Neenga Kanale - Episode 16

#11
விக்ரமும இஷானும் மட்டும் பாத்த வீடியோவ நாங்க எப்ப பாக்றது...நாங்களும் இரண்டு நாள் காத்திருக்கனுமா...சூப்பர் ....
 
#12
Nice epi.
Eight yrs pirinchu irunthavangalal , case vishyam mudiyum varai wait panna musicals. Ha ha ha. Kadhal paduthum paadu.
Case details handle panniya vidham arumai.
Old case um indha case um interlinking aguthu. So Prakash is the culprit.
But old case pathi avane epaadi solvan.
Isha Sid love track nice. Rendu perum aduthavangalukaga enguvathu super.
Vikram um reshmi Kita solliduvaan nu ninaikiren.
Avangalavathu rendu naal wait panniduvaanga pola ,aana ennal oru naal kooda wait panna mudiyathu.
Next epi udane podunga.
 
#13
செம விறு விறுப்பா இருந்தது சித்தார்த் அம்மா இறந்த கேசை தூசு தட்ட ஆரம்பிச்சுட்டான் இஷா சைடில் அவங்களும் வில்லனை நெருங்கிட்டாங்க இடையில் இஷாவோட காதலுக்கு வீட்டில் சம்மதம் சொல்லுவது அதற்க்கு இஷான் இரண்டு நாள் தள்ளி போடுவது எல்லாமே நல்லா கொண்டு போறிங்க கடைசியில் ஒரு ட்விஸ்ட் வச்சி முடிச்சிருக்கிங்க சூப்பர்
 
#15
இருவரும் இஷானின் அறைக்கு வர, வெய்ட்டர் அழைத்து இருவருக்கும் ஸ்நாக்ஸ் மற்றும் டீ எடுத்து வர சொன்னான். அவன் வைத்து விட்டுக் கிளம்பவும், தங்களை யாரும் டிஸ்டர்ப் செய்யாமல் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, அழைத்த பின் வந்தால் போதும் என்று அனுப்பி வைத்தான்.

விக்ரமிடம் “என்ன விக்ரம்? சித்தார்த் பிரகாஷ்ஷை பின் தொடர உங்களை அனுப்பினாரா?

“ஆமாம் இஷான். ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும்?

“தெரியும்” என்று மட்டும் சொன்னவன், “இன்னும் அவருக்கு அப்பாவின் மேல் சந்தேகம் போகவில்லையா?” என்று கேட்டான்.

அதற்கு சங்கடமாக விக்ரம் சிரிக்கவும், அப்படியே விட்டு விட்டு

“இப்போ முதலில் நாம வீடியோ பார்க்கலாமா? இல்லை நீங்க எடுத்த ஆடியோ கேட்கலாமா?

“ரெண்டும் ஒன்னு தானே வீடியோவே பார்க்கலாம் இஷான். அதைப் பார்த்தா இன்னும் கொஞ்சம் கிளாரிட்டி கிடைக்கும்”

“எஸ்.” என்றவன் அந்த கேமராவின் மெமரி கார்டு எடுத்துத் தன் லேப்டாப்பில் கனெக்ட் செய்தான்.

அதில் அவர்கள் உள்ளே நுழையும் போதிருந்து ரெகார்ட் ஆகியிருந்தது. அதை ஓட விட்டுப் பார்த்த இஷான், விக்ரம் இருவருக்கும் பார்க்க பார்க்க முகங்கள் மாற ஆரம்பித்தது.

டேப் முடியவும், இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் அழுத்தமாக பார்த்தனர்.

இஷான் விக்ரமைப் பார்த்து “விக்ரம், இதை இப்போவே சித்தார்த்கிட்டே கொடுக்கப் போறீங்களா?

“நீங்க என்ன பிளான் வச்சுருக்கீங்க இஷான்?

“ரெண்டு டேப்பும் கோர்ட்லே நேரடியா ப்ரோட்யுஸ் பண்ணிடலாம்.

“ஏன் இஷான்?

“கேஸ் கோர்ட் வரும் வரை, இந்த வீடியோ லீக் ஆகாமா இருக்கணும். “

“நீங்க சொல்றது சரிதான்”

“ அதோட இஷா, சித்தார்த் ரெண்டு பேரும் கிட்டத்தட்ட எட்டு வருஷமா பிரிஞ்சி இருந்து இருக்காங்க. இப்போ ரெண்டு பேர் கிட்டே போட்டுக் காண்பிச்சாலும் அவங்களாலே நேரடியா பேசிக்கக் கூட முடியாது. இன்னும் ரெண்டு நாளில் மறுபடி கேஸ் கோர்ட்க்கு வருது. அப்போ போட்டுக் காண்பிச்சிட்டா, இருவருக்கும் உடனே பேசிக் கொள்ள வசதியா இருக்கும்”

“அப்போ இப்போ என்ன ஆச்சுன்னு கேப்பாங்களே?

“அவங்க மறுபடி ரெண்டு நாளில் மீட் பண்ணிக்கப் போறாங்க. அப்போ தான் புல் டிடைல்ஸ் கிடைக்கும்னு சொல்லுங்க”

“ஹ்ம்ம். சரிதான்”

இருவரும் பேசிக் கொண்டே ரிசார்ட் காலி செய்து விட்டுக் கிளம்பினார்கள்.

“விக்ரம் , எதில் வந்தீங்க?

“பிரகாஷ்க்கு முன்னாடி வரணும்னு கேப்லே தான் வந்தேன்”

“அப்படின்னா வாங்க நான் ட்ரோப் பண்றேன்”

இருவரும் காரில் பேசிக் கொண்டே சென்றார்கள். இஷான்

“அப்புறம் நீங்க எப்போ கமிட் ஆகப் போறீங்க?

அவன் தீடிர் என்று கேட்கவும், திடுக்கிட்டு விழித்தவன், மெல்லிய சிரிப்போடு,

“இப்போ எதுவும் பிளான் இல்லை இஷான்”

“ஹ. உங்க சிரிப்பைப் பார்த்தா ஏற்கனவே பிக்ஸ் ஆயிட்ட மாதிரி இருக்கு”

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை”

“நீங்க சொன்னா சரிதான்” என்று மட்டும் கூறிவிட்டு, வேறு விஷயங்களைப் பேசினான்.

அன்று இஷான் வீட்டிற்குச் செல்ல, இஷா கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொன்னவன், இன்னும் பிரகாஷ் , ராவ் இருவரும் இன்னும் மீட் செய்யவில்லை என்று கூறினான்.

இஷா “ போடா இஷான். நான் இன்னைக்கு எல்லாம் கிளியர் ஆயிடும்னு நினைச்சேன்”

“ஏன் சோகம் குட்டிமா. எப்படியும் உன் ஆள் கிட்டே பேச நீ இன்னும் ரெண்டு நாள் வெயிட் பண்ணி ஆகணும். சோ வெயிட் செல்லம்”

இஷா பெருமூச்சுடன் “அது என்னவோ கரெக்ட் தான்” என்றாள்.

அதே போல் விக்ரமிடம் அன்று இரவு பேசிய சித்து “டேய் விக்ரம் , அந்த பிரகாஷ் பாலோ பண்ணினியா? ஏதாவது க்ளு கிடைச்சுதா?

“இல்ல சித்து. அவன பாலோ பண்ணிட்டு தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் அவனை தனியா பிடிச்சு, எல்லா விஷயமும் கேட்டுடலாம்”

“என்னடா? “

“ஏண்டா எட்டு வருஷம் கையக் கட்டிட்டு இருந்துட்டு, எட்டு நாள் உன்னால பொறுக்க முடியவில்லையா?

“டேய் நீ வேறே ஏண்டா கடுப்பேத்திக் கிட்டு இருக்க?

“பின்ன என்னடா? எப்படியும் இன்னும் ரெண்டு நாளில் இஷா க்ரூப்ஸ் கேஸ் கோர்ட் வருது. அவங்க எப்படியும் அந்த ராவ் விஷயத்தைக் கிளியர் பண்ண ஆதாரத்தோடு வருவாங்க. அந்த கேஸ் முடிஞ்சா, நீ நேராவே இஷா கிட்டேயே பேசலாமே”

“அவளே சொல்லாத விஷயத்தை , நான் கேட்டா அவளை நான் நம்பலேன்னு ஆயிடும்டா. “

“சரி சரி புலம்பாதே. அந்த கேஸ் ஜட்ஜ்மெண்ட் முடியட்டும். உடனே அந்த பிரகாஷ கடத்திட்டு போயாவது விஷயத்தைத் தெரிஞ்சிக்கலாம். சரியா?

“ஹ்ம்ம். ஓகேடா” என்று வைத்தான் சித்து.

விக்ரம் அந்த பக்கம் சிரி சிரி என்று சிரித்தான். எப்படி இருந்த சித்து இப்படி ஆகிட்டானே என்று எண்ணியவனுக்கு அப்போதுதான் தன்னைப் பற்றிய சிந்தனை வந்தது. இஷான் கேட்ட போது கூட ரேஷ்மியின் முகம் மின்னி மறைந்தது. சில நாட்களுக்கு முன் அறிமுகம் ஆகி, அவள் தன் மனதை கவர்ந்து விட்ட பின், தனக்கே எதைச் செய்தாலும் அவள் நினைவு வரும்போது சித்துவின் நிலைமையும் புரிந்தது.

ஒருவகையில் இஷானின் கருத்துக் கூட சரியே. உண்மை தெரிந்த பின் அதைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் இருவரும் தவிப்பதை விட, இதுவே நல்லது.

ஒருவாறாக அடுத்த இரண்டு நாட்கள் கழிய, இஷா க்ரூப்ஸ் கேஸ் அன்று கோர்ட்டிற்கு வந்தது. அங்கே கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கும் அதே நேரம், இஷாவின் அப்பா ராஜசேகர், சித்தார்த்தின் அப்பா விஸ்வநாதனை நேரில் சந்திக்க சென்றார்.

Nice devima interesting 👌👍👏🏻👏🏻😊
 

Advertisements

Latest profile posts

banumathi jayaraman wrote on jaicherie's profile.
My heartiest birthday wishes to you, Jaicherie Sir/Madam
காதலாம் பைங்கிளிக்கு 30க்கும் மேற்பட்ட ரிவ்யூஸ் பதியப்பட்டிருக்கிறது. அதுவும் கல்லூரி மாணவிகள், சக எழுத்தாளர்கள், திருமதிகள், சிங்கிள் கேர்ள்ஸ், ஆண்கள், சிறுமியரின் தாய்மார்கள், கல்லூரி மாணவியின் அம்மா, என்னைவிடவும் வயதில் பெரியவர்கள், நம் ஊரில் வசிப்போர், நம் நாட்டுக்கு வந்தே இராதவர், என பல வகைப் பட்ட, எல்லா வயதினரிடமிருந்தும் வந்திருப்பது ப்ரமிப்பாக இருக்கிறது. இந்த ஊக்கத்திற்கும் பாராட்டுகளுக்கும் ஏராள நன்றிகள
தேடல் 2018-ல் பங்குபெற்ற அனைத்து
எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்...
என்னருகே நீ இருந்தால் 5 அப்டேட் செஞ்சிட்டேன் மக்களே படிச்சுட்டு கருத்து சொல்லுங்க
https://www.smtamilnovels.com/community/index.php?threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-5.2207/
Hi friends,
Aathiye anthamai my second story first epi posted
Hy friends,

Here comes the full link of my story Thedum nyaanam vignyaanam aayinum..

https://www.smtamilnovels.com/community/index.php?categories/madhi-nila.138/

Plz do read it and post ur comments..

Thank you..
Hello friends,

Vilagituvena idhayame story all episodes posted.
24,25,26,27 plus epilogue
5 posts posted.

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/
banumathi jayaraman wrote on Vijaya Muthukrishnan's profile.
My heartiest birthday wishes to you, Vijaya Muthukrishnan Madam
banumathi jayaraman wrote on Sudarkrish's profile.
My heartiest birthday wishes to you, Sudarkrish Sir/Madam
banumathi jayaraman wrote on Revathiravichandran's profile.
My heartiest birthday wishes to you, Revathiravichandran Madam

Advertisements

Latest Episodes

Today's birthdays