத்தை கடக்கும் சமயம் மாதினி அங்கே நின்று கொண்டிருக்க அவளைக் கண்டவன் பயத்தில் வேகத்தைக் கூட்ட, நிலைதடுமாறி ......

நடந்த அனைத்தையும் நினைத்தவளின் மனம் ஆறவேயில்லை, யாமினியின் நினைவுநாளான பிப்ரவரி 14 அன்று வீராவை வீழ்த்தியேதீரவேண்டுமென்று அவள் உறுதியோடிருந்தாள்.

நாட்கள் நெருங்க நெருங்க மாதினியை சிக்க வைக்க தடயங்கள் எதுவும் கிடைக்குமா என வீரா அடிபட்ட புலியாய் அலைந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனை அழைத்த செல்வம், அவளுக்கு ஹெல்ப் செய்வது ஜெய்கிருஷ்ணாதான் என தான் கண்டுபிடித்ததை கூறியவர் பிப்ரவரி 14 க்கு மேலும் இரண்டு நாட்களே இருக்க அவனை கவனமாக இருக்குமாறு எச்சரித்தார்.

பிப்ரவரி 13...

ஜெய்கிருஷ்ணாவை சந்திக்க மாதினி அவன் வீட்டுக்கு வந்திருந்தாள். அவள், “எனக்கு என்னவோ அவன் நாளைக்கு வீட்டை விட்டு வருவான் என்றே தோனல ஜெய்” என்று கூற, “கொஞ்சம் வெயிட் பண்ணு மாதினி! நாளை காலை என்ன செய்யலாம் என்று சொல்கிறேன்” என்ற ஜெய்யுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவள் வீட்டிற்கு கிளம்ப, “இப்பவே லேட் ஆகி விட்டது. நீ தனியாக போக வேண்டாம். நான் உன்னை ட்ராப் செஞ்சுடுடரேன்” என்ற ஜெய் அவளைத் தன் பைக்கில் அழைத்துக் கொண்டு அவள் வீடு நோக்கிச் சென்றான். அவனது பைக் அந்த சாலையில் சென்று கொண்டிருக்கையில் அவள் அக்கா இறந்த இடம் என்பதால் மாதினி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அப்பொழுது ராங் சைடில் வேகமாக தங்களை மோதுவது போல் வந்த அந்த கருங்கல் ஜல்லி ஏற்றிவரும் லாரியைக் கண்ட ஜெய் சற்று தடமாறி அருகே இருந்த பள்ளத்தில் விழ கண் இமைக்கும் நேரத்தில் லாரி திசைமாறி கட்டுப்பாட்டை இழந்து மீடியனில் போய் மோதி நின்றது. அவன் இடதுகையில் பலமாக அடிபட்டிருக்க மாதினியின் கால்மேல் பைக் விழுந்து கால் பயங்கரமாக வலித்தது. அந்த லாரியை ஓட்டி வந்தவன் ஸ்டியரிங்கில் மேல் சாய்ந்து இரத்த வெள்ளத்தில் உயிரை விட்டிருந்தான். அந்த நிமிடம் ஜெய் உணர்ந்த உண்மை அவனை சிலிர்க்க வைத்தது.

இருவரும் சற்று நேரத்திற்கெல்லாம் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஜெய்கிருஷ்ணாவிற்கு கையில் சிறிய அடி மட்டுமே ஆனால் மாதினியின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த வீரா இருவரையும் நோக்கி “என்ன இந்த நிலையில் நீங்க இரண்டு பேரும் என்னை என்ன செய்ய போரிங்க? என்றவன் மாதியை நோக்கி “நீ நன்றாக நடக்கவே இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மேலாகும் அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். நேற்றே உனக்கு உயிர் பயத்தைக் காட்டிட்டேன். என்ன, அந்த லாரியை உங்கள தீர்த்து கட்ட நான்தான் அனுபினேன். ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது. இப்படியே எல்லா தடவையும் ஆகாது. ஜாக்கிரதையா இருந்துக்கங்க” என்று கூற, அந்த தாங்க முடியாத வலியிலும் சிரித்தவள் “ இன்னும் ஒரே ஒருநாள்தான் உன் ஆட்டமெல்லாம். நீ என்ன வேனா பேசிக்கோ. எப்படியும் கொலை முயற்சி கேஸ்ல இன்றோ நாளையோ போலிஸ் உன்னை அரஸ்ட் செய்ய போகிறது. பிறகு பாக்கலாம் நீயா? நானா? யாருன்னு, நீ என்ன உன் ஆடில தான வந்திருக்க எதுக்கும் பார்த்து போ” என்று நக்கலாகக் கூறியவள் அவன் மேற்கொண்டு பேசும் முன் நீ போகலாம் என்க... ஜெய்” நீயே இடத்த காலிபண்றயா இல்ல” .... என்றதும் வீரா வேகமாக அங்கிருந்து சென்றான்.

சற்று நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து மாதினி மருந்துகளின் உதவியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க அந்தக் கனவு...

வீரா வேகமாக தன் காரை செலுத்திக் கொண்டிருக்க, காருக்குள் அந்த வாடை, நெருப்பில் கருகும் வாடை அவன் நாசியைத் துளைக்க அவன் தன் கட்டுப்பாட்டை இழக்க கார் அந்த பள்ளத்தில் சீறிப் பாய்கிறது.... அவன் கண்களில் மிரட்சி.... அவன் உதடுகள் தானாக உச்சரிக்கிறது.... மாஆஆஆ தி னீஈஈஈஈ..... அந்த கார் பற்றி எரியத் தொடங்குகிறது....மறுநாள் காலை மிகவும் தாமதமாகக் கண் விழித்த மாதினி, அங்கிருந்த ஜெய்யை கண்டு புன்னகைக்க அவன் அன்றைய தினசரியை அவளிடம் காண்பித்தான். அதில் கொட்டை எழுத்தில் இடம்பெற்றிருந்த செய்தி அவளை பிரமிக்கவைப்பதாக....

“பிரபல தொழிலதிபர் மகன் வீரா அகோர விபத்தில் பலி”...

வியப்பு மேலிட மாதினி “ஜெய் அந்த ஆக்சிடன்ட்ட நான் பார்த்தேன்... அங்க அக்காவைப் பார்த்தேன்... கனவுல! என்னால நம்பவே முடியல... லீகல் டெர்ம்ஸ்ல சொல்லுவோம் மென்ஸ் ரியா( Mens rea)ன்னு குற்றம் செய்யும் மனநிலை.. எவ்வளவு வக்கிரமான மனநிலையிலிருந்தால் அவளை அப்டி எரித்து கொன்றிருப்பான். அவனுடைய குற்றமுள்ள நெஞ்சுதான் இந்த விபத்துக்குக் காரணம்” என்று கூற...

ஜெய் “இல்லை மாதினி... அவ இருக்கா.. நான் அவளை பார்த்தேன்... நேற்று நமக்கு விபத்து நடந்த பொழுது... அவதான் நம் உயிரை காப்பாற்றினாள் என்று கூற.... அவள் பேச்சற்று தன் சகோதரியின் மரணத்திற்கு பிறகு கதறி அழத் தொடங்கினாள்.

தன் தமக்கைக்காக தன் புத்திகொண்டு பழிதீர்த்த ஞானம் எனும் பொருளைத் தன் பெயரைக் கொண்ட மாதினியின் மனம் அங்கே அமைதியடைய...

காற்றாய் வந்து தன் தங்கையின் உயிர் காத்து இருளில் கலத்த யாமினி அவளைப் பார்த்து அங்கே புன்னகைகத்துக் கொண்டிருந்தாள்...[/QUOTE]


சிறு படம். ஆழிப் படம் பார்த்த திருப்தி
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays